وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ
أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ}[الشّورى: 30].
சமீப காலமாக
டிவிட்ட்ர் பேஸ்புக் போன்ற இணைய தளங்களில் பெண்கள் தமக்கு பல ஆண்டுகளுக்கு மு ன் நேர்ந்த
பாலியல் கொடுமைகளை பகிரங்கமாக கூறிவருகின்றனர். இது சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மத்திய அமைச்சர்
எம் ஜே அக்பர் மீது பிரியா ரமணி என்ற பெண்ணும்
இன்னொரு பெண்மணியும் அவர் பத்ரிகையாளராக இருந்த காலத்தில் தமக்கு பாலியல் தொல்லை
கொடுத்த்தாக புகார் கூறியுள்ளனர்.
தமிழகத்திலும்
கூட சில பிரபலங்கள் மீது இத்தகை புகார்கள் கூறப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில்
இந்த புகார்கள் புகார் தர வேண்டும் என்ற நோக்கத்தில் கூறப்பட்டவை அல்ல.
இதுவும் தற்போதயை
தகவல் தொடர்பு உலகின் ஒரு பேஷனாக உருவாகியிருக்கும் ஹேஷ்டேக் மீ டூ ( # mee too ) என்ற
ஒரு புதிய போதையாகும்.
தற்கொலைக்கு
தூண்டுகிற ஒரு விளையாட்டு இணைய தள வழி பிரபலமடைந்த்து போல இதுவும் பிரபலமடைந்து வருகிறது.
Tarana
Burke, என்ற பெண்மணி 2006 ம் ஆண்டு பாலியல் தொல்லைகளை பற்றி
கூறுவதற்காக # மீ டூ வை ஏற்படுத்தினார். அது அவ்வளவாக பிரபலமாகவில்லை. 2017 அக்டோபரில் அல்யசா மிலானோ என்ற அமெரிக்க நடிகை இது தொடர்பில்
டிவிட்டர் பதிவிட்ட பிறகு இது பிரபலமடையத் தொடங்கியது.
பாலியல் தொல்லைக்கு ஆளான உயர் தட்டு ப் பெண்கள் பலரும்
தமக்கு பாலியல் தொல்லை அல்லது சீண்டல் கொடுத்த பிரபலமான ஆண்களைப் பற்றி செய்தி வெளியிட்டனர்.
தான் 16 வயதிலேயே
கற்பழிக்கப் பட்ட்தாக பிரபலமான ஆங்கில நடிகை பதமா லக்சுமி Padma Lakshmi சில நாட்களுக்கு முன்னர் (செப்டம்பர் 2018 ) கூறினார்.
இந்தப் பழக்கம் இப்போது நம்முடைய நாட்டிலும் பரவி
சமூக ஊடகங்களில் பரப்பரப்பாகி வருகிறது.
இதில் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்
உள்ளன்.
வாழ்கையில் நாம் இழைத்து விடும் தவறுகளின் சுவடுகள் அப்போதைக்கு வெளியே வராமல் போகலம்
. ஆனால் அது எப்போதுமே வெளிவராது என்று நினைத்து விடக் கூடாது.
என்றாவது ஒரு நாள் அந்த தவறுகள் வெளிப்படும் எனில்
அப்போது நாம் மரியாதையின் உச்சத்தில் இருப்போம். நமது சாயம் வெளுத்துவிடும்.
பாவமான காரியங்களில் நாம் மிகவும் அச்சப்பட வேண்டிய
விவகாரம் இது.
பாவங்களுக்கு பல விளைவுகள் உண்டு.
1.
ஞானம்
தடுக்கப் படும். حرمان العلم
إن الذنوب تعمي بصيرة القلب، وتطمس نوره، وتسد طرق
العلم، وتحجب موارد الهداية
وقال الضحاك رحمه الله: "ما نعلم أحدًا حفظ
القرآن ثم نسيه إلا بذنب
2.
قلة التوفيق وتعسر الأمور
நல் வாய்ப்புக்கள் குறையும். காரியங்கள் சிரம்மாகும்.
3.
ரிஜ்கு குறையும்.,
حرمان الرزق:
قال النبي صلى الله عليه وسلم:
"إِنَّ الْعَبْدَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ"
இது போல் இன்னும் பல தீமைகள் உண்டு . இவற்றில் முக்கியமான ஒன்று
لباس الذل
إن الرجل إذا أصاب الذنب و لو سرًا أصبح
وعليه مذلته، ووجد عقوبة ذنبه عاجلًا أو آجلًا، فالعز في طاعة الله والذل في
معصيته.
قال الحسن البصري رحمه الله: "أبى الله إلا أن يذل من عصاه".
وقال سليمان التيمي رحمه الله: "إن الرجل ليصيب الذنب في السر فيصبح وعليه مذلته".
மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடும்.
قال أبو الدرداء رضي الله عنه: "إن العبد ليخلو
بمعصية الله تعالى فيلقي الله بغضه في قلوب المؤمنين من حيث لا يشعر".
பாவங்கள் செய்து விட்டு தப்பித்து விடலாம் என்று நினைப்பது
ஒரு வகை போதையாகும். அது உண்மையல்ல.
ஒரு நாள் அல்லது ஒரு நாள் பாவத்திற்கான சமபளத்தை நாம்
எதிர் கொண்டே யாக வேண்டும்.
அது இந்த உலகில் நாம் வாழும் போது கூட கிடைக்கலாம்.
مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ}[النِّسَاء: 123].
என்பதற்கு நாளை மறுமையில் தண்டனை கிடைக்கும் என்பது மட்டுமல்ல இந்த உலகிலும் தண்டனை கிடைக்கும் என்பதே பொருளாகும்.
தவ்பா செய்து குற்றங்களை நிறுத்திக் கொண்டால் தப்பிக்கலாம்.
إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ
عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ ۗ
وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا (70)
குற்றங்கள் வெளிப்படும் போது பாதிப்புக்கு உள்ளானவர்களிடம்
நேரடியாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலும் தப்பிக்கலாம்.
சேதன் பகத் என்ற எழுத்தாளர் ஒரு பெண்ணுடன் வாட்ஸப் சாட்டிங்கில்
பாலியல் துன்புறுத்தல் கொடுத்த்தாக ஒரு பெண் அந்த வாட்ஸப்பின் ஸ்கீரீன் ஷாட் டை வெளியிட்டு புகார் கூறினார், இந்த செய்தி வெளியானதும் அவர் மன்னிப்பு கோரினார்.
அதன் காரணமாக இப்போது அவர் பாராட்டப் படுகிறார்.
பாவப் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர இதுவும் ஒரு
வழியாகும்.
திருந்துவதும் பாவங்களுக்கு இறைவனிடமும் சம்பந்தப்
பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதும் பாவ விமோசனத்திற்கான வழியாகும்.
அல்லாஹ் மன்னிக்க் காத்திருக்கிறான்.
அது போல மன்னிப்பவர்களே சிறந்த மனிதர்கள்.
أن النبي صلى الله عليه وآله وسلم، قال: «ما نقصت صدقة من مال، وما زاد الله عبداً بعفو إلا عزاً، وما
تواضع أحد لله إلا رفعه الله»
பெருங்குற்றங்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டும்.
عن عائشة رضي الله عنها – أيضاً - : أَنَّ قُرَيْشًا
أَهَمَّهُمْ شَأْنُ المَرْأَةِ المَخْزُومِيَّةِ الَّتِي سَرَقَتْ ، فَقَالُوا :
وَمَنْ يُكَلِّمُ فِيهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟
فَقَالُوا : وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ ، حِبُّ
رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَلَّمَهُ أُسَامَةُ ، فَقَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ
حُدُودِ اللَّهِ ؟! ) ، ثُمَّ قَامَ فَاخْتَطَبَ ، ثُمَّ قَالَ : ( إِنَّمَا
أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ ، أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ
تَرَكُوهُ ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الحَدَّ ،
وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ
يَدَهَا ) رواه البخاري (3475) ، ومسلم (1688) .
