நம்முடைய தமிழ் நாட்டில் சட்ட மன்ற தேர்தல் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள். தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 87 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது.
அதை ஜனாநயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று பலரும் கூறுகிறார்கள். இதில்
கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் இந்த சதவீத கணக்கு அதிகரித்திருப்பதற்கு எஸ்
ஐ ஆர் ஒரு காரணமாகும்.
சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட தீவிர வாக்காளர் சீரமைப்பு எஸ் ஐ ஆரில் சுமார்
ஒரு கோடிப் பேர் நீக்கப்பட்டதும் ஒரு காரணமாகும். அதாவது மொத்த வாக்காளர் எண்ணிக்கை
குறைந்த போது இந்த முறை வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது. வாக்காளர்
பட்டியலில் 100 பேர் இருக்கும் போது 70 பேர் வாக்களித்தால் அது 70 சதவீதமாக தெரியு.
வாக்காளர் பட்டியலில் 90 பேர் இருக்கும் போது இதே 70 பேர் வாக்களித்தால் அது 77 சதவீதமாக
தெரியும். இந்த வித்தியாசம் தான் அது .
எப்படி இருப்பினும் கடும் கோடை வறுத்தெடுக்கிற சூழலில் மக்களில் ஏராளமானோர்
தங்களது சொந்த ஊர்களுக்கு அதிக காசு பணத்தை செலவு செய்து சென்று வாக்களித்திருக்கிறார்கள்
என்பது ஜனநாயத்தை பாதுகாப்பதில் அவர்களுக்கு உள்ள அக்கறையை காட்டுகிறது.
வாக்களித்த அனைவரும் பாராட்டிற்குரியவர்கள்.
நாட்டின் மீது அக்கறை கொண்டு நாம் வாக்களித்திருக்கிறோம் என்றால் நிச்சயம் இறைவன்
நல்ல மாற்றத்தை தருவான்.
ஓட்டுப்போடுகிற வரை நாம் கட்சி அரசியலுக்குள் கட்டுப்பட்டு கிடக்கலாம். அதன்
பிறகு நாம் ஒரு நல்ல ஆட்சிக்காக ஆசைப்பட வேண்டும். பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அதிகாரத்திற்குரியவர் யார் என்பது அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது.
قلْ اللَّهُمَّ مَالِكَ
الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ
وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى
كُلِّ شَيْءٍ قَدِيرٌ(26) آل عمران
தாலூத்தின் படையில் ஒரு சாதாரண கவண் எறியும் வீர்ராக
இ ருந்த தாவூத் அலை பிற்காலத்தில் பாலஸ்தீன் மண்ணின் அரசர் ஆனார்.
இந்திய வரலாற்றில் தேவகவுடாவோ சந்திரசேகரோ மன்மோகன்
சிங்கோ பிரதமர் ஆவார்கள் என்று அவர்கள் அறிவிக்கப்படும் வரை உலகம் கற்பனை செய்து கூட
பார்த்த்து கிடையாது.
எனவே இறைவனின் தீர்மாணத்தில் இருப்பவே ஆட்சிக்கு
வரமுடியும்.
அப்படி வருகிறவர் யாராக இருந்தாலும் அவர் நல்லாட்சியை
தருபவராக இருக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்ற
சிந்தனையோடு நமது ஜனநாயக கடமை முடிந்து போய் விடக் கூடாது.
நேர்மையான வெளிப்படையான முன்னேற்றத்தை கொடுக்கிற
ஒரு அரசு வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டும்.
நாம் தொடர்ந்து பிரார்த்திக் கொண்டிருப்போம்.
اللهم لا تسلط
علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا
இஸ்லாமின் ஐந்தாம் கலீபா உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களைப் போன்ற குணமும்
பக்குவமுள்ள ஆட்சியாளர் நமக்கு வேண்டும்.
விக்கீபீடியா அவர் குறீத்து ஆச்சரியப்படுகிறது.
ஆட்சியாளர்கள் தான் சொல்லும் வேலைகளை செய்ய அதிகாரிகளை நியமிப்பார்கள். வரலாற்றில்
முதன் முறையாக தன்னை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்தவர் உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ்
- Rulers
usually appoint people to watch over their subjects. I appoint you a watcher
over me and my behaviour. If you find me at fault in word or action guide me
and stop me from doing it Umar Ibn Abd al-Aziz
உமர் பின் அப்துல் அஜீஸ் சொல்வார்
இந்த முறை நமது மாநிலத் தேர்தலில் நிறைய காசு செலவழிக்கப் பட்டது. வெற்றி பெறுபவர்கள்
அப்படி காசு செலவு செய்யப் பட்டதன் பலனாக இந்த வெற்றியை கருதாமல் உண்மையில் மக்களுக்கு
சேவையாற்ற ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பதாக கருத வேண்டும்.
அல்லாஹ் நாளை வெற்றி பெறுகிறவரகளுக்கு இந்த சிந்தனையை தர வேண்டும் என்று நாம்
தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டிருப்போம்.
ஹஜ் தொடங்கி விட்டது.
தேர்தல் முடிந்த கையோடு நம்முடைய தமிழ் நாட்டிலிருந்து ஹஜ்ஜுக்கான பயணமும் ஆரம்பமாகிவிட்டது.
நேற்றைய தினமே தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலமாக ஹஜ் செய்யும் சில குழுவினர் தங்களது
பயணத்தை தொடங்கி விட்டனர். அல்ஹமது லில்லாஹ்
ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ்ஜுக்கு செல்லும் தமிழக ஹாஜிகள் மே 5 ம் தேதி முதல் 10
ம் தேதி வரை பயணப்பட இருக்கிறார்கள் –இன்ஷா அல்லாஹ்.
இந்த ஆண்டு ஹஜ் கமிட்டி மூலமாக 6534 – பேர் ஹஜ் செய்ய உள்ளனர்.
இது ஒரு சாதனை அளவாகும். பெரும்பாலும் தமிழகத்திலிருந்து செல்வோர் எண்ணிக்கை
4 ஆயிரமாகத்தான் இருந்தது.
அதே இந்த ஆண்டு தனியார் ஹஜ் ஏற்பாட்டாளர்கள்
மூலமாக சுமார் 4 ஆயிரம் பேர் ஹஜ்ஜு செய்ய வுள்ளனர். இதுவும் கூட ஒரு சாதனை அளவே ஆகும்.
ஆக மொத்த்தில் இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து சுமார் 10 ஆயிரம் பேர் ஹஜ்ஜு கடமையை
நிறைவேற்றவுள்ளனர்.
அல்லாஹ் அவர்கள் அனைவருடைய ஹ்ஜ்ஜையும் கபூல் செய்வானாக! அவர்களது பயணத்தை இலேசாக்குவானாக!
அவர்கள் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக!
இந்த ஆண்டு அரபு பிராந்தியத்தில் போர் மேகம் முற்றிலும் விலகாத ஒரு நெருக்கடியான
ஒரு சூழலில் ஹஜ் பயணம் தொடங்கியிருக்கிறது.
அல்லாஹ் இந்த பயணத்தின் பரக்கத்தால் இந்த யுத்த்தை முடிவுக்கு கொண்டு வருவானாக!
ஹஜ் கடமை
இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து
சுமார் 10 ஆயிரம் பேர் ஹஜ் செய்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.
ஹஜ் செய்யாதவரை وَمَن كَفَرَ என்ற வார்த்தை குறிக்கிறது. எவர்
நன்றி கெட்டவராக
நடந்து கொள்கிறாரே என்பது அதன் பொருளாகும்.
இதுவும்
தொழுகை நோன்பு போல ஒரு கடமையே
عن ابن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم :
" بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله ، وإقام
الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان .
வயதான பிறகு தொழுது கொள்ளலாம் நோன்பு வைத்துக் கொள்ளலாம் என்று நினைப்போமா?
தொழாமல் நோன்பு வைக்காமல் இருப்போமா ?
மாட்டோம் . இல்லையா ?
عن أبي أمامة أن النبي صلى الله عليه وسلم قال : " من لم تحبسه حاجة
ظاهرة أو مرض حابس أو سلطان جائر ، ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا "
ஹஜ்ஜுக்கான வசதி வந்த உடன் ஹஜ்
செய்ய வேண்டும் என்பதே மூன்று ஹனபி ஹன்பலி மாலிக்கி ஆகிய மூன்று இமாம்களின் சட்டமாகும். இமாம்
ஷாபி ரஹ் அவரக்ள் மட்டுமே அடுத்த ஆண்டு களுக்கு தள்ளி வைத்துக் கொள்ள லாம் என்ற அனுமதியை
தருகிறார்கள். அதுவும் கூட அடுத்த ஆண்டிற்கு செல்வம் இருக்கும் என்ற உத்தரவாதமும் அடுத்த்
ஆண்டு செய்து விடுவோம் என்ற தீர்மானமும் இருப்பவருக்குத்தான் இந்த தாமத்திற்கான அனுமதியை
அவர்கள் வழங்குகிறார்கள்.
ஒருவருக்கு ஹஜ்ஜுக்கு செல்கிற அளவு ஆரோக்கியமும் அதற்கேற்ற காசு பணமும் இருந்தால் அவர் மீது ஹஜ் கடமையாகிவிடும்.
ஒரு
வர் அவரது வீட்டை விற்று விட்டு ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இதே போலத்தான வசதியான கார்களை வைத்திருப்பவர்கள் . அளவுக்கு அதிகமான நகைகள் வைத்திருப்பவர்கள் நிலங்களை வைத்திருப்பவர்கள் அனைவரும் அவர்களிடம் ஹஜ்ஜுக்கு செல்வதற்கேற்ற வசதி இன்றைய சூழாலில் சுமார் 5 இலட்ச ரூபாய்க்கான வசதி இருக்குமானால் ஹஜ் கடமையாகிவிடும்.
இங்கு அவர்களுடைய நாட்டில் செக்கிங்கை முடித்துக் கொண்டால் போதுமானது. ஜித்தாவில் இறங்கி அவர்கள் நேரே ரூமுக்கு போய் விடலாம். அவரக்ளுடைய லக்கேஜ்கள் அவர்களுடைய ரூம்களுக்கே கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள்//
மாஷா அல்லாஹ்
அங்கிருந்தே
தங்களது சாதனை பயணங்களை தொடங்கினார்கள்.
இதற்கு
ஏராளமான பட்டியல் இருக்கிறது
கெளதுல்
அஃழம் ரஹ்
இப்னு
பதூதா ரஹ்
இப்னு
ஹஜர் ரஹி
என்ற
அந்த பட்டியல் மிக நீளமானது.
இப்னு
பதூதா தன்னுடைய 18 வயதில் ஹஜ்ஜு பயணமாகிறார். ஹஜ்ஜில் அவர் பன்னாட்டு இஸ்லாமிய மக்களை
பார்க்கிறார். அன்கெல்லாம் செல்ல வேண்டும் என்று ஆசை பிறக்கிது. அப்படியே பயணமாகிறார்.
25 வருடம் கழித்து வீடு திரும்பினார். அதன் மூலம் அவரது பயணங்கள் என்ற புதையல் உலகிற்கு
கிடைத்தது. அது அவரது வாழ்க்கையை காலம் கடந்து நிலைத்திருக்க கூடியதாக ஆற்றிவிட்டது.
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலரும் ஹஜ் பயணத்தின் பின்னரே தங்களது பெருமைக்குரிய நிலையை பெற்றார்கள்.
எனவே ஹஜ் கடமையானவுடன் அதை நிறைவேற்றி விடுவோம். தாமதிக்க வேண்டாம்.
ஹஜ் பயணம் புறப்பட தொடங்கியிருக்கீற நேரத்தில் ஹஜ் கடமையாக இருக்கிற ஒவ்வொரு முஸ்லிம் தம் மீதான கடமையை உணர்ந்து கொள்ளட்டும்.
எல்லாம்
வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அங்கீகரிக்கப் பட்ட ஹஜ்ஜின் பாக்கியங்களை பல முறை தந்தருள்வானாக!
No comments:
Post a Comment