ஹஜ்
இன்று தொடங்குகிறது
உலகம்
முழுவதிலிருமிருந்து
புனித மக்காவில் குழுமியுள்ள சுமார் 30 இலட்சம் ஹாஜிகள் ஹஜ் கடமைகளின் கேந்திரமான மினா மைதானத்தை நோக்கி இன்று பயணமாகிறார்கள்,
ஒரே
நேரத்தில் பல இலட்சம் பேர் ஒரே இடங்களில் ஒரே மாதிரி கூடி ஓரிறையை வணங்குகிறார்கள். அவரவர் விரும்பிய படி அல்ல. அல்லாஹ் கூறியபடி கடமைய நிறைவேற்றுகிறார்கள்.
மனிதர்கள்
பழக்கத்திற்கு
அடிமைகள்.
காலையில்
காப்பி குடித்துக் கொண்டே பேப்பர் படிக்கும் பழக்கம் உடையவர்கள் காப்பி கிடைக்கவில்லை என்றாலோ பேப்பர் வரவில்லை என்றாலோ அன்றை பொழுதே விடியாததைப் போல் அவஸ்தை படுவார்கள். தொழுகை போன்ற வணக்கங்கள் கூட வழக்கமான ஒரு பழக்கமாக பல சந்தர்ப்பங்களில் நடந்தேறிவிடுகிறது.
அல்லாஹ்
மினாவின் நாட்களில் ஹாஜிகளின் பழக்க வழக்கங்களை புரட்டிப் போடுகிறான்.
விரும்பிய
ஆடை கிடையாது. இஹ்ராமின் ஆடை தான் அணிய வேண்டும்.
(மூன்று நாட்கள் இஹ்ராமில் இருக்க வேண்டும் என்று சொன்னதும் ஹாஜிகள் அடைகிற சங்கடத்தைப் பார்த்தால் மாறும் இந்தப் பழக்கம் எவ்வளவு சிரமமானது என்பதை அறியலாம்)
பேஸ்டு
கிடையாது. சோப்பு கிடையாது , ஷாம்பூ கிடையாது. பவுடர் கிடையாது.
(ஒரு ஹாஜியானி சொல்கிறார். என கணவர் பவுடர் அடிக்காமல் இருக்க மாட்டார் எப்படித்தான் ஐந்து நாள் பவுடர் இல்லாமல் இருப்பாரோ)
வழக்கமாக
அணியும் செருப்பு கிடையாது.
(ஒரு பெண் மணி கேட்டார் நான் இந்தச் செருப்பை தான் அணிய வேண்டும். இந்தச் செருப்பு இல்லாமல் அரை மணி நேரம் கூட நடக்க கூடாது என்று டாக்டர் சொல்லி இருக்கிறார். இந்தச் செருப்பை அணிந்து கொண்டு தவாபு சஃயு செய்யலாமா ?
நிர்பந்தத்திற்கு அனுமதி
உண்டு. நிர்பந்தமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும், என்றேன். )
தொழுகை
கூட வழக்கப்படி கிடையாது.
துல்
ஹஜ் 9 ம் நாள் அன்று மஃரிபுக்கான பாங்கு சொல்லப்பட்ட பிறகு ஹாஜி அரபா மைதானத்திலிருந்து முஜ்தலிபா மைதானத்திற்கு புறப்படுவார். அரபாவில் மஃரிபு தொழ மாட்டார்.
காலமெல்லாம்
தொழுகையை அதன் நேரத்தில் தொழுபவராக இருப்பார். பாங்கு சொல்லி விட்டால் ஒரு தவிப்பு வந்து விடும், உடனடியாக தொழுவிட்டால் தான் நிம்மதி அடைவார், என்ற நிலையில் இருக்கிற ஹாஜி கூட மஃரிபை தாமதப்படுத்தியே முஸ்தலிபாவில் தொழுவார்.
இயற்கை
தேவைகளை நிறைவேற்றுவது கூட வாய்ப்புக் கிடைக்கும் போது தான் நிறைவேற்ற முடியும்.
இரண்டு
வருடங்களுக்கு
முன் சிறுநீர் கழிப்பதற்கு இரவு 3;30 மணிக்கு கியூவில் நின்ற எனக்கு 4 மணிக்குத்தான் அதற்கு வாழ்ய்ப்புக் கிடைத்தது.
அன்றாட
வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் ஹாஜி தன்னுடைய பழக்க வழக்கங்களுக்கு எதிராக கொடி பிடிக்கிறார்.
அவர்
எத்தகைய் அந்தஸ்தில் இருப்பவராக இருந்தாலும் சரி.
மனிதன்
அல்லாஹ்விற்கு
மட்டுமே அடிமையாக இருக்க முடியும். வேண்டும்.
வேறு எதற்கும் அல்ல என்பதை ஒரு வாழ்வியல் பாடமாக அல்லாஹ் ஹாஜிகளுக்கு உணர்த்துகிறான்.
லப்பைக் என்பது
அடிமையின் கூப்பாடு! இதே வந்துட்டேன் எஜமான் என்பது அடிமை தயாராக வைத்திருக்கிற வார்த்தை,
ஹாஜி இந்த வார்த்தையை தான் லப்பைக் அல்லாஹும்ம் லப்பைக் என்று கூறிக்கொண்டே இருக்கிறார்.
ஹாஜிகள்
அல்லாத மற்றவர்கள் குர்பானி கொடுக்கிற போது துல் ஹஜ்ஜின் முதல் பிறையிலிருந்து ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டியவர்களைப் போல முடி நகம் வெட்டிக் கொள்வதில்லை.
மார்க்க
அறிஞர்கள் கூறுவார்கள் ஹாஜிகளைப் போல இருப்பதாக நினைத்துக் கொண்டு முடி நகம் வெட்டாமல் இருப்பவர்களுக்கு அல்லாஹ் ஹஜ்ஜின் வாய்ய்ப்பை வழங்குவான்.
عَنْ أُمِّ سَلَمَةَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ رَأَى هِلَالَ ذِي
الْحِجَّةِ فَأَرَادَ أَنْ يُضَحِّيَ فَلَا يَأْخُذْ مِنْ شَعْرِهِ وَلَا مِنْ
أَظْفَارِهِ حَتَّى يُضَحِّيَ - نسائي
.
குர்பானி
கொடுக்காதவர்களும்
அரபா நாளில் தொடங்கி ஹஜி முடிவடையும் 13 ம் நாள் அஸர் வரை
தொழுகைகளில் தக்பீர் சொல்கிறார்கள்
التكبير سنة بعد الصلاة المفروضة، سواء
صليت جماعة أو لا، وسواء كبر الإمام أم لا؛ وبعد النافلة وصلاة الجنازة، وكذا يسن
بعد الفائتة التي تقضي في أيام التكبير، ووقته لغير الحاج من فجر يوم عرفة إلى
غروب شمس اليوم الثالث من أيام التشريق
ஹாஜியாக அல்லது
ஹாஜியை போல ஏதாவது ஒரு வகையில் உலக முஸ்லிம்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று படுத்துகிறான்.
இவற்றில் முஃமின்கள்
தமது பழக்க வழக்கங்களுக்கு எதிராக அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு கீழே ஒன்றினைந்து நிற்கிறார்கள்.
இது நமக்கு ஒரு
மிக முக்கியமான பாடத்தை உணர்த்துகிறது.
நமது
பழக்க வழக்கங்களை அல்லாஹ் விரும்பிய வண்ணம் கொள்ள வேண்டு, மார்க்கத்தின் வழிகாட்டுதல்களை கவனித்துக்
கொள்ல வேண்டும்.
சாப்பிடுவதிலிருந்து செருப்பணிவது
வரை.
வலது கை இடது என்று
பிரித்துப் பார்க்காமல் காரியங்கள் செய்வது மேற்கத்திய பழக்கம் . நாம் அந்தப் பழக்கத்திற்கு
ஆட்பட்டு விடக் கூடாது.
ஐரோப்பாவில் முழங்கால்
தெரிய பெர்முடாஸ் அணிவது பழக்கமாக இருக்கலாம். நமக்கு அது ஆகாது.
இது போல பழக்க
வழக்கங்கள் அது சாப்பிடுவதில் உரையாடுவதில் குடும்பம் நடத்துவதில் வியாபாரத்தில் கொடுங்கள்
வாங்களில் வீடு கட்டுவதில் திருமணம் நடத்துவதில் என எதிலும் எங்க ஊர் பழக்கம் இது எங்க
குடும்பத்து பழக்கம் இது எங்களுடைய பாட்டன் முப்பாட்டன் பழக்கம் இது என்பது ஷரீ அத்திற்கு
முரண்பாடாக இருக்க கூடாது
மக்காவின் மக்கள்
ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிய பிறகு ஏதாவது ஒரு தேவைக்காக வீட்டுக்கு வருதாக இருந்தால்
வீட்டுன் தலைவாசல் வழியாக வராமல் பின் வாசல் வழியாக வருவார்கள், அல்லாஹ் இதை அநாவசியமானது
என அல்லாஹ் தடுத்து இதில் நன்மை ஏதும் இல்லை என்றான்,
وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوْاْ الْبُيُوتَ مِن
ظُهُورِهَا
அதே போல பெண் குழந்தை
பிறந்தால் அன்றை அரபுகளின் முகம் கறுத்து விடும்.
அல்லாஹ் அதை மாற்றினான்.
فقال تعالى: {وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودًا
وهو كظيم. يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا
ساء ما يحكمون} [النحل: 58-59]
. وقال: ( (من كانت له أنثى، فلم يئدها، ولم يهنها، ولم يؤثر ولده
عليها، أدخله الله الجنة) [أبو داود
இன்று அரபு நாட்டின்
நிலையை கேள்விப்பட்டிருப்பீர்கள். பெண்களை திருமணம்
செய்ய ஆண்கள் மஹர் கொடுப்பதற்கு அதிக முயற்சிக்க வேண்டும். குறைந்த பட்சம் 5
ஆயிரம் ரியால்களும் சாதாரணமாக
50 ஆயிரம் ரியால்களும் கொஞ்சம் வசதியாக இருந்தால்
சுமார் 2 இலட்சம் ரியால்களும் கொடுத்தால்
தான் ஒரு பெண்ணை ஆண்மகன் திருமணம் செய்ய முடியும்
என்ற சூழ்நிலை இருக்கிறது. இதற்கா ஆண் குமர்களுக்கான திருமண உதவித் திட்டத்தை வங்கிகள்
செயல்படுத்தி வருகின்றன. ஹஜ்ஜுக்கு வந்த ஒரு ஹாஜியிடம்
எனக்கு கல்யாணம் ஆகனும் துஆ செய் என்று ஒரு வாலிபன் சொன்னததக
பயணி ஒருவர் சொன்னார். பெண்ணைப் பெற்றவர்கள் தம் பெண்ணுக்காக மஹராக குடும்பத்திற்கு தேவையான பெருட்களை கேட்டுப் பெறுவதாக ஒருவர் தகவல் சொன்னார்.
ஜாஹிலிய்யாவின் பழக்கத்தை அல்லாஹ் எப்படி மாற்றியிருக்கிறான் பாருங்கள்.
நமது ஊரில் திருமணத்தின் போது பழக்க வழக்கம் என்ற பெயரில் பெண் வீட்டுக்காரர்கள்
எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்
அதே போல திருமணத்தில் பெண்களிடம் எந்தச் சம்பந்தததை எதிர்ப்பார்க்காமல் இருப்பது
பண்டைய அரபுகளின் பழக்கமாக இருந்தது. இஸ்லாம் அதை மாற்றியது.
(لا تنكح الأيم حتى تستأمر، ولا تنكح البكر حتى تستأذن) [مسلم].
வாரிசுரிமைகளில் பெண்களை ஒதுக்கி வைப்பது அறியாமைக் கால பழக்கமாக இருந்தது.
{للرجال
نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل
منه أو كثر نصيبًا مفروضًا} [النساء:
இதே போல தீய பழக்க ங்கள் பல வற்றிலும் இருந்து இஸ்லாம் முஸ்லிம்களை மாற்றியது,
ஜோசியக்காரர்கள் குறி சொல்கிறவர்கள் வாஸ்துபார்க்கிறவர்களை நாடிச் செல்லும்
பழக்கம்.
தலை முடி வைப்பதிலிருந்து நகம் வளர்ப்பது சாயம் பூசுவது ஆடை அணிவதில் தொடங்கி
வியாபாரம் நடைமுறைகள் வரை ஒவ்வொன்றிலும் நமது பழக்க வழக்கங்களை எதிர்த்து மார்க்கத்தின்
பழக்கத்திற்கு
பர்தா அணிகிற பெண்களின் பழக்க வழக்கங்கள் அல்லாஹ்வின் விருப்பத்தில் அல்லாஹ்வின்
தூதரின் விருப்பத்திற்கேற்பவும் அமைய வேண்டும்.
நபி இபுறாகீம் அலை அவர்கள் தமக்கு மிகவும் விருப்பமான மகனை அல்லாஹ் சொன்னான்
என்பதற்காக அறுத்தார்கள்.
மக்களுக்காக எதையும் செய்யத் தயாராவது தான் நம்முடைய பழக்கம். ஆனால் அல்லாஹ்வுக்காக
அந்தப் பழக்கத்திற்கு எதிராக ஒரு புரட்சியை நிகழ்த்திககாட்டினார்கள் இபுறாகீம் (அலை)
ஹஜ் என்ற வணக்கம் பழக்க வழக்கங்களுக்கு எதிரான் ஒரு போராட்டத்திற்கு நம்மை தயார்
படுத்துகிறது.
சுய பழக்க வழக்கங்களுக்கு எதிரான போராட்ட குணத்தை ஹஜ் நமக்கு கற்றுக் கொடுக்கிறது.
தத்துவங்களை சரியாக புரிந்து கொள்ளும் போது தான் நமது வழிபாடுகள் அர்த்தமுள்ளவையாகின்றன. இந்த ஆண்டு ஹஜ்ஜு செய்யக் கூடிய அனைத்து ஹாஜிகளின் ஹஜ்ஜையும் அல்லாஹ் மக்பூல் ஆக்குவானாக!
ஹஜ்ஜின் அமல்களை இலேசாக்குவானாக! பாதுகாப்பானதாக ஆக்குவானாக! நமக்கு ஹஜ்ஜின் பாக்கியங்களை தருவானாக!
ஆமீன்
ReplyDeletealthamthu lillah
ReplyDelete