நாடு இன்னொரு சுதந்திர
தினத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
நாட்டு மக்கள்
இன்னொரு சுதந்திரத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.
தற்போதைய மத்தியை
ஆளும் அரசு மக்களை அந்த அளவு நெருக்கடிக்குள்ளாக்கி வருகிறது.
அதிகப்படியான வாக்கு
செல்வாக்குப் பெற்றிருப்பதால் அரசாங்கம் தான் தொன்றித்தனமாக செயல் பட்டு வருகிறது.
மக்களை பெரும்
துன்பத்திற்குள்ளாக்கிய உயர் பண மதிப்பு நீக்கம் என்பது எந்த வகையிலும் பயனளிக்க வில்லை
என நாடாளுமன்ற ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
சுமார் 125 குடிமக்களின்
உயிர் களை பலி கொண்டு, பல இலட்சக்கணக்கான மக்களை வாழ்க்கையை சித்தைத்து. நடுத்தர மற்றும்
அடி நிலை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நசிக்கச் செய்தது.
பிரதமர் அவர்களின்
தனிப்பட்ட கடும் போக்கு மட்டுமெ இதற்கு காரணம்.
அடுத்த்தாக ஜி
எஸ் டி ஐ அவசர கதியில் அமுல் படுத்தியுள்ளது. ஜி எஸ் டி என்ற பெயரில் மக்களின் பணத்தை
அரசு அல்லது வியாபாரிகள் அப்பட்டமாக கொள்ளையடிக்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களைக்
கூறி சிறுபான்மை மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுவருகிறார்கள்.
பொது சிவில் சட்டம்
கொண்டு வரும் முயற்சி. முத்தலாக் பிரச்சனை. மாட்டுக்கறி தடை பிரச்சனை என பல பிரச்சனைகளை
அரசே உருவாக்கி வருகிறது.
ஆட்சியதிகாரம்
யாரிடம் செல்லக் கூடாதோ அவர்களிடம் சென்று விட்டது.
வைஸ்ராய்க்களை
விட மோசமாக அமைச்சர்கள் நடந்து கொள்கிறார்கள். ஓட்டல்களில் உணவுகளுக்கான செலவு அதிகரித்து
விட்டது என்று கேட்டால், ஏன் ஓட்டல்களில் சாப்பிடுகிறீர்கள். வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள் என அமைச்சர் பதில் சொல்கிறார். சிங்கப்பூரில்
ஜி எஸ் டி இப்படி இல்லை என்று ஒருவர் கேட்டால் , சிங்கப்பூரிலி இப்படி கேள்வி கேட்க
முடியாது தெரியுமா என்று பதில் சொல்கிறார்கள்.
இந்துதுவா என்பது
உலகின் மிக மோசமான ஜாதீய சர்வாதிகாரம் என்பதை
மக்கள் தங்களது அனுபவத்தில் உணரத் தொடங்கி விட்டார்கள்
அடிபணிய மறுப்பவர்களையும்
எதிர்ப்பவர்களையும் அரசு தனது வலிமையான கரத்தால் ஒடுக்க முயற்சி செய்கிறது.
தமிழகத்தில் அமைச்சர்களை
அமலாக்கத்துறை சோதனைகள் மூலம் வாயடைக்கச் செய்து விட்டது. மாநிலத்தின் அடிப்படை உரிமைகளை
கூட கேட்கமுடியாமல் அவர்கள் பேசா மடந்தைகளாகிவிட்டனர்.
என் டி டிவி சானல்
இந்துத்துவாவை எதிர்த்தது என்றால் அதன் மீது அமலாக்கத்துறையை ஏவி பயமுறுத்துகிறது மத்திய
அரசு.
இவை எல்லாம். மறைவாக
அல்லாமல் அப்பட்டமாக நடக்கிறது.
இன்னொரு பக்கம்
விலை வாசி உயர்வு கேஸ் மானியம் இரத்து வங்கிகளின் சேவைகளுக்கு அதிக கட்டனம் அதிகப்படியான
சேவை வரி என மக்களின் பொருளாதாரம் கடுமையாக
சுரண்டப்படுகிறது.
இதெற்கெல்லாம்
மேலாக எல்லையில் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சிக்கிறது. அதை தடுப்பதற்கான்
எந்த வலிவும் திட்டமும் தற்போதைய அரசிடம் இல்லை.
நாடாளுமன்ற ஆய்வுக்குழு
அறிக்கை ஒன்று , போர் வந்தால் இந்திய இராணுவத்திடம் இருக்கும் குண்டுகள் 10 நாளுக்குள்
தீர்ந்து விடும் என்று கூறியிருப்பது வேதனையிலும் பெரிய வேதனை
நூற்று பத்து கோடி
மக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாக இருக்கும் போது மத்தியில் ஆளுகிற அரசு அதனுடைய
மதவெறியூட்டும் நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த சுழலில் முஸ்லிம்களின்
கடமை
பாமர்ர்களான நாட்டு
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதாகும்.
முஸ்லிம்களின்
மீதான வெறுப்புணர்வை வீசியே நாட்டு மக்களின் அனைவரின் வாக்குகளை கொள்ளையடிக்க தற்போதைய
மத்திய அரசை ஆளும் கட்சி திட்டமிட்டிருப்பதை இன்னும் விரிவாக பரப்ப வேண்டும்.
திருக்குர் ஆனின்
மிகச் சிறு அத்தியாயமான வல் அஸ்ரு அத்தியாயம் கருத்தாழம் மிக்கதும் = சிறப்பான வழிகாட்டுதலை தரக்கூடியதுமாகும்.
இமாம் ஷாபி ரஹ்
அவர்கள் கூறுகிறார்கள். இரண்டு சஹாபாக்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இடையே
வல் அஸ்ரு அத்தியாயம் ஓதப்பட்டால் அது தருகிற சிந்தனையிலும் கவலையிலும் அந்த இடத்தை
விட்டு அப்போதே விலகி விடுவார்கள்.
وَالْعَصْرِ * إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ * إِلَّا الَّذِينَ آَمَنُوا
وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
இந்த அத்தியாயம்
நஷ்டத்தில் இருப்பவர்கள் விடுபடுவதற்கு மூன்று வழிகளை
முதலாவது ஈமான்.
முஃமின்கள் அல்லாஹ்வின்
மீதான் தங்களது நம்பிக்கை மிக ஆழமாகவும் அழுத்தமாக நிலை நாட்டிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் நாடாமல்
எதுவும் நடக்காது. அல்லாஹ் நாடி விட்டால் எதையும் தடுக்க முடியாது.
முதலாம் உலக் யுத்தத்தில்
துருக்கி தோல்வியுற்று கிலாபத் கலைந்த போது இஸ்லாம் இனி இல்லை என்றார்கள்.
ஆனால் இரண்டாம்
உலக் யுத்தத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவான போது அதில் 45 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய
நாடுகள் இருந்தன. அவற்றில் பல எண்ணை வளத்தாலும் இயற்கை வளங்கலாலும் உலகை தம்மிடம் கையேந்த
வைத்திருக்கின்றன,.
அல்லாஹ்வின் மீதும்
மார்க்கத்தின் மீது உம்மத்திற்கு நம்பிக்கை குறையும் மென்றால் வெற்றி என்பதும், விடிவு
என்பதும் கற்பனையாகி விடும்.
இரண்டாவது கடமை
சத்தியத்தை எடுத்துச் சொல்வது பரஸ்பரம்.
وَتَوَاصَوْا بِالْحَقِّ
தற்போதைய மத்திய
அரசின் நடைமுறை முஸ்லிம்களை மட்டும் பாதிக்கும் என்று நாட்டு மக்கள் நினைப்பார்கள்
எனில் அது தவறு. முஸ்லிம்கள் என்ற பெயரை உச்சரித்து
ஒரு திருட்டு கும்பல் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நாட்டின்
சாமாணிய குடிம்கன் குடிம்மகள் வரை கொண்டு சேர்க்க வேண்டும்.
இந்துத்துவா என்பது
இந்திய முஸ்லிம்களுக்கு அல்ல. இந்திய மக்களுக்கு பேராபத்து என்பதை அடித்தட்டு மக்கள்
வரை கொண்டு சேர்க்க வேண்டும்.
அதற்கு தேவையான
ஊடகங்களை பக்குமாக பயனபடுத்திக் கொள்ளக் கூடாது.
ஒன்றில் கவனமாக
இருக்க வேண்டும். முஸ்லிம்களின் தலையீடே இஸ்லாமிய சமூகத்திற்கு தீமையாக மாறிவிடாமல்
பாதுகாக்க வேண்டும்.
சத்தியப் பிரச்சாரத்திற்கு
நிச்சயம் பலன் உண்டாகும்.
பிர் அவ்னுடன்
வந்த மந்திரவாதிகளிடம் மூஸா அலை பிரச்சாரம்
செய்தார்கள். அது பயனளித்த்து.
فَتَوَلَّىٰ
فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهُ ثُمَّ أَتَىٰ (60)
قَالَ لَهُم مُّوسَىٰ وَيْلَكُمْ لَا تَفْتَرُوا عَلَى اللَّهِ
كَذِبًا فَيُسْحِتَكُم بِعَذَابٍ ۖ وَقَدْ خَابَ مَنِ افْتَرَىٰ (61) فَتَنَازَعُوا
أَمْرَهُم بَيْنَهُمْ وَأَسَرُّوا النَّجْوَىٰ (62)
எனவே நாட்டின் எதார்த்த நிகழ்வுகளில் நாட்டு மக்களுக்கு
தீங்கிழைத்து வரும் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி எதிர்ப்பு பிரச்சாரத்தை முடிந்த வகையில்
ஒரு குறிப்பிட்ட மத அடையாள ம் இல்லாமல் கொண்டு சேர்க்க வேண்டும்.
