புனித
ரமலான் விடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்னு
கய்யுமுல் ஜவ்ஸி (ரஹ்) சமுதாயத்திற்கு சொன்ன அறிவுரை.
قال ابن الجوزي: عباد الله إن شهر رمضان قد عزم على
الرحيل، ولم يبق منه إلا القليل، فمن منكم أحسن فيه فعليه التمام، ومنْ فَرط
فليختمه بالحسنى والعمل بالختام، فاستغنموا منه ما بقى من الليالي اليسيرة
والأيام، واستودعوه عملاً صالحاً يشهد لكم به عند الملك العلاّم، وودعوه عند فراقه
بأزكى تحية وسلام ) التبصرة(.
நன்மை செய்தோர் நன்மையால் அதை நிறைவு செய்யுங்கள்
இதுவரை தவற விட்டோர் முடிவையாவது நன்மையானதாக ஆக்கிக்
கொள்ளுங்கள்
இந்த மாதம் நமக்காக அல்லாஹ்விடம் சாட்சி சொல்வதற்கான நல்
அமல்கலை தேடிக் கொள்ளுங்கள்.
நிம்மதியாக இந்த மாதத்தை வழியனுபுவோம்.
இந்த மாதம் நமக்கு எதிரானதாக ஆகி விடாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!
நமது அமல்களுக்கு ஒரு மரியாதை இருக்கிறது,
நோன்பின் மரியாதை
عَنْ أَبِي
هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم:رُبَّ صَائِمٍ
حَظُّهُ مِنْ صِيَامِهِ الْجُوعُ وَالْعَطَشُ ، وَرُبَّ قَائِمٍ حَظُّهُ مِنْ
قِيَامِهِ السَّهَرُ. - أحمد
ஜாபிர் ( ரலி) சொன்னார்
قال جابر بن
عبد الله الأنصاري رضي الله عنه : إذا صمت فليصم سمعك وبصرك من الحرام والقبيح ،
وليكن عليك وقار الصيام ولا تجعل يوم صومك كيوم فطرك ): لطائف المعارف- .ابن رجب(
திலாவத்திற்கு ஒரு மரியாதை இருக்கிறது,
قال عمرو بن
العاص كل آية في القرآن درجة في الحنة ومصباح في بيوتكم وقال أيضا من قرأ القرآن
فقد أدرجت النبوة بين جنبيه إلا أنه لا يوحى إليه
وقال أبو
هريرة إن البيت الذي يتلى فيه القرآن اتسع بأهله وكثر خيره وحضرته الملائكة وخرجت
منه الشياطين وإن البيت الذي لا يتلى فيه كتاب الله عز وجل ضاق بأهله وقل خيره
وخرجت منه الملائكة وحضرته الشياطين.
இஃதிகாபின் மரியாதை
عَنْ ابْنِ عَبَّاسٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الْمُعْتَكِفِ : ( هُوَ يَعْكِفُ الذُّنُوبَ ، وَيُجْرَى لَهُ مِنْ
الْحَسَنَاتِ كَعَامِلِ الْحَسَنَاتِ كُلِّهَا- ابن
ماجه
இரவுத்தொழுகையின் மரியாதை
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
" أَطْعِمُوا الطَّعَامَ ، وَأَفْشُوا السَّلامَ ،
وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ ، تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلامٍ
قَالَ أبو
هريرة -رضي الله تعالى عنه- أن النبي -صلى الله عليه وسلم- قال:"إن أحدكم في صلاة ما دامت الصلاة تحبسه، والملائكة تقول
اللهم اغفر له وارحمه، ما لم يقم من صلاته أو يحدث
மார்க்க
அறிவை வளர்த்துக் கொள்ளும் முயற்சிக்கான மரியாதை
(நாம் பயான்களை
கேட்போம். சச்சரவுகளுக்காக அல்ல,
ஆட்களின்மீதான
மோகம் அல்லது இயக்கப் பற்றினால் அல்ல, அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து கொள்ளவும் உணர்வு
பெறுவதற்காகவுமே என்றால் அதன் மரியாதை.)
ومن سلك طريقا يلتمس فيه علما ، سهل الله له به طريقا إلى الجنة
ஜகாத் - தர்மங்களின் மரியாதை
தேவையுடையவருக்கு உதவினால் அவருடைய மீஸானுக்கு அருகே நான் நிற்பேன் என்றார்கள்
பெருமானார் (ஸல்)
عَنِ ابْنِ
عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ قَضَى لأَخِيهِ حَاجَةً كُنْتُ وَاقِفًا عِنْدَ مِيزَانِهِ ،
فَإِنْ رَجَحَ وَإِلا شَفَعْتُ لَهُ --"- حلية الأولياء لأبي نعيم
من نفس عن مؤمن كربة من كرب الدنيا ، نفس الله عنه كربة من كرب يوم
القيامة
தேவையுடையோருக்கு
முடிந்த வகையில் உதவு வதும்
உதவ முய்றசிப்பதும் முஃமின்களின் வாழ்வில் முக்கிய அம்சம். முஃமின் அப்படி உதவாமல்
இருக்க முடியாது.
கலீபாவான பிறகும்
மூதாட்டிக்கு உதவிய சித்தீக் (ரலி)
كان الصديق رضي الله عنه ، يواظب على خدمة عجوز مقعدة ، فبعد أن
وُلِّيَ الخلافة
ذهب عمر رضي الله عنه لقضاء حوائجها ، ظاناً أن أبا بكر ستشغله الخلافة ولو بشكل مؤقت
عن ذلك العمل ، فإذا به يجد أن الخليفة قد سبقه لذلك
ذهب عمر رضي الله عنه لقضاء حوائجها ، ظاناً أن أبا بكر ستشغله الخلافة ولو بشكل مؤقت
عن ذلك العمل ، فإذا به يجد أن الخليفة قد سبقه لذلك
கலீபா
ஆன பிறகும் பிரசவபேரு பார்த்த
உமர் ரலி) குடும்பம்
الفاروق عمر رضي الله عنه وهو خليفة ، وُجِد وهو يعِسُّ بالليل امرأة في
حالة المخاض تعاني من آلام الولادة ، فحثّ زوجته على قضاء حاجتها وكسب أجرها ،
فكانت هي تمرِّض المرأة في الداخل
وهو في الخارج ينهمك في إنضاج الطعام بالنفخ على الحطب تحت القدر حتى يتخلل الدخان لحيته وتفيض عيناه بالدمع لا من أثر الدخان الكثيف فحسب بل شكراً لله أن هيأه وزوجته لقضاء حوائج الناس
وهو في الخارج ينهمك في إنضاج الطعام بالنفخ على الحطب تحت القدر حتى يتخلل الدخان لحيته وتفيض عيناه بالدمع لا من أثر الدخان الكثيف فحسب بل شكراً لله أن هيأه وزوجته لقضاء حوائج الناس
எந்த
உயரத்தில் இருந்தாலும், எத்தகைய பிஸியிலும் நன்மையான
காரியத்திற்கு நேரிட்டு இறங்குவது போல அலாதியான மரியாதைக்குரிய செயல் வேறில்லை
ஒரு சஹாபி தொழுகைக்கு
நடந்து வரும் வழி ஒரு மரக்கிளை முறிந்து கீழே விழுந்து கிடந்தது. அதை அப்புறப்படுத்தி
விட்டு வந்தார். தொழுகை தாமதமானது, அவரை அழைத்த பெருமானார் (ஸல்) அவருக்கு அல்லாஹ்
நன்றி சொலுவதாக கூறினார்கள்,.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله
عليه وسلم قَالَ: "بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى
الطَّرِيقِ فَأَخَّرَهُ، فَشَكَرَ اللهُ لَهُ فَغَفَرَ لَهُ".
