கடந்த வாரத்தில் இரண்டு செய்திகள் பிர்தானமானவை
ஒன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து 10 நாட்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிற நெருப்பு,
மற்றது பாலஸ்தீனில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் ஏற்பட்டிருக்கிற உடன்பாடு.
இந்த இரண்டும் எங்கோ தொலைவில் இருக்கிற வெவ்வேறு இடங்களில் நடை பெற்றிருக்கின்றன என்றாலும் இரண்டுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன.
மனித சமூகம் படிப்பினை கொள்வதற்கேற்ற
சில செய்திகள் அதில் உண்டு.
அவற்றை இந்த ஜும்ஆ வில் நாம் பார்க்கிறோம்.
ஒரு சஹாபி தெருவில் அமர்ந்திருந்தார். அந்த வழியே ஒரு மாட்டை அதன்
சொந்தக்காரன் இழுத்துச் சென்று கொண்டிருந்தார். மாடு முரண்டு பிடித்த போது அதன் சொந்தக்காரன்
சாட்டையால் அதை அடித்தான். அப்போது மாடு சொன்னபடி கேட்டது. இதை பார்த்துக் கொண்டிருந்த
நபித்தோழர் தக்பீரை முழங்கிய படி எழுந்தார். இப்படித்தானே நான் எனது இறைவனின் சொற்களுக்கு
கட்டுப்பட வில்லை எனில் எனக்கு அடி கிடைக்கும் என்று கூறினார்.
முஸ்லிம்களின் முதல் கடமை இது, இந்த உலகில் நடை பெறுகிற எந்த ஒரு காட்சியை பார்க்கிற
போதும் அது மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட சோதனை என்று பேசுவதற்கு முன்னதாக அதில் தனக்கு
என்ன பாடம் என்று பார்க்கும் மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
திருக்குர் ஆன் இதை வலியுறுத்துகிறது.
لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ
لِّأُولِي الْأَلْبَابِ
அமெரிக்க தீ விபத்து, உலகத்தை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறது இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் பீதிக்குள்ளாக்கி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ்ஏன்ஞல்ஸ் நகரம்
உலகில் ஆடம்பரத்திற்கும் உல்லாசத்திற்கும் பெயர் பெற்ற நகரமாகும். பசிபிக்
பெருங்கடலின் ஓரத்தில் அமைந்திருக்கீறது. அமெரிக்காவில் அதிக மக்கள் வசிக்கும்
இரண்டாவது பெரிய நகராகும். அமெரிக்காவின் பொழுது
போக்கிறகு முக்கிய மாநிலமாக இருப்பது போல அமெரிக்காவின் தொழில் வளத்திலும் சர்வதேச வணிகம், கலாச்சாரம், ஊடகம், ஆடை வடிவமைப்பு, அறிவியல், விளையாட்டு, கல்வி, மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி என பல்
துறையிலும் லாஸ் ஏன் ஜெல்ஸ் முக்கிய
நகராமாகும். உலகின் தலை சிறந்த நகரங்களின் பட்டியலில் 15 வது இடத்தில் இருக்கிறது.
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 140 நாடுகளைச் சேர்ந்த 224 மொழிகளைப் பேசும் 40 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
அந்த நகரில் கடந்த 7
ம் தேதி தொடங்கிய தீ அமெரிக்கவை
மட்டுமல்ல உலகையும் பெரும்
திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதற்கு காரணம்
• எதனால் இந்த தீ
விபத்து ஏற்பட்டது என்பதை இதுவரை கணடு பிடிக்க முடியவில்லை
• ஆனாளப்பட்ட
அமெரிக்காவினாலேயே தீ பரவு வதை கட்டுப்படுத்த முடியவில்லை
இவற்றை எல்லாம் விட பெரிய விசயம், 10 நாட்களை கடந்து தீ இடைவிடாது இன்னும் பரவிக்
கொண்டிருக்கிறது
நினைத்தாலே அஞ்சி நடுங்க வைக்கும் வகையில் 6 இடங்களில்;
காட்டுத் தீ பற்றி எரிகிறது.
இந்த தீயின் வரலாறு ஆச்சரிகரமானது. தீ ஓரிடத்தில்
மட்டுல்ல ஜனவரி 7. 8 செவ்வாய் புதன் ஆகிய இரு தினங்களில் ஆறு வெவ்வேறு
இடங்களில் பற்றியுள்ளது.
முதன் முதலாக 7
ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10;30
யளவில் பாலிஸ்டேட் பகுதியில் ஒரு சிறு பகுதியில் தொடங்கிய தீ 20 நிமிட்த்தில் 200
ஏக்கருக்கு பரவியது அன்று மாலைக்குள் 3 ஆயிரம் ஏக்கரை தின்று தற்போது 23 ஆயிரத்து 500
ஏக்கரை கபளீகரம் செய்துள்ளது.
இதில் உயிரிழப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் மற்ற இழப்புகள் மிகப் பெரியவை.
இந்தப் பகுதியில் உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட்
திரைப்படக் கூடங்களும் பிரபலமான ஏராளமான பில்டிங்குகளும் இருக்கின்றன.
லுமினார் டெக்னாலஜி நிறுவனத்தின் CEO ஆஸ்டின் ரஸ்ஸலுக்கு சொந்தமான 18 படுக்கை அறைகளை கொண்ட பிரம்மாண்ட வீட்டில் இப்போது
முன்னாள் இருந்த ஷெட் மட்டும் இருக்கிறது. அந்த வீட்டின் மதிப்பு 10 ஆயிரத்து 77
கோடி என்று மதிப்பிடுகிறது டெய்லி மெயில் இணைய தளம்.
EATION பகுதியில் பற்றிய தீ முதல் 6
மணி நேரத்தில் 1000 ஏக்கர் நிலத்தை
விழுங்கிக் கொண்டது.
ALtadeena பகுதியில் செவ்வாய்
இரவு 6;30 மணிக்கு தொடங்கிய தீ
10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சுருட்டிய போது 5 பேர் உயிரிழந்தனர்.
Hurst பகுதியில் இரவு
செவ்வாய் 10 10 மணியளவில் தீ
பற்றியுள்ளது.
Woodly park பகுதியில் புதன் கிழமை காலை 6;15
க்கும் Lida பகுதியில் புதன்
மதியம் 2 மணியள்விலும் பற்றத்
தொடங்கியுள்ளது. Sun set பகுதியில் பரவிய
புதன் கிழமை மாலை 6 மணி
ஹாலிவுட் ஹில்ஸ் பகுதிய கபளீகரம் செய்துள்ளது.
ஏதோ ஒரு ராணுவ நடவடிக்கையை போல திட்டமிட்ட வடிவில்
தொடங்கிய தீப்பொறிகளின் பேயாட்டம் அமெரிக்காவின் கனவு நகரத்தை சாம்பலாக்கி
விட்டது.
இதற்கான காரணம் என்ன என்பது இதுவரை துல்லியமாக
தெரியவில்லை. கடுமையான வெப்பம் 96 கீமி வேகத்தில்
வீசுகிற சாண்டா ஆனா பருவக் காற்று ஆகியவற்றை காரணமாக சொல்கிறார்கள்.
ஆனால்
இதுவரை காரணத்தை திட்டவட்டமாக வரையறுக்க முடியவில்லை.
உலகிலேயே
அதிக புத்திசாலிகள் தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்ட நாட்டின் நிலை இது.
இந்த
பெரிய தீ விபத்திற்கு என்ன காரணம் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.
அல்லாஹ்வின்
திட்டங்களுக்கு முன் – மனித அறிவு செயலற்றது என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டிய
நிர்பந்தத்தை இது உணர்த்துகிறது.
மனித யூகங்களுக்கு அப்பாற்பட்ட அளவில் சோதனைகள் ஏற்படுகிறது
என்றால் அது அல்லாஹ்வின் திட்டமாகத்தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள
வேண்டும்.
திருக்குர் ஆன் கூறுகிறது.
قُلْ هُوَ الْقَادِرُ عَلَىٰ أَن يَبْعَثَ
عَلَيْكُمْ عَذَابًا مِّن فَوْقِكُمْ أَوْ مِن تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ
يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُم بَأْسَ بَعْضٍ ۗ انظُرْ كَيْفَ
نُصَرِّفُ الْآيَاتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ (65)
மூன்று வகையாக எந்த நிலையிலும் மக்களை சோதனைக்குள்ளாக்க்க முடியும் என்று அல்லாஹ்
தன் சக்தியை பறை சாற்றுகிறான்.
·
மேல் புறத்திலிருந்து
வேதனை
·
கீழ் புறத்திலிருந்து
வேதனை
·
அல்லது மக்களை பிளவு
படுத்தி அவர்களுக்குள் சர்ச்சைகளை சண்டைகளை உருவாக்கி வேதனை
மேல்
புறத்து வேதனை என்பதற்கு திருக்குர் ஆனிய அறிஞர்கள் காற்றின் மூலம் வேதனை என்று
விளக்கம் சொல்வார்கள்.
முற்காலத்தில்
ஆது சமூகம் காற்றின் மூலம் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டார்கள் என்று
திருக்குர் ஆன் கூறுகிறது.
قوم هود لما
كذبوه أهلكهم الله بالريح .
وَأَمَّا عَادٌ
فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (6) سَخَّرَهَا
عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ
فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ (7) فَهَلْ
تَرَىٰ لَهُم مِّن بَاقِيَةٍ (8)
இப்போதைய
அமெரிக்க காட்டுத் தீயுக்கும் செயின் ஆனா என்ற காற்றை தான் ஒரு பெரிய காரணமாக கூறுகிறார்கள்.
அது கடுமையான வெப்பக் காற்று. மணிக்கு 80 மைல்
வேகத்தில் வீசக் கூடியது. அப்படியானால் சுமார் 160 கிமீ வேகத்தில் வீசக்கூடியது.
நெருப்பு கொளுந்து விட்டு எரிந்து துரத்தி கொண்டு
வருவதை கண்டு ஒருவர் இது இறுதி நாளின் அடையாளம் என்று கூறினார் என்று பிபிசி
கூறுகிறது.
ஒரு
நெருப்பு இறுதி நாளை நோக்கி மக்களை ஓட்டிச் செல்லும் என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களும் கூறியுள்ள்ளார்கள்.
قال رسول الله صلى الله عليه وسلم : ( وآخر ذلك نار
تخرج من اليمن تطردُ الناسَ إلى محشرهم
இது அது போல நெருப்பாக இருக்குமோ
என அஞ்சும் அளவு நெருப்பின் வேகம் இருக்கிறது.
காரணம்
இன்னது என்று கண்டு பிடிக்க முடியாத கடும் நெருப்பு இது அல்லாஹ்வின் தண்டனையாக
இருக்கும் என்ற அச்சத்தை தருகிறது.
அப்படியானால்
இதை மனிதர்கள் அனைவரும் பயந்தாக வேண்டும்.
முஸ்லிம்களில்
சிலரும் மற்ற பலரும் இந்த சந்தர்ப்பத்தில் இதை பாலஸ்தீன் மக்களுக்கு அமெரிக்கா
இழைத்த கொடுமைகளுக்கான பதிலடி என்று பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். அது
பொருத்தமற்றதல்ல.
இஸ்லாம்
கருணையை அடிப்படையாக கொண்ட மார்க்கம்.
خيبر யுத்தத்தின் போது
பலியாகிக் கிடந்த தனது கணவனின் உடலை மடியில் போட்டு ஒரு யூதப் பெண்மணி அழுது
கொண்டிருந்தாள். அவளை பார்த்த படி பிலால் ரலி அவர்கள் கடந்து போனார்கள். அப்போது
பெருமானார் (ஸ்ல) அவர்கள் கேட்டார்கள். பிலேலே! உமது இதயத்திலிருந்து கருனை அகற்றப்
பட்டுவிட்டதா? அந்த பெண்ணுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை அல்லது அவளுக்கு உதவி எதுவும்
தேவையா என விசாரிக்க வேண்டாமா என்ற பொருளில் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு
சொன்னார்கள்.
فقال رسول الله - صلى الله عليه وسلم - لبلال ، حين رأى بتلك
اليهودية ما رأى : أنزعت منك الرحمة يا بلال ،
எனவே
அமெரிக்க் மக்களுக்கு ஏற்பட்டுள்ல இந்த இழப்பில் சந்தோசம் கொள்வதோ, அல்லது
கொக்கரிப்பதோ பொருத்தமானது அல்ல
அல்லாஹ்
இத்தகைய வேதனையை எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அனுப்பி விடக்
கூடும் என்று அச்சப்படுவதே நமது முதல் கடமையாகும்.
இந்த
தீ பெரிதாக
உயிரிழப்புக்கள் இல்லை . 25 மனித உயிர்களே இதுவரை பலியாகியுள்ளன. சுமார் 15 நபர்களை காணவில்லை. சுமார் 10 ஆயிரம் வீடுகள் எரிந்து போயுள்ளன. ஒரு இலட்சத்த்து 60 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிவாரணம் முகாம்களில் குவிந்து கிடக்கிற ஆடைகளில்
தங்களுக்கு பொருத்தமானதை அமெரிக்கர்கள் தேடி எடுக்கிற காட்சி அமெரிக்கர்களுக்கா இந்த நிலை
என்று திகைக்க வைத்திருக்கிறது.
லாஸ்
ஏன் ஜெல்ஸ் மக்கள் எவ்வளவு உல்லாசமாக இருந்தர்கள் இப்போது என்ன நிலைக்கு ஆளாகி
விட்டார்கள். என்பதை யோசிக்க வேண்டும்.
அம்மக்களுக்கு
ஆறுதல் சொல்ல வேண்டும். முடிந்தால் உதவ வேண்டும்.
இந்த
நிலை இன்று அவர்களுக்கு நாளை நமக்கும் வரலாம் என்று சிந்தித்து அல்லாஹ்வை அஞ்சி
நடக்க வேண்டிய கடமையை இது நமக்கு நினைவூட்டுவதாகவே எடுத்துக் கொள்ள வெண்டும்.
முஹம்மது
நபி (ஸல்) அவர்கள் கடுமையாக காற்று வீசும் போதெல்லாம் அச்சப்படுவார்க்ள் என்று
ஹதீஸில் இருக்கிறது. ஆயிஷா ரலி கூறுகிறார்.
قالَتْ: وكانَ إذَا رَأَى غَيْمًا أوْ رِيحًا عُرِفَ في وجْهِهِ،
قالَتْ يا رَسولَ اللَّهِ، إنَّ النَّاسَ إذَا رَأَوْا الغَيْمَ فَرِحُوا رَجَاءَ
أنْ يَكونَ فيه المَطَرُ، وأَرَاكَ إذَا رَأَيْتَهُ عُرِفَ في وجْهِكَ
الكَرَاهيةُ؟! فَقالَ: يا عَائِشَةُ، ما يُؤْمِنِّي أنْ يَكونَ فيه عَذَابٌ؟
عُذِّبَ قَوْمٌ بالرِّيحِ، وقدْ رَأَى قَوْمٌ العَذَابَ، فَقالوا: هذا عَارِضٌ
مُمْطِرُنَا.
الراوي : عائشة أم
المؤمنين | المحدث : البخاري
அமெரிக்கவில்
நெருப்பு எரிகிற போது நாமும் அச்சப்படுவோம்.
பருவ
நிலை மாற்றங்களால் ஏற்படுகிற ஆபத்துக்களை உணர்ந்து செயல்பட முயற்சி செய்வோம்.
அடுத்ததாக
அந்த நெருப்பு அணையட்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.
நெருப்பு பற்றி எரிகிற போது தக்பீர் சொல்லுமாறு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
قال رسول الله -صلى الله عليه وسلم- : «إذا رأيتم
الحريق ، فكبروا فإن التكبير يطفئه» .
நாம்
இந்தக் காட்சிகளை சமூக ஊடகங்கள் வழியாக பார்க்கீற போது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
என்று தக்பீர் சொல்வோம்.
காரணம்
புரியாமல் எரிகிற அந்த தீ அணையட்டும். அல்லாஹ் அணைக்கட்டும். பாதிப்புகளை அல்லாஹ் குறைக்கட்டும்.
பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அல்லாஹ் உதவட்டும். ஆறுதல் தரட்டும்.
இரண்டாவது
பாடம்
இந்த
தீ விபத்தின் காரணம் இது வரை புரியவில்ல என்பதோடு இதை அணைக்கவும் முடியவில்லை.
பெரிய அளவில் தீ பற்றிய மிகப் பிரபலமான பஸீபிக் பாலிஸியேட்
பகுதியில் 8
சதவீத்த்தை மட்டுமே இதுவரை அணைக்க முடிந்துள்ளது.
கென்னத் பகுதியில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பற்றி
எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு ஓரளவு தீ அணைக்கப் பட்டுள்ளது.
ஆனால் இவற்றை எல்லாம் விட பெரிய அச்சுறுத்தல் கடந்த வெள்ளிகிழமை தொடங்கியது. ஆர்ச்சர் பகுதியில்
தொடங்கிய தீ
கட்டுப்பாடில்லாமல் எரிந்து
வருகிறது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த, வல்லமை பொருந்திய அமெரிக்க அரசு 7500 தீயணைப்பு வீரர்கள்,
1162 தீயணைப்பு வண்டிகள், 31 ஹெலிகாப்டர்கள் 6 வாட்டர் டேங்கர் விமானங்களை பயன்படுத்துகிறது. சூப்பர் ஸ்கூப்பர் என்றழைக்கப்படும் இந்த ‘சி 415’ விமானங்கள் சாகசம் செய்யக் கூடியவை . ஏறி குளங்களில்
நேரடியாக இறங்கி தண்ணீரை பெரிய டாங்கிகளுக்குள் உறிஞ்சிக் கொள்ளும் பின்னர்
அப்படியே தீ பிளம்புகளில் கொண்டு கொட்டும். கடுமையான வெப்பமோ புகை மூட்டமோ இவற்றை
பாதிக்காது.
இத்தனைக்குப் பின்னரும் நேற்று வரை தீயை முழுவதுமாக
கட்டுப்படுத்த முடியவில்லை.
சகல வசதிகள் இருந்தும் அது பயன்பட வில்லை.
அமெரிக்கா யாரும் தொட முடியாத தூரத்தில் இருக்கிறது.
நமது நாட்டில் இருந்து விமானத்தில் போக வேண்டும் என்றால் கூட 24 மணி நேரம் ஆகும். யாரும்
அமெரிக்காவை வெளியிலிருந்து தாக்க முடியாது. அதன் நிலவியல் அமைப்பு அதற்கு பெரிய பலம். அந்த
புவிச் சூழல் தான் இப்போது காற்றின் வடிவத்தில்
அமெரிக்காவிற்க் எதிராகவும் திரும்பியிருக்கிறது.
எதுவும் பலமாக இருப்பதும் பலவீனமாக மாறுவதும்
இறைவனிடம் இருக்கிறது.
நாம் அதனால் தான் அடிக்கடி லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லுமாறு பெருமானார் (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள்.
قال النبي صلى الله عليه وسلم لأبي موسى الأشعري رضي
الله عنه: "ألا أدلك على كنز من كنوز الجنة: لا حول ولا قوة إلا بالله".
قال العلماء: سبب ذلك أنها كلمة استسلام وتفويض إلى
الله تعالى واعتراف بالإذعان له وأنه صانع غيره ولا راد لأمره وأن العبد لا يملك
شيئاً
இது ஒரு சாமாணிய வாசகம் அல்ல;
நமது சக்தி என்று எதை எல்லாம் நாம் நினைக்கிறோமோ அது
நமக்கு பலமாக இருக்க வேண்டும் எனில் அதை நமக்கு எதிராக நிமிட நேரத்தில் திருப்பி
விடுகிற சக்தி அல்லாஹ்வுக்கு இருக்கிறது என்கிற் மிக எதார்த்தமான வாழ்வியல் பாடத்தை இது உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
இதை சொர்க்கத்தின் ஒரு புதையல் என்று பெருமானார் (ஸ்ல) அவர்கள் குறிப்பிட்டதற்கு காரணம் வாழ்க்கையில் இந்த தத்துவத்தை உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கையையே
சொர்க்கமாக்கி கொள்ள முடியும் என்பதாலாக இருக்கலாம்.
இதை புரிந்து கொண்டு நடக்க வேண்டிய கடமை நம்மில் ஓவ்வொருவருக்கும்
இருக்கிறது.
அமெரிக்காவிற்கும் இருக்கிறது. இதை அமெரிக்கவிற்கு ஒரு பாடம் என்று
சொன்னால் அது தவறாகாது. அமெரிக்கா தன் செயல்களை
எண்ணிப் பார்க்கட்டும்.
அதனுடைய அதிகார பலத்தில் எத்தனையோ நாடுகளை எரித்துச் சாமபலாக்கியிருக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா வீசிய அணுகுண்டுக்கு பலியான
ஜப்பானின் ஹிரோஷிமா நாகாசாகி என்ற நகரங்கள் அதன் பாதிப்பிருந்து இன்றும் வரை மீண்டு
வர முடியவில்லை. அந்த நகரங்களில் முளைக்கிற புல் கூட விஷமாக இருக்கிறது. கருவாகிற குழந்தை
உணமடைகிறார்கள்.
ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் அமெரிக்கா ஏற்படுத்திய சிதைவுகள்
கொஞ்ச நஞ்சமல்ல
இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து கொண்டு பாலஸ்தீனத்தின் காஸா நகரை அமெரிக்கா
சின்னா பின்னப் படுத்தியிருக்கிறது.
பாலஸ்தீனில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
நேற்று இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே சமாதான
ஒப்பந்தம் நடை பெற்றிருக்கிறது. 19 ம் தேதி முதல் இரு தரப்பு மூன்று மாதங்களுக்கு சண்டை
யிடாது. இஸ்ரேல் தனது ராணுவத்தை காஸா பகுதியிலிருந்து வாபஸ் பெற்றுக் கொள்ளும் என்ற
அறிவிப்பு வெளியாகி உலகம் முழுவதற்கும் நிம்மதியை அளித்தது. பாலஸ்தீன் மக்கள் நேற்று முன் தின இரவை மகிழ்ச்சியோடு
கழிக்கச் சென்றார்கள். ஆனால் இஸ்ரேல் திடீரென் காஸாவை மீண்டு தாக்கி 76 பேரை கொன்றிருக்கிறது
அதில் 40 பேர் பெண்கள்.
இஸ்ரேலின் இத்தகைய கோடூரத்திற்கான முழு பலமும் அமெரிக்காவிலிருந்தே
கிடைக்கிறது.
ஒன்றை அமெரிக்கா யோசிக்க வேண்டும். அமெரிக்காவில் நெருப்பு மிக அதிர்ச்சிகரமான
அளவில் பற்றி எரிகிற போது உலக மக்கள் – அதில் ஒரு கனிசமான அளவிலாவது அமெரிக்காவிற்கு
இது வேண்டும் என்று நினைக்கிறார்கள். அங்கு
பற்றி எரிகிற நெருப்பை ஒரு செய்தியாக படிக்கிறார்கள் – அதற்காக பரிதாம் காட்டுவதில்லை
என்றால்
இதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா அதன் கர்ம பலனை அனுபவிக்கிறது
என்று நினைக்கிறார்கள்.
பிபிசி சி என் என் போன்ற சர்வதேச செய்தி ஊடகங்கள் அனைத்திலும் அமெரிக்க
தீ பற்றிய செய்திகளுக்கு கீழே பலரும் இது அமெரிக்கவிற்கான தண்டனை என்று எழுதுவதை பார்க்கிறோம்.
ஒரு சர்வதேச செய்தி ஊடகம் இப்படி தலைப்பிட்டிருந்த்து.
From Gaza to
California: the flames that connect us all
காஸா விலிருந்து கலிபோர்னியா வரை – நெருப்பு நம்மை
இணைக்கிறது.
அந்த தலைப்பின் கீழ் அது வெளிப்படுத்தியிருந்த மிகப்
பெரிய உண்மை
The fires burning in
Palestine and Los Angeles today are symptoms of the same disease: a system that
values conquest over conservation, profit over people, and expansion over
existence.
இன்று பாலஸ்தீனம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் எரியும் தீ ஒரே நோயின் அறிகுறிகளாகும்: ஆக்ரமிப்பு எனும் நோய்
பாலஸ்தீனில் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஆக்ரமிப்பதால்
நெருப்பு எரிகிறது. கலிபோர்னியாவில் காற்றீன் ஆக்ரமிப்பால் நெருப்பு எரிகிறது.
அந்த கட்டுரையாளர் வேறு விதமாக அமெரிக்காவிற்கு
உணர்த்துகிறார். உங்களது ஆக்ரமிப்புச் சிந்தனையால காஸா எரிகிறது என்று நினைக்கிறீர்கள்.
ஆனால் காஸா அல்ல இன்று அமெரிக்கா எரிவதற்கும் அது வே காரணமாகும். அமெரிக்கா பருவ நிலை
மாற்றத்தால் எரிகிறது.
அமெரிக்கா இஸ்ரேலுக்கு செய்யும் உதவிகள் தான்
பெரிய அளவில் பூமியில் பருவ நிலையை மாற்றுகிறது என்று சொல்லி விட்டு அமெரிகா வழங்கும்
ஆயுதங்கள் காஸாவில் மனித அழிவுக்கு அப்பால் எவ்வளவு சீரழிவுகளை ஏற்படுத்து கின்றது
என்பதை குறிப்பிடுகிறார்.
from Lancaster University has
revealed that in just the first sixty days following October 7, the military
response in Gaza generated more planet-warming gases than twenty
climate-vulnerable nations emit in an entire year. In a single month – October
2023 – Israel dropped 25,000 tons of bombs on Gaza, releasing climate-warming
gases equivalent to burning 150,000 tonnes of coal. American cargo flights
delivering weapons consumed 50 million liters of aviation fuel by December,
spewing 133,000 tonnes of CO2 into our shared atmosphere – more than the entire
nation of Grenada emits annually.
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் தொடங்கிய அக்டோபர் 7க்கு அடுத்த முதல் அறுபது நாட்களில், காசாவில் இராணுவ நடவடிக்கையானது,
ஒரு வருடத்தில் இருபது காலநிலை பாதிப்புக்குள்ளான நாடுகள் வெளியிடும் வாயுக்களை விட அதிகமான வெப்பத்தை உருவாக்கியது. என்று லான்காஸ்டர் பல்கலைக்கழகம் வெளிப்படுத்தியுள்ளது.
ஒரே மாதத்தில் - அக்டோபர் 2023 - இஸ்ரேல் காசா மீது 25,000 டன் குண்டுகளை வீசியது, 150,000 டன் நிலக்கரியை எரிப்பதற்கு சமமான வெப்பமயமாதல் இதனால் ஏற்பட்டது.
அமெரிக்க சரக்கு விமானங்கள் டிசம்பரில் 50 மில்லியன் லிட்டர் விமான எரிபொருளை உட்கொண்டன, இது 133,000 டன் கார்பண்டை
ஆக்ஸை வளிமண்டலத்தில் கக்கியது – இது சில நாடுகள்
நாடுகள் வெளியிடும் நச்சுவாயுவை விட அதிகம்.
இந்த கட்டுரை என்ன சொல்கிறது எனில் அமெரிக்கா உலகில் ஆயுதங்களை
வெடிக்கச் செய்கிறது. அதன் விளைவாக வெளியெறுகிற நச்சுக் காற்று அமெரிகாவையும் உலகை
அழிக்கிறது என்பதாகும்.
அதி அவசரமாக இதை அமெரிக்கா
புரிந்து கொண்டால் அமெரிக்காவிற்கும் நல்லது உலகிற்கும் நல்லது.
மனிதர்கள் செயற்கையாக உருவாக்குகிற தீயும் அணையட்டும். இறைவன் இயற்கையால
ஏற்படுத்துகிற தீயும் அணையாட்டும்
அல்லாஹ் அமெரிக்க மக்களுக்கு நிம்மதியளிப்பானாக! அமெரிக்கா விடமிருந்து
உலக மக்களுக்கும் நிம்மதியளிப்பானக!
இஸ்ரேலின் கொட்டத்தை அல்லாஹ்
தடுத்து நிறுத்துவானாக
நல்ல சிந்தனை
ReplyDeleteகாலத்திற்கு ஏற்ப இஸ்லாமிய மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய அற்புத வரிகள்
ReplyDeleteகாலத்திற்கு ஏற்ப இஸ்லாமிய மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய அற்புத வரிகள்
ReplyDelete