வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 28, 2017

ஜனநாயகத்தின் கருப்பு நாள்



மத்திய அரசு முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் நேற்று பாராளுமன்றத்தில் ஒரு சட்ட்த்தை நிறைவேற்றியிருக்கிறது.
அந்த நாளை வரலாற்றில் ஒரு முக்கிய நாள் என்று கூறியிருக்கிறார். மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத். உண்மையில் இது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு கருப்பு நாளாகும்.

பாபர் மஸ்ஜிதை உடைத்து இந்தி ஜனநாயகத்திற்கு சவால் விட்டவர்கள். இப்போது நாடாளுமன்றத்திற்குள்ளே ஜனநாயகத்தை குழு தோண்டிப் புதைத்திருக்கிறார்கள்.

முத்தலாக்கிற்கு தடை என்ற வார்த்தையும் முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு என்ற வார்த்தையும் போலியானவையாகும் . அப்பட்டமான் சதித்திட்டமாகும். .
தங்களுடைய சொந்த மனைவியை பாதுகாக்க முடியாதவர்கள் முஸ்லிம் பெண்ளை பாதுகாக்கிறார்களாம்.
இந்த மசோதா சட்டம், அரசு, அரசியல் என அனைத்தும் ஓரணியில் திரண்டு முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் மீது தொடுத்துள்ள போராகும்.
கடந்த 2015, அக்டோபர் மாத்த்தில் முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி முஸ்லிம் தனி நபர் சட்டத்துக்கு எதிராக ஷயீரா பானு உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்தப் பெண்மணி பாரதீ ஜனதாவின் தொடர்பில் உள்ள பெண்கள் பிரிவு ஒன்றைச் சார்ந்தவர் என செய்திகள் கூறுகின்றன.

பொதுவாக இந்தியச் சமூகத்தில் இஸ்லாமிய சமூகத்தில் தான் விவாரத்து குறைவு என்பது பகல் வெளிச்சத்தை போல அப்பட்டமான உண்மையாகும்.

நேற்றைய விவாவத்த்தின் போது மத்திய அமைச்சர் உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு 300 முத்தலாக் வழக்குகள் பதிவாகி இருப்பதாக கூறுகிறார்.
நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்துள்ள ஒரு அமைச்சரின் கீழ்த்தரமான பொய் இது.

முதலில் 66 என்றார்கள். பிறகு 100 வழக்கு என்றார்கள். இப்போது 300 என்கிறார். ஏன் 3000 என்று கூட சொல்வார்கள்.
இந்துப் பெண்களை முஸ்லிம்கள் பெண்களைப் போல பர்தா அணிந்து வரச் செய்கிற இவர்கள் இன்னும் எது வேண்டுமானாலும் செய்வார்கள். போலியான இன்னும் ஆயிரக் கணக்கான வழக்குகளை கூட உருவாக்குவார்கள்.  

நாடுமுளுக்க் உள்ள நீதிமன்றங்களில் முத்தலாக் தொடர்பாக 5 வழக்குகளே பிரதானமானவை என்று பி பி சி செய்தி வெளியிட்டுள்ளது.
22 கோடி முஸ்லிம்களில் வெறும் 5 வழக்கு என்பது கருத்தில் கொள்ளப் பட வேண்டிய விவகாரமே அல்ல.

5 வழக்குகளை வைத்து த்தான் இந்திய நீதிமன்றங்கள் ஒரு பெரும் சமுதாயத்திற்கு எதிரான யுத்தத்தை தொடங்கியிருக்கின்றன.

2016, டிசம்பர் 9 ம் தேதி முத்தலாக் சட்டவிரோதம், அரசியலமைப்புக்கு எதிரானது:  என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு  வெளியிட்டது.


2017, ஆகஸ்ட் 22 ல்  முத்தலாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் முத்தலாக் சட்டவிரோதமானது என்றும் காஜிகள் முத்தலாக்கிற்கு சார்பான சான்றிதழ்களை வழங்க கூடாது என்று தீர்ப்பளித்த்து. அப்போது நீதிமன்றத்தில் உச்சநீதிமன்றம் சட்ட விரோதம் என்று கருதுமானால் அதற்கு எதிரான ஒரு சட்ட்த்தை மத்திய அரசு கொண்டு வரும் என்று பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது.

உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை 5 நீதிபதிகளை கொண்ட பென்ச் தீர்ப்பு வழங்கியது.

ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹரும், நீதிபதி நஜீரும், முத்தலாக் முஸ்லிம் மதத்தினரின் அடிப்படை உரிமை என்று கூறினர்.

ஆனால், நீதிபதிகள் குரியன் ஜோசஃப், ஆர்.எஃப். நாரிமன், யு.யு.லலித் ஆகியோர், முத்தலாக் வழக்கத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தனர்.

இந்த மூவரும் கூட அரசாங்கத்திடம் சேர்ந்து சொன்னது. முஸ்லிம்களிடம் கலந்தாலோசித்து ஒரு மாற்று சட்ட்த்தை கொண்டு வருமாறு கூறினர்.
ஆனால் மத்திய பாரதீய ஜனதா அரசு உச்ச நீதிமன்றத்தின் ஒரு தரப்பு நீதிபதிகளின் கருத்தை மட்டும் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்களின் ஷரீ வில் கை வைக்க துணிந்திருக்கிறது

இது இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் குரல் வலையை நெறிக்கும் முயற்சியாகும் .

இது முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பறீக்கும் செயல் என்று நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எடுத்துக் கூறிய போது.

முத்தலாக் பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைய பற்றிய கவலைப்பட வேண்டாமா ? என மத்திய அமைச்சர் குள்ளந்ரித்தனமாக எதிர்க் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

22 கோடி மக்கள் தங்களது முஸ்லிம் பர்சனல் லா வில் மாற்றம் எதுவும் செய்யக் கூடாது என்று வாதிடுகிற போது 5 பேரை வைத்துக் கொண்டு நியாயம் பேசுவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நேர்ந்த  கொடுமை என்பதை தவிர வேறென்ன சொல்ல இருக்கிறது.

பாஜக அரசுக்கு நாடாளுமன்றத்தில் மிருக பலம் இருக்கிறது. அதை வைத்து எதையும் செய்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளத் தெரியாத அல்லது நிராகரிக்கிற ஆட்சியாளர்கள் மிருகங்களை விட மோசமானவர்கள் என்பதற்கு அப்பட்டமான ஒரு உதாரணம் இது.,

இப்படி ஒரு மசோதாவை அமுல் படுத்தியதே பிர் அவ்னிய ஆதிக்க உணர்வின் அடையாளமாகும்,  

மாட்டுக்காக மனிதர்களை கொல்கிற மக்களை மதிக்கத் தெரியாத இந்துத்தாவின் கொடூர சிந்தனையின் வெளிப்படையாகும்.

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்த தீர்மாணங்களை சற்றும் கவனிக்காமல் அதையும் மிருக பலத்தை கொண்டு அரசு தள்ளுபடி செய்திருக்கிறது.

முத்தலாக் விடுவது கிரிமினல் குற்றம்
முத்தலாக் விட்டவருக்கு 3 ஆண்டுகள் ஜாமீனில் வெளிவர முடியாத சிறைத் தண்டனை
நீதிபதி விரும்பும் அபராதத்தை விதிக்கலாம்.
காலம் முழுக்க மனவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்

போன்ற இந்த மசோதாவின் அம்சங்கள் ஒரு சிவில் வழக்கை குற்ற வழக்கமாக மாற்று கின்றன,

கேட்பதற்கே மிக கொடூரமாக தெரிகிற விசயங்களை முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்திய முஸ்லிம்கள் மீது இந்த அரசு திணிக்கிறது.

மத்திய அரசாங்கத்திற்கு மத வெறி உச்சத்தில் இருப்பதை இது காட்டுகிறது.

முஸ்லிம்கள் ஒன்று திரண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

மத்திய அரசின் சட்ட்த்தை ஏற்க முடியாது என அறிவிக்க வேண்டும்.

முஸ்லிம்கள் இந்திய நீதிமன்றங்களை முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.
அரசின் உத்தரவில் ஏட்டில் மட்டும் இருக்கும்.
ஷரீஆவின் உத்தரவு முஸ்லிம்களின் நெஞ்சுக்களில் இருக்கிறது.

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمْ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا(36) الأحزاب

ورد في الحديث "والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به"

وورد في الحديث  كل أمتي يدخلون الجنة إلا من أبى، قيل: يا رسول الله ومن يأبى؟ قال: من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى))

وقال البخاري: حدثنا علي بن عبدالله حدثنا محمد بن جعفر حدثنا معمر عن الزهري عن عروة قال: خاصم الزبير رجل ا في شراج الحرة فقال النبي صلى الله عليه وسلم "اسق يا زبير ثم أرسل الماء إلى جارك" فقال الأنصاري: يا رسول الله إن كان ابن عمتك؟ فتلون وجه رسول الله صلى الله عليه وسلم ثم قال "اسق يا زبير ثم احبس الماء حتى يرجع إلى الجدر ثم أرسل الماء إلى جارك"

قال الزبير: فما أحسب هذه الآية إلا نزلت في ذلك "فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم" الآية. هكذا رواه البخاري

பெருமானாரின் தீர்ப்பை ஏற்க மறுத்த முஸ்லிமுக்கு உமர் ரலி மரண தண்டனை கொடுத்தார்கள்.  ஒரு முஸ்லிமை உமர் எப்படி கொல்லலாம் என அவருடைய குடும்பத்தவர்கள் சர்ச்சை செய்த போது இறைத்தூதரின் தீர்ப்பை ஏற்காதவர்கள் விசயத்தில் உமர் ரலி அவர்களை நிரபராதியாக்கும் வகையில் அல்லாஹ் வசனத்தை அருளினான்,

عن أبي الأسود قال: اختصم رجلان إلى رسول الله صلى الله عليه وسلم فقضى بينهما فقال المقضى عليه: ردنا إلى عمر بن الخطاب فقال رسول الله صلى الله عليه وسلم "نعم انطلقا إليه" فلما أتيا إليه فقال الرجل: يا ابن الخطاب قضى لي رسول الله صلى الله عليه وسلم على هذا فقال ردنا إلى عمر بن الخطاب فردنا إليك فقال أكذاك؟ قال نعم فقال عمر: مكانكما حتى أخرج إليكما فأقضي بينكما فخرج إليهما مشتملا على سيفه فضرب الذي قال ردنا إلى عمر فقتله وأدبر الآخر فأتى إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله قتل عمر والله صاحبي ولولا أنى أعجزته لقتلني فقال رسول الله صلى الله عليه وسلم "ما كنت أظن أن يجترئ عمر على قتل مؤمن" فأنزل الله "فلا وربك لا يؤمنون حتى يحكموك" الآية فهدر دم ذلك الرجل وبريء عمر من قتله

சட்டத்தை கடைபிடிக்க வேண்டியதற்கான கண்டிப்பு அழுத்தமாக செய்யப்பட்டிருக்கிறது.
அவ்வாறு கடை பிடிப்பது வேண்டா வெறுபாக அல்ல. இது அல்லாஹ் நமக்களித்த மாபெரும் நிஃமத் இது பரிபூரணமானது,   இந்த உலகின் செயற்கையான எந்தச் சட்ட விதியும் இதற்கருகே கூட நிற்கும் தகுதியற்றது என்ற எண்ணத்தில் விருப்பத்தோடும் நன்மையை எதிர்பார்த்தும் கடை பிடிக்க வேண்டும்.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ﴾ [المائدة: 3


  
நாடாளுமன்றத்தில் இந்துதுத்துவாவை வெற்றி பெறச் செய்யவே முஸ்லிம் பெண்களின் திருமணப் பாதுகாப்பு என்ற போலியான பெயரில் மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
முஸ்லிம்களிடம் ஈமானிய வலு இருக்கும் வரை ஷரீஆவிற்கு எதிராக நிகழ்த்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் துணிவு இருக்கிறது என்பதை இனி வரும் காலத்தில் நாம் நிலை நிறுத்தியாக வேண்டும்.


அல்லாஹ் கிருபை செய்வானாக!

No comments:

Post a Comment