فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ * يَغْشَى النَّاسَ هَذَا عَذَابٌ أَلِيمٌ [الدخان: 10، 11].
நமது
வாழ்க்கையை ஒவ்வொரு நிலையிலும் தெளிவானதாக ஆக்கி கொள்ள நாம் முய்றசிக்க வேண்டும்.
கொள்கை
– குடும்பம்
– வியாபாரம்
– சமூக பணிகள் என அனைத்திலும் தெளிவான நடைமுறைகளை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும்.
·
எல்லாவற்றையும் அனுசரித்து போகிறோம் என்ற பெயரில் குழப்பமான கொள்கைகளில் வாழ்வது,
·
சீக்கிரம் சம்பாதிக்கும் ஆசையில் குழப்பமான வியாபரங்களில் ஈடுபடுவது.
·
தீர்மாணங்கள் ஏதும் இல்லாமல் ஏனோ தானோ வென்று குடும்பம்
நடத்துவது.
·
அரசியல் சமூக பணிகளில் தூர நோக்கின்றி குறுகிய உணர்ச்சிகளின் அடிப்படையில் செயல்படுவது ஆகிய போக்குகள் பெருகி வருகின்றன.
இது
சரி செய்யப் படாவிட்டால் வாழ்க்கை சிக்கலாகும். அதன் மதிப்பை இழக்கும். இறுதியில் ஈமானுக்கு கூட பாதிப்பாகலாம்.
காலம்
செல்லச் செல்ல தெளிவின்மை
அதிகரிக்கும்.
முஹம்மது
நபி (ஸல்) அவரக்ள் கியாமத் நாளின் நெருக்கத்தில் “துகான்” புகை மூட்டம் ஒன்று ஏற்படும் என்று எச்சரித்தார்கள்
بادِرُوا
بالأعْمالِ سِتًّا: طُلُوعَ الشَّمْسِ مِن مَغْرِبِها، أوِ الدُّخانَ، أوِ
الدَّجَّالَ، أوِ الدَّابَّةَ، أوْ خاصَّةَ أحَدِكُمْ، أوْ أمْرَ العامَّةِ.
الراوي : أبو هريرة | المحدث : مسلم
ْ خاصَّةَ أحَدِكُمِْ.- தனிப்பட்ட விவகாரங்கள்
، أوْ أمْرَ
العامَّة அல்லது பொதுவான சமூக பிரச்சனகள்
இந்த
அடையாளங்கள் வெளிப்பட்ட பிறகு இரண்டு
சூழ்நிலைகள் உருவாகும்.
ஒன்று
மக்களுடைய ஈமான் – (சீர்திருத்தம்) ஏற்றுக் கொள்ளப்படாது. அல்லது இவற்றில் சிலதுக்கு பிறகு ஈமான் கொள்ள – சீர் திருத்தம் செய்து கொள்ள வாய்ப்புக் கிடைக்காது.
சூரியன்
மேற்கிலிருந்து
வெளிப்பட்ட பிறகு புதிதாக யாருடைய ஈமானும் ஏற்றுக் கொள்ளப் படாது.
فإنَّها إذا طَلعَت مِنَ المَغربِ لا يُقْبَلُ إيمانُ كافِرٍ،
ولا تَوبةُ عاصٍ، ولا عمَلٌ صالحٌ
பூமி
வெடித்து கிளம்பி வரும் மிருகம் வெளியே வந்து மக்களிடம் பேசிய பிறகு அது முஃமின் காபிர்கள் என்று மனித சமூகத்தை பிரித்து அடையாளப் படுத்தி விடும்.
புகை,
தஜ்ஜால், வெளிப்படும் காலங்களில் ஈமானை காப்பாற்றிக் கொள்வது பெரும் சிரமத்திற்குரிய காரியமாகிவிடும்.
பிரச்சனைகள்
பெருக்கம்.
أوْ خاصَّةَ أحَدِكُمْ، أوْ أمْرَ
العامَّةِ.
தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனுடைய பிரச்சனைகள் உணவு உறைவிடம் உள்ளிட்ட பிரச்சனைகள் சிக்கலுக்குள்ளானதாகி ஈமானிய அம்சங்களில் கவனம் செலுத்த முடியாமல் திசை திருப்பி விடும்.
அது போலவே மக்களின் பொதுவிவகாரங்களும் அரசியம் சமூக சூழல் சிக்கலானதாக மாறி ஈமானில் கவனம் செலுத்தாமல் திசை திருப்பி விடும்,. (أوْ خاصَّةَ أحَدِكُمْ، أوْ أمْرَ
العامَّةِ.)
பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அடையாளங்களில் ஒன்றான் துகான் எனும் புகை பற்றித்தான் நாம் இன்று சிந்திக்கிறோம்.
துகான் என்ற தலைப்பில் திருக்குர் ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு.
அந்த அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை இரவு தோறும் ஓதி வர பெருமானார் (ஸ்ல) அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.
عن أبي رافع قال: «من قرأ الدّخان في ليلة الجمعة، أصبح مغفورا له، وزوّج من الحور
العين- رواه الدّارميّ
இது இந்த செய்தியின் முக்கியத்வத்தை பறை சாற்றுகிறது.
துகான் என்றால் என்ன ?
திருக்குர் ஆனின் விரிவுரையாளர்கள் கியாம நாளின் நெருக்கத்தில் வானத்திலிருந்து ஒரு அடர்ந்த புகை பூமியில் பரவும் அந்த புகைய முஃமின்களுக்கு ஒரு சாதராண சளியை போல இடையூறாகும். காபிர்களுக்கு கடும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் என இமாம் நவ்வி ரஹ் கூறினார்கள்
إن الدخان يأخذ بأنفاس الكفار، ويأخذ المؤمن منه
كهيئة الزكام.
இன்னும் சில அறிஞர்கள் சமூகத்தை பெருமளவில் வாட்டுகிர பஞ்சம் ஏற்படும் என்பது இதன் பொருள் என்று கூறுகிறார்கள்.
திருக்குர் ஆனிய விரிவுரையளர்களில் இன்னும் சிலர் கூறுகிறார்கள்.
புகை மூட்டம் ஏற்படுகிற போது எப்படி எதுவும் தெளிவாக தெரியாமல் போய்விடுமோ. அது போல கியாம நாளின் நெருக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்ற காரணங்கள் புரியாமல் – ஏன் ஒரு காரியத்தை ஏன் செய்கிறோம் என்பதை உணராமல் செய்து விடுவோம் அதுவே புகை மூட்டம் என்று விளக்கம் கொடுத்தார்கள்.
இன்று நமது வாழ்வு பெரும்பாலும் அப்படி மாறிவருகிறது.
கடந்த
வாரத்தில் ஒரு செய்தியை கவனித்திருப்பீர்கள்
திடீரென்
யமன் விவகாரத்தில் சவூதி அரேபியாவுக்கும் ஐக்கிய அமீரகத்திற்கும் ஒரு சண்டை வந்தது.
யமன்
நாட்டுக்கு அமீரகம் அனுப்பிய கப்பலிலிருந்த சரக்குகளை சவூதி குண்டு வீசி அழித்த்து.
முஸ்லிம்
உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிற சிக்கல்களுக்கு நடுவே இதென்னடா புது குழப்பம் என்று பலரும் திகைத்து நின்றனர்.
பொதுவான
உலக முஸ்லிம்களின் விவகாரத்தில் – முஸ்லிம் நாடுகள் ஒரு பக்கம் நிற்கிற போது சவூதியும் அமீரகமும் தனித்து நின்பதை வாடிக்கையக கொண்டிருந்தன.
திடீரென்
இவ்விரு நாடுகளும் இணைந்து கத்தார் நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தன.
இப்போது
காஸா விவகாரத்தில் முஸ்லிம் நாடுகள் ஓரணியில் நின்றன. துருக்கி ஜோர்டான் எகிபது ஆகியவை காஸா அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட போது. அதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல சவூதியும் அமீரகமும் தனித்து நின்றன.
இப்போது
அவை இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.
தங்களது
சொந்த நாடு பாதுகாப்பாக வளமாக இருக்கிற போது அந்நிய நாட்டின் அமைதிக்குலைவை ஏற்படுத்துவதில் இவர்கள் ஏன் மோதிக் கொள்கிறார்கள் என்பது சாமாணிய முஸ்லிம் ஒவ்வொருவரையும் குழப்பத்திற்கு உள்ளாக்கும்.
அதே
போல இன்னொரு நடவடிக்கையையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சூடானில் ஒரு பகுதியில் சூடானிலாந்த் என்ற ஒரு நாட்டை திடீரென இஸ்ரேல் அங்கீகரித்து அறிக்கை வெளியிடுகிறது.
இது
என்ன புது குழப்பமாக இருக்கிறதே என உலக சமுதாயம் திகைத்து நிற்கிறது.
சூடானில்
பசிதான் பெரும் பிரச்சனை என்று
உலகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது.
உலகில்
பசியால் வாழும் மக்களுக்கு உதாரணமாக சூடான் காட்டப்படுகிறது.
சூடான் என்றாலே சதைகளே இல்லாமல் ஒட்டிய வயிறுகளோடு இருக்கிற குழந்தைகளின் புகைப்படம் தான் பெரும்பாலான மக்களுக்கு நினைவுக்கு வரும்.
அங்கு
ஏராளமான உள் நாட்டு குழப்பங்கள் நிலவுகின்றன. அதில் பல இலட்சம் மக்கள் தினந்தோறும் கொல்லப் படுகிறார்கள். . ஒவ்வொரு குழப்பமும் இஸ்லாமிய குழக்களால முன் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில்
சூடானிய அரசு தீடீரென ஐக்கிய அமீரகத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளது. சூடானில் உள்ள ஆயுதக் குழக்களுக்கு அமீரகம் உதவுவதாக அது குற்றம் சாட்டுகிறது.
மே
2025 ல் சூடான் உடனான தன்னுடைய உறவுகளை முறித்துக் கொள்ளப் போவதாக சூடானில் தற்போது
ராணுவ ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிற அரசு அறிவித்த போது சாமாணிய மக்களுக்கு அது அதிர்ச்சியாக
இருந்த்து.
சூடான்
ஒரு ஏழை முஸ்லிம் நாடு, அமீரம் ஒரு பணக்கார முஸ்லிம் நாடு. அமீரகம் எந்த ஒரு பெரிய அரசியல் நகர்விலும் தங்களை
அதிகம் ஈடுபாடு காட்டிக் கொள்ளாத நாடு. அப்படி இருக்க திடீரென சூடான் அரசு அமீரகத்துடனான
உறவை முறித்த்து மட்டுமல்லாமல் 2025 மார்ச் மாதத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் அமீரகம்
சூடானில் இனப் படுகொலைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியது. சூடானில் உள்ள ஆர் எஸ் எப்
என்ற அமைப்புக்கு அமீரகம் உதவுவதாக அது கூறிவருகிறது.
இதே
போல பல இஸ்லாமிய நாடுகளிலும் அரசியல் சமூக நிலவரங்கள் மிக குழப்பமாக இருக்கின்றன.
குறிப்பாக
பாகிஸ்தான் எகிப்து பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நிலவி வரும் அரசியல் சமூக சூழல்கள் மிகவும்
அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கின்றன. இஸ்லாமின் பெயரை சொல்லிக் கொண்டு மக்களை சர்வாதிகாரம்
செய்கிற போக்கு அதிகரித்து வருகிறது.
முஸ்லிம்களின்
எதிரிகளோடு இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் அழுத்தமான தொடர்பில் இருக்கிறார்கள்.
காஸா
வில் மக்களை கொன்று குவிக்கிற இஸ்ரேலுக்கு ஆயுதங்களை சப்ளை செய்கிற கம்பனியுடன் பல
அரபு நடுகள் தொடர்பில் இருக்கின்றன.
இந்த
புகை மூட்டமான சூழலில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை தீர்மாணிப்பது – அல்லது
என்ன தான் நடக்கிறது என்று யூகிப்பது கடினமான காரியமாக இருக்கிறது.
சர்வதேச
அளவில் மட்டுமல்ல நமது சமூக அளவிலும் குடும்ப அளவிலும் கூட என்னதான் நடக்கிறது என்பதை யூகிக்க முடியாத அளவில்
காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
பெருமானார்
(ஸல்) அவர்கள் எச்சரித்த இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றான் துகான் நம்மை சூழ்ந்து
கொண்டிருக்கிறது என்றே யூகிக்க வேண்டியிருக்கிறது.
இந்த
சூழலில் உலகை சூழ்ந்து கொள்ளும் புகை மூட்ட்த்திலிருந்து நமது வாழ்வை காப்பாற்றிக்
கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நமது வாழ்வை நாம் கூடுமானவரை குழப்பத்திலிருந்து
– தெளிவின்மையிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அதற்காக
கடைபிடிக்க வேண்டிய வழிகளை அறிஞர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
துகான்
அத்தியாயம்
வாழ்க்கை
குழப்பமாக இருப்பது போல தோன்றுகிறதா துகான் அத்தியாயத்தை அதிகமாக ஓதி வருவோம். குறிப்பாக
வெள்ளிக் கிழமை இரவுகளில்
அது அல்லாஹ்வின் தரப்பிலான உதவியை நமக்கு பெற்றுத் தரும்
من قرأ حم الدخان في ليلة أصبح يستغفر له سبعون ألف
ملك.
الترمذي
சுய பரிசோதனை
நம்முடைய விருப்பங்கள் என்ன ? அவை நன்மையானவையா ? அது
அவை தேவையானதா ?
என்பதை பரிசோதிப்பதும்
அவற்றில் தேவையானதை மட்டுமே முடிவு செய்வதும் நன்மையானதை மட்டுமே தேர்ந்தெடுப்பதும்
நமது வாழ்வை தானே தெளிவானதாக ஆக்கும்.
உண்மை என்ன ?
நன்மை என்ன ?
தொடர்ந்து
குழப்பமாக வாழ்ந்து கொண்டிருக்க கூடாது.
மூஸா
நபியின் பிரார்த்தனை இந்த தொடர்பை நமக்கு புரிய வைக்கிறது.
قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي (25) وَيَسِّرْ
لِي أَمْرِي (26.
செயல்களில் மாற்றம்
சில நேரங்களில் நாம் வழக்கமாக செய்கிற செயல்களே நமது பிரச்சனைகளுக்கு காரணமாக
இருக்கலாம்.
அது மாத்திரை மருந்தாக இருந்தாலும் சரி வியாபார தொடர்புகளாக இருந்தாலும் சரி
அரசியல் கூட்டணிகளாக இருந்தாலும் சரி.
இதில் மாற்றங்களை செய்வது குழப்ப நிலையிலிருந்து தெளிவுக்கு நம்மை கொண்டு செல்லும்.
புகை பிடிப்பது போன்ற தேவையற்ற செயல்களை
நிறுத்துவது –
உடற் பயிற்சி செய்வது புத்தகம் எழுவது போன்ற
புதிய வேலைகளை செய்வது
புதிய நண்பர்கள் தொடர்பு வட்டங்களில்
இணைவது போன்றவை நமக்கு தேவையான தெளிவை தரலாம்
இமாம் பூஸுரி கஸீத்த்துல் புர்தாவில் பெருமானாரை புகழ்வதோடு பல வாழ்வியல் பாடங்களையும்
சொல்லித் தருவார். அவற்றில் ஒன்று இது
உன் இதயத்தை வழக்கமான போக்கிலிருந்து திருப்பி விடு, அதன் ஆசைகளுக்கு கட்டுப்படுவதில்
விழிப்பாக இரு! நீ அதன் வழியிலேயே சென்று கொண்டிருந்தால் – அதற்கு அதிக அதிகாரம் கொடுத்து
விட்டால் அது குருடாக்கும் அல்லது செவிடாக்கும். ஆனால் நீ மாற்றம் செய்வது என்று தீர்மாணித்தால்
அது உண் வழிக்கு வந்து விடும். பால் குடித்துக் கொண்டிருக்கிற குழந்தையை பால் குடி
மறக்க செய்ய முடிவது போல என்பார் இமாம் பூஸுரி ரஹி
فَاصْرفْ هَوَاهَا
وَحاذر انْ توَلِّيَهُ انَّ الْهَوٰى مَا توَلَّى
يُصْمِ اوْ يَصِمِ
وَالنَّفْسُ كَالطِّفْلِ انْ تهْمِلْهُ شَب عَلَى حب
الرضَاعِ وَانْ تفْطِمْهُ يَنْفَطِمِ
கடமைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது
அப்போதும் அந்த பெண் தயங்கினார். நீ பழத்தை சாப்பிட்டு பார். என்று பழத்தை எடுத்து
நீட்டினார் முல்லா.
அப்போது அந்த பெண் இல்லை நான் கடமையான நோன்பு நோற்றிருக்கிறேன் என்று கூறினார்.
உடனே முல்லாவின் முகம் மாறியது. போ
உனக்கு பழம் கிடையாது என்று கூறினார்.
அந்த பெண் ஆச்சரியமாம ஏன் திடீரென விரட்டுகிறீர்கல் என்று கேட்டார்
முல்லா சொன்னார். ரமலான் முடிந்து ஆறு
மாதம் ஆகிவிட்ட்து. அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற நீ ஆறு மாதம் தாமதிக்கிறாய்
என்றால் எனக்கு தர வேண்டிய கடனை நீ எவ்வளவு தாமதம் செய்வாய் ? போ உனக்கு கடன் தர முடியாத்
என்றார்.
குறுக்கு வழிகளை தவிர்க்க வேண்டும்
குறுக்கு வழிகளில் சைத்தான்
அமர்ந்திருக்கிறான்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment