வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 13, 2023

ஜகாத் சில தவறான வாதங்களும் புரிதல்களும்

 மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஆதி மார்க்கத்தின் ஒரு அம்சம் ஜகாத்தாகும்

அனைத்து மதக்கார்ர்களுக்கும் இது கடமையாகவே இருந்த்து.

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ 

இதுவே சரியான தீன் என்று அல்லாஹ் நிறைவு செய்கிறான்.

அல்லாஹ்வை நம்பினால் மட்டும் போதாது, தொழுதால் மட்டும் போதாது. ஜகாத்தையும் நிறைவேற்றுகிற போதுதான் சரியான தீன் கிடைக்கும்,.

திருக்குர் ஆனில் 27 இடங்களில் தொழுகைய்யும் ஜகாத்தை இணைதே அல்லாஹ் கூறியுள்ளதையும் கவனிக்க வேண்டும். மார்க்கத்தின் கடமைகள் அனைத்தையும் ஒன்றுடன் மற்றொன்றை தொடர்பு படுத்தி வைக்கும் போது தான் சரியான தீன் நமக்கு கிடைக்கும்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கிற காலத்திலும் ஜகாத் கடமையாக்கப்பட்டிருந்திருக்கிறது. ஆனால் அது இப்போதுள்ள திட்டமிட்ட வடிவத்தில் அல்ல.

அறுவடைக்காலத்தில் விளைச்சலில் ஏழைகளுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்ற அளவில் அது கடமையாக இருந்த்து.

இப்போது நமது  நடைமுறையில் உள்ள ஜகாத் கடமையனது ஹிஜ்ரீ 2 வது வருடத்திலாகும்.

அது பற்றிய் அல்லாஹ் அருளிய வசனம் இது வாகும்

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَّهُمْ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

இந்த வசனம் ஜகாத் பற்றியே பேசுகிறது زஇவ்வசனத்தில் அல்லாஹ் ஜகாத்தை சதகா என்ற வார்த்தையில் குறிப்பிடுகிறான்.

அறிஞர்கள் கூறுகிறார்கள். சதகா என்ற வார்த்தை சித்க் என்ற வார்த்தையிலிருந்து வந்தது.

இதன் கருத்து யார் ஜகாத் கொடுக்கிறார்களோ அவர்களுடைய இதயத்திலிருக்கிற உண்மையான ஈமானுக்கு அது சாட்சியாகிறது என்பதை சுட்டிக்காட்டவே இப்படி கூறப்பட்டுள்ளது

هي دليل علي صحة إينانه وصدق باطنه مع ظاهره

  முஸ்லிம் உம்மத் இந்த கடமையை சிரமேற்கொண்டு செயல்படுத்தியது. இந்தில் ஒரு கால கட்டத்திலும் சமுதாயம் பின் தங்கியதில்லை.

மிகச்சரியாக கணக்கிடுகிறார்களா ? சரியாக கொடுக்கிறார்களா என்பதில் வேண்டுமானால் ஏதேனும் சுனக்கங்கள் இருக்கலாம். ஆனால் ஜகாத் என்பது நம்மீது கடமை அதை நாம் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையிலோ அதை கொடுப்பதற்கான முயற்சியிலோ முஸ்லிம் உம்மத் ஒரு போதும் பின் தங்கியதில்லை.

நமது இன்றைய உறையில் நாம் தெரிவிக்க விரும்பும் கருத்து

ஜகாத் என்பது நாம் மனம் இரங்கிச் செய்யும் தர்ம்ம் அல்ல. அதை நாம் விரும்புகிற அளவிலோ அல்லது நாம் விரும்புகிற வகையிலோ நிறைவேற்றவும் முடியாது. அது ஒரு வணக்கமாகும்.

தொழுகையிலோ நொன்பிலோ நம் இஷ்ட்த்திற்கு விளையாட முடியுமா ? அப்படி விளையாடினால் அது அங்கீகாரம் பெறுமா ?

நான் இஷாவிற்கு நோன்பை திறந்து கொள்கிறேன் என்று யாராவது மாற்றிக் கொள்ள முடியுமா

முடியாதல்லவா? அதே போல ஜகாத் என்ற வணக்கத்தையும் நம்மிஷ்ட்த்திற்கு நாம் புரிந்தும் கொள்ளக் கூடாது நடை முறை படுத்த முயற்சிக்கவும் கூடாது.

எனவே ஜகாத் ஒரு வணக்கம் என்ற வார்த்தையை நாம் திரும்பத்திரும்ப சொல்லிக் கொள்ள வேண்டும்.

4 வகைகளில் ஜகாத் கடமையாகும்.

1 தங்கம் வெள்ளி – காசு

ஒரு மனிதரிடம் ஒரு ஆண்டு முழுவதும் அவனுடைய செலவுகள் மற்றும் கடன் போக  612 கிராம் வெள்ளிக்கு நிகரான காசு இருந்தால் இன்றைய மதிப்புக்கு சுமார் 48 ஆயிரம் ரூபாய் –ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தால் அவர் மீது ஜகாக் கடமையாகும்.

இந்த பணம்

·         கையிருப்பு

·         கடை சரக்கு

·         கிடைக்கும் என்ற உறுதியில் நாம் கொடுத்துள்ள  கடன

·         நீண்ட கால தவனைக்கு நாம் வாங்கியிருக்கும் கடன் .

 என்றவகையில் ஏதேனும் ஒரு வகையிலோ அல்லது நான்கிலுமாக சேர்த்தோ நம்மிடம் இருக்குமானால் நாம் ஜமாத் கொடுக்க வேண்டிய கடமைப்பட்டவர் ஆவோம்

 வாடகைக்கான் பொருட்களில் ஜகாத் இல்லை. வாடகைப்பணத்தில் ஜகாத் உண்டு.

2 வகை கால் நடைகள்

ஆடு மாடு ஒட்டகை என்ற மூன்று வகை கால்நடைகளில் குறிப்பிட்ட அளவுக்கு குறிப்பிட்ட தொகை ஜகாத்தாகும்

குதிரையில் ஜகாத் இல்லை, யானையில் ஜகாத் இல்லை.

அதே போல அடிமைகளில் ஜகாத் இல்லை .

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال«ليس على المُسلِم في عبدِهِ وَلاَ فَرَسهِ صَدَقَة». وفي لفظ: «إلا زكاة الفِطر في الرقيق».  [صحيح] - [متفق عليه]

அன்றைய அரபகத்தில் அடிமைகளும் குதிரைகளும் பெரும் சொத்துக்களாகும். அதில் ஜகாத் இல்லை என்று பெருமானார் சொல்லி விட்டார்கள் என்றால் அதில் ஜகாத் கிடையாது தான். இதற்கு மேல் கருத்த்ச் சொல்ல நமக்கு அதிகாரம் கிடையாது, கூடாது.

தங்கத்தில் ஜமாத் உண்டு, வைரத்தில் ஜகாத் கிடையாது. இதிலும் அப்படித்தன்.

அதே போல ஜகாத் கடமையாகும் மூன்றாவது இனம் விவசாயம்

எல்லா விவசாயத்திலும் ஜகாத் கிடையாது.

தொளியுல்ல உணவாக பாதுகாக்கப்படுகிற பொருட்களின் விளைச்சலில் மட்டுமே ஜமாத் கடமையாகும்.

அரிசி கோதுமை போல

தேங்காயில் ஜகாத் இல்லை. மிளகாயில் ஜகாத் இல்லை.

காரணம் இவை உணவில் பயன்படுத்தப்படுகிற பொருட்களே தவிர உணவு அல்ல.

ஒரு ஆள் பெரிய தென்னந்தோப்பு வைத்திருக்கிறார் ஆயிரக்கணக்கில் தேங்காய் கிடைக்கிறது என்றாலும் அதை அவர் வியாபாரத்திற்கு பயன்படுத்தாத வரை இத்தனை தேங்காய்க்கு இத்தனை தேங்காய் என்ற ஜகாத் கிடையாது.

வியாபாரத்திற்கு பயன்படுத்தினால் அது வியாபாரப் பொருள் என்ற வகையில் ஜகாத் கடமையாகிவிடும். இல்லை எனில் கடமை இல்லை.

கோதுமையோ அரிசியோ அப்படி அல்ல அது வியாபாரத்திற்கு பயன்படுத்தினாலும் சரி இல்ல என்றாலும் அதில் விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட சதவீத்த்தை ஜகாத்தாக கொடுக்க வேண்டும்.

இங்கேயும் நாம் கவனிக்க வேண்டியது எதில் ஜகாத் கடமையாகுமோ அதில் மட்டுமே ஜகாத் கொடுக்க வேண்டும்.

ஜகாத் கடமையாகும் நான்காவது இனம் பழங்கள்

பழங்களில் பேரீத்தம் பழம் திராட்சை பழம் ஆகியவற்றில் மட்டுமே ஜகாத் கடமையாகும்

மாதுளை, ஆப்பிள் பழங்களில் இவ்வளவு விளைச்சல் கிடைத்தால் இவ்வளவு என்ற ஜகாத் இல்லை  அவற்றை வியாபாரம் செய்தால் அது வியாபார பொருளாக கருதப்படும்

வியாபார பொருட்கள் அனைத்துக்கும் பணத்துக்கான அளவில் ஜகாத் கொடுக்கனும்.

கடன் தொகை போக 50 ரூபாய் வியாபார பொருட்கள் வைத்திருப்பவர் ஜகாத் கொடுக்க வேண்டும்.

சொந்த உபயோகத்திற்காக ஆடி கார் வைத்திருந்தால் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை

என்றெல்லாம் ஜகாத்தின் சட்டங்களை அறிகிற போது நாம் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய செய்தி என்ன தெரியுமா ?

லுஹர் 4 ரகாஅத் இஷா 4 ரகாஅத் பஜ்ரு 2 ராகாத் என்பதை எப்படி ஒரு அமல் என்று கேள்விகள் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோமோ அது போல ஜமாத் விவகாரத்தையும் மார்க்கத்தில் உள்ளதை ஆட்சோபனைகளுக்கு அப்பாற்ற்பட்டு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சென்ற வருடம் ஒரு ஜகாத் விளக்க கூட்ட்த்தில் ஜகாத் பெற தகுதியற்ற ஒரு மாணவருக்கு – அதாவது அவர் தன்னிறைவான குடும்பத்த்தச் சார்ந்தவர் – டாக்டர் படிப்புக்காக அதிக பணம் தேவைப்படுகிறது கொடுக்கலாமா என்று ஒரு கேள்வி வந்தது. ஜகாத் பணத்தை அதற்குரியவர்களை தவிர மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது என்று சொன்ன போது ஒரு பெரியவர் மருத்துவ படிப்பு எவ்வளவு முக்கியமானது அதற்கு கொடுக்க கூடாது என்கிறீர்களே  என்று சண்டைக்கே வந்து விட்டார்.

நல்ல காரியங்களுக்கு உதவு வதற்குத்தான் சதகா என்ற உபரி தர்மத்தை மார்க்கம் கூறீயிருக்கிறது. ஜகாத் என்பது தர்ம்ம் என்றாலும் அது ஒரு வணக்கம் சொல்லப்பட்டிருக்கிற வழியில் தான் செலவு செய்யப்பட வேண்டும் என்று சொன்ன போது அதை அவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை,

உங்களுக்கு நாங்கள் சொல்வதில் சந்தேகம் இருந்தால் நீங்கள் மதிக்கிற வேறு யாரேனும் சட்ட அறிஞர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்ற போதும் கூட அவர் ஏற்றுக் கொள்ள வில்லை.

இது மார்க்கத்தில் எல்லை மீறுதலாகும். ஜகாத என்பதை தாங்கள் செய்கிற கருணையாகவும் கொடையாகவும் எண்ணிக் கொள்கிற இயல்பாகும்.

இது தவறு . ஜகாத் என்பது ஒரு வணக்கமாகும். அது அதற்குரிய வகையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும்.

அதே போல ஜகாத் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று 8 பிரிவினரை குர் ஆன் வகைப்படுத்தியுள்ளது.

إِنَّمَا الصَّدَقَاتُ

1.     لِلْفُقَرَاءِ பிச்சைக்கரகள்

2.     وَالْمَسَاكِينِ ஏழைகள்

3.     وَالْعَامِلِينَ عَلَيْهَا  அரசு நியமித்துள்ள ஜகாத் வசூலகர்கள்

4.     وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ இஸ்லாத்திற்கு நெருக்கமானவர்கள்

5.     وَفِي الرِّقَابِ அடிமைகளை விடுதலை செய்வதில்

6.     وَالْغَارِمِينَ கடனாளிகள்

7.     وَفِي سَبِيلِ اللَّهِ  அல்லாஹ்வின் பாதையில் நடை பெறும் நற்காரியங்கள்

8.     َاِبْنِ السَّبِيلِ பயணிகள்

 

 فَرِيضَةً مِنْ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

சில பேர் பிச்சைக்காரகளுக்கு ஜகாத் கொடுப்பதை குறை கூறுகிறார்கள். இது அவர்களது தனிப்பட்ட கருத்தாகும். இதற்கும் இஸ்லாமிற்கும் சம்பந்தமில்லை.  

அதே போல கல்விக்கட்டணம் ,செலுத்தப்படும் பொது சம்பந்தம் பட்ட மாணவர் வழியாகவே அது தரப்பட வேண்டும். ஏனெனில் கல்வி நிறுவனத்திற்கு நாம் ஜகாத்தை கொடுக்க முடியாது.

எந்த நிறுவனத்திற்கும் கட்டிடச் செலவுகளுக்காக மற்ற  ஊழியர் சம்பளத்திற்காக ஜகாத் கொடுக்கப்படக் கூடாது.

ஏழைகளுக்கு என்றால் ஏழை உறவினர்களே அதில் மிகப் பெருத்தமானவர்கள்

ஷாபி மத்ஹபின் சட்ட நூலான முஜ்னியில் இவ்வாறு கூறப்படுகிற்து.

 

ويقسمها على من تقسم عليه زكاة المال وأحب إلى ذوو رحمه إن كان لا تلزمه نفقتهم بحال وإن طرحها عند من تجمع عنده أجزأه إن شاء الله تعالى.

 

ஜகாத் நிதியை பங்கிடப்படுவதற்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரிவினர்களிடையே அதை அவர் பங்கிடுவார். அவரது கட்டுப்பாட்டில் இல்லாத இரத்த பந்த உறவுகளுக்கிடையே பங்கிடுவது மிகப் பிரியத்திற்குரியது. அவரைச் சூழ்ந்திருக்கிற ஏழைகளுக்கு கொடுத்தாலும் போதுமானதே!

 

ஜகாத்தை நெருங்கிய உறவினர்களுக்கு கொடுக்கிற போது தரம்ம் செய்த நன்மையும் உறவை பராமரித்த நன்மையும் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

இவ்வாறு மார்க்க சட்ட நூல் கூறுகிற போது சொந்தக்காரகளான பெரியத்தா சின்னத்தா அவர் சார்ந்ந்த உறவுகளுக்கு கொடுக்க கூடாது என்று சிலர் பேசுவதும் சுயக் கருத்தாகும். அல்லாஹ்விற்கான ஒரு வணக்கத்தில் தலையிடுவதாகும்.

சில பேர் பைத்துல் மாலுக்குத்தான் ஜகாத்தை கொடுக்க வேண்டும். தனியாக கொடுத்தால் செல்லாது என்று கூறுகின்றனர். அதுவும் தான்தோன்றித்தனமான கருத்தாகும்.

சேவை அமைப்புக்கள் ஜகாத் வசூலிக்கலாமா ? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்ற தலைப்பில் அர்ரியாழ் அரபுப் பத்ரிகை ஒரு கட்டுரை வெளியிட்டிருந்த்து. அதில் ஷைக் அப்துல்லாஹ் சுலைமான் அல் மனீஃ இவ்வாறு குறிப்பிடுகிறார்.

 

 أن إذن ولي الأمر أو ترخيصه للجمعية ليس كتكليفها من قبله بجباية الزكاة ولهذا لا تعتبر الجمعية نائبة عن ولي الأمر ولا وكيلة عنه، ولهذا لا يلزم المزكي الاستجابة لطلب الجمعية وإن دفع زكاته إليها فهي وكيلة عنه في صرفها في مصارفها الشرعية ولا تبرأ ذمة المزكي في دفعها إلى الجمعية حتى يجري من الجمعية صرفها في مصارفها الشرعية

 

நற்சேவை செய்யும் ஒரு அமைப்புக்கு அரசர் ஜகாத்தை வசூலிக்க அனுமதி கொடுப்பதோ அல்லது சலுகை அளிப்பதோ ஜகாத்தை வசூலிக்கும் அவ்வமைப்புக்கு அரசர் பொறுப்பேற்றுக் கொண்ட்தாக அர்த்தமாகாது. ஆகையால் அவ்வமைப்பை அரசரின் பிரதிநிதியாகவோ வக்கீலாகவோ கருத முடியாது. அதனால் தான் ஜகாத் கொடுப்பவர்கள் அமைப்புக்களின் அழைப்புக்களுக்கு கட்டுப்பட வேண்டிய கடமையாவதில்லை. ஒரு வேளை அமைப்புக்களிடம் ஜகாத்தை கொடுத்து விட்டால் அவை சரியான் விதங்களில் செலவிட்டனவா என்பதை உறுதி செய்யாத வரை ஜகாத் கொடுப்பவரின் கடமை நீங்கிவிடாது.”

 

உணமையான பைத்துல் மால் என்பது இஸ்லாமி ஆட்சி நடைபெறுகிற நாட்டின் அரசுக் கரூவூலமேயாகும். அதுவே ஜகாத்தை வசூலிக்கும் சட்ட பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பாகும். அங்கு ஜகாத்தை கொடுத்துவிட்டால் கடமை நீங்கிவிடும். அது தவிர மற்ற எங்கு பைத்துல் மால் என்ற அமைப்பு செயல்பட்டாலும் அது பைத்துல் மால் என்ற பெயரைச் இரவலாகச் சூடிக்கொண்டே சமூக சேவை அமைப்பே ஆகும், அதற்கு ஜகாத்தை வசூலிக்கும் சட்டபூர்வ உரிமையோ,அதனிடம் ஜகாத்தை கொடுத்துவிட்டால் ஜகாத்தில் நமது கடமை முடிந்து விடும் என்ற சட்ட அந்தஸ்தோ கிடையாது.

 

சட்ட அறிஞர்கள் இதை இன்னொரு வகையில் விளக்குகிறார்கள். ஒரு சேவை அமைப்பிடம் ஒருவர் ஜகாத் தொகையை வழங்குகிறார். அதை அவ்வமைப்பு தொலைத்து விட்டால் அதனிடம் ஜகாத்தை கொடுத்தவர் தனது கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார். சேவை அமைப்புக்கள் சட்ட பூர்வ அந்தஸ்தை பெற்றவை அல்ல என்பதே இதற்கு காரணம்.

 

இத்தகைய சூழலில் ஒருவர் தன்னுடைய ஜகாத்தை கொடுப்பதற்கு தகுதியான நபர்களை தானே கண்டறிந்து கொடுத்து விடுவதுதான் சிறந்த் அமைப்பாகும். அவ்வாறு கொடுத்தால் அது செல்லுபடியாகும் என்பது மாத்திரமல்ல அத்தகைய சூழ்நிலையில் ஜகாத்தை பெற்றுக் கொள்ள தகுதி படைத்த எட்டு பிரிவினரில் ஒரு பிரிவான ஜகாத்தை வசூலிப்போர் எனும் பிரிவு குறைந்து போய்விடும் என்று ஷாபி சட்ட நூலான பதஹுல் முஈனில் கூறப்படுகிறது.

ولو فرق المالك الزكاة سقط سهم العامل

ஒருவர் தனது ஜகாத் தொகையை தானே கொடுத்து விட்டால் வசூலகரின் பங்கு விழுந்துவிடும்”.

 

 ஜகாத்தை பெற்றுக் கொள்வதற்கு நெருங்கிய உறவினர்களே முதல் தகுதி படைத்தவர்கள். குறிப்பாக சகோதர சகோதரிகள் அவர்களுடைய குடும்பத்தினர். தந்தையின் சகோதர்ர்கள் அவர்களது குடும்பத்தினர் மனைவியின் உறவுக்காரர்கள் பக்கத்து வீட்டுக் கார்ர்கள் தெருவாசிகள் பக்கத்து தெருவாசிகள் என ஜகாத்தை பெறுகிற வட்டம் கொடுப்பவரை நெருக்கமாக வளையம் கொண்டிருப்பதாக சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்/

இது போல இன்னும் சில கருத்துக்கள் ஜகாத்தை நாம் செய்கிற உதவி என்ற கோணத்தில் அணுகி அதனல் சில சிக்கலன கருத்துக்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள்.

இது தவிர்க்கப்பட வேண்டும்.

ஜகாத் என்பதும் ஒரு வணக்கம் என்பதும் அது அதற்குரிய முறையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் உணரப்பட வேண்டும். நாம் தர்மம் செய்கிறோம் என்ற எண்ணத்தில்  மார்க்கச் சட்டத்திற்கு எதிராக செயல்படக் கூடாது. அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஜகாத் கொடுப்பவர்களுக்கு அல்லாஹ் பெருங்கிருபை செய்வானாக!  தங்களது இரத்த்தை வியர்வையாக்கி உழைக்கிற அப்பெருமக்கள் ஏழைகளின் மகிழ்ச்சிக்காக வாரி வழங்குவதில்லை. அல்லாஹ்வை மகிழ்ச்சிப்படுத்த வாரி வழங்குகிறார்கள். அல்லாஹ் அவர்களை நாளை மறுமையில் நிச்சயம் மகிழ்ச்சிப்படுத்துவான்.

இந்த ஆண்டு ஜகாக் கொடுக்க வசதியற்றவர்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்த வருட்த்திற்குள் ஜகாத் கொடுப்பவர்களாக அல்லாஹ் நமை ஆக்கட்டும் என்று துஆ கேட்போம்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!. .

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 

No comments:

Post a Comment