வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 15, 2017

அறிந்து கொள்ளுங்கள் !



அஸ்ஸலாமு அலைக்கும் .வரஹ்
அன்பான ஆலிம் நண்பர்களே1 
ரமலானின் கடைசி இரவுகளின் மகிமையை பேசி மக்களை அமல் செய்ய தூண்ட வேண்டிய நேரம் இது.
அல்லாஹ் நம்மை சாலீஹீன்களில் சேர்ப்பானாக1
ஜகாத் சம்பந்தமாக தெளிவான செய்திகள் போய்ச் சேர வேன்டிய நேரம் இது. 

ஜகாத் விசயத்தில் சமுதாயம் 14 நூற்றாண்டுகளாக அக்கறை காட்டி வருகிறது மகிழ்ச்சி.  துஆ
ஆயினும் சில தவறுகள் திருத்தப்பட வேண்டி உள்ளது.
சமீபத்தில் ரமலானுக்கு முன்னதாக திருநெல்வேலி மாவட்ட ஜமாத்துல் உலமா தலைவர்  பி ஏ காஜா முயீனுத்தீன் ஹஜ்ரத்தின் ஆர்வமிக்க ஏற்பாட்டில் நடை  பெற்ற ஜகாத் விழிப்புணர்வு க் கூட்டங்களில் அதிகம் கேட்கப்பட்ட ஒரு பிரதான கேள்வி.  குடியிருக்கும் வீட்டுக்கு ஜகாத்  கொடுக்க வேண்டுமா என்பது.
இதில் தெளிவாக தெரிந்து என்ன வெனில் ? மக்களூக்கு  ஜகாத்தின் சட்டங்கள்  இன்னும் சரியாக சென்று சேரவில்லை என்பதே1
ஆகவே ஜகாத் சட்டங்களை யார் மீது கடமை எதிலெல்லாம் கடமை / எதில் ஜகாத் இல்லை போன்ற விவரங்களையும்  ஜகாத் எந்த வகையில் செலவிடப் பட வேண்டும் என்பதையும் -  இன்றைய நடை முறைகளில் நாம் தெளிவு படுத்த வேண்டும்.
( ஜகாத்  சட்டங்களுக்கு முந்தைய பதிவுகளை காண்க!

-____________________________________________________
ஜகாத் நடை முறையில்  கவனிக்கப்பட வேண்டிய 4 விசயங்கள்
  • ·        தம்மீது ஜகாத் கடமையானதை பலர் இன்னும் உணராமல் இருக்கிறார்கள் 
( இதில் கை நிறைய சம்பளம் வாங்குபவர்களும் அடக்கம். 0
  • ·        ஜகாத் கடமையானவர்கள் ஏதோ தாமாக தீர்மாணீத்துக் கொண்டு  , போன வருஷம் 10 ஆயுரம் கொடுத்தோமா இந்தவருஷம் 12 ஆயிரம் கொடுக்கலாம் என்று   தீர்மாணித்துக் கொடுக்கிறார்கள். கொடுக்க வேண்டிய அளவு கொடுப்பதில்லை.
  • ·        ஜகாத் தொகை செலவழிக்கப்பட வேண்டிய வித்தில்  செலவழிக்கப்படுவதில்லை.
  • ·         ஜகாத் தொகையை வசூலிக்கு ம் அமைப்புக்கள் உரிய முறையில் செலவழிப்பதில்லை
ஜகாத் கடமையானவர்கள்

612 கிராம் வெள்ளிக்கு நிகரான சுமார் 30 ஆயிரம் ரூபாயை தனது தேவைகள் கடன் கள் போக அதிகப்படியாக ஒரு வருடம் முழுவதும் கையிருப்பில் வைத்திருப்பவர் ஜகாத் கொடுக்க வேண்டியவர் ஆவார்.
மாதச் சம்பளக்கார்  அல்லது வாடகை வருவாய் உள்ளவர் ஜகாத் கடமையானவராக இருந்தால் ஒரு வருடம் முழுவதும் கடந்திருக்க வேண்டும் என்பதில்லை. அவரது வருத்தில்  செலவு போக கையிருப்பில் உள்ள தொகைக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் .
ஆகவே ஒரு வருத்தில் ரூபாய் 30 ஆயிரத்திற்குமே ல் வைத்திருப்பவர்  ஒரு ஆலிமை அணுகி தன் மீது ஜகாத் கடமையாகுமா எவ்வளவு கடமையாகும் என்பதை கேட்டறிந்து கொள்ள வேண்டும்.
இது விசயத்தில் அறிவு பெற  அக்கறை எடுத்துக் கொள்வது ஜகாத் கொடுப்பதை விட நன்மை உறுதியானதாகும்.
ஏனெனில் ஜகாத் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு பல காரணங்கள் தேவை, அது ஹலால் ஆக இருக்க வேண்டும். உரிய முறையில் செலவிடப்பட்டிருக்க வேண்டும் என்பது போல.
ஆனால் ஜகாத் பற்றி அறிந்து கொள்வதற்காக எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் சொர்க்கத்தின் பாதையை நமக்குச் சொந்தமாக்கும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ{رواه الترمذي(2646)}

சரியாக கொடுக்க வேண்டியவர்கள்

ஜகாத் கொடுப்பவர்கள் தம் மீது கடமையான அளவு ஜகாத் கொடுக்கிறோமா என்பதை சரியாக கணக்கிட வேண்டும் . ஜகாத்தை நிறைவேற்றிய பின்பும் நாம் ஏன் குற்ற்வாளியாக நிற்க வேண்டும்.
எதில் ஜகாத் கடமையாகும் என்பதை தெரிந்து கொண்டால் கையிருப்பில் இருக்கிற பல மதிப்பானவற்றிற்கு ஜகாத் கொடுக்க தேவையில்லை என்பதை அறியலாம்.  கோடிக்கணக்கான விலை மதிப்புள்ளதாக இருந்தாலும் குடியிருக்கிற வீட்டிற்கு , உபயோகப்படுத்தும் வாகணங்களுக்கு, வைரக் கற்கள், குதிரைகள், காலியாக இருக்கும் வீட்டு மனைகளுக்கு ஜகாத் கிடையாது. வாடகை வருமானம் வரக்கூடியவற்றில் மூலப் பொருட்களூக்கு ஜகாத் கிடையாது, வாடகை வருமானத்திற்கு மட்டுமே ஜகாத் கடமையாகும். தொழில் நிறுவனங்களின் கட்டிடங்கள் தளவாடச்சாதணங்களில் ஜகாத் கடமையாகாது. என்பது போன்ற வற்றை செல்வந்தர்கள் அறிந்து கழித்துக் கொள்வார்கள் எனில்  அவர்கள் கொடுக்க வேண்டிய தொகை குறைவாகவே இருக்கும்.
கொடுக்க வேண்டிய தொகையை அவர்கள் கொடுத்து விடுவார்கள் எனில் நிச்சய்ம் அவர்களூக்கு அல்லாஹ் பரக்கத் செய்வான். சொத்துக்களையும் அவர்களையும் அல்லாஹ் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பான்.
ஒரு மூத்த ஆலிம் பெருந்தகைக்கு நேர்ந்த அனுபவம்
ஒரு பணக்கார்  பயானைக் கேட்டு விட்டு ஜகாத் பற்றிய விவரம் அறிய வந்திருக்கிறார்.  10 ஆயிரம் மட்டுமே அவர் அது வரை கொடுத்து வந்த தொகை.  ஹஜ்ரத் அவர் கொடுத்த விவரங்களைக் கணக்கிட்டுப்பார்த்து நீங்கள் 80 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூற , சரி ஹஜ்ரத் என்ற அவர் சொல்லிக் சென்றார்.  பெருநாள் முடிந்தும்  போன் செய்து ஹஜ்ரத் நான் 80 ஆயிரம் ஜகாத் கொடுத்து விட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அடுத்த வருடம் அதே பணக்கார்  போன் செய்து ஹஜ்ரத் இந்த வருடம் நான் 1 இலட்சத்து 50 ஆயிரம் ஜகாத் கொடுத்தேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கடுத்த வருடம் போன் செய்து ஹஜ்ரத் நான் இந்த வருடம் 3 இலட்சம் ஜகாத் கொடுத்தேன் என்று சொல்லியிருக்கிறார்.

நிச்சயம் ஜகாத் கொடுத்து யாரும் ஏழை ஆனதில்லை. மகிழ்ச்சி யோடு கொடுங்கள் . கணக்கிட்டு மார்ர்கம் சொன்னபடி கொடுங்கள் 

காத்ரிவர்ளுக்கு முழு உரிமையாக்கப்னும் 
 
மூன்றாவது ஜகாத் கொடுப்பவர்கள்  எப்படிக் கொடுக்கிறோம். என்பதை கவனித்துக் கொடுக்க வேண்டும் , ஏதோ என் கடமைக்கு கொடுக்கிறேண்.  வீட்டுக்கு வந்து கேட்கிறார்கள் கொடுக்கிறேன் என்று கொடுத்தால் ஜகாத் நிறைவேறாமல் போய்விடும்.
ஜகாத்த்தை யாருக்கு கொடுக்கிறோமோ அவர்களுக்கு தம்லீக் முழுவதும் சொந்தமாக்கி விட வேண்டும் என்ற நிபந்தனையை நாம் கவனிக்க வேண்டும்.
நம் உறவினர்கள் நமது ஊழியர்கள் நமது மஹல்லா வாசிகளே ஜகாத்தை பெற்றுக்கு கொள்ள மிக தகுதி படைத்தவர்கள் .  நமக்கு தேவையான ஒரு பொருளை காசு கொடுத்து வாங்குவதில் எவ்வளவு கவனம் எடுத்துக் கொள்வோமோ அதே அளவு கவனத்தை ஜகாத் கொடுப்பதிலும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இல்லை எனில் நாம் கொடுத்து  ஜகாத் ஆகாது,
அமைப்புக்களுக்கு ஜகாத் கொடுக்கிறா போது நாம் கொடுத்த தொகை உரியவர்களை சென்று சேர்ந்து விட்து என்று தெரிந்தால் மட்டுமே ஜகாத் செல்லும் , இல்லை எனில் திரும்ப கொடுக்க வேண்டியதாகிவிடும்.
அமைப்புக்களிடம் கொடுத்து விட்டாலே ஜகாத் நிறைவேறீ விடும் என்று நினைப்பது தவறானது.
பல பைத்துல் மால் அமைப்புக்கள் ஆண்டுக்கணக்கில் ஜகாத் தொகையை செலவிடாமல் வைத்திருக்கின்றன.  காரணா கேட்டால் எங்களைத் தேடி ஆட்கள் வரவில்லை என்கின்றனர்.
பல அமைப்புக்கள்  ஜகாத் பணத்தை வசூலித்து சண்டையிட்டுக் கொள்கின்றன.
பைத்துல் மால் அமைப்பு என்பது அதன் உரிய முறைப்படி அரபு நாடுகளில் கூட இல்லை, எனவே பைத்துல் மால் என்ற பெயரில் இயங்கும் அமைப்புக்களூக்கு கொடுத்த்தாலும் அவர்கள் உரியவர்களூக்கு உடனே கொடுத்து விட்டார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாத வரை ஜகாத் கொடுத்து விட்தாக ஆகாது,
இதை ஜகாத் கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டும்

காத் சூலிப்து அமைப்புக்ளுக்கு ப்போது லாலாகும்  ?
 
பைத்துல் மால் அமைப்பு அல்லது  ஜகாத வசூலிக்கும் அமைப்பை நடத் துகிறவர்கள்  தங்களது செயல்பாடுகள்  மார்க்க நடை முறைப்படி சரியானது தான் என தகுதி வாய்ந்த ஒரு மதரஸாவிலிருந்து பத்வா பெற்று க் கொள்ளாதவரை ஜகாத் தை வசூலிப்பது முறையாகாது,

அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய அமலை சரியாக நிறைவேற்ற தவ்பீக்கை தருவானாக1

No comments:

Post a Comment