إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1) فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (2) إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (3)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலகில் தனிச்சிறப்பு வாய்ந்த தலைவர்களில் ஒருவர் ஆவார்.
பரிபூரண வாழ்வு –
பெருமானாருக்கு ஏராளமான பெருமைகள் உண்டு. அதில்
ஒன்று அவர்களுடைய வாரிசுகள் எனும் குழந்தைகள் ஆவார்.
நபிகள் நாயகம (ஸல்) அவரக்ளுக்கு 7 பிள்ளைகளும் 8 பேரக் குழந்தைகளும்
இருந்தார்கள். 7 குழந்தைகளில் பாத்திமா (ரலி
அவர்களை தவிர மற்ற அனைவரும் பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்கிற காலத்திலேயே வபாத்தாகி
விட்டார்கள்.
ஆனால் அவர்களில் ஒவ்வொருவரும்
பெருமானாரின் பெருமையை நிலை நிறுத்துவபவர்களாக இருந்தார்கள்.
பெருமானாரின் இப்பிள்ளைகள்
பெருமானாரின் வாழ்வை பரிபூரண்ப் படுத்தினார்கள்.
சந்ததிகள் இல்லாவிட்டாலும்
சிறப்பாக வாழ்ந்தவர்கள் உண்டு. ஜனாதிபதி அப்துல் கலாமை போல. ஐசக் நியூட்டன மதர் தெரஸா
இமாம் நவவி ரஹ் ஆகியோரைப் போல
ஆனால் ஒரு மனிதருக்கு சந்ததிகள் இருந்தால் தான் அவர் முழுமையான
மனித வாழ்வை அடைந்தவர் ஆகிறார்.
இது இஸ்லாமின் கருத்து.
எனவே தான் இயல்பாக குழந்தை
கிடைக்காத நபிமார்கள் தமது முதுமையில் இறைவனிடம் வரமாக கேட்டு குழந்தைகளை பெற்றுள்ளனர்.
இபுறாஹீம் நபிக்கு குழந்தை
பேறு வழங்கியதை தான் செய்த ஒரு அருள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ وَجَعَلْنَا فِي
ذُرِّيَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتَابَ وَآتَيْنَاهُ أَجْرَهُ فِي الدُّنْيَا ۖ
وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ (27
எனவே குழந்தைகள் என்பவர்கள் ஒரு வாழ்வை நிறைவு படுத்தும்
செல்வங்களே ஆவார்.
பெருமைக்குரிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்
போதுமான குழந்தைகளை ஆண் பெண் வாரிசுகளாக கொடுத்தான். அதில் எந்த குறையையும் அல்லாஹ்
வைக்க வில்லை.
தொடரும் பெருமை
இதில்
உலக வரலாற்றின் ஒரு பேர் ஆச்சரியரம் என்னவெனில்
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் வாரிசுகளின் தொடர் 1500 ஆண்டுகளை கடந்து இன்னமும் தொடர்ந்து
கொண்டிருக்கிறது. ஆதாரப்பூர்வமான உறுதியான வமிசத் தொடர்களை கொண்ட நபியின் குடும்பத்தார்
இன்றும் உலகின் ஒவ்வொரு பாகத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அதை திருக்குர்ஆண் உறஊதிப்படுத்துகிறது.
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1) فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (2) إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (3)
பெருமானார் (ஸல்) அவர்களது பிள்ளைகளில் அவரது புகழை
நிலை நாட்டும் சிறப்பம்சங்கள் ஏராளம் உண்டு.
அவற்றில் சில
- 1.
அந்த பிள்ளைகள்
பெருமானாரை ஈமான் கொண்டார்கள்
பெருமானாரின் மூத்த மகள் ஜைனப் ரலி அவர்களுக்கு
திருமணம் நடை பெற்ற பிறகே பெருமானார் நபி என தன்னை அறிவித்தார்கள். உடனேயே பெருமானாரை
அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரது கணவர் அப்போது இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.
- 2.
தீனுக்காக
அர்ப்பணம் செய்தார்கள்.
பெருமானாரின் இளைய மகள் ருகையா ரலி உஸ்மான் ரலி
அவர்களை திருமணம் செய்த கையோடு அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள்./
- 3.
