அமெரிக்க
அதிபராக டொனால்ட் ரடிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
·
சாதாரண பொதுமக்கள்
·
விஞ்ஞான ரீதியாக
கருத்தாய்வுகளை நடத்தும் ஊடகங்கள்
·
அரசியல் அரங்கிலும்.
அனைவரும்
வியந்து நிற்கின்றனர்
முதல்
காரணம் விஞ்ஞான ரீதியான கருத்துக்கணிப்புக்களும் மக்களின் உணர்வுகளும் தேர்தல் நடை
பெற்ற நிமிடம் வரை ஹிலாரிக்கு சார்பாக இருந்தது. சதவீதக் கணக்கில் டிரம்ப் வெகுவாக
பின் தங்கியிருந்தார்.
முஸ்லிம்கள்
அகதிகளுக்கு எதிரான டிரம்பின் வெறுப்பூட்டும் அதிரடிப் பேச்சுக்கள் மக்கள் மத்தியில்
கடும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியிருந்தன.
முஸ்லிம்களை
அமெரிக்காவிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்றார்.
நியூயார்க்கின்
அனுமதியற்ற அகதிகள் குடியேறிகளை கிரிமினல் குற்றம் சாட்டி சிறையில் தள்ளுவேன் என்றார். (வெளிநாட்டவர்கள் அதிக அளவில் தங்கியிருக்கும் நகரம்
நியூயார்க்)
மெக்ஸீகோவைச்
சார்ந்த கருப்பின மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்து விடாத படி இனத் தடுப்பு சுவர்
எழுப்புவேன் என்றார்.
இவை
மட்டுமல்ல அவருடைய பாலியல் தொடபுகள் பற்றிய
சர்ச்சைகளால் அவருடைய இமேஜ் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தன. நிறைய குற்றச்சாட்டுக்களை
அவருடை முன்னாள் தோழிகள் வெளியிட்டனர்.
அமெரிக்கர்கள்
பொதுவாக தமது சொந்த வாழ்வில கற்பொழுக்கம் தொடர்பான சுத்தததிற்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்க மாட்டார்கள் என்றாலும் தம்மை ஆளுகிறவர்கள் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும்
என்று எதிர்பார்ப்பார்கள்
1980
களில் நடை பெற்ற அதிபர் தேர்தலின் போது வேட்பாளராக இருந்த ஒருவர் வெற்றி பெறுவார் என்று
உறுதியாக பேசப்பட்ட நிலையில் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன் அவர் ஒரு கடற்கரையில்
ஒரு பெண்ணுடன் இருந்த புகைப்படம் வெளியானது.
It
is a sin between me and my wife
இது
எனக்கும் என் மனைவிக்கும் இடையே உள்ள பிரச்சனை இதைப் பற்றி மக்கள் கவலைப் படத்தேவை
இல்லை என்றார்.
ஆனால்
மக்கள் அவர் சொன்னதை ஏற்கவில்லை. தேர்தலில் தோற்றுப் போனார்.
தம்மை
ஆளுபவர் ஒழுக்கமுள்ளவராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க மக்கள் எதிர்பார்ப்பதாக அப்போது
பத்ரிகைகள் கூறின.
இந்தக்
காரணங்களால் டிரம்ப் வெற்றி பெறமாட்டார் எனக் கருதப்பட்டது.
இன்னொரு
காரணம் டிரம்பை எதிர்த்து நின்றவர் ஒரு பெண்மணி,
அமெரிக்க
வரலாற்றில் ஒரு பெண்மணி அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். அதனால் பாலின சமத்துவம்
குறித்து அதிகம் சர்ச்சை செய்கிற அமெரிக்கர்கள் இந்த முறை ஒரு பெண்மணிக்கு வாக்களிப்பார்கள்.
ஹிலாரி வெற்றி பெறுவார் என்று நம்பப் பட்டது.
இரண்டு
எதிர்பார்ப்புக்களும் தோற்றுப் போய் டிரம்ப் வெற்றி பெற ஹிலாரி தோற்றுப் போய்விட்டார்.
