வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 05, 2020

ஈமானிய உறுதி வீறு கொண்டு எழட்டும்!


يَا أَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ ۚ إِن يَكُن مِّنكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُم مِّائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِّنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ (65)

الْآنَ خَفَّفَ اللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا ۚ فَإِن يَكُن مِّنكُم مِّائَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُمْ أَلْفٌ يَغْلِبُوا أَلْفَيْنِ بِإِذْنِ اللَّهِ ۗ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ (66)



தில்லியில் கடந்த மாதம் 23 ம் தேதியிலிருந்து 26 ம்  தேதி வரை நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களின் சூடு இன்னும் தனியவில்லை. இறந்தோரின் எண்ணிக்கை இன்று கூட அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில நிர்வாகிகள் தில்லி சென்று நிலைமை நேரில் கண்டறிந்து வந்துள்ளனர். அவர்கள் வெளியிடும் தகவல்கள் உள்ளத்தை உருக்குபவை. உணர்வுகளை சூடேற்றக் கூடியவை.  

நாங்கள் தில்லி ஜீ டி பி மருத்துவமனைக்கு சென்ற போது 40 உடல்கள் வழங்கப்பட்டுவிட்டன இன்னும் மூன்று உடல்கள் தான் இருக்கின்றன என்று சொல்லப் பட்டது. அப்போது இரகசியமாக மார்ச்சுவரிக்குள் சென்று வந்த ஒருவர் சுமார் 50 உடல்கள் வரை உள்ளே இருக்கின்றன என்று கூறினார். சென்ற செவ்வாய்க்கிழமை வரை 43 பேர் பலியானதாக சொல்லப் பட்டு வந்த நிலையில் இன்றைய பத்ரிகை செய்திகள் 56 பேர் இறந்துள்ளதாக கூறுகின்றன. . இறப்பு எண்ணிக்கை நூறை தாண்டும் என தில்லியின் அதிகாரிகளே கூறுகிறார்கள்.

தில்லியின் வடகிழக்குப் பகுதி உத்தரப்பிரதேசத்திற்கு செல்லும் பகுதியாகும். உ  பி மாநிலத்தின் காஸியாபாத் நகருக்கு செல்லும் சாலையில் உ பி மாநிலத்தின் எல்லையிலிருது 15 கீ மீ தொலைவுக்குள் இருக்கிறது அசோக் நகர் பகுதி . அங்கு முஸ்லிம்கள் மிக குறைவு. அதற்கடுடுத்து முஸ்தபாபாத் என்ற பகுதி. அங்கு முஸ்லிம்கள் அடர்த்தியாக இருக்கிறார்கள்.. அதன் அருகே ஷிவ் விகார் என்ற பகுதி. அங்கே முஸ்லிம்கள் கனிசமாக இருக்கிறார்கள். அங்கே இந்து சமயத்தைச் சார்ந்த துப்புறவு தொழிலாளர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதன் அருகே ஜாபராபாத் முஜ்பூர் ஆகிய பகுதிகள் பிரதான சாலையில் இருக்கின்றன. இதில் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளானது. ஷிவ் விகார் பகுதியாகும்.

ஷிவ் விகாரில் இரண்டு பள்ளிவாசல்கள் முற்றிலுமாக தீக்கிரையாக்கப் பட்டுள்ளன. குறுகலான சந்துகள். ஒன்றோடு ஒன்று ஒட்டி அடுக்கடுக்கான மாடி வீடுகள் . இடையே சிறு தொழில் நிறுவனங்கள் கடைகளை கொண்டு ஷிவ் விகாரில் இருந்த சுமார் 800 வீடுகள் முற்றிலுமாக தீக்கிரையாக்கப் பட்டுள்ளன. கவனிக்கவும், இவை குடிசை வீடுகள் அல்ல. கான்கிரீட் கட்டிடங்கள் இரண்டு மூன்று அடுக்குகளை கொண்ட மாடிவீடுகள்.

வன்முறையின் கோர தாண்டவத்தின் ஒரு அடையாளமாக மூன்றடுக்கு நான்கடுக்கு மாடி வீடுகள் தரைத்தளத்திலிருந்து மொட்டை மாடி வரை தீப்பற்றி முற்றாக எரிந்துள்ளன, . அனைத்து பில் டிங்களிலும் சிலிண்டரை பற்ற வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். ஒரு வகையான கெமிக்கல் பவுடரை வீசியும் தீ வைக்கப் பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர். பல மாடி வீடுகளின் சுவர்கள் ஏவுகணை தாக்குதலுக்கு ஆளானவை போல வெடித்து உடைந்துள்ளன. வீடுகளிலிருந்த பொருடகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளன. எளிதில் தூக்கிச் செல்ல முடியாத பிரிட்ஜ் பீரோ போன்றவை வெடித்துச் சிதறியதில் அதன் பாகங்கள் தெருக்களில் கருகிக் கிடக்கின்றன. ஏராளமான இரு சக்கர வாகங்கள் தீக்கிரையாக சந்துகளின் நடுவே கிடக்கின்றன. அங்கு மூன்று சக்கர வாகனங்கள் பல வடிவங்களில் வழக்கில் இருக்கிறது, அது போன்ற வாகனங்களும் தீக்கிரையாகி உள்ளன.  அந்தப் பகுதியே போர்க்களத்தில் ஏவுகணைத்தாக்குதலுக்கு ஆளான பக்தி போல காட்சியளிக்கிறது. மக்கள் அனைவரும் அச்சத்தினால் வீடுகளை உயிர்பிழைத்தால் போதும் என்று வெளியேறிச் சென்றுவிட்டனர். ஜனசந்தடி மிகுந்த அந்தப் பகுதி மயான அமைதியாக காட்சியளித்த்து. நாங்கள் சென்ற திங்கட்கிழமை தான் பொதுமக்களை அப்பகுதிக்குள் அனுமதித்தனர், வீடுகளை இழந்த மக்களில் சிலர் தங்களது வீடுகளுக்கு நேர்ந்த அவலத்தை பார்த்து கண்கலங்கி நின்றதை நேரில் பார்க்க நேர்ந்த்து பெரும் கொடுமை.! உயிரிழந்த உடல்கள் இன்னும் கொடூரமான காட்சிகளை அப்புறப்படுத்திய பிறகு தான் காவல்துறையினர் இந்தபகுதியை திறந்து விட்டுள்ளனர்.

சில பள்ளிக்கூடங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளனர். அவை பெரும்பான்மையாக முஸ்லிம்கள் படிக்க கூடியவை.     

பள்ளிவாசல்களின் ஒவ்வொரு தளத்தையும் சிதைத்துள்ளனர். ஷிவ் விகாரில் உள்ள அவ்லியா மஸ்ஜித் பள்ளிவாசலுக்குள் கரிந்து போன சிலிண்டர் இன்னும் இருக்கிறது. 

அஷோக் நகர் என்கிற பகுதியில் இரண்டு பள்ளிவாசல்களை முற்றிலுமாக தீவைத்து சேதப்படுத்தியுள்ளனர்.  அங்கிருந்த மெளலா பக்ஸ் பள்ளிவாசலின் இரண்டு மாடிகளை தீக்கிரையாக்கிய இந்துத்துவ வன்முறையாளர்கள். அந்தப் பள்ளியின் மினாராவை சிதைக்க முயற்சித்து முடியாமல் போகவே அதில் காவிக் கெடியை ஏற்றினர். பின்னர் அந்தக் காவிக் கொடியை அந்தப் பகுதியை சார்ந்த மற்றொரு இந்து இளைஞரே அகற்றினார். இந்தப் பகுதியில் 25 முஸ்லிம் குடும்பங்கள் தான் வசித்திருக்கின்றன என்றாலும் கடைவீதி அருகில் இருந்ததால் இரண்டு மாடி பள்ளிவாசலும் ஏசி வசதி செய்யப்ப்பட்டு பள்ளிவாசல் ஓரளவு பெரிதாக இருக்கிறது. பள்ளிவாசலிலிருந்த 2500 லிட்டர் வாட்டர் டேங்கை ஒரு மினி லாரி கொண்டு வந்து கடத்திச் சென்றுள்ளர். இந்தப்பகுதியிர்லிந்த இந்துக்கள் பள்ளிவாசலுக்கு முஸ்ளிம்களுக்கும் பாதுகாப்பாக நிற்க முயன்றுள்ளார்கள். ஆனால் வன்முறையாளர்களை அவர்களை கற்களால் தாக்கி காயமடையச் செய்து விரட்டியுள்ளனர். இங்கு வந்து தாக்குதல் நடத்தியவர்கள் வெளியாட்கள் தான் என இப்பகுதி முஸ்லிம்கள் கூறினர். அசோக் நகரில் உள்ள இன்னொரு பள்ளிவாசல் நுழைவு வாயில் மிக சிறியது. பள்ளிவாசல் என்று கண்டு பிடிக்க முடியாது. பழக்கமானவர்களுக்கு மட்டுமே அது பள்ளிவாசல் என்று தெரிய வாய்ப்புள்ளது. அந்தப் பள்ளிவாசலை அப்பகுதியை சார்ந்த ஒருவர் அடையாளம் காட்டியுள்ளார். வெளியிலிருந்து வந்தவர்கள் தீ வைத்துள்ளனர். பள்ளிவாசலை அடையாளம் காட்டியவரை தன்க்கு தெரியும் என்று அங்கிருந்த ஒரு முஸ்லிம் இளைஞர் கூறினார்.   

ஷிவ் விகார் பகுதியில் ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கு சார்பாக இருந்த துப்புறவு தொழில் செய்யும் குடும்பத்தினர்கள் பின்னர் அங்கு வெளியாட்கள் வந்த சேர்ந்தவுடன் அவர்களோடு சேர்ந்து கொண்டு வீடு கடைகளை கொள்ளையடிப்பதில் ஈடுபட்டதாக ஷிவ் விகாரை சார்ந்த இளைஞர்கள் கூறினர். அவர்கள் உள்ளுர் பஞ்ரங்க்தள் அமைப்பின் பொறுப்பாளர்கள் என்றும் அவர் கூறினார்.

ஷிவ் விகார் பகுதியிலுள்ள ஒரு கால்வாயிலிருந்து பல உடல்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன். அப்பகுதியில் இன்னும் பலரை காணவில்லை என்று அம்மக்கள் கூறினர்.
   
உயிரிழந்தவர்கள் காயமடைந்தோரின் கதைகள் மிக கொடூரமானவை. காவல்துறையின் அடியினாலேயே சில இளைஞர்கள் இறந்து போயுள்ளனர். தான் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற நிலையில் ஒரு போலீஸ்காரர் தன்னிடம் தேசிய கீதம் பாடுமாறு கட்டாயப்படுத்தியதாக உயிர் பிழைத்த ஒரு இளைஞர் கூறினார். அவருடன் போலீஸாரிடம் அடிவாங்கி மற்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழந்து விட்டனர்.  உயிரிழப்புக்கல் குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை. பல உடல்கள் கால்வாயில் வீசப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  திற்க்கப்படாமல் இருக்கிற பூட்டிய வீடுகளுக்குள் தீயில் கருகி பலர் உயிரிழந்தக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது, இதன் காரணமாக பலியானோர் எண்ணிக்கை திடீர் திடீர் என அதிகரித்து வருகிறது.  

பலியானோரில் 16 பேர் இந்துக்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் ஷிவ் நகருக்கும் முஸ்தபா பாத்திற்கும் வேலைக்கு வந்த இடத்தில் வன்முறையாளர்களின் துப்பாக்கி குண்டுக்கு பலியானவர்களே. பெயின் அடிக்க வந்த ராகுல் என்ற இளைஞன் துப்பாகி குண்டு காயத்திற்கு சிகிட்சை பெற்று வருவதை நாங்கள் ஜேடிபி மருத்துவமனையில் பார்த்தோம்.

திகிலூட்டும் இந்தக் கலவரக்காட்சிகள் அனைத்தும் மத்திய அரசாங்கத்தின் பேரதிகாரம் படைத்த தில்லியில் ஜனாதிபதி மாளிகையிலிருந்தும் நாடாளுமண்ற கட்டடத்திலிருந்தும் செளத் பிளாக் நார்த் பிளாக் எனப்படும் இந்திய அரசாங்கத்தின் அதிகார மையத்திலிருந்தும் இருபது கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளாக நடந்தேறியிருக்கிறது என்பதுதான் பெரும் அதிர்ச்சியளிக்கும் செய்திகளாகும்.

இந்த இடங்களை பார்த்து விட்டு வந்த பின் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்டுள அறிக்கையில் சில முக்கிய விசயங்கள் தெளிவு படுத்தப்பட்டுள்ளன்.

1 – தில்லியில் நடைபெற்றுள்ள இந்த வன்முறை வெறியாட்டத்தை போராட்டக் கார்ர்களுக்க் இடயே நடைபெற்ற வன்முறை என்று சொல்வது அப்பட்டமான பொய். ஆர் எஸ் எஸ் , பஜ்ரங்க்தள் கும்பல்கள் மத்திய அர்சாங்கத்தின் முழு ஆசியோடு நடத்தியுள்ள கொடூரமான பயங்க்ரவாத தாக்குதல்களாகும்.

தில்லியிலுள்ள முக்கியமான ஒரு மாநில அதிகாரியை நாங்கள் சந்தித்த போது ,, எங்களை எதிர்த்தால் நாடு முழுவதும் என்ன நடக்கும் என்பதை காட்டுவதற்காக ஆர் எஸ் எஸ் பாஜக நடத்திய கோடூரம் தான் இது. இதில் சந்தேகமில்லை  என்று கூறினார்.

துரதிஷ்டவசமாக கெஜ்ரிவால் அரசும் இதை உரிய முறையில் கண்டு கொள்ளவில்லை. நீங்கள் அவரைச் சந்தித்தால் காவல் துறை அந்த இட்த்திற்கு செல்ல தாமதனது சரி. நீங்கள் ஏன் அந்தப் பகுதிக்கு விரைந்து செல்ல வில்லை. உங்களிடம் அரசாங்கத்தின் மற்ற துறைகள் இல்லையா என்று கேளுங்கள் என்று கூறினார். இன்று வரை தில்லி மாநில அரசு முழுமையான ஒரு நம்பிக்கையை அந்த மக்களிடம் ஏற்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார். அத்தோடு அறிவிக்கப்பட்டிருக்கிற நிவாரணங்களும் போதுமானவை அல்ல. வீடு முற்றிலுமாக தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் மதிப்பு கோடு ரூபாயுக்கு மேல் இருக்கும் . அவர்களுக்கு 5 இலட்சம் இழப்பீடு என்பது என்பது எந்த வகையில் போதுமானது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எனவே அரசு நாடக மாக உதவி செய்வதை விடுத்து அக்கறையோடு உதவ முன் வர வேண்டும் என்று சொல்லுங்கள் என்றும் அவரே கூறினார்.

இந்த தாக்குதல்களில் மிக முக்கியமான கவனிக்கப் படவேண்டிய = மத்திய அராசு பதில் சொல்லியே ஆகவேண்டிய மற்றொரு அம்சம்.

இதில் வன்முறையாளர்கள் பெருமளவில் துப்பாக்கி பயன்படுத்தியிருக்கிறார்கள். நாட்டுத்துப்பாக்கி , கைதுப்பாக்கி என பல வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஷிவ் நகர் பகுதி மக்கள் கூறுகிறார்கள் . பல மணி நேரம் துப்பாகியால் சுட்டுக் கொண்டே இருந்தார்கள். சாமாணிய மக்கள் பலரும் அதில் கொல்லப்பட்டார்கள். அல்லது கடுமையாக காயமடைந்தனர். இந்தக் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிப்பதே ஷிவ்நகர் பக்தி மக்களின் பெரும் போராட்டமாக இருந்தது. கலவரக்கார்ர்கள் இடம் மாறும் போது அந்த வாய்பை பயன்படுத்தி சிலர் வெள்யேறினார்கள் . அந்த வீடுகளை வன்முறையாளர்கள் கொள்ளையடித்து விட்டு நிதானமாக தீவைத்துள்ளனர்.  துப்பாக்கியால் சுட்டு மக்களை அச்சப்படுத்தி அவர்களை வெளியேற்றிய பின் ஊர் காலியானபிறகு வீடுகளை உடைத்து தீவைத்துள்ளனர். அதனால் தான் பலி எண்ணிக்கை இந்த அளவில் இருக்கிறது, இல்லை என்றால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.

நாட்டின் தலைநகரில் இவ்வளவு பெரிய அளவில் துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றதை ஒரு அரசு எப்படி நியாயப்படுத்த முடியும் ? ஆனால் மத்திய மாநில அரசுகளும் ஊட்கங்களும் கூட இது விசயத்தில் மெளன் காக்கின்றன.

ஆனால் ஆர் எஸ் எஸ் அமைப்பினால் பாதிப்புக்குள்ளாக கூடும் என்ற அச்ச நிலையில் இருக்கிற மக்கள் யாரும் அந்த அமைப்பின் இந்த கொடூர வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.

பாடங்கள்

தில்லியின் இந்த கொடூர இனவாத தாக்குதல் இந்தியா முழுமைக்கும் விடப்பட்ட எச்சரிக்கை தான் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே தில்லி தாக்குதலின் முதல் பாடமாகும்.
ஆர் எஸ் எஸ் ஸின் கும்பல் தாக்குதலின் வழிமுறைகளை அறிந்து வைத்துக் கொள்வதும் அதை எதிர்கொள்வதற்கான வழி முறைகளை ஜனநாயக அக்கறையுள்ள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொல்லித்தரப் பட வேண்டும்.

முக்கியமாக முஸ்லிம்களுக்க் தரப்பட வேண்டிய உணர்வு

ஆர் எஸ் எஸின் கும்பல் தாக்குதலை எந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும். உயரிய விலை மதிப்புள்ள பொருட்கள், ஆவனங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.  இந்தியாவின் கலவரச்சூழல காரணமாக பொருட்கள் கடைகள் நிறுவன்ங்களுக்கு இன்சூரன்ஸ் செய்து கெள்வதை ஆலிம்கள் அனுமதித்திருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

 وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ ۗ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُم مَّيْلَةً وَاحِدَةً ۚ 

இரண்டாவதாக ,

மிக முக்கியமாக உணர்ந்து நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டிய விசயம்.

கும்பல் தாக்குதல்களின் போது, பின் வாங்கி ஓடக்கூடாது. எதிர்த்து நின்று சாத்தியப்பட்ட வழிகளில் போராட வேண்டியது நமது கடமையாகும்.

ஒரு முஸ்லிம் இருபது பேரை எதிர் கொள்ள வேண்டும் என்று இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் சொல்லப் பட்டது.

அதனால் தான் பத்று யுத்த்த்தில் 300 பேர் ஆயிரம் பேரை எதிர்த்து நின்றனர்.

முஸ்லிம்களிடம் பின்னர் பலவீனம் ஏற்பட்ட போது ஒவ்வொரு முஸ்லிமும்  இரண்டு பேரை எதிர் கொள்ள் வேண்டும் என்று அல்லாஹ் கூறினான், இதுவே இன்று வரை உள்ள உத்தரவாகும்.

يَا أَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ ۚ إِن يَكُن مِّنكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُم مِّائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِّنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ (65)

الْآنَ خَفَّفَ اللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا ۚ فَإِن يَكُن مِّنكُم مِّائَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُمْ أَلْفٌ يَغْلِبُوا أَلْفَيْنِ بِإِذْنِ اللَّهِ ۗ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ (66)

இத்தகைய தாக்குதல் நடைபெறும் சந்தர்ப்பங்களில் – காவல்துறை நமக்கு துணைக்கு வராது என்றாலும் – முஸ்லிம்கள் பின் வாங்கி ஓடுவது அல்லது மறைவிலிருந்து கல்லெறிவது சரியான வழிமுறை அல்ல. கலவரக்காரர்களை தகுந்த பாதுகாப்பு உபகரணங்களோடு எதிர் கொண்டு போராடுவதே சரியானதாகும்.

உயிர் பிழைப்புக்கான போராட்டம் என்பது தப்பி ஓடுவதல்ல எதிர்த்துப் போராடுவதாகும்.

ஒருவேளை அந்தப் போராட்டத்தில் உயிர் போய்விடும் என்றாலும் நாம் ஷஹீதாகி விடுவோம் என்ற அந்தஸ்தை மார்க்கம் நமக்கு வழ்ங்கியுள்ளது.

ஆர் எஸ் எஸின் தாக்குதல் என்பது வெறித்தனத்தினால் ஆனது. முஸ்லிம்களின் போராட்டம் என்பது கொள்கை பற்றினால் ஆனது.

கொள்கை பற்றாளர்கள் நின்று திரும்பிப் பார்த்தாலே வெறியர்கள் ஓடிப்போய்விடுவார்கள்.

ஆர் எஸ் எஸ் காரகளை எதிர் கொள்கையில் காவல்துறை அல்லது அரசுத்துறைகளை நாம் விரோதிகளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்பதும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சங்களாகும்.

இன்னும் இது போல பல பிராக்டிகலான விசயங்களை முஸ்லிம்கள் சிந்தித்தாக வேண்டும் என்பதை தில்லி கலவரங்கள் முஸ்லிம்களுக்கு பாடமாக தருகின்றன.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நியாயமற்ற வன்முறை வழிகள் எதுவும் ஒரு சமுதாயத்தையோ சித்தாந்த்தையோ வெற்றி பெற வைத்து விடாது.

அதற்கு உதாரணம் தான் தில்லி கலவரங்களின் சூழலில் சி ஏ ஏ விற்கு எதிரான வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு ஐ நா சபை இந்திய நீதிமன்றத்தில் முறையிட்டிருப்பது.

உலகிலுள்ள நாடுகள் எல்லாம் ஐ நா விடும் முறையிடும் முதன் முறையாக ஐ நா இந்திய நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறது.

இது வன்முறையாளர்களுக்கு உலகம் தருகிற தண்டைகளில் ஒன்றாகும்/

தில்லி கலவரக்கார்ர்கள் அதன் காரணகர்த்தாக்கள்  நிச்சயமாக ஒரு நாள் இந்தியாவிலிருந்து தூக்கி எறியப்படுவார்கள்.

அந்த விரைவில் வரவேண்டும், அல்லாஹ் கிருபை செய்வானாக

தில்லியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாரளமாக உதவிடுவோம்.

நம்மில் ஒவ்வொரு வரும் நமது பகுதிகளை ஆர் எஸ் எஸிடமிருந்து பாதுகாக்க் திட்டமிடுவோம்.

அல்லாஹ் கிருபை செய்வானாக!




1 comment: