வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 12, 2025

விமான விபத்தின் சோகங்கள் குறையட்டும்.

أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ] (الملك: 19).

“உங்களது தலைகளுக்கு மேல் சிறகை விரித்த படியும் சுருக்கியும் பறக்கிற பறவைகளை கவனியுங்கள். அவற்றை அல்லாஹ்வே அந்தரத்தில் தடுத்து நிறுத்துகிறான்.”

நேற்று (ஜூன் 12) வியாழக்கிழமை மதியம் அகமதாபாத் நகரத்திலிருந்து லண்டன் நகருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ரக விமானம் புறப்பட்ட 3 நிமிடத்தில் விமான நிலையத்திற்குகு அருகிலிருந்த பி.ஜி மருத்துவக் கல்லூரியின் ஹாஸ்டல் மெஸ் கட்டிடத்தின் மீது  சுமார் 600 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து, வெடித்து விபத்தில் சிக்கியது.  

இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் கருகி மாண்டனர். மாணவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து ஒன்பதரை மணி நேரம் பயணித்து லண்டன் செல்லக்கூடியது என்பதால், விமானத்தில் எரிபொருள்  நிறைய முழுமையாக நிரப்பப்பட்டிருந்தது. அதனால் யாரும் விபரீதத்தை உணர்வதற்குள்ளாக விமானம் பெரிய நெருப்புக் கோளமாக வெடித்துச் சிதறிவிட்டது.

விமானம் மதியம் 1.38 மணிக்கு கிளம்பியிருக்கிறது. 1;39 மணிக்கு விமானிகளிடமிருந்து கட்டுப்பாட்டு அறைக்கு  அவசர அழைப்பு  வந்திருக்கிறது. அது நிறைவடைவதற்குள் விமானம் விழுந்து விட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூர விபத்து உலகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  

இன்னாலில்லாஹி

விமானத்தில் பயணித்தவர்களில் 14 குழந்தைகள் உள்ளனர்.

204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 41 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அகமதாபாத் மாநகர காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்துள்ளார்

இலண்டனைல் வசிக்கிற தனது மகளை குடும்பத்தை பார்க்க் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஒருவர் இதில் பலியாகி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்து கொண்ட குஷ்பு ராஜ் புரோகித் என்ற பெண்மணி   லண்டனில் இருக்கிற தனது கணவரை பார்ப்பதற்காக முதல் முறையாக பயணம் செய்திருக்கிறார். அவரும் இவ்விபத்தில் பலியாகிவிட்டார்.

போயிங்க் விமான கம்பெனியின் நீண்ட தூரம் பயணிக்க தகுந்த டிரீம் லைனர் என்று அழைக்கப்படுகிற விமானம பலருடைய கனவை சிதைத்து விட்டது.

பாதிப்புக்குள்ளோரின் குடுமத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் தகுந்த ஆறுதலையும் பதிலையும் தந்தருள்வானாக!

காரணம் புரியவில்லை

3 ஆயிரம் அடி நீளமுள்ள விமான ஓடுதளத்திலிருந்து 2000 அடியிலேயே  சீக்கிரமே மேலே எழுந்த விமானத்தின் சக்கரங்கள் உள் நோக்கி மடியவில்லை. 600 அடி உயர்ந்த விமானம் சட்டென்று கீழே இறங்கியது. அதை  மேல் நோக்கி கிளப்பி கொண்டு வந்து ஓடு தளத்தில் திருப்பி இறக்கி விடலாம் என விமானிகள் நினைதிருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்துவதற்குள் மேலே நோக்கி எழு சக்தியற்ற விமானம் கட்டிட்த்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டு விட்டது. விமானத்தின் இரு என் ஜின்களும் பழுதாகியிருந்திருக்கலாம். என்று யூகிக்கிற  அதிகாரிகள் காரணம் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன.

போயிங்க் நிறுவனத்தின் இந்த வகை விமானங்கள் பலது சிக்கலை சந்தித்துள்ளன என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிட்துள்ளனர். அதனால் போயிங்க் நிறுவனத்தில் சந்தை மதிப்பு சரிந்துள்ளது. ஆனாலும் உலகம் முழுவதிலும் பரவியுள்ள அக்கம்பெனியின் விமான்ஙகளை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது.

எல்லாம் வல்ல இறைவன் அனைத்து வகை பயணிகளையும் பாதுகாத்து அருள்வானாக!

