வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 04, 2026

ஆளுமை பண்புகள்

திருக்குர் ஆன் நமக்கு ஒரு துஆவை ஒதக் கற்றுத்தருகிறது.

وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

இறையா எங்களௌ இறையச்ச முடையோருக்கு அதிகாரியாக ஆக்குவாயா!

இந்த துஆ முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அதிகாரம் செலுத்துபவராக இமாம்) இருக்க ஆசைப்பட வேண்டும் என்பதை கற்பிக்கிறது.

குறந்த பட்சம் தனது குடும்பத்தின் மீது ஆளுமை செலுத்துபவராக அவர் இருக்க வேண்டும்.

இந்த வசனத்தின் சூழல் குடும்பத்தை பற்றியது.

எங்களுடைய உஸ்தாத் சித்தையன் கோட்டை ஹெச் கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் இதற்கு அருமையாக விளக்கம் சொல்வார்கள்.

யா அல்லாஹ் எங்களது குடும்பத்தை இறையச்ச முள்ள குடும்பமாக ஆக்கு! அதை வழி நட்த்திச் செல்ல கூடியவர்களாக எங்களை ஆக்கு என்பது இதன் பொருள் என்று கூறுவார்கள்.

(இந்த வகையில் சிந்திக்கையில் இது என்ன அருமையான துஆ என்று தோன்றும்! நமக்காகவும் நம் குடுமப்த்திற்காக பிரார்த்திக்க இதை விட அற்புதமான துஆ வேறென்ன இருக்கப் போகிறது? . குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் இதை விட வேறென்ன தேவை ? அல்லாஹ் நமது குடும்பத்தை இறையச்சமுள்ள குடும்பமாக்கி அதை அந்த வழியில்  நடத்திச் செல்ல கூடிய தவ்பீக்கை வல்ல நாயன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!)

ஆளுமை என்பது என்ன? யாரெல்லான்  ஆளுநர்கள்?

இந்த வசனத்தை தெளிவாக புரிந்து கொண்டால் வழி நட்த்திச் செல்லுதல் என்பது தான் ஆளுமை என்பது தெளிவாகும்.

நம்மில் ஒவ்வொருவரும் அதிகாரம் செய்ய வேண்டியவர்களே என்பதும் தெரியவரும்.

நாம் குறைந்த்து நம்முடைய குடும்பத்தை ஆளுமை செய்ய வேண்டியவர்கள். வாய்ப்புக் கிடைத்தால் நமது நிறுவனத்தை அல்லது நமது நாட்டை ஆள வேண்டியவர்கள்.

முன்னோடி யார்?

நமது முன்னோடி யார் என்பதை முதலில் தீர்மாணிக்க வேண்டும்.

அதாவது யாரை போல நாம் ஆளவேண்டும் என்ற சிந்தனை நமது துவக்கதை சரியாக அமைத்துக் கொள்ள உதவும்.

அதாவது என்னுடைய குடும்பம் இந்த குடும்பத்தை போல இருக்க வேண்டும்.

 என்னுடைய நிறுவனம் இந்த நிறுவனத்தை விட சிறப்பாக இருக்க வேண்டும்

என்னுடைய ஆட்சி அவருடைய ஆட்சியை போல என்று மக்களிடம் பெயர் பெற வேண்டும்

என்பது போன்ற தீர்மாணங்கள் நமக்கு இருந்தால் அது நமது பயணப் பாதைக்கு ஒரு இலக்கை கற்றுத்தரும் . அது போல அதை நோக்கி செயல்படுவதை இலேசாக்கவும் செய்யவும்.

பெருமானாரிடம் ஒரு உதாரணம்

உலகின் அனைத்து துறைகளுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபி அவர்களின் தனிப்பட்ட ஆளுமை திறன்களில் ஒன்று

 அவர்கள் தனக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித் மதீனாவை புனித பூமியாக அறிவித்தார்கள்.

 (அதாவது மக்கா எப்படியோ அது போல மதீனாவிலும் முஸ்லிம்கள் மட்டுமே செல்ல முடியும். அங்கும் எவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும். அங்கிருக்கிற தாவரங்கள் மிருகங்களுக்கு கூட நிம்மதி கிடைக்கும்)

 இவ்வாறு அறிவிப்புச் செய்யும் போது இபுறாஹீமின் வழியை தான்  தான் இதில் பின்பற்றுவதாக நபி (ஸல் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

  إنَّ إبراهيمَ حَرَّمَ مَكَّةَ ودَعا لأهلِها، وإنِّي حَرَّمتُ المَدينةَ كما حَرَّمَ إبراهيمُ مَكَّةَ، وإنِّي دَعَوتُ في صاعِها ومُدِّها بمِثلَي ما دَعا به إبراهيمُ لأهلِ مَكَّةَ.

 الراويعبدالله بن زيد | المحدثمسلم

 பெருமானாரின் சக்தி மிக்க இந்த நடவடிக்கை ஒரு முன்னுதாரத்தை அடிப்படையாக கொண்டிருந்தது என்பதையும். அந்த முன்னுதாரணம் பெருமானாருக்கு வழிகாட்டியது என்பதையும் இந்த துஆவிலிருந்து அறியலாம்.

 ஆளுமை என்பது என்ன ?

 ஆளுமை என்றால அதிகாரம் செய்வது, மிரட்டுவது, கண்டிப்பாக நடந்து கொள்வது தன்னுடைய அந்தஸ்த்தை நிலை நாட்டிக் கொள்வது என்று பலரும் நினைக்கிறார்கள்.

 முன்னாள் சோவியத் யூனியனின் தலைவராக இருந்த ஜோசப்  ஸ்டாலின் தனக்கு எதிரான எவரையும் அனுமதிக்க முடியாது என்ற கொள்கை கொண்டிருந்தார். த கிரேட் பர்ஜ் (the great purge) என்ற பெயரில் தனது சொந்த கட்சியை சேர்ந்த தனக்கு எதிரானவர்களை கைது செய்து கொடுமையான பனிப் பிரதேசங்களில் டிரக்கு களில் கொண்டு போய்  குப்பையை போல கொட்டி விட்டு வர ஏற்பாடு செய்தார்.

 இவ்வேறு செய்வதை இரும்புக்கை என்று நினைத்துக் கொண்டார்கள்.

 திருக்குர் ஆன் ஆளுமைக்கு அருமையான ஒரு சொல்லை பயனப்டுத்துகிறது. இமாம்

 இமாம் என்றால் வழி நடத்துபவர் என்று பொருள்.

 ஒரு சொல்லின் கீழ் அனைவரையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். ஆனால் அது அவர்களாகவே விரும்பிச் செய்கிற ஏற்பாடாக இருக்கும்.

 எனவே ஆளுமை என்பது மக்களை அவர்களது விருப்பத்தின் படி கட்டுப்பாட்டுடன் வழி நடத்திச்ச் செல்வது ஆகும்.

 மிக அழுத்தமாக புரிந்து கொள்ல வேண்டிய செய்தி இது.

 ஆளுமை பண்புகள்

 1.   வழிகாட்டுதல்

 ஆளுமையின் பிரதான் பண்பு வழிகாட்டுதல் ஆகும்.

 முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்களை பெருமளவில் கட்டுப்படுத்தி இன்றளவு வைத்திருக்கீறார்கள் என்றால் அதற்கான காரணம் ஒவ்வொரு விவகாரத்திலும் அவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள் என்பதாகும்.

 எதற்கெடுத்தாலும் அடுத்தவரக்ளுக்கு உத்தரவிட்டே பழகு வது ஆளுமை என்று நினைக்கிறார்கள் மக்க:ள்

 நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்காவில் முட்டுக்கால் போட்டு  கையை அழுத்திக் கொண்டு ஜம் ஜம் தண்ணீர் குடிக்க எழுந்தார்கள். நாங்கள் தண்னீரை எடுத்து வருவோமே என்று பெருமானாரிடம் தோழர்கள் சொன்னார். அதற்கு பெருமானார் கூறினார்கள்.

 اللله جعلني عبدا كريما ولم يحعلني جبارا عنيدا

 தாடி வைப்பது , திருமணம் செய்து கொள்வது, ஆண்கள் தங்கம் அணியாமல் இருப்பது என பல வழி முறைகள் அவர்கள் வழிகாட்டிச் சென்றவை  இன்றளவும் பெருமானாரின் வழிகாட்டுதலாக நிமிர்ந்து நிற்கின்றன.

 நமது குடும்பத்திற்கு நமது தொழிலாளர்களுக்கு நமது நாட்டு மக்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை நாம் வழங்க வேண்டும்.

 தொழுகையை சரியாக கடைபிடியுங்கள் என்ற வணக்கம் சார்ந்த வலியுறுத்தல்கள்

 நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் என்ற பொது வணிகம் சார்ந்த வழிகாட்டுதல்கள்

 நீதியாக நடந்து கொள்ளுங்கள் என்ற பொது விவகாரம் சார்ந்த வழி காட்டுதல்களையும்

 இது போன்ற ஒவ்வொன்றையும் நமது குடும்பத்திற்கும் நம்மைச் சார்ந்த வர்களுக்கும் நாம் சொல்ல வேண்டும்.

 நமது பிள்ளைகளுக்கு நாம் உண்மையே பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தோமா ? நேரத்திற்கு தொழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தினோமா? பெரியவர்களை மதிப்பதற்கு வழிகாட்டினோமா? கடமையை செய்ய இலஞ்சம் வாங்க கூடாது  என அறிவுறுத்தினோமா ? என்ற அலைவரிசையில்  நாம் யோசித்தால் நாம் சரியான ஆளுநராக இருந்திருக்கிறோமா என்பதை புரிந்து கொள்ல்லாம். இனி எப்படி சரியாக இருப்பது என்பதை தீர்மாணித்து கொள்ளலாம்.  

 2 கருணை

 இந்த வழிகாட்டுதல்களில் ஆளுநர் என்பவர் கருணையான வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது ஆளுமையின் அடுத்த பிரதான பண்பாகும்.

 ஆளுநர் தன்னை வேறு ஒருவராகவும் தன் கட்டுப்பாட்டில் இருப்பவர்களை வேறு நபர்களாகவும் கருதிக் கொண்டு உத்த்ரவுகளை இடக் கூடாது.

 தன்னுடைய தன் குடும்பத்தாருடைய விவகாரங்களில் எந்த மென்மையை அவர் விரும்புவாரோ அதே போல மக்களிடமும் அவர் நடந்து கொள்ள வேண்டும்.

 ஹஜ்ஜுக்கு வந்திருந்த அபூபக்கர் ரலி அவர்களின் ஒரு ஒட்டகையை அவருடைய பணியாளர் தொலைத்து விட்டார். வைத்திருந்த்து ஒன்றே ஒன்று அதை கூட பாதுகாக தெரியாமல அவர் தொலைத்து விட்டதில் கோப மடைந்த அபூபக்கர் ரலி அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் அவரை அடிக்க போனார். இதை பார்த்த பெருமானார் (ஸல்) அவர்கள் மிக நேரடியாக அபூபக்கர் ரலி அவர்களை கண்டிக்காமல் நாசூக்காக உணர்த்தினார்கள்.

 ஆயிஷா நாயகியின் அக்கா அஸ்மா ரலி அவர்கள் இந்த செய்தி பற்றி கூறுகிறார்கள்

 خرجنا معَ رسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ حتَّى إذا كنَّا بالعرجِ نزلنا فجلسَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ وعائشةُ إلى جنبِه وأنا إلى جنبِ أبي بكرٍ فَكانت زمالتُنا وزمالةُ أبي بَكرٍ واحدةً معَ غلامِ أبي بَكرٍ قالَ فطلعَ الغلامُ وليسَ معَه بعيرُه فقالَ لَه أينَ بعيرُك قالَ أضللتُه البارحةَ قالَ معَك بعيرٌ واحدٌ تضلُّهُ قالَ فطفقَ يضربُه ورسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ يقولُ انظروا إلى هذا المحرمِ ما يصنعُ

 ஆளுமையின் இந்த பண்புகளை அல்லாஹ் பெருமானாருக்கு திருமறையின் ஒற்றை வசனத்தில் வழிகாட்டினான்.

 அது. அஃராப் அத்தியாயத்தில் அந்த வசனம் வருகிறது.

 خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ (199 -

இந்த வாசகம் சின்னது ஆனால் மிகப் பெரிய  ஆளுமைக்கான வழிகாட்டுதல்களை கொண்டது.

 முதல் இரண்டு வாசங்கள் நாம் மேலே சொன்ன இரண்டு வழிகாட்டுதல்களை உள்ளடக்கியிருக்கிறது. முதல்வாது வழிகாட்டுதல் இரண்டாவது மன்னிப்பு கருணை.

 அதை இந்த வசனம் வரிசை மாற்றி முதலில் கருனையையும் அடுத்து வழிகாட்டுதலையும் குறிப்பிடுகிறது. காரணம் கருணையின் அடிப்பட்டயிலான வழிகாட்டுதல்கள் தான் பயனளிக்கும்.  

 இரண்டாவது ஒரு மனிதரின் உண்மையான ஆளுமை திறன் என்பது அவருக்க் கீழே இருப்பவர்கள் தவறு செய்யும் போது அதை எதிர் கொள்வதில் தான் வெளிப்படும்.

 உஹது யுத்த்திலும் இதை பெருமானாருக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.

 அவர்கள் உமது கட்டளையை மீறியதால் பெரும் இழப்பு ஏற்பட்டு விட்டது. சரி நீங்கள் அவர்களுக்கா   மன்னிப்புத் தேடுங்கள். அவர்களை ஒதுக்கி விடாதீர்கள். தொடர்ந்து அவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.

 وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ

 3 கண்காணித்தல்

 ஆளுநார் என்பவர் எப்போதும் அதட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஆனால் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹ் நபி லூத் அலை அவர்களை அவர்களது ஊரை விட்டு நல்ல்வர்களை அழைத்துக் கொண்டு கிளம்புங்கள் என்று சொன்ன போது அல்லாஹ் சொன்னான்.

 நீங்கள் அவர்களுக்கு பின்னால் செல்லுங்கள் .

 

وَاتَّبِعْ أَدْبَارَهُمْ

சாதாரணமாக தலைவர்கள் எல்லாம் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து விடுவார்கள். ஆனால் அவரக்ளை பின்னாலிருந்து கண்காணிப்பதை அவரக்ள் விட்டு விட்ட்டால் மிக நல்லவர்களாகவே இருந்தாலும் கூட தப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆளுநர் தனது கட்டுப்பாட்டில் இருப்பவர்ளை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். லூத் நபி திரும்பிச் செல்லும் போது அவருடன் இருந்தவர்கள் நல்லவர்கள் தான் ஆனாலும் அவர்களுக்கு பின்னே செல்லுமாறு அல்லாஹ் நபி லூத்துக்கு உத்தரவிட்டான்.

 4 எதிர்ப்பை வெளிப்படுத்தனும்

 ஆளுநர் தவறுகளை காணும் போது கண்டும் காணாமல் இருக்க் கூடாது

 நன்மையை ஏவ வேண்டும் என்ற சொல்லுக்குள் தீமையை தடுக்க வேண்டும் என்ற உத்தர்வும் உள்ளடங்கியிருக்கிறது. இரண்டும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத்து ஆகும்.

 இந்த உலகில் ஆளுமை திறனுக்கான மிகப் பெரிய ஆபத்து தீமையை கண்டு கொள்ளாமல் இருக்கும் போக்குதான்

 பிள்ளைகளிடம் இருக்கும் குறைகளை கண்டு கொள்ளாத பெற்றோர்

அதிகாரிகளிடம் இருக்கும் குறைகளை கண்டு கொள்ளாத அமைச்சர்கள்.

இவை அனைத்தும் ஆளுமைக்கான பெரிச சருகுதலாகும்.

 நபி மூஸா அலை அவரக்ள் கிழ்ரு நபியோடு மெளன் உடன்படிக்கை செய்து கொண்டு பயணப் பட்ட போதும் கூட அவரிடம் இருந்து வெளிப்பட்ட செயல்களில் தனக்கு ஆட்சோபனைகள் இருந்த போது அதை உறுதி பட வெளிப்படுத்தினார்கள்.

 أَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا

أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ لَّقَدْ جِئْتَ شَيْئًا نُّكْرًا

 இது மூஸா நபியின் ஆளுமை திறனுக்கான அடையாளமாகும்.

 அதிகாரிகள் கண்கானிப்பாளர்களாக இருக்க வேண்டும். தவறு நடந்த பிறக்கு  சால்ஜாப்பு சொல்லி சமாளிப்பவர்களாக இருக்க் கூடாது.

 5 வீண் எதிர்ப்புக்களை அலட்சியப்படுத்துதல்

 ஆளுமை திறன் கொண்டவர்களுக்கு எதிர்ப்புக்கள் வருவது சகஜ்ம் அதில் அவசியமானதை கருத்தில் எடுத்துக் கொண்டு திறுத்திக் கொள்ல வேண்டும்.

அநாவசிமானதை ஒதுக்கி விட வேண்டும்.

 அல்லாஹ் மேற்கூறிய வ்சனத்தில் இதை இறுதியாக வெளிப்படுத்துகிறான்.

 وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ

நம்மில் ஒவ்வொருவரும் ஆளுநர்களே!

 நாம் இந்த அடிப்படையில் நமது அதிகாரத்தின் வலிமையை நிலை நாட்டிக் கொள்வோம்.

 அல்லாஹ் நம்மை இமாம்களாக ஆக்கியருள்வானாக!

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment