துஆ முஃமின்களின்
பேராயுதம்
அதன் மூலமே எந்த
இடத்திலும் எத்தகைய விசயத்திலும் முஃமின் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார். உதவியையும்
பாதுகாப்பையும் பெற்றுக் கொள்கிறார்.
எந்த இரும்புக்
கோட்டையையும் ஊடுறுவிச் செல்லும் சக்தி துஆ வுக்கு இருக்கிறது.
யூனுஸ் நபி தன்
சமூகத்திற்கு மூன்று நாட்களுக்குள் அதாபு வரும் என்று எச்சரித்து விட்டு ஊரை விட்டு
வெளியேறினார்.
காற்று வெப்பமாக
தொடங்கியது. ஊர் மக்கள் அதாபின் தொடக்கத்தை அறிந்த போது அல்லாஹ்விடம் அழுது முறையிட்டனர்.
அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்.
إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا آمَنُوا كَشَفْنَا
عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ
டைகிரீஸ் நதியின்
ஒரு ஓரத்தில் மோசூல் நகருக்கு அருகிலிருந்த நைன்வா என்ற என்ற அந்த ஊர் மக்கள் நிச்சயயிக்கப்பட்ட
அல்லாஹ்வின் அதாபிலிருந்து – துஆ வால் காப்பாற்றப் பட்டார்கள். அத்தனை பேரும் யூனுஸை
ஏற்றுக் கொண்டனர்.
ஒரு இலட்சத்திற்கும்
மேற்பட்ட எண்ணிக்கையில் அவர்கள் இருந்ததாக குர் ஆன் கூறுகிறாது,
وَأَرْسَلْنَاهُ إِلَى مِائَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ(147)
அவ்வளவு
பேரும் முஸ்லிம்களாயினர். தன் சமூகத்தில் இருந்த
அத்தனை பேரையும் முஸ்லிம்களாக பெற்ற ஒரே நபி
யூனுஸ் நபி தான்.
என்னை யூனுஸை
விட சிறந்தவர் என்று கூறாதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறீயதை இங்கு நினைவு கூர்வது
பொருத்தமானது. அதற்கான காரணம் இது வாக இருக்கலாம்
துஆ வால் அதிக
பட்ச பலனடைந்த ஒரு சமூகம் யூனுஸ் நபியின் சமூகமாகும்.
.
அடியார்களின்
வணக்கங்களில் அல்லாஹ்வுக்கு மிகப்பிடித்தமானது துஆ. அதனால் அவன் எத்தகைய தேவைகளையும்
நிறைவேற்றித் தருகிறான்,
அல்லாஹ்வுக்கு
பிடித்தமானதாக ஆக காரணம்.
அடியார் தன்னை
அப்து என்றும் அல்லாஹ்வை ரப்பு என்றும் முழுமையாக உணரும் தருணம் பிரார்த்தனையின் தருணமாகும்.
ரப்பணா என்று
கூறுகிற இடத்தில் எந்தச் செல்வந்தனனும் செல்வாக்குள்ளவனும் ரப்புக்கு முன்னிலையில்
தனது அப்திய்யத்தை ஏற்றுக் கொள்கிறான்.
இது அல்லாஹ்வுக்கு
மிகவும் பிடித்தமானதாகிறது.
தன்னை உணர்ந்து
கொள்கிற அடியார்களின் தேவையை அல்லாஹ் விரைந்து நிறைவேற்றுகிறான்.
மக்களது கேள்விகள்
பலவற்றை குறித்தும் குர் ஆன் இப்படி பேசுகிறது.
يَسْأَلُونَكَ عَنْ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ
وَيَسْأَلُونَكَ عَنْ الْيَتَامَى قُلْ
إِصْلَاحٌ لَهُمْ خَيْرٌ
وَيَسْأَلُونَكَ عَنْ الْمَحِيضِ قُلْ هُوَ
أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ
மக்கள்
கேள்வி கேட்க நபியே நீங்கள்
பதில் கூறுவீராக என்ற வாசகத்துடன் பதில்
கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் து
ஆ குறித்து அல்லாஹ்
நேரடியாக தானகவே பதில் கூறுகிறான்,
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي
إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ(186)
(இவை
அனைத்தும் பகராவில் இடம் பெற்றுள்ளவை)
திரும்ப்த்
திரும்ப கேட்கிற போது மக்கள் எரிச்சடைவார்கள். திரும்ப திரும்ப அடியார்கள் து கேட்கிற
போது அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறான்.
காரணம் ஒவ்வொரு
தடவையிலும் மனிதன் தனது அப்திய்யத்தையும் அல்லாஹ்வின் ருபூபிய்யத்தையும் நிருபணம் செய்கிறான்.
அடியார்கள்
பகல் இரவு என எப்போது கேட்டாலும்.
لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ
துஆக் கேட்கிற
போது அது அங்கீகாரம் பெற சில ஒழுங்குகள் உண்டு.
1.
துஆ இதயத்திலிருந்து கேட்க வேண்டும்.
மனிதர்களிடம்
பேசுகீற போது இதயத்திற்கு இருப்பதை மறைத்து விட்டு போலியாக பல விச்யங்களை நாம் பேசுவதுண்டு.
அல்லாஹ்வின்
முன்னிலையில் வெளிப்படையாக ஒரு பகீர் எப்படி தனது தேவைகளை கேட்கிறாறோ அது போல கேட்க
வேண்டும்.
2.
உறுதியான மனோ நிலையில் கேட்க வேண்டும்,
நிச்சயமாக நமது
கோரிக்கைகளை அல்லாஹ் ஏற்பான் என்ற உறுதி வேண்டும் ,இதில் உறுதிக் குறைவு ஏற்படுவது
குற்றமாகும்.
அரபா நாளில்
யார் தனது பிழைகள் பொறுக்கப்படாது என்று நினைப்பதில் துஆ கேட்கிறானோ அவனே பெரும் குற்றவாளி
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
3.
ஆபியத்தை கேட்க வேண்டும்
பெரும்பாலும்
நாம் ரிஜ்கை கேட்கிறோம்
அது ஆபியத்துடன்
வேண்டும் என கேட்க வேண்டும் .
ஒரு சுமை தூக்கும்
தொழிலாளிக் கு ஒரு நாள் அவரது வேலை கஷ்டமாக தெரிந்தது. யால் அல்லாஹ் இரண்டு ரொண்டி
சிரமமில்லாமல் கிடைக்க வழி செய்யக் கூடாதா என்று பிரார்தித்தார்.
அவர் சிறிது
தூரம் சென்றிருப்பார். இரண்டு பேர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அதை விலக்கி விடச்
சென்றார். அப்போது அங்கு வந்த காவலர்கள் இவரையும் இழுத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.
சிறையில் இரண்டு ரொட்டி அவருக்கு கிடைத்தது,
அப்போது அவருக்கு
சொல்லப்பட்டது, நீ ஆபியத்தை கேட்டிருக்க வேண்டும்
குழந்தைகளை
கேட்கிற போது சாலிஹான குழந்தைகளை கேட்க வேண்டும்.
ரப்பி ஹப்லீ
மின் லதுன்க துர்ரியத்தன் தய்யிபதன் என்றே நபிமார்கள் பிரார்த்தனை செய்தார்கள்
4.
திருக்குர் ஆனிய ஹதீஸில் உள்ள துஆ க்களை பயன்படுத்த வேண்டும்
அது அல்லாஹ்
ஏற்றுக் கொள்வதற்கு உவப்பானது,
இன்னொன்று அதுவே
நம்முடைய எல்லா தேவைகளையும் உள்ளடக்கியது,
ரப்பனா லா து
ஹம்மில்னா மாலா தாகத லனா பிஹி
என்ற வார்த்தையின்
வீச்சு அசாதாரணமானது.
இந்த துஆ வையும்
ஒரு மாணவனும் கேட்க முடியும்
இறைவா என பாடங்களை
எனக்கு சிரமமாக்கிவிடாதே என்ற எண்ணத்தில்
அவனுக்கு பாடம்
சொல்லிக் கொடுக்கிற ஆசிரியரும் கேட்க முடியும்
இறைவா மோசமான
மாணவர்களை எனக்கு தந்து விடாதே என்ற எண்ணத்தில்
இதே போல ஒரு
மரும்களும் இதைக் கேட்க முடியும் அவருடைய மாமியாரும் கேட்க முடியும்.
தொழிலாளியும்
முதலாளியும் இதே துஆ வை கேட்க முடியும்,
அவர்களுக்கான
தேவைகளை இந்த துஆ வில் அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும். கூட்டாக கேட்கிற போதும் தமக்கு
தேவையானதை அவர்கள் பெறுவார்கள்,
குர் ஆன் ஹதீஸீன்
துஆ க்களை அப்படியே மனனம் செய்து கேட்க வேண்டும். தமிழ் மொழிபெயர்ப்புக்கள் அதன் முழு
அர்தத்தையும் வெளிப்படுத்த முடியாதவை,
5.
அச்சமும் பணிவும் அடக்கமும்
அல்லாஹ் தந்த்தால்
தான் நமது நோக்கங்கள் நிறைவேறும் எனும் நிலையில் அச்சடக்கத்துடனும் அழுகையுடனும் துஆ
க்கள் அமைய வேண்டும். ஏதோ கொடுத்தால் கொடு என்ற பாணியில் துஆ கேட்க கூடாது..
ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ(55)
அல்லாஹ் நிறைவேற்றித்தருவான்
என்ற எண்ணத்தில் அல்லாஹ் தான் நிறைற்றித்தர முடுயும் என்ற நம்பிக்கையில் கேட்கப்படுகிற
பிரார்த்தனைகளை அல்லாஹ் சிறப்பாக நிறைவேற்றி வைக்கிறான்.
உமர் ரலி ஒரு
முறை மக்காவிலிருந்து திரும்பும் வழியில் பாலை வனத்தில் படுத்துறங்கினார்க்ரல் இரவில்
திடீரென விழுத்துப் பார்த்தார்கள். நிலா தெரிந்தது. என்ன நினைத்தார்களோ தெரியாது. அல்லாஹ்விடம்
இப்படி பிரார்ர்த்தனை செய்தார்கள்
اللهم ارزقني شهادة في سبيلك واجعل قبري في بلد حبيبك
அல்லாஹ்
அவருக்கு ஒளுவுடடைய நிலையில் தொழுகையின் சப்பில் ஷஹாதத்தை வழங்கினான்.
மட்டுமல்ல பெருமானார் (ஸல்) அவர்களுடன் அடக்கமாகும்
நஸீபையும் வழங்கினான்.
துஆ முழுக்க
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்கும் எனில் அல்லாஹ் அதை அதிகப்படியான பரிசுகளுடன்
நிறைவேற்றுகிறான்,
6
துஆ வுக்கான சிறப்பான
நேரங்களை பயன்படுத்துவது துஆ அங்கீகாரம் பெற ஏது வாகும்
நபி யாகூபிடம்
அவரது மக்கள் இஸ்திக்பார் செய்யக் கோரிய போது இனிமேல் செய்வேன் என்பார்.
قَالُوا يَاأَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ(97)قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ(98)
அது தஹ்ஜ்ஜுடைய
நேரத்திற்காக துஆ வை தாமதப்படுத்தியதாகும் என் முபஸ்ஸிர்கள் கூறுகிறார்கள்.
துஆ வுக்கான சிறப்பான
நேரங்களை பயன்படுத்துவது துஆ அங்கீகாரம் பெற ஏது வாகும்
நபி யாகூபிடடம்
அவரது மக்கள் இஸ்திக்பார் செய்யக் கோரிய போது இனிமேல் செய்வேன் என்பார்.
அது தஹ்ஜ்ஜுடைய
நேரத்திற்காக துஆ வை தாமதப்படுத்தியதாகும் என் முபஸ்ஸிர்கள் கூறுகிறார்கள்.
துஆ க்கள் அங்கீகரிக்கப்படும்
சில முக்கிய நேரங்கள்
1.
ليلة القدر. *
2.
جَوْفُ الليلِ الآخِر. *
3.
دُبْرُ الصلاةِ المكتوبةِ . *
4.
بين الأذان والإقامة. *
5.
عِندَ النِّدَاءِ للصلوات المكتُوبة. *
6.
عِندَ نُزُولِ الغيثِ. *
7.
عند زَحفِ الصُّفُوفِ في سبيل الله. *
8.
ساعةُ من يومِ الجُمْعَة. *
9.
الدُّعاءُ بَعْدَ رَمْي الجمرةِ الصُّغرى. *
10.
الدُّعاءُ بعد رمي الجمرةِ الوسطى. *
11.
الدُّعاءُ داخِل الكعبةِ ومن صلَّى داخل الحِجر فَهُوَ من
البيت. *
12.
الدُّعاءُ على الصَّفا. *
13.
الدُّعَاءُ على المروَة. *
14.
الدُّعَاء عند المشعر الحرام
15.
دُعاءُ يوم عَرَفَةَ في عَرَفَة. *
16.
عِندَ اجْتِمَاعِ المُسلمين في مجالسِ الذِّكْر.
17.
عند شُرب ماءِ زمزم مع النيِّةِ الصادقةِ
No comments:
Post a Comment