அதை தவிர்த்து சின்ன சின்னதாக ஏற்படும் தவறுகள் தடுக்கப்
பட வேண்டும். அதே நேரத்தில் மறைக்கப் பட வேண்டும்,
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَتَرَ أَخَاهُ الْمُسْلِمَ فِي
الدُّنْيَا سَتَرَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي الدُّنْيَا وَالآخِرَةِ،
حديث عقبة بن عامر من رأى عورة فسترها كان كمن أحيا موؤدة زاد
الحاكم (من قبرها
தற்காலத்தில் பிறரின் குறைகளை பேசுவதில் வெளிப்படுத்துவதில்
நாம் அவசரம் காட்டுகிறோம். வாடஸ்ப் பேஸ்புக்களில்
யோசிக்காமல் பதிவிடுகிறோம். ஒரு பார்வோர்டில்
ஒருவரை பெரும் இழிவுக்குள்ளாக்கி விடுகிறோம்.
இது மிகவும் கவலை தரத்தக்க மனிதாபிமானமற்ற போக்காகும்.
ஒரு முஸ்லிம் ஊரில் அஜ்வாது என்பவரின் மகள் மாற்று மத்த்தை சார்ந்த
பையனை விரும்பி அவனோடு ஓடிப்போய் விட்டாள்
கவலைப் பட்த்த்டக்க செய்தி. இதை எல்லோரும் பரப்ப வேண்டிய அவசியமே இல்லை. உரியவர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டால் போதுமானாது.
இந்த செய்தியை பொதுவாக அஜ்வாதின் மகள் ஒடிப்போய் விட்டால்
என்று சிலர் வாட்ஸப்பில் பரப்பினார்கள்.
அதனால் ஏற்பட்ட கொடுமை என்ன தெரியுமா ?
அந்த ஊரில் நான்கு அஜ்வாதுகள் இருந்தார்கள். ஒரு குடும்பத்திற்குத்தான் இந்த துயரம் நடந்த்து. ஆனால் செய்தி பரவிய வித்த்தில் நான்கு குடும்பங்களும்
துயரப் பட வேண்டியதாயிற்று.
மற்ற மூவரில் ஒவ்வொரு வரும் என் மகள் அல்ல என ஊர்
மக்களுக்கு சுய விளக்கம் கொடுக்க வேண்டிய துயரத்திற்கு ஆளானார்கள்.
இது பெரும்
பாவம் . இந்தச் செய்தியை பார்வோர்டு செய்த
ஒவ்வொருவரும் மரியாதைக்குரிய மனிதர்களின் கவுரவத்தை சிதைத்து விட்டார்கள் என்றே சொல்ல
வேண்டும்.
ஒருவரின் மானம் மரியாதையை பாதுகாப்பது அவரது உயிரை
காப்பாற்றுவதற்கு சமமானது.
قال النبي صلى الله عليه وسلم: كل المسلم على المسلم حرام، دمه وماله وعرضه. رواه مسلم،
எனவே வாட்ஸப்
பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் எதையும் பதிவிடுவது எளிதானது என்பதால் எதை வேண்டுமானாலும்
பதிவிட்டு விடலாம் என நினைப்பது சுதந்திரத்திற்கு
ஏற்பட்டுள்ள துயராகும்.
குற்றச் சாட்டுக்களை முன் வைப்பதாக இருந்தால் அது
உரிய முறைப்படியே முன் வைக்கப் பட வேண்டும்.
பெண்களின் மீது முறையற்று குற்றச் சாட்டை சுமத்துவோருக்கு
என்பது கசையடிகள் தரப்ப்பட வேண்டும் என்று குர் ஆன் கூறுகிறது.
وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ
ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً
وَلَا تَقْبَلُوا لَهُمْ شَهَادَةً أَبَدًا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ (4)
இது ஆண்களின் மீது விபச்சாரப் பழி சுமத்துவோருக்கும்
பொருந்தும்.
தற்போது மீடூ ஹேஸ்டாக்கில் பல் பெண்கள் ஆண்கள் தமக்கு
பாலியல் தொல்லை கொடுத்த்தாக பல வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளை குறிப்பிடுட்டு வருகிறார்கள்.
இது அவலமான காட்சிகளை சமூகத்திற்கு அரங்கேற்றி ஒரு பரபரப்பை ஏற்படுத்த முடியும் சிலரின்
கவுரவத்தை பாழ் படுத்தவும் முடியுமே அன்றி வேறு எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
பாலியல் மானபங்கம் எந்த அளவு பெரும் குற்றமோ அதே அளவு ஒருவரின் கவுரத்தை மான பங்கப்படுத்துவதும் குற்ற
மேயேகும்.
மீ டூ ஹேஷ்டாக்குகள்
தகுந்த ஆதாரமன்றி அவலமான குற்றச் சாட்டுகளை சமூக வெளியில் பரப்பி விடும் ஆபத்து இருக்கிறது.
உண்மையில் தற்போது நடை பெற்று வரும் இந்த பரபரப்பான
செய்திகள் பெரும் பாலும் பெரும்பாலும் சினிமா துறையைச் சார்ந்தவர்களே!
சினிமா துறை
சுத்தமான துறை அல்ல. என்பது உலகறிந்த இரகசியம்.
சினிமா துறை
என்பதும் உலகம் முழுவதிலும் குடிகாரகள் விபச்சாரிகள்
தாதாக்கள் பொருளாதார குற்றவாளிகளைக் கொண்ட தே என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இளம் பெண்களைப்
பொருத்தவரை இந்த துறையில் நேர்மையாக வெற்றி பெறுவதற்காகன் வாய்ப்பு 25 சதவீதம் கூட
கிடையாது.
இது இப்படித்தான்
என்று தெரிந்து வாய்ப்புக்களை தேடுவதற்காக எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு பிறகு
ஒரு சந்தர்ப்பத்தி இப்படி நடந்த்து அப்படி நடந்த்து என்று பேஷனுக்காக புகார் கூறுவது
சமூகத்தின் மன்சாட்சியை திசை திருப்பக் கூடிய செயலாகும்.
இதையே சற்று
வேறுவிதமாக யோசித்துப் பாருங்கள்
இத்துறை சார்ந்த
ஆண்கள் யாராவது வாய்ப்புக்களை பெருவதற்காக இந்த இந்த பெண்கள் என்னிட்த்தில் இப்படி
இப்படி நடந்து கொண்டார்கள் என்று கூறத்தொடங்கினால் என்ன வாகும்.
பெண்கள் தங்களுக்கு
ஏற்பட்ட துயரங்களை பேச தொடங்கியிருக்கிறார்கள் ஆண்களின் உலகு கதி கலங்கிப் போயிருக்கிறது
என்று சில சமூக ஆர்வலர்கள் கூறுகீறார்கள்.
உண்மையில்
இது சுதந்திரத்தின் ஒரு துயரமாகும்.
ஆதாரமற்ற
அல்லது பொருத்தமற்ற வெறும் குற்றச் சாட்டுக்கள் சமூகத்தில் எவரது மரியாதையையும் சிதைத்து
விடும்.
மீடூ போன்ற ஹேஷ் டாக்க்குகள் பெண்களின் மரியாதையை யே மேலும்
கேள்விகுள்ளாக்கும் .
நமக்கான பாடம்
இரண்டு.
பாவக் கறை
எப்போதும் அழிவதில்லை
போகிற போக்கில்
குற்ற்ச் சாட்டுகளை வீசுவது மிகவும் அநீதியானது. மனிதாபிமானத்திற்கு ஆபத்தானது.
அல்லாஹ் நம்மை
பாதுகாப்பானக!
V to என ஆண்கள் ஹேஷ்டேக், அதில் முதல் நாளிலேயே ஐந்து லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்து விட்டனராம்..
ReplyDelete