வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 03, 2025

வக்பு திருட்டு சட்டம் 2025 (1)

வக்பின் மகிமை

உலகம் முழுக்க அனைத்து மக்களிடமும் பொதுக்காரியங்களுக்காக அல்லது தர்ம் காரியங்களுக்காக சொத்துக்களை எழுதி வைப்பது வழக்கத்தில் உண்டு.

இந்து சமயத்தில் தர்ம சாஸ்திரம் என்று ஒரு தனி பகுதி இருக்கிறது. அது மக்கள் தமது சொத்துக்களை தர்ம்ம் செய்ய தூண்டுகிறது.

இந்து புராணங்களில் ஒரு கதை உண்டு.

பசுவும் பன்றியும் ஒரு தடவை பேசிக் கொண்டன. பன்றி கூறியது. உனக்கு மட்டும் ஏன் இந்த அளவு மரியாதை கிடைக்கிறது. என்னை கண்டால் மக்கள் விலகி ஓடுகிறார்களே என்று கேட்டது. அதற்கு பசு நான் என்னிடமிருந்து பலதை மக்களுக்கு கொடுக்கிறேன். அதன் பலனை அவர்கள் அனுபவிக்கிறார்கள். அதனால் என்னை நேசிக்கிறார்கள். நீ உயிருடன் இருக்கும் வரை எதையும் கொடுப்பதில்லை. இறந்த பிறகு கொடுத்து என்ன பயன் அதனால் தான் உன்னை கண்டு விலகி ஓடுகிறார்கள் என்று கூறியது.

தர்மம் செய்யாத மனிதனை பன்றியின் நிலையளவு தாழ்த்தும் இந்த சிந்தனையால் இந்துக்களிலும் தாராளமான தர்ம சிந்தனைகள் தோன்றியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைய குளங்களை பார்க்கலாம். அந்த பக்தியில் பணக்காரராக இருப்பவர் தான் வாழ்ந்ததன் அர்த்த முள்ள அடையாளமாக ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும் என்ற மரபு அந்தப் பகுதியில் இருந்திருக்கிறது.

இறந்து போனவர்களுக்கு நன்மை போய் சேர வேண்டும்  என்ற நோக்கில் சத்திரம் கட்டி வைத்திருக்கிறார்கள். குறைந்த பட்சம் அந்த கால பயணிகள் நடைபயணமாக செல்லும் போது  தங்களது தலைச் சுமையை இறக்கி வைக்க உதவும் நோக்கில் நெடுஞ்சாலைகளில் நடு கல் வைத்திருக்கிறார்கள்.

இந்த வகையில் ஒரு பெரிய தர்மம், எம் ஏ எம் ராமசாமி செட்டியார் அவரக்ளின் தர்மம்.

தமிழகத்தில் எம் ஏ எம் ராமசாமி செட்டியார் ஒரு பிரபல தொழிலதிபராக வாழ்ந்தவர். சென்னையில் செட்டியார் அரண்மனை என்பது பிரபலமானது.  அண்ணாமலை பல்கலை கழகத்தை நிறுவியவர், சென்னையில் உள்ள குதிரப் பந்தய மைதானமும் அவருடையது.  500 குதிரைப் பந்தயங்களுக்கும் மேல் வெற்றி பெற்றிருக்கிறார். செட்டி நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்திலும் அவருக்கு கனிசமான பங்கு உண்டு.

அவருக்கு குழந்தைகள் கிடையாது. முத்தையா என்பவரை அவர் தத்தெடுத்து வளர்த்தார். அவர் ஸ்பிக் உரத் தொழிற்சாலையை நிறுவினார்.

எம் ஏ எம் ராமசாமி செட்டியார் தன்னுடைய சொத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை தர்ம் காரியங்களுக்கான உயில் எழுதி வைத்தார்.

இதற்காக, அவர் உயிரோடு இருக்கும்போதே எம்.ஏ.எம்.ராம சாமி செட்டியார் செட்டிநாடு அறக் கட்டளையை நிறுவியதுடன் அதன் தலைவராக ஸ்பிக் சேர்மன் ஏ.சி.முத்தையா செட்டியாரை யும் நியமித்தார்.

அந்த சொத்தில் ஒரு பைசாவை கூட அவருடைய வளர்ப்பு மகனுக்கு செல்லக் கூடாது என்றும் எம் ஏ எம் ராமசாமி கூறினார்.

ஆனால் என்ன நடந்து எனில் ஏ சி முத்தையா வளர்ப்பு தந்தை தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதனால் எம் ஏ எம் ராமசாமி செட்டியாரின் அறக்கட்டளையின் சொத்துக்களை விற்க முடிவு செய்தார்.

இதை தந்திரமாக நிறைவேற்ற அவர் ஒரு வாதத்தை முன் வைத்தார். எம் ஏ எம் ராமசாமி உயிலில் கூறிய படி அவருடைய சொத்தை தர்ம காரியங்களுக்கு செல்விடுவதற்காக தமிழ் நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள ஆயிரம் கோடி மதிப்புள்ள எம் ஏ எம் மின் சொத்துக்களை விற்கப்போவதாக அறிவித்தார்.

இது ஒரு பெரிய சர்ச்சையாக அமைந்த்து. இது பற்றிய ஒரு கட்டுரை இந்து தமிழ் பத்ரிகையில் 2016 ம் ஆண்டு வெளியாகியிருக்கிறது.

இது போல ஏராளமானவர்கள் சமய காரியங்களுக்காகவும் தர்ம காரியங்களுக்காகவும் உயில் எழுதி வைத்துள்ளனர்.

காஞ்சி புரத்த்த சார்ந்த ஆள்வந்தார் நாயக்கர் என்பவர் சென்னையின் திருவிடந்தை முதல் மாமல்லபுரம் வரையான நிலத்துக்கு சொந்தக் காரராக இருந்தார். அவர் அந்நிலத்தை ஆளவந்தார் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். அதன் வருவாயை கொண்டு அவரது பிறந்த நாளின் போது திருப்பதி கோயிலில் விழா நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார். ஆனால் பிற்காலத்தில் அவருடைய ஜாதியை சார்ந்த பலர் அந்த நிலத்தை எடுத்துக் கொண்டன. இப்போது அவருடைய ஜாதியின் அடிப்படையில் அவருடைய நிலத்திற்கு வன்னியர் சங்கம் சொந்தம் கொண்டாட முயற்சி செய்து வருகிறது. அவரது விருப்ப படி எந்த காரியமும் நடை பெறுவதில்லை.

மற்ற எந்த சமயத்திற்கும் குறைவில்லாத வகையில் தரமத்தை வலியுறுத்திய இஸ்லாம் அந்த தர்மங்களின் உண்மையான நோக்கம் பாதுகாக்கப்படுவதற்கு மிக நுனுக்கமான சட்ட திட்டங்களை வகுத்தது. அதை வக்பு என்ற பெயரில் வகைப்படுத்தியது.

வக்பு இஸ்லாமின் உன்னதமான ஒரு அம்சமாகும்.

தர்ம காரியங்களை நேசிக்கிற எவரும் வக்பின் சட்டங்களை படித்தால் வியந்து போவார்கள். அதன் அழகில் லயித்துப் போவார்கள்.

அதன் கட்டுப்பாடுகளை கவனிக்கிற எவரும் தர்ம காரியங்களில் நடை பெறுகிற முறைகேடுகளை கண்டு இனி நாம் பதற தேவையில்லை. இந்த சட்டங்களை உறுதிப் படுத்தினால் போதும் என்ற முடிவுக்கு வருவார்கள்.

இஸ்லாம் கொடுத்த வக்பு களுக்கான சட்ட பாதுகாப்பு காரணமாக முஸ்லிம் பணக்காரர்கள் ஏராளமாக வக்பு செய்தார்கள்:

மதீனாவில் பிஃரு ரூமா என்று ஒரு கிணறு ஒரு யூதனுக்கு சொந்தமாக இருந்தது. அந்த  நல்ல தண்ணீரை அவன் அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தான். மக்கள் சிரமப்பட்டனர்.

உஸ்மான் (ரலி) மக்களுக்கு உதவ நினைத்தார். யூதனிடம் கிணற்றை விலைக்கு கேட்டார்.இதில் எனக்கு நல்ல வருமானம் வருகிறது இதை  நான் ஏன் விற்க வேண்டும். என்று கூறி யூதன் மறுத்துவிட்டான்.

உஸ்மான் ரலி ஒரு அருமையான வியாபாரி. எதையும் சாதித்து விடக் கூடியவர்.   யூதனிடம் பேசினார். கிணற்றுக்கான முழு பணத்தை தந்து விடுகிறேன். ஆனால் நீ இதில் எனக்கு பாதி உரிமையை தந்தால் போதுமானது என்றார்.  யூதன் சம்மதித்தான்.

கிணறு ஒரு நாள் யூதருக்குரியது.  மறு நாள் உஸ்மான் ரலி அவர்களுக்குரியது என்று ஏற்பாடானது..

உஸ்மான் ரலி அவர்கள் முஸ்லிம்களிடம் “என்னுடைய நாளில் உங்களுக்கு தேவையான தண்ணீரை முழுமையாக எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்தார்.

அவருக்குரிய நாளில் மக்கள் தேவைகளை தீர்த்துக் கொண்டனர்.

அடுத்த நாளில் யூதனுக்கு வியாபாரம் ஆகவில்லை.  இன்று காசு கொடுத்து ஏன் வாங்கவேண்டும். நாளை இலவசமாக எடுத்துக் கொள்ளலாமே என்று மக்கள் யோசித்தனர்.

யூதன்  வியாபாரம் ஆகவில்லையே என்று வாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனை சந்தித்த உஸ்மான் ரலி அவர்கள் மீதி பாதியும் கொடுத்துவிடு அதற்குரியதை தந்து விடுகிறேன் என்றார்கள். யூதன் கிணற்றின் முழு உரிமையும்  கொடுத்து விட்டான். அதை முஸ்லிம்களுக்கு உஸ்மான் ரலி வக்பு செய்தார்கள்.  

شراء بئر رومية

عندما هاجر رسول الله -صلَّى الله عليه وسلَّم- إلى المدينة كان الماء العذب قليلاً ولا يُشرب من بئر رومة إلا بثمن، فدعا أصحابه وحثّهم على شرائها بقوله -صلّى الله عليه وسلّم-: (مَن يشتَري بئرَ رومةَ فيجعَلُ فيها دلوَهُ معَ دلاءِ المسلمينَ بخيرٍ لَهُ منها في الجنَّةِ)، ليُبادر عثمان -رضي الله عنه- بشراء نصفها بمائة بكرة وجعلها للمسلمين، وعندما رأى صاحب البئر وقد كان من اليهود أنّه لم يعد يُرزق منها كما في السابق باع نصيبه منها لعثمان -رضي الله عنه- وتصدّق بها كلها

உஸ்மான் ரலி அவரக்ள் இந்த கிணற்றை என்ன விலைக்கு வாங்கினார் என்று மக்களிடம் சொல்ல வில்லை. ஆனால் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் திர்ஹம் வரை கொடுத்து அவர் வாங்கியிருக்கலாம் என்று பஃவீ சம்ஹூதி உள்ளிட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் உஸ்மான் ரலி அவரகள் வாங்கி வக்பு செய்த பிஃரு ரூமா கிணறு இப்போதும் மதீனாவின் மஸ்ஜிதுல் கிப்லதைனுக்கு அருகே இருக்கிறது.

அதன் சொந்தக்காரர் யார் என்று கேட்டால் வரலாறு இப்போதும் என்ன சொல்கிறது தெரியுமா அது அரசுக்கு சொந்தம் என்று சொல்வதில்லை அதை வக்பு என்றே சொல்கிறது.

பிஃரு ரூமாவை பற்றி விக்கீ பீடியா எழுதுகிறது .

المالك الوحيد لبئر رومة من العصر النبوي الى عصرنا الحاضر، هو الخليفة الراشد عثمان ابن عفان 

இது ஒன்று மட்டுமல்ல இப்போதும் மதீனாவில் மஸ்ஜிதுன் னபவிக்கு அருகே இருக்கிற பல பெரிய ஹோட்டல்களும் வக்பு உஸ்மான் பின் அப்பான் என்று எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

இது வக்பு சொத்துக்களை பாதுகாக்கும் இஸ்லாமின் அற்புதமான ஏற்பாடுகளுக்கு கிடைத்த விளைவாகும்.

