வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 31, 2018

போராட்டங்கள் வெற்றி பெற வழிகாட்டும் பத்று யுத்தம்

وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌ ۖ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறதா ?
ஸ்டர்லைன் ஆலைக்கு அரசு சீல் வைத்த் விட்டது.
இத்தகைய நடவடிக்கையை அரசு முன்பே எடுத்திருக்குமானால் 13 மனித உயிர்கள் அநியாயமாக பலியாகி இருக்காதே!
காவல்துறையின் எல்லை மீறுதலும் அரசின் அலட்சியமுமே இந்த படுபாதகத்திற்கு காரணங்கள்
சமூக விரோதிகள் ஊடுறுவிட்டனர் என்று பொய்ச் செய்தியை பரப்புவது மனிதாபிமானமற்ற ஈனப் பிறவிகளின் வேலை.
மக்கள் எத்தகைய துன்பத்திலும் கோபத்திலும் மன உறுதியிலும் இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்காத மடையர்களே இத்தகைய குற்றச்சாட்டை கூற முடியும்.
மாநில அரசும் சில தலைவர்களும் இன்னும் மக்களை முட்டாளாக்க முய்றசிக்கிறார்கள். காவல்துறையின் அத்துமீறலை மறைக்க நினைக்கீறார்கள். அல்லது யாரோ ஒரு எஜமானனுக்கு கட்டுப் பட்டு நடந்ததை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
எப்படி இருப்பினும் நட்டம் உயிரிழப்புக்களை சந்தித்தவர்களுக்கே!
போராட்டங்களில் உயிரிழப்புக்கள் சகஜம் தான்.
தமிழகத்தில் சமீபகாலமாக மக்கள் தன்னெழுச்சி பெற்று நடத்தும் போராட்டங்கள் அபரிமிதமான் மக்கள் செல்வாக்கை பெற்று ஆட்சியாளர்களை வழிக்கு கொண்டு வந்து விடுகின்றன என்றாலும் பொதுமக்களுக்கான பாதிப்பும் பெருமளவில் நடந்து விடுகிறது.
இதற்கு என்ன காரணம்.
போராட்டங்களுக்கான ஒரு உறுதியான சரியான தலைமை அடையாளம் காணப் படாதத்தாகும்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் அரசு அல்லது காவல்துறை பேசுவதெற்கேற்ற ஒரு தலைமை இருந்திருக்குமானால் காவல்துறை வன்முறையில் ஈடுபட்டதை தடுத்திருக்க முடியும். மக்கள் உணர்ச்சி வசப்பட்டு வாகணங்களுக்கு தீ வைத்த நிகழ்வுகள் தடுக்கப் பட்டிருக்கும்.
இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற மிக முக்கியமான யுத்தமான பத்று யுத்தம் வெற்றி பெறக் கூடைய போராட்ட வடிவத்தை மிகச் சிறப்பாக போதிக்கின்றது. 
பத்று என்பது மதீனாவிலிருந்து தென்மேற்கில் இன்றைய சாலை மார்க்கமாக சென்றால் 153 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடம். அன்று பெருமானார் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய சாலையில் 160 கிலோ மீட்டரில் இருந்தது. அங்கு தண்ணீர் கிணருகள் இருந்ததால் மக்கள் சந்தைக்கு கூடும் இடமாக அது இருந்தது. அங்கே மதீனாவின் முஸ்லிம்களுக்கும் மக்காவிலிருந்து அபூஜஹ்ல் உடைய தலைமையில் வந்த மக்காவின் காபிர்களுக்கும் இடையே ஒரு யுத்தம் நடை பெற்றது. அன்று குறைஷிகள் நடந்து சென்ற சாலையில் பத்று, மக்காவிற்கு வடக்கே 402 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. இப்போதைய சாலையில் 343 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

