வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 21, 2026

ஆட்சியும் அதிகாரமும்

 தமிழ்நாடு ஒரு புதிய வரலாற்றை கண்டிருக்கிறது.

முஸ்லிம் லீக் கட்சியை சார்ந்த ஒருவர் அமைச்சராக ஆகியிருக்கிறார்.

இத்தனை ஆண்டுகள் வலிமையான அரசியல் சக்திகளுக்கு பக்க பலமான துணையாக முஸ்லிம் லீக் இருந்த போது இந்த வாய்ப்பு கிடைக்க வில்லை. கிடைக்க வில்லை என்பது மட்டுமல்ல யோசிக்க கூட முடியவில்லை.

அடுத்த்தாக நம்மை ஆளும் மத்த்திய அரசு முஸ்லிம்களின் அதிகாரத்தை எல்லா மட்ட்ததிலும் மரியாதையை அற்றதாக ஆக்க தீவிரமாக முயன்று வருகிற நிலையில் கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் முஸ்லிம் பெயர் சூடிய கட்சியின் அமைச்சர்கள் கம்பீரமாக சிவப்பு விளக்கு சுழலும் அரசு கார்களில் பவனி வருகிறார்கள்.  

இதில் ஒரு முஃமினாக நாம் யோசிக்க வேண்டிய சில செய்திகள் இருக்கின்றன.

முதலாவது அல்லாஹ் விரும்புகிறவர்களுக்கே அதிகாரம் கிடைக்கிறது.

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (26

 இதற்கு முந்தைய தேர்தலில் முஸ்லிம் லீக் கூட்டணி சேர்ந்திருந்த கட்சி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற போதும் கூட மூன்று இடங்களில் போட்டியிட்ட மூஸ்லிம் லீக் மூன்று இடங்களிலும் தோற்றுப் போனது.

 இந்த முறை முஸ்லிம் லீக் கூட்டணி சேர்ந்திருந்த கட்சி தோல்வியை தழுவிய நிலையிலும் முஸ்லிம் லீக் போட்டியிட்ட 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.

 அது மட்டுமல்ல எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய கட்சி ஆளும் அரசில் பங்கேற்கிற வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பும் கூட கெஞ்சிக் கூத்தாடி பெற்ற வாய்ப்பு அல்ல தேடி வந்த வாய்ப்பு.

திருக்குர்ஆனின் உறுதிமிக்க கருத்தை இன்றைய நடப்புகள் நிஜப்படுத்திக் கொண்டிருக்கிருக்கின்றன.

 அதே போல இப்போது அதிகாரத்திற்குரியவரக்ளாக பொறுப்பேற்றிருக்கிற பலரும் இந்த பதவியை கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக அவரக்ளுக்கே கூட இன்னும் முழுமையாக நாம் ஒரு அமைச்சர் என்ற  ஒரு நம்பிக்கை வந்திருக்காது.  

 நாம் இதைத்தான் அழுத்தமாக சொல்கிறோம். ஆட்சி அதிகாரம் யாருக்கு என்பதை அல்லாஹ் தீர்மாணிக்கிறான்.

 இந்த இறைவசன் சொல்லப் பட்ட சூழலும் மிகவும் நாசூக்கானது.

 ஹிஜ்ரீ 4 ம் ஆண்டில் முஸ்லிம்களை எதிர்ந்த்து அன்று அரபுப் பிரதேசத்தில் இருந்த அரபுகள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு மதீனா நகரின் வாசலுக்கு வந்து சேர்ந்திருந்னர். என்ன செய்வதென்று அனைவரும் திகைத்து நின்ற நிலையில் சல்மான் அல் பார்ஸி ரலி அவரக்ள் ஒரு ஆலோசனை சொன்னார்கள். எங்களது பாரசீக நாட்டில் எதிரிகள் நம் ஊருக்குள் நுழையக் கூடாது என்பதற்காக ஊருக்கு வெளியே எல்லை போல பெரிய அகழியை வெட்டிக் கொள்வோம் என்றார்கள்

புதியதாக இருந்தாலும் இந்த யோசனையை தவிர அப்போதைக்கு வேறு வழி இல்லை என்பதால் பெருமானார் சம்மதித்தார்கள். அப்படி ஒரு அகழி வெட்டப்படும் போது ஒரு பாறையை உடைக்க முடியவில்லை. முஹம்மது நபி (ஸல்) அந்த பாறையை உடைத்தா

ர்கள். அப்போது அதிலிருந்து ஒரு ஒளி வெளிப்பட்ட்து அதை பார்த்து புளகாங்கிதம் அடைந்த பெருமானார் (ஸல்) எனக்கு பாரசீகத்தின் சாவி தரப்பட்டு விட்ட்து என்றார்கள். இதே போல மூன்று முறை நடை பெற்றது. இந்ந செய்தி முஸ்லிம்கள் மகிழ்ந்து கொண்டிருந்த போது எதிரிகள் எள்ளி நகையாடினர். இருக்கிற ஊரை காப்பாற்றிக் கொள்ள விசித்திரி மான ஏற்பாட்டை செய்தி காதிருப்போர் உலகை ஆளப் போகிறார்களாம் என்று கேலி பேசினார்கள் /

 அப்போது இந்த வசனத்தை அல்லாஹ் இருக்கினான்.

 ஏளனமாக பார்க்கப் பட்ட முஸ்லிம்கள் தான் பின்னர் உலக்க அரசாட்சி செய்யும் தலைவர்களாக உயர்ந்தனர்.

 இந்த துஆவை  தொடர்ந்து ஓதிக்கொண்டால் நமக்கு தேவையான இடத்தில் தேவையான அதிகாரம் தேடி வரும் என்று கூறுகிறார்கள் அறிஞர்கள்.

 பெருமானாருட ஒரு தொழுகைக்கு வந்த சேர முடியாத முஆத் பின் ஜபல் தனக்கு கடன் கொடுத்தவன் தன்னை தொழுக்கைக்கு வரமுடியாத வாறு அடக்கு முறை செய்த்தை பற்றிய கூறிய போது இந்த ஆயத்தை கொண்டு அடக்கு முறை நீங்கி அதிகார செல்வாக்கை பெறலாம் என்கிறார்கள் அறிஞர்கள்.

 

وقال معاذ بن جبل : احتبست عن النبي - صلى الله عليه وسلم - يوما فلم أصل معه الجمعة فقال( يا معاذ ما منعك من صلاة الجمعة ؟ ) قلت : يا رسول الله ، كان ليوحنا بن باريا اليهودي علي أوقية من تبر وكان على بابي يرصدني فأشفقت أن يحبسني دونك . قال( أتحب يا معاذ أن يقضي الله دينك ؟ ) قلت : نعم . قال( قل كل يوم قل اللهم مالك الملك - إلى قوله - بغير حساب رحمن الدنيا والآخرة ورحيمهما تعطي منهما من تشاء وتمنع منهما من تشاء اقض عني ديني فلو كان عليك ملء الأرض ذهبا لأداه الله عنك ) . خرجه أبو نعيم الحافظ 

 திர் பாரா வண்ணம் இத்தகை பொறுப்புக்கள் யாருக்கும் வரலாம். நாளை நமக்கும் கூட வரலாம்.  அப்படி வருகிற போது அதற்குரிய தகுதி படைத்தவரகளாக நாம் இருக்க வேண்டும்.

 அமைச்சர் பதவி என்றல்ல; ஒரு தொழில் நிறுவனத்தை வழி நடத்துகிற பதவி. ஒரு குடும்பச் சொத்தை நிர்வகிக்கிற பதவி, ஒரு ஜமாத்தின் பதவி என பொறுப்புகள் எதுவும் திடீரென் எது வந்தாலும் நாம் அதற்குரிய அடிப்படை தகுதி நம்மிடம் இருக்கிற அளவில் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

  உமர் ரலி அவரக்ள் அற்புதமாக கூறினார்கள்.

 قالَ عمرُ: تفقَّهوا قبلَ أن تُسَوَّدوا

அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே அதற்குரிய தகுதியை வைத்திருக்க வேண்டும்.

குறைந்த பட்சம் அதிகாரத்திற்கு வந்த பின் அதற்குரிய பொறுப்புக்களை பற்றி அறிந்திருக்க வேண்டும்.

