இஸ்லாம் சிலைகளுக்கு
எதிரானது.
يا أيّها الذين آمنوا إنّما الخمر والميسر
والأنصاب والأزلام رجس من عمل الشّيطان فاجتنوه لعلّكم تفلحون” المائدة 90.
والأنصاب هي الأصنام المعبودة التي تنصب لتقدّم لها الذّبائح.
والأنصاب هي الأصنام المعبودة التي تنصب لتقدّم لها الذّبائح.
உயிருள்ளவற்றின்
சிலைகளுக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. மற்றும் சில செய்வது பெரும் பாவம்.
تماثيل
الزعماء والسلاطين والملوك أو غيرهم، فعامة الفقهاء على تحريم ذلك وأنه من الكبائر
وقد نقل
ابن جزي رحمه الله- إجماع أهل العلم على
تحريمها حيث قال: " لا يجوز عمل التماثيل على صورة الإنسان أو شيء من الحيوان
و لا استعمالها في شيء أصلاً، والمحرم من ذلك بالإجماع ما له قائم على صفة ما يحي
من الحيوان
செய்வது , நிறுவுவது, வைப்பது
அனைத்தும் ஹராம்.
فعملها
ونصبها ووضعها في البيوت حرام ومن المحظورات في الإسلام
رواه البخارى ومسلم عن
مسروق قال دخلنا مع عبد الله بيتا فيه تماثيل فقال لتمثال منها تمثال من هذا؟
قالوا تمثال مريم قال عبد الله قال رسول الله صلى الله عليه وسلم إن أشد الناس
عذابا يوم القيامة المصورون وفى رواية الذين يصنعون هذه الصور يعذبون يوم القيامة
يقال لهم أحيوا ما خلقتم
என் சிலை கூடாது.
·
சிலைகள் உண்மையை பிரதிபலிப்பவை அல்ல;
இயேசு வின்
சிலை ஒரு கிரேக்க வீரனுடைய முகத்தோற்றத்தில் செய்யப் பட்ட்து
அதே போல புத்தரின்
சிலையும் மகாவீர்ர்ரின் சிலையும் கற்பனையாக மாடல்களை கொண்டு உருவாக்கப் பட்டவை.
இன்று அந்த
சிலைகளில் தென்படும் முகங்கள் தான் உண்மையானவையோ என்பது போல பிரபலப் படுத்தப் பட்டு
விட்டது.
தமிழக முன்னாள்
முதலைமைச்சர் ஜெயலலிதா இறந்த போது அவரது கட்சியினரின் சார்பில் சென்னையில் வைக்கப்
பட்ட சிலை அவரைப் போல இல்லை என்று பேசப் பட்டு வேறு சிலை வைக்கப் பட்டது. இத்தனை போட்டோக்கள் இருந்தும்.
இப்போதும்
குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள பட்டேல் சிலை பட்டேலை போல இல்லை என்பது ஊடகங்களில் சர்ச்சையாகி வருகிறது.
·
சிலைகளால் ஒரு நன்மையும் இல்லை.
சிலை வைக்க என்ன காரணம் சொல்லப்படுகிறது.
·
அவர்களின் நினைவைப் போற்ற
·
சமூகத்திற்கு முன்னுதாரணங்களாக அவர்களைக் காட்ட.
·
இளையதலைமுறைக்கு வழிகாட்ட.
·
அவர்களைப் பற்றிய செய்திகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல
இந்த நோக்கம் நிறைவேறுகிறதா? அவுட்புட் என்ன?
இல்லை.
புத்தர், இயேசு, காந்திக்கு இல்லாத சிலைகளா? ஆனால் அவர்களை முன்னுதாரணப்படுத்தி சமூகத்தை மாற்றவும் தேற்றவும் சிலைகள் என்ன
பங்களிப்பைச் செய்துவிட்டன?
பெரியாரின் தத்துவங்களை அவரை வழிகாட்டியாக ஆக்குமா ?
அல்லது அவருடைய சிலைகள் வழிகாட்டிகளாகுமா ?
பெரியார் சிலை பெரியாரையும் ஒரு கடவுளாக்கி விடுமே!
அவரது கொள்கைக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் கூட அவரது சிலைக்கு மாலை அணிவித்து அவரை மதிப்பதாக
காட்டிக் கொள்கிறார்களே!
கடல்மட்டத்தில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்குச் சிலை வைக்கப்பட்டது. அவரை நிற்க வைத்ததின்
தாக்கம் ஏதேனும் திருக்குறள் நிற்பதற்கு உதவுகிறதா?
அவரோ 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தன் குறட்பாக்களால் நின்றுவருகிறார்.
பெரியாரின் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் இருந்தால், அவரின் எதிரிகள் கூட இடம்கேட்டு
விண்ணப்பிப்பார்கள்.
சிலைகளால் ஏற்படும் தீமைகள்
சிலைகள் சமூகத்தை
எப்போதும் வழிகெடுத்தவாறே உள்ளன.
·
பணத்தை ஊதாரித்தனமாக செலவிடச் செய்து
உதாசீனம் செய்கிறது.
பட்டேல் சிலைக்காக மூவாயிரம் கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளது. நாடு இப்போது இருக்கிற
நெருக்கடியான நிலையில் இந்த செயலை என்ன வென்பது
நேற்று பட்டேல் சிலையை பிரதமர் மோடி ஆடம்பரமாக திறந்து வைத்தை பார்த்த போது ரோம்
பற்றி எறிந்த போது நீரோ மன்ன்ன் பிடில் வாசித்த்து போல என்ற வாசகம் நினைவுக்கு வந்த்தை
மறுக்க முடியவில்லை.
·
சிலைகள் தனிமனித வழிபாடுகளை உண்டுபண்ணி போதை
ஏற்றுகிறது. அந்தப் போதை எவ்விதத்திலும் சமூகத்திற்கு நன்மை பயப்பதில்லை.
பிரிவினைகளையும் கோஷ்டி மனப்பான்மையையும் ஏற்படுத்தி காழ்ப்புகளை
நிலைப்படுத்துகிறது. சிலை வைக்கப்பட்டவர் நல்லவராக இருந்தாலும், அவரது சிலை சமூகத்தைச் சீர்குலைக்கிறது.
·
அம்பேதகார். பெரியார். பசும்பொன் தேவர் ஆகியோரின் சிலைகளுக்கு செய்யப் பட்ட அவமரியாதை பல சந்தர்ப்பத்திலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
அம்பேதகார். பெரியார். பசும்பொன் தேவர் ஆகியோரின் சிலைகளுக்கு செய்யப் பட்ட அவமரியாதை பல சந்தர்ப்பத்திலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
சிலைகள் பிரச்சினையாகின்றன என்பது இங்கு மட்டும் அல்ல. சிலைகளால் ஏற்படும் பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாகும்.
·
அமெரிக்காவின் புகழ்பெற்ற டெக்சாஸ்
பல்கலைக்கழகத்தில் உள்நாட்டுப் போரின்போது அதிபராக இருந்த
ஜெஃபர்சன் டேவிசின் சிலை வைக்கப்பட்டிருந்த்து. அந்தச் சிலை அடிமைத்தளையின் குறியீடாக இருப்பதை
எதிர்த்து மாணவர் போராட்டம் வெடித்தத். 82 வருடங்களாய் வீற்றிருந்த டேவிஸ், பிறகு அங்கிருந்து
அருங்காட்சியத்திற்கு மாற்றப்பட்ட்து.
·
ஒரு சிலையை அகற்றுவதற்காக 80 வருடப் போராட்டம் கேள்விப்பட்டுள்ளீர்களா? தென்னாப்பிரிக்காவின்
கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் சீசில் ரோட்ஸ் என்ற வெள்ளையரின் சிலையை 80 வருடமாக அங்குள்ள கறுப்பர்கள்
போராடினர். கடந்த மார்ச்சில் அங்கு போராட்டம் வெடித்த்து.
ரோட்ஸ் மஸ்ட் ஃபால் (ரோட்ஸ் வீழ்ந்தே ஆகவேண்டும்) எனும் பெயரில் இயக்கமாக திரண்டது. சுமானி
மாக்ஸ்வெலி எனும் ஒரு மாணவன் அச்சிலையின் மீது மலத்தை வீசி அவ்வியக்கத்தை வழிநடத்தினான்.
பல்கலைக்கழகம் அவனை நீக்கியது. பிறகு அதே பல்கலைக்கழகம் ரோட்ஸ் சிலைக்கெதிரான
கொந்தளிப்பு கண்டு சிலையையும் ஏப்ரல் 9இல் நீக்கிவிட்டு, அச்சிலையை எங்கே வைப்பது எனத் தெரியாமல் தேசியப் பாரம்பரியச் சபைக்கு
விண்ணப்பம் அளித்துள்ளது.
இறைத்தூதர்கள்
தாவீதும் சொல்லிச் சென்றதாக பைபிளில் குறிப்பிடப் படும் வாசகங்கள் கவனிக்கத் தக்கவை .
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும்
அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே
சாட்சிகளாயிருக்கிறார்கள். (ஏசாயா 44:9)
திருக்குர்
ஆன் கூறுகிறது,
أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّىٰ(19) وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ (20) أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنثَىٰ (21) تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ (22) إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنتُمْ
وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللَّهُ بِهَا مِن سُلْطَانٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا
الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنفُسُ
கல். இரும்பு
அல்லது வெண்கலத்திலான ஒரு சிலைக்கு அப்படி இப்படி என்று பெயர் சூட்டி விடுவதால் அது
எவ்வளவு பலமான பெயராக இருந்தாலும் அச்சிலை பலமானதாக ஆகிவிடுமா ?
இல்லை
உண்மையில் சிலைகள் வைக்கும் பழக்கும் ஆன்மிகத் தளத்தில் சடங்காகவும் வேறு தளங்களில் அரசியலாகவும் தான் வளர்ந்துகொண்டே இருக்கிறது. எந்தக் காலத்திலும் இவை சமூக முன்னேற்றத்திற்கு நகர்த்திச் சென்றதில்லை.
தற்போது
குஜராத்தில் சாது நர்மதா அணை எதிரேயுள்ள சாது பெட் தீவில் வல்லபாய் பட்டேல் சிலை
அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது. 182 மீட்டர் உயரமுள்ள இந்த சிலை உலகின் மிக உயர்ந்த சிலையாகும். சுமார் 3000 ஆயிரம்
கோடி ரூபாய் செலவில் இச்சிலை அமைக்கப் பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் படேலின் பிறந்த நாளான 31
அக்டோபர் 2018 அன்று திறக்கப்பட்டது
இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை என்று விளம்பரப் படுத்தப் பட்டாலும்
இது பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் ஆகியவற்றின் ஒரு மத அரசியலேயாகும்.
பட்டேல் ஒரு காங்கிரஸ்காரர் அவருக்கு இப்படி ஒரு மாபெரிய சிலையை வைத்த்தன் மூலம்
பாஜக் மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் நாட்டுக்கு முதன்மைப் படுத்தப் படுகிற தலைவர்கள்
யாரும் இல்லை. அப்படி முதன்மைப் படுத்தும் துணிச்சல் இந்த இயக்கங்களுக்கு இல்லை என்பது
தெளிவாகிறது.
நாட்டை பட்டேல் ஒன்று படுத்தினார் என்ற வார்த்தை போலித்தனமானதாகும்.
நாடு விடுதலைப் பெற்ற போது இந்தியாவில் 526 குட்டி அரசுகள் சமஸ்தானங்கள் என்ற பெயரில் இருந்தன.
இந்த சமஸ்தான்ங்களை ஒரே நாடு என்ற கட்டுக் குள் கொண்டு வர முயற்சித்து கொண்டு வந்தவர்
மெளன் பேட்டன் பிரபு. அரசியல் ரீதியாக இந்த முயற்சியை செய்தத்தில் மெளன் பேட்டனுக்கு இதில் முக்கியப் பங்களிப்பு உண்டு,
உணர்வு ரீதியாக இந்திய மக்களை ஒன்றுபடுத்தி குமரியிலிருந்து
தில்லி வரை சுதந்திரப் போராட்ட்த்தில் ஒன்றினைத்தவர்கள் காந்தி நேருவு ஆசாத் உள்ளிட்ட தலைவர்களாகும்.
உலகளாவிய கவனத்தைப் பெருகிற ஒரு பெரும் திட்ட்த்திற்கு காந்தி
நேரு போன்றவர்களை புறக்கணித்த்தன் மூலம் இந்தியாவில்
ஒரு வஞ்சக அரசியலை அரங்கேற்றும் பஜக வின் முயற்சி பிரம்மாண்ட சிலை திட்டத்தின் பின்னணியில்
இருக்கும் தகவலாகும்.
மாபெரும் மனிதர்களின் பெருமையை ஒரு சிலையை
நிறுவியதன் மூலம் பின்னுக்கு தள்ளிவிடலாம் என்ற
சங்க் பரிவார்களின் கனவு ஒரு போதும் நிறைவேறாது.
இந்திய மக்களின் உள்ளத்தில் நிறைந்திருக்கிற
தூய தலைவர்களின் மரியாதை பிரம்மாண்ட சிலைகளை
விட உயர்ந்த்து.
பட்டேல் சிலையை பாஜக நிறுவியதற்கு இரண்டு முக்கிய
காரணங்கள் உண்டு.
ஒன்று அவருடைய ஆர் எஸ் எஸ் ஆதரவு ப் போக்கு
இரண்டாவது அவருடைய இஸ்லாமிய எதிர்ப்புணர்வு
1948
ஜனவரி 31 ம் தேதி காந்தி கொல்லப் பட்டார்.
பிப்ரவரி 4 ம் தேதி ஆர் எஸ் எஸ் அமைப்பு தடை
செய்யப் பட்டது. இந்த உத்தரவை வெளியிட்டது
பட்டேல் தான்.
பிரதமர் நேருவின் அழுத்தத்தின் காரணமாகவே பட்டேல்
இந்த உத்தரவை வெளியிட்டார். அப்போதும் கூட
அவர் கூறியது . காந்தி கொலையில் ஆர் எஸ் எஸுக்கு தொடர்பில்லை. ஆயினும் காந்தி கொல்லப்
பட்ட போது அவர்கள் இனிப்பு வழங்கினார்கள். அதற்காகவே தடை செய்யப் பட்ட்தாக கூறினார்.
தொடர்ந்து ஆர் எஸ் எஸ் தலைவர் கோல்வால்கருடனான
இரகசிய உடன்பாடுகளின் அடிப்படையில் பிரதமர் நேருவை நிர்பந்தித்து ஆர் எஸ் எஸின் மீதான
தடையை அடுத்த ஆண்டே சாஸ்திரி நீக்கினார்.
காங்கிரஸ் இயக்கத்திற்குள் ஆர் எஸ் எஸின் ஆதரவாளராக
இருந்தவருக்கு மரியாதை செய்யும் பெருட்டு இம்மாபெரிய சிலை வைக்கப் பட்டுள்ளது.
பட்டேலின் இந்துத்துவ கோட்பாடும் இசுலாமிய
எதிர்ப்புணர்வும் வெளிப்படையானவை.
இண்டியா வின்ஸ் பிரீடம் என்ற அவருடை நூலில்
முஸ்லிம்களுக்கு எதிரான வன்ம்மான தவறான பல கருத்துக்களை அவர் கூறியுள்ளார். அவரது கருத்துக்கள்
தவறானவை என்பதை அபுல் கலாம் ஆசாத் விரிவாக விளக்கியுள்ளார்.
படேலின் அனுகுமுறையில் வெளிப்பட்ட முஸ்லிம்
விரோதப் போக்கை நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவுடன் இணைய மறுத்த சமஸ்தான்ங்களை
அவர் கையாள வித்த்தில் தெளிவாகியது.
உண்மையில் அவருடைய் உத்திகள் ஒன்றினைக்கும்
உத்தியாக இல்லாமல் பிளவு படுத்தும் உத்தியாகவே அமைந்தன.
அந்த உத்திதான் இப்போதும் நாட்டு மக்களை பிளவு
படுத்தும் சக்திகளுக்கு துணியாக இருக்கின்றன.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது மூன்று சமஸ்தான்ங்கள்
இந்தியாவுடன் இணைய மறுத்தன. காஷ்மீர். ஹைதராபாத். ஜினாஹட்
காஷ்மீரும் ஜினாஹட்டும் இந்தியாவுடன் இணைக்கப்
பட்டது. காஷ்மீரில் ஜுனாஹட்டிலும் மக்களிடம் அது குறித்து ஒரு வாக்கெடுப்பு நட்த்தப்படும் அதன்
அடிப்படையில் இணைப்பு தொடரும் என்று வாக்களிக்கப் பட்டது. ஆனால் ஜுனாஹட்டில் மட்டும் வாக்கெடுப்பு நட்த்தப்
பட்டது. இன்று வரை காஷ்மீரில் நடத்தப் படவில்லை . அதற்கு காரணம் ஜுனாஹட்டில் இந்துக்கள்
அதிகம் என்பதும் காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிகம் என்பதுமே காரணமாகும்.
ஹைதராபாத சமஸ்தானத்தை இணைப்பதற்காக எந்த வித
சமர ஏற்பாடுகளுக்கும் செல்லாமல் ஹைதராபாத்தின் மீது ஒரு யுத்தம் தொடுத்தார். இதில்
சுமார் 2 இலட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்.
அதே நேரத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் போன்ற
வற்றில் ஆட்சியாளர்களாக இருந்த பிராமண ஆட்சியாளர்களை பெரிய அளவில் சாஸ்திரி ஆதரித்தார்.
இது மட்டுமல்ல .ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தலைவர்களுக்கும்
சாஸ்திரிக்கும் இடையே இருந்த தொடர்புகளும் பின்னாட்களில் வெளிப்பட்டன.
இந்த இரண்டு காரணங்களை முன்னிருத்தியே இப்போதைக்கு
நாட்டுக்கு தேவையற்ற இந்த பிரம்மாண்ட சிலையை பிரதமர் திறந்து வைத்துள்ளார்.
சிலை எந்த அளவு உயரமானதோ அதே அளவு இதன் பின்னாள்
உள்ள அரசியல் வஞ்சகமும் உயரமானது.
இந்தச் சிலை மக்களின் அன்புப் பாதையில் ஒன்று
படுத்தக் கூடியதாக இருக்க வாய்ப்பில்லை.
இந்தச் சிலைக்குப் பின்னால் உள்ள வஞ்சக அரசியலால்
மக்களை பிளவு படுத்தும் சக்திகள் வெற்றியடைந்து விடக் கூடாது என்பதே இப்பொதையை இந்தியாவின்
பிரார்த்தனையாகும்.
No comments:
Post a Comment