அல்லாஹ் புனிதம் மிக்க ரம்லானை நமக்கு நிறைவாக
கொடுத்தான்.
அல்ஹம்துலில்லாஹ்.
பெருமானார் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
عَنْ عَبْدِ اللَّهِ
بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَمَضَانَ فَقَالَ : " لا تَصُومُوا حَتَّى
تَرَوْا الْهِلالَ وَلا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ
فَاقْدُرُوا لَهُ " رواه البخاري (1906) ومسلم (1080) .
عن كُريب « أنّ أم الفضل بعثته إلى معاوية بالشام، فقال: فقدمت الشام
فقضيت حاجتها واستُهل عليّ رمضان وأنا بالشام فرأيت الهلال ليلة الجمعة، ثم قدمت
المدينة في آخر الشهر، فسألني عبد الله بن عباس، ثم ذكر الهلال، فقال: متى رأيتم
الهلال؟ فقلت رأيناه ليلة الجمعة، فقال: أنت رأيته؟ فقلت: نعم، ورآه الناس وصاموا
وصام معاوية، فقال لكنّا رأيناه ليلة السبت فلا نزال نكمل ثلاثين أو نراه، فقلت:
ألا تكتفي برؤية معاوية وصيامه؟ فقال: لا، هكذا أمرنا رسول الله صلى الله عليه
وعلى آله وسلم
சவூதி அரேபியாவில் இன்று பிறை
அறிவிக்கப் பட்டுள்ளது என்றாலும் அங்குள்ள அறிஞர்களிடம் கேட்டீர்கள் என்றால் உங்கள்
ஊரில் பிறை தெரிந்தால் நோன்பு வையுங்கள் இல்லை அல்லது நோன்பை விடுங்கள். பிறை தென்படாவிட்டால்
மாதத்தை 30 ஆக நிறைவு செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
ஒரு ஆட்சிக்குப் பட்ட பகுதியில்
தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் அறிவிப்பே இறுதியானது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொருத்தவரை அவர்கள் ஒரு
மாதத்திற்கு முன்பே கேரளாவை பின்பற்றுவது என்று முடிவு செய்து விட்டார்கள். அதனால்
குமரி மாவட்டத்தில் இன்று பெருநாளை மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் வேறெங்கும்
பெருநாள் இல்லை. பாகிஸ்தான் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளில் சனிக்கிழமை தான் பெருநாளாகும்.
நமது பகுதியில் பிறை தென்படாத்தால் இன்ஷா அல்லாஹ் இன்று நாம் ரமலானை 30 ஆக நிறைவு செய்து
இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை ஈதுல் பித்ர் பெருநாளை கொண்டாடுவோம்.
அல்லாஹ் நாம் ரமலானில் செய்த
அமல்களை அங்கீகரிப்பானாக! அடுத்து வரும் பெருநாளை அனைத்து விதமான பாக்கியங்களும் நிறைந்த்தாக
ஆக்கியருள்வானாக!
ரமலான் நம்மில் ஒவ்வொரு வருக்கும்
விதவிதமான மகிழ்ச்சியை பக்தியுணர்வையும் வழங்கியிருக்கிறது. இனியும் இத்தகைய பாக்கியங்கள் வாழ்வில் நிறைய வேண்டும்.
இந்த பாக்கியத்திற்காக வழங்கியதற்காக
நாம் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுவோம்
எப்போதும் அல்லாஹ்வுக்கு நன்றி
செலுத்திக் கொண்டிருக்கும் வாழ்வு தான்
·
ஈமானிய வாழ்வு
அது தான்
·
அர்த்தமுள்ள ஞானம் மிக்க வாழ்வுமாகும்.
நபி லுக்மான் அலை அவர்களுக்கு
ஞானத்தை வழங்கியதாக கூறும் இறைவன் . அந்த ஞானத்தின் மொத்தத்தையும் ஒரே ஒரு அறிவுரையில் சுட்டிக்காட்டுகிறான்
وَلَقَدْ آتَيْنَا
لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ
لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ (12)
லுக்மான் அலை அவர்கள் 12 ஆயிரம் தலைப்புக்களில் ஞானக்கருத்துக்களை கூறியுள்ளார்கள் என வஹ்பு பின் முனப்பிஹ் கூறூகிறார். (குர்துபி)
12 ஆயிரம் ஞானக்கருத்துக்களில் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் கருத்து இது .
எதெற்கெடுத்தாலும் தேங்க்ஸ் சொல்லிக் கொள்கிறோம். அல்லாஹ்வுக்கு உரிய அளவில்
நன்றி செலுத்த மறந்து விடக் கூடாது.
அல்லாஹ்வுக்கு ஏன் நன்றி செலுத்த வேண்டும்.
அவனே நமது உண்மையான منعم
. பெரிய உபகாரி.
وَإِن تَعُدُّوا
نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا ۗ إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ
لَا تُحْصُوهَا لا تطيقوا أداء شكرها
என்று அர்த்தம் செய்கிறார். இமாம்
தப்ரீ.
என்று
அல்லாஹ்வே கேட்கிறான்.
கண்
எவ்வளவு பெரிய நிஃமத். பார்வையற்றோர்
படும் துன்பங்கள் எத்தனை ?
2012 ஆம் ஆண்டில் உலகில் 285 மில்லியன் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இருந்ததாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது, அதில் 246 மில்லியன் நபர்கள் குறைந்த பார்வையிழப்பும் மற்றும் 39 மில்லியன் நபர்கள் முழுமையாக பார்வை இழந்து குருட்டுத்தன்மை உடையவர்களாகவும் இருந்தனர். கண்பார்வை இழந்தவர்களில் 90% நபர்கள் வளர்ந்துவரும் நாடுகளில் காணப்படுகின்றனர்.
உலகின் மக்கள்தொகையில் 19
சதவீதம் பார்வைக் குறைபாடுடையவர்கள் என்கிற ஆய்வு.
2001 ல் இந்தியாவில் நடை பெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பில் உடலில் ஊனம் கொண்டவர்களைப் பற்றிய பட்டியல் அதிர்ச்சியளிக்கிறது.
இயங்கும் திறன் அற்றவர்கள் (Movement)
28%
பார்க்கும் திறன் அற்றவர்கள் (Seeing) 49%
கேட்கும் திறன் அற்றவர்கள் (Hearing) 6%
பேசும் திறன் அற்றவர்கள் (Speech) 7%
மூளைத் திறன் அற்றவர்கள் (Mental) 10%
(Census India 2001
அல்லாஹ் நம்மை
எவ்வளவு சிறப்பாக வைத்திருக்கிறான். ? ஒப்பீட்டு நோக்கினால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி
முடிக்கவே முடியாது என உணர்வோம்.
உலகில் கிடைக்கிற
மற்ற வசதிகளில் கூட மற்றவர்களை விட நமக்கு கிடைக்கிற வசதிகள் ஏராளம்.
நமது நாட்டில்
30 கோடிப்பேர் நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகிறவர்கள். 27 சதவீதம் பேர் பிளாட்பாரங்களில் வாழ்கிறார்கள்.
அல்லாஹ் நம்மை
எப்படி வைத்திருக்கிறான் ? அல்ஹமது லில்லஹ்.
நம்முடைய முன்னோடிகள்
எத்தனை பேர் உடல் குறைபாடு உடையவர்கள் ?
இமாம் ஷாபி
ரஹ் அவர்கள் மூல வியாதிக்காரர்.
இமாம் துர்முதி
பிறகாலத்தில் பார்வை இழந்தவர்.
இமாம் ஜமஹ்ஷரி
காலுடைந்தவர்.
அதற்காக அரசாங்கத்திடமிருந்து
தான் குற்றவாளி அல்ல என்பதற்கான சான்றிதழை வாங்கி வைத்துக் கொண்டு. பயணம் செய்தவர்.
இந்த உயர்ந்த
சாதனைகளுக்கு சொந்தக்காரர்களான பெருமக்களுக்கு கொடுத்ததை விட அல்லாஹ் நமக்கு அதிகமாக
வழங்கியிருக்கிறான்.
உடல் ரீதியான
நிஃமத்களை போல ஆத்மார்த்தமான நிஃமத்துக்களும் கணக்கிடலங்காதவை.
பெருமானாரை
கொடுத்தது. தீனுல் இஸ்லாமை கொடுத்தது. அஹ்லுஸ்ஸுன்னாவில் வாழ வைத்திருப்பது.
இதோ இப்போது
ரமலானை கொடுத்திருப்பது.
நன்றி செலுத்துவது
அல்லாஹ்வின் குணம் .அ து நம்மிடம் இருக்க வேண்டாமா?
الشكر من صفات الله: فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ} [البقرة: 158
الشكر صفة الأنبياء:
·
إِنَّ
إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِّلَّهِ حَنِيفًا وَلَمْ يَكُ مِنَ
الْمُشْرِكِينَ (120) شَاكِرًا لِّأَنْعُمِهِ ۚ اجْتَبَاهُ وَهَدَاهُ
إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ (121)
·
ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ ۚ إِنَّهُ
كَانَ عَبْدًا شَكُورًا (3)
·
عن عائشة ـ رضي الله عنها ـ قالت : ( كان رسول الله - صلى الله عليه وسلم - إذا صلى قام حتى تفطر رجلاه .. قالت
عائشة : يا رسول الله أتصنع هذا وقد غُفِرَ لك ما تقدم من ذنبك وما تأخر ؟! ، فقال
ـ صلى الله عليه وسلم ـ : يا عائشة أفلا أكون عبدا شكورا )(مسلم
அல்லாஹ்வுக்கு
நன்றி செலுத்தும் போது என்ன கிடைக்கும்.
·
அப்போதுதான் நாம் முஃமின்கள் என்பது உறுதிப்படும்.
الشكر من صفات المؤمنين:
ففي صحيح مسلم عَنْ صُهَيْبٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : «عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ؛ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
ففي صحيح مسلم عَنْ صُهَيْبٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : «عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ؛ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
·
இறை பொருத்தம் கிடைக்கும்.
الشكر سبب لرضى الله عن عبده:
قال تعالى: { وَإِن تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ } [الزمر: 7].
நாம் ஒருவருக்கு உபகாரம் செய்கிறோம். அவர் நமக்கு நன்றியுடையவராக
இருந்தால் அதில் நமக்கு ஒரு திருப்தி இருக்குமல்லவா ? அல்லாஹ்வுக்கும் அதுபோலவே.
·
நன்றியினால் கிடைக்கும் பாதுகாப்பு.
இது மிகப்பெரிய பலன்
الشكر أمان من العذاب
·
قال تعالى: {ما يفعل الله بعذابكم إن
شكرتم وآمنتم} [النساء: 147].
قال قتادة رحمه الله: "إن الله جل ثناؤه لا يعذِّب شاكرًا ولا مؤمنًا" [تفسير الطبري: 9/342].
قال قتادة رحمه الله: "إن الله جل ثناؤه لا يعذِّب شاكرًا ولا مؤمنًا" [تفسير الطبري: 9/342].
அதாபின் இன்னொரு பொருள். கிடைத்துக் கொண்டிருக்கும் நிஃமத் நிற்காது.
ان أبا
هريرة رضي الله عنه حدثه أنه سمع رسول
الله صلى الله عليه وسلم يقول إن ثلاثة في بني
إسرائيل أبرص
وأقرع وأعمى بدا لله عز وجل أن يبتليهم فبعث
إليهم ملكا فأتى الأبرص فقال أي شيء أحب إليك قال لون حسن وجلد حسن قد قذرني الناس
قال فمسحه فذهب عنه فأعطي لونا حسنا وجلدا حسنا فقال أي المال أحب إليك قال الإبل
أو قال البقر هو شك في ذلك إن الأبرص والأقرع قال أحدهما الإبل وقال الآخر البقر
فأعطي ناقة عشراء فقال يبارك لك فيها وأتى الأقرع فقال أي شيء أحب إليك قال شعر
حسن ويذهب عني هذا قد قذرني الناس قال فمسحه فذهب وأعطي شعرا حسنا قال فأي المال
أحب إليك قال البقر قال فأعطاه بقرة حاملا وقال يبارك لك فيها وأتى الأعمى فقال أي
شيء أحب إليك قال يرد الله إلي بصري فأبصر به الناس قال فمسحه فرد الله إليه بصره
قال فأي المال أحب إليك قال الغنم فأعطاه شاة والدا فأنتج هذان وولد هذا فكان لهذا
واد من إبل ولهذا واد من بقر ولهذا واد من غنم ثم إنه أتى الأبرص
في صورته وهيئته فقال رجل مسكين تقطعت بي الحبال في سفري فلا بلاغ اليوم إلا بالله
ثم بك أسألك بالذي أعطاك اللون الحسن والجلد الحسن والمال بعيرا أتبلغ عليه في
سفري فقال له إن الحقوق كثيرة فقال له كأني أعرفك ألم تكن أبرص يقذرك الناس فقيرا
فأعطاك الله فقال لقد ورثت لكابر عن كابر فقال إن كنت كاذبا فصيرك الله إلى ما كنت
وأتى الأقرع في صورته وهيئته فقال له مثل ما قال لهذا فرد عليه مثل ما رد عليه هذا
فقال إن كنت كاذبا فصيرك الله إلى ما كنت وأتى الأعمى في صورته فقال رجل مسكين وابن
سبيل وتقطعت بي الحبال في سفري فلا بلاغ اليوم إلا بالله ثم بك أسألك بالذي رد
عليك بصرك شاة أتبلغ بها في سفري فقال قد كنت أعمى فرد الله بصري وفقيرا فقد
أغناني فخذ ما شئت فوالله لا أجهدك اليوم بشيء أخذته لله فقال أمسك مالك فإنما
ابتليتم فقد رضي الله عنك وسخط على صاحبيك
·
நன்றி செலுத்தினால்
மேலும் அதிகமாக கிடைக்கும்.
الشكر سبب للزيادة:
·
قال تعالى: {وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم} [إبراهيم: 7].
قال تعالى: {وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم} [إبراهيم: 7].
ஒரு மனிதர் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் அருட்கொடைகளுக்கு தன்னால்
உரிய அளவில் நன்றி செலுத்த முடியவில்லையே என்ற வருத்தத்தில் யா அல்லாஹ் போதும் போதும்
என்றார். அல்லாஹ் அவருக்கு மேலும் மேலும் கொடுத்துக் கொண்டிருந்தான். யா அல்லாஹ் எனது
துஆவை ஏற்கமாட்டாயா ? என்னை சோதிக்கிறாயா ? என்று மன்றாடினார். அல்லாஹ் கூறினான். நீ
என்னை உணர்ந்து போதும் போதும் என்றதே நன்றி செலுத்துத்தல் தான். நன்றி செலுத்துகிறவர்களுக்கு
நான் மேலும அதிகமாகவே தருவேன்.
·
நன்றி செலுத்தினால் மறுமை
பயன் இன்னும் சிறப்பாகும்.
الشكر سبب لأجر الجزيل في الآخرة:
·
قال تعالى: {وسنجزي الشاكرين} [آل عمران: 145
நன்றி செலுத்தாவிட்டால் ?
மேற்சொன்ன அனைத்திலும் பாதிப்பு ஏற்படும். இந்த உலகிலேயே பாதிப்புக்கள் ஏற்படுவதும்
நிகழும் வாய்ப்புண்டு. (அல்லாஹ் பாதுகாப்பானாக!) எத்தகைய செழிப்பில் இருந்தாலும். சபாஃ
வாசிகள் தமது மரங்களிலிருந்து பழங்களை பறிக்க வே தேவையில்லை. ஒரு கூடையை தலையில் சுமந்து
நடந்தாலே பழங்கள் கூடையில் நிறைந்து விடும்.
لَقَدْ كَانَ لِسَبَإٍ فِي مَسْكَنِهِمْ
آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ
وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا
عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ
ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ * ذَلِكَ
جَزَيْنَاهُمْ بِمَا كَفَرُوا وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ} [سبأ: 16-17].
·
فكانت المرأة تخرج مكتلها على رأسها فتمشي بين جبلين، فيمتلىء
مكتلها، وما مست بيدها،
·
لم يكن فيها شيء مؤذٍ؛ الهمج والدبيب والهوام
·
لقد
بعث الله إلى سبأ ثلاثة عشر نبيًّا فكذبوهم
அல்லாஹ்வுக்கு எப்படி நன்றி செலுத்துவது ?
وقال ابن القيم: الشكر ظهور أثر نعمة الله على لسان عبده: ثناء واعترافا،
وعلى قلبه شهودا ومحبة، وعلى جوارحه انقيادا وطاعة.
அல்லாஹ்வை
·
வார்த்தைகளால் துதித்தல்
·
இதயத்தால் நேசித்தல்
·
உடலால் கட்டுப்படுதல்
நன்றி செலுத்த
வாய்ப்பை ஏற்படுத்தி கொடு என்று அல்லாஹ்வை கேட்க வேண்டும்.
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي
أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ
وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ
الْمُسْلِمِينَ
புனிதம்
மிக்க ரமலானை வழியனுப்புகிற தருணத்தில்
அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் அடியார்களாக
நாம் ஆகிட உறுதி ஏற்போம்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
பெருநாளன்று
நாம் அடைகிற மகிழ்ச்சியும் நாம் செய்கிற நன்மைகளும் அந்த நோக்கிலேயே அமைந்திருக்கின்றன.
அல்லாஹ் அவற்றை
புரிந்து கொள்ள தவ்பீக் செய்வானாக!
பெருநாள் பிறை
– திடல் தொழுகை பற்றிய தகவல்களுக்கு கடந்த
வார உரையை பார்த்துக் கொள்க!
குமரி மாவட்டம் பொதுவாக எல்லைக்கு உட்பட்ட கேரள பகுதியில் பிறை தென்பட்டால் பின்பற்றுவது தான் வழமை. ஆனால் இந்த தடவை கேரளாவில் பிறை தென்பட்டது போக குளச்சலிலும் பிறை தென்பட்டது. இது
ReplyDeleteகுமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையால் உறுதி செய்யப்பட்டது. ஆனால் கண்ணியமிகு ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் மற்றும் சில உலமாக்களும் குளச்சல் பிறையையும் குமரி மாவட்ட மக்களையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது மிக வேதனையான செய்தி.பிறையை ஏற்றுக் கொள்ளா விட்டாலும் பரவாயில்லை விமர்சனங்களை தவிர்த்து இருக்கலாம்.