உலகம்
அதிர்ந்து தான் போயிருக்கிறது. ஒரு கலக்கம் பலரிடமும் இருக்கிறது.
அமெரிக்க
வரலாற்றில் இல்லாத வகையில் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் கூட அவரை அதிபராக ஏற்க
முடியாது என்று கூறி பல போராட்டங்களும் கலவரங்களும் நடந்து வருகின்றன. பலர் பலியாகிவிட்டனர்.
அமரிக்க
அதிபர் தேர்தல் முடிவுகள் சில முக்கிய செய்திகளை உலகிற்கு தருகின்றன.
அதிகாரத்தை
யாருக்கு வழங்குவது என்பதை அல்லாஹ்வே தீர்மாணிக்கிறான்.
திருக்குர்
ஆன் கூறுகிறது.
قُلِ
اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاء وَتَنزِعُ
الْمُلْكَ
مِمَّن تَشَاء }الآية آل عمران26- 27
இந்த
உண்மையை புரிந்த பிறகு ஒரு மனிதருக்கு எதிர்பாராத வகையில் அதிகாரம் வழங்கப்பட்டால்
காரணம் கேட்காதே என்பார்கள் கவிஞர்கள்/
ولذا يقول بعض الشعراء :
ملك الملوك إذا
وهب لا
تسألن عن السبب
மனிதர்கள்
வாக்களித்துத் தான் ஆட்சியாளர்களை தேர்வு செய்கிறார்கள் என்றாலும் வாக்குப் பதிவின்
முடிவில் அல்லாஹ்வின் தீரமாணமே முழுக்க முழுக்க அடங்கியிருக்கிறது.
அமெரிக்க
அதிபர் தேர்தல் விவகாரத்திலும் இந்த நிலை தான் பிரதிபலிக்கிறது,
என்றாலும்
ஊடகங்களும் அரசியல்; நிபுணர்களும் ஹிலாரியின் தோல்விக்கான காரணங்களை இன்னும் ஆராய்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
அந்தக்
காரணங்களில் ஒன்று
அமெரிக்க
அதிபர் பொறுப்பென்பது அதிக கனம் கொண்டது. உலகின் தலைமைக்கு சமமானது என்பதை உணர்ந்துள்ள
அமெரிக்கர்கள் தங்களுக்கு ஒரு பெண் தலைமை ஏற்பதை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள் என
பல ஆண்டுகளாக இஸ்லாமிய அறிஞர்கள் சுட்டிக் காட்டி வருவது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஹிலாரி
தோற்றதற்கு முக்கியக் காரணிகள் ஒன்று அவர் பெண் என்பதாகும். பிபிசி கூறுகிறது.
“ சந்தேகத்திற்கு இடமில்லாமல், பழைய பாணி , பாலின பாரபட்ச நோக்கும், ஒரு பங்கை ஆற்றியது. பல ஆண் வாக்காளர்கள், ஒரு பெண் அதிபராக உருவாவதை சகித்துக் கொள்ளவில்லை.”
ஆண்
வாக்களர்கள் பெண்ணை விட வில்லை என்று பிபிசி சொன்னாலும் பெண் வாக்காளர்கள் கூட ஹிலாரிக்கு
அதிகம் வாக்களிக்க வில்லை என்பதை ஆதாரத்துடன் ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன,
“ஒன்று
பெண்கள் அதிக அதிகாரம் உள்ள
உயர்
பொறுப்பிற்கு வருவது பொருத்தமற்றது.”
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا
فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ
ஆன்களுக்கு
பெண் தலைமை ஏற்க முடியாது என்பது தாழ்வு அல்ல. எதார்த்தம்,
எந்த
எதார்த்தமும் தாழ்மையாக ஆகாது.
சிங்கம்
மனிதனை விட பலமானது. மனிதன் பல்வீனமானவன் என்பது எதார்ந்த்தம்
இதனால்
மனிதன் தாழ்ந்தவனாகி விட மாட்டான் அல்லவா அது போல.
அதிகாரம்
என்பது உடல் வலு சிந்தனை திறன் செயல் படும் வேகம் துணிச்சல் அச்சமற்ற சூழல்கள் என்பதை
பொறுத்ததாகும். இந்தச் சூழல்கள ஆணகளுக்கே அதிகம் கிடைத்திருக்கிறது என்பது எதார்த்தம்
அந்த எதார்தத்தை அனுசரித்தே ஆண் நிர்வாகியாகிறான் என்கிறது இஸ்லாம்.
ஒரு
வகையில் இது ஆணுக்கு சிறப்பு அந்தஸ்து என்றாலும் பெண்களுக்கு வேறு வகையில் அந்தஸ்தும்
சிறப்பும் உண்டு என்பதை திருக்குர் ஆனின் இந்த வாசகம் உணர்த்துகிறது.
بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ
ஆணைவிட பெண்ணை உயர்த்தி இருக்கிறான் என்று சொல்ல வில்லை. சிலரை விட சிலரை என்றவார்த்தை சில இடத்தில் ஆண்களும் சில இடத்தில் பெண்களும் என்ற கருத்தை தருகிறது.
அதிகாரம் செய்யும் தலைமைத்துவ பணிக்கு அல்லாஹ் பொதுவாக ஆண்களை தேர்வு செய்திருக்கிறான்.
அதே நேரத்தில் விதி விலக்காக பெண்கள் அதிகார பீடத்தில் அமர்கிற சில சந்தர்ப்பங்களை
இஸ்லாம் மறுக்கவும் இல்லை.
சபா நாட்டின் அரசியாக பல்கீஸ் அம்மையார் இருந்ததை குர் ஆன் தவறாக விமர்ச்சிக்க
வில்ல. மாறாக புத்திசாலித்தனமாகவும் மக்களிடம கருணையோடும் அவர் ஆட்சி செய்த விதத்தை
குர் ஆன் போற்றிக் கூறவே செய்கிறது.
பொதுப்படையாக் பெண்கள் அதிக அதிகாரம் படைத்த பதவிகளுக்கு ஏற்புடையவர்கள் அல்ல.
பெண் போலீஸை காவலுக்கு அனுப்பி விட்டு அந்த பெண் போலீஸுக்கு காவலாக ஆண் போலீசை
அனுப்புகிறது காவல் துறை.
இராணுவத்தின் உயர் அதிகாரமுள்ள பொறுப்புகளுக்கு உலகின் எந்த நாட்டிலும் பெண்கள்
நியமிக்கப்படுவதில்லை.
இந்தப் பழைய நியதியின் அடிப்படையில் தான் அதிக நவீனமும் சுந்தந்திரமும் பாலினப்
புரட்சியும் பேசப்படுகிற அமெரிக்காவில் ஹிலாரி நிராகரிக்கப்பட்டிருக்கிறார்.
அமெரிக்க மக்களின் கருத்து இஸ்லாமின் கருத்துக்கு ஒத்திசைவானதாகும்.
அதே நேரத்தில் உலகம் முழுவதிலும் இருக்கிற முஸ்லிம் பெண்கள் விசயத்தில் மட்டும்
பாரபட்சமாக கருத்துப் போசுவது
முஸ்லிம் பெண்கள்
·
அடிமைப்படுத்தப் படுகிறார்கள்.
·
உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப் படுவதில்லை
·
அதிகாரம் அளிக்கப்படுவதில்லை
என்று பேசுவதும் வாதிப்பதும் அப்பட்டமான வஞ்சகமாகும்.
தங்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று வேறுபடுத்திப் பார்ப்பதாகும்.
அமெரிக்கா என்ற அடாவடி நாடு தனது இரட்டை முகத்தை ஹிலாரியின் விசயத்தில் வெளிப்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி உலகத்தை ஒரு புறம் கவலையும் துக்கத்திலும் ஆழ்த்தியிருக்கிறது
என்றால் மறு புரம் டிரம்பின் ஆச்சரியப்படத்தக்க வெற்றிக் கான மற்றொரு காரணம் சர்வதேச
சமுதாயத்தை இன்னும் அதிக அதிர்ச்சியடைவைத்துள்ளது.
அமெரிக்க மக்கள் அதிக சப்தம் போடாமல் டிரம்ப் கிளப்பி விட்ட வெள்ளை இன கிருத்துவ
வெறியேற்றத்திற்கு பலியாகியிருக்கிறார்க.
