72 வது குடியரசு கொண்டாட்டத்திற்காக நாடு தயாராகிவருகிற நிலையில் தலை நகர் தில்லியில் விவசாயிகள் நடத்தப்போவதாக அறிவித்துள்ள டிராக்டர் பேரணி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசு தினத்தின்
மிகவும் ரசிக்கப்படுகிற கம்பீரமான நிகழ்வு தில்லியில் நடைபெருகிற குடியரசு அணிவகுப்பு.
பல ஆயிரம் பேர் கடும் பணியிலும் கூட நீண்ட நேரம் காத்திருந்து அந்த பேரணியை பார்வையிடுவார்கள்
என்பது மட்டுமல்ல பெரும்பாலான நாட்டு மக்கள் அதை தொலைக்காட்சி வழியாகவும் கண்டு களிப்பார்கள்.
நமது நாட்டின் ராணுவ அறிவியல் கலாச்சார ரீதியிலான பெருமையை பறைசாற்றுகிற பல அணிவகுப்புக்களும்
அதில் இடம் பெறும்.
இந்த டிராக்டர்
பேரணி அரசின் குடியரசு தின நடவடிக்கைகளை குலைக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று விவசாயிகள்
திட்டவட்டமாக அறிவித்திருந்தாலும் கூட இந்த ஆண்டு அரசு நடத்தும் பேரணியை விட விவசாயிகள்
நடத்தும் டிராக்டர் பேரணி அதிக முக்கியத்துவம் பெரும் அதுவே இந்திய மக்களின் பெரும்
அங்கீகாரத்தையும் பெறும் இன்ஷா அல்லாஹ்.
அரசு நடத்தும்
பேரணி நமது நாட்டின் வலிமையை பாராட்டும் வகையில் அமைந்திருக்கும் என்றாலும் கூட விவசாயிகளின்
பேரணி இந்தியக் குடியரசை காப்பாற்றும் பேரணியாகும்.
டிராக்டர் பேரணிக்கு
தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட
வழக்கில் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது. காவல்துறையும்
மத்திய அரசும் விவசாயிகளுடன் பேசி பேரணிக்கான சாலைகளை முடிவு செய்ய வேண்டும் என்று
உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
குடியரசு தினத்திற்கு
நம்முடைய நாட்டில் முக்கியத்துவம் அதிகம். என்ற நிலையிலும் கூட விவசாயிகளின் டிராக்டர்
பேரணியை தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
இது இன்றைய சூழ்நிலையில்
நிம்மதியளிக்கிற ஒரு செய்தி
ஏனெனில் குடியரசு
என்றாலே மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கிற நாடு என்று பொருள். நாட்டின் தலை நகரில்
கடந்த இரண்டு மாத காலமாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுமார் 70 விவசாயிகளை பரிகொடுத்தும்
கூட தொடர்ந்து கொண்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் குரலாக அந்தப்பேரணி அமையப்
போகிறது.
அல்லாஹ் அந்தப்
பேரணியை வெற்றி பெறச் செய்வானாக! பாதுகாப்பானதாகவும்
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கூடியதாகவும் ஆக்கியருள்வானாக!
அரசு நடத்தும்
பேரணி என்பது சர்வாதிகாரத்தின் எச்சமாகவும் இந்துத்துவாவின் மிச்சமாகவுமே அமைந்திருக்கும்.
இந்த ஆண்டு உண்மையான
குடியரசு தினப் பேரணியாக அந்த் டிராக்டர் பேரணி
தான் அமையப் போகிறது
இஸ்லாமின் இரண்டாம்
கலீபா உமர் ரலி அவர்கள் சர்வ அதிகாரம் படைத்த சக்ரவர்த்தியாக இருந்தார்கள். அவர்கள்
கையில் வைத்திருந்த சிறு சாட்டைக்கு இஸ்லாமிய சாம்ராஜ்யமே கட்டுண்டிருந்தது.
மக்களுக்கு நன்மையளிக்கும்
பல சீர்த்திருத்தங்களை கலீபா உமர் ரலி அவர்கள் செய்துள்ளார்கள்.
அவர்களின் காலத்தில்
பெண்கள் தங்களது மஹர் தொகையை மிக அதிகமாக கேட்கத்தொடங்கியிருந்தனர். அதனால் திருமணம்
செய்வது ஆண்களுக்கு பெரும் சுமையாக மாறியிருந்தது. உமர் ரலி அவர்கள் யோசித்தார்கள்,
திருமணத்திற்கான மஹர் தொகையை மிக அதிகமாக கேட்பது இறைபக்தி சார்ந்தாக இருக்குமானால்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அதில் முன்னணியில் இருந்திருப்பார்கள். அதனால் இந்த மஹர்
விசயத்தில் ஒரு கட்டுப்பாடு விதிப்பது தான் முஸ்லிம் சமூக அமைப்பிற்கு நல்லது என நினைத்தார்கள்.
عن أبي العجفاء السلمي قال قال عمر بن الخطاب ألا لا تغالوا صدقة النساء فإنها لو كانت مكرمة في
الدنيا أو تقوى عند الله لكان أولاكم بها نبي الله صلى الله عليه وسلم ما علمت رسول الله صلى الله عليه وسلم نكح شيئا من
نسائه ولا أنكح شيئا من بناته على أكثر من ثنتي عشرة أوقية قال أبو عيسى هذا حديث حسن صحيح وأبو العجفاء السلمي اسمه هرم والأوقية
عند أهل العلم أربعون درهما وثنتا عشرة أوقية أربع مائة وثمانون درهما
ورد في بعض الروايات : أنه قال : لا تزيدوا في مهور
النساء على أربعين أوقية ; فمن زاد ألقيت الزيادة في بيت المال . فقالت امرأة : ما
ذاك لك ، قال : ولم ؟ قالت : لأن الله يقول : وآتيتم إحداهن قنطارا فقال عمر : " امرأة أصابت ، ورجل أخطأ " كذا في المرقاة
இதுவல்லவோ உண்மையான குடியரசின் இலட்சனம் .
கலீபா குடியரசுத்தலைவர் என்ற வாசகம் உமர் ரலி அவர்களுக்கு எப்படிப் பொருந்துகிறது பாருங்கள். ?
يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ ۖ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ ۚ فَإِن كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۖ وَإِن كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ۚ وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُ وَلَدٌ ۚ فَإِن لَّمْ يَكُن لَّهُ وَلَدٌ وَوَرِثَهُ أَبَوَاهُ فَلِأُمِّهِ الثُّلُثُ ۚ فَإِن كَانَ لَهُ إِخْوَةٌ فَلِأُمِّهِ السُّدُسُ ۚ مِن بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْ دَيْنٍ ۗ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا ۚ فَرِيضَةً مِّنَ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا
தனது கணவர் விவகாரத்தில் ஒரு பெண்மணி பெருமானாரிடம் வழக்காடினார். அதை வழக்காடினார் என்ற வார்த்தையோடு அல்லாஹ் அப்படியே பதிவு செய்கிறான்.
قال ابن عباس : هي خولة بنت خويلد . الخزرجية ، كانت تحت أوس بن الصامت أخو عبادة بن الصامت ، وكانت حسنة الجسم ، فرآها زوجها ساجدة فنظر عجيزتها فأعجبه أمرها ، فلما انصرفت أرادها فأبت فغضب عليها ، قال عروة : وكان امرأ به لمم فأصابه بعض لممه فقال لها : أنت علي كظهر أمي . وكان الإيلاء والظهار من الطلاق في الجاهلية ، فسألت النبي صلى الله عليه وسلم فقال لها : حرمت عليه فقالت : والله ما ذكر طلاقا ، ثم قالت : أشكو إلى الله فاقتي ووحدتي ووحشتي وفراق زوجي وابن عمي وقد نفضت له بطني ، فقال : حرمت عليه ، فما زالت تراجعه ويراجعها حتى نزلت عليه الآية . وروى الحسن : أنها قالت : يا رسول الله ! قد نسخ الله سنن الجاهلية ، وإن زوجي ظاهر مني ، فقال رسول الله صلى الله عليه وسلم : ما أوحي إلي في هذا شيء فقالت : يا رسول الله ، أوحي إليك في كل شيء وطوي عنك هذا ؟ ! فقال : هو ما قلت لك فقالت : إلى الله أشكو لا إلى رسوله . فأنزل الله : قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله الآية .
فقال رسول الله صلى الله عليه وسلم لأوس : اعتق رقبة قال : مالي بذلك يدان . قال : فصم شهرين متتابعين قال : أما إني إذا أخطأني أن آكل في يوم ثلاث مرات يكل بصري . قال : فأطعم ستين مسكينا قال : ما أجد إلا أن تعينني منك بعون وصلة . قال : فأعانه رسول الله صلى الله عليه وسلم بخمسة عشر صاعا حتى جمع الله له ، والله غفور رحيم .
சாமாணிய மக்களின் கோரிக்கைகளையும் தேவைகளையும் நிறைவேற்றுவதில் ஒரு அரசின் அக்கறை
எந்த அளவு இருக்க வேண்டும் என்று பெருமானார் (ஸல் ) மானுட உலகிற்கு கற்பித்த மிக உன்னதமாக
நிகழ்வு இது
ஏனெனில் ஏழை எளிய மக்கள் பாதிக்கப் பட்டவர்களின் கண்ணீருக்கு உதவாமல் இறைவன் இருப்பதில்லை.
No comments:
Post a Comment