ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال
والأنفس والثمرات وبشر الصابرين )) [البقرة:155]
அல்லாஹ் பல வழிகளில் மனிதனை சோதிப்பேன் என்கிறான்.
சோதனை என்பது அழித்துவிடுவது அல்ல.
பிரச்சனைகளின் தாக்கத்திலிருந்து நாம் சரியான முறையில் வெளியேறுகிறோமா என்பதை
அறிந்து கொள்வதாகும்.
பள்ளிக்கூடங்களில் வைக்கிற தேர்வுகளைப் போல.
எனவே சோதனைகள் ஏற்படும் போது எப்போதுமே பதட்டப்படக் கூடாது. அவசரப் பட்டு தவறான
முடிவுகளுக்கு சென்று விடக் கூடாது.
அதிக மதிப்பெண் கிடைத்தும் மருத்துவக் கல்வியில் சேர முடியவில்லை என்று கவலைப்
பட்டு அனிதா எனும் மாணவி தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
மத்திய் மாநில அரசுகளின் அநீதியை இந்த உலகிற்கு அது அழுத்தமாக தெரிவித்து விட்டது
என்றாலும் இந்த இழப்பு அவருடை பெற்றோருக்கும் சமுதாயத்திற்கும்.ஏற்படுத்து கிற சோகம்
சாமானியமானதல்ல.
மருத்துவக் கல்வி கிடைக்க வில்லை என்பது ஒரு சோதனையாக இருக்கும் என்றால் வெற்றி
பெறுவதற்கான மாற்று வழிகளை சிந்திப்பதே சரியான மனித குணமாக இருக்க வேண்டும்.
அப்படி முயன்றால் சிறப்பான வழி கிடைக்கும் என்பதை தான் وبشر الصابرين என்ற
வாசகம் நமக்கு தருகிறது.
சோதனைகளில்
·
இபுறாகீம் நபி – கடுமையான சட்டங்களை எதிர் கொண்டார்.
·
அய்யூப் நபி – கடும் உடல் நலக் குறைவை எதிர் கொண்டார்.
·
யூசுப் நபி – சதித்திட்டங்களை எதிர் கொண்டார்.
·
முஹம்மது நபி (ஸல்) கடும் எதிர்ப்பை எதிர் கொண்டார்கள்
இவர்கள் ஒவ்வொருவரும் சோதனைகளை சிறப்பாக கடந்து வெற்றி பெற்றவர்களே!
சோதனைகளின் போது அல்லாஹ்வை மறந்துவிடாமல் அவற்றை எதிர் கொள்ள வேண்டும்.
உலகில் மனிதர்களுக்கு ஏற்படும் சோதனைகள் பலவிதத்தில் இருக்கிறது.
·
நான்
பிறந்தத்திலிருந்து என் தாயும் தந்தையும் பிரிந்து வாழ்கிறார்கள் என ஒரு மனிதர் கூறுகிறார்
·
என்
மனைவி என்னை மதிப்பதே இல்லை என்கிறார் மற்றொருவர்
·
பிள்ளைகள் கவனிக்க மறுக்கின்றனர்
·
எந்த
வியாபாரம் செய்தாலும் வெற்றி கிடைப்பதில்லை
·
பொறாமைக் காரர்கள் தொடந்து தொல்லை தருகின்றனர்
·
சதிகாரர்களின் திட்டங்களை தாங்கிக் கொள்ள முடியவில்லை
·
மன்நோயின் அழுத்தத்தில் இருக்கிறேன்.
·
உடல்
உனம் என்னை வாட்டுகிறது.
இந்த சோதனைகளில் குழந்தைகளுக்கு உடல் நலமில்லை என்பதும் அவர்கள் உயிரிழப்பதும் பெரிய சோகம்
துரதிஷ்ட வசமாக தமிழகத்தில் அந்தச் சோகம் சமீப காலங்களில் பல பெற்றோருக்கு ஏற்பட்டிருக்கிறது.
டெங்கு காய்ச்சலால் பல வளர் பருவத்து சிறுவர்களும் சிறுமிகளும் பாதிக்கப்பட்டு விட்டனர்.
சென்னையில்
அக்டோபர் மாத்தின் முதல் நாளில் அம்ப்த்தூரைச் சேர்ந்த சாம்ராஜ் என்பரின் 3 வய்து மகள் ஜாய்பெனிட்டா. ஆனந்தன் என்பவரது 6 வயது மகள் திவ்யபாரதீ ஆகியோர் உயிரிழந்தனர்.
சென்னை
எழும்பூர் குடும்ப நல மருத்துவ மனையில் சிகிட்சை பெற்று வந்த 6 வயது சிறுமி காஞ்சனா மதுரை வேல் நகரைச் சேர்ந்த ராஜு என்பவரின் ஓண்ணரை வயது குழந்தையும் உயிழந்தது.
மன்னார்
குடியை சேர்ந்த சிவக்குமார் மகன் கிஷோர் வயது 3. திண்டுக்கல் மரவப்பட்டியைச் சேர்ந்த சக்தி வேல் வயது 25 ,சேலம் மாவட்டம் மரவனேரி பகுதியைச் சேர்ந்த ஜான்ஸீ என்பவரின்
13 வய்து
மகன் ஸ்ரீதர் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் ஒரே நாளில்
8 10 12 வயதுடைய மூன்று குழந்தைகள் இறந்து போயின.
வளர் இளம் பருவத்துக் குழந்தைகளை இழப்பது பெரும் சோகம் அல்லாஹ் இந்த சோகத்திற்கு ஆளான மக்களுக்கு தகுந்த ஆறுதலை தந்தருள்வானாக! இத்தகைய சோதனைகளுக்கு ஆளாமால் நம்மை நாட்டு மக்களையும் பாதுகாப்பானாக!
أبي هريرة رضي
الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ما لعبدي المؤمن عندي جزاء
إذا قبضت صفيه من أهل الدنيا، ثم احتسبه، إلا الجنة"
بي
موسى الأشعري أن رسول الله صلى الله عليه وسلم قال: "إذا مات ولد العبد قال
الله لملائكته: "قبضتم ولد عبدي؟" فيقولون: نعم، فيقول: "قبضتم
ثمرة فؤاده؟" فيقولون: نعم. فيقول: "ماذا قال عبدي؟" فيقولون: حمدك
واسترجع. فيقول الله: "ابنوا لعبدي بيتاً في الجنة وسموه بيت الحمد
وله
صلى الله عليه وسلم: "ما منكم من امرأة تقدم ثلاثة من الولد إلا كانوا لها
حجاباً من النار" فقالت امرأة: واثنين؟ فقال رسول الله صلى الله عليه وسلم:
"واثنين" رواه البخاري ومسلم.
وقوله صلى الله عليه وسلم: "ما من مسلم يموت له ثلاثة من الولد، لم يبلغوا الحنث، إلا تلقوه من أبواب الجنة الثمانية من أيها شاء دخل" رواه ابن ماجه
وقوله صلى الله عليه وسلم: "ما من مسلم يموت له ثلاثة من الولد، لم يبلغوا الحنث، إلا تلقوه من أبواب الجنة الثمانية من أيها شاء دخل" رواه ابن ماجه
தமிழகத்தை டெங்கு அச்சுறுத்தி வருகிறது. மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்
தமிழகத்தில்
டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பலரை பலி கொண்டு விட்டது.
சில வாரங்களுக்கு
முன் தமிழ்கத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வதற்காக மத்திய குழு தமிழகம்
வந்தது.
அதன் பிறகு புதிய புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது..
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில்
தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
.
இந்திய நாடுமுழுவதும், இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 87 ஆயிரத்து 18 பேர்
பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 151 பேர் உயிரிழந்திருப்பதாகவும்
மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 18 ஆயிரத்து 908 பேரும், கர்நாடகாவில் 13 ஆயிரத்து 235 பேரும், தமிழகத்தில் 12 ஆயிரத்து 945 பேரும் டெங்கு காய்ச்சலால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு
கேரளாவில் 35 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டிலேயே அதிகப்படியாக தமிழகத்தில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்,
தமிழகத்தில் உள்ள
அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள சுமார் 12,000 பேரில் 1,150 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பிற்கு
உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிகரித்து வரும் நிலையில் அக்டோபர் 10 தேதி வரை 6 நாட்களில் 62 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் .
கோவை
அரசு மருத்துவ மனையில் கடந்த சில தினங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 21பேரும். பன்றிக் காய்ச்சலுக்கு இருவரும். நிமோனியா காய்ச்சலுக்கு ஒரு வரும் உயிரிழந்துள்ளனர். டொங்கு காய்ச்சலுக்கு 26 பேரும் வைரஸ் காய்ச்சலுகு
126 பேரும்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சலால பாதிக்கப்பட்டோர் மற்ற மாநிலங்களில் அதிகம் இருந்தாலும் உதாரணத்திற்கு
கேரளத்தில் 18 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை தமிழகத்தில்
அதிகம். அதிலும் குறீப்பாக 8 10 12 வய்துக்குட்பட்ட சிறுவர்
சிறுமியர் பலர் இறந்துள்ளது. தாங்க முடியாத துயரத்தை தந்துள்ளது.
இந்த சோகத்திற்கு
காரணம் டெங்கு காய்ச்சலை எதிர் கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்ய மாநில அரசு தவறி விட்டதே
காரணமாகும்.
குழந்தகைகள் கொத்துக்
கொத்தாக இறந்து கொண்டிருக்கிறார்கள். மாநில ஆரசு எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் கவனமாக
இருக்கிறது.
குழந்தகளின் உயிர்ழப்பு
மிக தாமதமாகவே மாநில அரசுக்கு உறைத்திருக்கீறது.
டெங்குவுவை எதிர்
கொள்ள ஒரு குறிப்பிட்ட மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் பட வில்லை.
டெங்கு எந்த அளவு பிரபலமாக இருக்கிறதோ அதே
அளவு நிலவேம்பு கஷாயமும் பிரபல மாக இருக்கிறது.
இது விசயத்தில் பலத்த சர்ச்சை ஏற்பட்டிருக்கிற
சூழலில் ஒரு சரியான அறிவுப்பு வெளிடக் கூடிய அமைப்பு எதுவும் தமிழத்தில் இல்லை என்பதுதான்
பெரிய வேதனை.
தங்களது தவறுகளை மறைப்பதற்காக அரசாங்கத்தில்
இருப்பவர்களே நிலவேம்பு கஷாயத்தை பிரபலப்படுத்துகிறார்கள்.
இது விசயத்தில் மாநில அரசாங்கத்தின் சார்பில் ஒரு சரியான ஆய்வறிக்கை
வெளிப்படுத்தப் படவில்லை என்பது அரசாங்கத்தின் பல்வீனத்தையே காட்டுகிறது.
அமைச்சர்களும் அரசு நிர்வாகமும் நிலவேம்பு கஷாயத்தை பாதுகாப்பானது
என்று சொல்வது அதற்கெதிராக பிரச்சாரம் செய்கிறவர்களை அச்சுறுத்துவது தேவையற்றது.
ஒரு சரியான மருத்துவக் குழுவின் அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்குமானால்
இந்த சர்ச்சையே எழுந்திருக்க வாய்ப்பில்லை
இது விவகாரத்தில் மக்கள் அதிக விழிப்புணர்வுடன்
இருப்பதே இப்போதைய முக்கிய பாதுகாப்பாகும்.
டெங்கு காய்ச்சல்
Dengue fever என்பது டெங்கு எனும் வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று
நோய் ஆகும். இந்நோய் தீவிரமடைந்தால் நிலையில்
உயிருக்குத் தீங்கு விளைவிக்கும்.இது கொசுக்களால் பரவுகிறது.
அறிந்து கொள்வது எப்படி
இந்நோய் தொற்றுக்கு ஆளாவது பெரும் பாலும்
வெளியே தெரியாது. சாதாரண காய்ச்சல் மட்டும் முதலில் ஏற்படும்.
எல்லா காய்ச்சலையுமே டெங்கு என அஞ்சத்
தேவையில்லை.
·
திடீரென அதிகரித்துச் செல்லும் காய்ச்சல்,
·
கண் பின்பகுதி வலி,
·
உடல்வலி (தசை, எலும்பு வலி),
·
களைப்பு,
·
தொண்டைப்புண்,
·
சுவையில் மாற்றம்,
·
தோல் தடித்து சிவப்படைவது
·
மிதமான இரத்த்ப் போக்கு (பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல், மூக்கிலிருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், குருதிப்புள்ளிகள்
·
வெள்ளை அணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் குறைதல்
·
டெங்குவால்
பாதிக்கப்பட்டால் இரத்தத்தில் ப்ளேட்லெட் எண்ணிக்கை
குறையத் தொடங்கும். சாதாரணமாக நமது உடலில் ப்ளேட்லெட் எண்ணிக்கை 3.5 லட்சம் வரை இருக்க
வேண்டும். 50 ஆயிரத்துக்கும் கீழே போனால் மிக ஆபத்து.
ஆரம்ப கட்டத்தை அறிவது சிரமம்
பிளட் டெஸ்டிலும் ஆரம்ப மூன்று நாட்களில் தெரியாது.
சரியான அறுதியிடலுக்கு, காய்ச்சலுடன் பின்வரும் அறிகுறிகளில் குறைந்த பட்சம் இரண்டேனும் இருத்தல்
இது உயிர் ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய ஒரு
கொடிய நோய்
என்பதால் எலும்பை
முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்
டெங்கு எனும் வைரஸை ஏடிஎஸ் எனும் கொசுக்கலால்
பரவு என்கிறது என்பது மட்டுமே உண்மை. கொசுக்கலாலேயே வருவதில்லை. அதவாது டெங்கு
பாதித்த ஒரு வரின் இரத்ததை குடிக்கிற கொசு இன்னொருவரை கடிக்குமானால் அதன் மூலம்
டெங்கு ஏற்படுகிறது.
எனவே கொசு கடித்து விட்டாலே பயப்படத்
தேவையில்லை
எச்சரிக்கை
அதனால் குழந்தைகளை பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
காய்ச்சல் உடல் வலி என்று சொன்னால் உடனடியாக இரத்த மாதிரியை பரிசீலித்து தேவையான மருந்துக்களை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொடுதல்கள் மூலம் இந்நோய் பரவுவதில்லை அதனால்
பள்ளிக் கூடத்திலோ மற்ற இடங்களிலோ டெங்கு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அருகில்
இருப்பதால் டெங்கு வந்து விடுமோ என்று அஞ்சத்தேவையில்லை
அதே போல , சுகர் - ஆஸ்துமா நோய் போன்ற நீண்டகால நோய்கள் உள்ளவருக்கு இந்நோய் மிகவும் உயிருக்கு தீங்குவிளைவிக்கக்கூடிய பாதிப்பை உண்டாக்க
கூடும்.
எனவே இத்தகையோர் சற்று அதிகப்படியான கவனத்தை
செலுத்த வேண்டும்.
நோய்க்கான குறிப்பிட்ட மருந்து இதுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் பெரும்பாலும் இந்நோய் இரண்டு வாரங்களில் குணமாகி
விடுகிறது. நல்ல ஓய்வு, நிறைய நீர்ம உணவு உட்கொள்ளுதல், காய்ச்சலுக்குத் தகுந்த மருந்து உட்கொள்தல் போன்றவை நோயின் கடுமையைக் குறைக்க
உதவும்.
மருத்துவ மனையில்
அனுமதிக்கலாமா என்பதை அறிகுறைகள் அதிகமாக இருப்பதை பொருத்து தீர்மாணிக்க வேண்டும்
பாதிக்கப்பட்ட நோயாளி நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறுகளை காலை, மாலை ஆகிய இரண்டு வேளை அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து
ரத்தத்தில் உள்ள அணுக்களின் அளவு குறையாமல் பாதுகாக்கபடுவதாகச் சித்த மருத்துவம்
கூறுகின்றது
ஆனால் இது மட்டுமே தீர்வு அல்ல. மருத்துவர்களின்
கண்காணிப்பு அவசியம்
அதே போல கொசுவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள
தேவையான சூழலை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். கொடும் நோயிலிருந்து தற்காத்துக்
கொள்ள அது உதவு,
·
திறந்திருக்கும் தன்ணீர்
·
சாக்கடை
·
வீட்டில் பழை உணவுப் பொருட்கள் பழங்கள்
ஆகியவை கொசுக்கள் உற்பத்தியாகிற – தங்கிநிற்கிற இடங்களாகும்.
ஏடிசு கொசு உருவாகாமல் தடுப்பதற்கு
·
சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல்,
·
கொசுக்களின் வாழ்விடத்தை முற்றுமுழுதாக அழித்தல்,
·
அவை வாழும் இடங்களில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல்
·
சுற்றுப்புறத்தில் நீர் தேங்கியிருக்கும்
இடங்களை கண்டறிந்து
அவற்றை வெறுமைப் படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல்,
·
பூச்சிகொல்லி மருந்துகளால் மாந்தருக்கு
ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருதும் போது தேங்கிய நீர்நிலைகளை காலியாக்கும் முறையே சாலச்சிறந்தது.
·
தோலை மூடக்கூடிய உரிய ஆடைகள் அணிவது,
·
தூங்கும்போது கொசுவலை உபயோகிப்பது,
·
கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச் சுருள் போன்ற கொசுவிரட்டிகள் பயன்படுத்தல் என்பன கொசு
கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள உதவும்.
நோய் தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பவர்கள் அல்லாஹ்வுக்கு அதிகம் நன்றி செலுத்த வேண்டு,
அதே நேரத்தில் எச்சரிக்கையும் அவசியம்
நபி (ஸல்) அவர்கள் கூறிய மிக முக்கியமான அறிவுரைகளில் ஒன்று
عن عبدالله بن عباس رضي الله عنهما قال: قال النبي صلى الله عليه وسلم: ((نعمتانِ مغبونٌ فيهما كثيرٌ من الناس: الصحة والفراغ))؛ رواه البخاري
உடல் ஆரோக்கியம் குறித்து பெருமானார் (ஸல்) அவர்களின் அறிவுரைகளை கவனத்தில் கொள்வோ,
قال
النبي صلى الله عليه وسلم:
" من أصبح منكم معافى في جسده آمنا في سربه عنده قوت يومه فكأنما حيزت
له الدنيا بحذافيرها ".
أنه
صلى الله عليه وسلم كان إذا أصبح وإذا أمسى سأل ربه تبارك وتعالى العافية: " اللهم إني أسألك
العافية في الدنيا و الآخرة اللهم إني أسألك العفو والعافية في ديني و دنياي ، و
أهلي و مالي اللهم استر عوراتي ، و آمن روعاتي اللهم احفظني من بين يدي و من خلفي
، وعن يميني وعن شمالي ، ومن فوقي ، وأعوذ بعظمتك من أن أغتال من تحتي
قال: " سلوا الله
العافية واليقين ، فما أعطي أحد بعد اليقين شيئا خيرا من العافية ، فسلوهما الله
تعالى ".
ومعنى العافية كما ذكر المناوي رحمه الله: (السلامة من الأسقام والبلاء... والعافية تدفع عنه أمراض الدنيا في قلبه وبدنه)ا.هـ
ومعنى العافية كما ذكر المناوي رحمه الله: (السلامة من الأسقام والبلاء... والعافية تدفع عنه أمراض الدنيا في قلبه وبدنه)ا.هـ
فقد
قال عبد الله بن عمرو رضي الله عنهما: دخل عليّ رسول الله صلى الله عليه وسلم فقال : " ألم أخبر أنك
تقوم الليل وتصوم النهار ؟" . قلت : بلى ، قال
: "فلا تفعل ، قم ونم ، وصم وأفطر ، فإن لجسدك عليك حقا ، وإن لعينك
عليك حقا ، وإن لزورك عليك حقا ، وإن لزوجك عليك حقا
இஸ்லாம்
சுத்ததை அதிகம் வலியுறுத்தி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்வோம்
فقد جاء في الخبر الذي رواه الطبراني مرفوعاً بسند جيد: "طهروا الأجساد طهركم الله
فإنه ليس عبدٌ يبيت طاهراً إلا بات معه في شعاره ملك لا ينقلب ساعة من الليل إلا
قال: اللهم اغفر لعبدك فإنه بات طاهراً ".
وفي خبر آخر عند أبي داود بسند صحيح: " ما من مسلم يبيت طاهراً: فيتعار من الليل ـ أي يستيقظ ـ فيسأل الله خيراً من أمر الدنيا والآخرة إلا أعطاه الله إياه " .
ஒளு ஒரு முக்கிய நிவாரணி . முறையாக செய்வோம்.وفي خبر آخر عند أبي داود بسند صحيح: " ما من مسلم يبيت طاهراً: فيتعار من الليل ـ أي يستيقظ ـ فيسأل الله خيراً من أمر الدنيا والآخرة إلا أعطاه الله إياه " .
أما الوضوء الذي أمر به المسلم إذا أراد الصلاة فهو بالإضافة إلى كونه عبادة وقربة فإنه نظافة وجمال وفي الحديث: " أرأيتم لو كان باب أحدكم على نهر جار يغتسل منه خمس مرات أيبقى من درنه شيء ".
குளித்தல் ஒரு முக்கி நோய் நிவாரணி . வெள்ளிக்கிழமைகாகவாது
முஸ்லிம் குளித்தாக வேண்டும்
وغسل الجمعة الذي أخبر النبي صلى اله عليه وسلم أنه واجب على كل محتلم، هو نوع من نظافة الظاهر، في الوقت الذي تعمل فيه الصلاة على نظافة الباطن.
உடலை சுத்தமாக வைக்கும் மற்ற ஏற்பாடுகள்/
وخصال الفطرة التي بينها النبي صلى الله عليه وسلم هي في مجملها
طاعة وعبادة ونوع من النظافة وقد قال فيها النبي صلى الله عليه وسلم: " خمس من الفطرة :
تقليم الأظفار وقص الشارب وحلق العانة ونتف الإبط والاختتان".
முன்னேற்பாடுகள் எச்சரிக்கைகள்.
முன்னேற்பாடுகள் எச்சரிக்கைகள்.
நோய் பாதிப்புக் கண்டறியப்பட்டவர்களை தனியாக வைத்து சிகிட்சை
செய்வது
ففيما يتداوله الناس أن الوقاية خير من العلاج، وهذا الأمر تراه حقيقة ماثلة في الإسلام، حين علم النبي صلى الله عليه وسلم أن في وفد ثقيف الذي أراد القدوم على النبي صلى الله عليه وسلم ليبايعه رجلا مجذوما( أصابه الجذام) أرسل إليه النبي صلى الله عليه وسلم فقال: " ارجع فقد بايعناك".
كما نهى النبي صلى الله عليه وسلم أمته عن الدخول إلى بلدة ظهر فيها الطاعون، وأمرهم ألا يخرجوا من بلدة أصابها الطاعون وهم فيها، ولعل هذا ما يسمى الآن الحجر الصحي.
சுற்றுப்புற சுகாதாரம்
" الإيمان بضع وسبعون شعبة، فأفضلها قول لا إله إلا الله ، وأدناها إماطة الأذى عن الطريق..."الحديث.
كما أخبر النبي صلى الله عليه وسلم عن الرجل الذي يتقلب في الجنة بسبب إزاحته الأذى عن طريق المسلمين.
ونهى النبي صلى الله عليه وسلم عن البول في الماء الراكد، وكذلك عن البول في موارد المياه والطريق والظل، وأن هذا الفعل يجلب على صاحبه دعاء الناس عليه ولعنتهم إياه.
وعلى الجانب الآخر يحث النبي صلى الله عليه وسلم على المبادرة إلى الخيرات ومنها : " إذا قامت الساعة وفي يد أحدكم فسيلة فإن استطاع ألا تقوم حتى يغرسها فليغرسها".
ونهى عن قطع الشجر لغير حاجة كما عند أبي داود والبيهقي والنسائي عن النبي صلى الله عليه وسلم قال: " من قطع سدرة صوب الله رأسه في النار ". (صححه الألباني).
وكان صلى الله عليه وسلم يوصي أمراء جيوشه فيقول: "اغزوا بسم الله في سبيل الله من كفر بالله ولا تغدروا.. ولا تقطعوا نخلا ولا شجرة ولا تهدموا بناء".
பாதுகாப்பான சுற்றுச் சூழலில் வாழ வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துவதை அதை வணக்கத்திற்கு நிகராக வலியுறுத்துவதையும் முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.
அல்லாஹ்
நம்மையும் நம்மைச் சார்ந்தோரையும் நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் பாதுகாபானாக!
அல்லாஹ்
டெங்கு நோயின் கடும் பாதிப்பிலிருந்தும் பாதுகாப்பானக! மக்களின் சிரமங்களை புரிந்து கொண்டு செயலாற்றச் சக்தி அற்ற கேவலமான அரசுகளிடமிருந்தும் பாதுகாப்பானாக!
No comments:
Post a Comment