வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 01, 2016

காலம் காத்திருந்த கருணை


الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِندَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنجِيلِ يَأْمُرُهُم بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ ۚ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ ۙ أُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ (157)


பிறந்த ரபீஉல அவ்வல் மாதம் தொடங்கி விட்டது. முஸ்லிம்களின் மகிழ்ச்சி வெளிப்பாடுகள் மெளலூது மஜ்லிஸ்களாகவும் மீலாது சொற்பொழிவுகளாகவும் நிகழத் தொடங்கி விட்டன. அல்ஹ்மதுலில்லாஹ். அண்ணலெம் பெருமானாரின் மீதான அன்பை அதற்குரிய அனைத்து வழிகளிலும் வெளிப்படுத்த அல்லாஹ் நமக்கு தவ்பீக் செய்வானாக!

ரபீஉல அவ்வல் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் நபி (ஸல்) அவர்களைப் பற்றிய செய்திகள் சிறப்பாக பரிமாறப்படுகின்றன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் நபி (ஸல்) அதிக ஆச்சரியத்திற்குர்ய தலைவராக திகழ்கிறார்கள்.

முடி சூடிய அரசியல் அதிகாரம் கோலாச்சிக் கொண்டிருந்த காலத்தில் அண்ணல் பெருமானாரின் அரசியல் வாழ்வு பேராச்சரியத்திற்குரியதாக இருந்தது.

மகுடம் இல்லை, மாளிகை இல்லை. காவலர்கள் இல்லை. ஏவளால் இல்லை. துதிபாடிகள் இல்லை. சாமரம் வீசுவோர் இல்லை. சாரட் வண்டி இல்லை. அரச சபை இல்லை. ஆராய்ச்சி மணி இல்லை.

இவை எதுவும் இல்லாமல். இவற்றை வைத்துக் கொண்டு ஆட்சி செய்தவர்களை விட சிறப்பான சீரான ஆட்சியை நபி பெருமானார் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள் என்பது ஒரு காலத்து ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

மற்றொரு காலத்தில் முடி சூடிய ஆட்சியாளர்களை விட சமயத்தலைவர்கள் அதிக அதிகாரம் படைத்தவர்களாக செல்வாக்குள்ளவர்களாக இருந்தார்கள்.

அந்தக காலத்திலும் ஆய்வாளர்கள் பெருமானாரை அதிக ஆச்சரியக்கண் கொண்டே நோக்கினார்கள்
ஏனெனில் சமயத்தலைவர்கள் குறிப்பாக போப்பாண்டவர்கள் அதிக பாசாங்குத்தனம் கொண்டவர்களாகவும் வேஷதாரிகளாகவும் இருந்தனர். ஒரு கையில் அமைதிப் புறாவை வைத்துக் கொன்டு மறுகையில் ஆயுதங்களை ஏந்தி நின்றனர். உலகை துறந்ததாக சொல்லி விட்டு அதிக உல்லாசத்திலும் பகட்டிலும் திழைத்தனர்.

முஹம்மது (நபி) அவர்கள் மிக எளிமையான இரண்டு முகங்கள் இல்லாத வெளிப்படையான சீர்திருத்தவாதியாக இருந்தார்.

யாரும் அவரை எளிதில் அணுக முடியும், சமயம் குறித்த விளக்கங்களை நேரடியாக கேட்க முடியும். தமது விவகாரங்களில் தீர்வு பெற முடியும் என்ற சூழ்நிலை நிலவியது,

  ويقول (صلى الله عليه وسلم) في حديثه: «حُرِّم على النار كل هيِّن ليِّن سهل، قريب من الناس»
என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் அதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டினார்கள்.

قد كانت هناك امرأة كبيرة السن تطوَّعت أن تنظِّف مسجده، ثم غابت فترة فلم يرها رسول الله (صلى الله عليه وسلم)، فسأل فقالوا: ماتت، فقال لأصحابه: «أفلا آذنتموني» - أي: لِمَ لَمْ تُخبروني بوفاتها؟ - لقد ظنوا أن شأنها أقل من أن يشغلوا به رسول الله (صلى الله عليه وسلم)، وهو المنشغل بعظائم الأمور، ولكنه عاتبهم، ثم قال: «دلوني على قبرها» فدلوه، فصلَّى عليها

وعند الطعام كان يأكل كأحدهم، فليس له مكان مخصص للطعام، بل كان يقول: «إنما أنا عبد، آكل كما يأكل العبد، وأجلس كما يجلس العبد»

فليس له من خواصّ الأغنياء أو ذوي الهيئات جلساء، بل كان يجالس الجميع، وأكثر جلوسه كان مع الفقراء، 

فقد قال أنس بن مالك (رضي الله عنه): حج النبي(صلى الله عليه وسلم) على رحل رثٍّ وقطيفة تساوي أربعة دراهم أو لا تساوي،ثم قال :     ;    « اللهم حجة لا رياء فيها ولا سمعة»

இன்றைய ஆட்சியாளர்கள் மதவாதிகள் அரசின் பணத்தை மக்களின் பணத்தை தமது சொந்த ஆடம்பரத்திற்காகவிற்கு பவிசிற்காகவும் எவ்வளவு செலவு செய்கிறார்க அல்லது பயன்படுத்திக் கொள்கிறாரர்கள் என்பதை ஒப்பிட்டு பார்க்கையில் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வு அதிக ஆச்சரியத்தை தருகிறது.

பெருமானாரின் கருணையும் அன்பும் மனிதர்களை கடந்து மிருகங்களிடம் கூட எவ்வளவு பரிவுமிக்கதாக இருந்தது என்பதை நினைத்து விலங்கின ஆர்வலர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

தாகித்த ஒரு நாயுக்கு தண்ணீர் கொடுத்ததற்காக ஒரு விபச்சாரிப் பெண் சொர்க்கம் சென்றார் என்று சொன்னதை ஜீவ் காருண்யத்திற்காக உச்ச பட்ச மரியாதையா அத்துறை சார்நந்தவர்கள் ஆச்சரியத்தோடும் மரியாதையோடும் கூறுகிறார்கள்

பெருமானாரின் செல்வாக்கை எண்ணி ஆச்சரியப்படுகிற ஒரு மேற்கத்திய  அறிஞர் இப்படி ஆச்சரியப்படுகிறார்.

முஹம்மதுவுக்கு நாய் பிடிக்க வில்லை என்பதற்காக ஒரு சமூகமே அதை வெறுக்கிறது.
முஹம்மதுவுக்கு பூனை பிடிக்கும் என்பதற்காக ஒரு சமூகமே அதை அங்கீகரித்து ஏற்றுக் கொன்டிருக்கிறது என்றார்/

உண்மை தான்   நபி (ஸல்) அவர்களின் செல்வாக்கின் ஆழத்தை கனத்தையும் இந்து சிம்பாளிக்காக எடுத்துக் காட்டிவிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் அவர்கள் ஒளு செய்ய வைத்திருந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீரை ஒரு பூனை குடிக்க வந்த போது பெருமானார் (ஸல்) அவர்கள் பூனை தண்ணீர் குடிப்பதற்காக பாத்திரத்தை சாய்த்துக் கொடுத்தார்கள், அது தண்ணீர் குடித்த பிறகு அங்க சுத்தி செய்தார்கள்.

பூனை வாய் வைத்து குடித்த தண்ணீரில் ஒளு செய்யலாம் என்ற சட்டத்தை எடுக்க விலங்கின ஆர்வலர்களோ பிராணிகளிடம் பெருமானார் காட்டிய இறக்கம் குறித்து கிலாகிக்கிறார்கள்.

பெருமானாரின் சட்டமியற்றுகிற நடைமுறையும் போங்கும் இன்றை இந்திய ஆட்சியாளர்களை ஆச்சரியப்படுத்த போதுமானது.

கள்ள நோட்டை ஒழிக்கப் போகிறோம் என்று சொல்லி நாட்டிலுள்ள 92 சதவீத மக்களை அரசு ஒரு மூர்க்கத்தனத்தோடு துன்புறுத்திக் கொன்டிருக்கிறது, சுமார் 75 பேருக்கு அதிகமான குடிமக்கள் இதனால் இறந்து போயிருக்கிறார்கள். ஏழை நடுத்தர சாமாண்ய மக்கள் அடையும் துன்பத்திற்கு அளவே இல்லை, அரசு ஒரு சட்டத்தை போட்டு விட்டு அதை அமுல்படுத்துவதற்காக கடும் சட்டங்களை தினம் ஒன்றாக அறீவித்துக் கொன்டிருக்கிறது.
அது மட்டுமல்ல மக்கள் கால் கடுக்க வங்கி வாசலில் காத்திருந்து பெருந்துயரத்தோடி தம்முடைய பணத்தில் கிடைக்கும் கொஞ்சத்தை பெற்றுச் செல்கிறார்கள். ஆனால் கியூவில் காத்திருப்போரை பதுக்கல் காரர்கள் என பிரதமர் குறை கூறுகிறார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களோ மதீனாவில் அவர்களுக்கு கிடைத்த் சொற்ப காலத்தில் எத்தனை எத்தனை விதமான கடுமையான சட்டங்களை அமுல் படுத்தினார்கள். எந்த சிரமத்தையும் சஞ்சலத்தையும் மக்களுக்கு தரவில்லை.

பெருமானாரின் சட்டங்கள் சமூகம் பெருளாதாரம் சார்ந்ததாக மட்டும் இருக்க வில்லை தனி நபர்களின் நாசூக்கான உணர்வுகளோடும் தொட்ர்புடையதாக இருந்தது.

யாரும் இறந்து போனால் அழக்கூடாது என ஆரம்பத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.  பிறகு அழுது கொள்ள அனுமதியளித்தார்கள். முகத்தில் அடித்துக் கொன்டும் நெஞ்சில் அடித்துக் கொண்டும் சட்டைய கிழித்துக் கொண்டும் ஒப்பாரி வைப்பதை தடை செய்தார்கள்.

ஒரு தனி மனிதனின் மெல்லிய உணர்வில் தலையிடுகிற மிக நாசூக்கான சமயம் இது எனினும் மார்க்கத்தின் கலாச்சாரத்தை நடை முறைப் படுத்த பெருமானார் மக்களை பழக்கினார்.

பெருமானார் (ஸல்) அவர்கள் தனது உத்தரவுகளால் சமுதாயத்தை சிரம்ப்படுத்துகிற தலைவராக இருக்கவில்லை என்பது இன்றைய அரசியல் வாதிகளை ஆச்சரியப்படுத்துகிறது.

எல்லா நிலையுலும் சமுதாயத்தை சீர்திருத்தம் செய்கிற அதே நரத்திலும் சமூகத்தை ஒட்டு மொத்தமாக கஷ்டப்படுத்தி விடுவதை நபி (ஸல்) அவர்கள் தவிர்த்தார்கள்

மிஸ்வாக் தொடர்பான அறிவுரையில் அவர்களது இந்த மனோபாவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : " لَوْلا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلاةٍ "

وقد قال صلى الله عليه وسلم " لولا أن أشق على أمتي لأمرتهم أن يؤخروا العشاء إلى ثلث الليل أو نصفه ".[رواه الترمذي 

 عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي ، لَأَمَرْتُهُمْ عِنْدَ كُلِّ صَلَاةٍ بِوُضُوءٍ

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ : ( كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلَاةٍ ) . فقيل له : كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ ؟ قَالَ : يُجْزِئُ أَحَدَنَا الْوُضُوءُ مَا لَمْ يُحْدِثْ. 

 وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " وَالَّذِي نَفْسُ مُحَمَّد ٍ فِي يَدِهِ ، لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى الْمُؤْمِنِينَ مَا قَعَدْتُ خَلْفَ سَرِيَّةٍ تَغْزُو فِي سَبِيلِ اللَّهِ ، وَلَكِنْ لَا أَجِدُ سَعَةً ، فَأَحْمِلَهُمْ وَلَا يَجِدُونَ سَعَةً ، فَيَتَّبِعُونِي وَلَا تَطِيبُ أَنْفُسُهُمْ أَنْ يَقْعُدُوا بَعْدِي "

(நான் சில நேரங்களில் படை களை அனுப்பி விட்டு பின்னால் தங்கிவிடுகிறேன். எல்லோருக்கு என்னால் வாகன ஏற்பாடுகள் செய்து தரமுடியாது அதே நேரத்தில் என்னை விட்டு விட்டு யாரும் மதீனாவில் தங்கியிருக்க மாட்டார்கள். மக்களுக்கு சிரமமாகிவிடக் கூடாது என்பதற்காகவே தவிர நான் மதீனாவில் தங்கி விடுவதில்லை

சட்டம் போடுவதில் மட்டுமல்ல மக்களை பாதிக்காத  தனது நடவடிக்கைகளிலும் கூட தனது சொந்த விருப்பத்திறாக மக்கள் சஞ்சலமடைவதை அவர்கள் ஏற்கவில்லை.

عَنِ الأَسْوَدِ، قَالَ: قَالَ لِي ابْنُ الزُّبَيْرِ، كَانَتْ عَائِشَةُ تُسِرُّ إِلَيْكَ كَثِيرًا فَمَا حَدَّثَتْكَ فِي الكَعْبَةِ؟ قُلْتُ: قَالَتْ لِي: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَا عَائِشَةُ لَوْلاَ قَوْمُكِ حَدِيثٌ عَهْدُهُمْ - قَالَ ابْنُ الزُّبَيْرِ - بِكُفْرٍ، لَنَقَضْتُ الكَعْبَةَ فَجَعَلْتُ لَهَا بَابَيْنِ: بَابٌ يَدْخُلُ النَّاسُ وَبَابٌ يَخْرُجُونَ

மக்கள் மீது அதிக கருணையும் அன்பும் மிக்க ஒரு தூதராக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது மொத்த வாழ்க்கையில் திகழ்ந்தார்கள்.

இத்தகைய ஒரு கருணை மிக்க தலைவருக்காக காலம் காத்திருந்தது.
மக்களை சூழ்ந்து நிற்கிற சிரமங்களை அவர் இறக்கி வைப்பார் என அவரைப் பற்றி முந்தையை வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது.
وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ ۚ

நபி (ஸல்) அவர்கள் சமூகத்தை பீடித்திருந்த ஒவ்வொரு சிக்கலிலிருந்து அவர்களை விடுவித்தார்கள்.
1.   ஜாதீய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி ஒரு சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்கினார்கள்.  
2.   பெருளாதார அடக்கு முறைகளை நீக்கி சமத்துவத் சமுதாயத்தைப் படைத்தார்கள்
3.   பெண்களின் அடிமைத்தளைகள் தகர்ந்து பெண்ணுரிமைகளை நிலைநாட்டினார்கள்.
4.   அரசியல் ரீதியக புறக்கணிக்கப்பட்டிருந்த மக்களை ஆட்சித்தலைவர்களாக உருமாற்றினார்கள்.
5.   மது விபச்சாரம் போன்ற கலாச்சார பண்பாட்டுச் சீர்கேடுகளை கலைந்து ஒழுக்கத்தை மரபாக கொண்ட சமூகத்தை கட்டமைத்தார்கள்/
6 கொலை கொள்ளை திருட்டு ஆக்ரமிப்பு போன்ற குற்றங்களிலிருந்து  பாதுகாக்கப்பட்ட அமைதியான சமூக சூழலுக்கு உத்தரவாதம் வழங்கினார்கள்.
இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே செல்ல்லலாம் இந்த தலைப்புக்களுக்கு நூற்றுக்கணக்கான உதாரணண்க்களையும் கூற முடியும்.
அவை எல்லாம் வெள்ளிடை மலை போல வரலாற்றில் வெளிப்படையாக காணக் கிடைக்கின்றன.

பெருமானார் (ஸல்) தன்னைச் சார்ந்த தனி மனிதர்களையும் தனி கவனம் செலுத்திக் காத்தார்கள்
ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸீ ரலி அவர்கள் வாழ் நாளெல்லாம் தொடர்ந்து உலகமெங்கும் சுற்றி சத்தியத் தேடலில் ஈடுபட்ட பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து ஒரு வியாபாரக் கூட்டத்திற்கு நிறைய கூலி கொடுத்து மதீனாவிற்கு வந்து சேர்ந்தார்கள், அக்கிரமக்காரர்களான அந்த வியாபாரக் குழு, மதீனாவில் அவரை ஒருவருக்கு அடிமையாக விற்று விட்டது. அடிமையாக இருந்த நிலையிலேயே பெருமானாரைச் சந்தித்து பெருமானாரை பரிசோதித்து இஸ்லாமை தழுவினார்கள்.
அடிமையாக இருந்ததால் பத்று உஹது யுத்தங்களில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
முஸ்லிம்களின் வாழ்வு நிலை ஓரளவு சீராகிய போது சல்மான் ரலி அவர்களை  கண்ட பெருமானார் முதலாளியிடம் உரிமைக் கோரிக்கை வைத்து அதற்கான தொகையையை நிர்ணயித்துக் கொள்ளுமாறு கூறினார்கள்.
சல்மான் ரலி அவர்களின் மதிப்பை தெரிந்து கொன்ட முதலாளி கடுமையாக அவரது விலை யை உயர்த்தினார்.
முன்னூறு ஈச்ச மரக்கன்றுகளை நட்டுத்தர வேண்டும் என்றும் நாற்பது ஊக்கியா தங்கமும் அவருக்கான தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.


பெருமானார் கை காட்ட சஹாபாக்கள் 5 10 15 20 25 என ஈச்சமரச் செடிகளை கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை நடுவதற்கான ஒரு இடத்தை பெருமானார் (ஸல்) சுட்டிக் காட்டினார்கள். அங்கே முன்னூறு ஈச்சமரக் கன்றுகள் நடப்பட்டன, அதன் பிறகு அவருக்கான தொகையை கொடுப்பதற்கான ஏற்பாட்டை செய்து பெருமானார் (ஸல்) அவர்கள் அவரை விடுதலை செய்வித்தார்கள்.  அதன் பிறகு அவர் அகழ் யுத்தத்தில் பங்கேற்றார்.
சல்மார் பார்ஸீ ரலி அவர்களின்  ஆச்சரியமான சத்தியத் தேடல் பற்றிய ஹதீஸ் முழுமையாக அஹ்மது வில் வருகிறது. அதில் ஒரு பகுதி இது.

قال: ثم قال لي رسول الله http://islamstory.com/sites/all/themes/islamstory/images/r_20.jpg: "كَاتِبْ يا سلمان". فكاتبت صاحبي على ثلاثمائة نخلة أحييها له بالفَقِير، وبأربعين أوقية. فقال رسول الله http://islamstory.com/sites/all/themes/islamstory/images/r_20.jpg لأصحابه: "أعينوا أخاكم". فأعانوني بالنخل: الرجل بثلاثين ودِيَّةً، والرجل بعشرين، والرجل بخمس عشرة، والرجل بعشر، والرجل بقدر ما عنده، حتى اجتمعت لي ثلاثمائة ودِيَّةٍ، فقال لي رسول الله http://islamstory.com/sites/all/themes/islamstory/images/r_20.jpg: "اذْهَبْ يَا سَلْمَانُ فَفَقِّرْ لَهَا، فَإِذَا فَرَغْتَ فَأْتِنِي أَكُونُ أَنَا أَضَعُهَا بِيَدَيَّ". قال: ففقرت لها وأعانني أصحابي حتى إذا فرغت منها جئته فأخبرته، فخرج رسول الله معي إليها فجعلنا نقرب له الودي ويضعه رسول الله بيده، فوالذي نفس سلمان بيده، ما مات منها ودية واحدة. فأديت النخل، فبقي عليَّ المال، فأُتي رسول الله بمثل بيضة الدجاجة من ذهب من بعض المعادن، فقال: "مَا فَعَلَ الْفَارِسِىُّ الْمُكَاتَبُ؟" قال: فدُعِيْتُ له. قال: "خُذْ هَذِهِ، فَأَدِّ بِهَا مَا عَلَيْكَ يَا سَلْمَانُ". قال: قلت: وأين تقع هذه يا رسول الله مما عليَّ؟ قال: "خُذْهَا؛ فَإِنَّ اللَهَ عَزَّ وَجَلَّ سَيُؤَدِّي بِهَا عَنْكَ". قال: فأخذتها فوزنت لهم منها، والذي نفس سلمان بيده أربعين أوقية، فأوفيتهم حقهم، وعتقت، فشهدت مع رسول الله الخندق، ثم لم يفتني معه مشهد".
رواه أحمد في المسند (5/441) 

பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு பல தனி நபர்களின் தலைமீது விதிக்கப்பட்டிருந்த சிரமத்தின் சுமைகளை இறக்கி வைத்திருந்தார்கள்,
அதே போல சமுதாயத்தின் முதுகை அழுத்திக் கொன்டிருந்த எண்ணற்ற தீமைகளையும் கொடுமைகளையும் அகற்றி சமுதாயத்தை முன்னேற்றத்தின் சிகரத்தில் ஏற்றி அமர்த்தினார்கள்.
இதற்காக சமூதாயத்தை அவர்கள் எந்த வகையிலும் சிரமப்படுத்த வில்லை.
சில யுத்தங்களில் ஈடுபடுத்தினார்கள். அவற்றிலும் பெருவாரியான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள்
அவற்றிலும் மிக குறைந்த அளவிலான மனித உயிர்களே நஷ்டமடைந்தன.
சிரமத்தை விட இலகுவான நடைமுறைகளையே அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
சீர்திருத்த வாதிக்கும் ஆதிக்க வாதிகளுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் இது.
அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களின் அடி யெட்டி நடக்க அல்லாஹ் நமக்கும் அகில உலக மக்களுக்கும் தவ்பீக் செய்வானாக!

மீலாது நிகழ்ச்சிகளில் பங்கு பெறுங்கள்!  பெருமானாரின் வாழ்க்கை சரிதைகளை நினைவில் நிறுத்துங்கள். அடுத்த தலை முறைக்கு இந்தப் பாரம்பரியத்தை எடுத்துச் செல்லுங்கள்


1 comment:

  1. Very Nice and useful, jazakallah .Hussain Gani

    ReplyDelete