Thursday, June 05, 2025

அரபா நாள் தரும் செய்தி

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا

இன்று துல்ஹஜ் 9 ம் நாள் இன்று அரபா தினமாகும்,

புனித மக்கா நகரில் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்திருக்கிற சுமார் 20 இலட்சம் ஹாஜிகளும் துல்ஹஜ் 9 ம் நாள் அன்று அரபா மைதானத்தில் ஒன்று கூடுவார்கள். அன்றைய லுஹர் நேரத்திலிருந்து மஃரிபு வரை அங்கு தங்கியிருப்பார்கள். இதுவே ஹஜ்ஜின் பிரதான வணக்கமாகும்.

ஒருவர் துல்ஹ்ஜ் 9ம் நாள் லுஹரிலிருந்து 10 ம் நாள் பஜ்ரு வரை கொஞ்ச நேரம் அந்த மைதானத்தில் ஹஜ்ஜின் இஹ்ராமோடு தங்கியிருந்து விட்டால் அவர் ஹாஜி ஆகி விடுவார். அதாவது ஹஜ் கடமைய நிறைவேற்றியவர் ஆகிவிடுவார். அங்கு தங்கியிருக்கும் போது அவர் மயக்க நிலையில் நினைவு தப்பியிருந்தாலும் சரி. இது அரபா பெரு வெளி என்பதை உணராதவராக அது பற்றி சிந்திக்காதவராக அங்கு தங்கியிருந்தாலும் சரி. அல்லது விருப்பமின்றி தங்கியிருந்தாலும் கூட அவர் ஹாஜி ஆகிவிடுவார்.

அந்த நேரத்திற்கும் அந்த இடத்திற்குமான மகிமை அப்படி 

இங்கு இரண்டு அம்சங்கள் கவனத்திற்குரியவை

ஒன்று காலம் மற்றது இடம்.

துல் ஹஜ் 9 க்கு முன்னதாக அரபா பெருவெளியுல் எத்தனை நாட்கள் தங்கியிருந்தாலும் அது ஹஜ் ஆகாது.

குறிப்பிட்ட நேரத்தில் அந்த குறிப்பிட்ட இட்த்திற்குத்தான் ஹாஜி என்கிற அந்தஸ்த்தை தருகிற மரியாதை இருக்கிறது. பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு அன்று பிறந்த குழந்தையை போன்று பரிசுத்தமானவர்களாக அந்த நேரத்தில் அங்கு குழுமியிருந்தவர்கள் ஆவார்கள்

துல்ஹஜ் 9 ம் நாளுக்கு தனியான வேறு சில சிறப்புக்களும்  இருக்கின்றன

பெருநாளுக்கு நிகரான ஒரு திருநாள்.

இஸ்லாமிய மார்க்கம் இதே போன்ற தொரு துல் ஹஜ் 9 ம் நாளில் தான் பரிபூரணப்படுத்தப் பட்டது.

 عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ رَجُلًا مِنْ الْيَهُودِ قَالَ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ آيَةٌ فِي كِتَابِكُمْ تَقْرَءُونَهَا لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لَاتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا قَالَ أَيُّ آيَةٍ قَالَ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا قَالَ عُمَرُ قَدْ عَرَفْنَا ذَلِكَ الْيَوْمَ وَالْمَكَانَ الَّذِي نَزَلَتْ فِيهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ قَائِمٌ بِعَرَفَةَ يَوْمَ جُمُعَةٍ – البخاري 45

மார்க்கப் பணியில் நிறைவு என்பது பெரும்பாலான நபிமார்களுக்கு கிடைத்த்தில்லை.

தவ்ராத்தை அமுல் படுத்தும் முன்னரே மூஸா அலை வபாத்தாகிவிட்ட்டார்கள்.

பைத்துல் முகத்தஸை கட்டி முடிக்கும் முன்னரே சுலைமான அலை வபாத்தாகி விட்டார்கள்.

தனது பணியை நிலை பெறச் செய்யும் முன்னரே நபி ஈஸா அலை உயர்த்தப்பட்டு விட்டார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டுமே தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர் ஆவார். அவர் மூலமாக செழித்த இஸ்லாம் பரிபூரணப்படுத்தப் பட்டது.