முஸ்லிம் அறிஞர்கள் பல பாகங்களாக வக்பு சொத்துக்களின் நிர்வாகங்கள் பற்றிய சட்டங்களை எழுதியிருக்கிறார்கள்.

 வக்புகளில் மூன்று பிரிவுகள் உண்டு,

1.       ஒரு குறிப்பிட்ட சாராருக்காகவும் அவர்களுடைய சந்ததிகளுக்காகவும் செய்யப் பட்ட வக்பு

2.       பொதுமக்களுக்காக செய்யப்பட்ட வக்பு

3.       இரு தரப்பிற்குமானது

 வக்பு செய்வதற்கு சில நிபந்தனைகளும் உண்டு. அது சராசரி தர்மம் அல்ல.

 للوقف شروط معتبرة لصحته وهي كما فصلها الرحيباني الحنبلي :

1-    كون الوقف من مالك جائز التصرف وهو المكلف الرشيد؛ فلا يصح من صغير أو سفيه أو مجنون.

 சுவாதீனத்திலுள்ள சொத்தில் மட்டுமே வக்பு செல்லும்ஒருவருக்கு சொந்தமான சொத்து இன்னொருவரின் சுவாதீனத்தில் இருக்கும் என்றால் அதை வக்பு செய்ய முடியாதுஇன்னொருவருக்குச் சொந்தமான பொருளை அந்நிய ஆள் வக்பு செய்ய முடியாது.

2- كون الموقوف عينا؛ فلا يصح وقف ما في الذمة

வக்பு செய்யப்படும் பொருள் நடப்பில் உள்ளதாக இருக்க வேண்டும்ஷேர் மார்க்கெட்டில் வரும் இலாபத்தை வக்பு செய்கிறேன் என்று ஒருவர்  சொல்ல முடியாது,

 2-    كون الوقف على بر وهو اسم جامع للخير.

நல்ல காரியங்களுக்கு மட்டுமே வக்பு செல்லும்தீய  நோக்கங்களுக்கான வக்பு செல்லாது.

3-    كون الواقف على معين من جهة كمسجد كذا، أوشخص ما، غير نفسه.

வக்பின் செலவினம் வகுத்துச் சொல்லப்படனும்.

4-    من شروط الوقف كذلك أن يقف ناجزاً غير معلق ولا موقت ولا مشروط بنحو خيار.

வக்பு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அமுலாக்கப்படனும்குறீப்பிட்ட காலம் வரை என்றோஅல்லது நான் விரும்பும் வரை என்றோ நிபந்தனைகள் கூடாது.

5-    أن لا يشترط الواقف في الوقف أي شرط ينافيه من الشروط الفاسدة كشرط نحو بيعه أو هبته متى شاء، أو شرط خيار فيه.

வக்பிற்கு பொருந்தாத நிபந்தனைகள் கூடாது. தனக்கு அதை விற்கவோ   அல்லது அன்பளிப்புச் செய்யவோ உரிமை இருப்பதாக எந்த நிபந்தனையும் கூடாது.

 வக்பு என்ன வழிகளில் செய்யப்படலாம்

 பள்ளி வாசல் மதரஸாக்களுக்கு மட்டுமே வக்பு என்பதில்லை. பல காரியங்களுக்காகவும் வக்பு செய்யலாம்.

 للوقف مجالت كثيرة ومتعددة منها :

الوقف بإنشاء المساجد ورعايتها والقيام بشؤونها وتزويدها بالمصاحف.

الوقف على الجهاد في سبيل الله.

الوقف على توزيع الكسوة للفقراء والأرامل والمحتاجين.

الوقف على المكتبات العامة كإنشائها وإيقاف الكتب الشرعية بها.

إنشاء المدارس العلمية التي تكفل مجانية التعليم لأبناء المسلمين.

حفر الآبار وإجراء الماء.

வக்பு சொத்துக்கள் மிகச் சரியாக வக்பு செய்தவர் எந்த நோக்கத்திற்காக வக்பு செய்தாரோ அதே நோக்கத்தில் பயனபடுத்தப் பட வேண்டும். அதில் எல்லை மீறுதலோ அபகரித்தல் கொள்ளையிடல் திருடுதல் அநீதியாக பயன்படுத்துதல் அனைத்தையுல் இஸ்லாம் வெகு கண்டிப்புடன் தடை செய்திருக்கிறது.

 

மரக்கட்டைகளை ஒரு மனிதர் பள்ளிவாசலின் உத்திரப் பணிகளுக்காக வக்பு செய்திருந்தால் அது மக்கி மண்ணாகிப் போனாலும் போகலாமே தவிர அதை விற்க கூடாது என்னும் அளவுக்கு வக்புக்கான சட்டங்கள் கடுமையானவையாகும்.

 الأموال التي تُجمع للقيام على المساجد بما تحتاجه هي أموالٌ وقفية لا يحل للقائم عليها أن يقترض منها لنفسه ، ولا أن يُقرض منها أحداً ، فهو مؤتمن على هذا المال لإنفاقه في المصرف الذي حدده المتبرع ، وهو – هنا – احتياجات المسجد .

 சமீபத்தில் இரு   அரபு பத்ரிகையில் ஒரு மனிதர் கேளிவி ஒன்றை கேட்டார்.

 நான் என் ஊர்வாசிகளின் நன்மைக்காக ஒரு டாக்ஸியை வாங்கி வக்பு செய்தேன். என்னிடம் வேறு கார் எதுவும் இல்லை, இப்போது நான் ஊருக்கு போகும் போது என்னுடைய தேவைக்காக அல்லது எனது குடும்பத்தினரின் தேவைக்காக அந்த காரை பயன்படுத்திக் கொள்ளலாமா என்று கேட்டார்.

 அதற்கு சொல்லப் பட்ட பதில் என்ன தெரியுமா ? நீங்கள் வக்பு செய்த போது என்னுடைய் தேவைக்கும் ஆகட்டும் என்று நிய்யத் செய்து வக்பு செய்திருந்தால் உங்களது சொந்த தேவைகளுக்கு அதை பயன்படுத்திக் கொள்ளலாம் , இல்லை எனில் கூடாது என்று பதில் கூறப்பட்டிருந்தது.

 الأصل أن تقصر منافع الوقف على ما وقف له إلا إذا كان هناك نية من الواقف أو عرف يقتضي انتفاع الواقف بما وقفه فيجوز له الانتفاع، قال العلامة ابن حجر الهيتمي في الفتاوي الفقهية (مقرر معروف أن العرف المطرد في زمن الواقف منزل منزلة شرط فينزل الوقف على العرف المذكور كما ينزل على شرط الواقف) وعليه فإن كنت نويت أن يكون دخل السيارة لأهلك دون أن تخرج نفسك من استخدامها عند الحاجة بالمعروف أو كان العرف يقتضي ذلك جاز لك الاستخدام، وإن كنت أخرجتها من ملكك وقفا لهم فلا يجوز انتفاعك بها ولو عند الحاجة إلا بإذن الموقوف عليهم. والله تعالى أعلم.

 والخلاصة

لا يجوز لك الانتفاع بالسيارة إلا إذا كنت نويت الانتفاع بها عند الوقف أو اقتضاه العرف عندكم وإلا فلا يجوز لك الانتفاع إلا بإذن الموقوف عليهم.

வக்பு செய்யப்பட்ட ஹவ்ழின் தண்ணீரையும் மின்சாரத்தையும் பயனபடுத்தக் கூட கடும் நிபந்தைனைகள் உண்டு.

 நீங்கள் பள்ளி வாசல்களில் ஒரு ப்ழக்கத்தைப் பார்த்திருக்கலாம்இகாமத் சொல்வத்ற்கு முன்பாக முஅத்தின் பேன் சுவிட்சுகளை போடுவார்காரனம் பள்ளிவாசலின் வக்பு என்பது பர்ளு தொழுகைகளுக்காக மட்டுமே என்பதாகும்பொதுவாக பயனபடுத்திக் கொள்ளலாம் என்ற அனுமதி இருந்தால்     அன்றி அதற்குமேல் பயன்படுத்தக் கூடாது

வக்பு சொத்துக்கள் விசயத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டாலோ அதற்கான தண்டனைகள் கடுமையானவை என இஸ்லாம் எச்சரித்தது.

 ஒரு செருப்பு வார் கூட நரகிற்குரியது என எச்சரித்த பெருமானார் வக்பு சொத்துக்களை திருடுகிறவர்கள் நாளை மறுமையில் அதை சுமந்து கொண்டு வருவார்கள் என்று எச்சரித்தார்கள்.

 وفي الصحيحين من حديث أبي هريرة قال: "خرجْنا مع رسول الله - صلَّى الله عليه وسلَّم - يوم "خَيْبَر"، فلم نَغْنمْ ذهبًا ولا فِضَّة، إلاَّ الأموال والثياب والمتاع، فأهْدَى رجلٌ من بني الضُّبَيْب يُقال له: رِفَاعة بن زيد لرسول الله - صلَّى الله عليه وسلَّم - غلامًا يُقال له: "مِدْعَم" فوجَّه رسولُ الله - صلَّى الله عليه وسلَّم - إلى وادي القُرى، حتى إذا كان بوادي القُرى، بينما "مِدْعَم" يحطُّ رحْلاً لرسول الله - صلَّى الله عليه وسلَّم - إذا سَهْمٌ عائِر فقَتَله، فقال الناس: هنيئًا له الجنة، فقال رسول الله - صلَّى الله عليه وسلَّم -: ((كلاَّ والذي نفسي بيده، إنَّ الشَّمْلَة التي أخَذَها يومَ "خَيْبَر" من المغانم لَم تُصِبْها المقاسِمُ، لتَشْتَعِلُ عليه نارًا))، فلمَّا سَمِع ذلك الناسُ، جاء رجلٌ بشِرَاكٍ أو شِرَاكين إلى النبي - صلَّى الله عليه وسلَّم - فقال: ((شِرَاكٌ من نارٍ أو شِرَاكان من نار الشَّمْلَة التي غَلَّها لتَشتعِلُ عليها نارًا)


فقد روى الشيخانعن أبي هريرة - رضي الله عنه - قال: " قام فينا النبي - صلَّى الله عليه وسلَّم - فذكَرَ الغُلول، فعظَّمه وعظَّمَ أمرَه، قال: ((لا ألفِيَنَّ أحدَكم يومَ القيامة على رَقبته شاة لها ثُغاء، على رَقبته فرس له حَمْحَمة، يقول: يا رسول الله، أغِثْني، فأقول: لا أملِك لك شيئًا؛ قد أبْلَغْتُك، وعلى رَقَبته بعيرٌ له رُغاء، يقول: يا رسول الله، أغِثْني، فأقول: لا أملِك لك شيئًا؛ قد أبلغتُك، وعلى رَقَبته صامتٌ، فيقول: يا رسول الله، أغِثْني، فأقول: لا أملِك لك شيئًا؛ قد أبلغتُك، أو على رَقَبته رِقَاعٌ تَخْفِق، فيقول: يا رسول الله، أغِثْني، فأقول: لا أملِك لك شيئًا؛ قد أبلغتُك.

 வக்பு சொத்துக்களுக்கு கடும் சட்ட பாதுகாப்பை வழங்கியதன் காரணமாக அரபு நாடுகளிலும் நம்முடைய இந்திய நாட்டிலும் ஏராளமான வக்பு சொத்துக்கள் இன்னும் வக்பு வாரியங்களின் வசம் உள்ளன.

ந்தியாவில் 32 வக்பு வாரியங்கள் உள்ளன. அவற்றிடம் ஏராளாமன சொத்துக்கள் உள்ளன. அரசின் தகவலின் படியே ஏழு இலட்சத்திற்கும் மேற்பட்ட ( 7.85,934) சொத்துக்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 60 ஆயிரம் சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களின் மதிப்பு ஒண்ணே கால் லட்சம் கோடியாகும்.

இந்தியாவில் அதிக சொத்துடைய நிறுவன்ங்களில் பட்டியலில் இந்திய ரயில்வே இந்திய ராணுவம் ஆகியவற்றுக்கு அடுத்த படியாக 3 வது இடத்தில் வக்பு வாரியங்கள் இருக்கின்றன.

நம்முடைய நாடு உலகின் அதிகப்படியான முஸ்லிம்கள் வாழ்கிற நாடு  சுமார் 800 ஆண்டுகளாக முஸ்லிம்கள் செழிப்போடு ஆட்சி செய்த நாடு

முஸ்லிம்கள் ஆட்சி செய்த காலத்தில் இந்திய உலகின் செழிப்பான நாடுகளின் பட்டியலில் இருந்தது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் பலரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இத்தனை வக்புகள் இருப்பது ஆச்சரியகரமானது அல்ல; அதுமட்டுமல்ல நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் முஸ்லிம்கள் அன்றாடம் தமது சொத்துக்களை வக்பு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இன்று நமது நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிற மத்திய அரசு அதை பற்றி மக்கள் சிந்தித்து விடக் கூடாது என்பதற்காக வக்பு திருத்த சட்டம் 2025 என்ற பெயரில் ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.

இது ஆர் எஸ் எஸ் அமைப்பின் நீண்ட கால திட்டங்களில் ஒன்று.  ராமர் கோவில், காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப் பிரிவை நீக்குவது பொது சிவில் சட்டம் என்பதற்கு அடுத்த படியாக முஸ்லிம்களின் கைவசத்தில் சொத்துக்களை ஆக்ரமிப்பது என்பற வரிசையில் 2023 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து திட்டமிட்டு பல கட்ட சதியாலோனைகளுக்குப் பிறகு இந்த சட்டத்தை ஏப்ரல் 2 ம் தேதி நாடாளுமன்றத்தில் பாஜக் அரசு நிறைவேற்றியுள்ளது. 

இந்த சட்டம் சாடிஸ்ட்  குரூர மனப்பான்மை கொண்டவர்களால் கொண்டு வரப்பட்ட சட்டம் என்பதற்கு ஒரு உதாரணம்

5 ஆண்டு காலம் முஸ்லிமாக வாழ்ந்தவர் தான் இனி வக்பு செய்ய முடியும் என்று சொல்கிறது.

நேற்றைய விவாதத்தின் போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு எம் பி மிக காரசாரமாக கேள்வி எனுப்பினார்

என்ன மாதிரியான மனோ நிலையில் இருக்கிறீர்கள். பஞ்சாபில் வாழ்கிற முஸ்லிம்கள் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக ஒரு சீக்கியர் அவர்களுக்கு கப்ரஸ்தானுக்கு இடம் கொடுத்தால் அது செல்லாதா ?

மிக எளிமையாக கேட்கப்பட்ட கேள்விக்கு எந்த பதிலும் அரசிடமிருந்து இல்லை.

அரசு பொய்யையும் புரட்டையும் சொல்லி இந்துக்களை தூண்டி விட மட்டுமே முயற்சிக்கிறது.

“இவர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை கூட தங்களுக்கு சொந்தம் என்று சொல்லிவிடுவார்கள் என்று ஒரு அமைச்சர் வெட்கெங்கெட்டு பேசுகிறார்.

இது அப்பட்டமாக இந்து பெரும்பான்மையினரை திசை திருப்பும் முய்றசியாகும்.

இவர்கள் என்று அமைச்சர் யாரை குறீப்பிடுகிறார்.? வக்பு வாரியத்தையா ?

அப்படியானால் அந்த வக்பு வாரியமே அவர்களது கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது. ? ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் தானே வாரியப் பொருப்பில் இருக்கிறார்கள். இவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்வது அரசு அரசையே குறை சொல்லிக் கொள்வது ஆகாதா ?

வக்பு சொத்துக்க்களும் அரசிடம் தான் இருக்கின்றன. எப்படி ராணுவத்தின் சொத்துக்களை – வனப் பகுதிகளை எந்த ஆளும் அரசும் தம்மிஷ்டத்திற்கு விற்று விட முடியாதோ அது போல சில நிபந்தனைகள் மட்டுமே வக்பில் இருக்கின்றன.

மக்களை முட்டாள்களாக்குகிற பல்வேறு வெறுப்பை உமிழும் பாசிஸ சங் பரிவாரின் வாதங்களை முன் வைத்து அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது.

இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேர்ந்தெடுத்த நேரத்தை கவனியுங்கள். மிகச் சரியாக முஸ்லிம்கள் ஈதுப் பெருநாள் கொண்டாடுவதற்கு அடுத்த நாள்.

சதாம் ஹுசைனை தூக்கிலிடுவதற்கு ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை தேர்வு செய்தது போல நாக்பூரில் கலவரத்திற் ரமலானை தேர்வு செய்த்து போல போர் நிறுத்த உடன்படிக்கைகு பிற்கு காஸாவின் மீது குண்டு வீச   பத்று நினைவு நாளை தேவு செய்தது போல முஸ்லிம்களை மானசீகமாக பலவீனப்படுத்தி விடலாம் என்று திட்டமிட்டு இந்த நாளை தேர்ந்தெடுக்கிறார்கள்.

அப்பட்டமாக ஒரு குரூர மனோ நிலையின் வெளிப்பாடு இது.

பிப்ரவரி இரண்டாம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட்து வக்பு திருத்த சட்டம் அல்ல வக்பு திருட்டுச் சட்டமாகும்

சிவ சேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே சொல்வது போல  இப்போது பாஜக அரசு வக்பு போர்டின் மீது கை வைத்திருக்கிறது. இனி அவர்கள் தங்களுக்கு தேவை எனில் கோயில்கள் சர்ச்சுகள் குருத்துவாராக்களின் நிலங்களின் மீது கை வைப்பார்கள். அந்த நிலங்களை திருடி தங்களது நண்பர்களுக்கு கொடுப்பார்கள்.

Shiv Sena (UBT) chief Uddhav Thackeray on Thursday claimed that the Union government has its eye on the land of the Waqf boards, and it may turn its attention to the land of temples, churches and gurudwaras next.

"its ploy to take away (Waqf) land and give it to its industrialist friends," Thackeray said at a press conference here, hours after the bill was passed by the Lok Sabha.

ஆர் எஸ் எஸிற்கு முஸ்லிம்களின் வக்பு சொத்துக்களின் பொருளாதார பலத்தை குறைப்பதும் பிரபலமான பள்ளி வாசல்களின் நிலத்தை அபகரிப்பதும் நோக்கம். பாஜக கட்சிக்கு அவர்களது புரவலர்களுக்கு வக்பு நிலங்களை தாரை வார்ப்பது நோக்கம்.

இல்லை எனில் அரசுக்கு சொந்தமான சொத்துக்களின் அதிகாரத்தை அரசே சீர் குலைக்குமா ?

வக்பு திருட்டு சட்ட்த்திற்கு ஆதரவாக 288 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் நாடாளுமன்றத்தில் பதிவாகி சட்டம் நிறைவேறியுள்ளது.

அநீதிக்கு துணை நின்றவர்களின் கதி என்னவாகியது என்று மஹாபாரதம் சொல்கிறது.

நீதிக்கு துணை நின்று வாதாடிய பெருமக்கள் அனைவரும் இந்திய மக்களின் நன்றிக்குரியவர்கள்.

முஸ்லிம் சமுதாயம் அவர்களுக்கு முதலில் மனமாற நன்றி செலுத்திக் கொள்கிறது.

திட்டமிட்டு சிறுபான்மையின மக்களுக்கு அநீதி இழைத்து வரும் அரசுக்கு எதிராக – வக்பு திருட்டு சட்டத்திற்கு எதிராக போராட இன்ஷா அல்லாஹ் நாம் தயாராவோம்.

எதிர் வரும் 13 தேதி தமிழகத்தின் மாவட்ட தலை நகரங்கள் தோறும் கண்ட போராட்டங்களை நடத்த நாம் தயாராவோம் இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் நமது முயற்சிகளுக்கு அவனது தரப்பிலிருந்து வெற்றியை தருவானாக!  

وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ 

 

 

 

2 comments:

  1. பிப்ரவரி 2 ஆம் தேதி என இருக்கு ஏப்ரல் ,2 என மாற்றம் செய்யும் படி கேட்டு கொள்கிறேன்
    அனைவருக்கும் பயனுள்ள பதிவு

    நன்றி m.Akbar சார்ஜா

    ReplyDelete
  2. Anonymous12:14 AM

    மாஷாஅல்லாஹ்
    பாரகல்லாஹ்

    ReplyDelete