ஒடுக்கப்பட்ட கருப்பர் இனத்தவர்களின் எழுச்சி அது போல முஸ்லிம்களின் பெருக்கும்
ஆகிய இரு காரணங்களும் அமெரிக்க வெள்ளை இன மக்களை மனித சமுதாயத்திற்கு எதிராக கோபம்
கொள்ளத் தூண்டியிருக்கிறது.
அந்த வகையில் இம்முறை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியேறப்போகிறவர் கருப்பு
மனத்துடன் செல்கிறார்.
இனறைய நாகரீக உலகம் அதிக கவலைப்பட வேண்டிய செய்தியாகும்.
மக்களை நிறத்தின் அடிப்படையிலும் மதத்தின் அடிப்படையிலும் பிரித்து இனவாதம்
கற்பிப்போர் மனித சமூகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தி விடுவர்.
ஜெர்மனிய மக்கள் தான் உலகை ஆளப்பிறந்தவர்கள் என்று இனவாதம் பேசி ஜெர்மனியின்
அதிகாரத்தை கைப்பற்றீய ஹிட்லர் இரண்டாம் உலக
யுத்ததிற்கு காரணமானான் என்பது வரலாறு.
பல இலட்சம் பேர் கொடூரமாக கொல்லப்படவும் துன்புறுத்தலுக்கு ஆளாகவும் காரணமாக
இருந்தது இரண்டாம் உலக யுத்தம்.
டிரம்பின் இன வாதப் போக்கு உலகில் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கிற அமைதியையும்
குலைத்து விடக் கூடாது
எந்த வகையிலும் இன்வாதக் கருத்துக் கள் ஏற்புடையதல்ல.
அரசியசிலிலும் சமூக வாழ்விலும் தூய்மையை வலியுறுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
இறுதி அறிவுறை நமக்கு நாமே நினைவுகூறுகிறோம். டிரம்ப் அவர்களுக்கும் நினைவு படுத்துகிறோம்.
(يَا أَيُّهَا النَّاسُ أَلَا إِنَّ رَبَّكُمْ
وَاحِدٌ وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى
أَعْجَمِيٍّ وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ
وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى ..))
தம்முடைய மொழி பேசாதவனை அஜமி ஊமையன் என்று அழைக்கிற வழக்கமுடைய அரபு மக்களிடையே
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செய்த பிரகடனம் இது.
நபியவர்கள் இல்லா பித்தீன் என்று சொல்ல வில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் அதுவும்
ஒரு வகை இனவாதமாக இருக்கும்.
இந்த உலகில் சொற்ப காலம் வாழ்ந்தாலும் நீடுழி காலம் புகழ் பெற நினைக்கிற எவரு
இந்த நபி மொழியை மறக்க கூடாது.
டிரம்ப் அவர்களுக்கும் இதை நினைவூட்டுகிறோம்.
தவறான கொள்கை யுடையோர் ஒரு சில போது ஜெயித்தாலும் தமது நடவடிக்கையால் உலகம்
வாழும் காலம் வரை அவர்கள் சபிக்கப் படுவார்கள். பேரழிவை அவர்கள் சந்திப்பார்கள். அத்தகையோரின்
முடிவு இழிவானதாக இருக்கும்.
பிர் அவன் தனக்கு கிடைத்த அதிகாரத்தை சாமாணிய மக்களை கொடுமைப் படுத்த பயன்படுத்திக்
கொண்டான்.
إِنَّ فِرْعَوْنَ عَلا فِي الأَرْضِ وَجَعَلَ
أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِّنْهُمْ يُذَبِّحُ أَبْنَاءَهُمْ
وَيَسْتَحْيِي نِسَاءهُمْ إِنَّهُ كَانَ مِنَ الْمُفْسِدِينَ
மக்களை பிளவு படுத்தினான். ஒரு சாராரை துன்புறுத்தினான், தனக்கு தோன்றியபடி
எல்லாம் செய்தான்,
அவனுக்கு ஒரு திட்டம் சரி என்று தோன்றியது அதில் மக்கள் எத்தகைய துன்பத்தை அனுபவிப்பார்கள்
என்று அவன் சிந்தித்தும் பார்க்கவில்லை.
இப்போது நம்முடைய மத்திய அரசின் தலைமை அமைச்சர் பிரதமர் அவர்களுக்கு ஒரு திட்டம்
சரி என்று தோன்றியிருக்கிறது. அதற்காக அவர் மக்களை எத்தகை கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்
பாருங்கள் ?
கருப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாக சொல்லி மக்களின் வழக்கத்தில் 85 சதவீதம் பரவியிருக்கிற
500 ஆயிரம் ரூபாய் நாணயங்களை தடை செய்திருக்கிறார்.
அது சாமாணிய மக்ளையே பெரிதும் பாதித்திருக்கிறது என்பது கடந்த சில நாட்களாக
வெளிப்படும் காட்சிகளிலிருந்து வெள்ளிடை மலையாக தெரிகிறது.
எந்தப் பண்க்காரனும் கியூவில் இல்லை
எந்த பெரிய பிஸினெஸ் மேனும் கியீவில் இல்லை
கவுன்ஸிலரின் மனைவி உட்பட அரசியல் அதிகாரத்தில் இருக்கிற அல்லது இலஞ்சம் வாங்குகிற
பதவியை வகிக்கிற எவரும் கியூவில் இல்லை.
சாமாணிய மக்கள் சாப்பாட்டுக்கும் பயணத்திற்கும் மருத்துவத்திற்கும் கையில் பணமிருந்தும்
செலவு செய்ய முடியாமல் பரிதவித்துக் கொன்டிருக்கிறார்கள்/
கருப்பு பணம் வைத்திருப்போ நிம்மதியாக இருக்க அத்தியாவசிய அல்லது சேமிப்பு நோக்கில்
பணம் வைத்திருக்கிற பொதுமக்களை அரசு மறைமுக எமெர்ஜென்ஸி மூலம் துன்புறுத்திக் கொன்டிருக்கிறது.
இதுவரை பணபப்ற்றாக்குறையினால் சுமார் 40 பேர் இறந்து போயிருக்கிறார்கள்
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ்தலைவர் குலாம் நபி ஆசாத அவர்கள் இதை உருக்கத்தோடு
எடுத்துச் சொல்லியிருக்கிறார்
இதற்கு நியாயமாக பதிலளிக்க திராணிற்ற அரசு அவரது பேச்சை குறை கூறி பிரச்சனையை
திசை திருப்பப் பார்க்கிறது.
மக்களது பொருளாதாரம் செயற்கையாக முடக்கப்பட்டிருக்கிறது. ஆளும் கட்சிக்கு இதன்
மூலம் பின்புற வாசல் வழியாக ஏராளமாக பணம் திரண்டு கொன்டிருக்கிறது என்று அரசியல் பார்வையார்கள்
கூறுகிறார்கள்
இந்தக் குற்றச்சாட்டு உண்மையோ இல்லையோ ஆனால் மக்கள் சுதந்திரம் பெற்ற காலத்திற்கு
பிறகு மிக அதிகமான தொல்லயை இப்போதை அரசாங்கத்தால் அனுபவித்துக் கொன்டிருக்கிறார்கள்
.
யாரெல்லாம் கள்ளப்பணம் வைத்திருக்கிறார்கள் என்பது இந்திய மக்களுக்கு வெளிப்படையாக தெரியுமோ அவர்கள் எல்லாம் இந்த திட்டத்தை ஆதரிக்கிறார்கள்.
சாமானிய மக்கள் தெருக்களில் வரிசையில் காத்திருக்கிறார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே மக்களுக்கு இவ்வளவு இன்னலை தந்த சூழ்ல் இதற்கு
முன் ஏற்பட்ட தில்லை
வெளிநாட்டிலுள்ள கருப்பு பணத்தை ஒரு வருடத்தில் மீட்பேன் என்று சவடால் பேசிய
பிரதமரால் கருப்பு பணத்தை கண்டு பிடிக்கவே முடியவில்லை.
இப்போது உள்ளூரில் உள்ள கருப்பு பணத்தை கைப்பற்றப் போகிறேன் என்று தடாலடியாக
பேசி மக்களை கடும் துயரத்திற்கு ஆளாக்கி வருகிறார்கள்.
அரசு தனது திட்டத்தின் கொடுமையை உணர்ந்து 500 ஆயிரம் செல்லாது என்ற அறிவிப்பை
திரும்ப பெற வேண்டும்.
இந்திய அரசியல் வாதிகளில் பெரும்பாலோர் ஊழல் பெருச்சாளிகளாக பெயர் பெற்று விட்டதால்
இது விசயத்தில் அரசாங்கத்திற்கு எதிராக போராட தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எளிமையான காசில்லாத முதல்வர்கள் என்று பாராட்டப்படுகிற மேற்கு வங்க முதல்வரும்
தில்லி முதல்வரும் மூன்று நாட்களுக்குள் அரசு இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேன்டும்
என்று கூறியிருக்கிறார்கள்.
இத்தகைய முயற்சிகள் தொடரப்பட வேண்டும்.
அரசு தனது திட்டத்தின் பலவீனத்தை உணர்ந்து அதை வாபஸ் பெறுவது அரசிற்கு தோல்வியாகாது,
அரசு மக்களின் நலைனை கவனத்தில் கொண்டது என்றே அர்த்தமாக அமையும்
சில குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக அரசு பொது மக்கள் அனைவருக்குமே அதிக நாட்கள்
தண்டனை வழங்க கூடாது, எதிர்த்து குரல் எழுப்புகிறவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் என்று
அது கருதக் கூடாது
மக்களை துன்பத்திற்கு உள்ளாக்குவோரை அல்லாஹ் அவர்களின் எந்த திட்டத்தையும் மீறி
அழித்து விடும் சக்தி அல்லாஹ்வுக்கு இருக்கிறது;
நம்ரூதின் அரசவையில் ஒரு நாள் ஜோதிடர்கள் கவலையாக இருந்தனர்.
நம்ரூது விடம் இன்று கருவில் உருவாகும் ஒரு குழந்தையால் உன்னுடை அதிகாரம் போகும்
என்றனர், அன்று அனைத்து தம்பதிகளையும் பிரிக்க உத்தரவிட்டான்,. அதை கண்காணிக்க அஜர்
எனும் தளபதியை பொறுப்பாக்கினான், அன்றைய கடுமையான வேலைகளை முடித்து விட்டு ஆஜர் சற்று இளைப்பாரினார். அவரது தம்பி தாரிக் அண்ணனது
தலைமாட்டில் விளக்கைப் பிடித்தபடி காவல் காத்து கொண்டிருந்தார். அங்கு அவரை தேடி அவரது
மனைவி வந்தார். அப்போது ஒரு மலக்கு ஒரு பணியாளரைப் போல அங்கு வந்தார். அவரிடம் விளக்கை
ஒப்படைத்து விட்டு தாரிக் தனது மனைவியுடம் ஆஜருக்கு அருகிலேயே தாம்பத்திய உறவில் ஈடுபட்டார்.
அன்று கருவில் உருவானார் இபுறாகீம் அலை அவர்கள். அவர் மூலமே நம்ரூதின் அதிகாரம் விழுந்தது.
யூதர்களை எந்தப் பாதையால் பாதுகாத்தானோ அதோ கடல்வழியால் அல்லாஹ் அழிக்கவும்
செய்தான்.
யூகிக்க முடியாத அல்லாஹ்வின் திட்டங்களை ஆட்சியிலிருப்பவர்கள் அஞ்சிக்க் கொள்ள
வேண்டும்.
நம்முடைய பிரதமரும் சரி அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற டிரம்பும்
சரி இதை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதற்கு அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
அப்படி உணர்ந்து கொள்ள தவறினார்கள் எனில் இதற்கான பதிலை வரலாற்றில் ஒரு கேலிப்
பதிவாக இழிவின் அடையாளத்தை அவர்கள் அனுபவிப்பார்கள்.
மாஷாஅல்லாஹ்!அமை!
ReplyDelete