வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 14, 2025

ஒன்றிணைந்து பெற்ற சுதந்திரம் ஓட்டு திருட்டால் சிதையும் அபாயம்

 அனைவருக்கும் 79 வது இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

எல்லாம் வல்ல இறை நம் நாட்டிற்கு அருள் வளத்தையும் பொருள் வளத்தையும் நிரம்ப தருவானாக! உலகின் எந்த சர்வாதியாலும் தோற்க முடிக்காத வலிமையை தந்தருள்வானாக . நாட்டின் ஆட்சி தலைவர்களும் அரசு நிர்வாகத்திலிருப்பவர்களும் மக்களின் சுதந்திரத்தை பேணிக்காப்பவர்களாக அல்லாஹ் ஆக்கியருள்வானாக!

நமது நாடு உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. சுமார் 140 கோடி மக்கள் இதன் உறுப்பினர்கள்.

இன்று நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை 140 கோடி மக்கள் கொண்டாடுகிறார்கள் என்கிற போது இது உலகின் மாபெரும் கொண்டாட்டங்களில் இது ஒன்றாகும்.

பலதரப்பட்ட மொழி இனம் மதம் கலாச்சாரத்தை கொண்ட மக்கள் அனைவரும் இந்த கொண்டாட்டத்தை ஒன்றினைந்து கொண்டாடுகிறார்கள்.  

இந்த கொண்டாட்டத்திற்கு காரணமான சுதந்திரம், நாட்டு மக்கள் அனைவரும் வேறுபாடுகளை கலைந்து ஒன்றினைந்து – பேதங்களை மறந்து இரண்டறக் கலந்து போராடி பெற்றதாகும்.

இந்த போராட்ட்த்திற்கு முஸ்லிம்கள் முன்னிலையிலும்  முதுகெலும்பாகவும் இருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.

இஸ்லாம் மனித வாழ்வின் அடிப்படைகளில் ஒன்றாக சுதந்திரத்தை கருதுகிறது. அதை உறுதிப்படுத்தியது.

ஹழ்ரத் அலி அவர்கள் கூறுகிறார்கள் .

وقال علي بن أبي طالب في وصية له: لا تكن عبد غيرك وقد خلقك الله حرًا

எகிப்தின் குடிமக்களில் ஒருவரை ஆளுநரின் மகன் கன்னத்தில் அறைந்து விட்டார். கலீபா உமர் (ரலி) இது குறித்து விசாரிக்க ஆளுநரையே மதீனாவுக்கு வரவழைத்தார்கள், அவரிடம் உமர் கூறினார்கள். எப்போதிருந்து நீங்கள் மக்களை அடிமைகளாக கருத ஆரம்பித்தீர்கள். அவர்களுடைய தாய்மார்கள் அவர்களை சுதந்திரமானவர்களாக அல்லவா பெற்றெடுத்துள்ளார்கள்

 

متى استعبدتم الناس وقد ولدتهم أمهاتهم أحرارًا

மானுட சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிற மிக உன்னதமான சொல் இது.

 

மக்களை மதத்தின் பொருட்டு கூட அடிமைத்தனம் செய்யக் கூடாது என்று குர் ஆன் கட்டளையிடுகிறது.

 

وَلَوْ شَاء رَبُّكَ لآمَنَ مَن فِي الأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا أَفَأَنتَ تُكْرِهُ النَّاسَ حَتَّى يَكُونُواْ مُؤْمِنِينَ} (يونس:99

இந்த சுதந்திர இயல்பு முஸ்லிம்களிடம் இயல்பாக இருந்த்து.

 

அநீதியை எதிர்த்து நிற்கிற துணிச்சலை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் நரம்புகளில் ஏற்றியிருந்தார்கள்.

 أنَّ النبيَّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ سئل أيُّ الجهادِ أفضلُ قال كلمةُ حقٍّ عند سلطانٍ جائرٍ

முஸ்லிம்களிடம் இருந்த சுதந்திர போக்கும், அநீதிக்கு எதிரான போராட்ட குணமும் இந்திய விடுதலை போரில் மகத்தான பங்களிப்பை கொடுக்க வைத்தது.

