வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 23, 2023

அக்கிரமம் செய்யாதீர்

 தமிழக முஸ்லிம்களிடம் இயக்கங்களும் அதிகரித்து விட்டன. அதற்காக கச்சை கட்டிக் கொண்டு சண்டையிடும் போக்கும் அதிகரித்து விட்ட்து.

 ஏதோ ஒரு இயக்கத்தை அவர்கள் விருப்ப்ப் படி தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

நன்றாக கவனியுங்கள்

அவர்கள் விருப்ப்ப் ப்ப்படி அதாவது மனம் போன இயக்கங்களை தேர்ந்தொடுத்துக் கொண்டார்கள்.  சரி அது அவர்களது உரிமை ,

 ஆனால் இயக்கங்களில் சேர்ந்த வுடன் மற்றவர்களை மிகச் சாதாரணமாக தரக்குறைவாக விமர்ச்சிக் ஆரம்பித்டு விடுகிறார்கள்.  மக்களை மிக நாசூக்காக ஏமாற்ற முயல்கிறார்கள்.

 சமீபத்திய ஒரு சிறு உதாரணம்

நாமெல்லாம் மிஃராஜ் இரவை ஈமானிய உணர்வோடு நினைவு கூர்ந்தோம்.  இது போன்ற சிறப்ப் நாட்கள் வரும் போதெல்லாம் சிலர் வாட்ஸப் பேஸ்புக் போன்ற் ஊடகங்களில் சின்னதாக் ஒரு போஸ்டர் செய்து சமூகத்தை வழி கெடுக்க முயற்சி செய்கிறார்கள்

 மிஃராஜ் தினம் என்பது வரலாற்றாசிரியர்களின் கணிப்புதான் அதிலும் கருத்து வேறுபாடு இருக்கிறது

 நபி (ஸள்( அவர்களோ  சஹாபாக்களோ அதை கொண்டாட வில்லை

 இவ்வாரு பிரச்சாரம் செய்வது ஒரு பகிரங்க மான் அக்கிரம்ம் ஆகும்.

 ஏனெனில் அவர்களது வாசக அமைப்பில் மிஃராஜ் என்பதே நடந்த்தா என்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். 

 பெருமானார் (ஸல்_அவர்கள் மிஃராஜ் போனது சத்தியம் என்றால் அந்த அற்புதமான நிகழ்வை நினைவு கூறுவதில் தவறு என்ன ?  மூஸா அலை செங்கடல் பிளந்து காப்பாற்றப்பட்ட நிகழ்வை ஆண்டு தோறும் நினைவு கூறும் ஏற்பாட்டை பெருமானார் ஸல் அவர்கள் செய்யவில்லையா?

 அது நடந்த தினத்தில் கறுத்து வேறுபாடுகள் இருக்கிறது என்றால் ?

 எதில் தான் கருத்து வேறு பாடு இல்லை. தொழுகையில் கை கட்டுவதில் கருத்துவேறு பாடு இல்லையா ? அதில் ஒன்றை நாம் முடிவு செய்வதில்லையா ? அதே போல மிஃராஜ் நடந்த தேதியில் வரலாற்று அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட பெரும்பாலான கருத்தின் படி 27 என்று முடிவு செய்தால் என்ன தவறு ?

  பெருமானாரும் சஹாபாக்களும் கொண்டாட வில்லை என்கிறார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நட்த்தினார்களா என்று எந்த கழுதையும் கேட்பதில்லை.

 சுன்னத் ஜமாத்தினர் செய்கிறார்கள் அதை எதிர்த்தால் தான் ஒ ரு கூட்ட்த்தை தங்களுக்கு திரட்ட முடியும் என்பதை தவிர இவர்களுக்கு வேறு நோக்கம் இல்லை.

 சீர்திருக்க வாதிகளை போல வேடம் போடும் இத்தகையோர்  வசூலிப்பதிலும் அதை சாப்பிடுவதிலும் எந்த குறையும் வைப்பதில்லை.

 நாம் இன்று பேச வருகிற கருத்து என்ன வெனில் சமூகத்தை நாசூக்கான வார்த்தைகளால் ஏமாற்ற முயலும் இந்தப் பேர்வழிகள் ஒரு வகையில் திருடுகர்களையும் கொள்ளைக் கார்ர்களையும் போன்ற அக்கிரமப் பேர்வழிகளாகும்.

 அக்கிரம செய்வது கொலையை விட பெரிய கொடுமையாகும்.

 இவ்வாறு அநியாயம் செய்வதை மார்க்கம் தீயது என்று எச்சரிக்கிறது,  

 லுக்மான் அலை தன் மகனுக்கு செய்த உபதேசங்களில் முக்கிய மாக  இடம் பிடித்த ஒன்று இது.

 அதை அவர்கள் சொன்ன விதம் அலாதியானது.

 يَا بُنَيَّ إِنَّهَا إِن تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُن فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ ۚ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ (16)

 அநியாயம் எதையும் அல்லாஹ் கண்டுகொள்ளாமல் இருக்க மாட்டான் நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நிச்சயம் அது  கொண்டுவரப்படும். அது கடுகின் மணி அளவில் இருக்குமானாலும் எங்காவது ஒரு பாறையில் இருக்கும் என்றாலும். அல்லது வானங்களிலோ அல்லது பூமியிலோ எங்காவது மறைந்து இருக்கும் என்றாலும் அல்லாஹ் அதைக் கொண்டு வந்துவிடுவான் அல்லாஹ் மென்மையானவன் எல்லாவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான் என்றார்கள்.

 ஒரு பேஸ் புக் லைக் என்றாலும் சரி. அல்லது ஒரு இன்ஸா கிராம் போஸ்ட் என்றாலும் சரி எந்த அக்கிரம்மும் நாளை  அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்படும்.

 நாம் னசில் நினைப்பதை கூட அல்லாஹ் அறிந்திருக்கிறான்.

 ஒரு மனிதருக்கு இழைக்கப் படுகிற அநீதி அவருக்கு கூட தெரியாமல் நடக்கிற சதியாக இருக்காலாம் . ஆனால் அது அல்லாஹ்வுக்கு தெரியாமல் இருக்க முடியாது.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பல நேரத்திலும்  அக்கிரமம் செய்வதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என  யாருக்காவது அநீதி இழைத்திருந்தால் அதற்கான பதிலை சொல்லாமல் சொர்க்கத்திற்குள் நுழையமுடியாது
எச்சரித்திருக்கிறார்கள்

அபூஸயீதுல் குத்ரி ரலி அறிவிக்கிறார்கள்  நபி் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நரகத்திலிருந்து வெளியிலே வந்தவர்கள் நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் இடையே உள்ள மைதானத்தில் தங்க வைக்கப்படுவார்கள் .  உலகில் அவர்களுக்கு இடையில் நடந்த அநீதிக்கு எதிராக வழக்குகள் விசாரிக்கப் படும். தேவையான  பதில்கள் வாங்கப் பட்டு அவர்கள் பரிசுத்தப்படுத்தப்படுவார்கள்  அதன் பிறகே சொர்க்கத்தில் அனுமதிக்கப் படுவார்கள்.

அநீதிக்குள்ளானவனின் பிரார்த்தனைக்கும் பயந்து கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அந்த துஆவுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று கூறினார்கள்.  

யாருக்கும் அநியாயம் செய்கிறோமோ அவர் பலவீனமாக இருப்பது நமக்கு ஒரு துணிச்சலை தந்துவிடக் கூடாது  ஆண்கள் பெண்களையும் பெரியவர்கள் சிறியவர்களையும்  அதிகாரிகள் மக்களையும் துன்புறுத்துவதற்கு அவர்களால் என்ன செய்ய முடியும் என்ற மமதைஒரு காரணமாக இருந்து விடக்கூடாது 


அவர்களின் துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.  பலவீனர்களால் முடியாது என்றாலும் பலமுள்ள அல்லாஹ்வால் அவர்களுக்காக பழி வாங்க முடியும்.

அது மட்டுமல்ல பலஹீனமானவனக்கு அநியாயம் செய்வது ஆண்மையின் அடையாளம் அல்ல; எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களை அடிக்காதீர்கள் நல்லவர்கள் பெண்களை அடிக்க மாட்டார்கள் என்று கூறினார்கள்.  

கொம்பில்லாத ஆட்டை கொம்பு இருக்குற ஆடு முட்டிச்சாய்த்தது என்றால் அதற்கான பதிலும் பழிவாங்குதலும் கூட மறுமையில் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மறுமையின் பழி வாங்குதல் மிக பரிதாபகரமானதுஅதனால் எந்தப் பெரிய செல்வந்தனும் திவாலாகி விட வாய்ப்புள்ளது.

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال«أتدرون من المفلس؟» قالوا: المفلس فينا من لا دِرْهَمَ له ولا متاع، فقال: «إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة، ويأتي وقد شتم هذا، وَقَذَفَ هذا، وأكل مال هذا، وسَفَكَ دم هذا، وضرب هذا، فيعطى هذا من حسناته، وهذا من حسناته، فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه، أخذ من خطاياهم فطُرِحَتْ عليه، ثم طرح في النار


ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் திவாலானவன் என்றால் யார்? என்று கேட்டார்கள்.  கடன் காரர்களுக்கு கொடுப்பதற்கு யாரிடத்தில் பணம் இல்லையோ அவன் தான் திவாலானவன் என்றார்கள்.

அதை மறுத்த பெருமானார் (ஸல்) அவர்கள்மறுமையில் ஒருவன் வருவான் நிறைய நன்மைகளை கையில் வைத்திருப்பான் .  அவன் வரும் போது அவன் இந்ந நபரை திட்டினான் இந்த நபருடைய பொருளை சாப்பிட்டான் இந்த நபருடைய இரத்தத்தை ஓட்டினான் இந்த நபரை அடித்தான் என்ற குற்றச்சாட்டும் சேர்ந்து வரும்.  அப்போது அந்தக் குற்றச் சாடுகளுக்கு பரிகாரமாக கொடுக்க உலகிலிருந்த எதுவும் செல்லாது. அமல்களுக்கு மட்டுமே மரியாதை இருக்கும் நேரம் அது. எனவே இவன் வைத்திருக்கிற நன்மையை எடுத்து  அவருக்கு அல்லாஹ் எடுத்துக் கொடுப்பான் இவன் மீது இருக்கிற கடன்கள் முடிவதற்கு முன்னால் நன்மைகள் முடிந்து விடும் என்றால் அவர்களுடைய  பாவங்கள் எடுத்து இவன் மீது போடப்படும் பிறகு அவன் நரகத்தில் எறியப்படுவான் அவனே உண்மையில் திவாலானவன் என்றார்கள்.

வழக்குகள் தீர்ப்புகளின் பெயரால் கூட பிறருக்கு அநீதி இழைக்க கூடாது.

பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். என்னிடத்தில் ஒரு  வழக்கை கொண்டு வருகிறீர்கள் உங்களுடைய பேச்சுத் திறமையால் உங்களின் எதிர்ப்பாளர்களை விட விஷயங்களை எடுத்து சொல்லி உங்களுக்கு சாதகமாக நீங்கள் திர்ப்பை பெற்றிருக்கலாம் . அந்த தீர்ப்பை நானே வழங்கியிருக்கலாம் உங்கள் சகோதரர்களிடமிருந்து அப்படி எதையாவது நான் எடுத்துக் கொடுத்தாலும் அதை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம் நான் அவர்களுக்கு நரகத்தின் ஒரு துண்டை எடுத்து தருகிறேன்

 அநீதிகள் பல வகை உண்டு  அனைத்துமே தவிர்க்கப் பட வேண்டும்.

 பிறரின் உரிமையை பறிப்பது

மனைவி சகோதர்ர்கள் தொழிலாளி வேலைக்கார்கள் அனைவருடைய விசயத்திலும் அவர்களது உரிமை என்னவோ அதை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் .பிறாரால் ஏற்படுகிற எல்லா ஆபத்துகலிருந்தும் அவர்களை பாதுகாக்கனும்.

 ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். அவரை பார்ப்பதற்கு ஒரு பெரியவர் வந்தார்.  அவர் வந்து உட்கார்ந்த போது படுக்கையில் இருந்தவர் வபாத்தாகி விட்டார் அந்த பெரியவர் உடனே பக்கத்திலிருந்த விளக்கை அணைத்து விட்டார். அருகிலிருந்தவர்கள் காரணம் கேட்டார்கள். அவர் சொன்னார். இதுவரைக்கும் இந்த விளக்கில் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் இவருடையது. இவர் வபாத்தான மறு கணத்திலிருந்து அது  அவரின் வாரிசுதாரர்களுக்கு சொந்தமானது அவர்களின் சம்மதம் இல்லாமல் அதை  பயன்படுத்தக்கூடாது என்றார். மற்றவர்களின் உரிமைகள் விசயத்தில் இத்தகைய எச்சரிக்கையை  கடைபிடிக்கத் தவறுவது அக்கிரம்ம் செயவதாகி விடும்.

 வியாபாரிகள் வாடிக்கையாளரின் உரிமையை மதிக்க வேண்டும். பறிக்க கூடாது. அல்லாஹ் தான் பங்கு வைக்க கூடியவன் வியாபாரிகள் அல்லாஹ்வின்  வேலையை செய்கிறார்கள் என்று மார்க்கம் சொல்கிறது

உண்மையான வியாபாரிகள் நபிமார்களோடு சொர்க்கத்தில் இருப்பார்கள் 

எவ்வளவு லாபத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் ஆனால் அதுல ஏமாற்றக்கூடாது மோசடி கூடாது 

முஹம்மது ஸல் மதீனாவுக்கு சென்றபோது தோழர்கள் மதினாவின் கடைத்தெருவுக்கு பெருமானாரை அழைத்துப் போனார்கள்.  ஓரிடத்தில் பெருமானார் ஒரு கோதுமையின்  குவியலைப் பார்த்தார்கள். அது வெளியே காய்ந்திருந்ததுபெருமானார் அதனுள்ளே  கைவிட்டு பார்த்தார்கள். உள்ளே  ஈரமாக இருந்தது . இது ஏன் என பெருமானார்  கேட்டார்கள் . அவர் இப்போது  மழை பெய்தது என்றார். மழை காரணம் என்றால் மேலே உள்ளதும் அல்லவா ஈரமாக இருக்க வேண்டும். அந்த வியாபார தந்திரத்தை பார்த்த  பெருமானார் சொன்னார்கள் யார் நம்மை   ஏமாற்றுகிறார்களோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல.

நமது மார்க்கத்ம் நீதியின் மறுபெயராக திகழ்ந்த மார்க்கம். உலகம் நீதி என்ற அச்சானியில் தான் இயங்குகிறது என்பது இஸ்லாமின் அழுத்தமான நம்பிக்கையாகும். அதனால் தான் அனைத்து தரப்பினரிடமும் நீதியை பரமரிக்க வேண்டும் என திருக்குர் ஆன் உத்தரவிட்டுள்ளது.

நபி ஸல் அவர்கள் கண் அசைவில் கூட யாருக்கும் அநியாயம் செய்ததில்லை

பெருமானார் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது எல்லோரையும் விடுதலை செய்தார்கள் சிலர் களை மண்ணிக்க வேண்டாம் என்றார்கள் அதில் ஒருவர் அப்தில்லாஹ் இப்னு அபீ ஷரஹ்.  கஃபாவின் திரையை பிடித்து தொங்கினாலும் இவர்களை கொன்று விடுங்கள் என பெருமானார் (ஸல்) கூறினார்கள்அப்தில்லாஹ் இப்னு அபீ ஷரஹ் பல் இடங்களுக்கும் ஓடினார். இறுதியில் தன் உறவுக்காரரான உஸ்மான் ரலி வீட்டிற்கு போய் நபியிடம் எனக்கு மண்ணிப்பை வாங்கிதாருங்கள் என்று கெஞ்சினார்.  உஸ்மான் ரலி அவர்கள் அவரை ஒரு துணி யில் போர்த்துக் கொண்டு போய் பெருமானாருக்கு முன்னே நிறுத்திஅபீ ஷரஹ் மண்ணிப்பை கேட்கிறார்என்றார்.  பெருமானார் (ஸல்) அவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். உஸ்மான் ரலி மீண்டும் கேட்க இரண்டாவது  தடவையிலும் முகத்தை திருப்பி கொண்டார்கள்.  மூன்றாவது தடவை மண்ணித்தார்கள்,  அவர் அங்கிருந்து சென்ற பிறகு தோழர்களிடம் பெருமானார் கேட்டார்கள் இவ்வளவு நேரம் நான் அனுமதி கொடுக்காமல் இருந்த போதே அவரை உங்களில் ஒருவர் கொலை செய்திருக்க வேண்டாமா என்றார்கள்அப்போது ஒரு நபித்தோழர் நீங்கள் எங்களுக்கு  கண் ஜாடை காட்டியிருக்க கூடாதா ? என்றார்பெருமானார் சொன்னார்கள் நபியாக இருப்பவர் உம்மத்திற்கு கண்ஜாடைகளால் கூட அநியாயம் செய்து விடக்கூடாது 

குழந்தைகள் இடமும் கூட நீதமாக நடக்கனும் பெருமானார் (ஸல்) அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.  ஒரு நபித்தோழர் எதிரே உட்கார்ந்திருந்தார். அப்போது அவருடைய ஆண் குழந்தை வந்தது அந்த குழந்தையை எடுத்து முத்தமிட்டு தன் மடியில் உட்கார வைத்தார் கொஞ்ச நேரம் கழித்து அவருடைய பெண் குழந்தை வந்தது அந்தக் குழந்தையை முத்தமிடாமல் முன்னால் உட்கார வைத்தார். மிம்பரிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் நான் உயிரோடு இருக்கிற போதே நீங்கள் இப்படி நடக்கிறீர்களே! நீங்கள் நீதமாக நடக்க வில்லை என்றார்கள்

மனமறிந்து யாருக்கும் அநீதி இழைத்து விடக் கூடாது.

அப்படி அக்கிரம்ம் செய்வோர் அதன் பலனை அனுபவித்தே தீருவர்.

அக்கிரம்ம் செய்வதிலிருந்தும் அக்கிரமத்திற்கு ஆளாவதிலிருந்தும் அல்லாஹ் நம்மை காப்பானாக


 

 

No comments:

Post a Comment