வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 18, 2023

கர்நாடகாவில் தொடங்கும் நல்லாட்சி நாடு முழுக்க தொடரட்டும்

 ஆட்சி அதிகாரம் என்பது மக்களுக்கு நன்மை செய்வதற்கான ஒரு பெரிய வாய்ப்பு

அதிலும் குறிப்பாக மக்களிடையே நீதியை நிலை நாட்டும் ஒரு முக்கியப் பணி.

இந்த உலகை நிம்மதியாக வைத்திருப்பதில் அதற்கு முக்கியப் பொறுப்பு இருக்கிறது.

முகலாய சக்ரவர்த்தி ஜஹாங்கீரின் மனைவி வேட்டையாடச் சென்றார். அவரது அம்பு, குறி தவறி ஒரு வண்ணானை கொன்று விட்டது. கொலைக்கு பலி கொலை தான் என்பதில் ஜஹாங்கீர் உறுதியாக இருந்தார். கடைசியில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரே  பிணைத்தொகை பெற்றுக் கொள்வதாக சம்மதித்தை அடுத்து ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹான்  விடுவிக்கப்பட்டார்.

நாட்டிலுள்ளா ஒரு சாமாணியனுக்கு அவரது வாழ்விற்கான உத்தரவாதம் வழங்கப்படுவது நாட்டு மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும்.

ஆட்சியாளரிடம் நீதிக்கு முக்கியத்துவம் இருக்கும் எனில் அதிகாரிகளிடமும் சாமாணிய மக்களிடமும் அது பிரதிபலிக்கும்.

மிகப்பிரபலமான செய்தி உமர் ரலி காலத்தில் ஒரு இளம் பெண் பாலில் தண்ணீர் கலக்க மறுத்தார், அவரது தாய் நிர்பந்தித்த போது இது உமர் ரலி யின் ஆட்சிக்காலமல்லாவா என்று அவர் மறுத்தார்

ن عمر بن الخطاب كان في ليلة من الليالي يتفقد الرعية فمر على امرأة ومعها ابنتها وهم يخضون اللبن، فلما ارادت الام ان تضع الماء على اللبن من اجل ان تزيد الكمية وتبيع، فقالت الابنة لا تفعلي يا أمي، فقالت لم؟ ..

فقالت الابنة أما سمعت أمير المؤمنين قد نادى في الناس ألا يخلط اللبن بالماء، قالت المرأة وأين أمير المؤمنين، قالت إذا كان أمير المؤمنين لا يراك فإن الله يراك، وسمع الكلام عمر بن الخطاب فزوج الفتاة من ابنه عاصم، ومنها ظهر عمر بن عبدالعزيز .

 

(இந்த செய்தியின் இறுதியில் ஒரு முக்கிய தகவல் இருக்கிறது. இந்த பெண்ணின் வமிசத்த்தில் பிற்காலத்தில் இரண்டாம் உமர் எனப்படும் நீதிமிக்க உமய்யா ஆட்சியாளர் தோன்றினார் –

இப்னு அஸாகிர் – தாரீக் திமிஷ்கில் குறிப்பிடும் இச்செய்தியை இப்னு தய்மிய்யா இப்னு கய்யிம் அல் ஜவ்ஸி போன்றோர் சரியான தகவல் என ஒப்புக் கொண்டுள்ளனர்.  )

அதானால் நீதிமிக்க ஆட்சியாளர் அல்லாஹ்வுக்கு மிக பிரியமாணவர். காரணம் இந்த பூமியை நிர்வகிக்கிற அல்லாஹ்வின் கலீபாவாகா அவர் அந்தப் பணியை நிறைவேற்றுகிறார்.

அத்னால் தான் பெருமானார் (ஸல்) அர்ஸின் கீழ் நிழல் பெறும் ஏழு பேரில் முதன்மையாக நீதிமிக்க அரசன் என்று  கூறினார்கள்

سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ: الْإِمَامُ الْعَادِلُ...

மேலும் பெருமானார் கூறினார்கள்

أَهْلُ الْجَنَّةِ ثَلَاثَةٌ: ذُو سُلْطَانٍ مُقْسِطٌ مُتَصَدِّقٌ مُوَفَّقٌ، وَرَجُلٌ رَحِيمٌ رَقِيقُ الْقَلْبِ لِكُلِّ ذِي قُرْبَى وَمُسْلِمٍ، وَعَفِيفٌ مُتَعَفِّفٌ ذُو عِيَالٍ

ஒரு நீதிமிக்க ஆட்சியாளரின் பெயரை நினைவு கூறுவதே ஒரு நல் அமல் என்பது நமது முன்னோர்களின் கருத்தாகும்.  

ابن عباس- رضي الله عنه- يقول في حق عمر- رضي الله عنه -: "أكثروا ذكر عمر، فإنكم إذا ذكرتموه ذكرتم العدل، وإذا ذكرتم العدل ذكرتم الله تبارك وتعالى"

அதிகாரத்தின் உயர் மட்ட்த்தில் இருப்பவர்கள் நீதியை பொருட்படுத்தாத போது கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் அதை மேலும் மோசமாக்குவார்கள்

கர்நாடாக மாநிலத்தில் இருந்த அரசும் அமைச்சர்களும் முஸ்லிம்கள் அணியும் கண்ணியமன ஆடையான பர்தாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

உண்மையில் இது மிகப்பெரிய அநீதியாகும். ஏனெனில் அவர்கள் கலாச்சார காவலர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள். இன்று கல்லூரிகளில் நடக்கும் ஆடை சீர்கேடுகளை கணக்கில் கொண்டால் அவர்கள் பர்தாவை ஆதரிப்பதுதான் நியாயமாக இருக்கும் ஏனால் முஸ்லிம் விரோத மனப்பான்மையில் நீதிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். பொதுக் கல்வி நிறுவன்ங்களில் தனி மத அடையாளத்தை அனுமதிக்க முடியாது என்றனர். நீதிமன்றம் கூட அவர்களது கருத்துக்கு சார்பாக இருந்தது.

இதன் விளைவு என்னவாயிற்ற்கு ?

ஒரு கல்லூரியில் சாதாரணமாக பர்தா அணிந்து வந்த ஒரு மாணவிக்கு எதிராக ஆண்களின் ஒரு ரவுடிக் கும்பல் அவரை சூழ்ந்து கொண்டு கோஷம் எழுப்பியது. அச்சுறுத்தியது. அந்த மாணவி பயப்பட வில்ல என்பது வேறு விசயம்.

ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் நீத் தவறினால் கீழ் மட்ட்த்தில் இருப்பவர்களிடமும் அந்த குணம் இன்னும் கோரமாக பரவும்.

உண்மையில் கர்நாடகாவில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் என்பது அப்பட்டமான ஒரு காழ்ப்புணர்வின் அடையாளமாகும்.

ஏனெனில் கர்நாடாகாவில் 13 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அவர்கள் காலம் காலமாக பர்தா அணிந்து கொண்டிருக்கிறார்கள். கல்வி நிறுவன்ங்களுக்கும் பர்தா அனிந்து தான் சென்றார்கள்.  இப்போது புதிதாக பிரச்சனை முளைக்க காரணம் என்னவென்றால்

உயர் ஜாதி இந்துக்களின் அநீதியான கோட்பாடேயாகும். இந்த நாட்டில் தங்களுடைய ஜாதியை தவிர மற்ற ஜாதியினர் கல்வியில் முன்னேறுவதை அவர்கள் விரும்பவே இல்லை.

2007 ன் கணக்கெடுப்பின் படி உயர் கல்விகளில் சேரும் முஸ்லிம் மாணவிகளின் எண்ணிக்கை வெறும் 1 சதவீதமாக இருந்த்து. அதுவே 2017 – 18 16 சதவீதமாக உயர்ந்திருந்த்து.

உயர்கல்வியில் முஸ்லீம் பெண்களின் மொத்த வருகை விகிதம் 2007-08ல் சுமார் 1 சதவீதத்தில் இருந்து 2017-18ல் சுமார் 16 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தரவு காட்டுகிறது.  ராய் பர்மன் – இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை- விக்கீபீடியா )

ஒரு நீதிமிக்க ஆட்சி தலைமை இந்த முன்னேற்றத்தை ரசித்து பாராட்டி யிருக்க வேண்டும்  . ஆனால் முந்தைய பாஜக அமைச்சர்களுக்கு அவர்களது மத துவேஷம் நீதி தவற தூண்டியது.

 அதனால் மதிப்பு மிக்க தாக இருந்த கர்நாடக மாநிலத்தின் மரியாதையை அவர்கள் சீரழித்தனர். 

 நீதியை குலைத்தனர். அதனால் மக்களது வாழ்வு கடும் சங்கடங்களுக்குள்ளானது.

 இந்த தேர்தலில் மக்கள் அவர்களை தூக்கி எறிந்து விட்டனர். இது வரை இல்லாத அளவில் நாட்டின் பிரதமரே 11 தடவை நேரில் வந்து பிரச்சாரம் செய்தும் அந்த கட்சி தோற்று விட்டது.

 அதிகாரத்தில் இருப்போர் மிக அவசரமாக புரிந்து கொள்ள வேண்டிய செய்தி இது.

 இந்த உலகில் ஒரு போதும் அநீதி சகித்துக் கொள்ளப்படாது. அவர்கள் எத்தகைய வலிமையான அதிகாரத்தில் இருந்தாலும் சரி.

 பலவீனர்களுக்கு எதிராக அநீதி இழைக்கும் அனைத்து தரப்பினருக்குமான கடும் தண்டனையை இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது.

 إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَىٰ ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا ۖ وَسَيَصْلَوْنَ سَعِيرًا  

   அநீதியிழைப்பவன் அநீதிக்கு உட்பட்டவனைவிட அதிகத் துயரடைவான். என்று அறிஞர் - பிளேட்டோ  கூறியுள்ளார்.

 நம் நாட்டில் மத துவேஷத்தை பரப்புவதில் முன்னணியில் இருந்த பலரும் இப்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தாலே போதுமானாது. அத்வானி அதற்கு ஒரு உதாரணம்.

 இப்போது கர்நாடகாவில் பெரும் தோல்வியை சந்தித்திருக்கும் சில முக்கிய அமைச்சர்கள் அதற்கு மற்றுமொரு உதாரணம்

 ஆட்சி அதிகாரம் கிடைக்கிற போது அதை அற்ப் சுகங்களுக்காக பயன்படுத்திக் கொள்பவர்களை போன்ற முட்டாள்கள் வேறூ யாரும் இல்லை.

 திருக்குர் ஆன் கஹ்பு அத்தியாயத்தில் துல் கர்னைனின் வரலாற்றை சொல்லிக் காட்டுகிறது.

 உலகில் பேர்ரசு புரிந்த் பெருமகன் அவர்.

அவருக்கு சர்வ வல்லைமை பொருந்திய அரசை இறைவன் கொடுத்த போதும் அவர் நீதியை நிலை நாட்ட உறுதி பூண்டார்.

நீங்கள் விரும்பினால் தண்டனை வழங்கலம். இல்லை எனில் நன்மை செய்யலாம் என கூறப்பட்ட்து.  அவர் நான் குற்றவாளிகளை மட்டும் தண்டிப்பேன். நல்லவர்களுக்கு இலேசான கடமைகளை சொல்வேன் என்றார்.

 

حَتَّىٰ إِذَا بَلَغَ مَغْرِبَ الشَّمْسِ وَجَدَهَا تَغْرُبُ فِي عَيْنٍ حَمِئَةٍ وَوَجَدَ عِندَهَا قَوْمًا ۗ قُلْنَا يَا ذَا الْقَرْنَيْنِ إِمَّا أَن تُعَذِّبَ وَإِمَّا أَن تَتَّخِذَ فِيهِمْ حُسْنًا (86قَالَ أَمَّا مَن ظَلَمَ فَسَوْفَ نُعَذِّبُهُ ثُمَّ يُرَدُّ إِلَىٰ رَبِّهِ فَيُعَذِّبُهُ عَذَابًا نُّكْرًا (87وَأَمَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهُ جَزَاءً الْحُسْنَىٰ ۖ وَسَنَقُولُ لَهُ مِنْ أَمْرِنَا يُسْرً

 அதிகார போதையில் யாரும் தலைகால் புரியாமல் ஆடக் கூடாது என்ற அறிவுரை இதில் இருக்கிறது.

 துல் கர்ணைன் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதி பலன் பாராது மக்களுக்கு இரும்பு  அணை கட்டிக் கொடுத்தார்.

  ثُمَّ أَتْبَعَ سَبَبًا (92حَتَّىٰ إِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِن دُونِهِمَا قَوْمًا لَّا يَكَادُونَ يَفْقَهُونَ قَوْلًا (93قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَىٰ أَن تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا (94قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيْرٌ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا (95آتُونِي زُبَرَ الْحَدِيدِ ۖ حَتَّىٰ إِذَا سَاوَىٰ بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انفُخُوا ۖ حَتَّىٰ إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا (96فَمَا اسْطَاعُوا أَن يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقْبًا

 கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையே காகேஸிய மலைத்தொடர்களுக்கு நடுவே இப்போது ஒரு பெரிய தடுப்புச் சுவர் இருக்கிறது.

Darial டாரியல் என்ற ஊரில் இருக்கிற தடுப்புச் சுவர் 50 மைல் நீளம் 290 அடி உயரம் 10 அடி அகலம் கொண்ட்தாக இருக்கிறது. இந்த தடுப்புச் சுவரை கட்டியது துல்கர்ணைன் என முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

 ஆட்சி அதிகாரத்திற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது சாத்தியப்பட்ட நல்ல காரியங்களை செய்துவிட வேண்டும். அது காலங்கட்த்தும் நம்மை பற்றி நல்ல விதமாக பேச வைக்கும்.

துரதிஷ்ட வசமாக இன்றைய ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்களிடம் இந்த சிந்தனை இருப்பதில்லை

குறுகிற அதிகார போதையில் நடமாடுகிறார்கள்.

உமர் பின் அபதுல் அஸீஸ் ரஹி அவர்கள் ஆட்சிப் பொறூப்பேற்ற போது ஹஸன் அல் பஸரி ரஹி அவர்களுக்கு தனக்கு உபதேசம் செய்யுமாறு கேட்டு ஒரு கடிதம் எழுதினார். ஹஸன் பஸரீ ஆட்சியாளரிடம் இருக்க வேண்டிய பண்புகளை அற்புதமாக விளக்கினார்கள்.

 اعلم يا أمير المؤمنين، أنَّ اللهَ جعل الإمامَ العادلَ قِوَام كلِّ مائل، وقَصْدَ كلِّ جائرٍ، وصلاحَ كلِّ فاسدٍ، وقوةَ كلِّ ضعيفٍ، ونَصَفَةَ كلِّ مظلوم، ومَفْزَعَ كلِّ ملهوف.

 விசுவாசிகளின் தலைவரே !  அல்லாஹ் நீதியுள்ள தலைவரை , சார்புடையோரிடையே  உறுதியானவராகவும், அனைத்து அநீதியாளர்களின் அச்சமாகும்.  சீர்கேடுகளை சரி செய்பவராகவும் பலவீனர்களின் வலிமையான அரணாகவும் அநீதியிழைக்கப்பட்டோருக்கு நீதியாகவும் துன்பத்திற்கு ஆளோனோர் ஓய்வு கொள்ளும் தளமாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான். என்பதை அறிந்து கொள்ளுங்கள். .

 والإمام العادل - يا أمير المؤمنين - كالرَّاعي الشفيقِ على إبلِهِ، الرفيقِ بها، الذي يَرتَادُ لها أطيبَ المراعي، ويذودُهَا عن مَرَاتِعِ الهَلَكة، ويحميها منَ السِّبَاعِ، ويُكنُّهَا من أذى الحرِّ والقَرِّ.

 والإمام العادل - يا أمير المؤمنين - كالأبِ الحاني على وَلدِه، يسعى لهم صغاراً، ويعلمهم كباراً؛ يكتسبُ لهم في حياته، ويدَّخِرُ لهم بعدَ مماتِهِ.

 والإمام العدل - يا أمير المؤمنين - كالأمِّ الشفيقةِ البرَّةِ الرَّفِيقَةِ بولدها، حملتهُ كُرْهَاً، ووضعتهُ كُرْهَاً، وربَّتهُ طِفْلاً تسهرُ بسهرِهِ، وتسكنُ بسكونِهِ، ترضعُهُ تارةً وتفْطمُهُ أخرى، وتفرَحُ بعافيتِهِ، وتغْتَمُّ بشكَايَتِهِ.

 والإمام العدل - يا أمير المؤمنين - وَصِيُّ اليتامى، وخازنُ المساكينِ، يُرَبِّي صغيرَهم، ويمونُ كبيرَهُم.

 والإمام العدل - يا أمير المؤمنين -كالقلبِ بينَ الجوارِحِ، تَصْلُحُ الجوارحُ بصلاحِهِ، وتَفْسُدُ بفسادِهِ.

 فلا تكن يا أمير المؤمنين فيما مَلَّكَكَ اللهُ عزَّ وجلَّ كعبدٍ ائتمَنَهُ سيدُهُ، واستحفَظَهُ مَالَهُ وعيَالَهُ، فَبَدَّدَ المالَ وشَرَّدَ العيَالَ، فأفقرَ أهلَهُ، وفَرَّقَ مالَهُ...»

 அற்ப சிந்தனையை தவிர்த்து அற்புதமான சிந்தனையோடு அதிகாரம் செய்பவர்களுக்கு இந்த உலகில் மட்டுமல்ல அவர்கள் முஃமின்களாக இருந்தால் நாளை சொர்க்கத்திலும் அல்லாஹ் அதிகாரம் செய்ய நிலத்தை வழங்குவான் என்று கூறுகிறது குர் ஆன்

திருக்குர் ஆனில் அல் இன்ஸான் என்றொரு அத்தியாய்ய்ம் உண்டு (

76)

அந்த அத்தியாயத்தில் இன்னல் அப்ரார் – நல்லவர்கள் என்று தொடங்கி அவர்களுக்கான சில அடையளங்களை அல்லாஹ் கூறுகிறார். பின்வரும் நாட்களை பற்றி சிந்தித்து நடநது கொள்கிறவர்கள் என்கிறான். அவ்வாறு சிந்தித்து நடந்து கொள்கிறவர்களுக்கு சொர்க்கத்திலும் அதிகாரம் செலுத்த நிலம் வழங்கப்படும்.

அந்த நிலத்தை முழுமையாக பார்க்க  இரண்டாயிரம் வருடம் பயணம் செய்ய வேண்டியிருக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  

وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا (20)

أن الله تعالى يقول لآخر أهل النار خروجا منها ، وآخر أهل الجنة دخولا إليها : إن لك مثل الدنيا وعشرة أمثالها .

عن ابن عمر قال : قال رسول الله صلى الله عليه وسلم" إن أدنى أهل الجنة منزلة لمن ينظر في ملكه مسيرة ألفي سنة ينظر إلى أقصاه كما ينظر إلى أدناه 

கர்நாடகாவில் புதிய ஆட்சி ஏற்பட்டிருக்கிறது.

அல்ஹமது லில்லாஹ்

ஜனநாயகத்தை நேசிக்கிற சக்திகள் அனைவருக்கும் அது பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்துக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக பர்தாவில் கை வைத்தவர்கள். முஸ்லிம்களின்  4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தவர்கள் பல்வேறு வகையிலும் முஸ்லிம்களை துன்புறுத்தி அதை மட்டுமே அரசியல் செய்து கொண்டிருந்தவர்களை இந்து மக்களே துரத்தி யடித்து விட்டார்கள் என்று மக்கள் பெருமிதம் கொண்டு வருகின்றனர்.

இந்த மாற்றம் அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்க வேண்டும் எனபதே பெரும்பாலோனோரின் பிரார்த்தனையாக இருக்கிறது.

அல்லாஹ் துனை செய்வானாக!

இப்போது அதிகாரத்திற்கு வந்திருப்பவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் மாநிலம் சந்தித்த சிரமங்களை பற்றிய கவலையும் நாட்டு மக்கள் அளித்திருக்கிற மகத்தான் வெற்றியின் மீது நன்றியுணர்வும் இருக்க வேண்டும்.

மக்களுக்கு நன்மை செய்கிற காரியங்களில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு அதிகாரப் போட்டிக்குள் அவர்கள் விழுந்து விடுவார்கள் எனில் இந்த அரசுக்கு மக்கள் அளித்திருக்கிற ஐ ந்து வருட ஆதரவு சில நாட்களுக்கு மிஞ்சாது என்பதை அவர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

அல்லாஹ் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றத்தை மாநிலத்தின் நலனுக்கும் நாட்டின் நலனுக்கும் பயன்படக் கூடியதாக ஆக்கியருள்வானாக

 

No comments:

Post a Comment