ஹிஜ்ரீ
1440 ம் ஆண்டு பிறந்துள்ளது.
இந்தப் புத்தாண்டை
முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கும் மக்களின் மன மகிழ்ச்சிக்கும் அல்லாஹ் காரணமாக்கி
வைப்பானாக!
அரசுக்கு
எதிராக கருத்துக் கொண்டோரை அநீயாயமான குற்றச்சாட்டுக்களின் பேரில் மத்திய அரசு கைது
செய்து கொண்டிருக்கிறது.
ஆந்திராவில்
வரவர ராவ் உள்ளிட்ட ஐந்து இடசாரி எழுத்தாளர்களை பிரதமரை கொல்ல சதி செய்தார்கள் என்ற
பகீர் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டுள்ளார்கள். பிரதமரை கொவதற்கு அல்ல. தோற்கடிப்பதற்குத்தான் ஒட்டு
மொத்த இந்திய சமுதாயமும் காத்திருக்கிறது என்பதை தந்திரமாக மறைக்கீறார்கள்.
அதே போல்
கோவை உள்ளிட்ட தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இந்துத்துவ தலைவர்களை கொல்ல சதி
செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 5 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.
அவ்வப்போது இத்தகைய அவதூறுகளை சொல்லி ஆட்களை
கைது செய்வதை முஸ்லிம் சமுதாயத்தை இழ்வு படுத்தவும் அச்சுறுத்தி வைக்கவுமான ஒரு ஏற்பாடாக
இந்திய உளவு நிறுவன்ங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
ஜனநாயகத்தின்
குரல் வளையை நெறிக்க முயற்சி செய்கிறவர்கள் எத்தகைய பலமான இடத்தில் இருந்தாலும் , ஒடுக்கப் படுகிற மக்கள் எத்தகைய பலவீனமான நிலையில்
இருந்தாலும் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பவர்கள் நிச்சயமாக பெருந் தோல்வியை சந்திப்பார்கள்
என்பதை முஹர்ரம் நினைவு படுத்துகிறது.
பிர் அவ்னுடைய
கனவு உண்மையானது தான். அவன் அச்சப்பட அதில் நியாயம் இருந்த்து தான்.
அவன் நேர்மையானவனாக
ஜனாநாயக் வாதியாக இருந்தால் தன்னை திருத்திக் கொள்ள முயற்சித்திருந்தால் அதற்கான சிறப்பான
வாய்ப்பு அவனுக்கும் கிடைத்திருக்கும்.
பிர் அவ்னுடைய
வரலாறு மாபெரும் சீர்திருத்தத்தை பெற்ற மூன்று நிகழ்வை உள்ளடக்கி வைத்திருக்கிறது.
1.
அவனுடைய மனைவி ஆசியா அம்மாவுக்கு ஹிதாயத் கிடைத்த்து.
عن ابن عباس قال:
خطرسول
الله صلى الله عليه وسلم في الأرض أربعة خطوط وقال: " أتدرون ما هذا؟ " قالوا: الله ورسوله أعلم.
فقال رسول الله صلى الله عليه وسلم: " أفضـل نساء أهلالجنة: خديجة بنت
خويلد وفاطمة
بنت محمد ومريم
ابنة عمران وآسية بنت مزاحم امرأة فرعون
وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه
ولدا وهم لا يشعرون) القصص: 7 – 9
(وقالت
قرة عين لي ولك) فقال لها فرعون أما لك فنعم وأما لي فلا أي لا حاجة لي به
இப்னு
கஸீர் ரஹ் அவர்கள் இந்த நிகழ்வின் இறுதியில் இப்படி கூறுகிறார்கள்.
والبلاء موكل بالمنطق.
பிர் அவ்ன்
சும்மா இருந்திருக்கலாம். அவனுக்கும் கூட ஹிதாயத் கிடைத்திருக்கும். அதிகாரம் பறிபோயிருக்காது.
அவனது வார்த்தையே
அவனுக்கு எதிராகி விட்டது.
மனிதனது வாழ்க்கை
அவனது பேச்சோடு பிணைக்கப் பட்டிருக்கிறது.
பிர் அவ்னுடைய சபையில் ஒரு மனிதர் வேடிக்கையாக கேட்டார். “ நான்தான் எகிப்தினுடைய அரசன் என்று யாராவது சொன்னால் அவனை என்ன செய்வது ?
பிர் அவ்னும் வேடிக்கையாகவே பதில் சொன்னான் “ அப்படி சொல்பவனை தண்ணீரில் மூழ்கடித்துச் சாகடிக்க வேண்டும்.
பிர் அவ்னும் வேடிக்கையாகவே பதில் சொன்னான் “ அப்படி சொல்பவனை தண்ணீரில் மூழ்கடித்துச் சாகடிக்க வேண்டும்.
அல்லாஹ் பிர் அவ்னுடைய வார்த்தையையே அவனுக்கு எதிரான ஆதாரமாக்கிக் கொண்டான் . பிர் அவ்ன் தன்னை பெரிய கடவுள் என்று பிரகடனப் படுத்திய போது. அவனை செங்கடலில் மூழ்கடித்து அழித்தான். ஒரு மாபெரும் மன்னனுக்கான பரிதாபமான முடிவு அவனது அகந்தையாலேயே தீர்மானிக்கப்பட்டது.
நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்போதும் நிதானத்தோடும் பணிவோடும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் .
பிர் அவ்னை, இறை நிராகரிப்பிற்கு உதாரணமாக்கிய
இறைவன் அவனுடைய மனைவியை இறை நம்பிக்கைகு உதாரணமாக்கினான்.
وَضَرَبَ اللَّهُ مَثَلاً لِّلَّذِينَ آمَنُوا
اِمْرَأَةَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتاً فِي
الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ
الظَّالِمِينَ } [التحريم: 11]
ஹிதாயத்தை பெற்ற இரண்டாம் பிரிவினர்
2.
பிர் அவ்னின் மந்திரவாதிகள்
وألقي السحرة ساجدين.قالوا آمنا برب العالمين.رب موسى وهرون) [ الاعراف:
117 - 122 ].
மந்திரவாதிகளின்
இதயத்தில் ஏற்பட்ட மாற்றம் அவர்களுக்கு ஏற்பட்ட தெளிவு அலாதியானது .
قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلاقطعن
أيديكم وأرجلكم من خلاف ولاصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى.
قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيى.
ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى.
جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها وذلك جزاء من تزكى): [ طه: 70 - 76 ].
قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيى.
ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى.
جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها وذلك جزاء من تزكى): [ طه: 70 - 76 ].
இப்னு
அப்பாஸ் ரலி கூறுவார்கள்
காலையில்
சைத்தானின் நண்பர்களாக இருந்த மந்திரவாதிகள் அன்று மாலைக்குள் அல்லாஹ்வின் நெருங்கிய இறைநேசர்களாக மாறினார்கள். மரணித்தார்கள்.
ஹிதாயத்
பெற்ற மூன்றாமவர்
மூஸாவுக்கு
ஆதரவாக பேசிய பிர் அவ்னின் உறவினர்
மந்திரவாதிகளின்
தோல்விக்கு பிறகு பிர் அவ்னின் பைத்தியம் தலைக்கேறியிருந்த்து. மூஸா அலை அவர்களை கொல்லப் போவதாக சபையோரிடம் கூறினான்.
وَقَالَ فِرْعَوْنُ ذَرُونِي أَقْتُلْ مُوسَى وَلْيَدْعُ
رَبَّهُ إِنِّي أَخَافُ أَن يُبَدِّلَ دِينَكُمْ أَوْ أَن يُظْهِرَ فِي الأَرْضِ
الْفَسَادَ
அப்ப்போது
அவனது குடும்பத்தில் ஒருவர் – அவர் பிர் அவ்னுக்கு நெருக்கமானவராகத் தான் இருந்திருக்க
வேண்டும், மூஸா அலை அவர்களுக்கு ஆதரவாக பேசினார்.
1.
وَقَالَ
مُوسَى إِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُم مِّن كُلِّ مُتَكَبِّرٍ لّا يُؤْمِنُ
بِيَوْمِ الْحِسَابِ
2.
وَقَالَ
رَجُلٌ مُّؤْمِنٌ مِّنْ آلِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَانَهُ أَتَقْتُلُونَ رَجُلا
أَن يَقُولَ رَبِّيَ اللَّهُ وَقَدْ جَاءَكُم بِالْبَيِّنَاتِ مِن رَّبِّكُمْ
وَإِن يَكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهُ وَإِن يَكُ صَادِقًا يُصِبْكُم بَعْضُ
الَّذِي يَعِدُكُمْ إِنَّ اللَّهَ لا يَهْدِي مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ
3.
يَا
قَوْمِ لَكُمُ الْمُلْكُ الْيَوْمَ ظَاهِرِينَ فِي الأَرْضِ فَمَن يَنصُرُنَا مِن
بَأْسِ اللَّهِ إِنْ جَاءَنَا قَالَ فِرْعَوْنُ مَا أُرِيكُمْ إِلاَّ مَا أَرَى وَمَا
أَهْدِيكُمْ إِلاَّ سَبِيلَ الرَّشَادِ
4.
وَقَالَ
الَّذِي آمَنَ يَا قَوْمِ إِنِّي أَخَافُ عَلَيْكُم مِّثْلَ يَوْمِ الأَحْزَابِ
5.
مِثْلَ
دَأْبِ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَالَّذِينَ مِن بَعْدِهِمْ وَمَا اللَّهُ
يُرِيدُ ظُلْمًا لِّلْعِبَادِ
6.
وَيَا
قَوْمِ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ يَوْمَ التَّنَادِ
7.
يَوْمَ
تُوَلُّونَ مُدْبِرِينَ مَا لَكُم مِّنَ اللَّهِ مِنْ عَاصِمٍ وَمَن يُضْلِلِ
اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ
8.
وَلَقَدْ
جَاءَكُمْ يُوسُفُ مِن قَبْلُ بِالْبَيِّنَاتِ فَمَا زِلْتُمْ فِي شَكٍّ مِّمَّا
جَاءَكُم بِهِ حَتَّى إِذَا هَلَكَ قُلْتُمْ لَن يَبْعَثَ اللَّهُ مِن بَعْدِهِ
رَسُولا كَذَلِكَ يُضِلُّ اللَّهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابٌ
9.
الَّذِينَ
يُجَادِلُونَ فِي آيَاتِ اللَّهِ بِغَيْرِ سُلْطَانٍ أَتَاهُمْ كَبُرَ مَقْتًا
عِندَ اللَّهِ وَعِندَ الَّذِينَ آمَنُوا كَذَلِكَ يَطْبَعُ اللَّهُ عَلَى كُلِّ
قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ
பிர்
அவ்னால் அவரை எதி ர் கொள்ள முடியவில்லை. அவரை
பிர் அவ்னின் தீமையிலிருந்து அல்லாஹ் பாதுகாத்தான் என குர் ஆன்
கூறுகிறது.,
فَوَقَاهُ
اللَّهُ سَيِّئَاتِ مَا مَكَرُوا وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِ
இவர்களுக்கு
கிடைத்த நேர்வழி பிர் அவ்னுக்கு கிடைக்க வில்லை.
காரணம்
நியாயமின்றி
பிறரை அடக்கியாளும் குணம் வைத்திருப்பவர்கள் வெற்றி பெற அல்லாஹ் அனுமதிப்பதில்லை.
முஹர்ரம்
தருகிற மிக முக்கியப் பாடம் இது.
எதிர் வரும்
முஹர்ரம் 9 .10 வியாழன் வெள்ளி இரண்டு நாட்கள்
நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.
Masha Allah Hazrath
ReplyDeleteArumayana saithi