டாடா நிறுவனத்தின் நீளும் கை

தொடர்ந்து நஷட்த்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை தூக்கிப் பிடிப்பதற்காக  டாடா நிறுவனம் அதை விலைக்கு வாங்கியிருந்தது. அடி மேல் அடியாக இந்த பெரு விபத்து நடந்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் காயம் பட்டவர்களுக்கு முழு மருத்துவ உதவி வழங்கப்படும். பாதிப்புக்குள்ளான மருத்துவ மனை கட்டிடத்தை புணரமைக்க உதவி செய்யப்படும் என டாடா நிறுவனம் அறிவித்திருக்கிறது என்றாலும் நடை பெற்ற நிகழ்வின் சோகம் அதை விட கனமாக இருக்கிறது.

நம்முடைய துல்லியமான திட்டமிடுதல்களை தாண்டி இது போன்ற் அதிர்ச்சிகரமான விபத்துக்கள் அவ்வப்போது நிக்ழ்கின்றன. 

மனிதன் கையை பிசைந்து கொண்டு நிற்கிறான்.

இது போன்ற திடீர் அதிர்வுகளை கேள்விப்படுகிற போது

·         இன்னாலில்லாஹ் சொல்ல வேண்டும்.

·         பாதிப்புக்குள்ளானோருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்

·         உதவிகளை செய்யும் சூழ்நிலை இருந்தால் உதவி செய்ய வேண்டும்.

·         அப்படி இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று வக்கணை பேசுவதை நிறுத்த வேண்டும். அது சைத்தானிய தூண்டுதலாகும்.

مُؤْمِنُ القَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إلى اللهِ مِنَ المُؤْمِنِ الضَّعِيفِ، وفي كُلٍّ خَيْرٌ. احْرِصْ علَى ما يَنْفَعُكَ، وَاسْتَعِنْ باللَّهِ وَلَا تَعْجِزْ، وإنْ أَصَابَكَ شَيءٌ، فلا تَقُلْ: لو أَنِّي فَعَلْتُ كانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ: قَدَرُ اللهِ وَما شَاءَ فَعَلَ؛ فإنَّ (لو) تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ.

الراويأبو هريرة | المحدثمسلم 

 அடுத்து

·       நமக்காக   அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரவேண்டும்.

 ஏழுவகை மரணத்திலிருந்து பெருமானார் (ஸல்) பாதுகாப்பு கோரினார்கள்

·        عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَ مِنْ سَبْعِ مَوْتَاتٍ مَوْتِ الْفَجْأَةِ وَمِنْ لَدْغِ الْحَيَّةِ وَمِنْ السَّبُعِ وَمِنْ الْحَرَقِ وَمِنْ الْغَرَقِ وَمِنْ أَنْ يَخِرَّ عَلَى شَيْءٍ أَوْ يَخِرَّ عَلَيْهِ شَيْءٌ وَمِنْ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ  - احمد – 6306

     

·        திடும் என ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு பெறும் வழிமுறைகளையும் பெருமானார் கற்றுக் கொடுத்தார்கள்.

 ·         حَدَّثَنَا أَبُو مَوْدُودٍ عَمَّنْ سَمِعَ أَبَانَ بْنَ عُثْمَانَ يَقُولُ سَمِعْتُ عُثْمَانَ يَعْنِي ابْنَ عَفَّانَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ قَالَ بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ ثَلَاثُ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ

ந்த ஹதீஸை அறிவிக்கும்  அபான் அவர்களுக்கு ஒரு திடீர் துன்பம் ஏற்பட்டது. அவரிடமிருந்து ஹதீஸை கேட்டவர் ஆச்சரியமாக பார்த்தார். நான் ஒரு கோபத்தில் இன்று அதை ஓத மறந்து விட்டேன் என்று அபான் சொன்னார்.

·         فَأَصَابَ أَبَانَ بْنَ عُثْمَانَ الْفَالِجُ فَجَعَلَ الرَّجُلُ الَّذِي سَمِعَ مِنْهُ الْحَدِيثَ يَنْظُرُ إِلَيْهِ فَقَالَ لَهُ مَا لَكَ تَنْظُرُ إِلَيَّ فَوَاللَّهِ مَا كَذَبْتُ عَلَى عُثْمَانَ وَلَا كَذَبَ عُثْمَانُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنَّ الْيَوْمَ الَّذِي أَصَابَنِي فِيهِ مَا أَصَابَنِي غَضِبْتُ فَنَسِيتُ أَنْ أَقُولَهَا

விபத்துக்கள் எதுவாக இருந்தாலும் அது கொடுமையானது தான். அனைத்து விபத்துக்களிலிருந்தும் அல்லாஹ் மனித சமூகத்த்த பாதுகாக்க வேண்டும்.

 

விமான விபத்து மிக மிக  கொடமையானது.

அதற்கு மூன்று காரணங்கள்.

ஒன்று மக்கள் சில நிமிடங்களில் உருத்தெரியாமல் அழிந்து போய்விடுகிறார்கள்.

இரண்டாவது அது அதிக மகிழ்ச்சியை தரக் கூடிய பயணத்தின் சிரமங்கள் அதிகம் இல்லாத பயணம். இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் கற்பனைகளை நிறைவேற்றுகிற ஒரு பயணம் 

அதிக மகிழ்ச்சிக்குரிய ஒரு காரியம் பெரும் துக்கத்தை தருகிற போது. அது இன்னும் கொடுமைய்யனதாகி விடுகிறது.

இன்னொரு வகையில் விமானப் பயணங்கள் தான் தற்காலத்தில் பல அசாத்தியமான காரியங்களை சாத்தியமாக்கியிருக்கிறது. ஏராளமானோர் விமானப் பயணத்தால் தான் ஹஜ் செய்ய முடிகிறது. 

அதனால் விமானப் பயணம் மக்களுக்கு நம்பிக்கையளிக்கிற பயணமாகியிருக்கிறது.   இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் மக்கள் பாதுகாப்பானது என்று நம்பியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற ஒரு பயணமாகியிருக்கிறது. அஹ்மதாபாத் விமான நிலையம் கூட கொஞ்ச நேரம் தனது சேவை நிறுத்தியிருந்தது. சற்று நேரத்தில் மீண்டும் அங்கிருந்து விமானங்கள் பறக்க தொடங்கி விட்டன.

எனவே மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிற இந்த வான் வெளிப்பயணம் தொடர்ந்து பாதுகாப்பானதாக அமைய வேண்டும். அல்லாஹ் இதை பாதுகாப்பானதாக ஆக்க வேண்டும்.  .  

 திடீர் விபத்துக்களில் கிடைக்கிற மற்றொரு பாடம்

           அல்லாஹ்வுடைய தீர்மாணம் மனிதர்களின் எல்லாவகையான கறபனைகளையும் தாண்டி செயல்படக்கூடியது என்பதை உறுதியாக இது புரிய வைக்கிறது.


மரணம் தீர்மாணிக்கப் பட்டவருக்கு வந்து சேரும்.  தற்காலத்தில் ஒவ்வொரு நிமிட்த்திலும் பல இலட்சம் பேர் வானில் பறந்து கொண்டிருக்கின்றனர். சிலர் மிக மோசமான பருவ சூழ்நிலைகளையும் மீறி பறந்து கொண்டிருக்கின்றனர்.

வானில் பறக்கிற போது வாழ்க்கைக்கும் மரணதிற்குமுள்ள தூரம் ஒரு முடியளவு தான் என்பார்கள்.

திருக்குர் ஆன் இந்த உண்மையை புரிய வைக்கிறது .

أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ] (الملك: 19).

“உங்களது தலைகளுக்கு மேல் சிறகை விரித்த படியும் சுருக்கியும் பறக்கிற பறவைகளை கவனியுங்கள். அவற்றை அல்லாஹ்வே அந்தரத்தில் தடுத்து நிறுத்துகிறான்.”

காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க பறவைகள் சிறகை விரித்து வைக்கின்றன. தேவைப்படும் போது சிறகை சுருக்கிக் கொள்கின்றன. ஆனால் இதனால் மட்டும் அவை அந்தரத்தில் மிதப்பதில்ல்ல. அல்லாஹ் அவற்றை தடுத்து வைத்திருக்கிறான் என்கிறது இந்த வசனம்.

பறவை பறப்பதற்கு ஒரு விஞ்ஞான காரணம் இருந்தாலும் அதை கடந்த அல்லாஹ்வின் தீர்மாணமே அதை வானில் நிலை பெறச் செய்கிறது என்கிறான் அல்லாஹ்.

விமானத்தில் கூட விமானம் எழும் போதும் இறங்கும் போது அதன் இறகுகளில் சில பகுதிகள் (பிளாப்ஸ) திறந்தும் மூடியும் கொள்ளும். அதை விமானம் கிளம்புவதற்கு முன் சரிபார்ப்பார்கள்.

இப்போது விபத்திற்குள்ளான விமானத்தில் விமானம் மேலே எழும்போது அது சரியாக இயங்கவில்லை என்கிறார்கள்.

மிக நீண்ட தூரம் பயணிக்க இருந்த ஒரு விமானத்தில் அது சரியாக இயங்கவில்லை எனில் இது அல்லாஹ்வின் தீர்மாணம் என்றே நாம் சமாதனப்பட்டுக்  கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.  

 

இந்த விபத்தில் பல நாட்டவரக்ள் பல மாநிலத்தவர்கள் ஒரே நேரத்தில் ஒரு நிமிடத்தில் பலியாகி இருக்கிறார்கள். எல்லோருட்டய மரணத்தையும் அல்லாஹ் நிச்சயித்து அவர்களை இங்கு கொண்டு வந்திருக்கிறான் என்பதை தவிர வேறென்ன சொல்ல?

 

கேரளாவிலிருந்து சென்னை வழியாக அஹம்தாபாத் சென்ற ஒரு இளம் நர்சு இதில் பலியாகியிருக்கிறார்.

 

அல்லாஹ் ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்க நினைப்பவர்களை பாதுக்க்கிறான்.

 

இந்த விபத்தில் விமானம் விழுந்த மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் ஹாஸ்டல் மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 10 மருத்துவ மாணவர்கள் சற்றும் எதிர்பாராத மரணத்தை சந்தித்திருக்கிறார்கள்.

50 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்,  

அதே நேரத்தில் இதே விமானத்தின் அவசரத்திற்கு பயன்படுத்தும் வழியில் 11 ஏ என்ற இருக்கையில் பயணம் செய்த 38 வயது விசுவாஷ் குமார் என்ற  பயணி தெய்வாதீனமாக தப்பி இருக்கிறார். உடன் இருந்த அவருடைய அண்ணன் உயிரிழந்து விட்டார். நான் எப்படி தப்பித்தேன் என்று எனக்கே தெரியவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

 

உண்மையில் இது பேராச்சரியமாகும். அல்லாஹ்வின் தீர்மாணத்தின் துல்லியமும் ஆகும்

 

உலகின் மிக அதிஷ்டக்காரம் மனிதராக பார்க்கப்படுகிற அவர் சுகம் பெற்று எழுந்து வந்து சொல்லும் தகவல்களுக்காக உலகம் காத்திருக்கிறது.

 

நமது பயணங்கள அனைத்தையும் அல்லாஹ் பாதுகாப்பானதாக ஆக்கியருள்வானாக

இதில் தவறு என்ன என்பது சரியாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

விமானம் சரியாக பராமரிக்கப்பட வில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

ஒரு விமானம் மேலே எழுந்த கொஞ்ச நேரத்தில் பறக்க முடியாமல் போகிறது என்றால் அதில் நிச்சயம் பராமரிப்பு அல்லது பரிசோதனையில் குறை இருக்க அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது.

இதில் மனித  தவறுகள் இருக்குமானால் நிச்சயம் அது சரி செய்யப் பட வேண்டும்.

இந்த வகை விமான்ங்கள் சரியல்ல என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. வேகமான பயணத்திற்காகவும் எரிபொருள் சிக்கனத்திற்காகவும் போயிங்க் விமானங்கள் வாங்கப்படுகின்றன என்கிறார்கள். கடந்த பல வருடங்களில் நம் நாட்டில் நடை பெற்ற விமான விபத்துக்களில் போயிங்க் ரக் விமான்ங்களே விபத்துக்குள்ளாகியிருக்கின்றன அதே போல ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களே விபத்துக்குள்ளாகி யிருக்கின்றன.

இது மிகவும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

அப்பாவி விமானப்பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய பொறுப்பு விமான நிருவனங்களுக்கும் அரசுகளுக்கும் இருக்கிறது.   

ஒரு விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு முன் விமானப் பயணி எந்த அளவு சோதனை இடப்படுகிறார் ?. ஆனால் விமானங்கள் எந்த அளவு சோதிக்கப்படுகின்றன என்ற கேள்வியை இந்த விபத்து பலமாக எழுப்பியிருக்கிறது. ?

எச்சரிக்கை

இந்த விபத்துக்கான முழு காரணம் இது வரை தெரியவில்லை என்றாலும் பறவை மோதியிருக்கலாம். லாண்டிங்க் கியர் சரியா இயங்காமல் இருக்கலாம். விமானம் தாழ்வாக பறந்த போது ஏதாவது கட்டிடத்தின் மீது மோதி இருக்கலாம். என்று காரணங்களை அலசுகிறார்கள்.

ஒரு சிறு காரணமும் எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தி விடக் கூடும் என்பதை இது காட்டுகிறது,  

வாகனங்களில் விரைகிற போது நாம்  கவனத்தில் வைக்க வேண்டும். 

ஒரு சிறு தாமதம் காற்றில் பறந்து வந்து கார் கண்ணாடியை மூடுகிற ஒரு துணி

சிறு கால்குலேசன் மிஸ்டேக். 

கார் அல்லது பைக்கின் டையர் சருகுதல் அல்லது  வெடித்தல் பெரிய விபத்தை ஏற்படுத்தி விடலாம். .

எனவே வாகங்களில் பயணிக்கிற நாம்  அனைத்து முன்னெச்செரிக்கைகளையும் கைகொள்ள வேண்டும்.

நமது இளைஞர்கள் டூவீலரில் விரைகிறார்கள். கார்களில் பறக்கிறார்கள். சாகசங்கள் செய்கிறார்கள்.  எப்போதும் விபத்து நிகழ்வதில்லை என்ற தைரியம்

ஆனால் எல்லா நேரமும் அப்படி இருக்காது.

விபத்துக்கள் நிகழ்ந்து விடுகிற போது ஏற்படுகிற பாதிப்புகள் மொத்த வாழ்வையும் கேள்விக்குள்ளாக்க கூடும். அல்லாஹ் பாதுகாக்கட்டும்.

நமது இளைஞர்களை மோட்டார் வாகனங்களில் சாகச விளையாட்டுக்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும். புரிய வைக்க வேண்டும்.

வானில் பறக்கிற பறவைகளை அல்லாஹ் தனது சக்தியால் தடுத்து நிறுத்தியிருப்பதால் நமது வாகனத்தின் சுழற்சியை அல்லாஹ் தடுத்து காக்கிறான்.   

நமது விளையாட்டு தனம் அல்லது பொறுப்பின்மையால் நாம் நமக்கே பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது மற்றவர்களுக்கும் சிரமத்தை தந்து விடக் கூடாது.

பயணத்திற்கு பாதுகாப்பான சூழ்நிலைகளை தேர்ந்தெடுப்பது முக்கியம் அவசரப்படுவதை விட.

ஆகாய மார்க்கத்தை விட தரை மார்க்கம் சிறந்த்து. கார் பயணத்தை விட ரயில் பயணம் ஆபத்து குறைந்தது. நீண்ட தூரங்கள் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதை விட பஸ் பயணம் சிறந்தது. என்பது போன்று பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.  

பயணத்தை தொடங்கும் ஓதுவதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு  அற்புதமான துஆவை கற்றுத்தந்துள்ளார்கள்.

الله أكبر، الله أكبر، الله أكبر، سُبْحانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ، اللهم إنا نسألُكَ في سفرنا هذا البرَّ والتقوى، ومن العمل ما ترضى، اللهم هون علينا سفرنا هذا واطو عنا بعده، اللهم أنت الصاحب في السفر، والخليفة في الأهل، اللهم إني أعوذ بك من وعْثاءِ السفر، وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل  

இந்த விமான விபத்தில் தங்களது உறவுகளை இழந்த அனைவருக்கும் எல்லாம் வல்ல் இறைவன் தகுந்ந்த ஆறுதலை தந்தருள்வானாக!

இனி இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க இந்த விபத்துக்கான காரணங்களை இறைவன் வெளிச்சமாக்கி வைப்பானாக!

அவற்றை புரிந்து செயல்பட சம்பந்தப்பட்டவர்களுக்கு அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

காயம்பட்டவர்களுக்கு அல்லாஹ் விரைவில் பாதிப்பில்லாத சுகமளிப்பானாக!

உலகம் முழுவதிலும் பயணம் செய்யக் கூடிய மக்களை அல்லாஹ் பாதுகாப்பானாக!

நமது பயணங்களில் அச்சடக்கத்தோடு நடந்து கொள்ள அல்லாஹ் நமக்கு தவ்பீக் செய்வானாக!

கார்ப்பரேட் நிறுவங்கள் தமது இலாப நோக்கிற்காக மக்களது உயிரோடு விளையாடி விடாமல் இருக்க இந்த விமான விபத்தை கடைசிக் காரணமாக அல்லாஹ் ஆக்கியருள்புரிவானாக!

இந்த விபத்து உலகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா இங்கிலாந்து போர்ச்சுகள் கனடா என பல நாட்டுமக்களையும் பலி கொண்டு பல நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த சோகத்தின் கனத்தை அல்லாஹ் குறைத்தருள்வானாக!

நமது பயணங்களை அல்லாஹ் பாதுகாப்பானதாக ஆக்கியருள்வானாக!  

3 comments:

  1. அனைவருக்கும் படிப்பினை இருக்கு இறைவன் அனைவரையும் காப்பாற்ற துஆ செய்வோம் ஆமின் ஆமின்

    ReplyDelete
  2. Anonymous1:50 AM

    மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ்

    ReplyDelete
  3. Anonymous4:35 AM

    மாஷாஅல்லாஹ் அருமை

    ReplyDelete