வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 06, 2018

வெட்கங்கெட்ட தீர்ப்பு



لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى ابن مريم ذلك بما عصوا وكانوا يعتدون ، كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون( المائدة : 78 - 79 ) .

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கண் முன்னே ஒரு அக்கிரமம் அரங்கேறும் எனில் அதை எந்த வகையிலாவது தடுக்க வேண்டும் என கூறினார்கள்.
عَنْ أَبي سعيدٍ الخُدريِّ رَضِي اللهُ عَنْهُ قالَ: سَمِعتُ رسولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يقولُ((مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ , فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ , وَذَلِكَ أَضْعَفُ الْإيمَانِ-.  - مسلِمٌ.

அக்கிரமங்களை தடுக்க முயற்சிக்காவிடில் அதனால் சமூகம் பாதிப்புக்குள்ளாகும் என்பதை அழகிய ஒரு உதாணத்தின் மூலம் எச்சரிக்கை செய்தார்கள்.

عن النعمان بن بشير رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم، قال: «مَثَلُ الْقَائِمِ عَلَى حُدُودِ اللَّهِ وَالْوَاقِعِ فِيهَا؛ كَمَثَلِ قَوْمٍ اسْتَهَمُوا عَلَى سَفِينَةٍ, فَأَصَابَ بَعْضُهُمْ أَعْلَاهَا, وَبَعْضُهُمْ أَسْفَلَهَا, فَكَانَ الَّذِينَ فِي أَسْفَلِهَا إِذَا اسْتَقَوْا مِن الْمَاءِ مَرُّوا عَلَى مَنْ فَوْقَهُمْ, فَقَالُوا: لَوْ أَنَّا خَرَقْنَا فِي نَصِيبِنَا خَرْقًا وَلَمْ نُؤْذِ مَنْ فَوْقَنَا, فَإِنْ يَتْرُكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعًا, وَإِنْ أَخَذُوا عَلَى أَيْدِيهِمْ نَجَوْا وَنَجَوْا جَمِيعًا» (رواه البخاري

இந்திய மக்கள் தமது எதிர்ப்பை முடிந்த வகையில் வெளிப்படுத்த வேண்டிய குறைந்த பட்சம் மனதளவிலாவது வெருக்க வேண்டிய ஒரு தீர்ப்பை நேற்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்புக்கு பின்னணியில் இருக்குற மத்திய அரசின் போலி வேஷம் இந்திய சமூகத்திற்கு அமபலப்படுத்தப் பட வேண்டும்.

இந்தியா வெட்கப் பட்த்தக்கஒரு நிகழ்வை நேற்று சந்தித்தது.

இந்திய கலாச்சாரத்தையும் பன்பாட்டையும் உச்ச நீதிமன்றமே மறந்து விட்டது. கலாச்சார காவலர்கள் என்று மார்தட்டிக்கொண்ட இந்துத்துவா அமைப்புக்களும் அவைகளால் ஆட்டி வைக்கப் படும் மத்திய அரசும் அரவாணிகளின் தாவணிக்குள் மறைந்து கொண்டன.

ஓரின்ச்சேர்க்கை சட்ட விரோதமானது அல்ல என ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச தீர்ப்பளித்துள்ளது.
ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயது வந்த இருவர் உடல் ரீதியான உறவு கொள்வது சட்டப்படி குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ல் கூறப்பட்டுள்ளது. இதை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவை ரத்து செய்து 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து தன்பாலின உறவு  ஆதரவாளர்கள்உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது. முக்கியத்துவும் வாய்ந்த இந்த வழக்கு பின்னர் ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி, விரிவான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றது. பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “தன்பாலின உறவு சட்ட விரோதமா, இல்லையா என்பதை நீதிமன்றமே தனது சட்ட அறிவின் மூலம் முடிவெடுக்கலாம்என்று கூறியது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் ‘‘நாட்டில் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போதும்
ஏற்புடையதாக இருக்காது. எனவே அரசியல் சட்டத்தின் 377வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும். தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல’’ என கூறினர்.

2013 ம் ஆண்டு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி,எஸ்.ஜே.முகோபாத்யாயா போன்ற  மாண்பமை நீதிபதிகளால் பாதுகாக்கப் பட்ட இந்தியாவின் பாரம்பரியக் கலாச்சாரப் பெறுமை நேற்றை தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் வழங்கிய தீர்ப்பால் சீரழிக்கப் பட்டு விட்டது.

2013 ம் ஆண்டு ஓரினச்சேர்க்கையை எதிர்த்த உச்ச நீதிமன்றம் இது பற்றிய ஒரு விவிரிவான விவாத்த்தை நாடாளுமன்றத்தில் நடத்தி முடிவை அறிவிக்குமாறு  மத்திய அரசை கேட்டுக் கொண்டது.

ஆனால் மத்திய அரசு இது பற்றி விவாதம் நடத்த ஒரு போதும்   தயாராகவில்லை.   நெஞ்சில் உரமற்ற கோமாளிகளின் அரசு கொல்லைப்புற வாசல் வழியாக நீதிமன்றத்திற்கு சம்மத்த்தை அனுப்பியது.

அமெரிக்க நாட்டின் அமைச்சர்கள் பலரும் இந்தியாவிற்கு வந்திருக்கிற சூழலில் இந்த தீர்ப்பு வெளியாகியிருப்பது கவனிக்கத் தக்கது.

இந்த தீர்ப்புக்காக நாஸ் என்கிற அமைப்பு போராடி வந்த்து.இந்தியாவில் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தப் பாடு படும்தன்னார்வ அமைப்பு என்ற பெயரில் இயங்கி வரும் இந்தஅமைப்பு எதார்த்த்தில் மத்திய அரசின் அமெரிக்கச் சார்புதாரளமயமாக்குதலுக்குப் பின் இந்தியாவுக்குள் ஊடுறுவிஅமெரிக்க அமைப்பாகும்.

நாடு கார்ப்பரேட்டுக்களின் அடிமை நாடாக மாறிவருவதை இது அம்பலப் படுத்துகிறது.

இதை குடிமக்களின் சம உரிமை என்று மெத்தப் படித்த நீதிபதிகள் கூறியிருப்பது கேவலத்திலும் கேவலமாகும்.

இந்த உலகில் யாருக்கும் வரையற்ற சுதந்திரம் இருக்க முடியாது

தங்களுடை சொந்த மகள் ஆரூஷியை கொன்ற அவளுடைய பெற்றோர்கள் தல்வார் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்க வில்லையா?

சுந்தந்திரம் என்று சொல்லி தெருவில் நிர்வாணமாக யாரும் நடந்து போய்விட முடியாதுபொது இட்த்தில் உறவு கொள்ள முடியாது

இதுவும் சுதந்திரத்திற்கு எதிரானது தான் என்று நாளை ஒரு கோஷம் எழலாம்தந்தையும் மகளும் தம்பதிகளாய வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் ஒரு கோஷம் எழலாம்

சுதந்திரம் என்று கேட்பவர்கள் நிறையக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்இந்த கோஷம் ஓஙகி ஒலிக்கிற போது மிருகத்தை விடவும் கேவலாமான நாகரீகத்தை உயர்ந்த்து என்று பிர்ச்சாரம் செய்ய ஒரு கூட்டம் இருக்கும்.    ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் மிகுந்த எச்சரிக்கையோடு நடந்து கொண்டிருக்க வேண்டும்.

ஓரினச் சேர்க்கை என்பது சுதந்திரம் சம்பந்தப்பட்டது அல்ல.அது போல கலாச்சாரம் சம்பந்தப்பட்ட்து மட்டுமல்ல.சுகாதார்ம் ஆரோக்கியம் சம்பந்தம்பட்டதுமாகும்

உயிர் கொல்லி நோயான எய்ட்ஸ் நோயின் பிற்ப்பிடம் ஓரினச்சேர்க்கையாகும்.

இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் 25 லட்சம் பேர்இருப்பதாகவும்அவர்களில் லட்சத்து 75 ஆயிரம் பேர் எய்ட்ஸ்நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்தியஅரசு சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்த தகவல் எவ்வளவு தூரம் சரியானது என்பதில் விவாவத்த்திற்குரியது என்றாலும் ஓரினச் சேர்க்கைகும் எய்ட்ஸ் நோயுக்கும் இருக்கிற தொடர்பை இது அம்பலப்படுத்துகிறது.

திருக்குர் ஆனும் நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் வழிகாட்டுதல்களும் ஓரினச் சேர்க்கையின் தீமையை அதனுடையை கடுமையான பின் விளைவுகளை தீர்க்கமாக எச்சரிக்கின்றன,

இது அசிங்கம் என்று உமிழ்கிறது திருக்குர் ஆண்
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنْ الْعَالَمِينَ(80)
கடும் தண்டனைக்குரியது என பெருமானார் (ஸல்எச்சரிக்கை

ما في الترمذي وأبي داود وابن ماجه وغيرهم أن النبي صلى الله عليه وسلم قال: (من وجدتموه يعمل عمل قوم لوط فاقتلوا الفاعل والمفعول به)

இது கற்பனைக்கு அப்பாற்பட்ட குற்றச் செயல்

صدق الوليد بن عبد الملك حيث يقول إنه لولا أن الله تعالى ذكر قصة قوم لوط في كتابه العزيز لما تخيلت أن رجلاً يأتي رجلاً.  

இந்தக் குற்றம் முதலில் தோன்றியது லூத் அலை சமூகத்தில்

இபுறாகீம் அலை அவர்களின் சகோதர்ர் ஹாரானுடைய மகனான லூத் அலை , இபுறாகீம் அலை அல்லாஹ் சதூம் நகருக்கு நபியாக அனுப்பினான். ஜோர்டானுக்கும் பாலஸ்தீன்னிற்கும் இடையில் உள்ள சாக்கடலின் மேற்கு கரையில் சதூம் நகரம் இருந்தது.  

சதூம் ஒரு முக்கியமான ஊராக இருந்த்து. அதைச் சுற்றி சிற்றூர்களும் கிராமங்களும் இருந்தன.

மற்ற நபிமார்கள் யாரும் எதிர் கொள்ளாத புது வகையான தீமையை லூத் அலை எதிர் கொண்டார்கள்.  இயற்கைக்கு மாறாக ஓரினப்புணர்ச்சியில் அவருடைய மக்கள் பொது அரங்கிலேயே ஈடுபட்டார்கள்.

நபி லூத் (அலை)சதூம் அவர்கள் சதூம் நகருக்கு  சென்ற போது
அங்குள்ள மக்கள் சிலைகளை வணங்குபவர்களாகவும் பொது இடங்களில் குடித்துக் களியாட்டபோடுபவர்களாகவும் , திருடுதல் , வழிப்பறிக் கொள்ளை செய்கிறவர்களாகவும் இருந்தனர். தமது தீய காரியங்களுக்கு உடன்படாதவர்களை ஓரினப் புணர்ச்சியில் பலவந்தமாக ஈடுபடுத்தினர். கேடுகெட்ட அருவருப்பன குணம்ஙகளின் மொத்த வடிவமாகஅநாகரீக குணங் கொண்ட அரக்கர்களாக அவர்கள் இருந்தனர் . காலம் செல்லச் செல்ல அவர்களது  ஓரினப்புணர்ச்சி ஈடுபாடு மிக தீவிர நிலைக்குச் சென்றது. பொது இடங்களிலும் அந்த வெட்கங்கெட்ட செயலில் அவர்கள் ஈடுபட ஆரம்பித்தார்கள்அது ஒரு தவறான விசயம் என்ற எண்ணமே அவர்களிடமிருந்து எடுபட்டிருந்த்து. அந்தக் கட்டத்தில் தான்  நபி லூத் அலை அவர்கள் அந்த ஊருக்குச் சென்றார்கள்.

அந்த மக்களை திருத்த முயன்றார்கள்.  அதீத முயற்சிகளுக்குப் பின்னரும் அம்மக்கள் திருந்த வில்லை.


திருக்குர் ஆனில் லூத் அலை அவர்களின் வரலாறு அஃராப் அத்தியாயத்தில் சுருக்கமாகவும் உருக்கமாகவும் கிடைக்கிறது.

وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنْ الْعَالَمِينَ(80)إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ(81)وَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوهُمْ مِنْ قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ(82)فَأَنجَيْنَاهُ وَأَهْلَهُ إِلَّا امْرَأَتَهُ كَانَتْ مِنْ الْغَابِرِينَ(83)وَأَمْطَرْنَا عَلَيْهِمْ مَطَرًا فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ(84

லூத் அலை அவர்களே இத்தீய பழக்கத்திலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டு கிற அளவுக்கு நிலமை மோசமாகி இருந்த்து,

رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ(169)فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ(170)

லூத் (அலைஅவர்களது மனைவி  கற்பொழுக்கம் தவறியவராக கணவருக்கு மோசடி செய்தவரல்லஆனல் அவர் லூத (அலைஅவர்கள் மீது நம்பிக்கை கொண்டவராக இருக்கவில்லைஅரது சமூக மக்களின் தீய காரியங்களை எதிர்ப்பவராக இருக்கவில்லைநபியின் சில ரகசியங்களை அவரது எதிகளுக்கு தெரிவித்து விடுபராக இருந்தார் இபுனு அப்பாஸ் (ரலி) (தப்ஸீர் இபுனு கஸீர்)

தப்பான காரியத்தில் ஈடுபடுகிறோம் என்பதை அறிந்தும்ஒருவகையான எகத்தாளமும் திமிரும் லூத் (அலை)சமூகத்தினரின் வார்த்தைகளில் மிகைத்திருந்ததைதிருக்குரான் காட்டுகிறதுஒரு கட்டத்தில் ஆணவத்தின்உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு அவர்களும்அந்த கடைசி வார்த்தையை அகம்பாவத்தோடுசொன்னார்கள்

أَئِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ السَّبِيلَ وَتَأْتُونَ فِي نَادِيكُمْ الْمُنكَرَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللَّهِ إِنْ كُنتَ مِنْ الصَّادِقِينَ(29 العنكبوت

லூத (அலைஇறுதியாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்.

قَالَ رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ(). (29:30)


ஓரினச் சேர்க்கை பழக்கம் ஒரு சிலரோடு முடிந்து போகக் கூடியதல்லஇந்தப் பழக்கத்தின் மிகப்பெரும் கேடு என்ன வெனில் இது நல்லவர்கள் அப்பாவிகளை பாதித்து விடக் கூடியது  ஏதுமறியாச் சிறுவர்களை, ஆர்வக் கோளாறுள்ள இளைஞர்களை வெகுவாக பாதித்து விடும். ஒரு தனித் தீவு போன்ற மன்நோயுக்கு அத்தகையோர் ஆளாகிவிடுவார்கள்.  பல குற்றச் செயல்கள் இந்த இயல்பிலிருந்து பிறக்கும்
.
லூத் அலை அவர்களின் மக்கள் அவர்களை அழிக்க வந்த மலக்குகளை கூட நெருங்கத் தொடங்கினர்.

وَجَاءَهُ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِنْ قَبْلُ كَانُوا يَعْمَلُونَ السَّيِّئَاتِ قَالَ يَاقَوْمِ هَؤُلَاءِ بَنَاتِي هُنَّ أَطْهَرُ لَكُمْ فَاتَّقُوا اللَّهَ وَلَا تُخْزُونِي فِي ضَيْفِي أَلَيْسَ مِنْكُمْ رَجُلٌ رَشِيدٌ(78)قَالُوا لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ(79) قَالَ لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أَوْ آوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ(80)قَالُوا يَالُوطُ إِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَصِلُوا إِلَيْكَ فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِنْ اللَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ أَحَدٌ إِلَّا امْرَأَتَكَ إِنَّهُ مُصِيبُهَا مَا أَصَابَهُمْ إِنَّ مَوْعِدَهُمْ الصُّبْحُ أَلَيْسَ الصُّبْحُ بِقَرِيبٍ(81) هود

அல்லாஹ் கொடுத்த கடும் தண்டனை

فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِنْ سِجِّيلٍ مَنْضُودٍ(82)مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ وَمَا هِيَ مِنْ الظَّالِمِينَ بِبَعِيدٍ(هود 83)

ஜிப்ரயீல் அலை அவர்கள் சதூம் என்ற அந்த ஊரையும் , அத்தோடு சேர்த்து ஏழு நகரங்களையும் அதிலிருந்த மனிதர்கள் மிருகங்களோடு சேர்த்து அப்படியே பூமியிலிருந்து வேறோடு பிடுங்கி வானளவு உயர்த்தி  தலை கீழாக எறிந்தார்கள். அதற்குப் பிற்கு அவர்கள் மீது கல் மழை பொழிந்த்து.


சுட்ட களிமண்ணால் ஆன கற்கள் அவர்கள் மீது தொடர்ச்சியாக வீசப்பட்டதுஅந்த கற்களில் அதனால் கொல்லப் படுபவரின் பெயர் எழுதப் பட்டிருந்தது.

அவர்களை அழிப்பதில் இடிமுழக்கமும் சேர்ந்து கொண்ட்தாக வேறு சில வசன்ங்கள் தெரிவிக்கின்றன.

فَأَخَذَتْهُمْ الصَّيْحَةُ مُشْرِقِينَ(73)فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِنْ سِجِّيلٍ(74)

கேட்போர் நடுங்கும் வகையில் எவ்வாறு உருத்தெரியாமல் அவர்கள் அழிக்கப் பட்டார்கள்.அவர்கள் பெயர்களும் அவர்கள் இருமாந்து வாழ்ந்த நகரங்களும் பூமியின்வரைபடத்திலிருந்து எவ்வாறு அழிக்கப் பட்டன என்பது வாழும் மனிதர்களுக்கு வரலாறுகூறும் எச்சரிக்கையாகும்.

இந்தக் குற்றம் எவ்வளவு கொடியது என்றால் இத்தகையோர் உலகில் உயிர் வாழ அனுமதிக்கப்பட வில்லைஅவர்கள் அழிக்கப்பட்ட தண்ணீர்  சாக்கடல் (டெட் ஸீஉயிரற்றதாக இன்னும் இந்த உலகிற்கு எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது,

சாக்கடல் ஒரு சாமனிய அடையாளம் அல்ல.
இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும் ஜோர்டானிய நிலப்பகுதியில் அமைந்துள்ள அந்த கடல் 67 கீலோ மீட்டர் நீளமும் 67 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது.  1237 அடி ஆழம் கொண்டது.

மனித குலத்தின் கேவலமான ஒரு தீமைக்கு கிடைத்த மிகப் பெரிய தண்டனையின் அடையாளத்தை அல்லாஹ் இன்னும் மிச்சம் வைத்திருக்கிறான்.

ஆங்கில்த்தில் ஒரினச் சேர்க்கையை சடோமி என அழைக்கிறார்கள், அந்தப் பெயரே அந்த நகருக்கு நேர்ந்த விபரீத்த்தையும் சேர்த்துச் சொல்லி விடுகிறது.

அமெரிக்க்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரம் தான் முதன் முதலில் இத்தகைய ஓரினச் சேர்க்கையாளர்களை ஆதரித்த்து. இத்தகைய உறுவு கொண்டவர்களுக்கு திருமணப் பதிவை வழங்கியது.

அதன் பிறகு தொடர்ந்து அமெரிக்க அமைப்புக்கள் உலகின் பல பகுதிகளில் இந்தக் தீய செயலை கொண்டு சென்றனர். இப்போதும் நம்முட்டய நாட்டிலும் அதற்கு அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது.

இஸ்லாத்தைப் பெறுத்தவரை ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்.


ஓரினச் சேர்க்கைகு இஸ்லாம் வழங்கும் தண்டனை

ومع إجماع العلماء على حرمة هذه الجريمة، وعلى وجوب أخذ مقترفيها بالشدة، إلا أنهم اختلفوا في تقدير العقوبة المقررة لها:

1-     مذهب القائلين بالقتل مطلق - الشافعي في قول

முதல் முறையான தண்டைனையுடன் கூடிய எச்சரிக்கையும் –அடுத்த தடவையில் மரண தண்டனையும் வழங்கப் பட வேண்டும் என இமாம் அபூஹனீபா ரஹ் கூறியுள்ளார்

فعند أبي حنيفة يعزر بأمثال هذه الأمور . واعترضه في النهر بأن الذي ذكره غيره تقييد قتله بما إذا اعتاد ذلك . قال في الزيادات : والرأي إلى الإمام فيما إذا اعتاد ذلك ، إن شاء قتله ، وإن شاء ضربه وحبسه 


நாம் இப்படிக் கூறுகிற போது இது சமய ரீதியாக எதிர்க்கப் படுகிறது என்று பலரும் நினைக்கலாம்.
இஸ்லாம் இதை எதிர்க்கிறது என்று சொல்கிறோம் என்பதால் மற்றவர்கள் யாரும் எதிர்க்க வில்லை என்பது அர்த்தமல்ல.

இந்திய சமூகத்தில் எந்த ஒரு இடத்திலும் இதற்கான அனுமதியோ அங்கீகாரமோ தரப்பட்டதில்லை.
உலக அளவில் குடும்ப கட்டமைப்பை காப்பாற்றுவதற்காக மேலை நாடுகள் கடும் போராட்டத்தில் இருக்கின்றன. இந்தியாவில் இறைவன் அருளால் அருமையாக குடும்ப பாரம்பரிய கட்டமைப்பு இருக்கிறது, அதை சீரழிக்கப் புகுந்திருக்கும் இந்த நச்சுப் பாம்பை எதிர்க்க வேண்டியது இந்திய பாரம்பரியத்தை நேசிக்கிற அனைவரின் கடமையாகும்.                                                     
நம்முடைய ஒரு பெரிய வருத்தம் . ஓரினச்சேர்க்கையை தடுக்க முடியாது, என்று தீர்ப்பு எழுதிய நீதிபதிகளுக்கு இந்திய மக்களின் மன்சாட்சியைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசியிருக்கலாமே , இது இந்தியச் சமூகத்தின் முகச்சுளிப்பிற்குரிய காரியம் எனவே இத்தகையோர் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையாவது வைத்திருக்கலாமே!
அப்ஸல் குருவிற்கு தூக்கு தண்டனை வழங்கிய போது இந்திய மக்களின் மன்சாட்சிக்கு மதிப்பளித்த நீதிபதிகள் சடோமிகள் விவகாரத்தில் சப்தம் போடாமல் ஒதுங்கிக் கொண்டது வெட்க்கரமானது,

நீதிமன்றங்கள் தவ்ற விட்ட இந்திய பண்பாட்டையும் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை இந்திய மக்களுக்கு இருக்கிறது. ‘
  


1 comment:

  1. காலத்திகேற்ற அமையான வஷயங்கள்
    அருமை மாஷா அல்லாஹ்

    ReplyDelete