அன்றாடம் மரணங்கள் நிகழ்கின்றன.
நெருநல் உளனொருவன் இன்றில்லை
எனும் பெருமை உடைத்திவ்வுலகு என்பான் வள்ளுவன்
.
உலகத்தின் பெருமையே அன்றாடம் நிகழும் மரணங்கள் தான்.
அவற்றில் அதிகமானவை எதார்த்தமானவை.
சில மிக பரிதாப கரமானவை.
தேனி மாவட்டம் குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில், அப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மலையேற்றத்தில் ஈடுப்பட்டிருந்த சென்னை, கோவை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த 39 பேர் சிக்கிக் கொண்டனர்.
இவர்களில் 8 பேர் தீயில் கருகி இறந்த நிலையில், எஞ்சியவர்களை மீட்ட மீட்புக்குழுவினர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். இந்நிலையில், அவர்களில் 90 விழுக்காடு தீக்காயங்களுடன் கவலைக்கிடமாக இருந்தவர்களில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.இதனையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்திருக்கிறது.
இத்தகைய கோர நிகழ்வுகளில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
திடுக்கிடும் செய்திகளை கேட்கிற போது இன்னாலில்லாஹி என்று சொல்ல மார்க்கம் கற்றுக் கொடுத்தது.
அவர் அல்லாஹ்விடமிருந்து வந்தார்.
அல்லாஹ்விடம் சென்று விட்டார் என்று சொல்லாமல் நாம் அல்லாஹ்விடமிருந்து வந்தோம்
.அவனிடமே திரும்பி செல்லவேண்டியவர்களாவோம் என்று சொல்வது ஒவ்வொரு அதிர்ச்சிகரமான செய்தியையும் நமது வாழ்வோடு இணைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டிய சிந்தனையை
– பக்குவத்தை தருகிறது.
அவரைப் போலவே நமக்கும் ஒரு நாள் இருக்கிறது என்ற எச்சரிக்கையை அது ஏற்படுத்த வேண்டும்.
அல்லாஹ் தீய ஆபத்துக்களில் இருந்தும் தீய திடீர் மரணங்களில் இருந்தும் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் பாதுகாப்பானாக!
திடீர் மரணங்கள் நமது உள்ளத்தை தாக்குகின்ற அளவு இயல்பான மரணங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
கடந்த புதன் கிழமை ஸ்டீவன் ஹாக்கிங் என்ற விஞ்ஞானி தன்னுடைய
72 வயதில் மரணமடைந்தார்.
20,
21 நூற்றாண்டுகளில் வாழ்ந்த மிகவும் புகழ் பெற்ற விஞ்ஞானி அவர்.,
ஐசக் நியூட்டனுக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றப்
படுகிறவர்.
ஒரு
வீல்சேரில் தலை தொங்கிக் கிடக்க மடங்கி உட்கார்ந்த நிலையில் கடந்த்
25 ஆண்டுகளாக அவருடைய தோற்றம் உலக அளவில் மிகவும் பிரபலமானது.
அந்த நிலையிலே மகத்தான அறிவியல் உண்மைகளை அவர் உலகுக்கு தந்தார்.
ஒரு இயற்கையான மரணம் தான் என்றாலும் அவரது மரணத்தை மனித வரலாறு சாமாணியமாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஒரு இயற்பியல் அறிவியல் அறிஞராக,
மட்டுமல்லாமல் மனிதகுலத்திற்கு அலாதியான பல செய்திகளை தரக்கூடியது அவரது வாழ்க்கை.
நாம் வாழும் காலத்தில் வரலாறு சந்தித்த சாதனை மனிதர் அவர்.
1942 ஜனவரி
8 ம் தேதி அவர் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்ட் நகரில் பிறந்தார். சாதாராணமாகவே கல்வி கற்றார்; அதில் பெரிதாக
அக்கறை எதுவும் செலுத்திக் கொள்ளவில்லை. அவருடைய ஆசிரியவர் உன்னுடைய திறமைக்கு நீ இன்னும்
சிறப்பாக படிக்கலாம் என்று கூறுவார்கள். ஹாகிங் அதை பொருட்படுத்திக் கொண்டதில்லை.
ஹாகிங்கின்
பெற்றோர் இருவரும் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடியில் வேலை பார்த்தனர். அவருடை தந்தை அவர்
மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பினார், ஹாகிங் அவருடைய் ஆசிரியரின் ஆலோசனைப்படி
பிஸீக்ஸ் கெமிஸ்ட்ரி படித்து பட்டம் பெற்றார்/
21 வயதில் அவருடை
திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்த நிலையில் , ஆக்ஸ்போர்டில் கல்வி கற்றுக் கொண்டிருந்த
இறுதி ஆண்டில் ஹாகிங்க் ஒரு வித மயக்கத்திற்கு ஆளானார், படிக்கட்டுகளில் தவறி விழுந்தார்.
அவருடை பேச்சு திணறியது. ஒரு கிருஸ்துமஸ் விடுமுறைக்காக அவர் வீட்டுக்கு வந்த போது
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப் பட்டது. அப்போது தான் அந்த அதிர்சிகரமான தகவல்
கிடைத்தது. ஹாகிங்கிங்கு உடலியக்கத்தை கட்டுப் படுத்தக் கூடிய நரம்புகளில் சிதைவு ஏற்பட்டுள்ளதாக
கண்டறியப் பட்டது. திடீரென உடலில் வாதம் ஏற்பட்டு
இடுப்புக்கு கீழ் செயல் பட முடியாதவராக ஆனார். கை கால்கள் செயல் இழந்தன. பேச்சும் தடை
பட்டது. அப்போது மருத்துவர்கள் ஹாகிங்கிற்கு நாள் குறித்தனர். இன்னும் இரண்டு வருடடங்களே
அவர் உயிர் வாழ முடியும் என்று கூறினர். இது நடந்தது 1963 ல் .
அதன் பிறகு
ஹாகிங்கின் வாழ்கை ஒவ்வொரு நொடியிலும் போராட்ட வாழ்வானது.
ஹாகிங்க் எதையும்
விட்டுத்தர வில்லை. அவருடைய மன உறுதியும் தன்னம்பிக்கையும் எல்லா சோதனைகளையும் தாண்டி
அவரை வெற்றி பெற வைத்தது.
உடல் நலக் குறைவு
ஏற்படுவதற்கு முன் அவர் தொடர்பு கொண்டிருந்த ஜான் வைடுடன் 1964 ல் அவருக்கு நிச்சயதார்த்தம்
நடந்தது. 1965 ல் அவரை அவர் திருமணம் செய்து கொண்டார். மனைவி ஜான்
வைடும் நண்பர்களும் ஹாகிங்கிற்கு துணையாக இருந்தனர்.
துணையாக இருந்தது
எதற்கு என்றால் ஹாகிங்கின் பிடிவாதமான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு
ஹாகிங் யாருடைய
உதவியையும் விரும்புகிறவராக இருக்க வில்லை. வீல் சேரைக்கூட வெகு தயக்கத்துடனேயே ஏற்றுக்
கொண்டார். அதற்குப் பிறகு இயந்திர வீல் சேரை வெகு இலாவகமாகவும் வேகமாகவும் இயக்க பழகிக்
கொண்டார். அப்போது ஆக்ஸ்போர்ட் பல் கலை கழகத்தில் வீல் சேர்கள் ஏறுவதறகான சருக்குப்
பாதை இருக்க வில்லை. அதற்காக யார் செலவழிப்பது என்ற பிரச்சனை எழுந்தது. இவ்வாறு எழுந்த
ஒவ்வொரு பிரச்சனையையும் தனக்காக மட்டுமல்லாது இனி உடல் நலம் குன்றியவர்களாக கல்வி கற்க
வருகிற அனைவருக்காகவும் போராடி வென்றார் ஹாகிங்க்
கல்லூரிப் படிப்பு
முடுந்த பிறகு ஆராய்ச்சிக்காக பலமுறை அமெரிக்கா சென்றார்.
ஹாகிங்க் தான்
சிந்திப்பதை திரையில் வெளிப்படுத்துமாறு ஒரு கம்ப் யூட்டரை உருவாக்கிக் கொண்டார். அந்த
திரையில் வெளிப்படும் வார்த்தைகள் குரல் வடிவம் பெற்று வெளியே ஒலிக்குமாறு கிடைத்த
வாய்ப்பை பயன்படுத்தி உரைகள் நிகழ்த்தினார். இயற்பியலில் தனது ஆய்வு முடிவுகளை சொன்னார்.
பிளாக் ஹோல் கருப்பு வட்டம் என்ற அவருடைய் ஆய்வு மிகவும் பிரபலமானது.
உலக நாடுகள்
பலவற்றிற்கு சென்று ஹாகிங்க் தனது ஆய்வு முடிவுகளை தானே பேசி விளக்கினார் .அத்தனையும்
கம்யூட்டரின் துணையோடு. பேச முடியாத எழுத முடியாத நிலையில்,
இது வெல்லாம்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
1979 முதல் 2009 வரை கேம்பிரிச்சுப்
பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
1986-ல் அமெரிக்காவில்
உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் எளிய நடையில்
புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு
காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய
‘காலம் ஒரு வரலாற்றுச்
சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை
உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார்.
அவ்ருடை அந்த படதிட்டம் a brief History of Time என்ற நூலாக வெளிவந்தது. இப்போதும் அந்த நூல் சர்வதேச
அளவில் காலத்தைப் பற்றிய மிக எளிமையான விளக்கங்களை கொண்டதாக அறிவியலாளர்களுக்கும் அதே
சமயத்தில் சாமாணியர்களுக்கும் புரியும் வண்னம் அமைந்த நூலாக கருதப் படுகிறது.,
தற்காலத்தில் இஸ்லாமிய சொற்பொழிவாளர்கள் நபி (ஸல்)
அவர்களின் மிஃராஜ் பயணத்தைப் பற்றி நேரத்தை விளக்குகையில் ஸ்டீபன் ஹாகிங்கின் கண்டுபிடிப்பை
மேற்கோள் காட்டுவது பிரபலமாக இருக்கிறது.
இப்போது எந்த வேகத்தில் காலம் கடந்து செல்கிறதோ அது
பூமிக்கு மட்டும் தான், பூமிக்கு மேல் காலத்திற்கு இந்த அளவு வேகம் இல்லை. அது மிகவும்
ஸ்லோவானது. எனவே ஒரு மனிதர் வான் வெளிக்குச் செல்கிற போது பூமியில் கடந்து போகிற நேரத்திற்குள்
அவர் அதிகமான வேலையை வான் வெளியில் செய்து விட முடியும்.
இரவின் கொஞ்ச நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் வின்
வெளிப்பயணம் ஏராளமான அற்புதங்களை கொண்டதாக அமைந்தது என்பதை இவ்வாறு விளக்குவது அறிஞர்களின்
வழக்கம்.
ஸ்டீவ் ஹாகிங்கின் காலத்தை ப் பற்றிய கண்டுபிடிப்பு
இதற்கு உதவுகிறது.
இது மட்டுமல்லாது. ஆகாய வெளியிலுள்ள பல புதிய அதிசயங்களையும்
ஹாகிங்க் கண்டறிந்து சொன்னார். புவியீர்ப்பு விசை சார்ந்த பல புதிய உண்மைகளை வெளிப்படுத்தினார்.
ஆகாய வெளியில் கருங்குழிகள் என்ற பிளாக் ஹோல்கள் இருப்பதையும் அவை தன்னை நெருங்கி வரும்
ஒளியைக் கூட ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தவை என்பதையும் விளக்க்கினார். அவை தன்னை
நெருங்கி வரும் நட்சத்திரக் கூட்டத்தை தன்னை நோக்கி ஈர்த்துக் கொள்வதை பூமியிலிருந்து
பார்க்க முடியும் என்பதை எல்லாம் ஹாகிங்க் விளக்கினார்.
இந்தச் செய்திகள் இப்போது அறிவியலாளர்களிடையே பெரும்
தாக்கத்தை செலுத்தி வருகிறது.
ஹாகிங்க்
மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார்.
எல்லாம்
முடிந்து விட்டதாக கருதப்படுகிற இடத்திலிருந்து ஸ்டீவ் ஹாக்கிங்க் தனது
திறமையை வெளிக் கொண்டுவர ஆரம்பித்தார்.
மிக
மரியாதைக்குரிய மனிதராக ஹாகிங்க் கடந்த புதன் கிழமை மரணமடைந்தார். அவருடை மரணத்திற்கு உலகத்தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
அதற்கு காரணம் அவர் ஒரு விஞ்ஞானி என்பது மட்டுமல்ல.
இரண்டு வருடத்தில் இறந்து விடுவார் என்ற நிலையில் தனது பலவீனம் எதையும் பெரிதாக எடுத்துக்
கொள்ளாமல் மகத்தான சாதனைகளை அவர் ஆற்றியது.
ஹாகிங்க் முதலில் தன்னை ஒரு விஞ்ஞானியாக பிறகு விஞ்ஞானத்தைப்
பற்றி எழுதுபவராக உணர்ந்தார். அதற்குப் பிறகே சாமாணிய மனித உணர்வுகளுக்கு அவர் முக்கியத்துவம்
அளித்தார். அதனால் அவருடைய பலவீனம் எதுவும் அவருக்கு பெரிதாகவே பட வில்லை.
மனித வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான பாடமாகும்.
மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சக்தி அபரிமிதமானது.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي
الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ
كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا (70
மதிப்புடையதாக்கி இருக்கிறோம் என்பதற்கு குறைகளற்றவனாக்கி இருக்கிறோம் என்று முபஸ்ஸிர்கள் பொருள் சொல்கிறார்கள்.
وهذا هو كرم نفي النقصان
மனிதன் எவ்வாறு மதிப்புடையவனாகிறான்
என்பதற்கு முபஸ்ஸிர்கல் பல விளக்கங்களையும் கூறுகிறார்கள்.
وهذه الكرامة يدخل فيها خلقهم على هذه الهيئة في
امتداد القامة وحسن الصورة
لأنهم يكسبون المال خاصة دون الحيوان ، ويلبسون
الثياب ويأكلون المركبات من الأطعمة
وقال الضحاك : كرمهم بالنطق والتمييز
وقيل أكرم الرجال باللحى والنساء بالذوائب
قيل : بالكلام والخط
وقال محمد بن جرير الطبري : بتسليطهم على سائر
الخلق ، وتسخير سائر الخلق لهم
ஆனால் சரியான கருத்து
والصحيح الذي يعول عليه أن التفضيل إنما كان
بالعقل
உடல் எல்லா நிலையிலும் கை விட்டு விட்ட்டாலும் மனிதன்
தனது அறிவாற்றலால் பயனுள்ள வாழ்க்கை வாழ் முடியும்.
இஸ்லாமிய வரலாற்றில் இத்தகை பல உதாரணங்கள் உண்டு.
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரலி அவர்கள் கண் பார்வையை
இழந்தவர்., மிக ஆரம்ப காலத்தில் இஸ்லாமை தழுவியவர்
.
பார்வை இல்லாவிட்டாலும் அவரிடம் நினைவுத் திறன் அதிகமாக
இருந்தது. அதனால் திருக்குர் ஆனிய வசனங்களை கேட்டதும் மனனம் செய்து கொள்வார். பெருமானாரைச்
சந்திக்கிற போதெல்லாம் புத்தாக வசனம் ஏத்து அருளப்பட்டுள்ளதா என்று கேட்டு மனனம் செய்து
கொள்வார்.
அந்த ஆர்வத்தில் தான் ஒரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள்
மக்காவின் தலைவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த போது அண்ணலாரை அணுகி
ஏதாவது புதிய வசனங்கள் உண்டா என்று பேசத் தலைப்பட்டார். அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள்
முகத்தை திருப்பிக் கொண்டார்கள்.
கண் தெரியாதவருக்கு அது தெரியப் போவதில்லை என்றாலும்
அல்லாஹ் அதை குறிப்பிட்டு ஒரு அத்தியாயத்தை அருளினான்.
وَوَقْفُ الْوَلِيدِ بْنِ الْمُغِيرَةِ مَعَ
رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ وَرَسُولُ اللّهِ صَلّى اللّهُ
عَلَيْهِ وَسَلّمَ يُكَلّمُهُ وَقَدْ طَمِعَ فِي إسْلَامِهِ فَبَيْنَا هُوَ فِي
ذَلِكَ إذْ مَرّ بِهِ ابْنُ أُمّ مَكْتُومٍ الْأَعْمَى، فَكَلّمَ رَسُولَ اللّهِ
صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ وَجَعَلَ يَسْتَقْرِئُهُ الْقُرْآنَ فَشَق ذَلِكَ
مِنْهُ عَلَى رَسُولِ اللّهِ - صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ - حَتّى أَضْجَرَهُ
وَذَلِكَ أَنّهُ شَغَلَهُ عَمّا كَانَ فِيهِ مِنْ أَمْرِ الْوَلِيدِ وَمَا طَمِعَ
فِيهِ مِنْ إسْلَامِهِ فَلَمّا أَكْثَرَ عَلَيْهِ انْصَرَفَ عَنْهُ عَابِسًا،
وَتَرَكَهُ فَأَنْزَلَ اللّهُ تَعَالَى فِيهِ عَبَسَ وَتَوَلّى أَنْ جَاءَهُ
الْأَعْمَى إلَى قَوْلِهِ تَعَالَى: فِي صُحُفٍ مُكَرّمَةٍ مَرْفُوعَةٍ مُطَهّرَةٍ
أَيْ إنّمَا بَعَثْتُك بَشِيرًا وَنَذِيرًا، لَمْ أَخُصّ بِك أَحَدًا دُونَ
أَحَدٍ، فَلَا تَمْنَعْهُ مِمّنْ ابْتَغَاهُ وَلَا تَتَصَدّيَنّ بِهِ لِمَنْ لَا
يُرِيدُهُ.
அப்துல்லாஹ்வின் நன்மையை தேடிக் கொள்ளும் ஆசைக்கு
கிடைத்த பரிசு திருக்குர் ஆனின் கைரு உலில் ழரர் என்ற வார்த்தை
عبد الرحمن بن أبي الزناد عن أبيه عن خارجة بن زيد
عن أبيه قال كنت إلى جانب النبي ﷺ فغشيته السكينة فوقعت فخذه على فخذي فما وجدت شيئا أثقل منها
ثم سري عنه فقال لي اكتب فكتبت في كتف { لا يستوي القاعدون من
المؤمنين والمجاهدون } فقام عمرو بن أم مكتوم فقال فكيف بمن لا يستطيع فما انقضى
كلامه حتى غشيت رسول الله ﷺ السكينة ثم سري عنه فقال اكتب { غير أولي الضرر }. قال زيد
أنزلها الله وحدها فكأني أنظر إلى ملحقها عند صدع الكتف
அவர் திருக்குர் ஆனை நிறை மனனம் செய்திருந்ததால் மதீனாவிற்கு
முதலில் அனுப்பி வைக்க் பட்டார்.. மட்டுமல்ல பெருமானார் (ஸல்) அவர்கள் தனக்கு பதிலாக
13 தடவை மதீனாவின் பிரதிநிதியாக அவரை நியமித்தார்கள்
كان
رسول الله يستخلفه على المدينة المنورة في غزواته فيصلي بالناس ويرعى شؤونهم وقد استخلفه
ثلاث عشرة مرة
இஸ்லாமிய வரலாறு
ஏராளமான அறிஞர்களை சந்தித்திருக்கிறது. தமது அறிவாற்றலால் உடல் குறை பாட்டை வென்றவர்கள்
அவர்கள்
இமாம் துர்முதி
ரஹ் அவர்களுக்கு இறுதி காலத்தில் பார்வை பறிபோயிருந்ததது. அந்த நிலையிலும் ஒரு உதவியாளரை
வைத்துக் கொண்டு பயணங்கள் செய்து ஹதீதுகளை திரட்டினார்கள்.
இமாம் ஷாபி
ரஹ் அவர்கள் மூல நோயால் அவதிப் பட்டார்கள். ஒரு நாற்காலியின் நடுவில் ஓட்டை போட்டு
அதற்க் கீழே ஒரு பாத்திரத்தை வைத்து விடுவார்கள்.
சிந்தனையில் ஆழ்ந்து சட்டங்களை வகுப்பார்கள். பாத்திரத்தில் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும்.
ஒரு முறை இமாம் ஷாபி குதிரையின் மீது ஏறும் போது அவரது ஒரு கால்சராய் ஒன்றின் வழியே
இரத்தம் வழிவதை நான் பார்த்தேன் என அவருடைய மாணவர் கூறுகிறார்.
இலக்கணம் இலக்கியம்
தப்ஸீர் ஹதீஸ் பிக்ஹு புவியியல் என பல துறைகளிலும் பெரு நூட்களை எழுத இமாம் ஜமஹ்ஷரீ
கால் ஒடிந்தவராக இருந்தார்.
உலகின் போர்க்கலை
வல்லுநர் என்று போற்றப் படுகிற தைமூர் லன்க் கால் ஊனத்தால் விந்தி விந்தி நடப்பவர்
ஆவார். ஆனால் அவரது அறிவாற்றல் அவரை உலகின்
போர்க்கலை வல்லவர் என்று அழைக்கிறது. அவரது அறிவாற்றல் காரணமாகவே அமீர் என்ற பட்டத்த்திற்கு
மேல் எதையும் அவர் சூட்டிக் கொள்ள வில்லை என்கிறது வரலாறு.
இந்த உலகில்
அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்கிற மக்கள் எத்தகைய நிலையிலும் தங்களது மரணத்தை கூட
மதிப்புக்குரியதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment