வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 05, 2026

தொடரட்டும் பத்று

 திட்டமிட்டு ரமலான் மாதத்தில் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது போர் தொடுத்திருக்கின்றன.

ஈரானை தாக்குவதறகு எந்த நியாயமும் அமெரிக்காவிடம் இல்லை.

ஈரான் அனு ஆயுதம் தயாரிக்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

இது அப்பட்டமான ஒரு அவதூறு.

ஈரானிடம் அனு ஆயுதங்கள் இல்லை என் The Director General of the International Atomic Energy Agency யின் தலைவர் Rafael Mariano Grossi தெரிவித்திருக்கிறார்.

there has been no evidence of Iran building a nuclear bomb

இத்தனைக்கும் பிறகு ஈரான் இந்த முரட்டு பயலோடு எதற்கு வம்பு என்று கருதி அமெரிக்காவோடு ஒமன் நாட்டின் மத்தியஸ்தத்தில் ஐந்து சுற்று பேச்சு வார்த்தை முடிந்து ஆறாவது சுற்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

நீ எதற்காகவும் அனுவை  பயன்படுத்த கூடாது என்று அமெரிக்கா ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு மிரட்டி வந்தது. மின் உற்பத்தி போன்ற ஆக்ககரமான பணிகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்த முடியாது என்று மட்டுமே ஈரான் கூறிவந்தது

பேச்சு வார்தை நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது என்று ஓமன் கூறுகிறது. பேச்சு வார்த்தை முடிந்து விட்டது என்று அமெரிக்காவும் கூற வில்லை.

இதற்கிடையில் திடீரென் அமெரிக்காவின் ஆசியோடு கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் ஈரானை தாக்கியது.

ஈரானிய ஷியா இஸ்னா அஸரிய்யா பிரிவின்  மத தலைவரான அலீ ஹுசைன் அல் காமினி படுகொலை செய்யப் பட்டார். அவர் பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொண்டிருக்காமல் ராணுவ தலைவர்களோடு காலை 9 மணியளவில் ஒரு மீட்டிங்கில் இருந்த போது அந்த இடத்தின் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. 88 வயதில் இறைவா எனக்கு ஷஹாதத்தை கொடு என்று பிரார்த்திக் கொண்டிருந்தவருக்கு ரமலான் மாதத்தில் அந்த வாய்ப்புக் கிடைத்தது.  

இந்த தாக்குதலும் ஈரானிய மத தலைவரை படுகொலை செய்ததும் சகித்துக் கொள்ள முடியாத மிக அப்[பட்டமான ஒரு அக்கிரமம் ஆகும்.

கொடூரமான தாக்குதல்கள்

இந்த தாக்குதல் மூலம் மனித குலத்துக்கு மிக மோசமான அழிவுகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் இழைத்து வருகின்றன.

ஒரு பெண்கள் பள்ளிக்கூடத்தின் மீது துல்லியமாக திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் முதல் நாளில் 45 பெண் குழந்தைகள் கொல்லப் பட்டார்கள். மொத்தமாக கொல்லப் பட்ட 180 சிறுமிகளின் நல்லடக்க காட்சிகளை இரான் வெளியிட்ட போது உலகே உரைந்து போனது.

அதே போல இந்தியாவில் விசாகபட்டினத்தில் ஒரு பயிற்சியை முடித்துக் கொண்டு இலங்கைக்கு அருகே சென்று கொண்டிருந்த ஈரானின் போர்க் கப்பல் ஒன்றையும் அதில் பயணம் செய்த சுமார் 100 கப்பல் படை வீரர்களுக்கு எந்த எச்சரிக்கையையும் கொடுக்காமல் அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் சுட்டு வீழ்த்தியுள்ளதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா இதற்கு உடனடியாக எந்த விளைவையும் வெளிப்படுத்த வில்லை. அதனால் இந்த கப்பலின் நடமாட்டத்தை இந்தியா தான் காட்டிக் கொடுத்ததா என்ற ஒரு அவலட்சணமான குற்றச் சாட்டு சர்வதேச அளவில் முன்வைக்கப்பட்டிருக்கிற நிலையில் இதில் தப்பித்துக் கொண்டவர்களுக்கு சிகிட்சை கொடுத்து இலங்கை நல்ல பெயரை சம்ப்தாத்தித்துக் கொண்டுள்ளது.

ஈரான் எதையும் முன்னறிவிப்பு செய்து விட்டு செய்கிற்து. அது வீரனுக்கு அழகு, அதுவே நீதி.

நேற்று இரானின் மேஜர் ஜெனரல்களில் ஒருவரான் யஹ்யா ரஹீம் சபாவி என்பவர் இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவுக்கு பகிரங்கமாக அறிவிப்புக் கொடுக்கிறார். உங்களுடைய இருப்பிடம். நீங்கள் செல்லும் இடங்கள் பற்றிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்து விட்டன ஆகவே எச்சரிக்கையாக இருங்கள். திடீரென சொல்லாமல்  தாக்குகிற பழக்கம் எங்களுக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார்.   

ஆனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்கள் கண்மண் தெரியாமல் அப்பாவிகளை கொன்று குவித்து வருகின்றன.

இது இஸ்ரேல் என்ற நாடு உருவானதிலிருந்து நடந்து வருகிற கொடூரம் அல்ல; இஸ்ரேல் என்ற இனத்தின் தோற்றத்திலிருந்தே உண்டான கொடூர இயல்பாகும்\

திருக்குர் ஆனை விட இதை யார் சரியாக சொல்ல முடியும்?

திருக்குர் ஆனில் அல்லாஹ் யூதர்களின் கொடூர இயல்பை குறித்து நேரடியாக எச்சரிக்கிறான்.

அவர்கள் கல் நெஞ்சக்காரர்கள் அல்ல அதை விட கொடுமையானவர்கள்.

ثُمَّ ‌قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً 

 أَوْ أَشَدُّ قَسْوَةً ﴾ وَالْمَعْنَى: بَلْ هِيَ أَشَدُّ قَسْوَةً

 

ரமலானில் தாக்குதல் நடத்துவது அவர்களின் கல்நெஞ்சத்துக்கு அடையாளமே!

அவசியமே இல்லாமல் அமெரிக்காவின் போர் ஒத்திகைகள் கடந்த இரண்டு மாத காலமாக நடந்து கொண்டிருந்தது.

ஜனவரி 18 ம் தேதி அமெரிக்காவின் விமானந் தாங்கி கப்பலான ஆப்ரஹாம் லிங்கன் பாரசீக வளைகுடா பகுதிக்கு சென்று விட்டது. அதே கால கட்டத்தில் அரபு நாடுகளில் இருந்த தன்னுடை ரானுவ வீரர்களையும் அமரிக்கா திருப்பி அழைத்துக் கொண்டது.

போர் தொடங்கப் போகிறது என்று உலகமே காத்துக் கொண்டிருந்த நிலையில் அப்படி எதுவும் நடக்க வில்லை என்பது உலகத்திற்கு நிம்மதி அளித்தது.

இந்த நிலையில் தான் சரியாக ரமலான் மாத்ததை திட்டமிட்டு தேர்ந்தெடுத்து இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானை தாக்கியுள்ளன.

இது இரான் மீதான தாக்குதல் அல்ல ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் மீதான தாக்குதலாகும்.

இந்த தாக்குதலின் தொடர்ச்சியாக ஒட்டு மொத்த இஸ்லாமிய உலகும் நிலை குலைந்து போயிருப்பதை இப்போது நாம் பார்க்கிறோம். குறிப்பாக அரபு நாடுகள் சவூதி முதல் ஓமன் வரை தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன.

அரபு நாடுகள் மீது தாக்குதல்

அரபு நாடுகளில் இருக்கிற அமெரிகக் நிலைகளை ஈரான் தாக்குவது தவிர்கக் முடியாதது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.

அமெரிக்காவை நேரடியாக தாக்க முடியாது, அது வெகு தூரத்தில் இருக்கிறது. ஆனால் அது அரபு நாடுகளில் பல இடங்களிலும் தன்னுடைய பெரிய  ரானுவ தளங்களை வைத்திருக்கிறது.

இந்த சூழலில் அமெரிக்காவின் அக்கிரமத்திற்கு பதிலடி கொடுக்க அதன் தளங்களை தான் குறி வைக்க முடியும் ?

இந்த நியாயத்தை அரபு நாடுகள் கூட ஒத்துக் கொண்டிருக்கின்றன.

அதனால் தான் அமெரிக்காவின் தாக்குதலுக்கு தங்களது நாடுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க முடியாது என்று அவை மறுத்து விட்ட நிலையில் கூட ஈரானின் பதிலடி தாக்குதலை அவை பெரிதாக எதிர்கக் வில்லை.

அவை ஈரானின் நியாயத்தை ஓரளவில் புரிந்து கொண்டிருக்கின்றன் என்பதே இதன் பொருளாகும்.

இஸ்ரேலின் மோசடி

இதற்கிடையே சவூதி துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் மக்கள் வசிக்கிற பகுதிகளுக்கு அருகே சில குண்டுகள் விழுந்துள்ளன. சவூ தியின் மிகப் பெரிய எண்ணை கட்டமைப்பான  ஆரெம்கோ நிறுவனத்தின் ஒரு கிளை மீது குண்டு வீச்சு நடந்துள்ளது.

இது தற்போதைய சூழ் நிலையை பயன்படுத்தி இஸ்ரேல் நடத்தும் தாக்குதலாக இருக்கலாம் என்ற சாத்தியக் கூறு இப்போது ஆராயப் பட்டு வருகிறது.

ஏனெனில் சமீபத்தில் சைப்ரஸ் நாட்டின் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடை பெற்றது. நேற்று இங்கிலாந்து நாடு இது பற்றி ஆராய்ச்சி செய்து இந்த குண்டு ஈரானில் இருந்து வீசப்பட வில்லை என்பதை உறுதி செய்திருக்கிறது.

எனவே அரபு நாடுகளின் வளங்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் இஸ்ரேலின் மறைமுக தாக்குதலாக இருக்கலாம்

அரபு நாடுகள் இதை ஆய்வு செய்ய வேண்டும்.

சர்வதே ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன ஒரு கவலை என்ன வென்றால்?

அரபு நாடுகளிடம் இவற்றை கண்டறிந்து கொள்கிர வசதி இருக்கிறதா என்பதும் ஒரு வேளை இவை அமெரிகக் இஸ்ரேலின் கூட்ட சதி என்று அறிந்து கொண்டாலும் அவர்கள் அதை வெளியே சொல்வார்களா என்பதுமாகும்.

அரபு நாடுகளுக்கு பாடம்

ஆனால் ஆரபு நாடுகளுக்கு ஒரு அழுத்தமான பாடம் இதில் கிடைத்திருக்கிறது.

அமெரிக்கா பாதுகாப்பு தரும் என்று நம்பி காலம் காலமாக அவர்களுடைய வருமானத்தில் கனிசமானதை அமெரிக்க ராணுவத்திற்காக செலவ்ழித்திருக்கிறார்கள். கத்தார் நாட்டில் அமெரிக்காவின் மிகப் பெரிய விமானப் படை தளம் இருக்கிறது. பஹ்ரைன் நாட்டில் அமெரிக்காவின் மிகப்பெரிய கப்பல் படை இருக்கிறது. இது வல்லாமால் சவூதி அரேபியா தான் அமெரிககவிடமிருந்து ரானுவ தளவாடங்களை அதிக அளவில் வாங்குகிற நாடாகும். 2008 லிருந்து 2015 க்குள் 62 பில்லியன் டாலருக்கு சவூதி அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கியிருக்கிறது. இது 10 ஆண்டுகளுக்கு முந்தைய தகவலாகும்.

அமெரிக்காவிற்கும் சவூதிக்கும் மற்ற அரபு நாடுகளுக்கும் இடையே இந்த உறவு பலப்பட்டது 1933 முதல் ஆகும். 1932 ல் தான் அரபு நாட்டில் வஹாபிஸ சவூதுகளின் ஆதிக்கம் ஏற்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரபு நாடுகள் இவ்வளவு நம்பி இடம் கொடுத்தும் இப்போது அரபு நாடுகளுக்கு இரான் மூலம் பகிரங்கமாக எச்சரிக்கை கொடுக்கப் பட்டிருக்கிற நிலையிலும் கூட அமரிக்காவால் அரபு நாடுகளை பாதுகாக்க முடியவில்லை.

இஸ்ரேல் எப்படி பாதுகாக்கப்ப் படுகிறது என்பதை என்பதை அரபு நாடுகள் கவனிக்க வேண்டும். அமெரிக்க எப்படி கை கழுவி விட்டது என்பதையும் அரபு நாடுகள் நினைவில் வைக்க வேண்டும்.

இஸ்ரேலுடனும் கூட அரபு நாடுகள் நல்ல நட்பில் தான் இருக்கிறார்கள். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரக அரசு இஸ்ரேலுடன் மிக நெருக்கமான உறவில் இருக்கிறது.

நீங்கள் துபாய் விமான நிலையத்திலிருந்து புறப்படுகிற அல்லத் வந்து சேருகிற விமானங்களின் பட்டியலை ஒரு 3 மணி நேரத்திற்கு கவனித்துப் பார்த்தீர்கள் என்றால்  உலகின் மற்ற எந்த நாட்டிற்கு செல்கிற விமானங்களை விடவும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு செல்கிற விமானங்களே அதிகமாக இருப்பதை காணலாம்.

அரபுகளின் இந்த இணக்கமும் தொடர்பும் இப்போது அவர்களுக்கு தகுந்த பாடத்தை தந்து கொண்டிருக்கின்றன.

என்வே அரபு நாடுகள் ஈரான் வீசுகிற குண்டுகளுக்காகவும் அதன் ட்ரொன்களுக்காகவும் தங்களுடைய தலையில் தாங்களே அடித்துக் கொள்வது தான் சரியானது.

இஸ்ரேலோ அதன் ஆதரவாளர்களோ ஒரு போதும் உடன்படிக்கைகளை பாதுகாகக் மாட்டார்கள்

இது திருக்குர் ஆன் வழங்கியிருக்கிற அறிவு.

فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ ‌قَاسِيَةً يُحَرِّفُونَ الْكَلِمَ عَنْ مَوَاضِعِهِ وَنَسُوا حَظًّا مِمَّا ذُكِّرُوا بِهِ [الْمَائِدَةِ:13]

இஸ்லாமிய வரலாற்றில் மிக மோசமான அனுபவங்கள் இருக்கின்றன.

இந்த உலகில் இனி வரும் காலங்களில் கியாமத் வரை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வரலாறே உட் கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள் அதை கவனித்தால் போதுமானது.

ஹிஜ்ரீ 5 ம் வருடம் அரபு நாட்டில் அரபுகளை அண்டி வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மிக பெரும் படையை திரட்டினார்கள். சுமார் 10 ஆயிரம் பேர் அப்படையில் இருந்தார்கள். முஸ்லிம் அல்லாத அரபு குலங்கள் அனைத்தும் அதில் பங்கேற்றன. அல் அஹ்சாப் கூட்டணிப் படைகள் என்ற தலைப்பில் திருக்குர் ஆன் ஒரு அத்தியாயத்தை இது விவகாரத்தில் பேசுகிறது.

சில தர்ஜமாக்கள் இதற்கு பொருத்தமாக தலைப்பிட்டுள்ளார்கள் . “சதிகார அணியினர்”.

அப்போதும் செழிப்பாக  வாழ்ந்த யுதர்கள் தங்களது வருவாயில் ஒரு பகுதியை தருவதாக ஆசை வார்த்தை கூறி அரபு மக்களை திரட்டியிருந்தனர். திரண்டது பெரும்பாலும் அரபுகளே என்ராலும் இஸ்லாத்திற்கு எதிராக அவர்களை  திரட்டியது யூதர்களே என்பது கவனிக்க தக்கது.  

ஒரு வேதனை.

அப்போதும் அண்டி வந்தவர்களுக்கு ஆதரவாக மக்காவின் குறைஷிகளே துணை நின்றன. (இதுவும் அரபுகள் கவனிக்க தக்கதாகும் ). குறைஷிகள் தலைமை ஏற்ற அந்த தாக்குதல் முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய சோதனையாக இருந்தது என்பதை திருக்குர் ஆன் காட்டுகிறது.

 إِذۡ جَآءُوكُم مِّن فَوۡقِكُمۡ وَمِنۡ أَسۡفَلَ مِنكُمۡ وَإِذۡ زَاغَتِ ٱلۡأَبۡصَٰرُ وَبَلَغَتِ ٱلۡقُلُوبُ ٱلۡحَنَاجِرَ وَتَظُنُّونَ بِٱللَّهِ ٱلظُّنُونَا۠ (10) هُنَالِكَ ٱبۡتُلِيَ ٱلۡمُؤۡمِنُونَ وَزُلۡزِلُواْ زِلۡزَالٗا شَدِيدٗا (11)

 

உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்கள் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்கள் உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உலுக்கி எடுக்கப் பட்டனர்.

இந்த ஒரு வசனம் அன்றைக்கு ஏற்பட்டிருந்த அச்சம் தரும் சூழ்நிலையை விவரிக்க போதுமானது.

அன்று அவர்களை நேரடியாக எதிர் கொள்ள முடியாத சூழலில்  அல்லாஹ் முஸ்லிம்களுக்கு தன்னுடைய தரப்பிலிருந்து வெற்றியை கொடுத்தான். கடும் பனிக் காற்றை அனுப்பினான். எதிரிகள் சின்னாபின்னாமி ஓடினர்.

காரணம் அவர்களிடம் முஸ்லிம்களை எதிர்க்க வலுவான காரணங்கள் எதுவும் இருக்க வில்லை. யூதர்கள் காட்டிய ஆசை வார்த்தைகள் தான் மிச்சமிருந்தன

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ جَآءَتْكُمْ جُنُوْدٌ فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا وَّجُنُوْدًا لَّمْ تَرَوْهَا ؕ وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرًا ۟ۚ

 

காற்றுக்கு உதவிக்கு வந்தது.

عن عكرمة، قال: قالت الجنوب للشمال ليلة الأحزاب: انطلقي ننصر رسول الله صلى الله عليه وسلم ، فقال الشمال: إن الحرّة لا تسري بالليل، قال: فكانت الريح التي أُرسلت عليهم الصبا.

அது கூட இரவு நேரத்தில் வீச வில்லை. சுத்தமான சுதந்திரமானவர்கள் இரவு நேரத்தில் தாக்க மாட்டார்கள் என்று சொல்லி அதிகாலை காற்று தாக்கியது.

 அந்த காற்றின் வேகத்தை சஹாபாக்கள் கூறுகிறாகள்.

 பெருமானார் (ஸல்) தன் அந்த காற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள தன்னுடைய தோழர்களை வீடுகளுக்கு திரும்புமாறு கூறினார்கள். இந்த செய்தியை கொண்டு சென்ற அப்துல்லாஹ் பின் உமர் ரலி  தன்னுடைய கேடயத்தால் தடுத்த படி நடந்தார். அது அது அவரது உடலில் மோதி காயத்தை உண்டு பண்ணியது. அவர் கண்ட சஹாபாக்களிடம் அவர் செய்தியை கூறினார். அவர்களால தங்களுடைய கழுத்துக்களை கூட திருப்ப முடியவில்லை.

 عن نافع، عن عبد الله، قال: أرسلني خالي عثمان بن مظعون ليلة الخندق في برد شديد وريح، إلى المدينة، فقال: ائتنا بطعام ولحاف قال: فاستأذنت رسول الله صلى الله عليه وسلم ، فأذن لي وقال: " مَنْ لَقِيتَ مِنْ أصحَابِي فَمُرْهُمْ يَرْجِعُوا ". قال: فذهبت والريح تسفي كل شيء، فجعلت لا ألقى أحدا إلا أمرته بالرجوع إلى النبي صلى الله عليه وسلم ، قال: فما يلوي أحد منهم عنقه؛ قال: وكان معي ترس لي، فكانت الريح تضربه عليّ، وكان فيه حديد، قال: فضربته الريح حتى وقع بعض ذلك الحديد على كفي، فأنفذها إلى الأرض.

 இந்த யுத்ததின் போது வெளியே இருந்த யூதர்கள் மட்டும் முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்ய வில்ல , பெருமானாரோ ஒப்பந்தம் செய்து நல்ல முறையில் மதீனாவிற்கு உள்ளே வாழ்ந்து கொண்டிருந்த பனூ குறைழா யூதர்களும் அவர்களுக்கு ஒத்துழைத்தார்கள். அல்லாஹ்வின் உதவி மட்டும் கிடைத்திருக்காவிடில் அன்று முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் அழிவு ஏற்பட்டிருக்கும்.

அதனால் இந்த யுத்தம் முடிந்து நிம்மதியாக வீடு வந்த பெருமானார் தனது ஆயுதங்களை கழற்ற தொடங்கிய போது அங்கு வந்த ஜிப்ரயீல் அலை மலக்குகளான நாங்கள் இன்னும் ஆயுதங்களை கழற்ற வில்லை என்று சொல்லி பனூ குறைழா யூதர்கள் இருந்த திசையை நோக்கி கை காட்டினார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களின் குடியிருப்பை முற்றுகை இட்டார்கள் 25 நாள் அந்த முற்றுகை நீடித்தது.

இறுதியில் பனூகுறைழாக்களில் போரிடும் திறன் படைத்த அத்தனை ஆணகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சுமார் 600 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.

خرج رسول الله صلى الله عليه وسلم الى سوق المدينة التي هي سوقه اليوم فخندق بها خنادق ثم بعث إليهم فضرب أعناقهم في تلك الخنادق يخرج بهم إليه أرسالا وهم ستمائة أو سبعمائة والمكثر لهم يقول كانوا بين الثمانمائة والتسعمائة.[39]

காருண்ய வடிவான நபி (ஸல்) அவர்களது வாழ்வில் இருந்த மிக கடினமான முடிவு அது. ஆனால் யூதர்களின் முறைகேடுகளுக்கு அது தகுந்ததாக இருந்தது.

அவர்கள் ஒரு போதும் நம்பத்தகுந்தவர்கள் அல்ல; இதனாலேயே அவர்கள் சபிக்கப்பட்ட சமுதாயமாக காலம் தோறும் இருந்து வருகிறார்கள்.

فَبِمَا نَقْضِهِم مِّيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً ۖ 

திருக்குர் ஆன் தொடர்ந்து சொல்கிறது

அவர்களுடை மோசடி காலம் தோறும் தொடர்வதை நீங்கள் தொடர்ந்து பார்ப்பீர்கள்.

وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَىٰ خَائِنَةٍ مِّنْهُمْ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۖ

இவ்வளவு எச்சரிக்கைகளை முஸ்லிம்களின் சொந்த வரலாறு சுமந்திருக்கிற போது தற்கால அரபுகள் யூதர்களோடு நடபு பாராட்டினார்கள்.

அதன் விளைவை இப்போது அனுபவிக்கிறார்கள்

உலகிற்கு ஒரு பாடம்

இன்று இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு எடுப்பார் கைப்பிள்ளைகளாக இருக்கிறார்கள்.

 நிச்சயம் அமெரிக்க நட்புறவுக்கு ஏற்ற நாடு அல்ல; அது நிச்சயம் தந்து நலனுக்காக எவரையும் நிர்பந்தம் செய்யும்.

 தனக்கு கட்டுபடாதவர்களை கொல்லும். இது தான் அவர்களுடைய வரலாறு. டிரம்ப் அதில் ஒரு சாம்பிள் தான்.

 இப்போது அவர்கள் கொலை செய்த அலீ ஹுசைன் குமைனி ஒரு மத தலைவர். கோடிக்கணகான மக்களின் அன்பிற்குரியவர்.

 திட்டமிட்டே இதை இஸ்ரேலும் அமெரிக்காவும் செய்திருக்கின்றன. இதற்காக ரமலானை தேர்வு செய்திருக்கின்றனர்.

 இந்த சாத்தான்களின் நோக்கம் முஸ்லிம் உலகத்தை அச்சுறுத்துவதாகும். அவர்களை தொல்லைக் குள்ளாக்குவதுமாகும்.

 ஈரானை அடித்தால் அது அரபு நாடுகளை தாக்கும் என்பது தெரியாதது அல்ல; அரபு நாடுகளிலும் முஸ்லிம்கள் நோன்பிருக்கிறார்கள் என்பதும் தெரியாதது அல்ல; அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரானை சீரழிப்பது மட்டுமே காரணம் அல்ல முஸ்லிம்களின் புனித மாதத்தையும் அதன் அமைதியையும் சீர் குலைப்பதே காரணமாகும்.

 இதை இந்தக் கண்னோட்டத்தில் பார்ப்பதே எதார்த்தமானது.

 ஈராணில் இருப்பவர்கள் ஷியாக்கள் அவர்கள் சுன்னத் ஜமாத்தின் கோட்பாடுகளுக்கு எதிரானவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த பொதுவான ஒரு உண்மை. ஷியாக்கள் சில நேரங்களில் சுன்னத் ஜமாத்தினரை ஆக்ரமிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்பதும் எதார்த்தமானது

 ஆனால் இந்த வேறுபாட்டை வைத்து இஸ்லாமிய உலகை பலவீனப்படுத்த எதிர்க்கள் முயற்சி செய்கிறார்கள்

 அதற்கு முஸ்லிம்கள் இடம் கொடுக்க கூடாது.

 ஷியா என்கிற கொள்கை குழப்பம் ஹிஜ்ரீ முதலாம் நூற்றாண்டிலேயே உருவாகி விட்டது அது பல சண்டைகளையும் கண்டிருக்கிறது. ஆனாலும் பெரிய எதிர்ப்பு இல்லாமல் சுன்னி ஷியா தொடர்பு 13 நூற்றாண்டுகளாக நீடித்து வந்திருக்கிறது.

 1979 வரை இந்த ஒற்றுமை நீடித்தது.

 ஈரானில் ஷியா புரட்சி ஏற்பட்ட பிற்கு தான் அமெரிக்கா ஈரானுக்கு எதிரானது. அத்தோடு அரபு நாடுகளும் எதிராயின. 1932 ல் தான் வஹாபிஸ் சவூதிகள் உருவானார்கள் என்பதை இங்கு மீண்டும் கவனிக்க வேண்டும்.

 எனவே முஸ்லிம்களுக்கும் ஷியாக்களுக்கும் கொள்கை ரீதியான கனத்த வேறுபாடுகள் இருக்கிறது என்றாலும்.

 அக்கிரமத்திற்கு எதிராகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் இஸ்ரேல் அமெரிக்கவின் தற்போதைய தாக்குதலை கண்டிப்பதும் தடுத்த நிறுத்த போராடுவதும்  நியாய்வுணர்வுள்ள அனைவரின் கடமையாகும்.

 சாமாணிய மக்கள்,  பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் மேலும் அதிக பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும் அக்கிரமம் ஒழிய வேண்டும் என்பதற்காகவு ம் தொடர்ந்து பிரார்த்திக்க வேண்டும்.

 عن أبي سعيد، قال: قلنا يوم الخندق: يا رسول الله بلغت القلوب الحناجر، فهل من شيء تقوله؟ قال" نَعَمْ قُولُوا: اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنا، وَآمِنْ رَوْعَاتِنَا "، فَضَرَبَ اللهُ وُجُوهَ أعْدائِهِ بالرِّيحِ، فهَزَمَهُم اللهُ بالرّيحِ.

 இன்று இரவு பத்ரு ஷஹீதுகளை நினைவு கூறுகிற நாள்

 இப்படித்தான் மிக அக்கிரமான முறையில் பத்று மைதானத்தில் மக்காவின் காபிர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அணி திரண்டு நின்றார்கள்.

 முஸ்லிம்களிடம் போதிய வசதிகள் எதுவும் இருக்க வில்லை.

 வெற்றிக்கு வெளியில் தேவைப்படும் காரணம் எதுவும் முஸ்லிம்களிடம் இருக்க வில்லை.

 كان النبي صلى الله عليه وسلم وأصحابه ثلاثمائة وأربعة عشر، يزيدون أو ينقصون، وعدد المشركين يتجاوز الألف

 كان مع المسلمين فارسان فقط: فرس للزبير بن العوام، وفرس للمقداد بن الأسود الكندى.

كان مع المسلمين سبعون بعيراً ومع الكفار سبعمائة
كان المسلمون من قبائل شتى، وكانت قريش من قبيلة واحدة.


ஆனாலும் அல்லாஹ் மகத்தான வெற்றியை முஸ்லிம்களுக்கு வழங்கினான்.

 இப்போது நடைபெறுகிற போர் இஸ்லாம் முஸ்லிம்களை பலவீனப்படுத்துவது என்ற அடிப்படையிலேயே நடக்கிறது.

பத்றுக்கு முன் அருளப்பட்ட வசனம் இது.

أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا ۚ وَإِنَّ اللَّهَ عَلَىٰ نَصْرِهِمْ لَقَدِيرٌ﴾ [الحج: 39

அநீதியாக யுத்தம் திணிக்கப்பட்டவர்கள் யுத்தம் செய்ய அனுமதி உண்டு.

 அது மட்டுமல்ல தீய நோக்கம் கொண்டவர்களை அழிக்கவும் அனுமதியுண்டு

 அமெரிக்கா இஸ்ரேலின் தற்போதைய நோக்கம் மத்திய கிழக்கை அமையற்றதாக ஆக்க வேண்டும் என்பது. ஏனெனில் அப்படி செய்தால் தான அரபு நாடுகள் அமெரிக்காவிற்கு அடிமையாக கிடப்பார்கள் 

ஈரானை அமெரிகக் வலிய தாக்குவதே கூட அங்கிருக்கிற பெட்ரோலுக்காகத்தான் ஏனெனில் உலகில் எண்ணைய் வளம் அதிகமுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்று. மட்டுமல்ல உலகில் முதலில் பெட்ரோல் கண்டு பிடிக்கப் பட்டதே ஈரானில் உள்ள மஸ்ஜிது சுலைமானி நகரத்தில் தான்.

இந்த தாக்குதலில் ஈரான் கொடுக்கிற பதிலடிகள் நியாயமானது.

ஈரானின் எதிர் போராட்டம் வலுவாக இருக்கிறது என்று சோஷியல் மிடியாக்களில் செய்தி வருகிறது. அது உண்மையாக இருக்கட்டும். அது காற்றாடு அலையாக கரைந்து போய்விடக் கூடாது. அல்லாஹ் துணை நிற்கட்டும். நாசகர சக்திகள் ஒழியட்டும்.

சண்டையை நிறுத்துங்கள் என்று நாங்கள் கோரப் போவதில்லை. ஒவ்வொரு தடவையும் பேச்சு வார்த்தைக்கு இடையிலேயே தாகுதல் தொடுப்பது அமெரிக்காவின் வேலையாக இருக்கிறது. எனவே அமெரிக்காவோடு இனி பேச்சு வார்த்தையை தொடரப் போவதில்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி கூறியிருக்கிறார். அது நிலைக்கட்டும்.

தீய நோக்கம் இஸ்லாமிய எதிர்ப்பு என்ற ஒரு பிரதான அடிப்படையி ல் நடை பெறக்கூடிய  இப்போரிலும் அல்லாஹ் பத்ரின் வெற்றியை தொடர்ந்து  தர வேண்டும்

  இஸ்லாமிய வெறுப்பு  அல்லது எதிர்ப்பு என்ற ஒரு பிரதான அடிப்படையி ல் நடை பெறக்கூடிய  இப்போரிலும் அல்லாஹ் பத்ரின் வெற்றியை தொடர்ந்து தர வேண்டும்

 

No comments:

Post a Comment