Friday, June 06, 2025

ஹஜ்ஜுப் பெருநாள் இபுறாஹீமிய வெளிச்சம் படரட்டும்

 

قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم 

தற்கால முஸ்லிம் சமுதாயம் பல்வேறு இருள்களால சூழப்பட்டிருக்கிறது. கொள்கையில் தடுமாற்றம். வணக்கத்த வழிபாடுகளில் பின்னடைவு, வாழ்க்கை முறையில் சிதைவுகள், அரசியல் அதிகாரத்தில் வீழ்ச்சி என அந்த  இருட்டு போர்வை ஒன்றன் மேல் ஒன்றாய சமுதாயத்தை அழுத்திக் கொண்டிருக்கிற காலகட்டதில்

இந்த ஹஜ்ஜுப் பெருநாள் நம்பிக்கை அளிக்கிற பல வெளிச்சப் புள்ளிகளை காட்டுகிறது.  ஒவ்வொரு முஸ்லிமும் தனது தனி வாழ்விலும் சமூக அளவிலும் கடை பிடிக்க வேண்டிய நீடித்த வெற்றிக்கான வெளிச்சப் புள்ளிகளை ஹஜ்ஜுப் பெருநாள் அடையாளம் காட்டுகிறது.

ஹஜ்ஜுப் பெருநாளின் செய்தி ஒன்று மட்டுமே நபி இபுறாஹீம் அலை அவர்களின் வாழ்வு மகத்தானது. பாராட்டிற்குரியது. மக்கள் அந்தப் பாதையில் தமது பயணத்தை அமைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையும் - அல்லாஹ் எப்படி விரும்பு கிறானோ அது போலவே வாழும் ஆசையும் இபுறாஹீம் நபியின் பிரதான இயல்பாகும்.  

நம்ரூதின் நெருப்புக் குண்டத்தில் போடப்படுவதற்காக நபி இபுறாஹீம் அலை கல்லெறி இயந்திரத்தில் கட்டப்பட்டு வீசப்படுகிறார்கள்.  நெருப்புக்குழியை நோக்கி ஆகாயத்தில் அவர் பறந்து கொண்டிருந்த போது ஜிப்ரயீல் அலை இடையில் வந்து நான் ஏதாவது உதவி செய்யட்டுமா என்று கேட்டார்கள். அவரை ஏறிட்டுப்பார்த்த இபுராஹீம் அலை எனது நிலை என் இறைவனுக்கு தெரியும் அல்லவா என்று கேட்டார். தெரியும் என பதிலளித்தார் ஜிப்ரயீல்.

நான் நெருப்பில் விழுந்து விட வேண்டும் என்று எனது இறைவன் விரும்புவான் எனில் நான் நெருப்பில் விழவே விரும்புகிறேன் என்றார். இபுறாஹீக் நபி (அலை)

அல்லாஹ் நின்னத்திருந்தால் நொடியில் நெருப்பை அணைத்திருக்க முடியும். அல்லது நெருப்பில் விழாமல் இபுறாஹீம் நபியை காப்பாற்றியிருக்க முடியும்.  அதற்காக மழையின் காத்திருந்தார் என்று வரலாறு சொல்கிறது.

عن ابن عباس أنه قال : جعل ملك المطر يقول : متى أومر فأرسل المطر ؟ 

 ஆனால் நெருப்பில் விழ வைத்த இறைவன் நெருப்பின் இயல்பை மாற்றவில்லை. அந்த நெருப்பின் மூலம் இபுறாஹீம் நபியின் கை கட்டுகளை கரித்த்து அவிழ்ந்த்தான் .

ولم يحرق منه سوى وثاقه 

பிறகு நெருப்பின் இயல்பை இதமான குளிர்தரக் கூடியதாக மாற்றினான்.

 

قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم 

அதாவது நெருப்புக்குள் ஒரு பசுந் தோட்டத்தை அல்லாஹ் அமைத்தான்.

وقال السدي : كان معه أيضا ملك الظل . وصار إبراهيم عليه السلام في مثل الجونة حوله النار ، وهو في روضة خضراء ، والناس ينظرون إليه لا يقدرون على الوصول إليه ، ولا هو يخرج إليهم 

அவர் சுகமாக இருப்பதை மக்கள் பார்த்தார்கள். அவர்கள் அவர் அருகே செல்ல நினைத்த போது நெருப்பின் சூடு அவர்களை தடுத்தது.

இதை கண்டு பேராச்சரியப்பட்ட இபுறாஹீம் நபியின் தந்தை சொன்னார்.

கடவுள்களில் உனது இறைவன் ரொம்ப கெட்டிக் காரன்.

فعن أبي هريرة أنه قال : أحسن كلمة قالها أبو إبراهيم إذ قال لما رأى ولده على تلك الحال : نعم الرب ربك يا إبراهيم .

அந்த நெருப்பு மிக சுகமான வாழ்வை இபுறாஹீம் நபிக்கு கொடுத்தது.

இப்னு அஸாகிரின் விரிவுரையில் வருகிறது. என் வாழ்நாளில் நான் சுகமாக வாழ்ந்த காலம் அது.

