வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 13, 2025

பாவங்கள் குறைய வழி

 إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ {البقرة:222}.

பாவமன்னிப்பின் முக்கியத்துவம்.

புனிதம் மிக்க ரமலானின் நடுப்பகுதி பாவ மன்னிப்பின் வாய்ப்பை தாராளமாக வழங்குகிறது.

மன்னிப்புக் கோரும்படி பெருமானாரின்  வலியுறுத்தல்

عَنْ  ابْنَ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللَّهِ فَإِنِّي أَتُوبُ فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ – مسلم

 பாவ மன்னிப்பு கேட்பவர்கள் புன்னியவான்கள் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்

عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ – ترمذي

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّائِبُ مِنْ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ – إبن ماجة

 ஒரு மனிதன் தவ்பா கேட்கிற போது அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنْ أَحَدِكُمْ بِضَالَّتِهِ إِذَا وَجَدَهَا 

 அல்லாஹ்வின்  மன்னிப்ப்பை பெற  சிறு முயற்சி போதும்

 عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَالَ حِينَ يَأْوِي إِلَى فِرَاشِهِ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ غَفَرَ اللَّهُ لَهُ ذُنُوبَهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ وَإِنْ كَانَتْ عَدَدَ وَرَقِ الشَّجَرِ وَإِنْ كَانَتْ عَدَدَ رَمْلِ عَالِجٍ وَإِنْ كَانَتْ عَدَدَ أَيَّامِ الدُّنْيَا – ترمذي

எனவே தவ்பாவிற்கு சடையவே வேண்டாம்!

இவ்வளவு பாவ செய்து விட்டேன். இதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று நினைப்பது சைத்தானின் செயல்.

 قيل للحسن البصري : ألا يستحيى أحدنا من ربه يستغفر من ذنوبه ثم يعود ، ثم يستغفر ثم يعود ؟ فقال : ود الشيطان لو ظفر منكم بهذا ، فلا تملُّوا من الاستغفار .

 சைத்தானை நஷ்டமடையச் செய்யும் வரை தவ்பா கேட்கனும்

 روى ابن أبي الدنيا بإسناده عن علي قال : "خياركم كل مفتن تواب . [ يعني كلما فُتِن بالدنيا تاب ] . قيل فإذا عاد ؟ قال : يستغفر الله ويتوب ، قيل : فإن عاد ؟ قال : يستغفر الله ويتوب ، قيل : فإن عاد ؟ قال : يستغفر الله ويتوب ، قيل : حتى متى ؟ قال : حتى يكون الشيطان هو المحسور 

 தவறை  உணராதோர் துரதிஷ்டசாலிகளே

 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْعَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَتْ فِي قَلْبِهِ نُكْتَةٌ سَوْدَاءُ فَإِذَا هُوَ نَزَعَ وَاسْتَغْفَرَ وَتَابَ سُقِلَ قَلْبُهُ وَإِنْ عَادَ زِيدَ فِيهَا حَتَّى تَعْلُوَ قَلْبَهُ وَهُوَ الرَّانُ الَّذِي ذَكَرَ اللَّهُ كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ- ترمذي

 பாவத்த்தின் தண்டனைகள்

பாவம் செய்கிற மனிதர்கள் குற்றவாளிகள் ஆவார்கள். அதற்குரிய தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டியது வரும். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக)

அல்லாஹ் எச்சரிக்கிறான். பாவத்திற்கு மேல் பாவம் செய்து விட்டு அலட்சியமாக இருப்பவர்கள் நாளை மறுமையில் தப்பிக்க முடியாது.

 بَلَىٰ مَن كَسَبَ سَيِّئَةً وَأَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

 وَمَن جَاءَ بِالسَّيِّئَةِ فَكُبَّتْ وُجُوهُهُمْ فِي النَّارِ هَلْ تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ (90)

 كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ * كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ * ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ * ثُمَّ يُقَالُ هَذَا الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ [المطففين: 14 - 17].

وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ 

இந்த உலகிலும் தப்பிக்க முடியாது.

فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ [العنكبوت: 40]

 

 أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ كَانُوا مِنْ قَبْلِهِمْ كَانُوا هُمْ أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَآثَارًا فِي الْأَرْضِ فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنُوبِهِمْ وَمَا كَانَ لَهُمْ مِنَ اللَّهِ مِنْ وَاقٍ [غافر: 21]

 பாவத்தில் உழல்வோருக்கான மற்ற பல்வேறு தண்டனைகளை இப்னுல் கய்யிமுல் ஜவ்ஸி பட்டியலிடுகிறார்.

  ذكره ابن القيم في الفوائد بقوله

قلة التوفيق، وفساد الرأي، وخفاء الحق، وفساد القلب، وخمول الذكر، وإضاعة الوقت، ونفرة الخلق، والوحشة بين العبد وبين ربه، ومنع إجابة الدعاء، وقسوة القلب، ومحق البركة في الرزق والعمر، وحرمان العلم، ولباس الذل، وإهانة العدو، وضيق الصدر، والابتلاء بقرناء السوء الذين يفسدون القلب ويضيعون الوقت، وطول الهم والغم،

 قلة التوفيق நன்மை செய்யும் வாய்ப்புகள் குறையும்.

وفساد الرأي சிந்தன்ன கெட்டுப் போகும்.

وخفاء الحق நமது உரிமைகளை மற்றவரக்ள் பொருட்படுத்த மாட்டார்கள்.

وخمول الذكر  இறைவனை துதிக்கும் சிந்தனை அனைந்து போகும்.

ونفرة الخلق மக்களுடைய வெறுப்பு ஏற்படும்.

وحرمان العلم அறிவு தடைபடும்.

 இத்தகைய விபரீதங்கள் எதாவது நமக்கு நடக்கிறது என்றால் அது நம்முட்டய பாவங்களால் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இவை மட்டுமல்ல

பாவங்கள் மனிதர்களின் மரியாதையை குறைத்து விடக் கூடியவையும் ஆகும்.

மரியாதையாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் நமது பாவங்கள் வெளியுலகிற்கு தெரிந்து விடும் என்றால் அது போல இழிவு வேறெதுவும் இல்லை.

ஒரு பாவம் எவ்வளவு தான் ரகசியமாக இருந்தாலும் அது நமது மனதை உறுத்தவே செய்யும். நம்மீது நமக்கே மரியாதை இல்லாமல் செய்து விடும்.

எனவே பாவங்களிலிருந்து விடுபடுவது குறித்து நாம் சிந்தித்தே ஆகவேண்டும்.

இரண்டு காரணங்கள்

1 தண்டனைகள் கிடைக்கும்

2 மரியாதையை இழக்க நேரிடும்.

எனவே அனைத்து வகையான பாவங்களை விட்டும் நாம் விலகிக் கொள்வோம்.

தண்டனைகளிலிருந்து தப்பிப்பதோடு. மரியாதையையும் பாதுகாத்துக் கொள்வொம்/

புனிதம் மிக்க ரமலான் நமக்கு பாவ மன்னிப்பை தாரளமாக வழங்குகிறது என்றால் அதை நாம் முழுக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 இந்த ரமலானுக்குப் பிறகு கூடுமானவரை பாவங்களை குறைத்துக் கொள்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

 அது தான் மரியாதைக்குரிய மனிதனுக்கு அழகாகும்.

 பாவங்களை குறைத்துக் கொள்ளும் வழி

ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்வதாகும்.

 ஆசைகளே பெரும்பாலும் பாவங்களுக்கு காரணமாகின்றன.

 மண் (அதிகாரத்தின் மீது) ஆசை  

பொன் (காசு பணத்தின் மீது) ஆசை  

பெண் ( கட்டுப்பாடற்ற உறவின் மீது ) ஆசை

 இந்த மூன்று வகை ஆசைகளே நம்மை பாவத்தின் படுகுழியில் தள்ளுகின்றன.  

 நமது ஆசைகளை பற்றிய ஒரு இயல்பை நாம் கவனமாக புரிந்து கொள்ள வேண்டும்.

 ஆசைகள் பெருகிக் கொண்டே தான் இருக்கும்.

காரணம் நமது மனம் ஆசையை பூர்த்தி செய்ய துடிக்கிறது

என் வீடு இப்படி இருக்க வேண்டும்.

என் கார் இப்படி இருக்க வேண்டும்

என் பிள்ளைகள் இப்படி இருக்க வேண்டும்

என்ற வரிசையில் இப்போது இருப்பதை விட இன்னும் இன்னும் சிறப்பாகவும் அதிகமாக இருக்க வேண்டும் என்று மனம் சிந்தித்துக் கொண்டே தான் இருக்கும்.

இன்னொரு வார்த்தையில் இந்த உலகை சொர்க்கமாக்கி கொள்ள ஒவ்வொருவரும். முய்றசிக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் அது சாத்தியமானது அல்ல

ஆசைகள் முழுவதும் பூர்த்தியாவது சொர்க்கத்தில் மட்டுமே ஆகும்.

وَفِي الْآخِرَةِ ۖ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ (

 எனவே இந்த உலகில் நமது ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நினைக்காமல் – நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்காமல் – நமது ஆசைகளை தேவையான அளவில் கட்டுப்படுத்திக் கொண்டால் பாவம் செய்வதிலிருந்து கூடுமானவரை விலகிக் கொள்ள முடியும்.

அதிகப்படியான ஆசையினால் தானே அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் இலஞ்சம் வாங்குகிறார்கள்.

அதிகப்படியான ஆசையில் தானே வியாபாரிகள் மோசடி செய்கிறார்கள்.

அதிகப்படியான் ஆசையில் தானே கல்வியாளர்கள் ஏமாற்றுகிறார்கள்

ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்ள குர் ஆன் வழிகாட்டுகிறது.

 يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ 

எல்லை மீறாதீர்கள்.

தனிப்பட்ட வாழ்வில் எல்லை மீறாதிருப்பது அல்லாஹ்வை நமக்கு நெருக்கமாக்கும்.

குறைந்த பட்சம் பொதுவில் நாளு பேருக்கு தெரிகிற அளவிலான வாழ்க்கையில் எல்லை மீறுதலை தவிர்க்க வேண்டும். தவிர்க்கத் தவறினால் ..

فَأَمَّا مَنْ طَغَى ۝ وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا ۝ فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى 

 ஆசை களுக்குப் பின்னால் எல்லை மீறி செல்பவர்களை பார்த்து அறிஞர்கள் கூறுகிறார்கள் “நீ பிஸ்கட்டுக்கு பின்னால் ஓடுகிற நாயை போல – ஆகிவிடுகிறாய்”

கொஞ்சம் யோசித்துப் பார். உருதுவில் ஒரு வார்த்தை இருக்கிறது.

லம்ஹோனே கதாவோன்கீ  சத்யோன் கீ ஸஜா பாயேகீ

 சில நிமிட தீமைகள் நூற்றாண்டுகளுக்கான தண்டனை ஆகிவிடும்.  

 ஆசைகளை பின் தொடர்ந்து செல்வது இதயத்தை பாதிக்கும் மிக கொடிய நோய் என்றார்கள் ஹஸன் அல் பஸரீ ரஹ் அவர்கள்

وقال الحسن البصريّ- رحمه الله تعالى-: الهوى شرّ داء خالط قلبا.

ஆசைகளை வரன்முறையற்று  பின் தொடர்ந்து செல்வோரின் கண்களையும் காதுகளையும் இதயத்தை அல்லாஹ் மூடிவிடுவான். அவர்கள் அறிவு பெற முடியாது என குர் ஆன் எச்சரிக்கிறது.

 فَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَى عِلْمٍ وَخَتَمَ عَلَى سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَى بَصَرِهِ غِشَاوَةً فَمَنْ يَهْدِيهِ مِنْ بَعْدِ اللَّهِ أَفَلَا تَذَكَّرُونَ} (الجاثية: 23).

அதே நேரத்தில் நம்முடைய முறையற்ற எந்த ஆசையும் அதிக நாட்கள் இருக்கப் போவதில்லை. ஏன் சில மணி நேரங்கள் கூட நீடிக்கப் போவதில்லை. அந்த சில நிமிட ஆசைகளை தவிர்த்துக் கொண்டால்

அல்லாஹ் சொல்கிறான். சொர்க்கம் கிடைத்து விடும்.

وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى ۝ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى [النازعات:40-41

 ஆசைகளை கட்டுப்படுத்துவதில் நமது முன்னோர்கள் சிறப்பாக வழிகாட்டியிருக்கிறார்கள்.

உமர் ரலி அவர்கள் குளிர்ச்சியான ஷர்பத் குடித்தால் அழுவார்கள்.

أولئك قوم عجلت لهم طيباتهم في حياتهم الدنيا  என்று பெருமானார் (ஸல் அவர்கள் கூறியதில் இதுவும் அடங்குமோ என பயப்படுவார்கள். அவர்கள் குடிக்கிற ஷர்பத்தில் அவருடைய கண்ணீர் கலந்து விடும்

அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் காலத்தில் கலீபாவுக்கு என ஒரு சமப்ளம் நிர்ணயிக்கப் பட்டது.

அதற்கு என்ன காரணம் எனில், கலீபா ஆன பிறகு அபூபக்கர் ரலி அவர்கள் தனது வியாபாரத்தை பார்க்க சென்றார்கள். அப்போது அவரை சந்தித்த மக்கள் நீங்கள் வியாபாரத்திற்கு வந்து விட்டால் ஆட்சிப்பணியை யார் கவனிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். பிறகு ஆலோச்னையின் அடிப்படையில் இதற்கு என்று மிக சாதாரனமான ஒரு தொகை நிர்ணயிக்கப் பட்டது. அதே தொகை உமர் ரலி அவர்களுக்கும் வழங்கப்பட்ட்து.

ஆனால் உமர் ரலி அவர்கள் காலத்தில் அரசு மிகப்பெரிய அளவில் வளர்ந்து ஏராளமான செல்வம் முஸ்லிம்களுக்கு கிடைத்தது. அப்போது மக்கள் உமர் ரலி அவரக்ளுக்குரிய செலவுத் தொகை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதை அவரிடம் சொல்ல பய்ந்தார்கள். உமர் ரலி அவர்களுட்டய மகளும் பெருமானாருடைய மன்னவியுமான அன்னை ஹப்ஸா ரலி அவர்கள் மூலமாக சொல்லி அனுப்பினார்கள்.

ஹப்ஸா ரலி அவர்கள் உமர் ரலி அவர்களிடம் தந்தையே இப்போது அரசு கஜானாவுக்கு போதுமான பணம் வருகிறது. நீங்கள் ஏன் உங்களுக்கான உதவித் தொகையை அதிகரித்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டார்கள்.

உமர் ரலி அவர்கள் ஹப்ஸா அம்மையாரிடம் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் மகளே நீ பெருமானார் (ஸல்) அவர்களை பார்த்திருக்கிறாய். நம்மை விட பன்மடங்கு உயர்ந்த அவரகளது வாழ்க்கை எப்படியிருந்த்து என்று கேட்டார்கள்.

சட்டென்று சுதார்கரித்துக் கொண்ட ஹப்ஸா அம்மையார் பெருமானார் (ஸல்) அவர்களின் நாட்களை கடகட வென் நினைவு கூர்ந்தார்கள்.

ஒரு பாயும் உமி நிரப்பிய தலையணையும் தவிர பெருமானார் வீட்டில் வேறில்லை .

அவர்களிடம் ஒரு போர்வை இருந்தது. – அதை  குளிர் காலத்தில் மேலேயும்  வெயில் காலத்தில் படுக்கைகு கீழேயும் விரித்துக் கொள்வார்கள்.

 அவர்களது ஆடை எப்படி இருந்தது என்றால் கிழிந்து தையல் போட்ட ஆடையாக இருந்த்து.

ஒரு நல்ல கலர் ஆடையை வைத்திருந்தார்கள். வெளிநாட்டு  தூதுக்குழு வரும் போது அதை அணிவார்கள்.

அவர்களின் உணவு எப்படி இருந்தது என்றால் ?  உணவு சில வேளை இருக்கும் சில வேளை இருக்காது.

ஒரு தடவை என் வீட்டு சட்டியின் அடியில் ஒட்டியிருந்த எண்னையை தடவி சில ரொட்டிகளை கொடுத்தேன். அதை பெருமானார் விரும்பிச் சாப்பிட்டார்கள். மற்றவர்களுக்கும் கொண்டு போய் கொடுத்தார்கள்.

இப்படி பெருமனாரின் காலத்தை நினைவு கூர்ந்த ஹப்ஸா அம்மையார் அதற்கு மேல் தனது தந்தையிடம் உதவித் தொகையை அதிகரித்துக் கொள்வது பற்றி பேசவில்லை

ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்கிற போது மனிதர்கள் எப்படி மகத்தானவர்களாகிவிடுகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் இது.

இப்னு கய்யிமுல் அல் ஜவ்ஸீ ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்கிறவர்களை பற்றி அருமையான ஒரு உதாரணம் சொல்கிறார்கள்/

 அத்தகையோர்  விட்டைகளுக்கு பதிலாக இரத்தினங்களை பெற்றுக் கொள்கிறார்கள் என்கிறார்.

நம் ஊர் பக்கம் வறட்டி என்று சொல்வார்களே ,, சாணத்தை தட்டி செய்யப்படுகிற வறட்டி அந்த வறட்டியோடு ஆசைகளை ஒப்பிடுகிறார். . ஆசைகளை தீர்த்துக் கொள்வது வறட்டியை பெற்றுக் கொள்வது போல ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்வது அதற்கு பதிலாக முத்துக்களை பெற்றுக் கொள்வது போல என்கிறார்.

 قال ابن القيم رحمه الله: (مخالفة الهوى تقيم العبد في مقامِ مَن لو أقسم على الله لأبرّه؛ فيقضي له من الحوائج أضعاف أضعاف ما فاته من هواه، فهو كمن رغب عن بَعْرة فأُعطي عوضها دُرّة، ومتبع الهوى يفوته من مصالحه العاجلة والآجلة والعيش الهنيء ما لا نسبة لما ظفر به من هواه ألبتة).

 இப்புனிதம் மிக்க ரமலானில் நாம் ரத்தினங்களை வாங்குவதற்கு இலக்கு வைப்போம். அதற்காக சிந்திப்போம். அதற்காக உழைப்போம்.

ஆசைகளை கட்டுப்படுத்த தீர்மாணிப்போம்.

சொத்து சுகம், அதிகாரம், செல்வாக்கு என அனைத்து விவகாரங்களிலும் ஆசைகளை ஷரீஅத்தின் விதிகளுக்கு உபட்ட்தாக அமைத்துக் கொள்வது பாவங்களில் விழுந்து விடாமல் நம்மை காப்பாற்றும்.

 நமது ரகசிய வாழ்வில் நாம் ஆசைகளை கட்டுப்படுத்தி விட்டால் இறை நேசர்களாகிவிடலாம்.

 பொது வெளியில் நமது ஆசைகளை நாம் கட்டுப்படுத்தி விட்டால் நல்ல முஸ்லிம் என்று பெயர் பெறலாம்.  அது மட்டுமல்ல நம்மை அற்பமாக ஆக்கிவிடாமல் அது உதவும்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக

No comments:

Post a Comment