வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 20, 2020

முதலமைச்சரின் கேள்விக்கென்ன பதில் ?



யாசீன் அத்தியாயம் மக்காவின் அகம்பாவம் பிடித்த தலைவர்களின் குதர்க்கமான பல வாதங்களை படம் பிடிக்கிறது.
அவற்றில் ஒன்று
وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُّبِينٍ (47)

செல்வந்தர்களாக இருக்கிறீர்களே! ஏழைகள் மீது இரக்கம் காட்டக் கூடாதா என்று அவர்களிடம் கேட்டால்/

அல்லாஹ்வே அவர்களுக்கு கொடுக்காம
 தானே அவர்களை ஏழைகளாக்கியிருக்கிறான். அவர்களுக்கு நாங்க ஏன் கொடுக்கனும் என்று கேட்பார்கள்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் மக்காவின் மடையர்கள் கேட்டார்கள்

தானாக செத்தை சாப்பிடக் கூடாது. அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுத்ததை தான் சாப்பிட வேண்டும் என்று இஸலாம் கூறிய போது  நாம் கொன்றதை சாப்பிடலாம் எனும் போது அல்லாஹ்வே கொன்றதை ஏன் சாப்பிடக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்கள்.   

அல்லாஹ் கூறுகிறான். இத்தகையோர் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள்.

நம்முடைய் இன்றைய பாஷையில் கேட்பதானால் “ நீங்கெல்லம் திருந்தவே மாட்டீர்களா ? என்று கேட்பதாக பொருள் கொள்ளலாம். 

நம்முடைய தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் 18 ம் தேதி எழுப்பிய கேள்வி இந்த வகையை சார்ந்த்து  தான்.

தம்ழக முதலமைச்சர் சி ஏ ஏ வால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட ஒருவ்ரையாவது காட்டமுடியுமா ? என்று சட்ட சபையில் கோபாவேசமாக கேட்டுள்ளார்.
சி ஏ ஏ சட்டம் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிற இந்துக்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்தர்கள், பார்ஸிகள் ஆகியோர் 2015 க்கு முன் இந்தியாவில் ஐந்து வருடம் சட்ட விரோதமாக தங்கியிருந்தார்கள் என்றாலும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழிசெய்கிறது, இது முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கிறது.
மக்கள் அனைவரையும் சமமான கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும், மக்களுக்கிடையே பேதம் பாராட்டக் கூடாது என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படைக்குகு இந்தச் சட்டம் முரணாக இருக்கிறது என்பது வெள்ளிடை மலை போல அனைவருக்கும் தெளிவாக தெரிந்திருக்கிற நிலையில் நம்முடைய முதலமைச்சருக்கு இது இன்றுவரை புரியாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது! 
உண்மையில் இது அவருக்கு புரியவில்லையா ? அல்லது பிஜேபி அரசு எதைச் செயதாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தனது எஜமான விசுவாசத்தை காட்ட விரும்புகிறாரா ?
உண்மையில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அவர் தமிழக மக்களின் தலைமகன் என்ற வகையில் கோபத்தில் கொந்த ளித்திருக்க வேண்டும். இந்தச் சட்டம் இலங்கை தமிழ் மக்களை கண்டு கொள்ள வில்லையே என்பதற்காக அவர் களத்தில் இறங்கி போராடியிருக்க வேண்டும்!   
அதை அவர் செய்ய வில்லை, ஆனால் போராடும் மக்களை கொச்சைப் படுத்துகிறார்.  
மான்புமிகு முதலமைச்சர் அவர்கள்  இந்த சட்டத்தால் தமிழகத்திற்கு என்ன இலாபம் என்பதையாவது விளக்கிச் சொல்ல வேண்டும். ? அதை விளக்கிச் செல்வதையும் அவர் சாமார்த்தியமாக தவிர்த்து வருகிறார்.
போராட்டக்கார்ர்களைப் பார்த்து கோபப்படுவதை மட்டும் அவர் குறைத்துக் கொள்ளவில்லை.
சி ஏ ஏ சட்டத்தால் இப்போது எத்தனை பேர் பாதிக்கப் பட்டுள்ளார் என்று அவர் புரியாதவர் போல கேட்கிறார்.
பாஜாக அரசின் முஸ்லிம் விரோதப் போக்கு எத்தகையது என்பது அவருக்கு தெரியாதா ? முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக அவர்களை அரசியல் ரீதியாக எப்படி காய்நகர்த்தி வருகிறார்கள் என்பதை அவர் அறிய மாட்டாரா ?
நாடு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது அதை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதை விட்டு விட்டு நாட்டு மக்களுக்கு இடையே சர்ச்சைகளையும் பிளவையும் உண்டு பண்ணுகிற சட்டங்களை பாஜக அரசு இப்போது ஏண் கொண்டு வரவேண்டும் என்ற மிக நியாயாமான கேள்வி அவருக்கு எழவில்லையா ?
பாஜக அரசு இரண்டாம் முற்றயாக பொறுப்பேற்ற பிறகு முத்தலாக தடை சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து, பிறகு முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சி ஏ ஏ ஆகிய சட்டங்கள் இந்திய நாட்டின் விடுதலைக்கு உழைத்த முஸ்லிம் சமுதாயத்தை அரசியல் அதிர்காரத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகளின் தொடக்கம் என்பதை என்பதை அவர் உண்மையிலேயே புரியாமல் இருக்கிறாறா ? அவரது அமைச்சரவை சகாக்களும் புரியாமல் இருக்கிறார்களா என்பதும் மிகப்பெரும் கேள்விகளாகும். ?
போராட்டக் காரர்களைப் பார்த்து முதல்வர் கேள்வி கேட்கிறார் ?  
முதல்வரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இந்திய குடிரசின் அடிப்படைச் சித்தாந்தம் பேனப்பட வேண்டும் என்பதற்காக போராடிவருகிற மக்களுக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு இருக்கிறது.
முதலாவதாக முதல்வர் அவர்களே! நேற்றைய முன் தினம் பிப்ரவரி 20 ம் தேதி  இந்து நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியை பாருங்கள்
Aadhaar notice to Hyderabad Muslims sparks NRC fears

முஹம்மது சத்தார் கான் என்ற ஆட்டோ டிரைவருக்கு ஆதார் நிறுவனம் அவரது குடியுரிமையை நிரூபிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அவருக்கு மட்டுமல்ல, அவரைப் போன்றே மேலும் 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனைவரும் முஸ்லிம்கள்

முதல்வர் அவர்கள்,  நாட்டில் பாஜக அரசு தன்னிடமிருக்கிற அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து உருவாக்கி வரும் அரசியல் நெருக்கடிகளின் ஒரு சாம்பிளாக இதை முதல்வருக்கு சுட்டிக் காட்டுகிறோம்.

அடுத்து சி ஏ ஏ வால் இங்கு யாருக்கு என்ன பாதிப்பு வந்து விட்ட்து என்று முதல்வர் கேட்கிறார்.

எங்களுக்கு பாதிப்பு வரப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் தெரிந்த பிறகு நாங்கள் போராடாமல் இருந்து விட்டால் இனி போராடும் உரிமை கூட எங்களுக்கு இல்லை என மறுக்கப் படும் சூழல் உருவாக்க் கூடும் .

எங்களது தாடியில் தீ பிடித்த பிறகுதான் நாங்கள் தீயணைப்புத் துறைக்கு போன் செய்ய வேண்டுமா ? [ புகை எழும்பும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சரியாகுமா ? முதல்வர் விளக்க வேண்டும் >

முதல்வருக்கு நாங்கள் தெளிவாக விளக்குகிறோம்.

சி ஏ ஏ சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அரசியல் சாசனத்தில் உள்ள மதச்சார்பற்ற இந்தியா என்ற தேசத்தின் அடையாளத்தை மாற்றக் கூடியது,

அடுத்ததாக் முஸ்லிம்கள் பெருமளவிலும் பாஜக அரசுக்கு பிடிக்காதவர்களை கனிசமாகவும் பாதிக்க கூடியது.

எப்படி எனில்

இந்த மூன்று சட்டங்களையும் இப்படி வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்

என் பி ஆர்
என் ஆர் சி
சி ஏ. ஏ

என் பி ஆர் கணக்கெடுக்கும் அதிகாரி. மக்களிடம் அவருடைய தந்தை தாய் யார் என்பதற்கும் அவர்கள் எங்கு பிறந்தார்கள் என்பதற்கும் ஆதாரம் கேட்க மாட்டார் என்றாலும் தன்னிடமிருக்கிற தகவல்களில் சந்தேகத்திற்கிடமானது என்று பலதை ஒதுக்கி வைக்கும் அதிகாரம் பெற்றிருக்கிறார்.

அவர் ஒதுக்கி வைப்பதை கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு அடுத்து கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் என் ஆர் சி அவர்களிடம் ஆதாரம் கேட்கும். (தற்போது ஐதராபாத்தில் கேட்கப்பட்ட்து போல) தந்தையின் பிறப்புச் சான்று – அவர் பிறந்த தேதியில் வழங்கப்பட்ட்தை வழங்குவது எத்தனை பேருக்கு சாத்தியமாகும் அதே போல தாயுடையதை வழங்குவது எவ்வளவு பேருக்கு சாத்தியமாகும் ? இதில் எழுத்துப் பிழைகல் இருக்க கூடாது என்றால் அதிலுள்ள பிரச்சனைகள் எவ்வளவு

இந்தப் பிரச்சனையில் முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தவர்கள் சிக்கிக் கொள்வார்கள் எனில் அவர்கள் 2015 முன்பிருந்து ஐந்து ஆண்டுகளாக இங்கு வசிக்கிறார்கள் என்பதை நிருபித்தால் அவர்கள் இந்தியக் குடியுரிமை பெற்றுவிடுவார்கள். ஆனால் இந்த உரிமை முஸ்லிம்களுக்கு கிடைக்காது.

அவர்கள் தனியிடங்களில் ஒதுக்கப் படுவார்கள்  அவர்களுக்கான குடியுரிமை மறுக்கப் படும். ஆதார் இரத்து செய்யப் படும் ரேஷம் மறுக்க்ப் படும் எனில் இது முஸ்லிம்கள் அனைவரையும் பாதித்து விடாது என்றாலும் எத்தனை கோடி முஸ்லிம்களை பாதிக்க கூடும் அது யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஜனாதிபதி பக்ருதீன் அலி அஹ்மது அவர்களின் தம்பி இக்ராமுத்தீன் அஹ்மதுவின் குடும்பத்தினர் அசாமில் குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் மிகப்பெரிய விபரீதத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு சட்டத்தை இந்துத்துவ போதையில் மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது என்றால் திராவிட பாரம்பரியத்திற்கு சொந்தக் கார்ரான முதலமைச்சர் பொறுத்தமற்ற கேள்வியை போராட்டக் கார்ர்களை நோக்கி எழுப்புவது பொறுத்தமற்றதாகும்.

அது சட்டமன்றத்தையும் தமிழக மக்களையும் திசை திருப்பதாகும்.

\முதலமைச்சரும் அவரது அமைச்சரவை சகாக்களும் அரசிய்ல நாடகம் ஆடாமல் மக்களின் கோரிக்கையிலுள்ள எதார்த்த்தை புரிந்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
   




1 comment:

  1. மாஷா அல்லாஹ் அருமை

    ReplyDelete