வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 22, 2017

ஹிதாயத்தை பாதுகாப்போம்



ரமலானின் நிறைவு ஜுமா வில இருக்கிறோம்.
நன்மைகல்ளுடன் ரமலானுக்கு விடைகொடுப்போம்.

இன்னுமிருக்கிருக்கிற பாக்கியமான நேரங்களை பயன்படுத்திக் கொள்வோம்.
வியாபாரிகள் விசேஷ நாட்களின் பகல் பொழுதில் கூட கடைகளை திறந்து  வைப்பார்கள் . காரணம் கேட்டால் . ரெண்டு வியாபாரம் நடக்கும் என்பார்கள்.
அல்லாஹ் அமல்களையும் வியாபாரத்தோடு ஒப்பிட்டு குர் ஆனில் பேசுகிறான்.
إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورَ(29)
يَاأَيُّهَا الَّذِينَ آَمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ تُنجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ(10)

ரமலானின் கடைசி நேரங்களில் கடைத்தெருக்களில் வீணடுத்து விடுகிற ஏமாளிகளா நாம் ஆகிவிட வேண்டாம்.

மதீனாவின் ஆரம்ப நாட்களில் ஒரு பட்டினிப் பொழுதில், பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்த கால கட்டத்தில் திஹ்யத்துல் கல்பீ லி  சிரியாவிலிருந்து நிறைய சரக்குகளை கொண்டு வந்தார், சரக்குக்கள் வந்திருப்பதற்கான தப் அடிக்கப்பட்டது. அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் ஜும் குத்பா ஓதிக்கொண்டிருந்தார்கள். மக்கள் எழுந்தோடிச் சென்று விட்டனர். அப்போது முஸ்லிம்களை ப் பக்குவப்படுத்த அல்லாஹ் இந்த வசனத்தை இற்க்கினான்.
وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ مِنْ اللَّهْوِ وَمِنْ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ(11)

وقد ذكر الكلبي وغيره: أن الذي قدم بها دحية بن خليفة الكلبي من الشام عند مجاعة وغلاء سعر, وكان معه جميع ما يحتاج الناس من بر ودقيق وغيره, فنزل عند أحجار الزيت, وضرب بالطبل ليؤذن الناس بقدومه; فخرج الناس إلا اثني عشر رجلا. وقيل: أحد عشر رجلا. قال الكلبي: وكانوا في خطبة الجمعة فانفضوا إليها,
இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் பெருநாள் தொழுகையைப் போலவே ஜும் விலும் தொழுகை முதலில் குத்பா பின்னால் என் று இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நபி (ஸல் அவர்கள் குத்பாவை முற்படுத்தினார்க்ள் என்றும் ஒரு கருத்து உண்டு.  (குர்துபி)

قال  مقاتل بن حيان: كان رسول الله صلى الله عليه وسلم يصلي الجمعة قبل الخطبة مثل العيدين, حتى كان يوم جمعة والنبي صلى الله عليه وسلم يخطب, وقد صلى الجمعة, فدخل, رجل فقال: إن دحية بن خليفة الكلبي قدم بتجارة, وكان دحية إذا قدم تلقاه أهله بالدفاف; فخرج الناس فلم يظنوا إلا أنه ليس في ترك الخطبة شيء; فأنزل الله عز وجل: "وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها". فقدم النبي صلى الله عليه وسلم الخطبة يوم الجمعة وأخر الصلاة. وكان لا يخرج أحد لرعاف أو أحداث بعد النهي حتى يستأذن النبي صلى الله عليه وسلم, يشير إليه بأصبعه التي تلي الإبهام; فيأذن له النبي صلى الله عليه وسلم ثم يشير إليه بيده.

இந்த வசனத்திற்குப்பிறகு குத்பா நடக்கும் போது ஒரு தேவை என்றால் கூட சஹாபாக்கள் பெருமானார் (ஸல்) அனுமதியை பெற்ற பிறகே வெளியே செல்வார்கள்.,   

இந்த தகவல் நமக்கு கூறும் செய்தி என்ன ?

பசி,  பட்டினி என்ற சந்தர்ப்பத்தில் கூட அமல்களுக்கான பிரதான நேரத்தில் பள்ளிவாசலை விட்டு விட்டு கடைத்தெருக்களுக்குச் செல்வது நல்லது அல்ல .
அப்படியிருக்க எந்த வித நிர்பந்தமும் இல்லாத வகையில் வசதியான நேரங்கள் ஏராளமாக இருக்கிற போது அமல்களுக்கான நேரத்தை கடைத்தெருக்களில் வீணடிக்கலாது.