எனவே அரபா நாள் பெருநாளுக்கு நிகரான ஒரு திருநாளாகும்.

அதிகமானோர் நரகிலிருந்து விடுவிக்கப்படும் விடுதலை திருநாள்

عَنْ ابْنِ الْمُسَيَّبِ قَالَ قَالَتْ عَائِشَةُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنْ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُو ثُمَّ يُبَاهِي بِهِمْ الْمَلَائِكَةَ فَيَقُولُ مَا أَرَادَ هَؤُلَاءِ – مسلم 2402

 எந்த மலக்குகள் குழப்பம் செய்யும் ஒரு இனத்தையா படைக்கப் போகிறாய் என்று அல்லாஹ்விடம் ஆதிகாலத்தில் ஆட்சேபனை எழுப்பினார்களோ அதே மலக்குகளிடம் இதோ இந்த என் அடியார்களைப் பாருங்கள் என்று அல்லாஹ் பெருமிதமாக காட்டுகிறான்.

(அந்த பட்டியலில் அல்லாஹ் நம்மையும் நமது குடும்பத்தையும் சேர்ப்பானாக!)

 சைத்தான் சிறுமைப்படுகிற நாள்

 عن طلحة بن عبيد الله بن كريز أن رسول الله صلى الله عليه وسلم قال ما رئي الشيطان يوما هو فيه أصغر ولا أدحر ولا أحقر ولا أغيظ منه في يوم عرفة وما ذاك إلا لما رأى من تنزل الرحمة وتجاوز الله عن الذنوب العظام إلا ما أري يوم بدر قيل وما رأى يوم بدر يا رسول الله قال أما إنه قد رأى جبريل يزع الملائكة – مالك

 துல் ஹஜ் 9ம் நாளின் ஒரு நோன்புக்கு மகத்தான பலன்

عن أبي قتادة أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده

இவ்வளவு நன்மை வேறெந்த சுன்னத்தான நோன்பிற்கும் சொல்லப் பட்ட்தில்லை

துஆ கேட்க சிறந்த நாள்

ن طلحة بن عبيد الله بن كريز أن رسول الله صلى الله عليه وسلم قال أفضل الدعاء دعاء يوم عرفة وأفضل ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له  - مالك

துல்ஹ்ஜ 9 நாளின் இந்த நன்மைகளை  உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த அரபா நால் என்பது ஹாஜிகள் அரபாவில் தங்கும் நாள் அல்ல; ஒவ்வொரு மக்களுக்கும் அவர்களுடைய நிலப்பரப்பில் வெளிப்படும் பிறையை ஒட்டி வருகிற துல் ஹஜ் 9ம் நாளாகும்.

அதனால் தான் உலகம் முழுவதிலும் அரபா நாள் என்றால் என்ன என்ற கேள்விக்கு துல்ஹஜ் 9 ம் நள் என்று பதில் சொல்வார்களே தவிர ஹாஜிகள் அரபாவில் ஒன்று கூடுகிற நாள் என்று சொல்வதில்லை.

يوم عرفة هو اليوم التاسع من شهر ذي الحجة، وهو أحد أفضل أيام السنة عند المسلمين.

என்பதே ஏ ஐ உட்பட அனைவரும் சொல்கிற விளக்கமாகும்.

இது வே சரியான விளக்கமும் ஆகும்.

ஏனெனில் ஜப்பானில்  பாதி பகல் கடந்த பிறகு தான் மக்காவில் அரபா நாள் ஆரம்மாகிறதுஅரபா முடிகிற போதுதான் அமெரிக்காவின் சில ஊர்கள் விடியவே செய்யும் .

அப்படி பார்க்கையில் ஒவ்வொரு ஊருக்கும் அந்த ஊரின் சந்திரப் பிறையோட்டத்திற்கு ஏற்ப அரபா நாள் முடிவாகும் என்பதே மார்க்க அறிஞர்ளின் தீர்ப்பாகும்.

எனவே இந்த ஆண்டு நேற்றைய தினமே மக்காவில் ஹாஜிகள் அரபாவில் தங்கியிருந்து விட்டு புறப்பட்டு விட்டாரக்ள் என்றாலும் நமது இன்றைய தினம் தான் அரபாவுடைய நாளாகும்.

இன்று நாம் கடைபிடித்திருக்கிற நோன்பை அல்லாஹ் கபூல் செய்தருள்வானாக அதற்கு சிறந்த கூலியை தந்தருள்வானாக!

அரபா நிலத்தின் சிறப்பு

அரபா மைதானம் மக்காவிலிருந்து சுமார் 22 கீமி தொலைவிலும் மினாவிலிருந்து 15 கீமி தொலைவிலும் இருக்கிறது.

அரபாத் என்பது அந்த இடத்தின் பெயராகும்.

அரப என்ற வார்த்தைக்கு அறிந்து கொண்டார் என்பது பொருளாகும்.

இந்த இட்த்தில் நபி ஆதம் அலை அவர்கள தனது மனைவியான ஹவ்வா அம்மையாரை கண்டு கொண்டார் என்பதால் இதற்கு அரபா என்று பெயர் வந்த்து என்று பிரபலமாக சொல்வதுண்டு.

ஒரு கணவனும் மனைவியும் தொலைந்து போன பிறகு சந்தித்துக் கொண்ட இடம் இலட்சோப இலட்சம் மக்களின் வழிபாட்டுக்குரிய நிலமாக மாறியது எப்படி ஏன் என்ற கேள்வியை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அந்த இருவரும் பூமிக்கு இறங்கியதிலிருந்து அல்லாஹ்வின் மன்னிப்பை தேடுவதில் உருகி உருகி ஈடுபட்டு வந்தனர். அந்த மன்னிப்புக்கோரலை அல்லாஹ் இந்த இடத்தில் சங்கமிக்க வைத்தான். அவர்களுக்கு மன்னிப்பை வழங்கினான்.

வரலாற்றின் இந்த பெரும் தொன்மம், மனித சமூகத்தை தவறுகள் தீய செயல்களிலிருந்து விடுபடவும் நடந்து விட்டவைகளுக்கு கல்புருகி மன்னிப்புக் கோரவும்  தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது.

இதற்காகவே இலட்சோப இலட்சம் மக்களை ஆதிமனிதனுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியை அளித்த  இந்த இட்த்திற்கு வரச் செய்கிறான். அப்படி வருவோர் அன்று பிறந்த குழந்தைகளாக மாறுகின்றனர்.

அரபா எனும் நிலம் தருகிற ஒரு செய்தி இது.

இதில் இன்னொரு செய்தியும் மிக முக்கியமானது.

 அரபா என்ற சொல்லுக்கு காரணம். அல்லாஹ் ஆதம் அலை அவர்களை படைத்த போது அவரது முதுகை தடவினான். அப்போது அவரது சந்த்திகள் அனைவரும் வெளியே வந்தனர். அம்மக்கள் கூட்ட்த்திடம் நான் உங்களது இறைவன் அல்லவா என்று அல்லாஹ் கேட்டான். அப்போது மக்கள் அனைவரும் ஆம் என்று பதில் அளித்தனர் \

மனித சமூகத்தின் முதல் உறுதிப் பிரமாணம் அது.

அந்த உறுதிப்பிரமாணம் இந்த அரபா பெருவெளியில் நடந்தது.

மனிதப் படைப்பு தன்னை படைத்த இறைவனை அறிந்து கொண்ட இடம் என்ற கருத்தில் இந்த இடம் அரபா என்று சொல்லப்பட்டத என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.

இது இன்னும் வலுவான கருத்தோட்டமாகும்.

ஆதியில் மனிதர்கள் அத்தனை பேரும் அல்லாஹ்வை அறிந்திருந்தனர் என்ற போதும் அதை காலப்போக்கில் நினைவில் வைத்துக் கொண்டு உறுதியாக தொட்ர்ந்து ஒப்புக் கொண்ட வாய்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது.

அந்த ஒப்புகை அனுபவத்தை மற்றுமொரு முறை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்து விடுகிற வாய்ப்பு ஹஜ்ஜுக்கு செல்கிற ஒவ்வொரு வருக்கும் கிடைக்கிறது.

ஹாஜிகள் ஒவ்வொரு வரும் தமது தல்பியாவில் ஆதிபிரகனத்தின் தூய்மையான வடிவத்தை நினைவூட்டுகிறார்கள்.

இன்னல் ஹம்த் வன்னிஃமத லக வல் முல்க் லாஷரீக லக் என்ற வாசகம் ரூபீபிய்யத் எனும் இறைவனின் படைப்பாற்லையும் அதற்கு அடி பணிந்து நிற்க வேண்டிய அடிமையின் பொறுப்பேற்றலையும் அப்பட்டமாக நினைவு படுத்துகிறது.

எனவே ஹஜ்ஜுக்கு செல்கிற ஒவ்வொரு ஹாஜியும் அரபாவில் நிற்கிற போது நம்மை படைத்த இறைவனை நாம் மீண்டும் ஒரு முறை ஒப்புக் கொண்டு அவன் வசம் நம்மை ஒப்புக் கொடுக்கிறோம்.

எமக்கு ஒரு ரப்பு இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டோம். இனியுள்ள வாழ்வில் அந்த ரப்பின் திருப்திக்கேற்ப வாழ்வேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்

அப்படி செய்யும் போது நிச்சயம் அவர் ஒரு புதிய பிறவி எடுப்பார். இதை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்று பிறந்த பாலகன் போல அவர் திரும்பி வருகிறார் என்று சொன்னார்கள்.

இதுவே அரபா தரும் மகத்தான செய்தியாகும்.

இந்த செய்தியை அரபாவுக்கு செல்லாமலே அரபா நோன்பு நோற்கிற அனைவரும் ஏன் மனித குலத்தில் உள்ள அனைவரும் உணரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

எல்லாம் வல்ல இறைவன் அதை உணர்ந்து கொள்ள வாய்ப்பளிப்பானாக!

போலிக்கடவுள்கள் நம்பிக்கைகளிலிருந்து விலகி உண்மையான அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு அவது திருப்தியை பிரதானப்படுத்தி வாழ்கிற ஒரு நிலையை நம் அனைவருக்கும் அல்லாஹ் நஸீபாக்குவானாக!

அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையையும் அவனுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற நமது கடமையையும் அரபா நமக்கு வலியுறுத்துகிறது எனும் போது அந்த நம்பிக்கை எந்த அளவில் நம்மிடம் இருக்கிறது என்பதை நாம் நியாயமாக அளவிட்டுக் கொள்ள வேண்டும்.

யூதர்களைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு சொல்கிறான்.

وما قدرو الله حق قدره

 அல்லாஹ் அல்லாஹ் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது அந்த சக்தியை பற்றிய முழு ஆசையும் முழு அச்சமும் வேண்டும்

 யூதர்களிடம் அல்லாஹ் என்ற சொல் மட்டுமே இருந்த்து அல்லாஹைவை பற்றிய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஆர்வமும் இருக்கவில்லை.

 மூஸா நபியின் மூலம் ஏராளமான அருட்கொடைகளை பார்த்த பிறகும் செங்கடலை கண்டவுடன்  إنا لمدركون    மாட்டிக் கொண்டோம் என்று புலம்பினார்கள். 

அல்லாஹ்வை பற்றி இருக்க வேண்டிய அச்சமும் யூதர்களிடம் இருக்கவில்லை.

 ஹித்த்துன் என்று பணிவுடன் சொல்லிக் கொண்டு ஊருக்குள் செல்லுங்கள் என்று இறைவன் கட்டளையிட்ட போது அதை கேலி செய்யும் விதமாக ஹின் த்துன் என்று சொல்லிக் கொண்டு நெஞசை மல்லாக்க வைத்துக் கொண்டு உள்ளே சென்றார்கள்.

 وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين(161)

 அல்லாஹ்வை உண்மையாக நம்பினா அவன் மீது அழுத்தமான பற்றும் அவனை மீறி நடப்பதில் ஆழமான பயமும் நமக்கு வேண்டும்.

 நமது நம்பிக்கை உரிய முறையில் உறுதியாக இருக்குமானால் அல்லாஹ் என்ற ஒற்றை வார்த்தையில்

·         நாம் நமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம.

·         பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்.

·         எதிரிகளிடம் இருந்து தப்பிக்கலாம்.

 நபி சுலைமான் அலை அவர்களின் சபையில் இருந்த அறிஞர் அல்லாஹ் என்ற ஒரு சொல்லில் பல்கீஸ் அம்மையாரின் சிம்மாசனத்தை சுலைமான் அலை அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்.

قل الله  என்ற ஒரு வாசகம் குர் ஆனின் சில இடங்களில் வருகிறது. இது அல்லாஹ் காப்பான் அல்லாஹ் வஹியை இறக்குகிறான் என்று பொருள் வரும் . ஆனால்

இந்த வார்த்தைக்கு அல்லாஹ் என்று சொல்லுங்கள் என்ற பொருளும் உண்டு என சில விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் எதிரிகளின் தொல்லைகளைச் சந்திக்கிற போது அல்லாஹ் என்று கூறுங்கள் தொல்லை அகன்று விடும் என்பது பெருளாகும்.  

 அரபா தரும் இந்த சிந்தனை ஒவ்வொரு முஃமினும் நாள் தோறும் நினைவில் வைக்க வேண்டிய செய்தியாகும். அரபா நாளை உலகின் தலையாய தினம் என்று சொல்வதன் ஆழத்தை இதில் நாம் உணரலாம்.

 நம்முடைய இன்றைய வாழ்க்கை முறையில் அனாவசியமான காரியங்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கிறோம். அநாகரீகமான நடைமுறைகள் நம்முடைய வாழ்க்கை ஆக்ரமித்து வருகின்றன. பொய்யும் அகம்பாவமும் வீண் பெறுமையும் வெத்து ஆட்டம் பாட்டங்களும் நமது வாழ்வின் பெரும் பகுதியை ஆட் கொண்டு வருகின்றன. நமக்கு வழி காட்டுவோர் என யாரும் இப்போது கிடைப்பது அரிதாக இருக்கிறது.

பெங்களூருவில் நெர்சலில் சிக்கி ஏராளமானோர் பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது.

எதற்காக இது நடந்த்து என்பதை சிந்தித்து பாருங்கள். கிரிக்கெட் விளையாட்டு என்ன பெரிய மனித குல சாதனையா ? மோசடியும் தில்லுமுல்லுகளும் கலந்து கிடக்கிற ஒரு விளையாட்டாகவல்லவா அது இப்போது மாறி இருக்கிறது. அதில் ஒரு அணி வெற்றி பெறுவதை ஒரு மாநில அரசு இந்த அளவில் கொண்டாட வேடிய அளவுக்கு என்ன தேவை இருக்கிறது. அரசுகள் மக்களுக்கு உண்மையான சேவைகளை செய்வதாய்  விட்டு விட்டு  மக்களிடம் வெறும் பகட்டான பெயரெடுக்க  செய்த ஏற்பாடல்லவா இது ? ஒரு விளையாட்டில் கர்நாடகா என்ற மொழி உணர்வை கதகதப்பாக்குவதற்கு செய்த ஏற்பாடு தானே இது. ?

இதன் ஒட்டு மொத்த கருத்து, மக்கள் தமது வாழ்வை பற்றி மதிப்பீடு இல்லாமல் இருக்கிறார்கள் என்பது தானே

இந்த சூழலில் அரபா மக்களுக்கு அவர்களது வாழ்வின் பிரதான இலக்கை நினைவூட்டுகிறது. 

தக்பீர் ;

அரபா நாள் தொடங்குவதை உலகம் முழுவதும் நினைவூட்ட அன்றிலிருந்து தக்பீர் ஆரம்பமாகிறது.

 قال الله تعالى : {وَاذْكُرُواْ اللّهَ فِي أَيَّامٍ مَّعْدُودَاتٍ فَمَن تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلاَ إِثْمَ عَلَيْهِ وَمَن تَأَخَّرَ فَلا إِثْمَ عَلَيْهِ لِمَنِ اتَّقَى وَاتَّقُواْ اللّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ }البقرة 203

 

يكبر من صبح يوم عرفة إلى العصر من أخر أيام التشريق ،وحكى ابن قدامة إجماع الصحابة على ذلك

 கூட்டாக தொழுபவர், தனியாக தொழுபவர், ஆண், பெண் அனைவரும் பர்ளு தொழுகைகுப் பின் தக்பீர் சொல்ல வேண்டும்

 பெருநாள் இரவைவையும் பெருநாளையும் முறையான  அமல்களால் அழகு படுத்துவோம்.

 عَنْ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَامَ لَيْلَتَيْ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ

 ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு காலை உணவுக்கு முன்னதாக வருவது சிறப்பு

كان رسول الله صلى الله عليه وسلم لا يطعم حتى يرجع من المصلى فيأكل من أضحيته .

 آداب وأحكام عيد الأضحى:

 ذبح الأضحية :يكون ذلك بعد صلاة العيد لقول رسول الله صلى الله عليه وسلم : (من ذبح قبل أن يصلي فليعد مكانها أخرى , ومن لم يذبح فليذبح )[رواه البخاري ومسلم]

ووقت الذبح أربعة أيام ،يوم النحر وثلاثة أيام التشريق ، لما ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال ( كل أيام التشريق ذبح )) [رواه أحمد ].

الاغتسال والتطيب للرجال : ولبس أحسن الثياب بدون إسراف ولا مخيلة

الأكل من الأضحية : كان رسول الله صلى الله عليه وسلم لا يطعم حتى يرجع من المصلى فيأكل من أضحيته .

الذهاب إلى مصلى العيد ماشياً إن تيسر

 
 
الصلاة مع المسلمين واستحباب حضور الخطبة.

مخالفة الطريق : يستحب لك أن تذهب إلى مصلى العيد من طريق وترجع من طريق آخر لفعل النبي صلى الله عليه وسلم .

التهنئة بالعيد : لا بأس مثل قول : تقبل الله منا ومنكم .

الاجتماع على الطعام : ومن السُنَّة اجتماع الناس على الطعام في العيد  وهو من شعائر الإسلام التي سنها رسول الله صلى الله عليه وسلم

அரபா நாளின் அருமையை உணர்ந்து கொள்ளவும் அது தரும் கருத்தை நமது வாழ்வியலாக்கிக் கொள்ளவும் எல்லாம் வல்ல இறைவன் அருட் செய்வானாக!

1 comment:

  1. ஆமீன் ஆமீன்..... அல்ஹம்துலில்லாஹ்...

    ஹஜரத் அரஃபா நாளின் மகிமையை நன்றாக வடிவமைத்து விட்டீர்கள்..

    கோவை, பள்ளப்பட்டி,மேலப்பாளையம்,அதிராம்பட்டினம், இதுபோல முஸ்லிம்கள் நிறைந்து காணப்படும் ஊர்களில் இன்றைய தினம் அவ்வூரில் உள்ள அணைத்து பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை அளிப்பார்கள்..

    ஆனால் சில கிராம பகுதிகளில் இந்த தினத்தை ஒரு சிறப்பான தினமாக பார்ப்பதே இல்லை என்பது வேதனை..

    உதாரணமாக அன்றைய தினம் தமது பிள்ளைகளை தாராளமாக பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விடுகிறார்கள்...
    நாமே முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்றால் பிறகு யார் முக்கியத்துவம் கொடுப்பர்...

    கல்யாணம் kaathukutthukellam விடுமுறை எடுக்கும் நம் சமூகம் இது போன்ற சிறப்பான நாட்களுக்கும் விடுமுறையை எடுக்க சொல்லாமல் இருப்பதை என்னென்று சொல்வது..

    இதை எப்படி எந்த முறையில் ஜூம்ஆ பயானில் சொல்வது ஹஜ்ரத்...

    ReplyDelete