அயோத்தி
பாபரீ மஸ்ஜித் வழக்கில் உச்சநிதிமன்றத்தில் நேற்றுடன் வாதங்கள் நிறைவு பெற்று விட்டன. தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வருகிற நவம்பர் மாதம் 17 ம் தேதியன்று பணி ஓய்வு பெறவுள்ளதால் அதற்குள் தீர்ப்பு வந்து விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
விவாதம்
நடை பெற்ற கால கட்டத்தில் முஸ்லிம் தரப்பினரிடம் அதிகம் குறுக்கு கேள்விகள் கேட்கப் பட்ட்தாகவும் , இந்துக்கள் தரப்பில் வாதம் நடை பெற்ற போது அத்தகைய குறுக்கு கேள்விகள் கேட்கப் பட வில்லை என்று முஸ்லிம்கள் தரப்பில் ஆஜ்ராகிற வழக்கறிஞர் ராஜீவ் தவன் குற்றம் சாட்டினார். அது மட்டுமல்ல வாதத்தின் இறுதி நாளன்று இந்து மகா சபை வழக்கறிஞர், பாபரி மஸ்ஜித் இருந்த இட்த்தில் தான் ராமர் பிறந்தர் என்பதை போல சித்தரிக்கிற வரை படங்களை தாக்கல் செய்த போது அந்தப் படங்களை வழக்கறிஞர்
ராஜீவ்
தவான் நீதிமன்றத்திலேயே கிழித்து எறிந்தார். நீதிமன்றத்தை கேலிக் கூத்தாக்கும் பொறுத்தமற்ற வேலையை இந்து அமைப்புக்கள் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
இத்தகைய
சூழலில் , நாடு முழுவதிலும் இந்துத்துவ செல்வாக்கு சர்வாதிகாரம் செய்து கொண்டிருக்கிற நிலையில் இன்ஷா
அல்லாஹ் விரைவில் தீர்ப்பு வெளியாக விருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை
ஏற்றுக் கொள்வோம் என்று அகில இந்திய உலமா கவுன்ஸில் செயலாளர் மகமூத் தர்யாடி கூறியிருக்கிறார். டிஸம்பர் 6 அன்று ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும். அதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சர்ச்ச்சைக்குரிய பாஜக எம்பி சாட்சி
மகராஜ
கூறியிருக்கிறார்.
உள்
நாட்டு நிலவரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இந்த இரு கருத்துக்களும் சாட்சி.
ஆதிக்க்
வெறித்தனத்தின்
உச்சியில்
இந்துத்துவ
சக்திகளும், அடங்கிப் போக வேண்டிய நிர்பந்தத்தில் முஸ்லிம்களும் இருப்பதை நிலமை பட்டவர்த்தனமாக புலப்படுத்துகிறது.
இந்த
எதார்த்தத்தை முஸ்லிம்
சமுதாயம்
சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நிதானத்தோடும், தைரியத்தோடும் சூழ்நிலைகளை எதிர் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே
சொல்லணா துயரங்களுக்கு ஆளாகி வருகிற முஸ்லிம் சமுதாயம் இந்த தீர்ப்புக்கு பிறகு மேலும் சிரமங்களுக்கு ஆளாகி விடக் கூடாது என்பதே
இப்போதைய
பிரதான அச்சம் .
அல்லாஹ்
பாதுகாப்பானாக!
எந்த
தீர்ப்பை
எப்படி தருவது என்பதை இறுதியாக தீர்மாணிப்பவன் அல்லாஹ்வே!
இபுறாகீம்
நபிக்கு எதிராக நம்ரூதின் தீர்ப்பு, பிரம்மாண்ட நெருப்புக் குண்டத்தை உருவாக்கியது.
வரலாறு
என்ன சொல்கிறது என்றால் ?
அப்படி
நெருப்புக்
குண்டம் தயாரிக்கப் பட்ட போது அது மாபெரிய இயக்கமாக நடை பெற்றது என்கிறது,
அந்தக்
காலத்தில்
ஏதேனும் ஒரு பெண்மணிக்கு தலைவலி வந்தால்,
இபுறாகீமை எரிக்கும் நெருப்புக் குண்டத்திற்கு விறகு வழங்குவேன் என நேர்ச்சை செய்வாளாம்.
عن السديّ، قال قَالُوا ابْنُوا لَهُ بُنْيَانًا
فَأَلْقُوهُ فِي الْجَحِيمِ قال: فحبسوه في بيت، وجمعوا له حطبا، حتى إن كانت
المرأة لتمرض فتقول: لئن عافاني الله لأجمعنّ حطبا لإبراهيم، فلما جمعوا له،
وأكثروا من الحطب ) حتى إن الطير لتمرّ بها فتحترق من شدة وهجها
நம்ரூதீன்
சமுதாயம்
ஏகத்துவ பிரச்சரசகருத்து எதிராக அப்படி வரித்நு கட்டிக் கொண்டு நின்றது.
மொத்த
சூழலும் தனக்கு எதிராக நின்ற போது, தன்னால் இனி செய்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் இறைத்தூதர்
இபுறாகீம்
(அலை )
அல்லாஹ்வின் நாட்டம் நடக்கட்டும் என்று தீர்மாணித்தார்கள்.
அல்லாஹ்வின்
தீர்ப்பு முற்றிலும் வேறு விதமாக இருந்த்து.
قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا
وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ (69) وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ (70
அல்லாஹ்வின்
மீது பரிபூரண நம்பிக்கை கொண்டவர்களாக நாமும் தீர்மாணிப்போம் . அல்லாஹ்வின் நாட்டம் நடக்கட்டும்.
பத்று
யுத்தத்தின்
போது படை வரிசையில் தோழர்களை அணி வகுக்க வைத்து தனது கூடாரத்தில் சஜ்தாவில் விழுந்து பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தை
يا حي يا قيوم
وروى البيهقي من حديث علي بن أبي طالب - رضي الله
عنه - قال: لما كان يوم بدر قاتلت
شيئاً من قتال، ثم جئت مسرعاً لأنظر إلى رسول الله - صلى الله عليه وسلم - ما فعل،
قال: فجئت فإذا هو ساجد يقول: "يا حي يا قيوم، يا حي يا قيوم" لا يزيد
عليها، فرجعت إلى القتال، ثم جئت وهو ساجد يقول ذلك، ثم ذهبت إلى القتال، ثم جئت
وهو ساجد يقول ذلك، فلم يزل يقول ذلك حتى فتح الله عليه
ஹிஜ்ரீ
4 ம் ஆண்டு திடீரென மக்காவின் காபிர்கள் யூதர்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டு மதீனாவை நோக்கி 10 ஆயிரம் பேர்களோடு திரண்டு வருகிறார்கள் என்ற செய்தி ஒரு இஷா தொழுகைக்குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்களுக்கு சொல்லப் பட்டது. ஒரு யுத்த்தை சற்றும் எதிர்பார்க்காமல் இருந்த நேரம் அது.
அப்போது
பெருமானாரின்
நாவிலிருந்து
வந்த வார்த்தை
حسبنا الله ونعم
الوكيل
ففي صحيح البخارى: عن ابن عباس: { حسبنا الله ونعم الوكيل } قالها إبراهيم عليه السلام
حين ألقى في النار وقالها محمد صلى الله عليه وسلم حين قالوا { إن الناس قد جمعوا
لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل }
இறைத்தூதர் யூனுஸ் அலை அவர்கள் தனக்கேற்பட்ட சிக்கலிருந்து விடுபடுவதற்காக சொன்ன வார்த்தை
وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ
عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ
إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ} فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي
المؤمنين) [الأنبياء : 87]
ويقول النبي سيدنا محمد عليه الصلاة والسلام (عن سعد رضي الله عنه
قال: كنا جلوسًا عند النبي صل الله عليه وسلم، فقال: ألا أخبرك بشيء إذا نزل برجل
منكم في كرب، أو بلاء من بلايا الدنيا دعا به يفرج عنه؟ فقيل له: بلى، فقال: دعاء
ذي النون: لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)
இந்த திக்ருகளை இன்ஷா அல்லாஹ் பாபரீ மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வரும் வரை நாம் நிறைய ஓதுவோம். கூட்டாகவும் தனியாகவும். கவலையோடும் அக்கறையோடும் . சமூக பொறுப்புணர்வோடும்.
நெருக்கடியான
நேரங்களில்
பெருமானார் (ஸல்) அவர்கள் இப்படியும் பிரார்த்திப்பார்கள்
மிக
அருமையான
துஆ
اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلاَ تَكِلْنِي
إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لاَ إِلَهَ
إِلاَّ أَنْتَ))
فَلاَ تَكِلْنِي
إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ மிக அற்புதமான வாசகம்
இறைவா! என்னை பாதுகாக்கிற பொறுப்பை ஒரு கண நேரம் கூட என் மீது சுமத்தி விடாதே!
அகழ் யுத்த்த்தின் மிக நெருக்டியான கடட்த்தில் நாங்கள் என்ன பிரார்த்திப்பது என்று கேட்ட தோழர்களுக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
دعاء النبي صلى الله عليه وسلم يوم الخندق
وفي المسند عن أبي سعيد الخدري رضي الله عنه قال: قلنا يوم الخندق:
يا رسول الله هل من شيء نقوله؟ فقد بلغت القلوب الحناجر، قال: " نعم، اللهم
استر عوراتنا وآمن روعاتنا "قال: فضرب الله عز وجل وجوه أعدائنا بالريح،
فهزمهم الله عز وجل بالريح
இறைவா! நாங்கள் வெட்கப்பட வேண்டிய காரியங்களை எங்களை காப்பாயாக! எங்களது அச்சத்தை போக்கி நிம்மதியளிப்பாயாக!
பாபரீ மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வரும் வரை இத்தகை பிரார்த்தனை முன்னெடுப்போம்.
பிரார்த்தனை என்றால் ஒரு முறை இரு முறை அல்ல. கேட்டுக்
கொண்டே இருப்போம். கையேந்தும் ஒவ்வொரு முறையும்
வழிபாடுகளில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விசயம்
அதிகப்படியாக செய்வதாகும்
ஸஹீஹுல் புகாரியில் வஹியின் தொடக்கம் பற்றி பாடத்தில்
ஒரு ஹதீஸ் வருகிறது, அன்னை ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபியாக தேர்வு செய்யப் படுவதற்கு
முன் ஆறு மாதங்கள் உண்மை கனவுகளை கண்டார்கள். அதன் பிறகு தனியே இருப்பது அவர்களுக்கு
விருப்பமானது. அதனால் ஹிரா குகையில் தனித்திருந்தார்கள். அப்போது பல இரவுகளில் இறைவனை வணங்கிக் கொண்டிருந்தார்கள்.
حديث عائشة رضي الله عنها قالت: أول ما بدئ به رسول الله صلى الله عليه وسلم من
الوحي الرؤيا الصالحة في النوم، فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح، ثم حبب
إليه الخلاء، وكان يخلو بغار حراء، فيتحنث فيه وهو التعبد الليالي ذوات العدد قبل
أن ينزع إلى أهله،
இது பற்றிய செய்தியை சொல்லுகிற போது ஆயிஷா அம்மையார்
கூறுவார்கள்.
فيتحنث فيه وهو التعبد الليالي ذوات العدد
இதன் பொருள் அதிகமான் நாட்கள் என்பதாகும். \
இதற்கு விளக்கம் அளிக்கும் விரிவுரையாளர்கள் ஒரு முக்கியமான
வழி காட்டுதலை கூறுவார்கள்.
எந்த ஒரு வணக்கமும் இலேசாக செய்யப் படுவது சரியானதல்ல. வணக்கங்கள் அதிகப்படியாக செய்யப் பட வேண்டும். அதுவே
அழுத்தமான வணக்கமாகும்.
முஃமின்கள் கவனிக்க வேண்டிய செய்தி.
அதனால் தான் இஸ்லாமிய தொழுகையில் முன் சுன்னத் பின்
சுன்னத் தஸ்பீஹ்கள் என ஒரு இபாத்த்தின் வரிசை இருக்கிறது.
லுஹர் தொழுகிறோம் என்றால் பர்ளு நான்கு ரக அத்தை மட்டும் தொழுதால் – அது வணக்க சாலியின் தொழுகை அல்ல,
அதிகப்படியான வணக்கங்களோடு நிறைவேற்றப்படும் போது தான்
வணக்கங்கல் முழுமையடையும்.
நோன்பிலும் கூட இப்படித்தான், ரமலான் நோன்பு கடமை என்றால்
பெருமானார் (ஸல்) அவர்கள் ஷஃபானில் அதிகமாக நோன்பிருப்பார்கள் என்று ஹதீஸ் வருகிறது.
ஜகாத்தும் அப்படித்தான், அதை வலிமைப்படுத்த சதகா வின்
வாசலை மார்க்கம் ஏராளமாக அறிவுறுத்துகீறது.
ஹஜ்ஜும் கூட உம்ராக்களின் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே எந்த ஒரு வணக்கமும் இலேசாக அலட்சியமாக செய்யப் படலாகாது. அதிகப்படியாக சிரத்தை
எடுத்துக் கொள்கிறோம் என்பது ருசுவாகிற மாதிரி அழுத்தமாக செய்யப் பட வேண்டும்.
எனவே பாபரீ மஸ்ஜிதின் தீர்ப்பும் அதற்கு பிந்தைய இந்திய
முஸ்லிம்களின் நிலையும் நன்மையானதாய அமைய தொடர்ந்து பிரார்த்திப்போம்,
ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்
பாரக்கல்லலாஹ்.அருமையான பதிவு.
ReplyDelete