வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 29, 2024

பரிசுத்தம்

 இன்றைய நமது நடை முறைகளில் இதயப் பரிசுத்தமான வாழ்வு என்பது மிக அரிதாகி வருகிறது.

குடும்பம், சமூகம் அரசியல் என அனைத்திலும் நாடகத்தனமும் இரட்டை வேடமும் அதிகரித்து விட்டது.

மார்க்க விவகாரங்களில் கூட நாடகத்தனமே கோலோச்சுகிறது.

பராஅத் இரவின் சிறப்பு பற்றி அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட  ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருக்கிறது.

عن أبي موسى الأشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : (( إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن )) رواه ابن ماجة وحسنه الألباني في السلسلة الصحيحة

இவ்வாறிருக்க  குர் ஆன் ஹதீஸ் என்று கோஷம் போட்டவர்களே பராஅத் இரவின் சிறப்பை ஒத்துக் கொண்டால் அவர்களும் சுன்னத் ஜமாத்தினரை போல நடந்து கொள்ள வேண்டியதாகிவிடும் என்ற ஒரே காரணத்திற்காக அந்த இரவை புறக்கணிக்கிறார்கள். இதற்காக பொருத்தமற்ற வாதங்களை முன் வைத்து வழக்காடவும் செய்கிறார்கள். இது ஆலிம்கள் வயிறு வளர்க்க செய்த ஏற்பாடு என்று பேசுகிறார்கள்.

நன்மையான விவகாரங்களில் கூட தீனுக்கு உண்மையாக இல்லாமல், தங்களுடைய இயக்கத்திற்கு வலுச்சேர்க்கும் இந்த சிந்தனை இதயத்தில் பரிசுத்தம் என்பது கடுகளவேணும் இல்லாமல் போனதற்கு ஒரு அடையாளமாகும்.

குடும்ப உறவுகளிலும் அரசியலிலும் இத்தகைய நாடகத்தனம் மலிந்து போய்க்கிடப்பதை நாம் அனுபவத்தில் உணர்ந்து வருகிறேன்.

நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் உள்ளப் பரிசுத்தமான வாழ்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிற மார்க்கமாகும்.

அது உண்மையில் ஒரு சரியான மனிதாபிமான இயல்பாகும்.  அதுவே உண்மையான பக்தியுமாகும்.

திருக்குர் ஆன் கூறூகிறது

أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ

பரிசுத்தமான பக்தியே அல்லாஹ்வுக்கு சொந்தமானது என்றும்.

مُخْلِصِينَ لَهُ الدِّينَ

மக்கள் பரிசுத்தமான பக்தியாளர்களாக இருக்கவே உத்தரவிடப்பட்டுள்ளார்கள் என்றும் திருக்குர் ஆன் கூறுகிறது.

உள்ள பரிசுத்தம் இல்லாவிட்டால் எந்த நற்செயலும் அல்லாஹ்விடத்தில் மதிப்பு பெறாது.

பரிசுத்தம் இல்லாத செயல்பாட்டாளர்களே நரகின் முதல் எரிகொள்ளிகள்.

فقالَ أبو هريرة : حدَّثني رسولُ اللَّهِ صلَّى اللهُ عليْهِ وسلَّمَ : إنَّ اللَّهَ تبارَكَ وتعالى إذا كانَ يومُ القيامةِ نزلَ إلى العبادِ ليَقضيَ بينَهم ، وَكلُّ أمَّةٍ جاثيةٌ ، فأوَّلُ من يدعو بهِ رجلٌ جمعَ القرآنَ ، ورجلٌ يُقتلُ في سبيلِ اللَّهِ ، ورجلٌ كثيرُ المالِ ، فيقولُ للقارئِ : ألم أعلِّمْكَ ما أنزلتُ علَى رسولِي ؟ قالَ : بلى يا ربِّ قالَ : فماذا عمِلتَ فيما عُلِّمتَ ؟ قالَ : كنتُ أقومُ بهِ أثناءَ اللَّيلِ وآناءَ النَّهارِ ، فيقولُ اللَّهُ لهُ : كذبتَ ، وتقولُ الملائِكةُ : كذبتَ ، ويقولُ اللَّهُ : بل أردتَ أن يقالَ : فلانٌ قارئٌ ، فقَد قيلَ ، ويؤتى بصاحبِ المالِ فيقولُ اللَّهُ : ألم أوسِّع عليْكَ حتَّى لم أدعْكَ تحتاجُ إلى أحدٍ ؟ قالَ : بلَى قالَ : فماذا عملتَ فيما آتيتُكَ ؟ قالَ : كنتُ أصلُ الرَّحمَ ، وأتصدَّقُ ؟ فيقولُ اللَّهُ : كذبتَ ، وتقولُ الملائِكةُ : كذبتَ ، فيقولُ اللَّهُ : بل أردتَ أن يقالَ : فلانٌ جوَّادٌ ، فقد قيلَ ذاكَ ، ويؤتى بالَّذي قتلَ في سبيلِ اللَّهِ ، فيقالُ لهُ : فيمَ قُتلتَ ؟ فيقولُ : أُمِرتُ بالجِهادِ في سبيلِكَ ، فقاتلتُ حتَّى قُتلتُ ، فيقولُ اللَّهُ : كذبتَ ، وتقولُ الملائِكةُ : كذبتَ ، ويقولُ اللَّهُ عزَّ وجلَّ لهُ : بل أردتَ أن يقالَ : فلانٌ جَريءٌ : فقد قيلَ ذلِكَ ، ثمَّ ضربَ رسولُ اللَّهِ صلَّى اللهُ عليْهِ وسلَّمَ علَى رُكبتيَّ ، فقالَ : يا أبا هُريرةَ ، أولئِكَ الثَّلاثةُ أوَّلُ خَلقِ اللَّهِ تُسعَّرُ بِهمُ النَّارُ يومَ القيامَةِ

 உள்ளப்பரிசுத்தம் இருந்தால் அதற்காகவே நன்மை கிடைக்கும் நன்மைகளை செய்யாவிட்டாலும் கூட

 நான் இன்று தஹஜ்ஜுத் தொழ வேண்டும் என்று நினைத்து உறங்கியவர் அசந்து தூங்கி விட்டால் தொழுததற்குரிய நன்மையை பெறுவார் என்று நம் மார்க்கம் கூறுகிறது.

 நற்செயல்கள் குறிப்பிடத்தக்கவை. அதற்கான கூலியோ எல்லையற்றது.

ஒருவர் ஒரு நாள் தஹஜ்ஜுத் தொழுதார். அதற்காக அதற்காக அவருக்கு சொர்க்கம் கிடைக்கிறது என்றால் அந்த நன்மை மிக விசாலமானது .

 இதற்கு உள்ளப்பரிசுத்தம் தான் காரணமாகும். ஏனெனில் அவரது செயலுக்கு எல்லை இருந்தாலும் அவரது பரிசுத்தமான உள்ளத்திற்கு எல்லை இல்லை,

என் உயிருள்ளவரை நான் தஹஜ்ஜுத் தொழுவேன் என்று அவர் நினைத்திருப்பார். அந்த எண்னம் மிக விசாலமானது அதற்கேற்பவே அல்லாஹ்வின் கூலியும் அமைகிறது.

 சுப்யான் அத்தவ்ரீ ரஹ் அவர்களிடம் ஒருவர் வந்து பேசிக் கொண்டிருந்தார். இந்த வருடம் எவ்வளவு முயற்சி செய்தும் தன்னால் ஹஜ்ஜுக்கு செல்லமுடியவில்லை என்பது பற்றி வருத்தமாக பேசி ஒரு பெரு மூச்சு விட்டார்.

சுப்யான் அத்தவ்ரீ ரஹ் கூறினார்கள். நான் 40 ஹஜ்ஜு செய்திருக்கிறேன். அந்த அமல்களை உனக்கு தந்து விடுகிறேன். இப்போது நீ பெருமூச்சு விட்டாயே அந்த ஒரு நன்மையை எனக்கு தரமுடியுமா என்று கேட்டார்கள்.

 பரிசுத்தமான இதயத்தின் பரிதவிப்பு பல ஹஜ்ஜுகளை விட மரியாதைக்குரியது என்பதை இது காட்டுகிறது.

 இமாம் அஹ்மது பின் ஹன்பல் ரஹி அவர்களது வீட்டுக்கு அருகே ஒரு இரும்பு கொல்லன் வசித்து வந்தார்.

 அவர் திடீரென் மரணமடைந்தார். இமாம் அஹ்மது அவர்களின் சீடர் ஒருவர் அவரை கனவில் பார்த்த போது அந்த கொல்லர் சொர்க்கத்தில் மிக மகிழ்ச்சியாக இருந்தார். அது மட்டுமல்ல; தான் அஹ்மது பின் ஹன்பலுக்கு நிகரான தரத்தில் இருப்பதாகவும் கூறினார்.

அந்த சீடருக்கு ஆச்சரியமாகிவிட்டது. சாதாரண இரும்படிக்கிற கொல்லருக்கு எப்படி இவ்வளவு பெரும் அந்தஸ்து கிடைக்கும்? என்று ஆச்சரியப்பட்டார். கொல்லரின் வீட்டுக்காரர்களிடம் தான் கனவில் கண்ட செய்தியை சொல்லி அவருடைய விஷேச அமல்களை விசாரித்தார். அந்த குடும்பத்தினர் கூறினார்கள். அவர் சாதாரண செயல்பாட்டாளர் தான். ஆனால் அவர் இரும்படிக்க சுத்தியலை ஓங்குகிற போது  பாங்கு சப்தம் கேட்டால் அதை அப்படியே கீழே வைத்து விட்டு தொழுக சென்று விடுவார். மற்றொன்று. அவர் இரவு நேரத்தில் இமாம் அஹ்மது அவர்கள் தொழுவதை பார்த்து ஆதங்கப்படுவார். என் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டிய சுமை மட்டும் இல்லை என்றால் நானும் இமாம் அஹ்மதை போலவே தொழுவேன் என்று சொல்வார் என்றும் அக்குடும்பத்தினர் கூறினர்.

 இமாம் அஹ்மதின் சீடரான அந்த ஹதீஸ் கலை அறிஞர் கூறினார். இது பரிசுத்தமான இதயத்திற்கு அல்லாஹ் கொடுத்த பரிசு ,

 உள்ளப்பரிசுத்ததிற்கு கேடாக அமைகிற காரியங்களில் மூன்று மிக முக்கியமானவை

 1.       தற்பெருமை

2.       பேராசை

3.       பொறாமை

 தற்பெருமை பரிசுத்தமான வாழ்க்கைகு முதல் பெரும் தடையாகும்.

 மலக்குகளின் ஆசானாக இருந்த சைத்தான் அல்லாஹ்வுக்கு மாறு செய்தது அவனுடைய தற்பெருமையினால் தான்.

 قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ (12قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُونُ لَكَ أَن تَتَكَبَّرَ فِيهَا فَاخْرُجْ إِنَّكَ مِنَ الصَّاغِرِينَ (13)

 இது அர்ஷின் மைதானத்தில் நடந்தது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.  கல்வி, பதவி, செல்வாக்கு என எத்தகைய உயர்ந்த இடத்தில் இருந்தாலும் தற்பெருமை படுபாதாளத்தில் வீழ்த்தி விடும்.

 இன்று நம் சமூகத்தை பீடித்திருக்கிற மிக மோசமான இயல்பு இதுவே!

 ஏராளமான இளைஞர்கள் தம் சார்ந்த இயக்கம் அல்லது கட்சியை பற்றிய தற்பெருமையின் காரணமாக மிக வக்கிரம்மாக நடந்து கொள்கிறார்கள். நன்மைகளை புறக்கணிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, நன்மை செய்பவர்களை ஏசவும் பேசவும் செய்கிறார்கள். தம் கட்சியை சாரார்தவர்களை இழிவாகவும் கேவலமாகவும் பார்க்கிறார்கள்

 கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்! இப்போது தேர்ந்தல் நேரம் நெருங்கி விட்டது. ஒவ்வொரு அமைப்பும் அதனுடைய அரசியல் நலன் சார்து தான் கூட்டணிகளை அமைத்திருப்பார்கள். அரசியல் ரீதியாக எதிர்த்துக் கொள்வர்கள். ஆனால் முஸ்லிம் கட்சிகளையும் இயக்கங்களையும் கவனித்துப் பாருங்கள். தங்களை மட்டுமே பரிசுத்தவான்களாகவும் எதிர் கூட்டணியினரை ஒழுக்கங்கடெட்டவர்களாகவும் நீதியற்றவர்களாகவும் பொது வெளியில் மிக கடுமையாக விமர்ச்சிப்பார்கள். இது தற்பெறுமையின் உச்சபட்ட அடையாளமாகும். அவர்களே தங்களது கடந்த கால அனுபவத்தில் வேறு மாதிரி நடந்திருப்பார்கள்.  

தற்பெருமை கொண்டு செய்யப்படும் எந்த பணியும் அல்லாஹ்விடம் துளி மரியாதையும் பெறாது. .

 தற்பெறுமை படுத்து கிற பாடு  இது. இதனால்  சேவைகள் கூட சோதனைகளாக மாறிவிடுகின்றன.

 பெருமானார் (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமூகத்தை மிக கடுமையாக எச்சரித்த குணங்களில் இது முக்கியமனது.

 لا يَدْخُلُ الجَنَّةَ مَن كانَ في قَلْبِهِ مِثْقالُ ذَرَّةٍ مِن كِبْرٍ قالَ رَجُلٌ: إنَّ الرَّجُلَ يُحِبُّ أنْ يَكونَ ثَوْبُهُ حَسَنًا ونَعْلُهُ حَسَنَةً، قالَ: إنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الجَمالَ، الكِبْرُ بَطَرُ الحَقِّ، وغَمْطُ النَّاسِ.

الراويعبدالله بن مسعود | المحدثمسلم

 «بَطَرُ الحقِّ»، أي: رفضُ الحقِّ والبُعدُ عنه تَرفُّعًا وتَجبُّرًا، சத்தியத்தை புறக்கணிப்பது.அதை கண்டு கொள்ளாமல் போவது.

 وغَمْطُ الناسِ»، أيِ: احتِقارُهم  மக்களை இழிவாக கருதுவது.

 தற்பெருமையை புரிந்து கொள்ள மிக அற்புதமா ஹதீஸ் இது. நாங்கள் நன்றாக இருக்க வேண்டும். அல்லது இருக்கிறோம் என்பது தற்பெருமை அல்ல; பிறரது சத்தியத்தை மறைப்பதும் அவர்களை இழிவ்படுத்துவதே தற்பெருமையாகும்.

 குடும்ப உறவுகளிலும் கூட கொஞ்சம் வசதி வாய்ப்பு அந்தஸ்த்து வந்தவுடன் பழகுவதில் இதயச் சுத்தி இல்லாமல் போய்விடுகிறது.

  பேராசை

 பேராசை கொண்ட மக்களிடத்தில் வஞ்சம் குடி கொண்டு விடுகிறது.

 ஈஸா அலை அவர்களை அவர்களது சீடன் ஒருவனே முப்பது வெள்ளிக்காசுகளுக்காக காட்டிக் கொடுத்தான் என்று பைபிள் கூறுகிறது.

 காசு பதவி அந்தஸ்த்து, இவற்றில் பேராசை வந்து விடும் எனில் உள்ளத்தில் பரிசுத்தம் என்பது கானாமல் போய்விடும். பிறகு அனைத்து வகையான தீமைகளையும் அது  கொண்டு வந்து சேர்த்து விடும்.

 பேராசையின் தீமையை ஒநாய்களோடு ஒப்பிட்டு பெருமானார் (ஸல்) அவர்கள் கூறீனார்கள்.

 ما ذِئبانِ جائعانِ أُرْسِلا في غنَمٍ ، بأفسدَ لَها من حِرصِ المَرءِ علَى المالِ والشَّرَفِ لدينِهِ

الراويكعب بن مالك |  المصدرصحيح الترمذي

 ஒரு ஆட்டு மந்தையின் மீது பசி கொண்ட இரண்டு ஓநாய்கள் பாய்ந்து தாக்கினால் ஏற்படும் தீமையை விட மார்க்க விவகாரத்தில் காசுக்காகவும் பதவிக்காகவும் ஏற்படும் பேராசை அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

 குடும்பத்தில் மூத்தவர்களுக்கு ஏற்படுகிற பணம் அந்தஸ்தின் மீதான பேராசை குடும்ப உறவுகளை சீரழித்து விடுகிறது.

 பதவியில் இருப்பவர்களுக்கு ஏற்படுகிற பணம் அந்தஸ்தின் மீதான பேராசை நாட்டை சீரழித்து விடுகிறது.

 மதம் சார்ந்த அமைப்புக்களில் இருப்பவரளுக்கு ஏற்படுகிற பணம் அந்தஸ்தின் மீதான பேராசை சமூகத்தையும் மதத்தையும் சீரழித்து விடுகிறது.   

 பேராசை உருவாகும் எனில் தாழ்வு சேர்ந்தே வரும்.

 ஆதம் அலை அவர்களை சைத்தான் ஏமாற்ற முயன்றது மனிதர்களின் பேராசை காரணமாகத்தான் 

  فَوَسْوَسَ إِلَيْهِ الشَّيْطَانُ قَالَ يَا آدَمُ هَلْ أَدُلُّكَ عَلَىٰ شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلَىٰ (120فَأَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ ۚ

 பொறாமை

 ஆன்ம பரிசுத்தம் காணமால் போகிற மூன்றாவது களம் பொஎறாமை ஆகும்.

 அடுத்தவர்களுக்கு கிடைத்திருப்பது போல நமக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் அது தவறில்லை. அடுத்தவர்களுக்கு கிடைக்க கூடாது என்று நினைப்பது பொறாமையாகும்.

 மனித வரலாற்றில் பூமியில் நிகழந்த  முதல் குற்றமான ஹாபீலை காபீல் கொலை செய்தது பொறாமையின் காரணமாகும்.

 وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ ۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ (

 மற்றவருக்கு கிடைத்திருக்கிற நன்மையின் மீது ஒரு மனிதருக்கு பொறாமை ஏற்பட்டு அது கொதிக்க  தொடுங்கும் எனில்  அதனால் எவ்வளவு பெரிய அக்கிரமத்தையும் அவன் செய்ய தயாராகிவிடுவான்.

 ومن شر حاسد اذا حسد என்ற வசனம் இந்த நிலையை தான் கூறுகிறது.

 மக்கள் அவர்களிடம் உள்ளப் பரிசுத்தம் இருந்தால் கொல்லத் தொழில் செய்பவர்கள் கூட மிகப் பெரும் தியாகியின் அந்தஸ்தை அடைய முடியும்.

அதே நேரத்தில் அந்த பரிசுத்தம் தவ்றும் எனில் எந்த உயர்வும் பயனளிக்காமல் போய்விடும்.

 நமது இன்றைய அவசர வாழ்வில் பணம் பதவி இயக்க சார்பு ஆகிய மோகத்தில் உள்ளத்தூய்மை பறி கொடுக்காமல் வாழ்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

 

1 comment: