வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Friday, April 21, 2023

இது வெற்றியாளர்களுக்கான நாள்

 

 قد افلح من تزكي وذكر  اسم ربه فصلي

இது வெற்றியாளர்களுக்கான நாள்.

ரமலான் எனும் கட்டுப்பாடான காலத்திற்கு பிறகு ஈத் எனும் இந்த மகத்தான பரிசை இஸ்லாம் நமக்கு வழங்கியுள்ளது.

 கட்டுப்பாடாக நடந்து கொள்ளும் யாரும் மகிழ்ச்சியான வெற்றியை பெறுவார்கள் என்கிற சித்தாந்த்த தெளிவை இது தருகிறது.

 தம்மிடம் இருப்பதை வைத்து பெருமைப்பட்டு கொள்வது சாமானிய மக்களின் இயல்பு.

எனது காசு, எனது வீடு, எனது வாகனம் நான் அணிநிருக்கும் வாட்சு ஷூ . இந்த டீ ஷர்ட் எவ்வளவு தெரியுமா ஐம்பதாயிரம் ரூபாய். இந்த ஜட்டி 3 ஆயிரம் ரூபாய் என சாமாணியர்கள் பெருமைப்படலாம்.

 நம்மிடம் இருக்கிற பொருட்கள் எவ்வளவு விலை உயர்ந்த்தாக இருந்தாலும் அது உண்மையில் வெற்றியின் அடையாளமில்லை.

 மக்காவின் மக்கள் எதை தங்களது பெருமை என்று கூறினார்கள் தெரியுமா ?

 கஃபாவை.  وكانوا يفخرون بالحرم ويستكبرون به من أجل أنهم أهله وعماره

 அல்லாஹ் சொன்னான் வெற்றியாளர்கள் நீங்களல்ல

 الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ أَعْظَمُ دَرَجَةً عِندَ اللَّهِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ

 கஃபா பெருமைக்குரியது தான். உங்களது பெருமைக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் ?

 பரிசுத்தமான  ஈமான் இருக்கிறதா ?  ஹிஜ்ரத் செய்தீர்களா ? அல்லாஹ்விற்க்காக என்று உடலாலோ பொருளாளா தியாகம் செய்துள்ளீர்களா அப்படிச் செய்தவர்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள்.

உலகில் மரியாதைக்குரிய் பொருளை வைத்திருப்பவர்கள் அல்ல.

 இந்த வசனத்தின் விரிவுரையில் அல்லாமா இப்னு கஸீர் ரஹ் ஒரு உரையாடலை பதிவு செய்கிறார்கள். தல்ஹா பின் ஷைபா, அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் அலி பின் அபீதாலிப் (ரலி) ஆகிய மூவரும் பேசிக் கொள்கிறார்கள். மூவரும் மனித சமூகம் கண்ட மகத்தான பெருமக்கள்.

 افتخر طلحة بن شيبة من بني عبد الدار ، وعباس بن عبد المطلب ، وعلي بن أبي طالب ، فقال طلحة : أنا صاحب البيت ، معي مفتاحه ، ولو أشاء بت فيه . وقال العباس : أنا صاحب السقاية والقائم عليها ، ولو أشاء بت في المسجد . فقال علي - رضي الله عنه - : ما أدري ما تقولان ، لقد صليت إلى القبلة ستة أشهر قبل الناس ، وأنا صاحب الجهاد ،

 தல்ஹா கூறுகிறார்: என்னிடம் கஃபாவின் சாவி இருக்கிறது, நான் நினைத்தால் அதற்குள்ளே இரவு தங்க முடியும்.

அப்பாஸ் ரலி கூறினார். நான் கஃபாவின் நிர்வாகி நான் நினைத்தால் மஸ்ஜிதிலேயே இரவு தங்க முடியும்.

அலி ரலி அப்பாவியாக கூறினார்கள். நீங்கள் எதை பேசிக் கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் மக்கள் முஸ்லிமாவதற்கு ஆறு மாத்த்திற்கு முன்பே இஸ்லாமை தழுவி கிப்லாவை நோக்கி தொழுதிருக்கிறேன்.  நான் ஜிஹாதில் பங்கேற்பவன் அவ்வளவே என்றார்கள்.

 இதற்கு மேல் பேச ஏதாவது இருக்கிறதா ?

 அருமையானவர்களே!

 நாம் அணிந்திருப்பவைகள் – பிராண்டட் பொருட்கள். ரபேல் வாட்சு 3 இலட்சம் ரூபாயாம். (அதையும் ஒசியில் வாங்கிக் கட்டிக் கொள்வதில் என்ன பெருமை?

 நம்மிடம் இருப்பவைகள் – கல்வி பதவி அந்தஸ்த்து ஆகியவை

 நாம் வைத்திருப்பவைகள் – வீடு கார் தோட்டம் கம்பெனிகள்

என எதுவும் அது நம்மிடம் இருப்பதால் நமக்கு பெருமையாக இருக்கலாம்.

 ஆனால் அவை அல்ல வெற்றிக்கு வழி செய்யக் கூடியவை.

 நாம் ஆற்றும் காரியங்களும் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகளுமே வெற்றிக்குரியவர்களாக நம்மை ஆக்கும்.

 அதுதான் இன்றைய பெருநாள் நமக்கு தரும் செய்தியாகும். .

 قد افلح من تزكي وذكر  اسم ربه فصلي

 என்ற வசனம் அந்த செய்தியை தான் நமக்கு சொல்கிறது.

 அத்தர் பூசியிருக்கிறோம். நமது உடலும் உடையும் மணமாக இருக்கிறது.

 நாம் செயத தர்மமே நமது இன்றைய பொழுதை மணக்க வைக்கிறது

 நண்பர்களே திருக்குர் ஆனை ஓதுவதற்கு 10 பாரம்பரிய வழி முறை  இருக்கிறது.

 இதில் மிகப்பிரபலமானது ஹப்ஸு (ரஹ்) அவர்கள் தனது ஆசிரியர் ஆஸிமிடமிருந்து ஓதக் கேட்ட வழிமுறையாகும். இதை ரிவாயத்து ஹப்ஸின் அன் ஆஸிமின் என்று கூறுவார்கள்

 رواية حفص عن عاصم 

இந்த காரி ஆஸிம் ரஹ் திருக்குர் ஆனை ஓதினால் அவரது வாயிலிருந்து நறுமணம் கமழும். இதை எல்லோரும் உணர்வாகள். அவருடைய மாணவர் கூறுகிறார் : அவர் ஏலக்காய் போட்டுக் கொள்கிறார் என்று நினைத்தேன். தேடிப்பார்த்தால் அப்படியும் தெரியவில்லை. ஒரு நாள் அவரிடம் கேட்டேன். அவர் சீக்கிரமாக பதில் சொல்லவில்லை. வற்புறுத்திக் கேட்ட பிறகு அவர் சொன்னார். நான் குர் ஆன் மீதுள்ள ஆசையால் அதை அதிகமாக ஒதி வந்தேன். ஒரு நாள் எனது கனவில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தோன்றி நீ இன்னும் அதிகமாக ஓதிக்கொண்டே இரு என்று கூறி என்னை முத்தமிட்டார்கள். அதன் பிறகு நான் திருக்குர் ஆனை ஓத த் தொடங்கினால் நறுமணம் வீசுகிறது என்று கூறினார்.

 என்ன மகத்தான ஒரு பாக்கியம் என்பதை சிந்திப்போம் சகோதர்ர்களே !

 நமது அமல்களே - நற்செயல்களே உண்மையில் நமது வாழ்வை மணக்க வைப்பவை

 .நாம் நமது அறச் செயல்களை அனைத்து மனித சமூதாயமும் பயன்படுகிற வகையில் தூய்மையாக செய்துவருவோம்

 அது தான் நமது வாழ்வின் உண்மையான நறுமணம் என்ற எண்ணத்தோடு பரிசுத்தமாக செய்வோம்.  

 அல்லாஹ் நம்மையும் நமது சமூகத்த்தையும் வெற்றி பெற்ற சமுதாயமாக ஆக்குவான்.

 இந்த ரமலானில் நமது நாட்டில் நமது சமூகத்தை துன்புறுத்திய சில நிகழ்வுகள் நடந்தன.

 பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலில் இஃதிகாபில் இருந்த மக்கள் மீது

இஸ்ரேல்  இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது.

 உத்திரப்பிரதேச மாநிலத்தில் காவல் துறையின் கண் முன்னேயே முன்னாள் எம்பி ஆதிக் அஹ்மதுவும் அவரது சகோதர்ரும் பலர் பார்க்க துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

 ரமலான் மாதம் என்றும் பாராமல் தமிழகத்தில் ஆர் எஸ் எஸின் அணிவகுப்பு நட்த்த அனுமதிக்கப்பட்டது. இந்த அணிவகுப்பு என்பது உண்மையில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் ஒரு ஏற்பாடேயாகும்.

 இந்த உலகம் நமக்கு எதிராக எப்படிப்பட்ட சதித்திட்ட்த்தில் இருந்தாலும் கூட நாம் நமது நற்செயல்களை விரிவுபடுத்திக் கொண்டே செல்வோம்.

 நமது தனிப்பட்ட வாழ்வையும் சமுதாயத்தின் வாழ்வையும் அல்லாஹ் வெற்றிகரமானதாக ஆக்குவான்.

 நற் செயல்களை செய்கிற போதும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சம் இருக்கிற்து. அதில் பேண்ப்பட வேண்டிய ஒழுக்கம்.

 ஒரு வெள்ளிக்கிழமை அன்று சில சஹாபாக்கள் மஸ்ஜிதுன்னபவியில் தங்களது பெருமைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

அங்கு வந்த உமர் ரலி கூறினார்கள்

பெருமானாரின் மிம்பருக்கு முன்னாள் உட்கார்ந்து சத்தம் போடாதீர்கள்

 فزجرهم عمر - رضي الله عنه - وقال : لا ترفعوا أصواتكم عند منبر رسول الله - صلى الله عليه وسلم - وذلك يوم الجمعة

 அல்லாஹ் நம் அனைவருக்கும் வெற்றிகரமான மகிழ்ச்சியான வாழ்வை நஸீபாக்குவானாக

 ஆமீன்

 

அனைவருக்கும் ஈத் முபாரக்

 

 

 

 

 

.

No comments:

Post a Comment