வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 24, 2025

பட்டினிப் போரில் காஸா

 நாகரீக மடைந்த மனித சமூகம் என்பது சமூகத்தின் கஷ்டங்களில் பங்கேற்று ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள வேண்டும்.

திருக்குர் ஆன் இதை வலியுறுத்துகிறது.

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ ﴾ [المائدة: 2

فهذه قاعدة من أعظم قواعد القرآن الكيم، وهي تشتمل على علم كثير، ونفعٍ كبير، ويُستدل بها على مسائلَ كثيرة لا تحصى

 ஏராளமான நற்காரியங்களுக்கு தூண்டக் கூடிய வசனம் இது

நம்மில் ஒவ்வொருவரும் நமது வாழ்வின் அடிப்படை கோட்பாடாக இதை வைத்துக் கொள்ள வேண்டும்.

தேவைப்படுவோருக்கு காசு கொடுப்பது, உடலால் உழைப்பது அநீதியை தடுப்பது, மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, அறியாமையை அகற்றுவது, கல்வியை பரப்புவது, மக்களின் சிரமங்களில் கை கொடுப்பது என நீளும் எந்த நல்ல காரியத்திற்கு நான் உதவியாக இருப்பேன். என்ற தீர்மாணித்துக் கொள்வதும் அந்த திசையில் வாய்ப்புள்ள வகையில் செயல்படுவதும் நம்மை ஒரு மனிதராக அடையாளப்படுத்தும் காரியங்களாகும்.

குறைந்த பட்சம் “இந்த வீட்டில் திருமணத்திற்கு ஏற்ற  ஒரு நல்ல பெண் இருக்கிறார் என்று கை காட்டுவது கூட இந்த வகையிலான ஒரு சமூக செயல்பாடாகும்.

தினசரி இது போன்ற உபகார நற்செயல்களில் சிலதையாவது செய்து விட உறுதி ஏற்க வேண்டும்.

நம் குடுமத்திற்காக உழைத்ததற்கு அப்பால் நாம் வாழும் சமுதாயத்திற்காக என்ன செய்தோம் என்ற கேள்விக்கு அது விடையாக அமைய வேண்டும். 

இந்த வசனம் இன்னொன்றை சுட்டி நிற்கிறது.

தக்வா பிர்ரு என்ற இரண்டு வார்த்தைகள் இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளன.

وقال الماوردي : ندب الله سبحانه إلى التعاون بالبر وقرنه بالتقوى له ; لأن في التقوى رضا الله تعالى ، وفي البر رضا الناس ، ومن جمع بين رضا الله تعالى ورضا الناس فقد تمت سعادته وعمت نعمته குர்துபி )

 தக்வாவில் அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கும் பிர் ரில் மக்களின் அபிமானம கிடைக்கும்  என இத்தக்கய பொதுச் சேவைகள் இறைவனுடையவும் மக்களுடயவும் திருப்தி ஒரு சேர கிடைக்கும் என்கிறார் மாவர்தீ ரஹ்>

நல்ல காரியங்களுக்கு உதவாமல் போவதை இந்த வசனம் கண்டிப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ 

--

ஜெண்டிலாக வாழ்வது என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்

 நாகரீகம் என்பது கோட்டு சூட்டு போட்டுக் கொள்வது, பவிசாக வாழ்வது ஆடம்பரத்க்தை வெளிப்படுவது, பிரம்மாண்டமாக காரியமாற்றுவது அல்ல என்பதை இஸ்லாம் உரத்து சொல்கிறது.

 உன்னால் பயனடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதே நாகரீக வாழ்விற்கு இஸ்லாம் முன் வைக்கும் கேள்வியாகும்.

 حديث ابن عمر رضي الله عنهما: أن رجلا جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال : ( يا رسول الله ! أيُّ الناس أحبُّ إلى الله ؟ فقال : أحبُّ الناس إلى الله أنفعهم للناس، وأحبُّ الأعمال إلى الله عز وجل، سرور تدخله على مسلم، تكشف عنه كربة، أو تقضي عنه دينا، أو تطرد عنه جوعا، ولأن أمشي مع أخ في حاجة، أحبُّ إلي من أن أعتكف في هذا المسجد، يعني مسجد المدينة شهرا...) رواه الطبراني 

 இந்த ஹதீஸின் விரிவுரையில் அறிஞர்கள் சொல்வார்கள்

ஒரு முஸ்லிமின் வாழ்க்கையின் பிரதான இலட்சமே அடுத்தவருக்கு நன்மையாக இருக்க வேண்டும்.

 الأصل في المسلم أنه يسعى لنفع الآخرين

நபித்தோழர் அபூ தர் ரலி அவர்கள் மிக சிரமப்பட்டு பல நாட்கள் தண்ணீரை மட்டுமே உணவாக உண்டு பெரு முயற்சி நபி (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாமை ஏற்றார். பெருமானாரை பார்த்து முதன் முதலாக் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னார்

அவரிடம் பெருமானார் கேட்ட ஒரு கோரிக்கை

 قال النبي لأبي ذر رضي الله عنه حين قدم على النبي صلى الله عليه وسلم أول مرة،: ( فهل أنت مبلغ عني قومك ؟ عسى الله أن ينفعهم بك ويأجرك فيهم ...) رواه مسلم 

எந்த ஒரு கருத்தையும் வெறும் கருத்தாக சொல்லிச் சென்றுவிடுவது இஸ்லாமின் வழக்கமில்லை செயல் திட்டங்களையும் வகுத்துக் கொடுத்து அதில் ஆர்வமூட்டுவதும் இஸ்லாமிய குணமாகும்.

 அந்த வகைசமூகத்தில் நாகரீகமாக  நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்திற்கேற்ற செயல்பாட்டு திட்டங்களையும் இஸ்லாம் வெகு சிறப்பாக கூறியிருக்கிறது.

ஜகாத்

சமூக சேவைக்கான ஒரு காரியத்தை இஸ்லாம் கட்டாயமாக்கியது

அது வே ஜகாத் ஆகும்.

 இறைவனை தொழச் சொன்ன இடங்களில் எல்லாம் மக்களுக்கு உதவியாக அமையும் ஜகாத்தை இணைத்தே திருக்குர் ஆன் பேசும்

 يقول الله تعالى في القرآن الكريم: "وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ

 தொழுது விட்டாயா?  ஜகாத் கொடுத்து விட்டாயா நீ மரணித்தால் அல்லாஹ் உன்னை ஏற்றுக் கொள்வான் என்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்

 وعن أنس بن مالك أن رسول الله - صلى الله عليه وسلم - قال: " من فارق الدنيا على الإخلاص لله وعبادته لا يشرك به شيئا، وأقام الصلاة، وآتى الزكاة - فارقها والله عنه راض، وهو دين الله الذي جاءت به الرسل، وبلغوه عن ربهم

 சதகா

 அன்றாடம் செய்யும் சமூக சேவைக்கான ஒரு காரியமாக

சதகா என்ற உதவியை இஸ்லாம் வலியுறுத்தியது.

 இதற்கு அளவு இல்லை. தேவைக்கு செய்ய வேண்டும். தேவை அறிந்து செய்ய வேண்டும்

 சதகாவினால் பாவங்களுக்கு மன்னிப்பும் சொத்து சுகங்களில் பரக்கத்தும் ஏற்படும் என்று கூறி இஸ்லாம் சமூக சேவைக்கு உற்சாகமூட்டியது

قال رسول الله صلى الله عليه وسلم: "والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار

قال رسول الله صلى الله عليه وسلم: "إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء

قال الله تعالى في الحديث القدسي: "يا ابن آدم! أنفق أنفق عليك

 " قال رسول الله صلى الله عليه وسلم: "كل امرئ في ظل صدقته حتى يحكم بين الناس

 இவை எல்லாம் நாகரீக மனித வாழ்க்கைக்கு மக்களை தூண்டும் அற்புதமான ஊக்கிகளாகும்.

உன்னதமான சதகா பசித்தோருக்கு உணவளிப்பது.

அது அற்புதமான சமூக சேவை

{وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا * إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا

 جاء أَعرابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ: عَلِّمْنِي عَمَلًا يُدْخِلُنِي الجنة كان مما قاله النبي صلى الله عليه وسلم: "...فَأَطْعِمِ الْجَائِعَ وَاسْقِ الظَّمْآنَ..." (رواه أحمد).

قال رسول الله صلى الله عليه وسلم: "اتّقُوا النّارَ ولَو بشِقّ تَمرَة".(رواه البخارى ومسلم).

قال رسول الله صلى الله عليه وسلم: "خِيَارُكُمْ مَنْ أَطْعَمَ الطَّعَامَ" (رواه أحمد).

عن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسل قالم: "مَا آمَنَ بِي مَنْ بَاتَ شَبْعَانًا وَجَارُهُ جَائِعٌ إِلَى جَنْبِهِ وَهُوَ يَعْلَمُ بِهِ- لطبراني

وعن أبي هريرة رضي الله عنه أنَّ رسول الله - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قال: "بينما رجلٌ يمشي بطريق اشتدَّ عليه الحرُّ، فوجدَ بئراً، فنزلَ فيها، فشربَ ثم خرجَ، فإذا كلبٌ يلهثُ؛ يأكل الثَّرى من العطش، فقال الرجلُ: لقد بلغَ هذا الكلبَ من العطشِ مثلُ الذي كان بلغَ مني، فنزل البئرَ، فملأ خُفَّه، ثم أمسَكه بفيه حتى رَقِيَ، فسقى الكلبَ؛ فشكر اللهُ له؛ فَغفرَ له".(البخاري).

 சில நேரங்களில் உணவு பஞ்சம் ஏற்படும் அப்போது ஆட்சியாளர்களும் மக்களும் தாங்கள் நல்ல உண்வை தவிர்த்து  முடிந்தவரை பாடுபட்டு மக்களுக்கு உணவளிக்க வேண்டும்.

 --------------------------

சமூகத்தில் பட்டினி எனபது மிக கொடுமையானது.

மக்கள் உயிர் வாழ போராடுவார்கள்

கொடூர மாரணங்கள் நிகழும்.

சோமாலியாவில் பட்டினியால் எலும்பு தோளுமாக இருந்த குழந்தையை ஒரு பருந்து தூக்கி செல்வதை ஒரு புகைப்படம் காட்டியது. அதை பார்த்து உலகமே அதிர்ந்தது. 

மானம் மரியாதையை இழக்கவும் அது வழி வகுக்கும்

கொலை கொள்ளைகள் அதிகரிக்கவும் அது காரணமாகும். மக்கள் விலங்குகளை விட கேவலமாக நடந்து கொள்ள நேரிடும்.

மக்கள் தீனை கூட விட்டு விடுவார்கள்

 كادَ الفقرُ أن يَكونَ كُفرًا

الراوي[أنس بن مالك] | المحدثالزرقاني

 جاءت أحاديث بالاقتران بينهما في الاستعاذة، كقوله عليه الصلاة والسلاماللهم إني أعوذ بك من الكفر والفقر. رواه أبو داود وأحمد

 ஹிஜ்ரி 18 ஆம் ஆண்டு மக்கா மதீனா உள்ளிட்ட அரபு பிரதேசத்தில் கடும் வறட்சி ஏற்பட்ட்து

அப்போ, அதை எதிர்கொள்ள கலீஃபா உமர் ரலி  கையாண்ட வழி முறைகள் நாகரீக சமூதாயம் எப்போதும் நின்னவில் வைத்துக் கொள்ள வேண்டியதாகும்.

எகிப்து மற்றும் ஈராக்கிலிருந்து உணவுப் பொருட்களைத் திரட்டினார், அவற்றின் விநியோகத்தை தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டார், நல்ல உணவை அவர் சாப்பிடுவதை தவிர்த்தார்.

மட்டுமல்ல வீட்டில் தனியாக சாப்பிடுவதை விர்த்தார்.

ஜகாத் வசூலிப்பதை தாமதப்படுத்தினார்,

திருட்டுக்கான சட்டப்பூர்வ தண்டனையை நிறுத்தி வைத்தார்.

வறட்சியைப் போக்க மக்களுடன் சேர்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்

எகிப்திலிருந்து அரேபியாவிற்கு வழக்கமான உணவு விநியோகத்தை உறுதி செய்வதற்காக நைல் நதியை செங்கடலுடன் இணைக்கும் கால்வாயைத் தோண்டுமாறு எகிப்தின் கவர்ணர் அம்ர் இப்னு அல்-ஆஸ் ரலி அவர்களுக்கு உத்தரவிட்டார்

அதை போக்குவதற்கு எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு சின்ன அடையாளம் இது.

ஆனால் இன்று இயற்கையாக இல்லாமல் இஸ்ரேலினால் பாலஸ்தீனில் செயற்கையாக ஒரு பெரும் பட்டினி சூழல் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

உணவை தடுப்பது நாகரீகம் அற்ற செயலாகும்.

உணவை தடுப்போர் ஒரு மதக் கார்ர்களாகவே இருக்க முடியாது.

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ؛ فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ؛ وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ثلاثةٌ لا يكلمُهم اللهُ ولا ينظرُ إليهم يومَ القيامةِ ولا يزكيهم ولهم عذابٌ أليمٌ... ورجلٌ منع فضلَ ماءٍ ، فيقول اللهُ يومَ القيامةِ : اليوم أمنعُك فضْلِي كما منعتَ فضلَ ما لم تعمل يداكَ 

 ஆனால் இத்தகைய எந்த நாகரீக அறிவுத்தல்களுக்கும் கட்டுப்படாமல் இஸ்ரேல் காஸா வின் மக்கள்ள கடுமையன் பட்டினிக்குள் தள்ளி வருகிறது.

என்ன கொடுமை என்றால் உணவு இல்லாமல் இல்லை. வறட்சி எதுவும் இல்லை. காஸாவின் எல்லையில் நூற்றுக்கணக்கான டிரக்குகளில் உணவுப் பொருட்கள் காத்து கிடக்கின்றன. அவற்றை அனுமதிக்க இஸ்ரேல் மறுத்து வருகிறது.

இது இப்போது மிகப் பெரும் பேசு பொருளாகி இருக்கிறது. இலட்சக்கணக்கான மக்கள் திட்டமிட்டு உருவாக்கப் பட்ட பட்டினியால் கண்முன்னே பரிதாபமாக இறந்து போகிற காட்சிகளை உலகம் கண்டுவருகிறது. 

காஸாவின் நிலையை பிபிசி செய்தி அறிக்கை கூறுகிறது.

காசாவில் மனிதாபிமான நிலைமை இதுவரை இல்லாத  ஒரு மோசமான நிலையை எட்டியுள்ளது, அந்தப் பகுதியில் உள்ள மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் பல நாட்களாக உணவு இல்லாமல் தவிக்கின்றனர்.

காஸாவில் வாழும் 21 இலட்சம் மக்கள் கடும் பட்டின்யில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்

சுமார் 90,000 குழந்தைகள் மற்றும் பெண்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.

அல் ஜஸீரா

காஸாவில் வாழும் மக்கள் இப்போது ஒருவரை சந்திக்கிற போது இன்று நீ எதுவும் சாப்பிட்டாயா என்று கேட்டுக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அல் ஜஸீரா இணைய தளம் கூறுகிறது. இது தான் பட்டினியில் வாழ்வதற்கு போராடும் தற்போதைய  காஸா வின் குரல் என்று அந்த செய்தி தொடர்ந்து கூறுகிறது.

‘Did you eat today?’: Voices of Gaza speak of starvation and survival

 உலக சுகாதார அமைப்பு

21 மே லிருந்து 27 ஜூலை வரை உணவு கிடைக்காததால் 1026 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். என்று கூறுகிறார். உலக சுகாதார அமைப்பின் தலைவர்

இதில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளும் அதிகம்

போர்த் தாக்குதலுக்கு பதிலாக பட்டினி தாக்குதல்

காஸாவின் மீது இஸ்ரேல் நட்த்திய தாக்குதலில் இது வரை ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 105 பேரி மோசமாக காயமடைந்துள்ளனர். அதில் 40 ஆயிரத்து 500 குழந்தைகள் ஆவார்கள்.

 தினசரி 10 குழந்தைகள் தங்களுடைய உறுப்புக்களை இழக்கின்றனர்.

 கொடுமைக்கு மேல் கொடுமை

உதவி பெற காத்திருந்தோர் மீது தாக்குதல்

காஸாவின் வடக்கு பகுதியில் இருக்கிற டராஜில் அல் தபீன் பள்ளிக் கூட்த்திற்கு அருகிலிருக்கிற அகதி முகாம் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதலை நட்த்தியிருக்கிறது. அதில் உணவுக்காக காத்திருந்த பலர் கொல்லப் பட்டனர்.

இத்தகைய கொடுமைகளை தாண்டி இனி வெளிப்படையாக காஸாவின் மீது தாக்குதல் தொடுத்தால் அது ஈரானுடன் செய்த உடன்படிக்கைக்கு எதிராக அமையும். அது மட்டுமல்ல எத்தகைய தாக்குதலையும் கடந்து காஸாவின் மக்கள் தங்களது நிலத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே அவர்களது உறுதியை கலைத்து அவர்களை காஸாவிலிருந்து வெளியேற்றும் திட்டமாக காஸாவின் மக்கள் மீது ஒரு பட்டினி யுத்த்தை இஸ்ரேல் அரங்கேற்றி வருகிறது.

 நேற்றைய அல்ஜஸீரா இனைய தளத்தில் வெளியான செய்திகளில் சிலதை இங்கு எடுத்துக் காட்டுகிறேன்.

நாங்கள் இஸ்ரேலால் பட்டினி போடப்பட்டூள்ளோம் என்று காஸா மக்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

உணவுக்காக அழும் குழ்ந்தைகளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் காஸாவின் தாய்மார்கள் கலங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு செய்தி சொல்கிறது.

பசியால் இறந்து போன ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருடைய உடல்களை நான் கண்டேன். அவர்கள் இறந்து போவதறுகு முன் நாங்கள் மிகுந்த பசியாக இருக்கிறோம் என்று சொன்னதை நான் கேட்டேன் என்று ஒருவர் சொல்லுகிற வீடியோ வைரலாகி வருகிறது.

காஸாவில் ஒருவர் கோடீஸ்வரராக இருந்தாலும் அவருக்கு ஒரு துண்டு ரொட்டி கிடைப்பது அரிது .

Even if you’re a millionaire in Gaza right now, you won’t find bread. You won’t find a bag of rice or a can of milk. Markets are empty. Shops are destroyed. 

நாங்கள் உலகிற்கு மிக குறைந்த விலையில் பழங்களை விளைவித்து கொடுத்து கொண்டிருந்தோம். இப்போது எங்களிடம் ஒரு முட்டை கூட இல்லை

we can’t find a single egg.

முன்னர் 5 டாலருக்கு கிடைத்த தர்பூசனி இப்போது 250 டாலருக்கு விற்கிறது. அது கிடைப்பதில்லை.

நாங்கள் முன்பு கூட வளமாக சாப்பிட்டவர்கள் இல்லை. ஒரு துண்டு ரொட்டி,கொஞ்சம் பால் ஒரு முட்டை என்பது தான் எங்களுடைய காலை உணவாக இருந்தது. இப்போது அதுவும் இல்லை

 குழந்தைகளுக்கு விலை உயர்வை பற்றி எதுவும் தெரிவதில்லை. தங்களுக்கு வயிறு பசிக்கிறது என்று மட்டுமே சொல்லத் தெரிகிறது. என்கிறார்கள் தாய்மார்கள்.

 பெரும்பாலான நாட்களில் எங்களுக்கு தண்ணீரை தவிர வேறு உணவில்லை. பசிக் கொடுமை அதிகரிக்கிற போது நாங்கள் பழைய போட்டோக்களை எடுத்து புரட்டிப் பார்க்கிறோம். என்றோ ஒரு நாள் ருசி மிக்க உணவுகளை சாப்பிட்ட அந்த படங்களை பார்த்து ஆறுதல் கொள்கிறோம்.

  Most days, we drink water and nothing more. When hunger becomes too much, we scroll through old photos, pictures of meals from the past, just to remember what life once tasted like.

 காஸாவின் மக்கள் படும் கஷ்டத்தை விட மரணம் இலகுவானதாக இருக்கிறது என்று ஒரு கட்டுரை தலைப்பு கூறுகிறது.

 In Gaza, death seems easier than amputation

 இந்த குழந்தைகள் கூறும் நிகழ்வுகளை கேட்பதற்கு எந்த இரும்பு இதயத்திற்கும் சக்தி போதாது.

1949 ம் ஆண்டின் ஜெனீவா பிரகடணம் மிக தெளிவாக ஆக்ரமிக்கப் பட்ட பகுதியில் உள்ள மக்களை பாதுக்காக வேண்டியது ஆக்ரமிப்பு அரசின் கடமை என்று கூறுகிறது.

உலகம் இந்த கொடுமையை சத்தமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஒரு சின்ன ரொட்டித் துண்டுக்காக ஏங்கும் குழந்தைகளுக்காக அவர்களுடைய பெற்றோர்களுக்கு பதிலளிக்க உலகில் யாருக்கும் தைரியம் இல்லை

ஜூலை 17 ம் தேதி காஸாவில் இருக்கிற கத்தோலிக்க சர்ச்சின் மீது இஸ்ரேல் தாக்குதல் நட்த்தியதில் பலர் பலியாயினர். இத்தாலியின் பிரதமரும் போப் லியோவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் காஸாவின் மீதா இஸ்ரேலின் பட்டினி யுத்த்திற்கு இன்னும் போதுமான கண்டனமும் நெருக்கடியும் வரவில்லை

 இரக்கமற்ற இஸ்ரேலை உலக நாடுகள் உரத்து கண்டிக்க வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் இந்ந விவகாரத்திலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.  இது மிருகத்தனமான சிந்தனையும் போக்குமாகும். 

துஆ

உடலால் பொருளால் சமூக சேவையாற்ற முடியாத போது குறைந்த பட்சம் தேவையுடையவர்களுக்காக  துஆ செய்தாவது சமூக பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

நாம் தொடர்ந்து காஸாவில் பட்டினியால் வாடும் சகோதரர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

இந்த பிரச்சனை உலகின் கவனத்தை கவர்வதற்கேற்ற நம்முடயை சமூக ஊடகங்களை பயன்படுத்துவோம். அதே நேரத்தில் வன்முறையை தூண்டும் எந்த வித அம்சமும் அதில் இருக்க கூடாது என்பதில் கவனமாக இருப்போது. அது ஒரு தீர்வையும் தராது. மிக நியாயமாக மக்களின் இதயத்தை காஸா மக்களுக்கு இரங்கும் வகையில் செய்திகளை பரிமாறுவோம்.

நாம் சார்ந்திருக்க சமூக அமைப்புகள் வழியாக இப்போதைய காஸாவின் பிரச்சனையை பேசுவோம்.

பல இலட்சக்கணக்கான மக்களும்  அதில் பல்லாயிரம் குழந்தைகளும் பெண்களும் ஊனமுற்றவர்களும்  மாதக்கணக்கில் கடும் பட்டினியில் மரணத்தை நோக்கி போராடும் சூழலை எல்லாம் வல்ல இறைவன் தனது கருணைப் பார்வையால் வெகு விரைவில் மாற்றியருள்வானக!

 

 

3 comments:

  1. Anonymous8:43 PM

    அருமையான பதிவு... மாஷா அல்லாஹ்... உம்மத்தின் மீதான இந்த கவலை, இந்த சிந்தனை., காஸா மக்களுக்கு பெரும் வெற்றியை தருவதற்கு காரணமாக ஆக்குவானாக..

    ReplyDelete
  2. Anonymous9:15 PM

    காஸா மக்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  3. அ.அப்துல்மஜீத் மிஸ்பாஹி9:17 PM

    காஸா மக்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete