வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 08, 2018

மார்க்கம் கண்ட மகத்தான் சட்ட அறிஞர் இமாம் அபூஹனீபா ரஹ்

ஹிஜ்ரீ 150 ம் ஆண்டில் இதே போன்றதொரு ஜமாதில் அவ்வல் மாதத்தில் பிறை 11 ல் இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் வபாத்தானார்கள்.  யார் யாரோ நினைவு கூறப்படுகிறார்கள். இமாம் அபூஹனீபாவின் செல்வாக்கிற்கு பக்கத்தில் கூட இன்று உலகம் கொண்டாடுகிற பலராலும் நிற்க முடியாது,  உண்மையில் இத்தகைய மனிதர்களைப் பெற்றது முஸ்லிம்களின் பாக்கியமே! முஸ்லிம்களுக்குத் தவிர இத்தகைய வாய்ப்பு வேறு எவருக்கும் இல்லை. 
உலகம் கண்ட மகத்தான் பெருமனிதர்களில் இமாம் அபூஹனீபா குறிப்பிடத் தக்கவர். அவரது அறிவாற்றலை ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளாக கனிசமான மக்கள் தமது வாழ்வில் பயன்படுத்தி வருகிறார்கள். அவருடைய பெயருடன் தமது மார்க்க நடைமுறைகளை பிணணத்துக் கொண்டுள்ளார்கள்.
ஹன்பீ பள்ளிவாசல் (ஸ்கூல் ஆப் தாட்ஸ் ) கள் அனைத்தும் இமாம் அபூஹனீபாவுடன் நேரடியாக தொடர்பு கொண்டவை. மற்ற மதஹுக்காரர்கள் அனைவரும் இமாம் அபூஹனீபாவுடன் மறைமுக தொடர்பு கொண்டவர்களே!
இமாம் அபூஹனீபா (ரஹ்) எந்த வகையில் முக்கியமானவர் ?
திருக்குர் ஆனிலும் ஹதீஸ்லும் உள்ள செய்திகளை ஆராய்ந்து சட்டங்களாக பட்டியலிட்டு நமக்கு தந்தவர்கள் இமாம்கள்.
ஒளுவின் சட்டங்கள் இன்னவை. திருமணத்திற்கான விதிகள் இன்னவை என்பதை சட்டமாக பட்டியலிடுகிற அமைப்பில் திருக்குர் ஆனும் ஹதீஸும் இல்லை.அவற்றிலிருந்து ஆய்வு செய்து தெரிந்து கொள்ளும் அமைப்பிலேயே அவை அமைந்திருக்கின்றன. திருக்குர் ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ ۚ


ஒளுவைப் பற்றிய இந்த வசனத்தை ஆராய்ந்து தொழுகையின் சட்ட  விதிகளை தனித்தனையாக பிரித்து விளக்கமளித்த சட்ட அறிஞர்களைத்தான் நாம் இமாம்கள் என்கிறோம்.
தொழுகைக்கு நிற்கும் போதெல்லாம் ஒளு அவசியமா என்ற கேள்வியை எழுப்பி அதை ஆராய்ந்து
وكان النبي صلى الله عليه وسلم يتوضأ عند كل صلاة، فلما كان يوم الفتح توضأ ومسح على خفيه وصلى الصلوات بوضوء واحد، فقال له عمر: يا رسول اللّه إنك فعلت شيئاً لم تكن تفعله، قال: (إني عمداً فعلته يا عمر) رواه مسلم

என்ற ஹதீஸின் அடிப்படையில் ஒளு இல்லாதவர்கள் தொழ நினைத்தால் ஒளு செய்து கொள்ள வேண்டும் என்ற விளக்கத்தை இமாம்கள் வரையறுத்து தந்தார்கள்.

முஸ்லிம் உம்மத்திற்கு இந்த மகத்தான சேவையை சிறப்பாக ஒரு தனிப் பணியாக முன்னெடுத்துச் சென்றவர்கள் பலருண்டு, அவர்களில் மக்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட பெரு மனிதர் இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள்.

இந்த மார்க்கத்திற்கு தமது வீரத்தால் பங்களிப்புச் செய்த மனிதர்கள் பலருண்டு,
செல்வத்தால் பங்களித்தவர்கள் பலருண்டு,
அறிவு நுட்பத்தால் பங்களிப்புச் செய்த பெருமன் இமாம் அபூஹனீபா.

இஸ்லாமிய சட்டக் கலை (பிக்ஹுக் கலைக்கு ஒரு வடிவம் கொடுத்தவர் அவரே !
அதனால் அவரை பிக்ஹு கலையின் தந்தை என்று அழைப்பதுண்டு

 قال فيه الإمام الشافعي: «من أراد أن يتبحَّر في الفقه فهو عيال على أبي حنيفة»  

மார்க்க சட்டங்களை தனியாக ஆய்வு செய்யும் நடைமுறையின் தொடக்கும் துலக்கமும்.

மார்க்க சட்டங்களை ஆய்வாகவும் பாடமாகவும் நடத்து கிற நடைமுறைய அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலி அவர்கள் உமர் ரலியின் காலத்தில் முதன் முறையாக தொடங்கினார்கள். அவரைச் சுற்றி உட்கார்ந்து மக்கள் சட்டம் கற்கத் தொடங்கினர்.

அவரிடமிருந்து நேரடியாக கற்ற பல நூறு பேர்களில் முக்கியமானவர்கள்

برز من تلامذة ابن مسعود عدد من الفقهاء عبيدة بن قيس السلماني، وعلقمة بن قيس النخعي 

அடுத்த தலைமுறையில் சிறந்தவர்கள்
وكان أبرز هذه الطبقة إبراهيم بن يزيد النخعي،

அடுத்த தலைமுறையில்
وعلى يد إبراهيم النخعي تتلمذ حمّاد بن سليمان،

 حمّاد بن سليمان அன்றைய இஸ்லாமிய அரசின் தலை நகராக இருந்த கூபா வில் பெரும் அங்கீகாரம் பெற்றிருந்தார்.  அவருக்கு கூபா வில் பெரும் மாணவப் பட்டாளம் இருந்தது. அவர்களில் ஒருவர் தான் இமாம் அபூஹனீபா

இந்த மாணவர் தனது அறிவுத்தினால் பிக்ஹு எனும் சட்ட ஆய்வுத் துறையில் அளப் பெரும் சாதனைகளை நிகழ்த்தினார்.

அந்தச் சாதனைகளால் பிக்ஹு துறையில் முன்னவர்கள் பலர் இருந்தாலும் இமாம் அபூஹனீபாவை கொண்டே பிக்ஹு துறை அடையாளம் காணப் படலாயிற்று.

இமாம் அபூஹனீபா வை பொறுத்தவரை அவரது அறிவுத்திறனும் பேணுதலான வாழ்வும் வரலாற்றில் மிக முக்கியமாக கவனிக்கப் படுகிற அம்சங்களாகும்.

பிறப்பும் வளர்ப்பும்
அவருடைய் இயற் பெயர் نعمان بن ثابت

ولد الإمام أبو حنيفة بالكوفة سنة 80 من الهجرة النبوية، الموافقة لسنة 699 من الميلاد، على رواية يجمع عليها المؤرخون.
وقد كانت الكوفة إحدى مدن العراق العظيمة، ينتشر فيها العلماء
وقد نشأ أبو حنيفة في هذه البيئة الغنية بالعلم والعلماء
أنه من أصل فارسي 
ولم تُبين المصادر حياة أبيه وحاله وما كان يتولاه من الأعمال، ولكن قد يُستنبط منها شيء من أحواله، فقد يستفاد منها أنه كان من أهل اليسار والغنى، وأنه كان من التجار
روي أن علياً بن أبي طالب دعا لثابت عندما رآه بالبركة فيه

வியாபார்த்திலேயே கவனமாக இருந்தவரை அறிவுத்துறையை நோக்கிய முஹத்திஸ் சுஅபீ.  
பொருளாதாரத்தில் திழைத்த்திருந்தவரை அருளாதாரத்தை நோக்கித் திருப்பிய பெருந்தகை

 ويروى عن أبي حنيفة أنه قال: مررت يوماً على الشعبي وهو جالس فدعاني، فقال لي: «إلى من تختلف؟»، فقلت: «أختلف إلى السوق»، فقال: «لم أعن الاختلاف إلى السوق، عنيت الاختلاف إلى العلماء»، فقلت له: «أنا قليل الاختلاف إليهم»، فقال لي: «لا تغفل، وعليك بالنظر في العلم ومجالسة العلماء، فإني أرى فيك يقظة وحركة»، قال: «فوقع في قلبي من قوله، فتركت الاختلاف إلى السوق، وأخذت في العلم، فنفعني الله بقوله»

فقد حفظ القرآن على قراءة عاصم، وعرف قدراً من الحديث

தப்ஸீ ஹதீஸ் அரபு இலக்கணம் இலக்கியம் ஆகியவற்றை கற்ற பிறகு சட்டக் கலையை நோக்கி கவனம் செலுத்தினார்.

لزم أبو حنيفة حماد بن أبي سليمان، وتخرج عليه في الفقه، واستقر معه إلى أن مات، وإن حماداً قد مات في سنة 120هـ، فكأنه مات وأبو حنيفة في الأربعين من عمره، 

ஹம்மாது வெளியூருக்கு சென்ற ஒரு சமயம் அவருடை இடத்தில் இமாம் அபூஹனீபாவை அமர வைத்தார், புத்தி புதிதாக வந்த மஸாயில்களில் 60ல் 40 க்கு இமாம் ஹம்மாது ஒப்புதல் அளித்தார்.

فأمرني أن أجلس مكانه، فما هو إلا أن خرج حتى وردت علي مسائل لم أسمعها منه، فكنت أجيب وأكتب جوابي، ثم قدم فعرضت عليه المسائل، وكانت نحواً من ستين مسألة، فوافقني في أربعين وخالفني في عشرين، فآليت على نفسي ألا أفارقه حتى يموت، فلم أفارقه حتى مات»

இன்னொரு செய்தியும் உண்டு. இமாம் அபூஹனீபா நிறைய சட்டம் படித்த காரணத்தால் எல்லா கெள்விகளுக்கும் பதிலளிக்க முடியும் என்று நினைத்தா. அவர் பஸராவுக்கு சென்ற சமயத்தில் பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் போனது எனவே தொடர்ந்து ஹம்மாதிடம் 18 ஆண்டுகள் மாணவராகவே இருந்தார்.

மற்ற அறிஞர்களுடனும் தொடர்பு

وكان مع ملازمته لشيخه حماد قد لاقى غيره من الفقهاء والمحدثين، وكان يتتبع التابعين أينما كانوا وحيثما ثقفوا

ஹிஜ்ரீ 120 ல் ஹம்மாதின் மரணத்திற்குப் பிறகு அவருடைய இடத்திற்கு இமாம் அபூஹனீபா தகுதி பெற்றார்.

அதன் பிறகு இஸ்லாமிய சட்டத்துறை இமாம் அபூஹனீபாவின் அறிவு நுட்பத்தால் வேகமெடுத்தது

ஒரு பிரச்சனைக்கு குர் ஆன் ,ஹதீஸ்,இஜ்மா ,இவற்றில் ஆய்வு செய்யும் கியாஸ் இவை எதிலும் விடை கிடைக்காத பட்சத்தில் அல்லது கியாஸீன் முடிவு வெறுக்கத் தக்கதாக இருக்கும் வேறு பட்சத்தில் வேறு ஆதாரத்தின் அடிப்படையில் வெளிப்படையான் கியாஸுக்கு மாற்றமாக முடிவெடுக்கிற இஸ்திஹ்ஸான் எனும் நடை முறை அதே போல சட்டங்களூக்கு முடிவு காண்கிற போது மக்களின் வழக்கில் உள்ள அம்சங்களுக்கு (உர்பு) முக்கியத்துவம் அளிப்பது ஆகிய அடிப்படைகளை அமைத்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு முடிவுகளை சொன்னார் இமாம் அபூஹனீபா (ரஹ்)

முஹத்திஸ்களின் (ஹதீஸ் கலை அறிஞர்களின்  பார்வையிலிருந்து இமாம் அபூஹனீபாவின் பார்வை வேறுபட்டிருந்தது. அதை அன்றைய உலகம் மிக அதிசயமாக பார்த்தது.

ஒரு உதாரணம்

இமாம் அவ்ஸாஈக்கும் இமாம் அபூஹனீபாவுக்கு இடையே நடைபெற்ற விவாதம பிரபலமானது

قال سفيان بن عيينة: اجتمع أبو حنيفة والأوزاعي في دار الحنّاطين بمكة، فقال الأوزاعي: ما لكم لا ترفعون عند الركوع والرفع منه؟ فقال: لأجل أنه لم يصح عن رسول الله - صلى الله عليه وسلم - ، فقال: الأوزاعي: كيف لم يصح وقد حدثني الزهري، عن سالم، عن أبيه، ابن عمر أن رسول الله - صلى الله عليه وسلم - كان يرفع يديه إذا افتتح الصلاة، وعند الركوع، وعند الرفع منه. فقال أبو حنيفة: حدثنا حماد، عن إبراهيم، عن علقمة والأسود، عن عبد الله بن مسعود: أن النبي - صلى الله عليه وسلم - كان لا يرفع يديه إلا عند الافتتاح ثم لا يعود. فقال الأوزاعي: أحدثك عن الزهري، عن سالم، عن أبيه، وتقول: حدثني حماد عن إبراهيم؟! فقال أبو حنيفة: كان حماد أفقه من الزهري، وكان إبراهيم أفقه من سالم، وعلقمة ليس بدون ابن عمر أي في الفقه، وإن كان لابن عمر صحبة، وله فضل صحبته، وللأسود فضل كثير، وعبد الله عبد الله

நாம் புரிந்து கொள்ள வேண்டியது. ஒரு ஹதீஸ் ஸஹீஸ் என்பதால் அதன் படி செயல் பட வேண்டும் என்பது அர்த்தமல்ல, அறிஞர்களின் ஆய்வுக்கு அதற்கு மேலும் இடமிருக்கிறது.

இன்று பலரிமும் ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கிறது, மத்ஹபு இமாம்களின் கருத்து ஹதீஸுக்கு முரண்படுமானால் ஹதீஸை எடுத்துக் கொள்ள வேண்டும் இமாம்களின் கருத்தை விட்டு விட வேண்டும்.

சில தறுதலைகள இமாம்கள் தூய எண்ணத்தில் சொன்ன வார்த்தைகளையே தமது தவறான சிந்தனைகளுக்கு ஆதாரமாக பயனபடுத்திக் கொள்கிறார்கள்

இமாம் ஷாபி சொன்னார் ஸஹீஹான் ஹதிஸ்தான் எனது மத்ஹபு என்று என்பதையே சிலர் உரத்துப் பேசுகிறார்கள்
இமாம் நவவி அதற்கு விளக்கமளிக்கிறார்.

وهذا الذي قاله الشافعي ليس معناه أن كل واحد رأى حديثا صحيحا قال : هذا مذهب الشافعي وعمل بظاهره ، وإنما هذا فيمن له رتبة الاجتهاد في المذهب على ما تقدم من صفته أو قريب منه ، وشرطه : أن يغلب على ظنه أن الشافعي - رحمه الله - لم يقف على هذا الحديث أو لم يعلم صحته ، وهذا إنما يكون بعد مطالعة كتب الشافعي كلها ونحوها من كتب أصحابه الآخذين عنه وما أشبهها

كأبي الوليد ( 1موسى بن أبي الجارود ممن صحب الشافعي ، قال : صح حديثأفطر الحاجم والمحجوم } ، فأقول : قال الشافعيأفطر الحاجم والمحجوم ، فردا ذلك على أبي الوليد ; لأن الشافعي تركه مع علمه بصحته ، لكونه منسوخا عنده ، وبين الشافعي نسخه واستدل عليه 

இமாம் அபூஹனீபாவின் சிறப்பு எதிர்கால நலனை கருத்தில் தற்போதுள்ள பிரச்சனைகளுக்கு மட்டும் இன்றி எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளுக்கு இஸ்லாமிய மூலங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து சட்டம் சொன்னார்.

