கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வாழும் விதவைகளின் மொத்த எண்ணிக்கை 4.3 கோடி. இது நாட்டிலுள்ள மொத்தப் பெண்களது எண்ணிக்கையில் 7.3 சதவீதம் ஆகும்.
தமிழகத்தை
பொறுத்தவரை, விதவைப் பெண்களின எண்ணிக்கை
38.56 லட்சமாக
இருந்தது. (சுமார் 40 இலட்சம்) இது தமிழகத்தில் வாழும்
மொத்த பெண்களின் எண்ணிக்கையில் 10.7 சதவீதம்.
இப்புள்ளி
விவரத்தின்படி தமிழகத்தில் வாழும் விதவைகளின் எண்ணிக்கை தேசிய அளவை விட 3.4 சதவீதம் அதிகமாகும். அதாவது தமிழகம் இந்தியாவில் அதிகமான விதவைகள் வாழும் மாநிலங்களில்
ஒன்றாக இருக்கிறது.
ஒரு காலத்தில்
கணவன் இறந்து போவதால் பெண்கள் விதவைகள் ஆகினர்.
விதவைப்
பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அவர்கள் தங்கள் கணவர்கள் இறப்பிற்கு மது போதை, கஞ்சா மற்றும்
போதைப்பொருட்கள், விபத்து, தற்கொலை, கரோனா போன்ற பல காரணங்களை
கூறினர். இதில் பிரதானமாக
இருந்தது மதுப்பழக்கமாகும்.
தற்காலத்தில் விவாவரத்து எண்ணிக்கை
அதிகரித்திருப்பதால் விதவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
மற்ற சமூகங்களில் நிகழ்வது போல
முஸ்லிம் சமூகத்திலும் விதவைகளின் எண்ணிக்கை
அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
விதவைகளின் நிலை
நம் நாட்டிலுள்ள
மற்ற சமூகங்களில் விதவைகளின் நிலை துயரம் மிகுந்த்து.
சதி
கணவனை இழந்த மனைவி வாழ்வதற்கு தகுதியற்றவளாக இந்து சமூகம் கருதியது.
கணவனின் உடலுக்கு தீ மூட்டப்படுகிற போது அதிலேயே அவனுடைய மன்னவியும் விழுந்து – அல்லது தள்ளப்பட்டு – செத்து விட வேண்டும் என்ற நிலை இந்து சமூகத்திடம் இருந்தது. 1829 ம் ஆண்டு அதாவது கிட்ட தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு சதி தடை செய்யப்படுவதற்கு முன்பு வரை அது சாதாரணமாக நடைமுறையில் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் ஆண்டுக்கு ஆண்டு இந்த பழக்கம் அதிகரித்து வந்தது.
சுதந்திரம் பெற்ற பிறகும் கூட இந்தியாவில் ஆங்காங்கே வெளியுலகிற்கு தெரியாமல் இது நடந்து வந்தது. 1987 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் தியோராலா என்ற ஊரில் ரூப்கன்வர் என்ற 18 வயது இளம் அவளுடைய கணவனுடைய உடலுடன் சேர்த்து எரிக்கப்பட்டாள். அவருக்கு திருமணமாகி 8 மாதங்களே அகியிருந்தன.
இந்த செய்தி பற்றி பேசுகிற விக்கீபீடியா ஒரு தகவலை கூறுகிறது
On 4 September 1987 Roop
Kanwar was burnt alive on the funeral pyre of her husband. Several
thousand people attended. பல ஆயிரம் பேர் அதை வேடிக்கை பார்த்தனர்.
இதை விட வேடிக்கை என்னவென்றால் ஊரறிய நடைபெற்ற இந்த கொலை குற்றத்திற்காக 45 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. அதில் பலர் விடுதலை செய்யப் பட்டனர். சிலர் மீது வழக்கு தொடர்ந்து நடந்த்து. இரண்டு வருடங்களுக்கு முன் அதாவது 2024 ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட எஞ்சியோர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இப்போது சதி நடை முறைக்கு தடை இருந்தாலும் கூட இந்து சமூகத்தில் விதவைகளின் மகிழ்ச்சியான வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்கும் ஏற்பாடுகள் எதுவும் பலமாக இல்லை.
ஒருவேளை அவள் உயிர் வாழ்ந்தாலும் கூட மனித உணர்வுகளை கொண்ட ஒரு ஜீவனாக அவள் மதிக்கப்பட வில்லை. அப்படி வாழ சமூகம் அவளை அனுமதிக்கவில்லை.
மறுமணம் ஏற்கப்பட வில்லை
இந்தியாவில் 1856 ஆண்டு விதவைகள் மறுமணச் சட்டம் என்ற ஒரு சட்டம் இயற்றப் பட்ட்து என்றாலும் கூட அது இந்து சமூகத்தின் மன நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட வில்லை.
ஒடுக்கப்படுதல்
மறுமணத்திற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிற என்பது மட்டுமல்லாமல் விதவை ஒரு துர் சகுனமாக கருதப்படுகிறாள். பொது நிகழ்ச்சியில் ஒதுக்கப்படுகிறாள். நல்ல விழாக்களில் ஓரங்கட்டப்ப்டுகிறாள். அவளது மரியாதைக்கு அன்றாடம் ஒரு பெரும் சோதனை காத்திருக்கிறது.
நமது நாட்டின் பெருமை மிகு வல்லமை வாய்ந்த பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். அவர் கணவரில்லாதவராக இருந்த காரணத்தால் காஞ்சி சங்கராச்சாரியார் அவரை கிணற்றடியில் சந்தித்தார் என்ற ஒரு செய்தி எந்த உயரத்திற்கு சென்ற நிலையிலும் விதவைகளின் நிலை கொடுமையானதாக இருந்தது என்பதை காட்டுகிறது.
அதன் காரணமாக விதவைகளை உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கொண்டு போய விடப்படும் நிலை இன்னும் இருக்கிற்து. அங்கு அவர்களது வாழ்க்கை தரம் சொல்லும் தரமற்றதாகும்.
இதை அடிப்படையாக வைத்து விதவைகள் மனித குலத்தின் சிதைவுகள் என்ற தலைப்பில் இந்தியாடுடே பத்ரிக்கை ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அந்த கட்டுரையின் பிரதான செய்தி, பெரும்பாலான இந்திய விதவைகளுக்கு சாதாரண மனித வாழ்க்கை என்பது கனவில் கூட நினைக்க முடியாத ஒன்றாகும்.
For most Indian widows a 'normal human
being's life' is not something even to be dreamt of
நம் நாட்டில் எத்தனையோ பெருமக்கள் ராஜா ராம் மோகன்ராய் தந்தை பெரியார் போன்ற எத்தனையோ பெருமக்கள் விதவை பெண்களின் மரியாதையான வாழ்க்கைக்கு போராடி இருக்கிறார்கள் என்றாலும் உரிய பலன் கிடைத்ததா என்பது கேள்விக்குரியாகத்தான் இருக்கிறது.
இந்த சூழலில் தான் இஸ்லாத்த்னி அருமையை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டியிருக்கிறது.
ஏனெனில் இஸ்லாம் விதவைகளின் வாழ்வில் மகிழ்ச்சி எனும் ஒளி விளக்கை உன்னதமாக ஏற்றி வைத்த மார்க்கமாகும்.
விதவை என்ற சொல்லை ஒரு அவச் சொல்லாக கருத முடியாமல் செய்த மார்க்கமாகும்.
இன்னும் சொல்லப் போனால் விதவை என்ற அவச் சொல் சமூகத்தில் இல்லாமல் செய்த மார்க்கமாகும்.
விதவைத்தாய் பெற்ற பொன் மகவு
அன்னை ஆமினா அம்மா, தன் அருமைக் கணவரை பறி கொடுத்திருந்த நிலையில்
தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களை பெற்றெடுத்தார். 6 வருடங்கள் வரை அவரை சிறப்பாக
வளர்த்தெடுத்தார் என்ற செய்தியை வாசிக்கிற எந்த ஒரு மனிதரும் கணவரின்றி வாழும் ஒரு பெண்ணை
தாழ்வாக கருத முடியாது.
இமாம் ஷாபி (ரஹ்) அவர்களை அவர்களுடைய விதவைத்தாய்
தான் இந்த உச்சத்திற்கு கொண்டு வந்தார் என்பது வரலாறு.
மாஷா அல்லாஹ், இத்தகை பெருமைக்குரிய வரலாறுகள்
இஸ்லாமில் ஏராளம் உண்டு.
மகத்தான் தாய்மையால் சமூகம் மாண்படைந்த வரலாறுகள்
அவை. விதவை என்ற சொல்லை பெரும் மரியாதைக்குரிய சொல்லாக கருதச் செய்பவை அவை.
கதீஜா அம்மாவால் கிடைத்த பெரு வாழ்வு
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதல் திருமணம் கதீஜா
ரலி அவர்களுடன் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
கதீஜா அம்மாவிற்கு
முன்பு இரண்டு திருமணங்கள் நடந்திருந்தன. இரண்டு கணவர்களும் இறப்பெய்தினர் என்கிறது
வரலாறு.
قال الإمام الذهبي: «كانت خديجة أولًا تحت أبي هالة بن زُرارة التميمي، ثم خلف عليها بعده
عتيق بن عابد بن عبد الله ابن عمر بن مخزوم، ثم بعده النبي، فبنى بها وله خمس
وعشرون سنة، وكانت أسنّ منه بخمس عشرة سنة
இரண்டு முறை கணவரை இழந்த அன்னை கதிஜா ரலி அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது பெருமானாரின் வாழ்வில் அது எத்தகய பெரும் துணையாக இருந்த்து என்பதற்கு வரலாறு சான்றாக இருக்கிறது.
பெருமானாருக்கு முன் கதீஜா அம்மா அவர்கள் அவரை தேடி பலர் சம்பந்தம் பேச வந்த போதும் மறுத்தார்.
வரலாறு சொல்கிறது. “தினசரி யாராவது ஒரு குறைஷிப் பிரமுகர் திருமணத் தூதோடு வருவார்”. அதை கதீஜா அம்மா மறுத்து வந்தார்கள்
مامن يوم الا وقد خطبها رجل من اشراف قريش
கணவர் இல்லாத பெண்கள் ஒவ்வொருவருக்கும் கதீஜா அம்மாவின் இந்த நடைமுறையில் மகத்தான் வாழ்வியல் பாடம் இருக்கிறது.
ஒரு கணவர் இறந்து விட்டதாலேயே வாழ்க்கை முடிந்து விட்டதாக அவர் நினைக்க வில்லை.
பொருத்தமான
ஒருவர் கிடைத்த போது மற்றொரு திருமணத்திற்கு அவர் தயங்க வில்லை.
அந்த
திருமணத்தால் அவர் முந்தைய வாழ்க்கையை விட மிகப் பெரிய உயரங்களை தொட்டார் என்பதும்
மறுக்க முடியாத உண்மையாகும்.
கதீஜா அம்மா தொட்ட உயரம் எத்தகையது ?
சஹீஹ்
முஸ்லிமில் ஒரு ஹதீஸ் உண்டு.
إلى النبي مرة فقال: «يا رسول الله، هذه خديجة قد أتتك معها إناء فيه
إدام أو طعام أو شراب، فإذا هي أتتك فاقرأ عليها السلام من ربّها عزّ وجل ومنّي،
وبشّرها ببيت في الجنّة من قصب لا صخب فيه ولا نَصَب
விதவைகளை பாக்கியம் அற்றவர்கள் என்று யாராவது
நினைப்பார்கள் எனில் அதை விட பிற்போக்குத்தனம் வேறு என்னவாக இருக்க முடியும்,
இதோ முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கதீஜா அம்மாவை
திருமணம் செய்த போது அடைந்த பாக்கியங்கள் எத்தனை
وقال ابن إسحاق: «كانت خديجة بنت خويلد أول من آمن بالله ورسوله
وصدق بمحمد فيما جاء به، ووازرته في أمرة»
، ووازرته في أمرة பெருமானாரின் விவகாரங்களில் அவருக்கு உறுதியாக ஆதரவளித்தார். )
பெருமானார் (ஸல்) அவர்களே கதீஜா அம்மாவின் பெருமைகளை அடுக்கினார்கள்
عن أم المؤمنين عائشة قالت: «كان
النبي ﷺ إذا ذكر خديجة أثنى عليها فأحسن الثناء قالت فغِرتُ يوماً فقلت: ما
أكثر ما تذكرها، حمراء الشدق قد أبدلك الله عز وجل بها خيراً منها، قال: ما أبدلني
الله عز و جل خيراً منها، قد آمنت بي إذ كفر بي الناس، وصدقتني إذ كذبني الناس،
وواستني بمالها إذ حرمني الناس، ورزقني الله عز وجل ولدها إذ حرمني أولاد النساء»
ஆமீனா
அம்மாவையும் கதீஜா அம்மாவையும் போற்றுகிற முஸ்லிம் சமூகம் ஒரு போதும் விதவைகளை தாழ்வாக
கருதி விட முடியாது.
விதவைகளை ஆதரித்து நிற்பது அறப்போருக்கு நிகராகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
السَّاعِي علَى الأرْمَلَةِ والمِسْكِينِ كالْمُجاهِدِ في سَبيلِ
اللَّهِ، أوْ: كالَّذِي يَصُومُ النَّهارَ ويقومُ اللَّيْلَ
الراوي : صفوان بن سليم | المحدث : البخاري
மிக உன்னதமான
வழிகாட்டுதல் இது .
குடும்பத்தில் ஒரு பெண் விதவையாக வந்து விட்டால் – அவரை யாரும் சுமையாக கருத வேண்டாம். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்பவருக்குரிய நன்மை அவருக்கு உண்டு.
1.
ஆறுதல் தருவது.
2.
நம்பிக்கை ஊட்டுவது
– ஒரு நபரில் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. அல்லாஹ் பெருமானாருக்கு பல மனைவியரை கொடுத்தான்
என்பது போன்ற வார்த்தைகளை சொல்லி வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஊட்டுவடு.
3.
திருமணம் செய்து வைப்பது.
பல குடும்பங்களிலும்
விதவை பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினரே தடையக இருக்கிறார்கள். இது
மிக தவறான கண்டிக்கத் தக்க ஒரு செயலாகும்.
மார்க்கம் அனுமதித்தை
குடும்பத்தின் மரியாதை என்ரு சொல்லி தடுப்பது ஒரு மனிதாபிமான குற்றமாகும். ஒரு வரின்
உணர்வுகளை உயிருடன் புதைப்பதாகும். அதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
சில நேரங்களில் ஒன்று
பெயிலியர் ஆகிவிட்டால் அதனால் என்ன இன்னொன்று நல்லதாக அமையும் என்று நினைக்க வேண்டும்.
அதற்காக முயற்சிக்க வேண்டும்.
கதீஜா ரலி அவர்கள் மூன்றாவதாக பெருமானாரை திருமணம் செய்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஷஹீதுகளின் மனைவி ஆதீகா ரலி
قال ابن كثير في كتابه البداية والنهاية: "كانت من
حسان النساء وعُبَّادهن
அவர் நான்கு ஆண்களை ஒருவருக்குப்
பின் ஒருவராக திருமணம் செய்தார்.
تزوجت أربع مرات، وكل أزواجها استشهدوا:
·
عبد
الله بن أبي بكر.
·
زيد
بن الخطاب (أخو عمر بن الخطاب).
·
عمر
بن الخطاب.
·
الزبير
بن العوام.
அவர் நான்கு பேரை திருமணம் செய்தார். நால்வரும் ஷஹீதாகினர். அதன்
பிறகு மக்கள் என்ன கூறினர் என்றால்
قال عبد الله بن عمر: "من سره الشهادة فليتزوج عاتكة"
எனவே பலமுறை திருமணம் செய்து வைப்பதை விதவைகளின் பெறுப்பாளர்கள்
அவலமாகவோ சுமையாகவோ கருதக் கூடாது.
·
பெண்கள் காலம் முழுவதிலும்
உரிய மகிழ்ச்சி இன்றி வாழும் சூழ்நிலை ஏற்படும்
·
ஒரு கால கட்ட்த்திற்கு
அந்த பெண்களை ஆதரிப்போர் இல்லாமல் போய்விடுவர்.
·
பெண்கள் சமூகத்தில் தனியாக
வாழ முடியாது
·
தனியாக இருக்கிற பெண்களை
தவறாக அணுகுகிற் ஆண்கள் அதிகம் இருக்கிறார்கள்.
·
பெண்களும் தவறாக சென்று
விடுகிற ஆபத்து உண்டு,.
விதவைகளாக இருக்கிற பெண்களும் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
அது தவறான ஒரு நிலைப்பாடாகும்
அவர் தனது முதல் கணவரான அபூ சலாவோடு மிக ஆழமான காதல்
கொண்டு வாழ்ந்தவர் ஆவார்.
இவரை போல ஒரு கணவர் கிடைக்க மாட்டார் என்று உறுதியாக
நினைத்துக் கொண்டிருந்தார்.
அவரது கணவர் உஹது யுத்ததில் ஷஹீதான போது இனி தனது
வாழ்க்கை முடிந்து விட்டதாக கருதினார்.
பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த்தாக அவரது
கணவர் முன்னர் கூறியிருந்த ஒரு துஆ வை ஓதினார்.
உம்மு சலமா ரலி அறிவிக்கிற
ஒரு ஹதீஸ் முஸ்லிமில் வருகிறது.
நபி (ஸல்) அவர்கள் இந்து தியாகப் பெண்மணியின் நிலைய உணர்ந்து அவரை சம்பந்தம் பேசினார்கள்.
அப்போது தனக்கு குழந்தை இருப்பதாக அவர் கூறினார்
. அந்த குழந்தைக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக பெருமானார் (ஸ்ல ) கூறிய போது உம்மு
சலமா ரலி அவர்கள் பெருமானாரை திருமணம் செய்து கொண்டார்கள்
அதனால் உம்முல் முஃமினீன் எனும் அந்தஸ்தை பெற்றார்கள்
.
கிளியர் செயது விடுவது நல்லது
அந்த பெண்களின் முந்தைய கணவரிடமிருந்து தெளிவான
விவாகரத்தை பெறுவதில் தயக்கம் காட்டுகிறார்கள். அல்லது முயற்சி செய்வதில்லை.
பல வருடங்கள் கழித்து அந்த பெண்ணுக்கு திடீர் என்று
ஒரு வரன் வருகிற போது பள்ளி வாசலுக்கு ஓடி வந்து திருமணம் செய்து வையுங்கள் என்கிறார்கள்.
முதல் திருமணத்திற்கு ஒரு முடிவு இல்லாம் எப்படி
இன்னொரு திருமணம் செய்து வைக்க முடியும் ?
எனவே ஒரு பெண்ணுக்கான வாழ்க்கை பாதை எப்போது வேண்டுமானாலும்
திறக்கலாம்.
அதனால் முந்தைய திருமண வாழ்வு சரிப்பட வில்லை எனில்
அதில் ஒரு முடிவான தீர்மாணத்திற்கு வந்து விடுவதே சரியானதாகும்.
தலாக் என்ற சொல்லுக்கு வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளும்
அளவு பயப்பட வேண்டியதில்லை.
அதற்காகத்தான் மார்க்கம் ஒரு தலாக் இரண்டாவது தலாக
என்ற நடை முறையை வைத்திருக்கிறது.
وقال - صلى الله عليه وسلم - : " من أحب فطرتي
فليستن بسنتي ، ومن سنتي النكاح "
ரத்தன் டாடா சமீபத்தில் இறந்து போனார். அவர் திருமணம்
செய்து கொள்ள வில்லை. அவர் அதற்காக பிறகாலத்தில் மிகவும் வருந்தினார் என்பது கவனிக்கத்தக்க
ஒரு எதார்த்தமாகும்./
எனவே கணவரில்லாமல் வாழும் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது குடும்பத்தின் பொறுப்பாகும். அதற்கு உடன்பட வேண்டியது. அது போல திருமணத்திற்கு முயற்சிக்க வேண்டியது கணவரில்லாத பெண்களின் பொறுப்பாகும்.
இதில் சமூகத்திற்கும் ஜமாத்துகளுக்கும் ஒரு
கடமை இருக்கிறது.
சமூகம் விதவை பெண்களை இழிவாக துர்ச்சகுணமாக
பார்க்க் கூடாது. நல்ல விசயங்களில் ஒதுக்கி வைக்க கூடாது.
விதவைப் பெண்களின் பொருளாதார நிலை அறிந்து
அவர்களுக்கு உதவ வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும்.
உமர் ரலி அவர்ள் கத்தியால் குத்தப்பட்டு
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் “ இராக் நாட்டின் விதவை பெண்களுக்கு நான்
நல்ல வழி செய்திருக்க வேண்டும் என்று நினைத்தேன் என்றார்கள்.
ஜமாத்துகள் அவரகளுடை மஹல்லாஹ்வில் இருக்கிற
விதவை பெண்களை அறிந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்களை தூண்ட வேண்டும்.
சில இடங்களில்
விதவைப் பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது. கணவர் பெற்றோர் மற்றும் பிள்ளைகளின்
சொத்துக்களின் விதவை பெண்களுக்குரிய சொத்துக்களை பெற்றுத்தர ஜமாத்துகள் பாடுபட வேண்டும்.
வசதியற்ற விதவை பெண்கள் தம் வாழ்வை மரியாதையான
வகையில் அமைத்துக் கொள்ள தேவையான உதவிகளை தருவதற்கும் முய்றசிக்க வேண்டும். மாதாந்திர உதவித் தொகைகள், மளிகைப் பொருட்கள், தொழில்
உதவிகள் போன்ற வற்றை ஜமாத்துகள் செய்வது அவர்களின் பொறுப்புணர்வை மேலும் மரியாதையானதாக்
ஆக்கும்
வசதியற்ற விதவை பெண்கள் தம் வாழ்வை மரியாதையான
வகையில் அமைத்துக் கொள்ள தேவையான உதவிகளை தருவதற்கும் முய்றசிக்க வேண்டும்.
அது அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதற்கு
சமம்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment