வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் வாராந்திர
பெருநாள் ஆகும்.
நம்முடைய
ஒவ்வொரு பெருநாளும் விசேச கவனத்திற்குரியவை.
அதிகப்படியான
இபாதத்துக்கள்
அதிகப்படியான மனிதாபிமானக் கடமைகளை வலியுறுத்துபவை (உதாரணங்கள்)
வெள்ளிக்கிழமையையும் நாம்
அந்த வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
அவசர
கதியிலான ஒரு கூட்டுத்தொழுகையாக மட்டுமே வெள்ளிக்கிழமையை நாம் இதுவரை பயன்படுத்திக் கொண்டிருப்போம் எனில் அந்த நிலை மாற வேண்டும்.
வார
நாட்களில் சனிக்கிழமை யூதர்களுக்கும் ஞாயிற்றுக் கிழமை கிருத்துவர்களுக்கும் பெருநாளாக இருந்தாலும் கூட வெள்ளிக்கிழமை அனைத்து தரப்பினரிடமும் பரக்கத்தான ஒரு நாளாக பல்வேறு காரியங்களுக்கும் பயன்படுத்தப் படுகிறது என்பது எதார்த்தமாகும். மற்ற சமூகத்தவர்கள் வெள்ளிக்கிழமையை தவற விட்டு விட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
عَنْ
حُذَيْفَةَ ، قَال : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم:أَضَلَّ اللَّهُ عَنِ
الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا ، فَكَانَ لِلْيَهُودِ يَوْمُ السَّبْتِ ،
وَكَانَ لِلنَّصَارَى يَوْمُ الأَحَدِ ، فَجَاءَ اللَّهُ بِنَا ، فَهَدَانَا
اللَّهُ لِيَوْمِ الْجُمُعَةِ ، فَجَعَلَ الْجُمُعَةَ ، وَالسَّبْتَ ، والأَحَدَ ،
وَكَذَلِكَ هُمْ تَبَعٌ لَنَا يَوْمَ الْقِيَامَةِ ، نَحْنُ الآخِرُونَ مِنْ
أَهْلِ الدُّنْيَا ، وَالأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ ، الْمَقْضِيُّ لَهُمْ
قَبْلَ الْخَلاَئِقِ. أخرجه مُسْلم
உண்மையில்
வெள்ளிக்கிழமையே
வார நாட்களில் ஆகச் சிறந்த நாளாகும்.
துணிக்கடைகளில் இரண்டு
பேர் ஒரே துணியை கேட்பார்கள். அது மற்றவர்களுக்கு கிடைக்காமல் நமக்கு கிடைத்து விடும் என்றால் நாம் எவ்வளவு சந்தோசப்படுவோம். அதற்குரிய விலைய கொடுத்துத்தான் வாங்கினோம் என்றாலும் அதை நமது அதிர்ஷமாக கருதுவோம் அல்லவா
அது
போல நமக்கு அதிர்ஷடமாக கிடைத்த நாள் வெள்ளிக்கிழமையாகும்.
பெருமானார்
(ஸல்) அவர்களின் பல்வேறு ஹதீஸ்களும் வெள்ளிக்கிழமையின் சிறப்பை புலப்படுத்து கின்றன.
அல்லாஹ் திருக்குர் ஆனில் சத்தியமிட்டுச் சொன்ன மூன்று நாட்களில் ஒரு நாள்
وعَنْ أَبِي
هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: الْيَوْمُ
الْمَوْعُودُ يَوْمُ الْقِيَامَةِ ، وَالْيَوْمُ الْمَشْهُودُ يَوْمُ عَرَفَةَ ،
وَالشَّاهِدُ يَوْمُ الْجُمُعَةِ ، وَمَا طَلَعَتِ الشَّمْسُ وَلاَ غَرَبَتْ عَلَى
يَوْمٍ أَفْضَلَ مِنْهُ ، فِيهِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُؤْمِنٌ يَدْعُو
اللهَ بِخَيْرٍ إِلاَّ اسْتَجَابَ اللَّهُ لَهُ ، وَلاَ يَسْتَعِيذُ مِنْ شَرٍّ
إِلاَّ أَعَاذَهُ اللَّهُ مِنْهُ.أخرجه الترمذي
يوم الجمعة ، وأنه يشهد على كل عامل بما عمل فيه
ஜும்
ஆ பாவங்களை மன்னிக்கும் காரணிகளில் ஒன்று
ولما سئل
النبي صلى الله عليه وسلم عن الكفارات قال : الْمَشْيُ عَلَى الأَقْدَامِ إِلَى
الْجُمُعَاتِ ، وَالْجُلُوسُ فِي الْمَسْجِدِ خِلاَفَ الصَّلَوَاتِ ، وَإِبْلاَغُ
الْوُضُوءِ فِي الْمَكَارِهِ ، قَالَ : مَنْ فَعَلَ ذَلِكَ عَاشَ بِخَيْرٍ ،
وَمَاتَ بِخَيْرٍ ، وَكَانَ مِنْ خَطِيئَتِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّه. المسند
الجامع
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله
عليه وسلم ، قَالَ: الصَّلَوَاتُ الْخَمْسُ ، وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ ،
كَفَّارَاتٌ لِمَا بَيْنَهُمَا ، مَا لَمْ تُغْشَ الْكَبَائِرُ.أخرجه أحمد
ஜும் ஆ தினத்தை கண்ணியப்படுத்துவதற்கான பல வழிகளை பெருமானார் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்தினார்கள்.
உடல் சுத்தம்
عَنْ عَبْدِ الرَّحْمَانِ بْنِ أَبِي سَعِيدٍ
الْخُدْرِيِّ ، عَنْ أَبِيهِ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ:
الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ ، وَالسِّوَاكُ ،
وَيَمَسُّ مِنَ الطِّيبِ مَا قَدَرَ عَلَيْهِ. أخرجه أحمد
ஜும்
ஆவிற்காகவே ஒரு தனி குளிப்பு
குளித்தாலும் நல்லதே!’
وعن عبد الله بن أبي قتادة رضي الله عنه قال دخل علي أبي
وأنا أغتسل يوم الجمعة فقال غسلك هذا من جنابة أو للجمعة قلت من جنابة قال أعد
غسلا آخر إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من اغتسل يوم الجمعة كان في
طهارة إلى الجمعة الأخرى. رواه الحاكم
சீக்கிரமாக பள்ளிவாசலுக்கு சென்று விடுக!
عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ. عَنْ رَسُولِ اللهِ صلى
الله عليه وسلم ، أَنَّهُ قَالَ: إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ ، قَعَدَتِ
الْمَلاَئِكَةُ عَلَى أَبْوَابِ الْمَسْجِدِ ، فَيَكْتُبُونَ النَّاسَ ، مَنْ
جَاءَ مِنَ النَّاسِ عَلَى مَنَازِلِهِمْ ، فَرَجُلٌ قَدَّمَ جَزُورًا ، وَرَجُلٌ
قَدَّمَ بَقَرَةً ، وَرَجُلٌ قَدَّمَ شَاةً ، وَرَجُلٌ قَدَّمَ دَجَاجَةً ،
وَرَجُلٌ قَدَّمَ عُصْفُورًا ، وَرَجُلٌ قَدَّمَ بَيْضَةً ، قَالَ : فَإِذَا
أَذَّنَ الْمُؤَذِّنُ ، وَجَلَسَ الإِمَامُ عَلَى الْمِنْبَرِ ، طُوِيَتِ
الصُّحُفُ ، وَدَخَلُوا الْمَسْجِدَ يَسْتَمِعُونَ الذِّكْرَ. أخرجه أحمد
ஜும் ஆவுக்கு முன்னதாக
வந்து முதல் சப்பில் இடம் பிடிப்பவர் ஒரு ஒட்டகம் குர்பானி செய்தவரை போன்றவர். அதற்கு
பிறகு வருபவர் ஆடு கோழி அதன் முட்டையை தர்மம் செய்தவரை போன்றவர் இமாம் குத்பாவிற்கு
எழுந்து விட்டால் மலக்குகள் தமது ஏடுகளை சுருட்டி வைத்து விட்டு குத்பாவிற்கு தயாராகிவிடுகிறார்கள்.
பிறகு உயர் அந்தஸ்தை பெருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை,
இந்த நன்மைகளை
பெற்றுக் கொள்வதில் நாம் அலட்சியம் காட்டுகிறோமா என்பதை அளவிட்டுக் கொள்ள நாம் கடமைப்
பட்டிருக்கிறோம்.
பயானுக்கு வந்து
விடுவது அல்லது பயான் முடியும் போது வருவது என்ற நமது நிலைப்ப்பாட்டை மாற்றிக் கொள்வது
குறித்து கண்டிப்பாக நாம் யோசித்தாக வேண்டும்.
அதனால் தான் வெள்ளிக்கிழமையை
விடுமுறைநாளாக ஆக்கிக் கொள்வது சிறப்பானது. அல்லது அதற்கு நிகராக கருதுவது. வேலைகளை
ஒதுக்கி விட்டு தயாராவது சிறப்பானது.
وعَنْ شُعَيْبٍ ، عَنْ جَدِّهِ
عَبْدِ اللهِ بْنِ عَمْروٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أنَّهُ قَالَ:
تُبْعَثُ الْمَلاَئِكَةُ عَلَى أبْوَابِ الْمَسْجِدِ يَوْمَ الْجُمُعَةِ ،
يَكْتُبُونَ مَجِيءَ النَّاسِ ، فَإِذَا خَرَجَ الإِمَامُ ، طُوِيَتِ الصُّحُفُ ،
وَرُفِعَتِ الأَقْلاَمُ ، فَتَقُولُ الْمَلاَئِكَةُ ، بَعْضُهُمْ لِبَعْضٍ : مَا
حَبَسَ فُلاَنًا ؟ فَتَقُولُ الْمَلاَئِكَةُ : اللَّهُمَّ إِنْ كَانَ ضَالاًّ
فَاهْدِهِ ، وَإِنْ كَانَ مِرِيضًا فَاشْفِهِ ، وَإِنْ كَانَ عَائِلاً فَأغْنِهِ.
أخرجه ابن خُزَيمة
சீக்கிரமாக பள்ளிவாசலுக்கு வந்து அமர்கிறவரின் ஒவ்வொரு எட்டுக்கும் கிடைக்கிற
அளப்பெரிய நன்மை
عَنْ أَوْسِ بْنِ أَبِي أَوْسٍ ، عَنِ النَّبِيِّ صلى
الله عليه وسلم ، قَالَ:إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ ، فَغَسَلَ أَحَدُكُمْ
رَأْسَهُ ، وَاغْتَسَلَ ، ثُمَّ غَدَا ، وَابْتَكَرَ ، ثُمَّ دَنَا فَاسْتَمَعَ
وَأَنْصَتَ ، كَانَ لَهُ بِكُلِّ خَطْوَةٍ خَطَاهَا كَصِيَامِ سَنَةٍ ، وَقِيَامِ
سَنَةٍ.أخرجه أحمد
வெள்ளிக்கிழமை
அன்று பள்ளிவாசலுக்கு வருகிற நேரம் குறித்து ஒரு பரிசீலனை செய்ய வேண்டியது நம் அனைவரின்
கடமை .
வெள்ளிக்கிழமை
இந்த ஒன்று கூடுதல் எத்தககய மகத்தானது என்பதை மார்க்கம் மிக அழுத்தமாக போதித்திருக்கிறது.
மார்க்கத்தின்
வழக்கில் ஜும் ஆ நாளை يوم المزيد என்று குறிப்பிடுவதுண்டு.
அதன் அர்த்தம் அதிக நன்மைக்குரியது என்று பலரும் நினைக்கிறார்கள். அதற்கு மேலான கருத்து
அதற்கு உண்டு,.
ஒரு தடவை கையில்
ஒரு கண்ணாடியோடு ஜிப்ரயீல் அலை பெருமானார் (ஸல்) அவர்களை சந்தித்தர்கள். அந்தக் கண்ணாடியின்
நடு மையத்தில் ஒரு கருப்பு பொட்டு இருந்தது. இது என்ன கண்ணாடி இதென்ன பொட்டு என பெருமானார்
(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஜிப்ரயீல் அலை அவர்கள் கூறினார்கள். இது சொர்க்கத்தில்
உள்ள மஸீத் மைதானம். இதற்கு மேலேயும் கீழேயும் நூறு நூறு சொர்க்கங்கள் இருக்கின்றன.
உதன் உச்சியில்ஒரு சொர்க்கம் இருக்கிறது. அது முழுவதும் வெண்மை நிறத்திலானது. அதன்
புல் மரம் எல்லாமே வெண்மையாக இருக்கும். மஸீத் மைதானத்தில் நான் ஆயிரம் தடவை சுற்றி
இருக்கிறேன் இது வரை அதை முழுமையாக பார்த்தத்தில்லை என ஜிப்ரயீல் அலை அவர்கள் கூறினார்கள்.
ஜிப்ரயீல் அலல
அவர்களின் தோற்றமே பிரம்மாண்டமானது . அவர்கள் ஆயிரம் முறை சுற்றியும் அதன் பிரம்மாண்டத்தை
முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை எனில் அது எவ்வளவு மகா பிரம்மாணடமானது என்பதை
உணரலாம்.
அந்த மைதானத்தில்
நபி மார்க்களுக்கு என்று ஒரு ஆசனம் போடப்பட்டிருக்கும். . அதற்கு கீழே அவரது சமூகத்தினர்
அமர்ந்திருப்பார்கள். எல்லோரும் எல்லோரையும் பார்க்க முடியும். அல்லாஹ்வுக்கு என்று
பிரம்மாண்ட மான இருக்கையும் இருக்கும். அல்லாஹ் அதில் அமர மாட்டான். அங்கு சொர்க்க
வாசிகளுக்கு திரைக்கு அப்பால் காட்சி தருவான்.. உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பான்.
எல்லாம் கிடைத்து விடுகிறது என மக்கள் கூறுவார்கள். உங்களது ஆலிம்களிடம் கேளுங்கள்
என்று அல்லாஹ் கூறுவான். மக்கள் தமது ஆலிமிடம் திரும்பி இனி சொர்க்கத்தில் நமக்கு என்ன
வேண்டியிருக்கிறது என்று கேட்பார்கள். அல்லாஹுவுடைய லிகா சந்திப்பு வேண்டும்.என அவர்கள்
கூறுவார்கள். சொர்க்க வாசிகள் அல்லாஹ்விடம் அதை முறையிடுவார்கள். அல்லாஹ் தன்னை சுற்றியுள்ள
திரையை ஒவ்வொன்றாக விலக்குவான், இறுதி மக்கள் அல்லாஹ்வை நேரில் கண்டு பேரானந்தம் அடைவார்கள்.
அதன் பிறகு சொர்க்கத்தில் உங்களுடைய இடங்களுக்குச் செல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுவான்.
சொர்க்க வாசிகள் கலைந்து செல்வார்கள்.
காரி தய்யிப் சாஹிப்
இந்த ச் செய்தியை எழுதி விட்டு கூறுகிறார்.
சொர்க்கத்தில்
உள்ள சிறப்பிற்குரிய இந்தக் கூட்டத்திற்கு நிகராக பூமியில் கூடுகிற கூட்டம் தான் வெள்ளிக்கிழமை
ஜும் ஆ வில் கூடுகிற கூட்டம்.
வாரத்திற்கு ஒரு
தடவை பூமியில் நடைபெறுகிற அல்லாஹ்வின் ஆட்சி மன்றக் கூட்டம் ஜும் ஆ
இதனாலேயே ஜும்
ஆ குத்பாவின் மரியாதை மற்ற குத்பாக்களின் மரியாதையை விட அதி கணம் பெற்றுள்ளது.
இரண்டு ரகாஅத்
தொழுகைக்கு நிகராக கருதப்படுகிறது.
பேசக் கூடாது,
விளையாடக் கூடாது, குர் ஆன் ஓதிக் கொண்டிருக்க கூடாது.,
ஒரு கூட்டமைப்பிற்கு
இடயூறளிக்கிற வேறு எந்த வேலையையும் செய்யக் கூடாது .
عَنْ جَابِرٍ ، عَنِ
النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ:لاَ يُقِيمَنَّ أَحَدُكُمْ أَخَاهُ يَوْمَ
الْجُمُعَةِ ، ثُمَّ لِيُخَالِفْ إِلَى مَقْعَدِهِ فَيَقْعُدُ فِيهِ ، وَلَكِنْ
يَقُولُ : افْسَحُوا.أخرجه أحمد
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ
اللهِ ؛ أَنَّ رَجُلاً دَخَلَ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ ، وَرَسُولُ اللهِ
صلى الله عليه وسلم يَخْطُبُ ، فَجَعَلَ يَتَخَطَّى النَّاسَ، فَقَالَ رَسُولُ
اللهِ صلى الله عليه وسلم : اجْلِسْ ، فَقَدْ آذَيْتَ وَآنَيْتَ.أخرجه ابن ماجة
அமைதியை குலைக்கும்
சிறு முயற்சிக்கும் இடமளிக்க கூடாது.
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ
النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ: إِذَا قَالَ الرَّجُلُ لِصَاحِبِهِ ،
يَوْمَ الْجُمُعَةِ ، وَالإِمَامُ يَخْطُبُ : أَنْصِتْ ، فَقَدْ لَغَا. أخرجه
البُخاري
وعَنْ عُثْمَانَ بْنِ
الأَرْقَمِ ، عَنْ أَبِيهِ ، وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبيِّ صلى الله عليه وسلم
، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ:إِنَّ الَّذِي يَتَخَطَّى رِقَابَ
النَّاسِ يَوْمَ الْجُمُعَةِ ، وَيُفَرِّقُ بَيْنَ الاِثْنَيْنِ بَعْدَ خُرُوجِ
الإِمَامِ ، كَالْجَارِّ قُصْبَهُ فِي النَّارِ.أخرجه أحمد
மக்களும்
இடைவெளி இல்லாதவாறு அமர பழக வேண்டும்.
ஜும் ஆ வின் இருப்பை
மற்ற பொதுக் கூட்டங்களின் இருப்பை
போல கருதக் கூடாது. ஜும்
ஆவிற்கு நாம் ஒரு முக்கியத்துவம்
அளிக்கிறோம் என்பதன் அடையாளம் அது.
தொடர்ந்து முன்
சப்புகளுக்கான முக்கியத்துவத்தை நாம் அலட்சியப் படுத்துகிறோம்.
. عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ
صلى الله عليه وسلم قَالَ:لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ
الأَوَّلِ ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلاَّ أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا
، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ ، وَلَوْ
يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا.أخرجه
البُخاري
எத்தகைய வரலாற்றுச்
சிறப்பு மிக்க மகத்தான காரியங்கள் ஜும் ஆவில் நடை பெற்றிருக்கின்றன என்பதை எண்ணிப்
பார்கக் வேண்டும்.
عَنْ أَبِي
هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: سَيِّدُ الأَيَّامِ
يَوْمُ الْجُمُعَةِ ، فِيهِ خُلِقَ آدَمُ ، وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ ، وَفِيهِ
أُخْرِجَ مِنْهَا ، وَلاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ يَوْمَ الْجُمُعَةِ.أخرجه ابن
خزيمة (1728).
இனி நடை பெற இருக்கின்ற
என்பதையும் எண்ணீப் பார்த்து ஜும் ஆ தினத்திற்கான மரியாதையை நாம் தீர்மாணிக்க வேண்டும்.
உறவுகள் நட்புகள்
சந்திப்பு
இந்த நாளில் மக்கள்
ஒன்று கூடுகிற காரணத்தினால் இதற்கு ஒன்று கூடும் நாள் என்ற அர்தத்தில் ஜும் ஆ என்று
என்று பெயிரிடப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்து அந்த ஒன்று கூடுதலுக்கு முக்கியத்துவம்
தர வேண்டும்.
இந்த நாளில் தொழுகைக்காக
ஒன்றிணைவது போல குடும்பம் உறவுகள் நண்பர்கள் சமூக பணிக்காண உறவுகள் ஒன்று சேர்ந்திருக்கும்
ஒரு ஏற்பாட்டிற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அதன் காரணமாக நமது
முன்னோர்கள் ஜும் ஆ நாளில் வெளியூர் செல்வதை தவிர்த்துக் கொள்வார்கள். ஊர் மக்கள் அனைவரும்
ஜும் ஆ தினத்தில் ஓரிடத்தில் ஒன்றாக சந்திப்பார்கள்.
எனவே ஜும் ஆ தினத்தை
உறவுகளோடும் சமூகத்தோடு ஒன்றிணைவதற்கான ஒரு நாளாக நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில்
அந்த ஒன்றிணைதலில் அல்லாஹ்வை பற்றிய சிந்தனையே மிகைத்திருக்க வேண்டும்
ஜும் ஆ நாளில்
இலடசக்கணக்கான மக்கள் ஓரிடத்த்டில் ஒன்றாக அமர்ந்திருக்கீறார்கள் . ஆனால் மிக அமைதையாக
அமர்ந்திருக்கிறார்கள். ஊசி விழுந்தால் சப்தம் கேட்கும் என்ற அளவிற்கு இல்லை என்றாலும்
கிட்டத்தட்ட அதற்கு நிகராக அமர்ந்திருக்கீறார்கள்.
முக்கியமாக கவனிக்க
வேண்டிய அம்சம் இது.
வெள்ளிக்கிழமைகளில்
திரள்கிற கூட்டம் நேருக்கு நேராக உட்காருவதில்லை. அவ்வாறு உட்கார்ந்தால் சச்சரவுகள்
தோன்றியிருக்கும். எல்லோரின் முகமும் கிப்லாவை நோக்கி இருக்கிறது. அல்லாஹ்வின் சிந்தனையில்
மக்கள் ஒன்றினைவது மிக எதார்த்தமானது என்பதை இது புலப்படுத்துகிறது. மக்கள் ஜும் ஆ
தினத்தில் தமது பெருமைகளை நினைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்தும் வழிகளை யோசிக்காமல்
அல்லாஹ்வை பற்றிய சிந்தனையில் ஒன்று சேர வேண்டும் என்பதை ஜும் ஆவின் கூட்ட அமைப்பு
வலியுறுத்துகிறது.,
இலட்சக்கணக்கான
மக்கள் கஃபாவை தவாபு சுற்றுகிறார்கள். நேருக்கு நேராக நடக்கும் எனில் எவ்வளவு குழுப்பங்கள்
ஏற்படும். அல்லாஹ் நிர்ணயித்த திசையில் தான் சுற்ற வேண்டும் என்ற போது இலட்சக்கணக்கான
மக்கள் என்ப்படி ஒரு வட்டத்திற்கு சிரமமின் றி சுற்றி விடுகிறார்கள்.
மக்கள் அல்லாஹ்வை
பற்றி சிந்தனையோடு பயத்தோடு ஒன்று கூடுவார்கள் எனில் எம்மாப் பெரிய கூட்டத்தில் ஜும்
ஆவை போன்ற அமைதிய அடைய முடியும் என்ற தத்துவத்தை ஜும் ஆ நமக்கு உணர்த்திக் காட்டிக்
கொண்டிருக்கிறது.
வெள்ளிக்கிழமை
ஜும் ஆ தொழுகையின் நேரத்தில் எந்த விதமான சர்ச்சையை எழுப்புவதையும் முஸ்லிம்கள் தவிர்த்துக்
கொள்ள வேண்டும்.
சைத்தான் அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு கிடைத்த அந்தஸ்தில்
அதிகமதிகம் பொறாமை கொண்டு அதை கெடுப்பதற்காக பெரு முயற்சி செய்கிறான். அந்த திட்டத்திற்கு
முஸ்லிம்கள் பலியாகிவிடக் கூடாது.
துஆ
திக்ருகளின் நாள்
ஜும் ஆ தினத்தை
அதிகம் துஆ க்களுக்குரிய நாளாக நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும். வழக்கத்தை விட அதிகமான
துஆக்கள் கேட்க வேண்டும்.
நம்முடைய முன்னோர்கள்
ஜும் ஆவுக்கான வழாயிப்களை வைத்திருந்தார்கள்.
وعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، عَنْ
رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، قَالَ:يَوْمُ الْجُمُعَةِ اثْنَتَا عَشْرَةَ
سَاعَةً ، لاَ يُوجَدُ فِيهَا عَبْدٌ مُسْلِمٌ ، يَسْأَلُ اللهَ شَيْئًا ، إِلاَّ آتَاهُ
إِيَّاهُ ، فَالْتَمِسُوهَا آخِرَ سَاعَةٍ ، بَعْدَ الْعَصْرِ.أخرجه أبو داود
ஜும் ஆவின் பகல் முழுவதையும் இந்த ஹதீஸ் குறிப்பிடுவதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
பெண்கள் இஸ்திஃபார் து ஆ என்ற பெயரில் வெள்ளிக்கிழமைகளில் நீண்ட நேரம் துஆ வில்
அமர்ந்திருந்த பழக்கம் இருந்தது, இப்போது அறவே காணாமல் போய்விட்டது.
தொழுதவுடன் எழுந்து சென்று ரிஜ்கை தேடுங்கள் என்று சொல்லி விட்டு அல்லாஹ் கூறுவதை
கவனியுங்கள்
فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ
وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ
சூரத்துல் கஹ்பு
عن أبي سعيد الخدري أن النبي صلى الله عليه وسلم قال من
قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين .سنن البيهقي
الكبري
நமது
முன்னோர்களின் வழக்கில் ஜும் ஆ நாளின்
சிறப்பான உணவைப் போல கடைபிடிக்கப்படுகிற
பழக்கமாக கஹ்பு ஓதுவது இருந்தது.
அது ஒரு வெளீச்சமாக
அடுத்த ஜும் ஆவரை நம்மை நல்வழிப்படுத்தும்.
கஹ்பு அத்தியாயம்
உலகில் நடை பெறும் மாற்றங்களை தாண்டி தீனின் சத்தியப் பாதையில் நம்மை நிலை நிறுத்தும்
இயல்பை கொண்டிருக்கிறது.
ஜும் ஆ நாளை
அதன் மகத்துவம் அறிந்து நாம் பயன்படுத்திக்
கொள்ள வேண்டும்.
அது தரும் ஒன்றினைவின்
தத்துவங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
ஜும் ஆ நாளில்
பாவங்களை அறவே தவிர்த்துக் கொள்ளுதல் அல்லது
தவிர்த்துக் கொள்ளுதல் அதை கண்ணியப் படுத்தும் ஒரு அம்சமாக அமையும்.
வீண் விவாதங்களில்
சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதை வீடுகளில் நாரசமான வாசங்களை பிரயோகிப்பதை குறைத்துக்
கொள்ள வேண்டும்.
அல்லாஹ் நமக்காக
தேர்ந்தெடுத்த ஒரு நாளை நாம் நம்க்குரியதாக ஆக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமையப்
பற்றிய நமது சிந்தனை மேம்பட வேண்டும். அல்லாஹ் கிருபை செய்வானாக!
No comments:
Post a Comment