إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ ۗ وَمَا اخْتَلَفَ
الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا
بَيْنَهُمْ ۗ وَمَن يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ
(19) فَإِنْ
حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ ۗ
முஸ்லிம் சமூகம் சார்ந்த சிந்தனைகள் இப்போது பொது வெளிகளில் அதிகமாக பேசப்படுகிறது.
சமூகத்தின் அரசியல் செல்வாக்கு சமூதாயத்தின் பொருளாதார பலம், பன்முக சூழலில் பொது அரங்குகளில் முஸ்லிம்களுக்கான மரியாதை ஆகிய விசயங்கள் முக்கியமான விவாதிக்கப்படுகிற விசயங்களாக இருக்கின்றன.
இவைகளில் சமுதாயம் என்ற பேச்சு முன்னே நிற்கிறது. அதனால் சமுதாயத்திலுள்ள அனைவரும் இது பற்றி பேசுகிறார்கள்.
நல்லவரோ கெட்டவரோ – அனுபவசாலியோ – போதிய அறிவற்றவரோ பெரியவர்களோ சிறியவர்களோ எவரும் கருத்துப் பேசுகிறார்கள். அதற்கு சமுதாயத்தை சார்ந்தவர் என்ற ஒரு தகுதி போதுமானதாக இருக்கிறது.
புரிந்து கொள்ளும் வசதிக்காக ஒரு உதாரணத்திற்க் சொல்கிறேன்.
ரமலான் மாதத்தில் சஹர் ஏற்பாடுகளில் தேவையற்ற கூட்டங்கள் வேண்டாம் என்று ஜமாஅத்துல் உலமா சபை ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறது. அதற்கு சிலர் எதிர் கருத்து தெரிவிக்கிறார்கள். “ பசங்க ஏதே உற்சாகமா வேலை செய்துட்டு போறாங்க அத ஏன் தடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இத்த கேள்வி சமுதாய ரீதியான கருத்தோட்டத்தில் எழுந்ததாகும் .
சமயத்தின் வழிகாட்டுதல் இங்கே அடிபட்டு போயவிடுவதை நுட்பமாக நாம் கவனிக்க தவறிவிடுகிறோம்.
மார்க்க ரீதியாக ஒரு நன்மை என்றால் அதற்கு வழி காட்ட ஜமாஅத்துல் உலமா சபையை விட வேறு யாருக்கு அதிக அக்கறை இருக்கப் போகிறது.
இது பொதுவாக பல விசயங்களிலும் பரவி வருகிறது. இஸ்லாமிய மார்க்கம் என்ற கருத்து பின்னுக்கு தள்ளப் பட்டு முஸ்லிம் சமூகம் என்ற சிந்தனை முற்படுத்தப்படுகிறது.
இதே போல இன்னொரு உதாரணம்
முஸ்லிம் சமுதாய பெண்கள் வட்டிக் கடைக்காரனிடம் கியூவில் நிற்கிறார்கள் .அதை தவிர்க்க ஜகாத் வசூலித்து கடன் கொடுத்தால் கந்து வட்டி தொல்லையிலிருந்து சமுதாயத்தை பாதுகாக்கலாம் என்று ஒருவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
இத்தகைய மனோ நிலை சட்டென்ற ஒரு பார்வையில் சரியாக தெரியலாம். ஆனால் இங்கே ஜகாத் விசயத்தில் மார்க்கத்தின் வழிகாட்டுதலை தவற விட்டு விடுவோம் கண்டு கொள்ளப் படுவதே இல்லை.
சமுதாய நலன் சார்ந்த சிந்தனை என்பதே பெரிதாக தெரிகிறது.
ஒரு வகையான பெரியாரிஸ கருத்தோட்டம் என்று இதை நாம் சொல்லலாம்.
வஹாபிஸத்தின் எழுச்சிக்கு பிறகு முஸ்லிம் சமூகத்தில், “எதைத் தான் நம்புவது? யாரை தான் நம்புவது” என்று ஏற்பட்ட குழப்ப சூழலில் தற்கால இளைஞர்களில் சிலர் பெரியாரிஸ கோட்பாடுகளுக்குள் தஞ்சமடைந்து வருகிறார்கள். சிலர் தமிழ் இன தேசீய வாதச் சிந்தனைக்குள் அடைக்காலமாகி இருக்கிறார்கள்.
அதாவது மார்க்கம் வேண்டாம். சமூகம் வேண்டும்
இன்றைய ஜும் ஆவில் முஸ்லி சமுதாயத்திற்கு ஒரு அடிப்படையான கருத்தை முன் வைக்க இருக்கிறோம்.
முஸ்லிம்களாகிய நாம், நமது அனைத்து விவகாரங்களிலும் இஸ்லாமிய மார்க்கத்தை முன் வைத்து அதன் அடிப்படையிலேயே அரசியல் பலம் பொருளாதார வளர்ச்சி சமூக நல்லுறவு சமுதாய வளர்ச்சி என்று சிந்திக்க வேண்டும்.
அப்போது தான் நமக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.
மார்க்கத்தின் அடிப்படைகளை ஒதுக்கி வைத்து விட்டு சமூகத்தின் பலம் என்று நினைத்தால் நிச்சயம் முஸ்லிம் சமுதாயம் வெற்றி பெற முடியாது. அது மேலும் சிக்கலையும் சிரமத்தையுமே சந்திக்கும்.
இது இஸ்லாம் வளர்ச்சி கண்டு வந்த காலத்தில் முஸ்லிம் உம்மத்திற்கு அதன் மிகப்பெரிய வழிகாட்டியான ஹழ்ரத் உமர் ரலி யல்லாஹு அன்ஹு கூறிய செய்தியாகும்.
نحن قوم أعزَّنا الله بالإسلام فمهما ابتغينا العزَّة في غيره أذلَّنا
الله
ஹாக்கிமில் அந்த ஹதீஸ் வருகிறது.
அது பல் சமூக சூழலில் போலித்தனமான வளர்ச்சியாக, ஆடம்பரமாக , இஸ்லாமிய வழிகாட்டுதல்களுக்கு
எதிரான சடங்குகளால் மரியாதையை தேடி மாற்று வழிகளில் சிந்திக்க நினைப்பதற்கு மிகப் பெரும் எச்சரிக்கையாகும்.
عن طارق بن شهاب قال : خرج عمر بن الخطاب إلى الشام ومعنا أبو عبيدة بن] الجراح فأتوا على مخاضة وعمر على ناقة له ، فنزل عنها وخلع خفيه فوضعهما على عاتقه ، وأخذ بزمام
ناقته فخاض بها المخاضة ، فقال أبو عبيدة :
يا أمير المؤمنين أأنت تفعل هذا ، تخلع خفيك وتضعهما على عاتقك ،
وتأخذ بزمام ناقتك ، وتخوض بها المخاضة ؟ ما يسرني أن أهل البلد استشرفوك ، فقال عمر :
أوه لو يقول ذا غيرك أبا عبيدة جعلته نكالا لأمة محمد -
صلى الله عليه وآله وسلم
- إنا كنا أذل قوم فأعزنا الله بالإسلام فمهما نطلب العزة بغير ما أعزنا
الله به أذلنا الله .
நமது பெருமை நமது மார்க்கமே! நமது வெற்றியும் நமது மார்க்கமே!
முஸ்லிம்களுக்கு திருக்குர்
ஆன் வலியுறுத்துகிற ஒரு செய்தி உண்டு.
அல்லாஹ்வுக்கும்
அவனது தூதருக்கும் கட்டுப்படுவது தான் முஸ்லிம்களுக்கு உயிர்ச்சத்து ஆகும்.
மீனுக்கு தண்ணீர் போல
முஃமினுக்கு இதாஅத்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا
لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ ۖ
வரலாற்றில் இதற்கு நீண்ட அனுபவம் உண்டு.
பேராசான் இப்னுல் கையிம் அல் ஜவ்ஸி சொல்கிறார்
قال ابن القيم -رحمه الله-: "طاعة الله ورسوله، وتحكيم الله ورسوله هو سبب السعادة عاجلا
وآجلًا، ومَن تدبر العالم والشرور الواقعة فيه؛ علم أن كل شر في العالم سببه
مخالفة الرسول والخروج عن طاعته، وكل خير في العالم؛ فإنه بسبب طاعة الرسول.
அன்னியர் யாருடைய மரியாதையை காட்டிலும் பெருமானாரின் வழி முறை தான் எனக்கு தேவை என்று சொன்ன உஸ்மான் ரலி
ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது மக்காவின் காபிர்களோடு பேச்சு
வார்த்தைக்கு சென்ற உஸ்மான் ரலி அவர்களின் கீழாடை கணுக்காலுக்கு மேலே இருந்த்து. மக்காவின்
மக்கள் கீழாடையை தாழ்த்திக் கட்டுவதை தான் உயர் குலத்தின் அடையாளம் - பெருமையின் சின்னம்
என்று கருதுவார்கள். ஆடை மேலே ஏறி இருந்தால் அது அடிமைகளுக்கான அட்டயாளமாக இருந்த்து.
உஸ்மான் ரலி அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்ற அபான்
பின் சயீத் ஆடையை கீழே இறக்கி விடு என்று கூறினார்.
அதற்கு உஸ்மான் ரலி அவர்கள் பதில் கூறிய பதில் ஒரு சராசரி பதில்
அல்ல – முஸ்லிம் உம்மத் எந்த சூழலிலும் நினைவில் வைத்துக் கொள்ளா வேண்டிய பதிலாகும்.
மிக முக்கியமான ஒரு கட்டத்தில் உமர் ரலி அவர்களைப் போன்ற பெரும் தோழர்கள் மக்காவிற்குள்
தூது போவதற்கு தயங்கி நின்ற சந்தர்ப்பத்தில் அந்த பணியை முடிப்பதற்காக அனுப்பப் பட்ட
உஸ்மான் ரலி தன்னுடைய வேலை முக்கியம் சமுதாயத்த்திற்கு அதுதான் இப்போது அவசியம் என்று
கருதி மக்காவின் தலைவர்களின் மரியாதையை பெற்றுக் கொள்வதற்காக தனது கீழாடையை இறக்கி
கட்டவில்லை. அவர் உறுதி படச் சொன்னார்.
هكذا إزرة صاحبنا ،
فأرسله
إليهم فخرج عثمان على راحلته حتى جاء عسكر المشركين ، فعتبوا به وأساءوا له القول ، ثم
أجاره أبان بن سعيد بن العاص ابن عمه وحمله على السرج وردفه ، فلما قدم قال : يا ابن عم ، ما لي
أراك متخشعا ؟ أسبل ، قال : وكان إزاره إلى نصف ساقيه ، فقال له عثمان :
هكذا إزرة صاحبنا ،
சொந்த துயரத்தை காட்டிலும் அல்லாஹ்வின் ரஸூலுக்கு கட்டுப்படுவதை பிரதானமாக
நினைத்தர் உம்மு ஹபீபா ரலி அவர்கள்
உம்மு ஹபீபா ரலி அவர்களின் தந்தை அபூசுப்யான் இறந்த பிறகு 4 ம்
நாளில் அம்மையார் பணிப்பெண்ணை எண்ணை கொண்டு வரச் சொல்லி தேத்துக் கொண்டார்.
தந்தையின்
மீது அலாதியான பிரியம் கொண்டவர் அவர். அவரது தந்தையும் அப்படித்தான் மகள் மீது பேரன்பு
கொண்டவர். இந்த நிலையில் தந்தையை இழந்த துயரத்தை காட்டிலும் 4 ம் நாள் தலைக்கு எண்ணை
தேய்த்து விட்டு அவர் சொன்னார். எனக்கு இப்போது எண்ணை தேய்த்துக் கொள்ள வேண்டிய அவசியம்
இல்லை. ஆனாலும் 3 ம் நாளுக்கு மேல் யாருக்காகவும்
துக்கம் அனுஷ்டிக்க கூடாது என்று ரஸூல் (ஸல்) அவர்கள் சொன்னார்களே அதற்காகத்தா வாசணை
எண்ணையை பூசிக் கொண்டே என்று சொன்னார்கள்.
பேராபத்து
நிறைந்த சூழலிலும் ரஸீலின் சுன்னத்தின் படி தான் நடப்பேன் என்று சொன்ன ரிப்யீ ரலி
ஹிஜ்ரி
22 ம் வருட்த்தில் காதிஸீய்யா யுத்தத்தில்
வல்லரசுப் படையான பாரசீகத்தின் பெரும் படை சுமார் 2 இலட்சம் பேர்களுடன் அணிவகுத்து
நின்று கொண்டிருந்த நிலையில் வெறும் 30 ஆயிரம் பேர்களுடன் அவர்களை எதிர்த்து நின்றார்கள்
முஸ்லிம்கள், இது என்ன மாதிரி துணிச்சல் என்பதை புரிந்து கொள்ள முடியாத பாரசீகப் படைத்தளபது
ருஸ்தும் பேச்சு வார்த்தைக்கு ஒருவரை அனுப்பி வைக்குமாறு மூஸ்லிம் படைத்தளபதி சஃது
பின் அபீவக்காஸ் ரலியிடம் சொல்லியனுப்பினான்.
சஃது
ரலி ரிப் இய்யி பின் ஆமிர் ரலி யை அனுப்பி வைத்தார்கள்.
அவர்
நேரடியாக ருஸ்துமின் கூடாரத்திற்குள் தன்னுடைய கழுதையோடே நுழைந்தார்.
அவரோடு
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ருஸ்தும் சொன்னான் . இந்த பிரச்சினையை நாங்கள் எங்களது மேலதிகாரிகளிடம் நான் விவாதிக்க
வேண்டும் அதற்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டான். ஒரு நாளா இரண்டு நாட்களா என்று திருப்பிக்
கேட்டார் ரிப் இய்யு ரலி. இல்லை கடிதம் எழுதி பதில் வரும் வரை என்றான் ருஸ்து. கொஞ்சமும்
தயக்கமில்லாமல் ரிப் இய்யு ரலி கூறினார். மூன்று நாட்களுக்கு மேல் அவகாசம் அளிப்பது
எங்களது நபியின் வழி முறை அல்ல.
قال " رستم " : " قد سمعت مقالتك ، فهل لكم أن تؤخروا هذا الأمر حتى
ننظر فيه وتنظروا " ؟ ،
قال
: " نعم كم أحب إليكم ؟
يومـًا
أو يومين ؟ "
، قال : " لا بل حتى نكاتب أهل رأينا ورؤساء قومنا " ،
فقال : " ما سن لنا رسول الله ـ صلى الله عليه وسلم ـ أن نؤخر الأعداء عند
اللقاء أكثر من ثلاث ، فانظر في أمرك وأمرهم واختر واحدة من ثلاث بعد الأجل
யுத்தம்
நடந்த்து. முஸ்லிம்கள் வெற்றியடைந்தனர். பாரசீகம் முஸ்லிம்கள் வசமானது.
இவை
மிக சாதாரணமாக இஸ்லாமிய வரலாற்றில் இன்னும் இது போல ஏராளமான செய்திகள் உண்டு.
மார்க்கத்திற்கு
கட்டுப்ப்டுவதுதான் வெற்றிக்கும் மரியாதைக்குமான வழி என்று முஸ்லிம் உம்மத் உறுதி கொண்டிருந்த்து.
அதற்குரிய பலனையும் அது கண்ட்து.
15
நூற்றாண்டு கால வரலாறு நெடுகிலும் இதற்கான உதாரணங்கள் நிறைந்து கிடக்கின்றன.
அல்லாஹ்
ரஸூலுக்கு கட்டுப்படுத்தவே தங்களது உயிர்த்தலின் அடையாளம் என்ற உறுதிப் பாட்டிலிருந்து
முஸ்லிம் சமூகம் கொஞ்சமாகவேனும் அலட்சியம் காட்டுமானால் அது சஞ்சலத்திற்கு ஆட்பட்டு
விடும். தடுமாற்றங்களுக்கும் தவறான போக்கிற்கும் ஆளாகி விடும்.
மேற்கூறிய
திருமறையின் அடுத்த வாசகம் இந்த எச்சரிக்கையை
தருகிறது.
وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَحُولُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهِ
وَأَنَّهُ إِلَيْهِ تُحْشَرُونَ (24)
சமீப
காலத்தில் பெரியாரிஸ பற்றுக் கொண்ட இளைஞர்களும் அது போல தமித்தேசிய கருத்தோட்ட்த்தில்
இணைந்த இளைஞர்களும் அவர்களுடைய கருத்துக்களில் மிக தீவிரமாக இருக்கிறார்கள். பெருமானார்
(ஸல்) அவர்களை கூட மலிவாக நினைக்கிறார்கள் பேசுகிறார்கள்
சேகுவாரா
வை பெரிதாக நினைக்கிறார்கள்.
பெருமானாரை
விட சேகுவாரா பெரிய சாதனையாளரா என்பதை அளவிடுவதற்கு அவர்களது அறிவு செல்வதில்லை.
சேகுவாராவை
அல்லது அது போன்ற நவீன செயற்பாட்டாளர்களை இத்தகைய இளைஞர்கள் பெரிதாக நினைப்பது உண்மையில்
ஆக்டிவாக வாழ்வதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு எஸ்கேப்பிஸமே ஆகும்.
ஏனெனில்
சேகுவாராவை ஒப்புக் கொண்டால் தலைவராக ஏற்றுக் கொண்டால் நீங்கள் அதற்காக எந்த கடமையையும்
நிறைவேற்ற வேண்டியதில்லை. ஒரு டீ ஷர்ட் அணிந்து கொண்டால் போது. ஆனால் முஹம்மது (ஸல்
அவர்களை ஏற்றுக் கொண்டால் அப்படியா ?
அதன்
பின் எத்தனை கடமைகள் இருக்கின்றன?
இத்தகையை
இளைஞர்கள் உண்மையான வரலாற்று புரட்சிகளின் பக்கம் கவனம் செலுத்தாமல் மேம்போக்கான –
ஏமாற்ற மளிக்க கூடிய அடையாளங்களுக்கு மயங்கி போகிறார்கள். இது உண்மையில் ஒரு அறியாமை
ஆகும்.
அல்லாஹ்
ரஸூலுக்கு கட்டுப்படுவதை உயிர்த்தலின் அடையாளமாக கருதுகிற மனப்பான்மை குறைகிற போது
இத்தக்கய சஞ்சலத்திற்கு ஆட்பட நேரும். அதைதான் அல்லாஹ் இதயத்தையும் மூளையையும் திரையிட்டு
விடுவதாக கூறுகிறான்.
சமூகமே
முக்கியம் என்று சிந்தித்தவர்கள் பெரியாரை போல இன்னும் பலர் உண்டு.
அவர்களால்
தான் இன்று சாமாணிய மக்களில் படித்தவர்கள் பணியில் இருப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்
என்று ஒரு மாயை சொல்லப் படுவதுண்டு.
அப்படி
படித்தவர்கள் பெரியாரின் கொள்கையில் இருக்கிறார்களே என்ற ஒரு கேள்வியை திருப்பிக் கேட்டால்
இவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
அதே
போல இனம் தேசியம் என்று பேசிய எவரும் அது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகட்டும்.
ஜெர்மனிய அதிபர் ஹிடலர் ஆகட்டும் தமது சொந்த இனத்தை சிக்கலில் தவிக்க விட்டு சென்றார்களே
தவிர வெற்றியடைய வைக்கவில்லை.
இதற்கு இன்னும் நீள உதாரணம் காட்ட முடியும்
பெரியாரிஸம்
அல்லது தேசிய இனம் பற்றிய சிந்தனைக்கு ஆட்பட்டிருக்கிற முஸ்லிம்கள் முதலில் அந்த தத்துவங்களின்
புரட்சி என்ன என்பதையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புரட்சியையும் ஒரு தெளிவான வழிகாட்டியின்
துணையோடு நிச்சயமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
வீரமாக
பேசுவது வேறு நல்லது செய்பவர்களை உருவாக்குவது என்பது வேறு
தொழுகைக்காக
தாழ்கிற தலையும் ஈகைக்காக நீள்கிற கையுமாக வாழ்கிற ஒரு சமூகத்தை வார்த்தெடுத்த நபிகள்
நாயகம் (ஸ்ல) அவர்களுக்கு நிகரான ஒரு சீர்திருத்த வாதி இன்னொருவரை காண முடியாது.
அவருக்கு
முற்றாக கீழ் பணிந்து நிற்பதே எதிலும் நல்லது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
எனவே
அரசியல் பொருளாதாரம் சமூக மேம்பாடு என வாழ்க்கையில் அத்தியாவசியமான அனைத்து அம்சங்களுக்கும்
முன்னதாக மார்க்கம் என்ற சொல்லை முற்படுத்தி வைக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். அது தான் அவர்களது வெற்றிக்கு வழியுமாகும்.
இஸ்லாம்
விரும்பும் கல்வி
இஸ்லாம்
விரும்பும் கல்யாணம்
இஸ்லாம்
விரும்பும் கடன்
இஸ்லாம்
விரும்பும் சமூக உறவுகள்
என
எதிலும் இஸ்லாமிய மார்க்கத்தை முன்னிறுத்தவும் மார்க்கத்தை சொல்லித் தருபவர்களை முன்னிறுத்தவும்
செய்ய வேண்டும்.
அப்படிச்
செய்தால் நிச்சயம வெற்றி பெறுவோம். அப்படிச் செய்தால் தான் நாம் வெற்றி பெற முடியும்.
இல்லை
எனில். அல்லாஹ் எச்சரிக்கிறான்.
சோதனைகள்
தொடர் கதையாகத்தான் இருக்கும். வேதனைகளுக்கும் பஞ்சம் இருக்காது.
فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَن
تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ (63)
இந்த வசனம் இறைனது கட்டளைகளை எதிர்ப்பவர்கள் என்று கூறுகிறது.
மார்க்கம் வேண்டியதில்லை. சமூகம் போதுமானது என்று கருதுகிறவர்கள்யும் இது எடுத்துக்
கொள்ளும்.
அல்லாஹ் நம்மையும் நமது சந்த்திகளையும் பாதுகாப்பானாக
கொஞ்சமாக அறிவு பெற்று விட்டால் மார்க்கத்தை விட்டு விட்டு சமூகத்தை
பற்றி சிந்திப்பது தான் அழகு என்று சிலர் நினைக்கிறார்கள். கொஞ்ச அந்தஸ்த்து கிடைத்து
விட்டால் சமூகத்திற்கு உழைப்பது தான் சிறப்பு என்று சிலர் நினைக்கிறார்கள்.
தீனை பொருட்படுத்தாமல் இத்தகைய சிந்தனை வளருமானால் அது நமக்கும்
நம் சமூகத்திற்கும் எந்த அளவிலும் நல்லதல்ல
மிக அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டிய செய்தி இது
புனிதம் மிக்க ரமலானில் பாவங்களுக்காக வருத்தப் படுகிற நேரத்தில்
மார்க்கத்தின் வழிகாட்டுதல்களை முன்னிருத்த தவறிய பாவங்களில் இருந்தும் மன்னிப்பை கோருவோம்.
No comments:
Post a Comment