இஸ்லாத்திற்கு
எதிரான சக்திகள் எந்த வகையிலாவது இஸ்லாமை சிறுமைப் படுத்த முயற்சிகள் செய்து கொண்டே
இருக்கின்றனர்.
முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் காலத்தில் கிப்லாமாற்றப் பட்டதை யூதர்கள் பெரிய பிரச்சனையாக்கினர்.
இடைக்காலத்தில்
நபி (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்ததையும் யுத்தங்கள் செய்த்தையும் கிருத்துவர்கள்
பிரச்சனையாக்கினர்.
ஜிஸியா வரி விதிப்பை
இந்துக்கள் பெரிய பிரச்சனையாக்கினர்.
எதார்த்தத்தில்
இஸ்லாமிய நடைமுறையில் எந்தக் குறையும் இல்லை.
எந்த்த திசையிலும்
அல்லாஹ் இருக்கிறான். அதனால் பைத்துல் முகத்தஸை
நோக்கினாலும் கஃபாவை நோக்கினாலும் தவறேதும் இல்லை. அல்லாஹ் ஒரு குறிப்பிட்ட திசையில்
இல்லை. அல்லாஹ் வின் உத்தரவிற்கு கட்டுப்படுகிறோமா என்பதே முக்கியம் என அல்லாஹ் தெளிவு
படுத்தினான்.
பிரச்சனையை உண்டு
பண்ணியவர்களை அல்லாஹ் முட்டாள்கள் என விமர்சித்தான். திருக்குர் ஆனின் கடுமையான விமர்சன்ங்களில்
மிகச் சிலவற்றில் ஒன்று இது
سَيَقُولُ
السُّفَهَاءُ مِنَ النَّاسِ مَا وَلَّاهُمْ عَن قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا
عَلَيْهَا ۚ قُل لِّلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ۚ يَهْدِي مَن يَشَاءُ إِلَىٰ
صِرَاطٍ مُّسْتَقِيمٍ (142)
பெருமானார் (ஸல்)
அவர்களின் பல பெண்களை சட்டப்படி திருமணம் செய்து தான் கொண்டார்கள். ஆசை நாயகியாகவோ
சட்ட்த்திற்கு புறம்பாகவோ நடந்து கொள்ள வில்லை. திருமணத்திற்கென்று ஒரு இலக்கணமே இல்லாதவர்கள்
அல்லது துறவரம் என்ற பெயரில் இருந்து கொண்டு மறைமுகமாக தாம்பத்தியதில் ஈடுமபட்டவரக்ள்
இந்தக் குறைகளை பெரிது படுத்தினார்கள். அவர்கள் உருவாக்கிய பிரச்சனை அவர்களையே பதம்
பார்த்த்து.
ஜிஸியா வரியை பிரச்சனையாக்கினார்கள்.
பிரச்சனையாக்கியது யார் தெரியுமா?
எங்கள் மதத்தை
ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை எனில் நீ தீக்குளிக்க வேண்டும் என்று ஸ்பெயின் முஸ்லிம்களை
துன்புறுத்திய கிருத்துவர்கள்.
என் ஜாதியில் இல்லயா
நீ வாழவே தகுதியற்றவன் என்று கூறிய இந்துக்கள்.
நம்முடைய தமிழ்
நாட்டில் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் சமண மத்த்தை சார்ந்தவர்களை கணக்கின்றி கொன்று
குவித்துள்ளார்கள். சமணர்களின் கோவில்களை சைவக் கோயில்களாக மாற்றியுள்ளார்கள்.
ஆனால் இஸ்லாமோ
,என் மத்த்தை ஏற்காவிட்டாலும் எங்களது இராணுவத்திற்கு கட்டுப்படுவதன் அடையாளமாக வசதியுள்ளவர்கள்
மட்டும் ஒரு சிறு தொகையை செலுத்த வேண்டும் . அப்படி செலுத்தி விட்டால் அவர்கள் இராணுவப்
பணிக்கு வர தேவையில்லை. அவர்களுக்கான முழு பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வழங்கப்படும்
என்ற அருமையான சமைய சகிப்புத் தன்மையின் அடையாளமாக ஜிஸ்யா என்ற திட்டத்தை கொடுத்த்து.
அதை சரியாக புரிந்து
கொள்ளாமல் ஒரு பெரும் பிரச்சனையாக்க சிலர் இப்போதும் முய்றசி செய்கிறார்கள்.
அந்த முயற்சிகளை
பார்க்கிற போது ஒரு பெரும் மலையை எலிகள் தம் பற்களால் சிதைக்க மேற்கொள்ளும் முயற்சியாகவே
தெரிகின்றன.
அல்லாஹ் மிக தெளிவாக
கூறிவிட்டான்.
يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ
بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ (8)
இதே வகையில் தான் நேற்று முன் தினம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அமைந்திருக்கிறது,
இஸ்லாமிய
தனி நபர் சட்ட்த்தில் தலையிட , மக்களின் சமய கோட்பாடுகளை தனித்தனியாக ஆராய உச்ச நீதிமன்றம்
விரும்ப வில்லை என்று சொல்லிக் கொண்டே முத்தலாக் விசயத்தை ஏற்க முடியாது என்று நீதிமன்றம்
கூறியிருக்கிறது.
இந்த வழக்கிற்கான
முகாந்திரமே அடிப்படையில் தவறானது. இஸ்லாமிய சமய சட்ட அமைப்பிற்குள் அத்துமீறீ தலையிடுவதாகும்.
இஸ்லாமிய
சட்டப்படியான தீர்ப்பு தேவையில்லை என்று கருதும் யாரும் ஸ்பெசல் மேரேஜ் ஆக்ட் என்ற
சட்டப்படி தனக்கு விருப்பமான வழி முறையை தேர்ந்தெடுக் கொள்ளும் உரிமையும் வசதியும்
நம் நாட்டில் ஏற்கெனவே இருக்கிறது.
இஸ்லாமிய
ஷரீஆ வின் சட்ட அமைப்பை விரும்பி ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு மட்டுமே இஸ்லாமிய ஷரீஅத்
சட்டம் பெருந்தும்
இஸ்லாமிய
சரீஅத் சட்டத்தை ஏற்றுக் கொண்ட யாருக்கும் அத்ற்கு மேலதிகமான விளக்கத்தை உச்ச நீதிமன்ற
தரத் தேவையில்லை
முத்தலாக் பிரச்சனையில்
பாதிக்கப்பட்டு நீதிமன்றங்களை நாடி வந்த முஸ்லிம் பெண்களின் வழக்குகள் மிகச் மிகச்
சொற்பமானவை.
இந்தியாவில்
பாதுகாப்பும் நிம்மதியுமான குடும்ப வாழ்க்கை முஸ்லிம் பெண்களுக்கு கிடைப்பது போல இந்திய
சமூகத்தில் வேறு யாருக்கும் இல்லை.
இப்போதைய உச்சநீதிமன்ற
தீர்ப்பை ஏதோ தங்களுக்கு கிடைத்த வெற்றியை போல பிரதமர் உள்ளிட்ட இந்துதுவ சக்திகளும்
– விவரமற்ற ஊடகங்கள் – சில முஸ்லிம் பெயர் தாங்கிகளும் நினைக்கின்றனர். பேட்டியளிக்கின்றனர்.
இந்திய முஸ்லிம்கள்
இத்தகைய தீர்ப்புக்களை மேலும் இஸ்லாத்தின் அடிப்படையை நோக்கி நகர்த்திச் செல்லும் வாய்ப்புக்களாக
ஆக்கிக் கொள்ள வேண்டும்.
இதில் தான்
இஸ்லாமின் எதிர்களின் தோல்வி அடங்கியிருக்கிறது.
முஸ்லிம்கள்
ஒரே அடியாக முத்தலாக் விடும் போக்கை அறவே கை விட வேண்டு, அதே நேரத்தில் முத்தலாக்கிறகு பிறகு கணவன் மணைவியாக
இருந்தவர்கள் இணைய முடியாது என்ற கருத்தில் உறுதிகாட்டவேண்டும். அப்படி இணைந்தால் அது
ஹராமான வாழ்க்கையாகி விடும். அத ன் மூலம பிறக்கிற குழந்தைகள் ஹராமான வழியில் பிறந்தவர்களாகி விடுவார்கள்.
இந்த நம்பிக்கை
நமக்கு இருக்கிறது.
எப்படி பிறக்கிறோம்
என்பதைப் பற்றி கவலையில்லாதவர்கள் எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும்.
அந்தக் கவலையுள்ளவர்கள்
தமது நம்பிக்கையை மேலும் உறுதிப் படுத்திக் கொள்ளட்டும்.
எந்த நீதிமன்றமும்
முஸ்லிம்களின் நம்பிக்கை சார்ந்த நடைமுறைகளை சாய்த்து விட முடியாது.
நிர்வாணமாக
அலைகிற சாமியார்களை கட்டுப்படுத்த திராணியற்ற நீதிமன்றங்கள், மனிதப்பிணங்களை உண்ணுகிறவர்களை
தடுக்க்த் திராணியற்றவர்கள். இஸ்லாம் என்கிற பழுத்த மரத்தின் மீது கல்லெறிகிறார்கள்.
முஸ்லிம்கள்
தம்மிடமிருக்கிற ஷரீஅத் எனும் சொத்தின் மதிப்பை சரியாக புரிந்து கொண்டு அதை உறுதியாக
கடைபிடிக்க சபதமேற்பதே அத்துமீறி தலையிடுகிற நீதிமன்றங்களுக்கும் மக்கள் கொடுக்கிற
சாட்டையடியாக இருக்கும்.
இஸ்லாமிய ஷரீஅத்தை
கடைபிடிப்பதில் முஸ்லிம் சமுதாயம் உறுதிபட நிற்கும் போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு குழந்தை விளையாட்டு போல பலூன்களை ஊதி உடைக்கும் முயற்சியாகவே இருக்கும்.
அல்லாஹ் போதுமானவன்.
மேலும் பார்க்க இது தொடபுடைய சில முந்தைய இணைப்புக்கள்
முத்தலாக் ! தீய திட்டங்களும் தேவையான சீர்திருத்தங்களும்
பொருந்தாது! பொது சிவில் சட்டம்!!
திசை திருப்பாதே!
மேலும் பார்க்க இது தொடபுடைய சில முந்தைய இணைப்புக்கள்
முத்தலாக் ! தீய திட்டங்களும் தேவையான சீர்திருத்தங்களும்
பொருந்தாது! பொது சிவில் சட்டம்!!
திசை திருப்பாதே!
No comments:
Post a Comment