 இப்படித்தான் மக்கா வின் ஆட்சித்தலைவராக அத்தாப் பின் உஸைதை பெருமானார் (ஸல்) அவர்கள் மக்கவின் ஆளுநராக தேர்தெடுத்தார்கள். அப்போது அவருடக்கு வயது 18

 ஹிஜ்ரி 8 ல் மக்கா வெற்றியின் போதுதான் அவர் இஸ்லாமை தழுவினார் அவருடைய ஆளுமை திறனை கண்ட பெருமானார் (ஸல்) அவரை அப்போதே மக்காவின் ஆளுநராக அறிவித்தார்கள்.

 ஹிஜ்ரீ 8 ம் வருடம் மக்கா இஸ்லாமிய அதிகாரத்திற்கு வந்த பிறகு முதல் ஹஜ்ஜிற்கு அவரே தலைமை ஏற்றார்.

 அவருக்கான பொறுப்புணர்வை பெருமானார் (ஸல்) அவர்கள் கற்பித்தார்கள்.

 وقال له رسول الله صلى الله عليه وسلم: «يا عتاب، تدري على من استعملتك؟ استعملتك على أهل الله عز وجل، ولو أعلم لهم خيرا منك استعملته عليهم»؛ 

 

பாரம்பரியம் மிக்க வரலாற்று புகழ் மிக்க மகா நகரின் மேயராக சிறு வயதில் பொறுப்பேற்றிருந்தாலும் அவர் திறம்பட நிர்வாகம் செய்தார்.

 மக்காவில் சந்தேகத்திற்குரிய நபர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட அவர் நல்ல மக்களிடம் மிகவும் கருனையோடு நடந்து கொண்டார்.

 மக்கா நகரில் தனது முதன்மையான பொறுப்பு மக்கள் முதலில் தொழுகையை நிலைநாட்டச் செய்வது என்கிற பொறூப்பை உனர்ந்து கொண்டார்.

 தொழுகைக்கு வராமல் இருப்பவர்களின் தலை நான் கொய்வேன் என்று எச்சரித்தார்.

 அவருடைய திறமையை பறை சாற்ற பெருமானார் மற்று மொரு சொன்னார்கள்.

 அவரது கடுமைய சிலர் பெறுமானாரிடம் முறையிட்ட போது பெருமானார் (ஸல்) அவரது சிறப்பையும் திறனை எடுத்துச் சொல்லி

 அமைதிப்படுத்தினார்கள். தட்டித்தட்டியே சொர்க்கதின் கதவை திறக்க வைத்து விடுவார் என்று அவரை பாராட்டினார்கள். .

 فقال أهل مكة: يا رسول الله، استعملت على أهل الله أعرابيا جافياً، فقال: إني رأيت فيما يرى النائم أنه أتى باب الجنة، فأخذ بحلقة الباب فقعقها حتى فتح له ودخل

 உலகை சுற்றிப் பார்க்க புறப்பட சுற்றலா பயணி இப்னு பதூதா அந்த பயணத்தினிடையே கொஞ்ச காலம் லக்ஷ்தீவில் ஆளுநராக இருந்தார். அதே போல தில்லியின் நீதிபதியாகவும் இருந்தார். அப்படி பொறுப்பில் இருந்த ஒவ்வொரு சந்தர்ப்ப்த்திலும் இன்று வரை இந்திய அதிகாரிகளுக்கு கிடைத்து வருகிற உபகாரங்களை செய்தார்.  

 புதிய இளம் அமைச்சர்கள் தங்களது பொறுப்புணர்ந்து நடந்து தமிழகத்தின் வெற்றிக்கு பாட பட அல்லாஹ் தவ்பீக் செய்வானாக

 கடந்த பல ஆண்டுகளாக  தமிழகம் பயனித்த பாதையிலிருந்து இலஞ்சம் முறைகேடான் அதிகார போக்கு ஆகியவற்றிலிருந்து விலகி அனைத்து மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சியளிக்கிற ஒரு நல் அரசை புதிய அரசு வழங்கட்டும்.

 முஸ்லிம்களுக்கான நியாயமான அதிகாரம் கிடைக்க அல்லாஹ் தவ்பீக் செய்யட்டும்.

((மதீனா முனவ்வராவின் தாருன் னயீம் விடுதியின் அறை என் 204 லிருந்து ஹஜ்ஜுக்காக மக்காவிற்கு புறப்பட்டு கொண்டிருக்க சந்தர்பத்தில் )

No comments:

Post a Comment