Thursday, May 29, 2025

அற்புத வணக்கம் குர்பானி

 فصل لربك ‌وانحر﴾ [الكوثر: 2]،

அல்லாஹ்வுக்காக என்று ஹஜ்ஜுப் பெருநாள் அன்று ஆடு மாடு அல்லது ஒட்டகையை குர்பானி கொடுக்கிற பழக்கம் இபுறாகீம் நபியின் காலத்திலிருந்து இருக்கிறது.

عن زيد بن أرقم قال: قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: يا رسول الله، ما هذه الأضاحي؟ قال: «سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام»، قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: «بكل شعرة حسنة»، قالوا: فالصّوف يا رسول الله؟ قال: «بكل شعرة من الصوف حسنة» رواه الإمام أحمد وابن ماجه 

இபுறாகீம் நபியை போல அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் நான் எந்த அர்ப்பணிப்புக்கும் தயாராக இருக்கிறேன் என்பதை உணர்வதும் உணர்த்துவதுமே குர்பானியின் நோக்கமாகும்.

 குர்பானியின் நோக்கம் நிறைவேற அதனை முன்னின்று செய்ய வேண்டும். யாரிடமோ பொறுப்பை ஒப்படைத்து விடுவது அல்லது ஒரு ஜீ பே செய்துவிடுவது குர்பானியின் கடமையை நிறைவேற்றியதாகலாம். ஆனால் அதன் தத்துவத்தையும் உணர்வையும் புரிந்து கொண்டதாகாது.

 குர்பானி கொடுக்கும் போது அது சம்பந்தப் பட்டவர்கள் அங்கு இருப்பது முஸ்தஹப்பாகும்.

 நேரிட்டு குர்பானி கொடுக்காமல் போகிற வழக்கம் அதிகரிக்கிற போது அடுத்த தலைமுறை இந்த வணக்கத்தை அறிந்து கொள்ள வே வாய்ப்பில்லாமல் போய்விடும்.

 இன்று நடைபெறுகிற கூட்டு குர்பானி நடைமுறையில் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. அதற்கு காரணம் குர்பானி கொடுப்பதில் அக்கறை அற்றவர்களே ஆவார்கள்.

 மார்க்கத்தின் ஒரு உன்னதமான வணக்கத்தை ஆண்டுக்கு ஒரு முறை சில ஏமாற்று பேர்வழிகள் இலாபம் அடைவதற்கான ஏற்பாடாக அவர்களே மாற்றியுள்ளன். இதில் குர்பானியின் தத்துவமும் அடிபட்டு போகிறது, முறையற்ற ஒரு மோசடி தொடரவும் காரணமாகிறது.

  குர்பானிக்கு பதிலாக நான் அந்த காசை மற்ற தர்ம காரியத்திற்கு பயன்படுத்தினால் என்ன என்று சிலர் நினைக்கிறார்கள்/ அது தவறு இஸ்லாமின் வழிகாட்டுதலுக்கு எதிரானது.

 நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள் என்ற ஒரு தகவலே இந்த சிந்தன்னயை தள்ளிவிட போதுமானது.

فعن عبد الله بن عمر رضي الله عنهما قال: (أقام النبي صلى الله عليه وسلم بالمدينة عشر سنين يضحي) (أخرجه أحمد والترمذي،

வசதி இருந்தும் குர்பானி கொடுக்காதவருக்கு எச்சரிக்கை

حديث أبي هريرة رفعه: (من وجد سعة فلم يضح فلا يقربن مصلانا) أخرجه ابن ماجه

அதிக நன்மை தரக்கூடியது.

عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال: «ما عمل آدمي من عمل يوم النّحر أحبُّ إلى الله من إهراق الدّم، إنّها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها، وأن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض، فطيبوا بها نفسا».

உரிய நேரத்தி அறுக்கப்பட வேண்டும்.

 عن البراء بن عازب، أن خاله أبا بردة بن نيار ذبح قبل أن يذبح النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، إن هذا يوم اللحم فيه مكروه، وإني عجلت نسيكتي لأطعم أهلي وجيراني وأهل داري، فقال رسول الله صلى الله عليه وسلم: «أعِدْ نُسُكاً»،

தகுந்த்ந பிராணியை தான் அறுக்க வேண்டும்.

 عن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «لا تذبحوا إلا مُسِنَّةً إلا أن يَعْسُرَ عليكم ، فتذبحوا جَذَعَةً من الضأن» (أخرجه مسلم)

 ، والمُسِنَّة: بضم الميم ، وكسر السين، والنون المشددة، وهي الكبيرة بالسن، فمن الإبل ما تم له خمس سنين ، ومن البقر ما تم له سنتان ، ومن الغنم ما تم له سنة

 செம்மறி ஆட்டுக்கு ஆறுமாதம் ஆகியிருந்தால் போதும்.

ويستثنى من الغنم الضأن فتجوز التضحية به إذا كان جذعاً، وهو ما تم له ستة أشهر،

 குர்பானியை நேரிட்டு கொடுப்பதே சிறப்பானது.  உரத்து தக்பீரும் சொல்ல வேண்டும்.

 عن أنس قال: (ضحى النبي بكبشين أملحين أقرنين ذبحهما بيده ، وسَمَّى وكَبَّرَ ، ووضع رجله على صِفَاحِهِمَا). ويُستحب التكبير بعد التسمية كما في حديث أنس عن النبي صلى الله عليه وسلم بمثله غير أنه قال: (ويقول: «باسم الله والله أكبر» (رواه مسلم) .

கத்தியை கூர் தீட்டிக் கொள்ள வேண்டும். 

ن عائشة أن النبي صلى الله عليه وسلم قال لها: «(يا عائشة هلمي المُدْية "السكين"، ثم قال: اشحذيها بحجر»، ففعلت ثم أخذها وأخذ الكبش فأضجعه، ثم ذبحه، ثم قال: «باسم الله، اللهم تقبل من محمد وآل محمد ومن أمة محمد»، ثم ضحى به.

அறுப்பின் போது கிப்லாவின் திசையில் அறுக்க வேண்டும்.

 எந்த பிராணியை எப்படி அறுக்க வேண்டுமோ அப்படித்தான் அறுக்க வேண்டும்.

ஒட்டகையை நிற்க வைத்து அறுக்க வேண்டும்.

 صحيح مسلم عن ابن عمر: أنه أتى على رجل وهو ينحر بدنته باركة، فقال: ابعثها قياما مقيدة سنة نبيكم صلى الله عليه وسلم.

குர்பானி பிராணிகளில் சிறந்தது எது?

 عن عبادة بن الصامت -رضي الله عنه- قال: قال رسول الله صلى الله عليه وسلم: «خير الأضحية الكبش الأقرن»، والأقرن: ما له قرنان حسنان أو معتدلان،

நல்ல கொம்பு உள்ள ஆடு என்பதன் பொருள் சதைப்பிடிப்புள்ள ஆடு என்பதே ஆகும்.

 இன்றைய சந்தைகளில் கொம்புக்கு தனியான மரியாதை தரப்படுகிறது. கிட்டதட்ட 3 ஆயிரம் 4 ஆயிரம் வர்ர கொம்பு உள்ளதற்கும் இல்லாததற்கு வேறு பாடு காட்டப்படுகிறது.  

 முஸ்லிம்கள் கொம்பு உள்ளதை தேர்ந்தெடுக்கலாம் அதற்காக நியாயமில்லாமல் அதிக விலை கொடுக்க் வேண்டிய அவசியம் இல்லை.

 தற்காலத்தில் குர்பானி பிராணிகளின் சந்தை அதிக பணம் பிடுங்கும் சந்தையாக மாறி வருகிறது. இதற்கு காரணம் மக்களில் சிலர் பிராணிகளின் அழகுக்கு கொடுக்கிற தேவையற்றா அக்கறையாகும். இது வே வியாபாரிகள் அதிக விலை வைக்க காரணாமாகிறது.

 மிக அதிக விலை கொடுத்து அழகுள்ள ஒரு பிராணியை கொடுப்பதை விட ஒன்றுக்கும் மேற்பட்ட குர்பானி கொடுத்து விடுவது அதிக நன்மை தரக்கூடியது.

 இவ்வளவு தூரம் துல்லியமான சட்ட விதிகளுக்குள்  சொல்லப்பட்டுள்ள ஒரு வணக்கத்தை பெருமைக்காக செய்வதை அறவே தவிர்த்து விட வேண்டும்.

 குர்பானி பிராணியை வாங்குவதிலிருந்து அத்ற்காக செலவிடுவது அதை காட்சிக்கு வைப்பது அதை அறுப்பதில் பக்திக்கு பதில் படோபட்த்தை வெளிப்படுத்துவது எதுவும் குர்பானிக்கு பொறுத்த மற்ற செயல்களாகும்.

அது போல குர்பானி வசதியுள்ளவர்கள் மீது மட்டுமே கடமையாகும் அல்லது சுன்னத் ஆகும்.

 கடன் வாங்கி குர்பானி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வசதியற்ற சில இதற்காக தொடர்ந்து சிறுக சிறுக காசு சேர்த்து குர்பானி கொடுப்பது உண்டு. அது பக்தியின் அடிப்படையில் இருக்குமெனில் நல்லதே . நானும் குர்பானி கொடுக்கிறேன் என்று காட்டுவதற்காக செய்யப்படும் எனில் குர்பானியின் தத்துவத்திற்கு எதிரானதாகும்.   

 حديث أم سلمة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: "من كان له ذبح يذبحه فإذا أهلّ هلال ذي الحجة فلا يأخذ من شعره ولا من أظفاره شيئا حتى يضحي" رواه مسلم.

 பலரும் கேட்கிற கேள்வி நான் குர்பானி கொடுத்தால் அது என் குடும்பத்திற்கு போதுமானாதா ?

இதற்கான பதில், உங்களது குடும்பத்தில் நீங்கள் ஒருவர் மட்டுமே பண வசதி படைத்தவராக இருந்து உங்களது குடும்பத்தினர் உங்களை சார்ந்தவரக்ளாக இருந்தால் எனக்காகவும் எனது குடும்பத்திற்காகவும் இந்த குர்பானி கொடுக்கிறேன் என்று நிய்யத் வைத்துக் கொள்ளலாம். அல்லாஹ் அனைவருக்கும் நன்மையை தர போதுமானவன்

குடும்ப உறுப்பினர்களில் வேறு பண வசதி படைத்தவர்கள் இருப்பார்கள் எனில் அவர்கள் தமக்குரிய குர்பானியை தனியாகவே கொடுக்க வேண்டும்.

عن جابر بن عبد الله قال: أُتِيَ بكبش فذبحه رسول الله -صلى الله عليه وسلم- بيده وقال: «بسم الله والله أكبر، هذا عني وعمن لم يضح من أمتي».

இறந்தவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா ?

அலி ரலி அவர்கள் பெருமானாருக்காக குர்பானி கொடுக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.

 عن عليّ رضي الله عنه : " أنه كان يضحي بكبشين أحدهما عن النبي صلى الله عليه وسلم ، والآخر عن نفسه ، فقيل له : فقال : أمرني به ، يعني النبي صلى الله عليه وسلم، فلا أدعه أبداً " . رواه الترمذي وأبو داود .

 இறந்தவர்களுக்காக காசு பணத்தை தர்ம்ம் செய்வதை விட குர்பானி கொடுப்பது சிறந்த்து என்பதே சட்ட அறிஞர்களின் கருத்தாகும் அதில் தர்ம்மும் இருக்கிறதும் வணக்கமும் இருக்கிறது.

 குர்பானி கொடுக்க இயலாதவர்கள் அந்த நன்மையை அடைந்து கொள்ள எளிய வழி

من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح، فكأنما قرب بدنة، ومن راح في الساعة الثانية، فكأنما قرب بقرة، ومن راح في الساعة الثالثة، فكأنما قرب كبشا أقرن، ومن راح في الساعة الرابعة، فكأنما قرب دجاجة، ومن راح في الساعة الخامسة، فكأنما قرب بيضة" رواه البخاري،

 நன்மைக்கு ஆர்வம் ஊட்டுவதற்காக இந்த ஹதீஸில் கோழியும் முட்டையும் சொல்லப் பட்டிருக்கிறது. அதன்றி  கோழி யில் குர்பானி என்பது கிடையாது.

 குர்பானி என்ற வணக்கம் முஸ்லிம் சமூகத்தின் அர்ப்பணிப்புணர்வு மனோ தைரியம் கொடைத்திறன் ஆகியவற்றிற்கு ஒரு சேர எடுத்துக் காட்டாக இருக்கும் வணக்கமாகும்.

 அதை உரிய வகையில் நிறைவேற்றுவோம்.

 

 

No comments:

Post a Comment