 முஸ்லிம்கள் நாட்டு மக்கள் அனைவரோடும் இணைந்து போராடினார்கள். பல  சந்தர்ப்பங்களில் போராட்டத்திற்கு மக்களை இணைப்பதில் முன்னின்றார்கள்.

 ஆங்கிலேயருக்கு நாட்டை ஆளும் எண்ணம் வந்துவிட்டதை முதலில் கணித்து  அவர்களை எதிர்த்தவர் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தொவ்ளா ஆவார் என்று வரலாறு சொல்கிறது.  

ஆங்கிலேயர்களுக்கு கொடுக்கப் பட்ட வியாபார உரிமையை பயன்படுத்தி அவர்கள் கொல்கத்தாவிலிருந்த் வில்லியம் கோட்டையில் ராணுவ விரிவாக்கம் செய்த தை சிராஜுத் தவ்லா முதலில் எதிர்த்தார் என்று வரலாறு சொல்கிறது.

ஆங்கிலேயர்களின் ஊடுறுலவலை அடையாளம் கண்ட முதல் நடவடிக்கை என்று வரலாறு சொல்கிறது.

 சிராஜுத்தவ்லாவை வெற்ற் கொண்டு தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் அதிகாரத்தை தொடங்கினர் என்பது சிராஜுத்தவ்லாவை முதல் போராளியாக காட்டுகிறது.

இந்தியா முழுவதுமாக கிழக்கிந்திய கம்பெனியிடம் விழுந்து விட்ட பிறகு அவர்கள் எதிர்க்க முடியாத சக்திகள் என்ற எண்ணம் இந்திய மக்களிடையே பரவி விட்டிருந்த சூழலில் 1857ல் சிப்பாய்கலகம் நடைபெற்றது. . முதல் இந்திய போராட்டம் என்று அறியப்படும் 1857-இந்த  சிப்பாய் புரட்சியை முன்னின்று நடத்தியவர்கள் முஸ்லிம்களே. அதில் உயிரிழந்த அதிகப்படியானோரும் முஸ்லிம்களே!

இந்திய சுதந்திர போராட்டம் வீறு கொண்டு எழுந்த போது முஸ்லிம்களும் இந்துக்களும் கிருத்துவர்களும் சீக்கியர்களும் மற்ற சிறு மத்தவர்களும் ஒன்றிணைந்து போராடினர்

 இந்திய ஆங்கிலேயர்களிடம் சிக்கிய ஆரம்ப காலகட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாடு முழுக்க நடை பெற்ற போர்களில் – அது மேற்கு வங்கத்தில் ஆனாலும் பீகாரில் ஆனாலும் ராஜஸ்தானில் ஆனாலும் தில்லியில் ஆனாலும் எங்கெல்லாம் ஆங்கில அரசுக்கு எதிரான போர்கள் நடந்த்தோ அங்கெல்லாம் இந்திய அரசர்களுக்கு ஒரு நோக்கம் மட்டுமே இருந்தது.  தில்லியில் முகலாய மன்னர்களின் கடைசி வாரிசான   பகதூர் ஷா ஜாபரை அரியணையில் ஏற்ற வேண்டும் என்பதே அந்த நோகம்.

இந்த நொக்கத்தை சிதைக்கா ஆங்கில் அரசு மத துவேஷத்தை கிளப்பி விட்டது. முஸ்லிம்கள் பக்ரீத் பெருநாளின் போது பசுக்களை அறுக்கிறார்கள் என்று புரளி கிளப்பி விட்டார்கள் . பகதூர் ஷா ஜாபர் இந்திய மக்களின் ஒற்றுமை குலைந்து விடக் கூடாது என்பதற்காக அப்போது முஸ்லிம்கள் குர்பானிக்காக பசுக்களை அறுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

 இப்படி கட்டிக் காக்கப் பட்ட சமய் நல்லுறவு தொடர்ந்து இந்தியா விடுதலைக்கு போராட உதவியாக இருந்தது.  

 காந்திக்குப் பின்னே ..

 இன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது  காந்தி  தான் அந்த காந்தியை தேசப்பிதாவாக மாற்றியவர்களில் ஒருவர் அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி ஆவார்.

 50 சரக்கு கப்பல்களையும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை நடத்தியவர் , இவருடைய கம்பனியான தாதா அப்துல்லா கம்பெனியின் வழக்கு தொடர்பாக டர்பன் நகரிலிருந்து பிரிட்டோரியா நகருக்கு மாரிட்ஸ் பார்க் ரயில் நிலையத்தில் காந்தி பயணம் செய்த போதுதான் முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து வெள்ளையர் ஒருவரால் கீழே தள்ளப்பட்டார் பின்னாளில், இந்தியாவின் விடுதலைக்கே காரணமாக அமைந்தது இச்சம்பவம்.

அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி யும் அவரது குடும்பத்தினரும் காந்தி இந்திய சுதந்திர போராட்ட்த்தை முன்னெடுப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தனர். இதனால் அவர்களது கப்பலை கொல்கத்தா துறைமுகத்தில் தண்ணீர்ல் ஆழ்த்தியது ஆங்கிய அரசு. இது போன்ற நடவடிக்கையால் அன்றைய தேதிக்கு சுமார் 150 கோடி சொத்துக்களை சுதந்திரப் பணிக்காக இழந்திருந்தனர் இவருடைய குடும்பத்தினர்.

இந்திய விடுதலைக்கு காந்திஜியும் காங்கிரஸ் இயக்கமும் அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருந்த போது ஆயுதமேந்திய போராட்ட்த்தை முன்னெடுத்தார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ். அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லுகிற ஒரு செய்தி சொல்வர்.

 நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை

ஹபீப் வேறு யாரும் அல்ல கல்கத்தாவின் பெரு வணிகர். சுபாஸ் சந்திர போஸ் ஆஸாத் இந்த் ராணுவத்திற்காக நிதி திரட்டிய போது 1943 ம் ஆண்டின் ஒரு கோடி ரூபாய் கொடுத்தவர். அதை தான் நேதாஜி பேசும் கூட்டங்களில் எல்லாம் சொல்லுவார்.

 தமிழர் பக்கீர் முஹம்மது சேட்

"பிரிட்டிசு இந்திய ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சிதம்ப்ரணார். இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற பெயரில் தொடங்கினார்.

அதற்கு பல வகையிலும் ஆங்கில் அரசு இடையூறு செய்தது. கப்பல் உரிமையாளர்களை சந்தித்து இந்த கம்பனிக்கு கப்பலை வாடைகைக்கு விட வேண்டாம் என்று தடுத்தது.

சொந்த கப்பல் இருந்தால் தான் நல்லது என்று சிதம்பரனார் முடிவு செய்த போது அதற்கு 10 இலட்ச ரூபாய் தேவைப்பட்டது. சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான 8000 பங்குகளை வாங்கி வ.உ.சியின் நோக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர் ஏ.ஆர்.பக்கீர் முஹம்மது ராவுத்தர் சேட் ஆவார்

அப்போது தமிழகத்திலிருந்த் செல்வாக்கு மிக்க பலராலும் சில ஆயிரங்களுக்கான பங்குகளையே வாங்க முடிந்தது என்பது வரலாறு.

 ஹாஜி கருத்த ராவுத்தர்.

 திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்  ஏ.எஸ். கிருஷ்ணசாமி அய்யங்காரின் வேண்டுதலில் 11-09-1922 -இல் பெரியகுளம் தாலுகா அளவிலான காங்கிரஸ் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

 அதற்கான முழு செலவையும் கா.சி. #முகம்மது_இஸ்மாயில் என்ற முஸ்லிம் செல்வந்தர்  ஏற்றார்  அவர் செல்வந்தர் மட்டுமல்ல சுதந்திர போராட்ட களத்தில் முன்னிலையில் இருந்தவரும் கூட.  தனிநபர் சத்தியாக் கிரகத்தில் பங்கேற்றதற்காக 500 ரூபாய் அபராதமும் சிறைத்தண்டனையும் ஆங்கில அரசு வழங்கியது. தேச விடுதலைக்காக மதுரை சிறையிலும் பின்னர் அலிப்பூர் சிறையிலும் வாடியவர்.

அப்போதும் அவர் பின்வாங்கவில்லை.

பெரிய குளம் காங்கிரஸ் மாநாட்டினை ஏற்று  நடத்தும் முழுப் பொறுப்பினையும் தன் சொந்த செலவில் ஏற்றார்.

அந்த மாநாட்டிற்கு  சுதந்திரப் போராட்ட முன்னணித் தலைவர் சேலம் பி.வரதராஜுலு நாயுடு தலைமை ஏற்றார். அவர் தன் தலைமை உரையை ஆற்றுவதற்கு முன்,காவல்துறை அதிகாரி ஒருவர் மேடையில் வந்து ஒரு காகிதத்தை வரதராஜுலு நாயுடுவிடம் அளித்தார். அதில் ''இம்மாநாட்டில் நீங்கள் உரை நிகழ்த்தினால் கைது செய்யப்படுவீர்கள்!" என்ற எச்சரிக்கை எழுதப்பட்டிருந்தது.

 அந்த சீட்டை கையில் வைத்துக் கொண்டு காவல் துறையின் எச்சரிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல் வரதராஜுலு நாயுடு தலைமை உரை நிகழ்த்தினார். ஆங்கில அரசு நடந்து கொண்ட மிருகத்தானமான  வெறியாடல்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

 'பேசினால் கைது செய்வோம்!' என்று எச்சரித்த காவல்துறையினர் கைது நடவடிக்கையில் இறங்காமல் கைகட்டி நினறனர். சரி... பேசி முடித்த பின்னராவது கைது செய்தார்களா?  இல்லை. மாநாட்டு பந்தலில் மட்டுமல்ல உத்தமபாளையம் வட்டாரத்திற்குள் வரதராஜுலு நாயுடுவைக் கைது செய்யும் துணிச்சல் ஆங்கில அரசின் காவல்துறைக்கு வரவில்லை.

 உத்தமபாளையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீரபாண்டியில் வரதராஜுலு நாயுடுவின் காரை வழிமறித்து அவரைக் கைது செய்கின்றனர். இதன் பின் நடைபெற்ற விசாரணையில் அவருக்கு ஏழரை மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.*

 ஏன் கைது செய்யவில்லை என்றால்,அது #ஹாஜி_கருத்த_ராவுத்தர் அப்பகுதியில் பெற்றிருந்த செல்வாக்கினால்தான்.

 கருத்த ராவுத்தரும் இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் என்பதால் கால்துறை கூட கைது நடவடிக்கைக்குப்பயந்தது.

 ஹாஜி முஹம்மது மெளலானா

ஆலிமான இவர் சுதந்திர இந்தியாவில் 1942 - ல் மதுரை மாநகராட்சித் தலைவராக இருந்தவர்,

அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீர்ர்.

1921 - இல் காந்திஜியின் கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுக்க கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பலர் இறங்கினர்.நிலக்கோட்டைத் தாலுகா அளவிலான கள்ளுக்கடை ஏலத்தினை ஆங்கில அரசு நடத்தியபோது அதனை எதிர்த்து மிகப்பெரிய மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் மட்டப்பாறை வெங்கிடராம ஐயர், பட்டாபி சீதாராமையா ஆகியோர் அவர்களுடன் மெளலானாவும் களமிறங்கினார். அவரும் கைது செய்யப் பட்டார். இவர்கள் மீது அரசு அநீதியாக கொள்ளை வழக்கு பதிவு செய்தது.

முஹம்மது மெளலானா முத்துராலிங்கத் தேவருடன் இணைந்து மதுரையில் 1937ல்  காங்கிரஸ் மாநாட்டை நட்த்தினார். அது மட்டுமல்லாது பல சுதந்திரப் போராட்டங்களை இருவரும் இணைந்து நட்த்தினர்.

காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19பேரில் 10 முஸலிம்கள் இருந்தனர் என்றால் அதற்கு மெளலானாவின் பங்கு முக்கியமானது.

 இது போல ஒன்றல்ல இரண்டல்ல நாடு முழுவதும் பல இலசக்கணக்கான் இந்திய மக்கள் ஒன்றிணைந்து போராடியதன் வழியாகவே நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது.

 ஒன்றிணைந்து போராடி தாங்க முடியாத பல அர்ப்பணிப்புகளின் பின்னணியில் கிடைத்த இந்த சுதந்திரத்தை நாம் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடுவோம்.

 பாடு பட்டு கிடைத்த சுதிந்திரத்தை மிக கவனத்துடன் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கவலையாகும்.

 நாடு எப்படி சுதந்திரம் பெற்றது என்பதில் ஆனா ஆவன்னா கூட அறியாதவர்கள் இப்போது மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள்.

 இந்திய மக்கள் சுதந்திர்த்திற்காக போராடிக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களை எதிர்க்க கூடாது என்று போரடியவர்கள் இவர்கள்.

 நாட்டின் சுதந்திர வரலாற்றை சுவாசித்தும் கூட பார்த்திராத இவர்கள் இப்போது சுதந்திர இந்தியாவிற்கு மிகப் பெரும் ஆபத்தாக ஆட்சியில் இருக்கிறார்கள்

 அரசின் எல்லை துறையையும் தங்களது கோட்பாட்டிற்கு ஏற்ப வளைத்து விட்டார்கள் . சட்டம் நீதி நிர்வாகம் ஆகிய துறைகளை தங்களது விளையாடு பொம்மைகளாக மாற்றி விட்டார்கள்.

 இதோ இப்போது நாட்டின் சுதந்திர அரசை உருவாக்கி தருகிற தேர்தல் கமிஷனை தங்களது கைப்பாவையாக மாற்றி விட்டார்கள்

 நாட்டுக்கு நியாயமான தேர்தலை நடத்தில் மக்கள் விரும்புகிற ஒரு ஆட்சியாளரை தேர்வு செய்து தர வேண்டிய தேர்தல் ஆணையம் இப்போது ஒரு கட்சி விரும்புகிற வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து கொடுக்கிற வேலையை செய்து வருவதாக தெரிகிறது.

 

கடந்த வியாழக்கிழமை ஆகஸ்ட் 7 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த இந்திய எதிர்க்டசி தலைவர் ராகுல் காந்தி இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டுவைத்து தேர்தல் முடிவுகளை மாற்றியிருப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி த் தலைவர் பரபரப்பான் ஒரு குற்றச் சாட்டை முன் வைத்தார். அதற்கான் ஆதாரங்களையும் ஆய்வுப் பூர்வமாக எடுத்து கூறினார்.

 அது உலகின் செல்வாக்கு மிக்க சுதந்திர நாடு எப்படி சர்வாதிகாரத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறது என்பதற்கான அதிர்ச்சியூட்டுகிற தகவலகள் இருந்தன.

 தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தாங்கள் வென்றிருக்க வேண்டியதாக கூறி ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதியின் வாக்கு விவரத்தை ராகுல் காந்தி மேற்கோள் காட்டினார்

 கர்நாடகாவில் உள்ள மத்திய பெங்களூரு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியை அவர் குறிப்பிட்டார். இங்கு 1 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டினார்

 ஐந்து வழிகளில் வாக்குத் திருட்டு நடப்பதாக ராகுல் காந்தி விளக்கினார்.

  • போலி வாக்காளர்கள்
  • போலி மற்றும் இல்லாத முகவரிகள்
  • ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள்
  • செல்லாத புகைப்படங்கள்
  • புதிய வாக்காளர்களை சேர்க்கும் படிவம்  6-இன் தவறான பயன்பாடு

ஒரே வாக்காளர், பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா தொகுதியிலும், கிழக்கு லக்னௌவிலும், மும்பையில் கிழக்கு ஜோகேஸ்வரி தொகுதியிலும் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

வீட்டு எண் ஜீரோ 0 என்று பதியப்பட்டு பல வாக்களர்களது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஒரு முகவரியில் சிறிய இடத்தில் 88 வாக்குகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் அப்படி யாரும் அங்கு இல்லை.

இவை மட்டுமல்ல பீகாரில் சட்ட மன்ற தேர்தலுக்கு மிகச் சில நாட்களே இருக்கிற நிலையில் தீவிர வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பணியை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது.

இதில் இறந்து விட்டனர் என்று கூறப்பட்ட பலருடன் டீ குடித்துக் கொண்டிருக்கும் புக்கப்படத்தை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

சுமார் 68 இலட்சம் வாக்களர்களை பீகார் வாக்களர் பட்டியலில் இருந்து தேர்தல் கமிஷம் நீக்கியுள்ளது. இதை சுப்ரீம் கோர்ட் கேளிவி எழுப்பியது. அப்போது நீக்கப் பட்ட வாக்களர்களின் பட்டியலை வெளியிட முடியாது என்று தேர்தல் கமிஷன் கூறியது.

தேர்தல் கமிஷனுடைய நடவடிக்கைகள் மஹராஷ்டிரா மாநிலத்திலும் சந்தேகத்திற்கிடமாக இருக்கிறது என்று ராகுல் கூறியிருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத ஏராளமான வாக்காளர்கள் கடந்த சில மாதங்களில் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளனர்

கடைசி நேரத்தில் ஏரளமானோர் வாக்களித்துள்ளனர். ஆனால் பூத் ஏஜெண்டுகளாக இருந்தவர்கள் அப்படி கூட்டம் வர வில்லை என்ரு கூறுகின்றனர். உண்மை கண்டறிவதற்கு வீடியோ காட்சிகளை தருமாறு கேட்டால் தேர்தல் கம்ஷைன் அவற்றை தர மறுக்கிறது.

2024 ல் மக்களை தேர்தலை அறிவிப்பதற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கிற நிலையில் தேர்தல் கமிஷனர் அருன் கோயல் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார். அக்கடிதம் 2 மணி நேரத்திற்குள் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

அதே போல தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்த இந்திய தலைமை நீதிபதியை அதிலிருந்து மத்திய அரசு நீக்கியது.  

இத்தகைய காரணங்களால் இந்திய தேர்தல் ஆணையம் பெரும் சந்தேகத்திற்குள்ளாகியிருக்கிறது.

இவை சுதந்திர இந்தியாவிற்கும் நாட்டு மக்களுக்கும் பெரும் கவலை அளிக்கிற செய்திகளாகும்.

இந்த நிலையில் மக்கள் மிகவும் விழிப்படைவதும் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க உறுதியேற்பதும் அதற்காக உழைப்பதும் அவசியமாகும்.

வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தமது வாக்குரிமை பாதுகாக்கப் பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்வதில் அக்கறை செலுத்த வேண்டும்.

வாக்குரிமை நீக்கப் பட்டிருந்தால் உரிய முயற்சி செய்ய வேண்டும். கொத்துக் கொத்தால் நீக்கப்படும் வாக்காளர்கள் விவகாரத்தில் போராட வேண்டும். நீதி மன்றத்தை அனுக வேண்டும்.

தங்களது பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள போலி வாக்காளர்கள் குறித்தும் மக்கள் ஆராய வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் பல இலட்சம் தியாகங்களுக்கு பிறகு பல கோடி மக்கள் ஒன்றிணைந்து போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க உதவுவானாக!

நாட்டை சர்வாதிகார பாதைக்கு அழைத்த்துச் செல்ல முயலும் தீய சக்திகளிடமிருந்து இந்திய நாட்டை பாதுகாத்து அருள்வானாக!

  

 

No comments:

Post a Comment