وأنه قال : ما كنت أياما وليالي أطيب عيشا إذ كنت فيها ، ووددت أن عيشي وحياتي كلها مثل إذ كنت فيها 

இந்த அளவிலான மகிமை மிக்க மாற்றத்திற்கு  இபுறாஹீம் நபியின் மன் உறுதியும் பக்தியும் தான் காரணம்.

எந்த ஒரு முஃமினும் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும். அவனது விருப்பத்தை நம் விருப்பமாக ஆக்கிக் கொள்ளனும்.

இத்தகைய இயல்பு கொண்ட இபுறாஹீம் நபி அல்லாஹ்விடம் கேட்ட பிரார்த்தனை நான்கு

 

 رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ (83) وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآَخِرِينَ (84) وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ (85)} [الشعراء:83-85

அவர் முதலில் கேட்ட்து கல்வியை

حُكْمًا என்ற சொல்லின் பொருள் எல்லா விதமான தேவையான கல்வியையும் நிறைவாக கொடு என்பதாகும்.

والنكرة تفيد العموم والتنوين يفيد الكثرة؛ لأن العلم له فوائد عظيمة جدا،

நமது அறிவு வெறும் பட்டயங்களாக இல்லாமல் வாழ்க்கையை சரியான திசையில் கொண்டு செல்ல பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். நபி இபுறாஹீம் அலை அவர்களுக்கு உறுதியான முடிவுகளை எடுப்பதற்கேற்ற

தீட்சண்யம் மிக்க அறிவை அல்லாஹ் கொடுத்தான் .

 

எந்த ஒரு மனிதரும் தனது கடமையை நிறைவேற்ற தேவையான அறிவை பெற்றுக் கொள்வது இப்றாஹீம் நபியின் வழியை பின்பற்றுவதாகும்.

எனக்கு இவ்வளவு அறிவு இருக்கிறது. அதனால் நீங்கள் என்னை பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு சொல்லும் அளவு அறிவு பெற வேண்டும். இபுராகீம் நபி அவ்வாறு கூறினார்.  

 

يَا أَبَتِ إِنِّي قَدْ جَاءَنِي مِنَ الْعِلْمِ مَا لَمْ يَأْتِكَ فَاتَّبِعْنِي أَهْدِكَ صِرَاطًا سَوِيًّا} [مريم:42

 

அவரது இரண்டாவது பிரார்த்தனை நல்லோர்களுடன் சேர்த்து வை என்பதாகும்.

எந்த அறிவு ஜீவிக்கும் நல்ல தொடர்பு கிடைக்க வில்லை எனில் அவர் வீணாகி விடக் கூடும்.

அமெரிக்காவின் பெரும் தொழிலதிபாரான எலான் மாஸ்க் – ஒரு பணக்கார்ர் மட்டுமல்ல. இன்றைய உலகிற்கு தேவையான நவீன் அறிவியல் ஆற்றலும் பெற்றவர் ஆவார். அவர் மூர்க்கத்தனம் மிகுந்த அதிபர் டிரம்புடன் கூட்டணீ வைத்தார். அந்த கூட்டணி அவருக்கும் நாட்டுக்கும் பயன் தரவில்லை என்பதால் அதிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

எல்லோருக்கும் இது பொருந்து.

நல்லோர்களின் கூட்டணி அவசியம்.

சாலிஹீன் என்ற  வாசகத்திற்கு தகுதியானவர்களுடன் சேர்த்து வை! என்று பொருள் வரும்.

எந்த அறிவாளியும் தனியொருவராக செயல்படுவதை விட தகுந்த கூட்டணியை அமைத்துக் கொள்வது நன்மையானது. அது இபுறாஹீம் நபியின் தேர்வாக இருந்த்து என்பதை இதிலிருந்து அறியலாம்.

 

இபுறாஹீம் நபியின் மூன்றாவது பிரார்த்தனை மக்களிடம் நல்ல புகழ் வேண்டும் என்பதாகும்.

நமது செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்பதை இது காட்டுகிறது.

 

நமது செயல்பாடுகள் மக்களால் அடையாளம் காணப்படக் கூடியதாக இருக்க வேண்டும். அவர்களிடம் உண்மையான புகழை பெறக் கூடியதாக இருக்க வேண்டும்

 

நமது செயல்பாடுகள் பயனற்றதாகவோ தூற்றுதலுக்குரியதாகவோ ஆகிவிடக் கூடாது.

 

நிறைவாக சொர்க்கம் சென்று சேர்ந்து விட வேண்டும் என்பதில் குறியாக இருக்க வேண்டும்.

நாம் யாரின் வாரிசு எதற்கு வாரிசு என்பது மக்களுக்கு எப்போதும் ஒரு மவுசையும் பவுசையும் ஏற்படுத்துகிற சிந்தனையாகும்.

 

இந்த வாரிசுரிமை பெருமை எல்லாம் பெரிதல்ல். கடைசியில் சொர்க்கத்தின் வாரிசாகிறோமா என்பதே முக்கியம் என்று இபுறாஹீம் நபி கற்றுத்தருகிறார்.

 

இபுறாஹீம் நபியின் இந்த நான்கு பிரார்த்தனைகளும் இன்றைய நவீன வாழ்வியலில் நமது கவனத்தை நாம் சீர்படுத்திக் கொள்ள தூண்டும் சிந்தனைகளாகும்.

 

அனைவருக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

 

No comments:

Post a Comment