நம்மால் முடிந்த வகையில் எல்லாம் நன்மைகளை செய்தோம், அதற்கான மரியாதை
أنس بن مالك قال رسول الله صلى
الله عليه وسلم:
صنائع المعروف تقي مصارع السوء و الآفات و الهلكات ، و أهل المعروف في الدنيا هم أهل المعروف في الآخرة
صنائع المعروف تقي مصارع السوء و الآفات و الهلكات ، و أهل المعروف في الدنيا هم أهل المعروف في الآخرة
நன்மையின் வகைகள் தீமைகள் ஆபத்துக்களில் விழாமல் தடுக்கும். இந்த உலகில் நல்லவர்கள்
நாளை மறுமையிலும் நல்லவர்களே!
இந்த ரமலானில் நம்மில்
ஒவ்வொருவரும் அவரவரால முடிந்த வரை
நல்ல காரியங்களை செய்திருக்கிறோம்.
இப்தாருக்கான
உதவிகள் , சஹருக்கான உதவிகள், பள்ளிவாசல் பணிகள் , உறவினர்களை பேனுதல் , சமுதாய
மக்களுக்கான உதவிகள் எனப் பலப்பல காரியங்களை செய்தோம். அதில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான மரியாதை இருக்கிறது,
நமது நோன்பு தராவீஹ் திலாவத் ஜகாத் சதகா இஃதிகாப் அனைத்தும் உரிய மரியாதையை பெற்றதாக
அமையட்டும். அல்லாஹ் கிருபை செய்வானாக!
நமது அமல்கள் உரிய மரியாதையை பெற்றதாக அமைய வேண்டும் என்ற கவலையும் அக்கறையுமே
ஒரு ரமலானின் நிறைவுப் பொழுதில் நெஞ்சில் நிறைந்திருக்க வேண்டிய சிந்தனையாகும்.
அதே போல முக்கியமான இன்னொரு சிந்தனை இருக்கிறது,
நமது அமல்கள் ஒரு சீஸன் வேலையாக இருந்து விடக்கூடாது.
சிலர் ரமலானுக்கு மட்டும் தாடி வைக்கிறார்களே அது போல
ரமலானுக்குப் பின்னரும் நன்மையின் பட்டியல் கனக்க வேண்டும்
நிஃமத்தை பெற்றுக் கொண்ட பிறகு அதை இழப்பது பெரிய துரதிஷ்டம்
إن من أعظم
الجرم وإن من أكبر الخسران أن يعود المرء بعد الغنيمة خاسراً
ரமலானுக்குப் பிறகு தொழுகை இல்லாமல் போவது, திலாவத் , நோன்பு , என நற்செயல்களின்
வாசல் அடைபட்டு விடக்கூடாது.
அதற்கு அல்லாஹ்வுடைய உதவியை நாட வேண்டும். அவனிடம் கனிந்துருகி பிரார்த்திக்க வேண்டும்.
நமது வாழ்க்கையில் சைத்தான் விளையாடமல் இருப்பதற்கு அல்லாஹ்வின் உதவியை நாடுவதே
பிர்தானமானது,
இப்னுல் ஜவ்ஸீ ரஹ் அவர்களின் تلبيس إبليس நூலில் ஒரு செய்தி இருக்கிறது . இந்தச் செய்தி குர்துபியிலும்
இருக்கிறது.
وقد حكي عن بعض السلف أنه قال لتلميذه : ما تصنع بالشيطان إذا سول لك
الخطايا ؟ قال : أجاهده . قال : فإن عاد ؟ قال : أجاهده . قال : فإن عاد ؟ قال :
أجاهده . قال : هذا يطول ، أرأيت لو مررت بغنم فنبحك كلبها ومنعك من العبور ما
تصنع ؟ قال : أكابده وأرده جهدي . قال : هذا يطول عليك ، ولكن استغث بصاحب الغنم
يكفه عنك
ஒரு
ஆட்டுமந்தைக்கு பாதுகாப்பாக வரும் நாய் உன்னை
அச்சுறுத்தும் எனில் மந்தைக்கு சொந்தக்காரனிடம்
உதவி கேட்பதே புத்திசாலித்தனம். அது போல் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதே
இதுவிச்யத்தில் சிறந்த தீர்வு,
அப்படிக் கேட்கிற
போது அல்லாஹ்வுடைய உதவு எப்படிக் கிட்டும் என்பதை தெரிவிக்கும் அற்புதமான யூதக் கதை
ஒன்று உள்ளது.
எஜமானனின் மனைவியோடு
தவறான உறவு கொள்ள சைத்தான் தூண்டிய போது தொழுகையில் விழுந்து உதவி தேடினான் வேலக்காரன்,
இதனால் ஒரு மாத தொலைவுள்ள பயணம் ஒரு நாளில் முடிந்தது,
في الإسرائيليات : أنّ رجلاً تزوّج
امرأة من بلدة ، وكان بينهما مسيرة شهر ، فأرسل إلى غلام له من تلك البلدة ليحملها
إليه فسار بها يوماً ، فلما جنّه الليل أتاه الشيطان فقال له : إنّ بينك وبين
زوجها مسيرة شهر فلو تمتعت بها ليالي هذا الشهر إلى أن تصل إلى زوجها ، فإنها لا
تكره ذلك وتثني عليك عند سيدك فتكون أحظى لك عنده ، فقام الغلام يصلي فقال : يا رب
، إنّ عدوك هذا جاءني فسوّل لي معصيتك ، وإنه لا طاقة لي به في مدة شهر وأنا
أستعيذك عليه يا رب فأعذني عليه ، واكفني مؤونته ، فلم تزل نفسه تراوده ليلته أجمع
وهو يجاهدها حتى أسحر فشّد على دابة المرأة وحملها وسار بها ، قال : فرحمه اللّه
تعالى ، فطوى له مسيرة شهر فما برق الفجر حتى أشرف على مدينة مولاه ، قال : وشكر
اللّه تعالى له هربه إليه من معصيته فنبأه ، فكان نبيّاً من أنبياء بني إسرائيل
எனவே யாரும் ரமலானில் கடைபிடிக்க முடிந்த நற்செயல்களை பிறகு கடை பிடிக்க முடியாது என நினைக்க வேண்டாம், சைத்தானின் வலையிலிருந்து விடுபட அல்லாஹ்வை பிரார்த்து விட்டு ரமலானின் அமல்களை தொடர்ந்து கடைபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.
இன்னும் லைலத்துல் கத்ருடைய இரண்டு இரவுகள் இருக்கின்றன,
இரண்டு இரவுகளிலும் அல்லாஹ்வின் பேரருளை பெற முயற்சி செய்ய வேண்டும்.
عائشة رضي الله عنها:"أنه إذا دخل العشر شد المئزر وأحيا ليله
وأيقظ أهله
ரமலானின்
கடைசி ஏழு நாட்களின் ஒற்றைப்படை
இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக் கொள்ளுங்கள்
என பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
ரமலான்
27 ம் நாள் இரவு லைலத்துல்
கத்ருடைய இரவு என உபையுப்னு
கஃபு ரலி சத்தியமிட்டுச் சொல்கிறார்கள்.
நாம் 27 ம்
நாள் இரவில் ஈமானோடு இஹ்திஸாபோடும் லைலத்துல் கத்ரை எதிர்பார்த்து அமல்களில் ஈடுபடுவோம்.
நிறைய துஆ க்களில்
ஈடுபடுவோம். ஆயிஷா நாயகிக்கு பெருமானார் (ஸல்)
கற்றுக்கொடுத்த துஆ
اللهم إنك عفو تحب العفو فاعف عني".
பெருநாள் பிறை
பெருநாள் பிறை விசய்த்தில் குழப்பத்திற்கு ஆட்பட வேண்டாம், கம்பீரமான தெளிவான வழிகாட்டுதல்
பெருமானுருடையது,
29 இரவு பிறை தென்பட்டது என காழி அறிவித்தால் 6 ம் தேதி ஈதுல் பித்ரு பெருநாளைக்
கொண்டாடுவோம். இல்லை எனில் 7 ம் தேதி பெருநாளைக் கொண்டாடு வோம்.
அருள் கூர்ந்து முஸ்லிம்களே இதில் தேவையற்ற அவசரம் காட்டாதீர்கள், சர்வதேச பிறை
சவூதிப் பிறை என்ற குழப்பத்திற்கு ஆட்படாதீர்கள், இந்தக் குழப்பத்தை எல்லாம் பேசி முடிவு
கண்டு பல வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் பிறை பார்ப்பதைக்
கொண்டே பெருநாளை கடை பிடிக்க வேண்டும் என உலக இஸ்லாமிய அறீஞர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.
பழை குப்பையை கிளரி குளிர்காய நினைக்கும் குழப்ப வாதிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்.
திடல் தொழுகை
திடல் தொழுகை
சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில் பெருநாள் தொழுங்கள். திடல் தொழுகை என்ற பெயரில் செய்யப்படும்
ஏமாற்று வித்தைகளுக்கு ஆட்பட்டு விடாதீர்கள்
இது விசயத்தை மிகவும் முக்கியமான ஒரு கருத்தாக பரப்புவதில் தவ்ஹீத் பேசும் அமைப்புக்கள் வலிந்து பிரச்சாரம் செய்கின்றன, ஊரெங்கும் போஸ்டர் ஒட்டுகிறார்கள்.
எதார்த்தத்தில் மதீனாவில் மஸ்ஜிதுன்னபவியில் இடம் பற்றாக்குறை காரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று தொழுதுள்ளார்கள்,
நீங்கள் ஒரு திடலுக்குச் சென்றுதான் தொழ வேண்டும் என்ற அறிவுரை ஒன்று கூட இல்லை.
மதீனா பெருமானார் (ஸல்) அவர்களது கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு பெருநாள் தொழுகைகென்று ஒரு வெளியிடத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்வு செய்தார்கள் என்ற அடிப்படையில் வழி வழியாக முஸ்லிம்களும் தம்முடைய ஊரில் பெருநாள் தொழுகைக்கு என்று ஒரு இடத்தை வாங்கி, அல்லது ஒதுக்கி வைத்திருந்தார்கள், ஈத் மைதானம் என்ற அந்த இடத்தில் இரு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
ஈத்காஹ் மைதானம் எல்லோருக்கும் போதுமானதாக இல்லை என்ற நிலையில் பள்ளிவாசலிலேயும் தொழுது கொண்டார்கள்,
ஈத்காஹ் மைதானம் இல்லாத இடங்களில் மைதானங்களை வாடகைக்கு எடுத்தோ அல்லது இலவசமாக பெற்றோ அல்லது பொது இடங்களில் அனுமதி கேட்டோ பெருநாள் தொழ வேண்டும் என்பதற்கு எந்த முன்னுதாரனும் இல்லை, மார்க்கத்தில் சுய விளக்கம் என்பதை தவிர இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை,
மஸ்ஜிதுல் ஹரமிலும், மஸ்ஜிதுன்னபவியிலும் பெருநாள் தொழுகை நடை பெறுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்,
கோவையில் நல்லாயன் பள்ளியில் தவ்ஹீத் பேசும் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டமாக தொழுகை நடத்தினார்கள். இவர்கள் தொழுத இடத்தின் நேர் மேலே கிழக்கை நோக்கி கை நீட்டியபடி இயேசுவின் சிலை நின்று கொண்டிருந்தது, ஒரு தடவை இது பற்றிய புகைப்படத்தில் சிலைக்கு கீழே இவர்கள் நின்று தொழுவது போல படம் வந்தது.
திடல் தொழுகைகளின் சமீபத்திய சாதனை ;
இவர்கள் தொழுகை நடத்தியதாக அடுத்த நாள் செய்தித்தாள்களில் கட்டாயமக செய்தி இடம் பெறும், அதற்கு சாட்சியாக பெண்கள் தொழுவது போன்ற புகைப்படங்களை மட்டுமே பத்ரிகைகள் கடந்த சில வருடங்களாக வெளியிட்டு வருகின்றன,
أما أهل مكة، فلا يصلونها إلا في المسجد من الزمن الأول).
மக்காவின் மக்கள் ஆதிகாலத்திலிருந்து பள்ளிவாசலில் மட்டுமே தொழுது வருகிறார்கள் என இமாம் நவவி ரஹ் கூறுகிறார்.
இமாம ஷாபி ரஹ் அவர்கள் உம்முவில் எழுதுகிற போது பள்ளிவாசலின் இடவசதியிம் மதீனாவிலிருந்த சுற்று புரங்கள் நெருக்கடியாக இருந்ததுமே பெருமானார் (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்ற காரணம் என நான் அறிகிறேன். என வே ஒரு ஊரில் பள்ளிவாசல் பெரிதாக கட்டப்பட்டிருக்கும் என்றால் அங்கிருந்து வெளியேற வேண்டிய தேவை இல்லை என்று நான் கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்கள்,
أن سبب ذلك سعة المسجد، وضيق أطراف المدينة، فلو عمر بلد فكان مسجد أهلها يسعه في الأعياد لم أر أن يخرجوا منه! فإذا كان لا يسعهم كرهت الصلاة فيه، ولا إعادة
பித்ரா தர்மம்

ஈத் பெருநாள் அன்று நிறைவேற்றுகிற வணக்கங்களில் பிரதானமானது ஈதுல் பித்ரா தர்மம். தொழுகைக்கு செல்வதற்கு முன் வழங்கிவிடவேண்டும்.
ஒவ்வொரு முஸ்லிமும் அவருக்காகவும் அவருடைய கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்காகவும்
இந்த தர்மத்தை கொடுக்க வேண்டும். பெருநாள் செலவுக்குப் போக அதிகப்படியாக காசு வைத்திருக்கிற
அனைவரும் இந்த தர்மத்தை நிறைவேற்ற வேண்டும்
அது நமது நோன்பை சுத்தப்படுத்துகிறது, அதே நேரத்தில் ஏழைகளுக்கு உணவாகவும் அமைகிறது.
ஹன்பி மத்ஹபின் படி 1 கிலோ 700 கிராம் கோதுமை அல்லது அதற்குரிய பணமாக ரூ 80 ஐ பித்ரு சதகாவாக கொடுக்க வேண்டும். ஷாபி மத்ஹபின் படி 2.400 கிலே அரிசி பித்ராவாக கொடுக்க வேண்டும். வசதி இருப்பவர்கள் அதிகமாகவும் கொடுக்கலாம். பிரியாணி அரிசியாகவும் கொடுக்கலாம். தாய் தந்தை மகன் மகள் தவிர மற்ற நெருங்கிய சொந்தக் காரர்களுக்கு பித்ராவை கொடுக்கலாம்.
அமைப்புக்களிடம் பித்ராவை ஒப்படைப்ப்பது பொறுப்பற்ற செயலாகவே அமையும். நம்மை நெருங்கி பல ஏழைகள் இருக்கும் போது அவர்களுக்கு தேடிச் சென்று கொடுப்பதில் என்ன சிரமம் இருக்கிறது,
தக்பீர்

பெருநாளன்று தக்பீரை உரத்துச் சொல்லுங்கள் அதுவே பெருநாளின் அழகாகும்.
வேகமாக எங்களிடமிருந்து விடைபெறுகிற ரமலானே சீக்கிரமே
எங்களிடம் திரும்பிவா! உன்னுடைய
அருள் மழையை அள்ளித்தா!
No comments:
Post a Comment