  
பத்று யுத்தம் 313 முஸ்லிம்களுக்கும் ஆயிரக்கணக்கான காபிர்களுக்கும் இடையே ஹிஜ்ரீ 2 ம் ஆண்டு ரமலான் பிறை 17 ல் நடை பெற்றது.
போர்ப் பயிற்சி அற்ற, ஆயுத வலிமையும் இல்லாத முஸ்லிம்கள் தம்முடைய முதல் யுத்தத்தில் எதிரிகளை வெகு சீக்கிரத்தில் வெற்றி பெற்றார்கள். எதிரிகள் தோற்றோடினர்.
وكان قوام جيش قريش نحو ألف وثلاثمئة مقاتل في بداية سيره، وكان معه مئة فرس وستمئة درع، وجِمال كثيرة لا يُعرف عددُها بالضبط،

ஒன்பது புரவலர்கள்
وكان القائمون بتموينه تسعة رجال من أشراف قريش، فكانوا ينحرون يوماً تسعاً ويوماً عشراً من الإبل
உற்சாகப்படுத்தும் நடன மங்கையர்
ومعهم القيان يضربون بالدفوف، ويغنين بهجاء المسلمين

முஸ்லிம்களிடமோ மிகக் குறைந்த் எண்ணிக்கையில் தான் ஆயிதங்கள் இருந்தன.
فلم يكن معهم إلا فَرَسان، فرس للزبير بن العوام، وفرس للمقداد بن الأسود الكندي،
وكان معهم سبعون بعيراً،

ஒரு ஒட்டகையில் மூவர் பயணித்தனர்.

قال ابن مسعود: كنا يوم بدر كل ثلاثة على بعير، كان أبو لبابة وعلي بن أبي طالب زميلَي رسول الله ، وكانت عقبة رسول الله، فقالا: «نحن نمشي عنك»، فقال: «ما أنتما بأقوى مني، ولا أنا بأغنى عن الأجر منكما)அஹ்மது)

மதீனாவிலிருந்து புறப்படுகிற போது ஒரு யுத்தத்திற்கு கிளம்புகிறோம் என்று சொல்லி மக்களை கிளப்பவில்லை. ஒன்றை தேடிப் போகிறோம். யாரிடம் வாகனம் இருக்கிறதோ அதில் சவாரி செய்து கொள்ளுங்கள் என்றார்கள். யுத்தத்திற்கான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப் பட்டிருக்கவில்லை.

حيث  قال: «إن لنا طلبةً فمن كان ظهره حاضرًا فليركب معنا» முஸ்லிம்

இது சத்திய மார்க்கத்தின் உறுதிப்பாட்டையும் உண்மையையும் நிலை நிறுத்துகிற யுத்தமாக இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத வேறு எவருடைய உதவியையும் நாட வில்லை. வந்த உதவியை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

وفي أثناء سير الرسول محمدٍ وصحبه، التحق أحد المشركين راغبًا بالقتال مع قومه، فردّه الرسول وقال: «ارجع فلن أستعين بمشرك»، وكرّر الرجل المحاولة فرفض الرسولُ حتى أسلم الرجل والتحق بالمسلمين

இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் மிகப் பெரும் வெற்றியடையக் காரணம். முஸ்லிம்களிடம் முஹம்மது ரஸூல் என்ற மிகச் சிறப்பான கூரிய சிந்தனை மிக்க ஒரு தலைவர் இருந்ததாகும்.
அந்த தலைவர் எந்த இலக்கில் மக்கள் போராட வேண்டும் எப்படி போராட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். அவர்களை அணி வகுத்து நிறுத்தினார்/
பத்று யுத்தம் பற்றிய வரலாற்றாய்வாளர்கள் சொல்வதுண்டு.
காபிர்களின் அணி எண்ணிக்கையில் பெரியதாக இருந்தாலும் ஒழுங்கற்றதாக இருந்தது.
முஸ்லிம்களின் அணி அணிவகுத்து நிறுத்தப் பட்டிருந்தது.
முதல் வரிசையில் ஈட்டி எறிபவர்கள் அடுத்தவரிசையில் அம்பெய்கிறவர்கள் என வரிசைப்படுத்தப் பட்டிருந்தனர்.
முஹாஜிர்கள் அணி அலீ ரலி அவர்களின் தலைமையிலும் அன்சார்களின் அணி சஃது பின் முஆத் ரலி அவர்கள் தலைமையிலும் அணிவகுத்து நிற்க வைக்கப் பட்டது. வலது புற படைப் பிரிவிற்கு சுபைர் ரலி அவர்களும் இடது புற படைப் பிரிவிற்கு மிக்தாது ரலி அவர்களும் தலைவர்களாக நியமிக்கப் பட்டிருந்தனர். அவ்விருவரிடம் தான் இரண்டு குதிரைகள் இருந்தன.

وعقد اللواء الأبيض وسلَّمه إلى مصعب بن عمير، وأعطى رايتين سوداوين إلى سعد بن معاذ وعلي بن أبي طالب، وجعل على الساقة قيساً بن أبي صعصعة
காலை நேரத்தில் யுத்தம் நடை பெறுகிற போது சூரிய வெளிச்சத்தின் தாக்கம் இருக்க கூடாது என்பதற்காக மேற்கு திசையை முன்னோக்கியவாறு முஸ்லிம்களின் அணியை நிறுத்தினார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்

صفَّ المسلمين فاستقبل المغرب وجعل الشمس خلفه فاستقبل أعداؤه الشمس،

இறகில்லாத ஒரு அம்பை கையில் வைத்துக் கொண்டு அணிவரிசையை பெருமானார் (ஸல்) அவர்கள் சரி செய்தார்கள். அப்போது ஒரு சுவையான நிகழச்சி நடந்தது.

كان النبي  يعدل الصفوف ويقوم بتسويتها لكي تكون مستقيمة متراصة، وبيده سهم لا ريش له يعدل به الصف، فرأى رجلاً اسمه سواد بن غزية، وقد خرج من الصف فضربه في بطنه، وقال له: «استوِ يا سواد»، فقال: «يا رسول الله أوجعتني، وقد بعثك الله بالحق والعدل فأقدني»، فكشف الرسول محمد عن بطنه وقال: «استقد»، فاعتنقه سواد فقبّل بطنه، فقال: «ما حملك على هذا يا سواد؟»، قال: «يا رسول الله حضر ما ترى فأردت أن يكون آخر العهد بك أن يمس جلدي جلدك»، فدعا له الرسول محمد بخير

இருக்கிற ஆயுதங்களை சரியாக உபயோகிக்க பெருமானார் உத்தரவிட்டர்கள். அம்புகளை வீணடித்து விட வேண்டாம் என எச்சரித்தார்கள். எதிரிகள் நெருங்கி வந்தால் ஒழிய வாளை உறுவ வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

أمرهم برمي الأعداء إذا اقتربوا منهم، وليس وهم على بعد كبير، فقد قال: «إن دنا القوم منكم فانضحوهم بالنبل»

قال قال النبي صلى الله عليه وسلم يوم بدر إذا أكثبوكم فارموهم بالنبل ولا تسلوا السيوف حتى يغشوكم (அபூதாவூத்)
மிகச் சிறப்பாக மக்களை தியாக வாழ்விற்கு தூண்டினார்கள்.

فقد كان يحثهم على القتال ويحرضهم عليه،ومن ذلك قوله لأصحابه: «قوموا إلى جنة عرضها السماوات والأرض»، فقال عمير بن الحمام الأنصاري: «يا رسول الله جنة عرضها السماوات والأرض؟»، قال: «نعم»، قال: «بخٍ بخٍ»، فقال الرسول محمد: «ما يحملك على قول: بخٍ بخٍ؟»، قال: «لا والله يا رسول الله، إلا رجاء أن أكون من أهلها»، قال: «فإنك من أهلها»، فأخرج تمرات من قرنه (جعبة النشاب) فجعل يأكل منه، ثم قال: «لئن أنا حييت حتى آكل تمراتي هذه إنها لحياة طويلة»، فرمى بما كان معه من التمر ثم قاتلهم حتى قُتل முஸ்லிம் –

ومن تشجيعه أيضاً أنه كان يبشر أصحابه بقتل صناديد قريش، ويحدد مكان قتلى كل واحد منهم،

وقف يقول للصحابة: «والذي نفس محمد بيده لا يقاتلهم اليوم رجل فيقتل صابرًا محتسبًا مقبلاً غير مدبر إلا أدخله الله الجنة»

அதே நேரத்தில் வெற்றியை தருவது அல்லாஹ்தான் என்பதை உண்ர்த்துகிற வககயில் மக்களுக்காக தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டும் இருந்ந்தார்கள்.

وقد دعا الرسول للمسلمين بالنصر فقال: «اللهم هذه قريش قد أقبلت بخيلائها وفخرها تحادّك وتكذب رسولك، اللهم فنصرك الذي وعدتنيஅல்பிதாயா -

முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் தயார்ப் படுத்தப்பட்டு நிறுத்தப் பட்டிருந்த விதம் இவர்கள் அல்லாஹ்வை தவிர வேறு எதற்கு பயப்பட மாட்டார்கள்மரணத்தை முத்தமிடுவதற்காக தயாராக வந்தவர்களைப் போல எதிரிகளுக்கு தெரிந்தார்கள். எதிரிகளின் உளவாளி அம்ரு இதை குறைஷி காபிர்களுக்க் எடுத்துக் கூறினார்.

قبل وصول قريش إلى بدر بعثت عمير بن وهب الجمحي، للتعرف على مدى قوة جيش المدينة، فدار عمير بفرسه حول العسكر، ثم رجع إليهم فقال: «ثلاثمئة رجل، يزيدون قليلاً أو ينقصون، ولكن أمهلوني حتى أنظر أللقوم كمين أو مدد»، فضرب في الوادي حتى أبعد، فلم ير شيئاً، فرجع إليهم فقال: «ما وجدت شيئاً، ولكني قد رأيت يا معشر قريشٍ البلايا تحمل المنايا، نواضح يثرب تحمل الموت الناقع، قوم ليس معهم منعة ولا ملجأ إلا سيوفهم، والله ما أرى أن يُقتل رجلٌ منهم حتى يَقتلَ رجلاً منكم، فإذا أصابوا منكم أعدادكم، فما خير العيش بعد ذلك، فروا رأيكم

முஸ்லிம்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்களைப் பார்த்து எதிரிகளுக்கு கிலி பிடிக்குமாறு செய்த்தது பெருமானார் (ஸல்) அவர்களது தலைமையின் சிறப்பம்சமாகும்.

பெருமானாரின் தலைமைக்கு அடுத்ததாக பத்று யுத்தத்தில் முஸ்லிம்கள் வெற்றி பெறககாரணம். அவர்களது கட்டளைப்படி யுத்தத்தில் இறங்கிய தோழர்கள் முழுக்க அவருக்கு கட்டுப் பட்டு நடப்போம் என்பதில் வெளிப்படுத்திய உறுதியுமாகும். இது பத்றின் வெற்றிக்கு இரண்டாவது முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.

 فقال سعد بن معاذلقد آمنا بك وصدقناك، وشهدنا أن ما جئت به هو الحق، وأعطيناك على ذلك عهودنا ومواثيقنا على السمع والطاعة، فامض يا رسول الله لما أردت، فوالذي بعثك بالحق لو استعرضت بنا هذا البحر فخضته لخضناه معك، ما تخلف منا رجل واحد، وما نكره أن تلقى بنا عدونا غدًا، إنا لصَبْر في الحرب، صِدْق عند اللقاء، ولعل الله يريك منا ما تقر به عينك فسر على بركة الله

ஒரு போராட்ட களத்தில் உடன் வருகிறவர்களுடைய முழு ஒத்துழைப்பும் அவசியம். தலைவரின் கட்டளைக்கு அவர்கள் உடன்பட மறுத்தாலோ அல்லது தலைவரின் உத்தரவுகளுக்கு அவர்கள் மாறாக நடந்து கொண்டாலோ போராட்டம் திசை மாறிவிடும்.

ஜாலூத்தை எதிர்க்கும் போராட்டத்திற்கு வந்த யூதர்களை அல்லாஹ் ஒரு சோதனையின் மூலம் சுத்தப் படுத்தினான். யார் கட்டுப்படுகிறவர்களோ அவர்களை மட்டும் தாலூத் தன்னுடன் வைத்துக் கொண்டார். காரணம் படைவீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை விட அது தரமாக இருக்கிறதா என்பது தான் முக்கியம்.

{فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ قَالَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو اللَّهِ كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ}.. [البقرة : 249].

முஹம்மத் நபி (ஸல்) அவ்ர்களது படையிலிருந்து ஒவ்வொருவரும் தரமாணவர்களாக இருந்தார்க:. அதனால் தான் 313 என்ற எண்ணிக்கையை அறிந்து பெருமானார் (ஸல்) அவர்கள் சந்தோசப்பட்டார்கள்.

எந்த ஒரு போராட்டத்திலும் போராளிகளிடத்தில் தனது போராட்டம் அதன் தியாகங்கள் குறித்த கம்பீரமான சிந்தனை இருக்கலாம். ஆனால் கர்வம் இருந்து விடக்கூடாது.

தன்னை ஒரு போராளி என்று பிரபலப் படுத்திக் கொள்கிறவர்களே  பெரும்பாலும்  கோமாளிகளாக ஆகிவிடுவதுண்டு.

பத்று போர்க்களம் முஸ்ளிம்களின் தியாக உள்ளத்தையும் எதிர்களின் தற்பெருமை மனப்பான்மையும் அம்பலப்படுத்துகிறது.
யுத்தம் எப்படி தொடங்கியது என்பதை வரலாறு கூறுகிறது.

خرج من جيش قريش ثلاثة رجال همعتبة بن ربيعة وأخوه شيبة بن ربيعة وابنه الوليد بن عتبة، وطلبوا المبارزة، فخرج إليهم ثلاثة من الأنصار وهمعوف ومعوذ ابنا الحارث (وأمهما عفراءوعبد الله بن رواحة، فقالوا لهم: «من أنتم؟»، قالوا: «رهط من الأنصار»، قالوا: «أكفاء كرام، ما لنا بكم حاجة، وإنما نريد بني عمنا»، ثم نادى مناديهم: «يا محمد، أخرج إلينا أكفاءنا من قومنا»  فقال الرسول محمد: «قم يا عبيدة بن الحارث، وقم يا حمزة، وقم يا علي»، وبارز حمزة شيبة فقتله، وبارز علي الوليد وقتله، وبارز عبيدة بن الحارث عتبة فضرب كل واحد منهما الآخر بضربة موجعة،

فكرَّ حمزة وعلي على عتبة  فقتلاه، وحملا عبيدة  وأتيا به إلى الرسول محمد، ولكن ما لبث أن تُوفّي متأثراً من جراحته، وقد قال عنه الرسول محمد: «أشهد أنك شهيد»،
தற்பெருமை தலை எடுத்த கணத்திலேயே உருண்டு விழுந்து விட்டது.
தியாகத்திற்கு தயாராக இருந்த அன்சாரிகள் தமது வாழ்வை ஷஹாதத்தாகவே ஆக்கிக் கொண்டார்கள்.
இதே யுத்தத்தில் عوف  معوذ இருவரும் அபூஜஹ்லை வெட்டி விட்டு ஷஹீதானார்கள். அப்துல்லாஹ் பின் ரவாஹா பின்னொரு யுத்ததில் ஷஹீதானார்.

பத்று யுத்ததிலும் முஸ்லிம்களின் தரப்பில் 14 பேர் ஷஹீதானார்கள். ஆனால் அவர்கள் எதிர் தரப்பில் ஏற்படுத்திய பாதிப்பும் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றமும் அதிகம்.
இது முஹம்மது நபி (ஸல்) அவரக்ளின் பெரும் சாதனைகளில் ஒன்று
குறைவான சேதாராத்தில் பெரும் வெற்றியை பெற்றவர்கள் பெருமானார் .


 وقُتل من المسلمين أربعة عشر رجلاً.

منهم ستة من المهاجرين هم:

1.     عبيدة بن الحارث المطلبي القرشي.
2.     عمير بن أبي وقاص الزهري القرشي.
3.     صفوان بن وهب الفهري القرشي.
4.     عاقل بن البكير الليثي الكناني.
5.     ذو الشمالين بن عبد عمرو الخزاعي.
6.     مهجع بن صالح العكي.

وثمانية من الأنصار هم:

1.      سعد بن خيثمة الأوسي.
2.      مبشر بن عبد المنذر العمري الأوسي.
3.      يزيد بن الحارث الخزرجي.
4.      عمير بن الحمام السَلَمي الخزرجي.
5.      رافع بن المعلى الزرقي الخزرجي.
6.      حارث بن سراقة النجاري الخزرجي.
7.      معوذ بن الحارث النجاري الخزرجي.
8.      عوف بن الحارث النجاري الخزرجي.

பத்று போர்க்களத்தில் முதலில் எழுந்து உயிர்ப் பிழைத்த அப்துல்லாஹ் பின் ரவாஹா ரலி அவர்களைத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் வெற்றிச் செய்தியை மதீனாவுக்கு சொல்ல அனுப்பி வைத்தார்கள்.

ولما تم النصر وانهزم جيش قريش أرسل الرسول محمد عبد الله بن رواحة وزيد بن حارثة ليبشرا المسلمين في المدينة بانتصار المسلمين وهزيمةقريش
ஒரு முழுமையான நிறவு அம்சத்தை இது உணர்த்துகிறது ( .பர்பெக்ட் பினிசிங் டச்)

பத்றில் 74 கைதிகள் முஸ்லிம்களிடம் சிக்கினார்கள். அவர்களில் பணம் கொடுத்து விடுதலையானவர்கள் தவிர பணம் செலுத்த முடியாதோர் 10 மதீனத்து சிறுவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து விட்டு விடுதலையானார்கள் என்கிறது வரலாறு.

وكان ناس من الأسرى يوم بدر ليس لهم فداء، فجعل الرسول فداءهم أن يعلِّموا أولاد الأنصارالكتابة،  وبذلك شرع الأسرى يعلِّمون غلمان المدينة القراءة والكتابة، وكل من يعلِّم عشرة من الغلمان يفدي نفسه.

தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கும் சந்தர்ப்பத்தில் இந்த மகத்தான சிந்தனையையும் திட்டத்தையும் கூட நினைவில் கொள்வது பொருத்தமானது தான்.

பத்று முஸ்லிம்களின் வரலாற்றில் முழுமையான வெற்றிக்கான அடையாளமாகவும் பாடமாகவும் அமைந்து விட்டது.

எந்த ஒரு போராட்டத்தின் முழுமையான வெற்றிக்கும் தேவையான அம்சங்கள்
1.   தகுதி வாய்ந்த பொறுப்புணர்வு மிக்க தலைமை
2.   உறுதி வாய்ந்த கட்டுப்பாட்டுணர்வு மிக்க தொண்டர்கள்
3.   வெற்றியை நோக்கிய தெளிவான திட்டம்
4.   இறைவனின் கிருபையை எதிர் நோக்கிய வாழ்க்கை

இந்த நான்கு அம்சங்களும் எந்த போராட்டத்திலும் வெற்றியை தர வல்லவை. பத்று யுத்தம் அதற்கு அழுத்தமான சாட்சியாக அமைகிறது.

முஸ்லிம்கள் தமது போராட்டங்களில் பத்றின் இந்த அம்சங்களை நினைவில் கொண்டால் எப்போதும் வெற்றி அவர்கள் வசமே இருக்கும்.

சமீப காலத்திய மக்கள் போராட்டங்கள் மக்களின் எழுச்சி பிரமாதமாக இருக்கிறது.
ஆனால்
·         ஒரு தலைமை இல்லை.
·         அதே போல ஒரு திட்டவட்டமான திட்டம் இல்லை.
·         கட்டுப் பாட்டை மீறிச் செயல் படும் பொதுவான மக்கள் கூட்டம்.
இத்தகைய காரணங்கள் எந்த ஒரு போராட்டத்தையும் திசை திருப்பி விடக் கூடியவை.

இந்த விபத்து தான் தூத்துக்குடியிலும் இப்போது நடந்திருக்கிறது. எந்த வித நியாயமும் இல்லாமல், வரை முறைகளையும் பயன்படுத்தாமல்  கண்மூடித்தனமாக மக்களை சுட்டுக் கொன்ற அரசு மக்களை சமூக விரோதிகள் என்கிறது. உண்மையான சமூக விரோதிகள் இப்போது தமிழத்தையும் இந்திய நாட்டையும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.          அல்லாஹ் பாதுகாப்பானாக! 






No comments:

Post a Comment