வாழ்கையில் பயணம் ஒரு தவிர்க்க முடியாத அம்சம்
அதனால் ஏராளமான
நன்மைகள் உண்டு.
மிக முக்கியமாக,
பயணத்தால் இதயம் தெளிவடைகிறது என்கிறது குர்ஆன்
أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا ۖ فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَٰكِن تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ
எல்லோருக்கும் இதயம் இருக்கிறது அது விவரமான இதயமா ? எல்லோருக்கும் காதுகள் இருக்கின்றன. அவை கேட்டவை அவர்களுக்கு பயனளித்ததா ?
உண்மையில் பார்வை
குருடாக இருப்பது குருட்டுத்தனம் அல்ல. இதயம் விவரமற்று இருப்பது தான் குருட்டுத்தனம்
என்கிறது இந்த வசனம்.
ஒரு காலத்தில்
ஆலிம்களில் ஹஜ்ஜுக்கு சென்றவர்கள் மிக குறைவு. அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹஜ் சமபந்தமான
பாடங்களை படிக்கிற போது அது என்ன என்பது ஓரளவுக்கே தெளிவாகும்.
ஆனால் இப்போது
அல்ஹம்துலில்லாஹ் நேரடியாக ஹஜ்ஜுக்கு செல்லும் வாய்ப்பு பல ஆலிம்களுக்கும் கிடைத்திருக்கிறது.
ஹஜ் என்பது ஒரு புகை மூட்டமான அமலாக இல்லாமல் தெளிவாக அறிய முடிந்த அமலாக மாறி இருக்கிறது.
பயணங்கள் நம்மை
விவரமான மனிதர்களாக்குகின்றன.
அவரு நாலு ஊருக்கு
போய்ட்டு வந்தவரு, அவருக்கு தெரியாதா ? என்று சாதாரணமாக மக்கள் பேசுவதுண்டு.
ஹஜ்ஜுக்கு போகிற
ஹாஜி அல்லாஹ்வின் பல குத்ரத்துகளை நேரில் கண்டும் அனுபவித்தும் திரும்புகிறார்.
ஜம் ஜம், மகாமே
இபுராகீம், கஃபா மினா அரபா முஜ்தலிபா என அவர் காணும் ஒவ்வொரு இடமும் அவருக்கு மகத்தான
தெளிவை தருகின்ரன.
அவர் அல்லாஹ்வை
பற்றி விவரமானவராக ஆக வேண்டும். அல்லாஹ் தவ்பீக் செய்யட்டும்.
பெருமானார் (ஸல்)
அவர்களுக்கு ஹிரா குகையில் வஹீ வந்த்து என்று கேள்விப்பட்டிருப்போம், ஹிஜ்ரத்தின் போது
தவ்ரு குகைகள் மறைந்திருந்தார்கள் என்றும் கேள்விப்பட்டிருப்போம். மக்கா விற்கு செல்லும்
போது அவற்றை நேரில் காணும் வாய்ப்புக் கிடைக்கிறது. அது போல நமது மார்க்கம் தொடர்பான
ஏரளமான விவரங்களை செவி வழிச் செய்தியாக கேள்விப்பட்டிருப்போம். அவற்றை கண்களால் பார்த்து
ஈமானை பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை ஹஜ் பயணம் தருகிறது.
இதே போலத்தான்
ஒவ்வொரு பயணமும் நம்மை விவரமானவர்களாக ஆக்குகிறது.
நமது ஊரில் சில
குறிப்பிட்ட பருவங்களில் தான் பூக்கள் முளைக்கும். பாலைவனங்களில் சில குறிப்பிட்ட வழி
முறைகளில் எப்போதும் பூக்கள் முளைக்கிற வழிவகைகளை செய்திருந்தார்கள். அங்கு சென்று
அதை பார்வையிட்ட நமது விவசாயிகள் இப்போது வருட்த்தில் எல்லா நாளும் ரோஜாக்கள் முளைக்கிற
தோட்டங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஒரு உண்மை தெரியுமா
? இஸ்லாமிய வருட்த்திற்கு ஹிஜ்ரீ என்று உமர் ரலி அவர்கள் பெயர் சூட்டினார்கள் அல்லவா
? அதன் பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது,
ஹிஜாஸுக்கு வெளியே
முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் வந்த முதல் நாடு எமன் நாடு ஆகும், அங்கு மக்கள் தமது நிகழ்வுகளுக்கு
நாட்காட்டி நடை முறையை ( ஆண்டு அடையாளமிடப்பட்ட கேலண்டர்) பயன்படுத்தி வந்தனர். அது
மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதைப் பற்றி எமன் நாட்டிற்கு போய்விட்டு வந்தவர்கள் உமர்
ரலி அவர்களிடம் கூறியிருந்தார்கள்.
முஸ்லிம்களுக்கும்
ஒரு நாட்காட்டி நடை முறை தேவை என்பதை உமர் ரலி அவர்களுக்கு உணர்த்திய முதல் நிகழ்வு
இதுவேயாகும்.
கொலம்பஸ் கடல்
பயணம் செய்வதற்கு முன்னால் இந்த உலகிற்கு அமெரிக்கா என்ற ஒரு கண்டம் இருப்பதே தெரியாது.
அவரது பயணம் தான் ஒரு புதிய பிரம்மாண்ட நிலப்பரப்பு இருக்கிறது என்பதை மக்கள் அறியச்
செய்தது,
ஐரோப்பாவிலிருந்து
இந்தியாவிற்கு தரை மார்க்கமாகத்தான் வர முடியும் என்று ஒரு காலத்தில் மக்கள் நம்பியிருந்தனர்.
வாஸ்கோடகாமா அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து செய்து இந்தியாவிற்கு ஐரோப்பாவிலிருந்து
கடல் வழியாகவும் செல்லமுடியும் என்று கண்டு பிடித்தார்.
இந்த பயணங்கள்
சாதாரண நிகழ்வுகள் அல்ல. உலகின் தலைவிதியில்
மகத்தான மாற்றங்களை ஏற்படுத்திய நிகழ்வுகள். உலகை பற்றிய ஏராளமான விவரங்களை மக்கள்
உணர்ந்து கொள்ள உதவிய நிகழ்வுகள்.
பயணங்கள் ஆரோக்கியம்
தரும்
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் பயணத்திற்கு மற்றொரு பலனை சொன்னார்கள்.
عن أبي هريرة رضي الله عنه بلفظ: سافروا تصحوا، -أحمد في مسنده
இதே நபி மொழி மற்றொறு அறிவிப்பில் இப்படி வருகிறது
ورواه الطبراني عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه
وسلم: سافروا تصحوا وتسلموا.
உடல் நலம். மன நிம்மதி என இரண்டு வகை ஆரோக்கியமும் பயணத்தால் கிடைக்கும் என்று இந்நபி மொழிகள் தெளிவுபடுத்துகின்றனர்.
ஒரே இருடத்தில் இருப்பதை விட அவ்வப்போது எங்கேனும் பயணம் செய்து விட்டு வருவது
உடலுக்கும் நல்லது மனதுக்கும் நல்லது.
تفرج هم واكتساب
معيشة * وعلم وآداب وصحبة ماجد
உயர்ந்த நோக்கத்தில் ஊரை விட்டு வெளியே போ!
பயணத்தில் ஐந்து நன்மைகள் உண்டு.
1.
கவலைகள் தீரும்.
2.
சம்பாதிக்கலாம்.
3.
புதிய கல்வி கிடைக்கும்.
4.
பல கலாச்சாரங்களை அறியலாம்.
5.
மதிப்புமிகு நண்பர்கள் கிடைப்பார்கள்
பயணத்தின் நோக்கம் நல்லதாக இருந்தால் அதில் கிடைக்கும் ஒரு முக்கிய நன்மைய பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்
ஹனபி மத்ஹபி இரண்டாகத்தான் தொழ வேண்டும்.
ஷாபி மத்ஹபில் இரண்டு தொழுகையை சேர்த்தும் தொழலாம்.
ஊர் எல்லையை கடந்த பிறகுதான் இவ்வாறு தொழ முடியும்
ஷாபி மத்ஹபில் 4 தின்ங்களுக்கு மேல் தங்க முடிவு செய்பவருக்கு இந்த
சலுகை இல்லை.
மஃரிபையும் இஷாவையும் சேர்த்து மஃரிபுடைய நேரத்தில் அல்லது இஷாவுடைய
நெரத்தில் தொழலாம்.
·
முன்னதை தொழுது விட்டு
இடைவெளியின்றி பின்னதை தொழுது விட வேண்டும்.
·
பிந்திச் சேர்க்கும் போது
முந்திய தொழுகையின் நேரத்தில் இவ்வாறு செய்ய இருப்பதாக நிய்யத் செய்ய வேண்டும்.
عمر بن الخطاب
سألت رسول الله - صلى الله عليه وسلم - عن ذلك، فقال: "صدقة تصدق الله بها عليكم، فاقبلوا صدقته".
روى أبو هريرة أن النبي قال: (( ثلاث دعوات مستاجابات
لا شك فيهن: دعوة الوالد، ودعوة المسافر، ودعوة المظلوم )) [رواه أبوداود،
பயணத்தில் இன்னும்
மூன்று நன்மைகள் உண்டு என்று கூறுகிறார்கள் மார்க்க அறிஞர்கள்
1. அல்லாஹ்வின் திருப்தியும் அவனளிக்கிற வாய்புகளும்.
2. நாடிப்போன காரியம் நடக்கும்.
3. புகழுடன் திரும்புவார்
2. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தனியான பய்ணத்தை தவிர்க்க வேண்டும்.
فعن أبي سعيد الخدري أن رسول الله قال: (( إذا خرج ثلاثة في سفر فليؤمروا أحدهم ))؛ رواه أبو داود
இரவில் பயணச் சிரம்ம் தெரியாது
அதிகாலை நேரமும் சிறப்பு
: قال رسول
الله صلى الله عليه وسلم: اللهم بارك لأمتي في بكورها
6.
பயண துஆ
இதன்
பொருளை ஒரு தடவையாவது உணர்ந்து பாருங்கள்.
ஒருவரது குணத்தை அவரது பயணத்தில் அறிந்து
கொள்ளலாம் என்பார்கள்.
பயனத்தின் போது சகிப்புத்தன்மை தாராள இயல்புடன்
நடந்து கொள்ள வேண்டும். பிறருக்கு தொல்லை தருவதை தவிர்க்க வேண்டும்.
அச்சுறுத்தல் உள்ல பாதைகளை தவிர்க்க வேண்டும்.
வாகணங்களுக்கு ஓய்வளிக்க வேண்டும். அவற்றின் தரம் அறிய வேண்டும்.
فعن أبي هريرة قال: قال رسول الله: ((إذا
سافَرْتُمْ في الخِصْبِ، فأعْطُوا الإبِلَ حَظَّها مِنَ الأرْضِ، وإذا سافَرْتُمْ
في السَّنَةِ، فَبادِرُوا بها نِقْيَها، وإذا عَرَّسْتُمْ، فاجْتَنِبُوا
الطَّرِيقَ، فإنَّها طُرُقُ الدَّوابِّ، ومَأْوَى الهَوامِّ باللَّيْلِ.))؛ رواه مسلم.
وإذا عَرَّستُم» أي: أَردتُم الرَّاحةَ والنَّومَ باللَّيلِ، فلا تَناموا على الطَّريقِ
9.
தங்கும் இடங்கள் பாதுகாப்பானதாக ஆக
يقول: ((اللهم رب السماوات السبع وما أظللن، ورب الرياح وما ذرين، أسألك خير هذه القرية وخير أهلها، وأعوذ بك من شرها وشر أهلها وشر ما فيها))؛ صححه الحاكم،
فعن أبي هريرة عن النبي قال: ((السفر قطعة من العذاب: يمنع
أحدكم طعامه وشرابه ونومه. فإذا قضى نهمته فليعجل إلى أهله))؛ رواه البخاري ومسلم.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி
ReplyDeleteஹஜ்ரத்
அருமையான பதிவு நன்றி
தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி
அக்பர் சார்ஜா
அருமை
ReplyDeleteபயனுள்ள பதிவு நன்றி
ReplyDelete