ولم يقف اجتهاد أبي حنيفة عند المسائل التي تعرض عليه أو التي تحدث فقط، بل كان يفترض المسائل التي لم تقع ويقلّبها على جميع وجوهها ثم يستنبط لها أحكاما، وهو ما يسمى بالفقه التقديري وفرص المسائل، وهذا النوع من الفقه يقال إن أبا حنيفة هو أول من استحدثه، وقد أكثر منه لإكثاره استعمال القياس، روي أنه وضع ستين ألف مسألة من هذا النوع.

சட்டம் சொல்லுகையில் இமாம்கள் கடை பிடித்த போனுதல் அளவிற்கறியது. இது அல்லாஹ்வின் மார்க்கம் என்பதில் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள்

وكان مالك يقول: «من سُئل عن مسألة، فينبغي له قبل ان يجيب فيها ان يعرض نفسه على الجنة والنار، وكيف يكون خلاصه في الاخرة، ثم يجيب فيها»؟

قال يحيى القطان: (جالسنا والله أبا حنيفة وسمعنا منه وكنت والله إذا نظرت إليه عرفت في وجهه أنه يتقي الله عز وجل

இமாம் அபூஹனீபாவின் மாணவர் இமாம் அபூயூசுப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ووصف أخلاقه أبو يوسف رحمه الله للخليفة هارون الرشيد فقال: (إن الله تعالى يقول: ((مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلاَّ لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ)) [ق:18]، وهو عند لسان كل قائل. كان علمي بأبي حنيفة أنه كان شديد الذب عن محارم الله أن تُؤتى، شديد الورع أن ينطق في دين الله بما لا يعلم، يحب أن يُطاع الله ولا يُعصى، مجانبًا لأهل الدنيا في زمانهم، لا ينافس في عزها، طويل الصمت، دائم الفكر، على علم واسع، لم يكن مهذارًا ولا ثرثارًا، إن سئل عن مسألة كان عنده فيها علم، نطق به وأجاب فيها بما سمع، وإن كان غير ذلك قاس على الحق واتبعه، صائنًا نفسه ودينه، بذولًا للعلم والمال، مستغنيًا بنفسه عن جميع الناس، لا يميل إلى طمع، بعيدًا عن الغيبة، لا يذكر أحدًا إلا بخير. فقال له الرشيد: هذه أخلاق الصالحين، ثم قال للكاتب: اكتب هذه الصفة وادفعها إلى ابني ينظر فيها
 இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களின் அறிவாற்றலால் இன்று மார்க்க சட்டங்களை தனித்தனி விதிகளின் கீழ் பர்ளு வாஜிப் சுன்னத் முஸ்தஹப்பு மக்ரூஹ் ஹராம் என சட்ட ரீதியாக பிரித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு உம்மத்திற்கு கிடைத்திருக்கிறது.

அவர் காட்டிய வழி உன்னதமானது என்பதாலேயே உலகில் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் ஹன்பீ எனும் சட்டப் போக்கை தமது வாழ்வியலில் இஸ்லாமை கடை பிடிக்க பயன்படுத்து கிறார்கள்.

இமாம் அபூஹனீபாவின் பேணுதல் வரலாற்றுச் சிறப்பு மிக்கது

ويُروى أنه قد جاءته امرأة بثوب من الحرير تبيعه له، فقال: «كم ثمنه؟»، فقالت: «مئة»، فقال: «هو خير من مئة، بكم تقولين؟»، فزادت مئة مئة حتى قالت: «أربعمئة»، قال: «هو خير من ذلك»، قالت: «تهزأ بي»، قال: «هاتي رجلاً يقومه»، فجاءت برجل، فاشتراه بخمسمئة

பாவத்தின் நிழல் கூட தம்மீது விழக்கூடாது என பயந்தவர்

ويُروى أنه بعث شريكه حفص بن عبد الرحمن بمتاع، وأعلمه أن في ثوب منه عيباً، وأوجب عليه أن يبين العيب عند بيعه، فباع حفص المتاع ونسي أن يبين، ولم يعلم من الذي اشتراه، فلما علم أبو حنيفة تصدق بثمن المتاع كله.

எதிலும் சுன்னத்தை கடை பிடிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்
فهذا رجل يهدي إليه منديلاً قيمته 3 دراهم، فيهديه أبو حنيفة قطعة حرير قيمتها 50 درهماً،
فيقول الرجل: لو علمتُ أنك تفعل ذلك ما أهديت إليك، فيرد أبو حنيفة: لا تقل هذا فإن الفضل للسابق .والرسول - صلى الله عليه وسلم - يقول:"من صنع إليكم معروفاً فكافئوه، فإن لم تجدوا ما تكافئونه به فأثنوا عليه

இறுதி காலத்தில் ஆட்சியாளர்கள் அவரை நீதிபதியாக இருக்க கோரினார்கள். இமாம அதை மறுத்தார் .  அப்பாஸிய மன்னர் அபூமன்ஸூரும் இமாம் அபூஹனீபாவும்

وعندما دعا أبو جعفر المنصور أبا حنيفة ليتولى القضاء امتنع، فطلب منه أن يَرجع إليه القضاة فيما يشكل عليهم ليفتيهم فامتنع، فأنزل به العذاب بالضرب والحبس، أو الحبس وحده على اختلاف الروايات،

இறுதியில் விசம் ஊட்டப் பட்டு மரணமடைந்தார்கள் .
சிறையில் அடைக்கப் பட்டதையும் அவர் அடிக்கப் பட்டார் என்பதையும் உறுதிப் படுத்துகிற வரலாறு அவருக்கு விஷம் ஊட்ட ப்பட்டது என்பதையும் ஒரு கருத்தாக சொல்கிறது.

وقد اتفق الرواة على أنه حُبس، وأنه لم يجلس للإفتاء والتدريس بعد ذلك، إذ إنه مات بعد هذه المحنة أو معها، ولكن اختلفت الرواية: أمات محبوساً بعد الضرب الذي تكاد الروايات تتفق عليه أيضاً؟ أم مات محبوساً بالسم فلم يُكتف بضربه بل سقي السم ليعجل موته

توفي أبو حنيفة لإحدى عشرة ليلةً خلت من جمادى الأولى سنة 150هـ،

وكانت وفاته في بغداد، ودفن في مقبرة الخيزران، وقبره هناك مشهور يُزار، وصحَّ أن الإمام لما أحس بالموت سجد، فمات وهو ساجد

புதைக்கப்படுகிற நிலத்திலும் சட்டம் பார்த்த பெருந்தகை
மன்னர் அபகரித்த நிலத்தில் அடக்கம் செய்யக் கூடாது.

وقد أوصى أبو حنيفة أن يُدفن في أرض[؟طيبة لم يجر عليها غصب، وألا يدفن في أرض قد اتُّهم الأميرُ بأنه غصبها

50 பேர் திரண்ட ஜனாஸா தொழுகை

ولقد قُدِّر عدد من صلوا عليه بخمسين ألفاً

தனது இறையச்சம் பேணுதல் அறிவு நுட்பத்தின் மூலமாகமாக உலகில் உண்மையக கொண்டாடப்படுகிற மகத்தான மனிதர்களில் ஒருவராக இமாம் அபூஹனீபா திக்ழழ்கிறார்கள் ,
அவரால் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் இன்றும் பயன் பெற்று கொண்டிருக்கிறார்கள்
கியாமத் நாள் வரை பெருவார்கள்
இத்தகைய பெருமக்களை வழிகாட்டிகளா எடுத்துக் கொண்டு வாழ்வதற்குரிய தவ்பீக்கை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள் வானாக!


2 comments:

  1. அருமையான மக்களுக்கு பயனுள்ள கட்டுரை இதை அனைஅனைவரும் படித்து வரும் கால சமுதாய இளைஞர் களுக்கு எடுத்து சொல்வோம் நன்றி இமாம்களின் சிறப்பானபனி

    ReplyDelete
  2. Anonymous11:59 AM

    அருமையான கட்டுரை

    அனைவரும் இதை முக நூல் வாட்ஸ்அப் மூலம் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வோம் ஆமின்
    அக்பர் சார்ஜா

    22/12/2023

    ReplyDelete