அடுத்த்தாக அதிகப்
பட்ச பொருமையை பரஸ்பரம் போதித்துக் கொள்ள வேண்டும்.
சமுதாயம் சங்கட்த்திற்குள்ளாகியிருக்கிற
போது சமுதாயத்திலுள்ள யாரவாது பொறுமையற்று நடந்தாலும் சமுதாயம் பெரும் சிரமத்தை சந்திக்கும்.
குவைத்தை கட்டுப்
படுத்தும் விசயத்தில் சதாம் ஹுசைன் பொறுமை இழந்தது முஸ்லிம் உம்மத்திற்கு எத்தகைய பெரும்
பின்னடைவை ஏற்படுத்தி விட்ட்து. ?
பாஜக் அரசு நாட்டின்
சுதந்திரத்திற்கும் ஆபத்து, ஜனாநாயகத்தி குழி தோண்டிப் புதைந்து விட்டு இந்துதுவ சர்வாதிகாரத்தை
நிலை நாடும் முயற்சி என்பதை ஜி எஸ் டி முதல் குஜராத் மாநிலங்களவை எலக்ஷன் வரை பலதையும்
சுட்டிக்காட்டி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதே பொறுமையான நடவடிக்கையாகும்.
பொறுமை என்பது
சும்மா இருப்பது அல்ல.
வெற்றிக்கு தேவையான
வழியில் நிதானமாகவும் உறுதியாகவும் செயல்படுவதாகும்.
இப்போது முஸ்லிம்
சமுதாயம் சின்ன சின்ன காரியமே இல்லாத விசயங்களுக்காக பதட்டமடைகிறது. அல்லது பதட்டப்படுத்தப்படுகிறது.
எங்காவது எப்போதாவது
ஒரு முஸ்லிம் தாங்கப்பட்ட புகைப்படம் கிட்ட்த்தால் அதை சுற்றி ஒரு கதையைப் பிண்ணி சிலர்
முஸ்லிம் உம்மத்தை தொடர்ந்து பதற்றத்திற்கு உள்ளாக்கி வைத்திருக்கிறார்கள்.
நாம் உஷாரடைய வேண்டும்.
அல்லாஹ் தவ்பீக்
செய்வானாக
மாட்டிறைச்சி தடை என ஓரு சட்டம் கொண்டு வாந்தார்கள். அல்லாஹ் நீதீ மன்றத்தில் அதை தவிடு பொடியாக்கினான்.
இந்த தடை உத்தராவை மதுரையில் உள்ள உயர்ந்நீதி மன்றம் உதத்தராவிட்டிறக்க்கிறது அதை உச்ச நீதி மன்றம் ஏற்கிறது. அது நாடு முழுவதற்கும் பொரூந்தும் என்கிறது
மேல் நீதிமான்றங்கள் கீழ் மான்றங்களை மதிக்கவே செய்யாதூ என்ற நிலையில் இந்த நீகழ்வுகள் ஆச்சரியம் அளிக்கின்றன.
தீர்ப்பிற்கு பின்ன்ணியில் மத்திய அரசி ன் கை நிச்சயம் இருக்கிறது.
பக்ரீத் பெருநாளைக்கு மாடு விற்பனையை அனுமாதிக்காவீட்டால் இந்தியா கால் நடை விவசாயாமே அழீந்து போய்விடும்.அது அரசாங்கத்ட்திற்கூ பேரிடியாக அமைய்ம்.. எனவே எனவேஎ மதூரையின் ஒரு சிறு நீதீமன்றம் சொன்ன உத்தரவை உச்ச் நீத் மன்றம் ஏற்க்கிறது.
.
மூஸ்லிம்களின் பொறூமையான நடவடிக்கை நாட்டிற்க்கு நன்மையை தேடீத்த ரும்.
நாட்டின் சுதந்திரத்தை
அல்லாஹ் பாதுகாப்பானாக
மக்களின் தவ்றால்
நடந்து விட்ட ஆட்சியதிகார மாற்றத்தை அல்லாஹ்
திருத்தியழுதுவானாக! ஆமின்.ய்
ما شاء الله !بارك الله فيك يا أستاذ؟ تخدم ورثة الأنبياء وأنت بين سيد الأنبياء. جزيك الله عنا أحسن الجزاء. ويسّر نسكك ورزقك عافيةوقوةوصحة ما دام المتعلمون يدعو للمعلمين! امين
ReplyDelete