அன்பாபனவர்களே இன்றைய இந்த ஜும்ஆவில்  மார்க்கத்தின் பிரதானமான ஒரு செய்தியை நினைவு கூர்வோம்,

நமது வாழ்வில் ஹிதாயத் பெறுவது அறிவு பெறுவதை விட முக்கியமானது,
பெரிய அறிவாளியாக இருந்தும் ஹிதாயத் பெறாத சைத்தான்சபிக்கப்பட்டவன் ஆனான்.

ஆதம் அலை அவர்களை பூமிக்கு அனுப்புகிறபோது அல்லாஹ் கூறிய முக்கிய செய்தி

قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ(38)

உஹது யுத்தத்தின் போது ஒரு சஹாபி இஸ்லாமை தழுவினார். ஒரு சஜ்தா கூட செய்யவில்லை சொர்க்க வாசியானார்.

كان عمرو بن ثابت المعروف بالاصيرم من بنى عبد الاشهل يابى الاسلام
فلما كان يوم احد قذف الله الاسلام فى قلبة,فاسلم واخذ سيفة,
ولحق بالنبى صلى الله علية وسلم,فقاتل فغلبتة الجراح فسقط صريعا
ولم يعلم احد بامرة
فلما انجلت الحرب,طاف بنو عبد الاشهل فى القتلى يتلمسون قتلاهم
فوجدوا الاصيرم وبه رمق يسير
سالوه ما الذى جاء بك؟
احدب على قومك (الحدب هى الكراهية)....ام رغبة فى الاسلام؟
فقال: بل رغبة فى الاسلام,,امنت بالله ورسوله,,
ثم قاتلت مع رسول الله صلى الله عليه وسلم
حتى اصابنى ما ترون,ومات من وقتة
فذكروه لرسول الله صلى الله علية وسلم
فقال: ((هو من اهل الجنة))
قال ابو هريرة: ولم يصلى لله قط

அமல் செய்வதை விட பிரதானமானது – ஹிதாயத்தை பெருவது. ஹிதாயத் பெற்றுவிட்டால் எல்லம் கிடைத்து விடும்.
இன்றைய ந்மது வாழ்வில் நாம் அடைந்திருக்கிற ஹிதாயத்த அநாயசமாக தொலைத்து விடுகிற காரியங்கள் சாதாரனமாக நடந்து விடுகின்றன. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இன்றைய நமது வாழ்வில் மார்க்கம் என்ன சொன்னதோ, மார்க்கத்தை நமது முன்னோர்கள் எப்படி நமக்கு விளக்கிச் சொன்னார்களோ அந்த ஏற்றுக் கொள்கிற   ஆழ்ந்த ஈமானிய தொடர்பை விட்டு நமக்கு தெரிந்தது நமது அறிவுக்குப் பட்டதை இஸ்லாமாக நினைக்க தொடங்கிவிட்டோம்.

ஜகாத் பனத்தை ஒரு பைனான்ஸ் நிறுவனம் போல கடன் கொடுக்க பயன்படுத்தலாம் என்று தமிழகத்தில் சாயம் போன ஒரு அரசியல்வாதி பேசிக் கொண்டிருக்கிறார். அதை நம்மில் பலர் சரி என ஆதரிக்கிறார்கள்.

ஜகாத் தொடர்பான மார்க்கத்தின் வழிகாட்டுதல் என்ன என்றே சிந்திப்பதில்லை.

உண்மையில் நம்மில் சில பணக்காரர்களுக்கு அவர்களின் பணச் செல்வாக்கு மார்க்கத்தை தங்களது சொந்த வீட்டு விசயமாக கருதுகிற அளவுக்கு தைரியத்தை கொடுத்து விட்டது.  ஹிதாயத் தவறிப்போகிற சாத்தானிய ஆபத்தை அத்தகையோர் பயந்தாக வேண்டும். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

ஒரு தடவை ஒரு சபையில் ஓய்வு பெற்ற ஒரு மூத்த அதிகாரி ஏன் இரண்டாவது மூன்றாவது தடவை ஹஜ்ஜுக்கு போகிறீர்கள் உம்ராக்களுக்கு செல்கிறீர்கள் மாணவர்களின் கல்விக்கு அந்தக் காசை கொடுங்கள் என கூறினார். முஸ்லிம்கள் நிறைந்த அந்த சபை அபாரமான கை தட்டலால் அந்தக் கருத்தை ஆமோதித்தது.

அடுத்து நான் பேசினேன்.
நீங்கள் கை தட்டினீர்கள். உங்கள் எல்லோருக்கும் அந்தக் கருத்து ஏற்புடையது என்பதை அது காட்டுகிறது.
ஆனால் கொஞ்ச மேனும் யோசித்தீர்களா ? இரண்டாவது மூன்றாவது ஹஜ்ஜு செய்வதை மார்க்கம் அங்கீகரித்து வரவேற்றிருக்கிறது. முன்னோர்கள் அதை ஏராளமாக நிறைவேற்றி யிருக்கிறார்கள்.

கல்விக்கு உதவ வேண்டும் என்ற கருத்தை நிறைவேற்ற ஏராளமான ஹதீஸ்களும் நல் வழிகாட்டுதல்களும் உண்டு. அதை விட்டு விட்டு ஹஜ் உம்ரா என்ற அமல்களை ஏன் தேவையற்று இழுக்கிறீர்கள். கஃபா ஆலயம் மக்களை தன் பக்கம் திரும்ப திருமப் ஈர்க்க கூடியது என்று அல்லாஹ் சொல்லியிருக்கிறான். அந்த ஈர்ப்பில் இபாபத்தாக செய்யப்படுகிற ஒரு காரியத்தை இன்னொரு நல்ல காரியத்தை தூண்டுவதற்கா ஏன் குறைபடுத்துகிறீர்கள். இது மார்க்கப் படி சரிதானா என்று யோசிக்க வேண்டாமா ? என்று கேட்டேன் சபை மவுனமாக அதை உள்வாங்கியது.

இது போல பல விவகாரங்களிலும் நம்மில் பலரும் நமது அறிவிக்குப்பட்டதை மார்க்கம் என்று தயங்காமல் கூறுகிறோம். வாட்ஸப் பேஸ்புக் போன்ற மீடியாக்களில் பரப்புகிறோம்.

நேற்று ஒரு செய்தி திடல் தொழுகை சம்பந்தமாக பதிவிடப்பட்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன்னபவியில் இடப்பற்றாக்குறை இருந்தத்தால் தான் திடலில் தொழுதார்கள் என்ற கூற்றை கீழ்த்தரமாக அவர் மறுக்கிறார். அவர் அதற்கு எந்த ஆதாரத்தையும் தர வில்லை. சில ஹதீஸ்களை மேற்கோள் காட்டுகிறார். ஹதீஸ் கலை பற்றிய எந்த விவரமும் இல்லாமலே!

ஒரு ஹதீஸில் ஒரு செய்தியை பார்ப்பதினாலேயே அதை சட்டமாக எடுத்துக் கொள்ள முடியாது.,
இரத்தம் குத்திய எடுப்பவனும் எடுக்கப்படுகிறவனும் நோன்பை முறித்து விட்டனர் என்று ஒரு ஹதீஸ் இருக்கிறது. இது  சஹீஹான ஹதீது தான்.

ஆனால் மார்க்க சட்டம் அப்படி சொல்ல வில்லை.  

காரணம் ஹதீஸ் கலை பற்றிய ஆய்வாளர்கள் இந்த சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்பதை நிரூபித்துள்ளார்கள்.

அதே போலத்தான் பெண்களை ஈதுகாஹ் காஹ் களுக்கு அழைத்து செல்லும் ஹதீஸ் களும் மார்க்கத்தின் தொடக்க கால நிகழ்வு என்பது தான் அறிஞர்களின் கருத்து.

அந்த ஹதீஸீல் மாத விடாய்க்காரிகளையும் அழைத்துச் செல்லுங்கள் என்றிருக்கிறது. இன்றைய போலிய தவ்ஹீதிய அமைப்புக்கள் மாத விடாய்ப் பெண்களை அழைக்கிறார்களா ? இல்லையே!

திடல் தொழுகையைப் பற்றிய எதார்த்தம் என்ன ?


மதீனா பெருமானார் (ஸல்) அவர்களது கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு பெருநாள் தொழுகைகென்று ஒரு வெளியிடத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்வு செய்தார்கள் என்ற அடிப்படையில் வழி வழியாக முஸ்லிம்களும் தம்முடைய ஊரில் பெருநாள் தொழுகைக்கு என்று ஒரு இடத்தை வாங்கி, அல்லது ஒதுக்கி வைத்திருந்தார்கள், ஈத் மைதானம் என்ற அந்த இடத்தில் இரு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

ஈத்காஹ் மைதானம் எல்லோருக்கும் போதுமானதாக இல்லை என்ற நிலையில் பள்ளிவாசலிலேயும் தொழுது கொண்டார்கள்,

ஈத்காஹ் மைதானம் இல்லாத இடங்களில் மைதானங்களை வாடகைக்கு எடுத்தோ அல்லது இலவசமாக பெற்றோ அல்லது பொது இடங்களில் அனுமதி கேட்டோ பெருநாள் தொழ வேண்டும் என்பதற்கு எந்த முன்னுதாரனும் இல்லை, மார்க்கத்தில் சுய விளக்கம் என்பதை தவிர இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை,



மதீனாவில் மஸ்ஜிதுன்னபவியில் இடம் பற்றாக்குறை காரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று தொழுதுள்ளார்கள்,
நீங்கள் ஒரு திடலுக்குச் சென்றுதான் தொழ வேண்டும் என்ற அறிவுரை ஒன்று கூட இல்லை.

மஸ்ஜிதுல் ஹரமிலும், மஸ்ஜிதுன்னபவியிலும் பெருநாள் தொழுகை நடை பெறுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்,


أما أهل مكة، فلا يصلونها إلا في المسجد من الزمن الأول).
மக்காவின் மக்கள் ஆதிகாலத்திலிருந்து பள்ளிவாசலில் மட்டுமே தொழுது வருகிறார்கள் என இமாம் நவவி ரஹ் கூறுகிறார்.
இமாம ஷாபி ரஹ் அவர்கள் உம்முவில் எழுதுகிற போது பள்ளிவாசலின் இடவசதியிம் மதீனாவிலிருந்த சுற்று புரங்கள் நெருக்கடியாக இருந்ததுமே பெருமானார் (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்ற காரணம் என நான் அறிகிறேன். என வே ஒரு ஊரில் பள்ளிவாசல் பெரிதாக கட்டப்பட்டிருக்கும் என்றால் அங்கிருந்து வெளியேற வேண்டிய தேவை இல்லை என்று நான் கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்கள்,
أن سبب ذلك سعة المسجد، وضيق أطراف المدينة، فلو عمر بلد فكان مسجد أهلها يسعه في الأعياد لم أر أن يخرجوا منه! فإذا كان لا يسعهم كرهت الصلاة فيه، ولا إعادة

நிலமை இப்படி இருக்க தங்களது சொந்த விருப்பம் ஒன்றை மட்டுமே அடிப்படையாக கொண்டு இன்றைய கால கட்டத்தில் திடல் தொழுகையை பிரம்மாதப்படுத்தப் படுத்த முயற்சி செய்கிறார்கள்.

உண்மையில் இது சமுதாயத்தை பிளவு படுத்திக்காட்டும் உத்தியாகும்

இது போல் இன்னும் பல நடவடிக்ககளில் நாம் ஈமானிய வாழ்வுக்குமார்க்கத்தின் அடிப்படையிலான நம்பிக்கை சார்ந்த வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நமது அறிவுக்கு, அல்லது நமது விருப்பத்திற்கு, அல்லது நமது நண்பர்களின் விருப்பத்திற்கு ஏற்பட நாம் நடந்து கொள்கிறோம்.

எச்சரிக்கை! நாம் நமது ஹிதாயத்தை தொலைத்து விடக் கூடும்.

அல்லாஹ் எந்த நிலையிலும் ஹிதாயத்தை பறித்துக் கொள்வான்.

நாளை மறுமையில் நன்மை தீமையின் ஏட்டை வலது கையில் முதலில் வாங்கிக் கொள்பர் அபூசலமா ரலி
அதை இடது கையில் வாங்கிக்கொள்ளும் முதல் நபர் யார் தெரியுமார் ?
அபூசலமா வின் சகோதரர் அஸ்வது ஆவார். பத்று யுத்ததில் முஸ்லிம்கள் கட்டி வைத்திருந்த தண்ணீர் தொட்டியை உடைக்க அவன் முயற்சித்த போது ஹம்சா ரலி அவனைக் கொன்றார்கள். பத்று யுத்ததின் முதல் களப்பலி அவன் தான்.

ஹிதாயத்தை பெற்றுக் கொள்வதும் அதை காப்பாற்றிக் கொள்வதும் மிக முக்கியமானது. அது வே வாழ்வின் ஆதாரமானது.

பிறர் சொல் பேச்சைக் கேட்டு , மனோ இச்சைக்கு ஆட்பட்டு, அல்லது அறிவார்த்தமான வாதம் எனக் கூறி ஹிதாயத்தை தவற விடுவது மிகவும் பரிதாபகரமானது.

பெருநாள் பிறை பெருநாள் தொழுகை  விவகாரத்தில் முன்னோர்களின் வழிகாட்டுதலை கடைபிடிப்போம். அதுவே நிலையானது .
குறுகிய சிந்தனைகளையும் கருத்தோட்டங்களையும் தவிர்த்துக் கொள்வோம் அது வே நமது ஹிதாயத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்றது.

வெள்ளப் பெருக்கு ஏற்படத்தொடங்கிய போது தனது மகனை கப்பலில் ஏறிக் கொள்ளுமாறு நூஹ் அலை அவர்கள் வேண்டினார்கள். ஆனால் அவனோ பக்கத்திலிருந்த பெரிய மலையின் மீது நம்பிக்கை வைத்தான். அது அவனை ஏமாற்றி அழிவுக்கு அழைத்துச் சென்று விட்டது.

 وَنَادَى نُوحٌ ابْنَهُ وَكَانَ فِي مَعْزِلٍ يَا بُنَيَّ ارْكَبْ مَعَنَا وَلَا تَكُنْ مَعَ الْكَافِرِينَ (42) قَالَ سَآَوِي إِلَى جَبَلٍ يَعْصِمُنِي مِنَ الْمَاءِ قَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلَّا مَنْ رَحِمَ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِينَ (43)

இன்றைய அமைப்புக்கள் இயக்கங்கங்கள் மீது வைக்கிற நம்பிக்கையும் இப்படித்தான் இருக்கிறது. இளைஞர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

ஹிதாயத்தை பறிகொடுத்துவிடவேண்டாம்.

அல்லாஹ் பாதுகாப்பானாக!

பித்ரா தர்மம்.



த் பெருநாள் அன்று நிறைவேற்றுகிற வணக்கங்களில் பிரதானமானது ஈதுல் பித்ரா தர்மம். தொழுகைக்கு செல்வதற்கு முன் வழங்கிவிடவேண்டும்.
ஒவ்வொரு முஸ்லிமும் அவருக்காகவும் அவருடைய கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்காகவும் இந்த தர்மத்தை கொடுக்க வேண்டும். பெருநாள் செலவுக்குப் போக அதிகப்படியாக காசு வைத்திருக்கிற அனைவரும் இந்த தர்மத்தை நிறைவேற்ற வேண்டும்
அது நமது நோன்பை சுத்தப்படுத்துகிறது, அதே நேரத்தில் ஏழைகளுக்கு உணவாகவும் அமைகிறது.
ஹன்பி மத்ஹபின் படி 1 கிலோ 700 கிராம் கோதுமை அல்லது அதற்குரிய பணமாக ரூ 80 ஐ பித்ரு சதகாவாக கொடுக்க வேண்டும். ஷாபி மத்ஹபின் படி 2.400 கிலே அரிசி பித்ராவாக கொடுக்க வேண்டும். வசதி இருப்பவர்கள் அதிகமாகவும் கொடுக்கலாம். பிரியாணி அரிசியாகவும் கொடுக்கலாம். தாய் தந்தை மகன் மகள் தவிர மற்ற நெருங்கிய சொந்தக் காரர்களுக்கு பித்ராவை கொடுக்கலாம். 
அமைப்புக்களிடம் பித்ராவை ஒப்படைப்ப்பது பொறுப்பற்ற செயலாகவே அமையும். நம்மை நெருங்கி பல ஏழைகள் இருக்கும் போது அவர்களுக்கு தேடிச் சென்று கொடுப்பதில் என்ன சிரமம் இருக்கிறது, 

தக்பீர்  
பெருநாளன்று தக்பீரை உரத்துச் சொல்லுங்கள் அதுவே பெருநாளின் அழகாகும்.
வேகமாக எங்களிடமிருந்து விடைபெறுகிற ரமலானே சீக்கிரமே எங்களிடம் திரும்பிவா!  உன்னுடைய அருள் மழையை அள்ளித்தா!











No comments:

Post a Comment