வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 15, 2026

தொடரும் ஆணவ அரசியல்.

.سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ (1)

 இன்ஷா அல்லாஹ் இன்று இரவு மிஃராஜ் இரவாகும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்வில் நடந்த மகா அற்புதம் மிஃராஜ் நிகழ்வு.

பெருமானார் (ஸல) அவர்களது 50 வது வயதில் ஒரு ரஜ்ப் மாததின் 27 ம் நாள் இரவின் கொஞச நேரத்தில் மக்காவிலுள்ள மஸ்ஜிதுன்னபவியில் இருந்து ஜெரூசலத்தில் உள்ள மஸ்ஜித் அல் அக்ஸாவிற்கு சென்றார்கள். அங்கு இப்போது குப்பத்துஸ் ஸஃரா என்கிற பாறை பள்ளிவாசல் இருக்கிற இடத்திற்கு கீழே நபிமார்கள் அனைவரும் காத்திருக்க அவர்களுக்கு தொழ வைத்தார்கள். பின்னர் அங்கிருந்து ஜிப்ரயீல் (அலை அவர்களுடன் ஏழு வானங்களை கடந்து சித்ரத்துல் முன்தஹா எனும் பிரபஞ்சத்தின் எல்லையை அடைந்தார்கள். அதன் பிறகு அங்கிருந்து தனியாக சென்று அல்லாஹ்வை சந்தித்தார்கள். அல்லாஹ் பெருமானாரோடு பேச வேண்டிய செய்திகள் அனைத்தையும் பேசினான். பிறகு ஐ வேளை தொழுகையை கடைமையாக்கினான். அதன் பிறகு அங்கு சொர்க்கம் நரகத்தின் சில காட்சிகளை பார்த்து விட்டு பெருமானார் மக்காவிற்கு வந்து சேர்ந்தாரகள்.

திருக்குர் ஆனில் இதை பற்றி கூறும் அல் இஸ்ரா என்ற ஒரு அத்தியாயம் இருக்கிறது. சூரத்துன் நஜ்மு அத்தியாயத்திலும் இந் நிகழவு பேசப்படுகிறது.

அனைத்து ஹதீஸ் தொகுப்புக்களிலும் இஸ்ரா மிஃராஜ் பற்றி விரிவான ஹதீஸ்கள் கிடைக்கின்றன.

வரலாற்று அறிஞர்களில் பெரும்பாலோர் இந்நிகழ்வு ரஜ்ப் 27 ம் நாள் இரவு நடைபெற்றதாக கூறுகிறார்கள் .

முஸ்லிம் உலகு அதை ஏற்று ஆண்டு தோறும் ரஜப் 27 ம் நாள் இரவில் மிஃராஜ் நிகழ்வை நினைவு கூர்ந்து வருகிறது. பல முஸ்லிம் நாடுகளிலும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வரலாறை மிகவும் மேன்மை படுத்துகிற நிகழ்வு இது.

அதனால் இதை சுப்ஹானல்லாஹ் என்று ஆச்சரியக்குறியை சொல்லி இறைவன் பேச ஆரம்பிக்கிறான்.

நபித்துவம் கிடைத்து 10 வருடங்களுக்கு பிறகு ஏன் இப்படி ஒரு சந்திப்பு நடந்தது என்பது ஒரு சிந்தனைக்குரிய கேள்வியாகும்.

நபி பெருமானார் (ஸல்) அவர்கள் 10 வருட காலம் மக்காவில் பிரச்சாரம் செய்தார்கள். அதில் ஓரளவு வெற்றியே கிடைத்தது.

பெருமானாரின் 50 வயதில் அவர்களுடைய அருமை துனைவி அன்னை கதீஜா ரலி அவரக்ளும் சிறிய தந்தை அபூதாலிபும் மரணமடைந்தார்கள். அதன் பிறகு பெருமானாருக்கு மக்காவில் பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டது . எனவே தாயிப் நகரில் வசிக்கிற தம்முடைய  உறவினர்க்களின் ஆதரவை தேடி பெருமானார் அங்கு சென்றார்கள்.

தாயிப் என்பது மக்காவிற்கு தென்கிழக்கில்  67 மைல் தொலைவில் இருக்கிற ஒரு செழிப்பான ஊராகும். திராட்சை, மாதுளை, பிளம்ஸ், பீச்  உள்ளிட்ட பழங்கள் விளைகிற நிலமாகும்..

பெருமானார் (ஸல்) அவர்கள் அங்கு சென்றதில் அவர்கள் உறவுக்கார்கள் என்பதை தாண்டி ஒரு அரசியல் கண்ணோட்டமும் கலந்திருந்தாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தாயிபில் உள்ள கஜ்வான் மலைப்பகுதியில் மக்காவின் செல்வந்தரக்ள் பலருக்கும் கோடைகால பண்ணை வீடுகள் இருந்தன, தாயிப் நகர மக்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு விட்டால் மக்காவின் கவனத்தை ஈர்க்க அது ஒரு வாய்ப்பாக அமையலாம் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கருதினார்கள்.

தாயிப் நகர மக்கள் சகீப் குடும்பத்தினர் என்று அறியப்பட்டனர்.

பொதுவாக அரபுகள் விருந்தினர்களை உபசரிப்பதில் பெயர் பெற்றவர்கள். ஆனால் தாயிப் நகர மக்கள் பெருமானாரை உபசரிக்க வில்லை.மதிக்க கூட தயாராக இருக்க வில்லை.

தனது வளர்ப்பு மகன் ஜைது பின் ஹாரிதா ரலி அவர்களுடன் மட்டுமே அங்கு சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தாயிபின் தலைவர்கள் பெருமானார் அவர்களின் கோரிக்கைகளை கேட்க கூட தயாராக இருக்கவில்லை. அவர்களிடம் மிக மோசமான அனுபவம் பெருமானாருக்கு நேர்ந்தது.

அதிகார செல்வாக்கில் ஆணவத்தின் உச்சத்தில் அவர்கள் பெருமானாரிடம் பேசினார்கள்.

فعمد إلى جماعة من أشراف ثقيف ودعاهم إلى الله فقال واحد منهم: أما وجد الله أحداً يرسله غيرك؟ وقال الآخر: والله لا أكلمك أبداً لأنك إن كنت رسولاً من الله كما تقول لأنت أعظم خطراً من أن أرد عليك الكلام ولئن كنت تكذب على الله ما ينبغي لي أن أكلمك،    

அவர்களிடம் தனக்குள்ள உறவு முறையை சொல்லி பெருமானார் ஆதரவு தேடிப் பார்த்தார்கள். ஆதரவளிப்பதற்கு பதிலாக மக்காவின் காபிர்கள் கூட செய்யாத அக்கிரமத்தை அவர்கள் செய்தார்கள்.

பெருமானாரை தங்களது ஊரிலிருந்து விரைந்து வெளியேற்ற திட்டமிட்டு பெருமானரின் மீது கற்களை வீசுமாறு தங்களுடைய சிறுவர்களை தூண்டி விட்டார்கள்.

மரியாதைக்குரிய ஒரு முதியவரை இப்படி நடத்துவதற்கு வெட்கப்படாத அவர்கள் இரத்தம் வழிந்தோட பெருமானார் (ஸல்) அவரக்ள் நடக்க சிரமப்படுவதை பார்த்து சிரித்து மகிழ்ந்தார்கள்\

உலகில் தங்களது அரசியல் செல்வாக்கை பற்றிய அகந்தையில் வாழ்கிறவர்கள் காலந் தோறும் அப்படித்தான் இருக்கிறார்கள்

அன்றைய பிர் அவ்ன்களிலிருந்து இன்றைய டிரம்ப் வரைக்கும்.

தங்களுக்கு தோன்றியதை அவர்கள் நியாயம் என்று கற்பிக்கிறார்கள். பெருமானாரின் மீது கல்லெறிந்த்தை போன்ற எத்தகைய கொடூர அநீதிக்கும் அவர்கள் கூச்சமின்றி தயாராகிறார்கள். அதை தடுக்க முடியாமல் உலகம் வேடிக்கை பார்க்கிறது.

அமெரிக்க ஒரு பெரிய நாடு, எப்போதும் ஒரு ஆசிரியரை போல உலகத்திற்கு பாடம் நடத்துகிற வல்லரசு.

ஆனால் அது ஜனவரி 3 ம் தேதி அதிகாலை 4 மணியளவில் வெனிசுலா என்ற நாட்டின் அதிபரின் வீட்டிற்குள்  ஒரு கொள்ளை கூட்டம் போல நுழைந்து அதிபர் நிகலோஸ் மதரா வையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கடத்தியது. வெனின்சுலா நாடு தென் அமெரிக்கா கண்டத்தில் கரீபியன் கடல் ஓரத்தில் இருக்கிற எண்ணெய வளம் நிறைந்த நாடாகும்.

உலகில் எண்ணை வளம் நிறைந்த முதல் மூன்று நாடுகளில் வெனின்சுலா முதல் இடத்தில் இருக்கிறது.

இரண்டாவது இட்த்தில் சவூதி அரேபியாவும்

மூன்றாவது இடத்தில் ஈரானும் இருக்கின்றன.

அதிபரை கைப்பற்றியை அடுத்த நாள் வெனின்சுலாவின் எண்ணை வளங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் அறிவிக்கிறார். வெனின்சுலாவில் எண்ணை எடுப்பதற்கு அமெரிக்க கம்பனிகளை அவர் நியமிக்கிறார்.

என்ன நடக்கிறது என்று உலக நாடுகள் கனிப்பதற்குள்ளாக காரியங்கள் கச்சிதமாக அரங்கேறி விடுகின்றன.

அமெரிக்க அதிபர்ரை எந்த வகையில் சேர்ப்ப்து என்பது குழப்பமாக இருக்கிறது

அடுத்த நாள்  விக்கீபிடியா போல ஒரு அடையாள் அட்டையை தானே வெளியிட்ட அவர் அதில் தன்னை வெனின்சுலாவின் தற்போதைய அதிபர் என்று எழுதி வைத்துள்ளார்.  .

இது வரை வெனின்சுலாவின் எண்ணை வளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்த ரஷ்யாவாலும்  சீனாவாலும் கூட   ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதில் ரஷ்யா சீனாவின் இயலாமை அப்பட்டமாக வெளிப்பட்டது.

சீனாவின் தொழி நுட்பத்திற்கு இன்று உலகமே அடிமையாக இருக்கிறது என்று போற்றப்படுகிறது. ஆனால் அதன்  தொழில் நுட்பம் என்ன செய்கிறது என்று இப்போது கேள்வி எடுப்ப படுகிறது.

ஏனெனில் வெனின்சுலா அதிபரை கடத்திச் செல்ல அமெரிக்காவின்  20 ராணுவ வீர்ர்கள் மட்டுமே சென்றுள்ளனர். அதில்  ஒருவருக்கு கூட  காயம் எதுவும் இல்லை.

அமெரிக்க அதன் சகதியை மிக துல்லியமாக உலகிற்கு காட்டி விட்டது.

உலகின் எந்த தலைவரையும் ஒரு பூக்கூடையை தூக்குவது போல தன்னிட்த்திற்கு தூக்கி செல்ல முடியும் என்று தனது நடவடிக்கையால அது காட்டி விட்டது.

அது தனது திட்ட்த்தை முழுவதுமாக உலகிற்கு தெரிவித்து விட்டது. உலகின் பெட்ரோல் முழுவதும் அதன் கை வசத்தில் வேண்டும் என்பதே அது.

காரணம் இன்றைய மொத்த உலகும் பெட்ரோலை சார்ந்திருக்கிறது. நேரடியாக சிறியதும் பெரியதுமான வாகனங்களுக்கு உபயோகிக்கிற பெட்ரோல் மட்டுமல்லாது. உணவு பொருட்கள் தூய்மைப் பொருட்கள் பசை போன்ற பொருட்கள் கலர் பொருட்கள் என ஏராளமான அத்தியாவசியப் பொருட்கள் இப்போது மறைமுகமாக பெட்ரோலிய பொருட்களாக இருக்கின்றன.

என்வே பெட்ரோல் என்பது தான் இப்போதைக்கு உலகின் மிகப் பெரிய மூல தனம்

அதை தான் அமெரிக்க முற்றிலுமாக ஆக்ரமிக்க நினைக்கிறது.

டென்மார்க்கின் சொந்த நிலமான கிரீண்லாண்டை நான் எடுத்துக் கொள்வேன் என்று கொக்கரிக்கிறார் அமெரிக்க அதிபர்.

அதுவும் எண்ணை வளம் மிகுந்த பிரதேசமாகும்.

தங்களது நாட்டின் 51 வது மாநிலமாக கனடாவை ஆக்கி கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.

அது உலகின் எண்ண வளம் மிக்க நான்காவது நாடாகும்

வெறும் பேச்சாக இல்லாமல் அமெரிக்க அதிபர் தனது திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக செயல் படுத்திக் கொண்டிருக்கிறார்.

இப்போது ஈரான் மீது போர் தொடுப்பேன் என மும்முரமாக இருக்கிறார்.

அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்தால் ஈரான் அமெரிக்காவை தாக்க முடியாது ,ஏனெனில் அது வெகு தூரத்தில் இருக்கிறது.

அதனால் பக்கதில் இருக்கிற அமெரிக்க படை தளங்களை தான் ஈரானால் தாக்க முடியும் . அந்த படைத்தளங்கள் அனைத்தும் கத்தார், சவூதி, அமீரமகம் குவைத் உள்ளிட்ட  அரபு நாடுகளில் இருக்கின்றன.

அப்படியானால் அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுப்பது அரபு நாடுகள் அனைத்தையும் ஆபத்தில் இழுத்து விடுகிறது என்று பொருளாகும்.

அது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிர பல கோடி மக்களை துயரத்தில் ஆழ்த்துவாதாகும்.

(அல்லாஹ் பாதுகாப்பானாக)

இந்தியாவும் மற்ற சில நாடுகளும் தங்களுடைய மக்கள் ஈரானை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளன. இதுவும் பல நோக்கங்களுக்காக வெளிநாடு சென்றுள்ள மக்களுக்கு பெரும் துயர் அளிக்கிற நடவடிக்கை ஆகும்.

உலகின் ஒரு பாதி நிலப்பரப்பை சிக்கலுக்குள்ளாக்குகிற தீய திட்டத்தை அமெரிக்க எதற்காக செயல்படுத்துகிறது.>

வேறென்ன பெட்ரோலுக்காக த்தான்,

ஈரான் உலகின் மூன்றாவது பெட்ரோலிய வளமுள்ள நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஈரானில் ஜனநாயக் இல்லை என்று அமெரிக்கா கூறுகிறது. இத்தனை ஆண்டுகளாக அங்கிருக்கிற அரசாங்கத்திற்கு எதிராக அங்குள்ள மக்களை ஒரு ரவுடியை போல தூண்டிவிடுகிறார் அமெரிக்க் அதிபர். நிறுவன்ங்களை கைப்பற்றுமாறு ஆலோசனைகளை அனுப்புகிறார்.

ஈரான் இப்போது வெளியிலிருந்து மூழ்கிற போர் சூழல் ஒரு புரமாகவும் உள்ளிருந்து மூட்டப்பட்டிருக்கிற கலவரச் சூழல் மறு பக்கமுமாக இப்போது திண்டாடிக் கொண்டிருக்கிறது.

ஈரான் 1979 முதல் அமெரிக்காவிற்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிற நாடாகும். இப்போதைய நிலை போல அங்கு இதற்கு முன் போராட்டம் எதுவும் எழுந்த்தில்லை.

இப்போதைய போர்ட்டாங்களில் 12 யிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு போலித்தனமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தூண்டி விடப்படுகின்றன்.

ஈரானில் ஜன்நாயகம் இல்லை என்று நம்முடைய நாட்டில் கூட சில செய்தி சேனல்க முதலைக் கண்ணீர் வடிக்கின்றன.

நியாயமாக யோசித்தால் ஈரானுக்கு அருகில் இருக்கிற சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளில் இருப்பதை விட ஈரானில் ஜனநாயகம்அதிகமாக இருக்கிறது .

பெண் சுதந்திரம் சவூதி அமீரகத்தில் இருப்பதை விட அதிகமாக இருக்கிறது.

பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கும் சட்டம் சவூதி அரேபியாவில் 2015 ல் நடைமுறைக்கு வந்தது.  1979 லேயே  ஈரானில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப் பட்டு விட்டது.

கருத்துச் சுதர்ந்திரமும் அண்டை நாடுகளை விட  ஈரானில்  அதிகமாகவே இருக்கிறது.

ஈரானிய சினிமாக்கள் உலக சினிமாக்களில் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. சர்வதேச  சினிமா அரங்குகளில் ஈரானிய சினிமாக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.

அந்த சினிமாக்களில் இன்றைய ஈரானிய சமூக நிலை , அரசி மீதான் விமர்சனம் சமூகத்தின் மீதான விமர்சனம் அனைத்தும் முன் வைக்கப்படுகின்றன.

ஈரானில் பெண்கள் ஒடுக்கப்படுவதாக தொட்ர்ந்து மேற்கத்திய ஊடகங்கள் பழி சொல்வதுண்டு. ஆனால் சமீபத்திய சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கு பிறகு சுய செய்தியாளர்கள் பலரும் நேரில் ஈரானுக்கு சென்று அங்குள்ள பெண்களின் சுத்ந்திரமான நிலைப்பாட்டை வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்கள்.

ஈரானில் புரட்சி நடைபெற்ற போது அமெரிக்க் தூதரகத்தை முற்றுகை யிட்டு ஒரு அங்கிருந்தவர்களை சிறை பிடித்தது. அந்த புரட்சிக் குழ்வுக்கு தலைமை தாங்கியது மஃசூம் இப்திகார் என்ற  ஒரு பெண்மணி  ஆவார்.

அவர் பிற்காலத்தில் ஈரானிய அமைச்சர்களில் ஒருவ்ர் ஆனார்.

அதே போல ஈரானிய பாராளுமன்றத்தில் ஏராளமான பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்திய போது ஒரு அரசு செய்தி நிறுவனம் தாக்கப் பட்ட்து. அப்போது ஒரு பெண் செய்தியாளர் அச்சப்படாமல் செய்தி வாசித்த்து உலகம் முழுக்க பிரபலமானது. .

ஈரான் ஒரு ஷியா நாடு என்றாலும் அதன் பாராளுமன்றத்தில் சன்னி பிரிவு எம்பிக்கள் இருக்கிறார்கள். கிருத்துவர்களுக்கும்  யூதர்களுக்கும் கூட நாடாளுமன்ற பிரதிநிதிகள் உண்டு.

இவ்வளவு இருந்தும் ஈரானில் ஜனநாயகம் இல்லை என்று கதை கட்டி விடுவதில் அமெரிக்கா குறியாக இருக்கிறது/

ஈரானில் சில துறைகள் வளர்ச்சியடைவில்லை என்பது எதார்த்தம் ஆமால் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் நீண்ட கால தடையே அதற்கு காரணம் என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

எனவே எந்த நியாயமும் இல்லாமல் பொய்யான காரணங்களை சொல்லி அமெரிக்கா இப்போது ஈரானை ஆக்ரமிக்க நினைக்கிறது.

இது அமெரிக்காவிற்கு வாடிக்கையான ஒன்று தான். அமெரிக்க கடந்த கால வரலாற்றில் 400 தடவை அடுத்த நாடுகளை ஆக்ரமிக்க முயற்சித்திருக்கிறது.

1961 ல் காங்கோ ஜனநாயகக் குடியரசின் முதல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி- பாட்ரிஸ் லுமும்பா (1925-1961) வை அமரிக்காவின் சி ஐ ஏ அமைப்பு கடத்தி கொலை செய்தது. அவரது உடலை ஆசிட்டில் மூழ்கடித்து சிதைத்தார்கள்.  அப்போது பெல்ஜியம் நாடு இதற்கு துணை போனது.

அவரது படுகொலையின் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, பெல்ஜியம் லுமும்பாவின் பற்களில் ஒன்றைத் திருப்பிக் கொடுத்தது

ஆப்ரிக்க மக்களின் எழுச்சியை தடுத்தாக வேண்டும் என்ற வெறியில் அமெரிக்கா செயல் பட்டது

ஆனால் அவரது படுகொலை ஆப்ரிக்க மக்களின் எழுச்சிக்கு வழிகோலியது என்று வரலாறு கூறுகிறது.

லுமும்பா கொல்லப்பட்ட போது இப்போது நடந்த்து போலத்தான் கேட்பார் யாரும் இருக்கவில்லை. .

அமெரிக்காவை தொடர்ந்து எதிர்ந்து வந்த கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய 1959ல் இருந்து 2006 வரை அமெரிக்க 634 தடவை முயற்சித்தது என்கிறார் கியூபா உளவுத் துறை ஆய்வாளர். பாபியன் எஸ்கலண்டே, கணக்க் கூட்டிப் பார்த்தால் ஒர் மாதத்திற்கு ஒரு  தடவைக்கும் மேல் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இது போலத்தான் பயங்கர வாத ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்ற பொய்யான குற்றச் சாட்டை சொல்லி சதாம் ஹுசைனை அமெரிக்கா கொன்றது. அதே போல தனது நாட்டுக்கு பெரும் வளம் சேர்த்து அமெரிக்க டாலரை ஒப்புக் கொள்ல முடியாது என்று சொன்ன முஅம்மர் அல் கடாபியையை அமெரிக்கா கொன்றது.

அமெரிக்கவின் இந்த தொடர் ஆணவ வெறிச் செயல் அவதூறுகளின் துனை யோடு வேடிக்கை பார்க்கும் உலக் நாடுகளின் ஆசியோடு இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்க நினைத்தால் இப்போது ரஷ்ய அதிபர் புடீனை கூட கடத்த முடியும்!

அவரையும் மக்கள் நடுவே நிறுத்தை  கொலை செய்யவும் முடியும்

இப்போது ஈரான் எரிமலையில் விளிம்பில் நிற்கிறது.

இனி வரும் காலங்களில் அமெரிக்கா ஈரானில் மிக மோசமான தக்குதல்கள்ள நடத்தலாம். (அல்லாஹ் பாதுகாப்பானாக)

ஈரான் இதை எதிர் கொள்ள முடியாமல் போகலாம். இதற்கு முன் தப்பி ஓடியது போல ஷியா மதத் தலைவர் ரஷ்யாவுக்கோ பிரான்ஸுக்கோ தப்பிச் செல்ல்லாம்.

ஒரு வேலை ஈரான் தற்காலிமாகாக தப்பித்தாலும் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது ஒரு பெரும் கேள்விக்குரியாக இருக்கிறது.

அமெரிக்காவின் வீருப்பத்திற்கு எதிராக உலகத்தால் ஒன்றும் செய்யமுடியாது என்ற சூழல் தெளிவாக தெரிகிறது.

ஒரு வேலை அமெரிக்கா வெளிப்படையாக தோற்றாலும் கூட அந்ந்நடுகளுக்குள் வஞ்சகமாக தனது கருத்துக்களை திணித்து விடுகிறது.

கொரிய யுத்த்தில் அமெரிக்கா தலையிட்டு வெற்றி பெற்றது கொரியாவை இரண்டாக்கியது.

1975 ஆண்டு நடைபெற்ற  வியட்நாம் யுத்த்தில்  அமெரிக்க தோற்றது.

ஆனால் இப்போது வியட்ந்நாம் அமெரிக்க வீருப்பங்களை செயல் படுத்தும் நாடாக மாறியிருக்கிறது.

இது ஒரு காலகட்டத்தின் போக்கு

உண்மைக்கு மாற்றமாக , நியாயத்திற்கு எதிராக, நன்மைக்கு முரணாக அமெரிக்க மேற்கத்திய கலாச்சாரத்தின் வழியாக உலக நாடுகள் மீது தொடர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அமெரிக்கா ஒன்றை விரும்பினால் உலக் மக்கள் அதை விரும்புகிறார்கள்.

அமெரிக்க ஒன்றை வெறுத்தால் உலக மக்கள் அதை எதிர்க்கிறார்கள்.

மேற்கத்திய கலாச்சாரத்தை அதற்கு நேர் எதிரான அரபு நாடுகள் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

ஒரு நூற்றாண்டாக இது தொடர்கிறது.  

இது எந்த அளவில் வளர்ச்சியடைது நிற்கிறது என்றால்

இனி அமெரிக்கா தோற்கும் என்பது ஒரு அர்த்தமற்ற பேச்சு என்று சிலர் கூறும் அளவு நிலை உருவாகியிருக்கிறது.

ரஷ்யா சீனா மற்ற ஐரோப்பிய நாடுகளின் நிலை ஒரு கேலிப்பொருளாகவே இருக்கப் போகிறது என்கிறார்கள் அவர்கள்.

அமெரிக்காவின் இந்த ஆணவ அரசியலை தடுத்து நிறுத்த எல்லாம் வல்ல இறைவன் நீதியை நிலைநாட்டும் ஒரு தலைவரை உலகுக்கு தர வேண்டும்.

அதுவரை பொருந்திருந்து தான் ஆகவேண்டும்.

அதுவரை அரசியல் ரீதியாக நாம் பலவீனமடைந்தாலும் ஆன்மீக ரீதியில் நாம் பலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

لتتَّبعنَّ سَننَ من كانَ قبلَكم حذو القُذَّةِ بالقُذَّةِ حتَّى لو دخلوا جحرَ ضبٍّ لدخلتُموه. قالوا: اليَهودُ والنَّصارى؟ قالَ: فمَن.

இன்றைய அரசியல் சூழலில் முஸ்லிம் அறிஞர்கள் நமது பலவீனத்தை புரிந்து கொண்டு நமது ஈமானையும் இஸ்லாமையும் பாதுகாத்துக் கொள்ல ஒரு வழி சொல்கிறார்கள்.

பழையதை நிலை நிறுத்துவோம் ; புதீயதாய் எதையும் செய்யாமல் இருப்போம்.

என்கிறார்கள்.

மார்க்கம், தனிப் பட்ட வாழ்வியல் முறைகள்,.சமூக அரங்குகள் அரசியல் நடைமுறைகள் அனைத்திலும் பாரம்பரியத்தை பற்றி நிற்பதே இந்த ஆணவ அரசியல் வெள்ளத்தை எதிர் கொண்டு தப்பிப்பதற்கான வழி என்று அவரக்ள் அடையாளப்படுத்துகிறார்கள்.

முஸ்லிம்களுக்கு மிஃராஜின் வரலாறும் ஒரு நம்பிக்கை தருகிறது.

தாயிப் நகரத்து  ஆணவப் பேர்வழிகளின் கொடுமையு சிரிப்பும்   அதிக நாள் நீடிக்க வில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பரிதாப நிலை அதிக காலம் நிலைக்கவில்லை.

அல்லாஹ் மூன்றாண்டுகளுக்குள் பெருமானாருக்கு மதீனாவில் மதிப்பு மிகு மாற்று ஏற்பாடுகளை கொடுத்தான் அந்த வசதிகள் தானாக அவரை தேடி வந்தனர். அதன் அச்சாரமாகத்தான் மிஃராஜ் நிகழ்வு அமைந்த்து.

ஒரு அரசியல் ஆதரவை தேடி பெருமானார் (ஸல்) அவர்கள் தாயிப் நகருக்கு சென்ற பயணம் வெற்றி பெறாமல் போன போது அல்லாஹ் தன் தரப்பிலிருந்து பெருமானாருக்கு ஏற்பாடு செய்த மிஃராஜ் பயணம் அவரது வெற்றிப் பயணத்தை குறிக்கும் ஒரு அடையாளமாக அமைந்த்து.

இந்த மிஃராஜுடைய நாள் அது போல ஒரு அருமருந்தாக அமையட்டும்.

   

Thursday, January 08, 2026

மாற்றம் காண்பதே சிறப்பான வாழ்வு

 வாழ்க்கை ஒரே போங்கில் இருப்பதில்லை.

நம்மிடமிருந்து எத்தகைய குறைகள் நிகழ்ந்து விட்டிருந்தாலும் மாற்றத்திற்கு ஆசை பட்டு முயற்சி செய்வோம் என்றால் நிச்சயமக உயரலாம்.

ஹிஜ்ரீ 2 ம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைநேசர் புழை பின் இயாழ் ரஹ் ஒரு கொள்ளைக்காரராக இருந்தார். ஈரானுக்கும் துர்க்மினிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரதேசம் அவரது கொள்ளை ஆளுமை செலுத்துமிடமாக இருந்தது. மக்கள் அவரை பயந்து இரவு நேரத்தில் பயணம் செய்ய மாட்டார்கள். ஒரு நாள் அவர் ஆசைப்பட்ட ஒரு பெண் மணியை அடைய அவளது வீட்டுச் சுவர் ஏறிக் குதித்தார். அப்போது அந்த பெண்மணி ஓதிக் கொண்டிருந்த வசனம் அவரது காதில் விழுந்தது.

ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله» قال: يارب قد آن 

அவர் அங்கிருந்து திரும்பினார். வாழ்க்கை வேறு வழியில் திரும்பியது.

மக்களை அச்சுறுத்தும் மனிதராக இருந்த அவர் திருந்திய பிறகு மக்களின் நேசத்திற்குரிய அறிஞராக ஆனார்.

அவரிடமிருந்து ஏராளமானோர் கல்வியறிவு பெற்றனர். அந்த பட்டியலை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

روى عنه الثوري وابن عيينة والشافعي وابن المبارك والحميدي ويحيى القطان وعبد الرحمن بن مهدي وقتيبة بن سعيد وبشر الحافي.

இமாம்களான  ஷாபி, சுப்யான் அத்தவ்ரீ. அப்துல்லாஹ் பின் முபாரக், இப்னு உயைனா , யஹ்ய அல் கத்தான். குதைபா பின் ஸஈது, பிஷ்ருல் ஹாபி (ரஹ்)  போன்ற பெருமக்கள் அவரிடம் பாடம் கேட்டனர்.

அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹி கூறுவார் என் பார்வையில் இந்த பூமியின் மேற்பரப்பில் இப்போது புழைலை விட சிறந்தவர் யாருமில்லை.

قال ابن المبارك: «ما بقى على ظهر الأرض عندي أفضل من فضيل بن عياض

புழைல் ரஹ்  அறிஞரானது மட்டுமல்ல தலை சிற்ந்த இறைநேசராக ஆகி மக்கள் அல்லாஹ்வின் அஞ்சி வாழும் வழியை சிறப்பாக கற்றுக் கொடுத்தார் . அவரது உபதேசங்கள் ஆன்மீக உலகில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கின்றன.

قدر ما يصغر الذنب عندك يعظم عند الله، وبقدر ما يعظم عندك يصغر عند الله.

நீ பாவங்களை சாதாரணமாக நினைத்தால் அல்லாஹ் அதை பெரிதாக கருதுவான். நீ பாவங்களை பெரிதாக நினைத்தால் அல்லாஹ் அதை சிறிதாக கருதுவான்.

العمل لأجل الناس هو الشرك

மக்களுக்கு காட்டுவதற்காக நற்காரியங்களை செய்வது ஷிர்க் ஆகும்.

إني لأعصى االله، فأعرف ذلك في خُلق حماري وخادمي.

நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் போது அதன் விளைவுகளை என் கழுதையின் குணத்திலும் பணியாளரின் குணத்திலும் பார்க்கிறேன்.

 இது போன்ற அவருடைய கருத்துக்கள் ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

எனவே தீயவர்கள் தீயவர்களாகவே இருப்பதில்லை. நல்லவர்களாக மாறி நாதாக்களாக உயர்வது உண்டு.

அந்த வகையில் மிக வித்தியான ஒரு வரலாற்றுக்கு சொந்த்தக் காரர் தான்  

عبد الله بن سعد بن أبي السرح

 

இப்னு அபீ ஸரஹ் என்று சுருக்கமாக அவர் அழைக்கப்படுவதுண்டு.

 இரண்டு முறை அவரது வரலாறு பெரும் சிக்கல்களை சந்தித்த்து. இரண்டு முறையும் அவர் மீண்டு வந்தார். பிந்தைய காலத்தில் அவரது செயல்பாடு மகத்தானதாக இருந்தது.

 இஸ்லாமிற்கு மிக பயனளித்தது. அவரது வாழ்வையும் உன்னதமாக்கியது.

 ஒரு இடை நிலையில் அவரது வராலாற்றை படிப்பவர்கள் அவரை ஒரு வில்லனாக பார்ப்பார்கள். அவரது முழு வரலாற்றையும் வாசிக்கிற போது அவரது வரலாற்றில் இருக்கிற வியப்பிற்குரிய அம்சங்களை காண்பார்கள்/

 இப்னு அபீ ஸரஹ், குறைஷி குலத்தை சார்ந்தவர். உஸ்மான் ரல் அவர்களின் பால் குடிச் சகோதரர். தனது 30 வது வயதில் ஹிஜ்ரீ 6 ம் ஆண்டு  இஸ்லாமை தழுவி மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார். சிறப்பாக நகர்ந்து கொண்டிருந்தது அவரது புதிய வாழ்க்கை. பெருமானார் (ஸ்ல) அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். எழுதப் படிக்க தெரிந்த்தவராக இருந்த்தால் அவரை வஹி எழுதும் பணியில் பெருமானார் நியமித்தார்கள்.

இதனால் அவரது பெருமை அதிகரித்தது. பெருமானாருக்கு மாற்றமாக நடந்தார். இஸ்லாத்த்திலிருருந்து வெளியேறி மக்காவிற்கே திரும்பிச் சென்று விட்டார்.

 

அங்கு சென்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக அவர் செய்த பிரச்சாரம் கடுமையாக இருந்தது. இஸ்லாமின் அடிப்படைகளில் சந்தேகத்தை எழுப்புவதாகவும் பெருமானாரை விட தன்னை பெரிய மேதையாக காட்டிக் கொள்வதாகவும் இருந்தது. அவரால் ஏற்பட்ட குழப்பங்களின் கனம் கருதி மக்கா வெற்றியின் போது அவருக்கு மன்னிப்பு கிடையாது அவர் கஃபாவின் திரைச் சீலையை பிடித்துக் கொண்டு நின்றாலும் அவரை கொன்று விடுங்கள் என்றார்கள்.

 

கலிமா சொல்லி முஸ்லிமாகி வஹியின் எழுத்தராக இருந்தவருக்கு ஏற்பட்ட நிலையை பாருங்கள். மக்காவின் மக்கள் அனைவரையும் மன்னித்த பெருமானார்  அவரை மன்னிக்க தயாராக இருக்க வில்லை.

 ஆனால் அவர் உஸ்மான் ரலி அவரக்ளின் வீட்டில் மறைந்து கொண்டார். உஸ்மான்  ரலி அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு பெருமானாரிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே இவரிடம் பைஅத் பெறுங்கள் என்று மூன்று முறை கேட்டார். மூன்று முறையும் அவர்ர ஏறிட்டு பார்த்த பெருமானார் . அவரிடம் பை அத் பெறவில்லை. நான்காவது முற்ற உஸ்மான் ரலி அவரக்ள் கேட்டுக் கொண்ட போது பெருமானார் (ஸல்) அவர்கள் இப்னு அபீ ஸரஹிடம் பைஅத்தை பெற்றுக் கொண்டார்கள்.

அதன் பிறகு பெருமானார் (ஸல் ) அவர்கள் சொன்ன வார்த்தை மிக முக்கியமானது. வரலாறு ஒரு மனிதருக்கு எப்படி எல்லாம் வாய்ப்புக்களை வழங்க கூடியது என்பதற்கு சாட்சியானது.

 இப்னு அபீ ஷரஹுக்கு பை அத் செய்து கொடுத்த பிறகு தனது தோழர்களை பார்த்து திரும்பிய நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் “ உங்களில் விழிப்புணர்வுள்ளவர் எவரும் இல்லையா? நான் மூன்று முறை மறுத்து தாமதித்த நேரத்தில் உங்களில் ஒருவர் அவரை வெட்டிப் போட்டிருக்க கூடாதா என்று கேட்டார்கள்.

 பெருமானார் (ஸல்) அவர்களின் நாவிலிருந்து வந்த அசாதாரணமான வார்த்தை இது. திகைத்து போன தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களுக்கு கண்களால் ஒரு ஜாடை காட்டியிருக்க கூடாதா என்று கேட்டார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ ஒரு நபி கண்களால சதி செய்பவராக இருக்க கூடாது என்றார்கள்.

இப்படி நூலிழைல் தப்பினார் இப்னு அபீ ஸரஹ் (ரலி).

 عَنْ سَعْد بن أبي وقَّاص قَالَ : لَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ أَمَّنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ إِلَّا أَرْبَعَةَ نَفَرٍ وَامْرَأَتَيْنِ وَسَمَّاهُمْ وَابْنُ أَبِي سَرْحٍ ، قَالَ : وَأَمَّا ابْنُ أَبِي سَرْحٍ فَإِنَّهُ اخْتَبَأَ عِنْدَ عُثْمَانَ بْنِ عَفَّانَ فَلَمَّا دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ إِلَى الْبَيْعَةِ جَاءَ بِهِ حَتَّى أَوْقَفَهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ بَايِعْ عَبْدَ اللَّهِ فَرَفَعَ رَأْسَهُ فَنَظَرَ إِلَيْهِ ثَلَاثًا كُلُّ ذَلِكَ يَأْبَى فَبَايَعَهُ بَعْدَ ثَلَاثٍ ثُمَّ أَقْبَلَ عَلَى أَصْحَابِهِ فَقَالَ ( أَمَا كَانَ فِيكُمْ رَجُلٌ رَشِيدٌ يَقُومُ إِلَى هَذَا حَيْثُ رَآنِي كَفَفْتُ يَدِي عَنْ بَيْعَتِهِ فَيَقْتُلُهُ ) فَقَالُوا : مَا نَدْرِي يَا رَسُولَ اللَّهِ مَا فِي نَفْسِكَ أَلَا أَوْمَأْتَ إِلَيْنَا بِعَيْنِكَ قَالَ ( إِنَّهُ لَا يَنْبَغِي لِنَبِيٍّ أَنْ تَكُونَ لَهُ خَائِنَةُ الْأَعْيُنِ -رواه النسائي  وأبو داود

 இதன் பிறகு குற்ற உணர்ச்சியினால் பெருமானார் (ஸல்) அவர்களை நேரிட்டு பார்ப்பதை அவர் தவிர்த்தார் . எங்காவது எதிர்பட நேர்ந்தால் சலாம் மட்டும் செல்லுவார். முகத்தை காட்ட மாட்டார்.

 தன் உறவுகளை பெரிதும் மதித்த உஸ்மான் ரலி அவர்கள் இதை பற்றியும் பெருமானாரிடம் எடுத்து கூறி தன்னுடைய பால்குடி சகோதரருக்கு உதவினார்கள், அதன் பிறகு அவர் சகஜமானார்.  

 قال عثمان بن عفان للنبي محمد: بأبي أنتَ وأمي، لو ترى أبن أبي السرح يفرُ منك كلما رآك فتبسَّم النبي محمد ثم قال: «أو لم أبايعه وأؤمنه؟» فقال: بلى، أَيْ رسول الله، ولكنه يتذكر عظيم جُرمه في الإسلام، فقال النبي: «الإسلام يَجُبُّ ما كان قبله». فرجع عُثمان إلى عبد الله بن سعد فأخبره، فكان يأتي فَيسلم على النبي صَلَّى الله عليه وسلم، مع الناس

 அவருடைய திறமைக்கு மற்றுமொரு வாய்ப்பு உமர் ரலி அவர்கள் காலத்தில் கிடைத்தது

 எகிப்தின் மேற்கு பகுதிக்கு உமர் ரலி அவர்கள் அவரை ஆளுநராக நியமித்தார்கள்.

 வாழ்க்கை எப்படி பயணிக்கிறது பாருங்கள்! தலைக்கு விலை பேசப் பட்டவர் தலைவராக மாறினார்.

 உஸ்மான் ரலி அவர்கள் அவரை முழு எகிப்தின் ஆளுநராக நியமித்தார்கள். அமரு பின் ஆஸ் ர்லி அவரக்ளிடமிருந்து அதிகாரம் இவரிடம் கைமாறியது

 இதில் இப்னு அபீ ஸரஹ் ரலி அவர்கள் எந்த அளவு அரசியலில் உயர்கிறார் என்பதை அளவிட்டுக் கொள்ளலாம்.

 அவரது அந்த ஆட்சிக் காலத்தில் ஆப்ரிக்காவின் பல முக்கிய பிரதேசங்களை அவர் வென்று கொடுத்தார்.

 அன்றைய வல்லரசான ரோமப் போர்ரசுக்கு இப்னு அபீ ஸரஹ் சிம்ம சொப்பனமாக இருந்தார். ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்து , ஆப்ரிக்காவின் ஆதி பழங்குடிகள் வாழ்ந்த நுபியா சூடான் ஆகியவற்றை விடுவித்து தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

 ஹிஜ்ரீ 31 ம் ஆண்டில் ரோம பைசாந்திய பேர்ரசுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே தாத் சவாரி என்ற ஒரு யுத்தம் நடைபெற்றது.

 அப்போது மத்திய தரைக்கடல் ரோமப் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்தது. தங்களுக்கு நீண்ட ஆதிக்கம் உள்ள உள்ள கடலில் முஸ்லிம் படைகளை மூழ்கடித்து விடுவது என்ற கனவில் ரோமர்கள் இருந்தார்கள். அவர்களிடம் ஆயிரம் படகுகள் இருந்த்தன். முஸ்லிம்களிடம் 200 படகுகள் இருந்தன. முஸ்லிம்களுக்கு கடலில் போராடி அனுபவம் இருக்க வில்லை.

 முஸ்லிம் படைத்தளபதியான இப்னு அபீ சர்ஹ் ரோம தள்பதிக்கு சண்டையை கரையில் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டு கடிதம் எழுதினார். ரோம தளபதி சம்மதிக்க வில்லை. கடலிலேயே முஸ்லிம்களை சமாதியாக்கி விட வேண்டும் என்று அவன் நினைத்தான்.

 கடலில்லேயே சண்டை நடந்த்து. தங்களது படகுகளை ரோமர்களின் படுகுகளோடு சேர்த்து கட்டி விடுமாறு இப்னு அபீ ஸரஹ் சொன்னார். முன்னணியில் வீர்ர்கள் கடுமையாக சண்டையிட்டன. கடல் சிவப்பக மாறியது. இதற்கிடையே மாலுமிகளாக இயக்கப் படாத கப்பல்கள் கரையில் தரை ஒதுங்கின.

 வீர்ர்கள் தரையில் இற்ங்கி போரிட்டார்கள். முஸ்லிம்கள் இந்ட யுத்த்தில் வெற்றி பெற்றார்கள் . வரலாற்றில் மதிப்பு மிக்க யுத்தங்களில் ஒன்றாக இது பார்க்க படுகிறது. முஸ்லிம்கள் மத்தியத் தரைக்கடலில் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டி ரோமர்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டினார்கள்.

 இப்னு அபீ சரஹின் படை 900 ரோம படகுகளை மூழ்கடித்தது.

 அவரை ஆப்ரிக்காவின் வெற்றியாளர் என்று வரலாறு அழைக்கிறது. (ஃபாதிஹ் அப்ரீகா)

லைஸ் பின் ஸஃது ரலி அவர்கள், அப்துல்லாஹ் பின் அபீ ஸரஹ் மக்கா வெற்றிக்கு பிறக் எந்த தவறன நடவடிக்கையிலும் ஈடுபட வில்லை. அவர் அரபுகளின் அறிவாளியாகவும் கொடையாளியாகவும் இருந்தார் என்று கூறுகிறார்.

எகிபது மக்களிடம் இப்னு அபீ ஸரஹ் கடுமையாக நடந்து கொண்டார்.  அவர் மீது கலீபாவிடம் புகார் அளித்தவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுமாறு உஸ்மான் ரலி அவருக்கு அறிவுறுதினார். ஆனால் இப்னு அபீ ஸரஹ் அவர்களிடம்  கடுமையாக நடந்து கொண்டார். இது ஒருவை கொல்லும் அளவுக்கு கொண்டு சென்று சென்றது.

எகிபதின் மக்கள் ஆளுநருக்கு எதிராக கலீபா உஸ்மான் ரலி அவர்களிடம் கிளர்ந்து சென்றார்கள்.

அந்த கிளர்ச்சியின் இறுதியில் உஸ்மான் ரலி கொல்லப்பட்டார்கள்

இப்னு அபீ ஸரஹ் ரலி அவர்களின் நடவடிக்கை வரலாற்றில் மற்றுமொரு பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தனது அதிகார வெளிப்பாட்டால் நேர்ந்து விட்ட கலீபாவின் படு கொலைக்காக இப்னு அபீ ஸரஹ் பெரிதும் வருந்தினார்.

அதன் பிறகு அரசியலில் தொடர அவர் விரும்ப வில்லை

அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் எதிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வில்லை. உஸ்மான் ரலி அவர்களின் கொலைக்கு பழி கேட்டு நடந்த போர்கள் எதிலும் அவர் பங்கேற்க வில்லை.

அரசியலை விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

ஆளுநர் வாழ்க்கையை துறந்து பாலஸ்தீனில் ஜெரூசலத்திற்கு மேற்கே 66 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஸ்கலான் நகரில் ஒரு சாமானிய குடிமகனாக வாழ்ந்தார்.  இறைவா ! எனக்கு ஒரு பஜ்ரு தொழுகையில் மரணத்தை கொடு என்று பிரார்த்தித்தவாறு இருந்தார்.

அவர் மரணமடைந்த அந்த இரவில் அடிக்கடி சுபுஹ் நேரம் ஆகிவிட்டதா என்று கேட்டுக் கொண்டிருந்தார். அருகிலிருந்தவர்கள் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் தன்னுடைய பணியாளரை அழைத்து அதிகாலையின் குளுமை தெரிகிறது. சுபுஹ் நேரமாகிவிட்டதா என்று பார்த்துவா எனக் கூறினார். அப்போது இறைவா! எனது இறுதி நற்செயலாக பஜரு தொழுகையை ஆக்கு என்று பிரார்த்திக் கொண்டிருந்தார்.

ஒளு செய்து முதல் ரகத்தில் பாத்திஹா சூராவையும் வல் ஆதியாத் சூராவையும் ஓதினார். அடுத்த ரகாத்தில் பாத்திஹா சூராவையும் மற்றொரு சூராவையும் ஓதினார்.

தொழுகையை முடித்து வலது புறம் சலாம் கொடுத்தவர் இட்து புறம் சலாம் கொடுப்பதற்கு முன்னதாக இறப்பெய்தினார்.

என்னே  ஒரு மரணம் !

இது தருகிற பாடம்

வாழ்க்கையில் சில நேரங்களில் தவறுகளில் சிக்கிக் கொண்டாலும் அதிலிருந்து வெளியேறி  மீண்டு விட்டால் மிக உயர்ந்த நிலையை அடையாளாம் என்பதாகும். .

இன்றைய நம்முடைய வாழ்க்கை இளைஞர்கள் பெரியவர்கள் என ஒவ்வொரு தரப்பினரும் தவறுகளை சிரமமின்றி – கூச்சமின்றி செய்வதற்கு வாய்ப்பளிக்கும் காலமகும்.

அதை பேஷன் அல்லது சுதந்திரம் என்று கருதி தொடர்ந்து அதில் பயணிப்பது பெரும் பாவமாகிவிடும்.

தீமைகளில் இருந்து விலகி விடுகிற போது அல்லாஹ் இயல்பாகவே அதீத்தமான நன்மைகளை செய்கிற வாய்ப்பை வழங்குகிறான்.

ரோமர்களின் கப்பல் படையை தனியாக தகர்க்கும் வாய்ப்பை இப்னு அபீஸரஹ் ரலி அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியது போல. 

தீமைகளில் தொடர்கிற போது அவை சிறியதாக இருந்தாலும் அவற்றை நாம் ஒரு பொருட்டாக கருத வில்லையானால் அல்லாஹ் அதை பெரும் தீமையாக கருதுகிறான் என் புழைல் ர்லி சொன்னது போல சிறிய தீமைகளும் பெரிதாக தோற்றம் கொண்டு நல் வழி பெறுவதை தடுத்து விடக் கூடும்.

ல்லாஹ் பாதுகாப்பானாக!