தலைவரின்
பிள்ளை என்பதற்காக எந்த உலகாயத சலுகைகளையும் அவர்க் எதிர்பார்க்க வில்லை.
தங்களுக்கு ஒரு உதவி ஆள் தேவை என பாத்திமா ரலி அவர்களும்
அலி ரலி அவர்களும் கேட்ட போது
தன் நெஞ்சுக்கு நெருக்கமான பாத்திமா ரலி அவர்களிடம்
திண்ணை த் தோழர்கள் பசியாக இருக்க உன்னை நான் தேர்ந்தெடுக்க முடியாது என்று பெருமானார்
(ஸல்) அவர்கள் மறுத்தார்கள். அதை திருப்தியோடு பாத்திமா ரலி அவர்களும் அலி ரலி அவர்களும்
ஏற்றுக் கொண்டார்கள்.
- فاطمة بَضْعَة مِنِّي، فَمَنْ أَغْضبها أَغْضَبَنِي) رواه البخاري.
فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ: واللهِ لا أُعْطيكما
وأَدَعُ أهلَ الصُّفَّةِ تَطْوى بُطونُهم، لا أَجِدُ ما أُنفِقُ عليهم، ولكنِّي
أَبيعُهم وأُنفِقُ عليهم أَثْمانَهم، رواه أحمد
- 4.
பெருமானாரின்
பிள்ளைகளில் இருந்த நான்காவது பெரிய சிறப்பு அவர்களில் எவரும் பெருமானாரின் மரியாதைக்கு
குறைவை ஏற்படுத்துபவர்களாக இருக்கவில்லை.
(நமது பிள்ளைகள் நமது பெருமையை சிதைக்காதவர்களாக இருக்க வேண்டும். என்று நாம் ஆசைப்பட வேண்டும்.
அதற்கு பெருமானார் ஒரு உதாரணம். )
உலகின் பெரும் தலைவர்களில்
பலருக்கும் ஏற்பட்டுள்ள எஒரு துயரம்.
பிள்ளைகள் பெற்றோருக்கு தொல்லையாக
– அவர்களின் பெருமையை சிதைப்பவர்களாக அமைந்து விடுவதுண்டு.
நூஹ்
நபியின் பிள்ளை அவரை ஏற்றுக் கொள்ள வில்லை. அவர் கெஞ்சி அழைத்தும் கப்பலில் ஏறவில்லை. அவரிடமே
பெருமை பேசினான்.
وَنَادَىٰ نُوحٌ ابْنَهُ وَكَانَ فِي مَعْزِلٍ يَا بُنَيَّ
ارْكَب مَّعَنَا وَلَا تَكُن مَّعَ الْكَافِرِينَ (42) قَالَ
سَآوِي إِلَىٰ جَبَلٍ يَعْصِمُنِي مِنَ الْمَاءِ
கோடிக்கணக்கான இந்திய மக்களின் மதிப்பிற்குரிய காந்தியடிகளின்
மகன் ஹரிலால் இலண்டனுக்கு சென்று கிருத்துவராக மதம் மாறினார். அங்கு பெரும் குடிகாரர் என்று பெயரெடுத்தார்.
இது போல இன்னும் பல வரலாறுகள் உண்டு பெருமைக்குரிய
பெற்றோருக்கு இழிவையும் கவலையை கொடுத்தவர்கள்
(அல்லாஹ் நம்மை பாதுகாக்கட்டும்.)
பெருமானாரின் பிள்ளைகளை வரலாறு எப்படி குறிப்பிடுகிறது
தெரியுமா ?
ولد الهدى என்று
பாராட்டுகிறது.
இன்று நாம் பெருமானாரின் பிள்ளைகள பற்றி பார்க்கிறோம்.
அந்த இதில் அவர்களது வரலாற்றை மட்டும் நாம் படிக்க மாட்டோம். உத்தம் தலைவரின் உன்னதமான
பிள்ளைகள் அவர்கள் என்பதற்கான சான்றையும் அறிந்து கொள்வோம்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது 25 வயதில் 40 வயது
கதீஜா ரலி அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். கதீஜா ரலி பெருமானாருக்கு ஆறு குழந்தைகளை
பெற்றுக் கொடுத்தார்கள்.
1. காஸிம் ரலி –
பெருமானாரி 27 வயதில் பிறந்தார்.
நீண்ட காலம் வாழ வில்லை .
இரண்டு வயதிலேயே இறப்பெய்தினார். அவருக்கு சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு என்ற
பெருமானார் சொர்க்கத்தில் அவரது சப்தத்தை கேட்கிறீரா என்று கதீஜா அம்மாவிடம் கூறினார்கள்.
وذكر ابن الأثير أنه عاش سنتين،
ولم يُكمل رضاعته
دخل على خديجة
بنت خويلد بعد موت القاسم وهي تبكي فقالت: «يا رَسُول اللهِ دَرّتْ لُبَيْنَةُ القَاسم فلو كَان عَاش حتى يَستكمل
رَضَاعَه لَهوّن عَليّ»،
فقال لها: «إنّ لَه
مُرضِعًا في الجنّة تستكملُ رَضَاعَتهُ»،
قَالَ «إن
شِئْت أَسَمِعْتك صوته في الجنّة»،
فقالت: «بل
أُصدّق اللهَ ورسوله
2. زينب بنت محمد-
பெருமானாரின் 30 வயதில் பிறந்தார்.
துணிவும் அறிவாற்றலும் மிக்கவராக இருந்தார்.
10 வயதில் அவருக்கு பெருமானார் திருமணம்
செயது வைத்தார்கள். அவருட்டய கணவர் أبو العاص بن الربيع
ரலி
கதீஜா அம்மாவின் சகோதரி மகன்.
أسلمت زينب وبقي زوجها على دينه، وجعلت قريش تدعو أبا العاص لمفارقة زوجته زينب، فكان يردّ
عليهم بقوله «لا والله، إنِّي لا أفارق صاحبتي، وما أحبُّ أنَّ لي بامرأتي امرأة
من قريش
இரண்டு குழந்தைகள் பெற்றார். அதில் ஒருவர் இறந்து விட்டார்.
وأنجبت له ولدًا اسمه
علي وبنتًا اسمها أمامة.
அவரது கணவர் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாதவராக
இருந்தார். ஆனாலும் கணவருடன் ஜைனப் ரலி வாழ்ந்து வந்தார்கள்.
பத்று யுத்ததில் அவர் கைதியாக முஸ்லிம்களிடம்
சிக்கினார். ஜைனப் ரலி அவரை கதீஜா அம்மாவின் நக்க்களை கொடுத்தனுப்பி விடுவிக்க கேட்டார்கள்
பெருமானார் (ஸல்) அவர்கள் கதீஜா அம்மாவின் நகைகளை திருப்பி கொடுத்து அவரை விடுதல்ல
செய்தார்கள். ஜைனப் ரலி அவர்களை மதீனாவிற்கு
அனுப்பி விட வேண்டும் என்று நிபந்தன்ன இட்டார்கள். அதை அவர் ஏற்றுக் கொண்டார். ஜைனப்
அம்மாவை திருப்பி அனுப்பினார்.
மக்காவின் எதிரிகள் வற்புறுத்தி போதும் வேறு
பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ள வில்லை .
ஆறு வருடங்கள் காத்திருந்தார் ஜைனப் ரலி அவர்கள்.
துணிச்சலும் சாமார்த்தியமும் மிக்க அவருடைய நடவடிக்கள் பாராட்டிற்குரியவை .
ஹிஜ்ரீ
8 ல்
அபுல்
ஆஸ்
ரலி
இஸ்லாமை
ஏற்றார்.
அதன்பிறகு
இருவரும்
இணைந்தார்கள்.\
அபுல் ஆஸ் மாமனார் மெச்சிய
மருமகனக இருந்தார். – மகள்
விவகாரத்தில் மாமானாருக்கு
எந்த தொல்லையும் கொடுத்ததில்லை. பல காலம் அவர் இஸ்லாமிற்கு வராத போதும்
ஜைனப் ரலி 30 வயதில்
வபாத்தானார்.
- قال
عنه النبي: "حدّثني فصدقني، ووعدني
فوفّى لي".
-
توفي زينب بعد إسلامه بمدة قصيرة، فتأثر جدًا بوفاتها.
- توفي بعد ذلك بفترة، وكان مسلمًا.
ونزل النبي في قبرها ومعه أبو العاص بن الربيع،
3. ருகய்யா ரலி
பெருமானாரின் 33 வயதில் பிறந்தார்.
10
வயதுக்கு முன்
சிறுமியாக இருந்த போது அவர்ர அபூலஹ்ப் உடைய மகனுக்கு பெருமானார் திருமணம் பேசி
இருந்தார்கள். சுரத்து மஸ்த் இறங்கிய போது அவர் தலாக் விடப் பட்டார். அவரை
பெருமானார் உஸ்மான் ரலி அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள்/
தொடர்ந்து அபீசீனியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.
இளம் தம்பதிகளை அனுப்பி வைத்து விட்டு பெருமானர் (ஸல்)
அவர்கள் அபீசீனிய பகுதிகளிலிருந்து வருவோரிடம் அவர்களது அடையாளங்களை சொல்லி இப்படி
ஒரு ஜோடியை பார்த்தீர்களா என்று விசாரிப்பார்கள்.
تزوّجها ابن عم أبيها عتبة
بن أبي لهب
ثمّ تزوّجها الخليفة الثالث لاحقا عثمان
بن عفان في مكة،
ருகையா ரலி அபீசீனியாவில்
ஒரு குழந்தையை பெற்றார்.
فولدت له هناك ولدًا سمّاه عبد الله
21 வயதில்
நோய்வாய்ப் பட்டிருந்த அவர் வபாத்தானார்.
பெருமானாரின் 34 வய்தில் பிறந்தார்.
அவரையும் அபூலஹ்பின் மகனுக்கு பெருமானார் சம்மதம் பேசி இருந்தார்கள். அவரும் தலாக் விட்டார்.
ருகையா ரலி இறந்த பிறகு அவரை உஸ்மாம் ரலி அவர்களுக்கே பெருமானார் திருமணம் செய்து கொடுத்தார்கள்
وقال النبي محمد أيضًا: «ما زوّجت عثمان أم كلثوم إلّا بوحي من السّماء
இவர் 7 வருடம் கணவருடன்
வாழ்ந்தார் . குழந்தை எதுவும் பெற வில்லை.
ஹிஜ்ரீ 9 ல்
மரணம் தனது 28 வயதில் வபாத்தானார்.
وصلّى عليها النبي محمد بنفسه، وجلس على قبرها وعيناه تذرفان
இந்த மூன்று சகோதரிகளின்
வரலாறும் ஹதீஸ்களிலும் வரலாற்றிலும் மிக உறுதி பட பெருமானாரின் பிள்ளை கள் என்று
இருக்கிறது. ஆனால் ஷியாக்கள் இம்மூவரையும் பெருமானாரின் வளர்ப்பு பிள்ளைகள் என்று
கூறுகிறார்கள்.
பாத்திமா ரலி அவர்களின்
மீது போலித்தனமாக அவர்கள் காட்டும் ஈடுபாடு பெருமானாரின் வரலாற்றிலேயே அவர்களை
எந்த அளவு அக்கிரமம் செய்யத் தூண்டுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
5. பாத்திமா பெருமானாரின் 35 வது வயதில் பிறந்தார்.
பெருமானாரை அவர்ர ஜுஹ்ரா என்று அழைத்தார்கள்.
الزهراء-أنها كانت بيضاء اللون مشربة بحمرة زهرية-
பாத்திமா ரலி அவரக்ளின் சிறப்புக்கள் ஏராளம் உண்டு. அது ஒரு தனி தலைப்பில் பேசப்பட வேண்டியவை.
அவர் பெருமானாரின் இதயத்திற்கு மிக நெருக்கமானவராக இருந்தார்
நடை உடை பாவனைகளில் பெருமானாரை போலவே இருப்பார்.
அவரது 20 வயதில் அவரை அலி ரலி அவர்களுக்கு பெருமானார் (ஸல்) திருமணம் செய்து
வைத்தார்கள். 480 திருஹம் மஹராக கொடுக்கப் பட்டது.
அலி ரலி அவர்களுக்கு பாத்திமா அம்மா ஐந்து குழந்தைகளை பெற்றுக்
கொடுத்தார்கள்./
أنجب منها الحسن والحسين في السنتين الثالثة والرابعة من الهجرة على
التوالي
أنجب زينب وأم
كلثوم والمحسن
பெருமானார் (ஸல்) அவர்கள் பாத்திமா ரலி
அவர்கள்ள பாராட்டி ஏரளமாக சொல்லி இருக்கிறார்கள்
سيّدَةُ نِساءِ أَهْلِ الجَنَّةِ فَاطِمَة
المَهْدِيِ مِنْ عِتْرَتي مِنْ وُلدِ فَاطِمَة
பெருமானார் (ஸல்) அவரக்ளின்
மரணத்திற்கு ஆறு மாதத்திற்கு பிறகு பாத்திமா ரலி
ஹிஜ்ரீ 11 ரமலானில்
வபாத்தானார்கள்.
பாத்திமா ரலி அவர்களின்
மிகப் பெரும் சிறப்பு அவரக்ளின் வழியாகத்தான் பெருமானாரின் சந்ததிகள் நிலைப்
பெற்றார்கள்.
6. عبد الله بن محمد،
இவருக்கு தாஹிர் தய்யிப் என்ற இரு பட்டப்
பெயர்கள் உண்டு.
நபித்துவத்திற்கு பிறகு பிறந்த இவர் சில
காலத்திலேயா மரணமுற்று விட்டார்கள்.
وُلد في مكة بعد بعثة
النبي محمد
توفي صغيراً في مكة،
7. إبراهيم
பெருமானாரின் 60 வயதில் பிறந்த குழந்தை இபுறாஹீம் ரலி>
மாரியத்துல் கிப்திய்யா ரலி என்ற அடிமை பெண்ணுக்கு க்கு பிறந்தார்.
அடிமைகளோடு உறவு கொள்வது அங்கீகரிக்கப் பட்ட ஒன்றாக இருந்தது.
தனது வாழ்நாளில் எந்த ஒரு அடிமையையும் வைத்துக் கொள்ளாத பெருமானார் (ஸல்) அவர்க்ள் எகிப்து நாட்டின் அரசர் அனுப்பியது அதை நீங்கள் தவிர்க்க கூடாது என்று கேட்டுக் கொண்டதற்காக பெருமானார் (ஸல்) அவர்கள் மாரியத்துல் கிப்திய்யா அம்மாவை தனது அடிமைப் பெண்ணாக வைத்துக் கொண்டார்கள். அவர் மூலம் இபுறாஹீம் ரலி என்ற மகனை பெற்றெடுத்தார்கள். அடிமை பெண்ணுக்கு குழந்த்த பிறந்தால் அந்த குழந்தையையும் அடிமையாக வைத்துக் கொள்வதும் அதை விலை பேசி விற்று விடுவதும் அன்றைய வழக்கமாக இருந்தது.
பெருமானார் (ஸல்) அவர்கள் மாரியா அம்மாவை திருமணம் செய்து அவர் மூலம் ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டு அடிமைப் பெண்கள் விவகாரத்தில் பல சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தார்கள்.
இபுறாஹீம் ரலி அதிக நாள் வாழவில்ல்ல. 18 மாதத்தில் மரணமடைந்து விட்டார்.
وُلد في المدينة المنورة سنة 8هـ
وتُوفي فيها سنة 10هـ عن عمر 18 شهرً
فتحدّث الناس أن الشمس
كُسفت لموت إبراهيم، فقال النبي محمد: «إنَّ الشمسَ والقمرَ من آيات اللهِ، وإنهما لا
يَنخسفان لموتِ أحدٍ ولا لحياتِه، فإذا رأيتُموهما فكبِّروا، وادعو اللهَ وصلُّوا
وتصدَّقوا
பேரக்
குழந்தைக்ள்
8
ஜைனப் ரலி அவர்கள் மூலம் இருவர். அலீ – உமாமா ரலி – இதில்
அலீ சிறுவயதில் இறந்து விட்டார்.
ருகைய்யா ரலி மூலம் ஒரு பேரர் . அப்துல்லாஹ். அவர் 6 வயதில்
இறந்து விட்டார்.
பாத்திமா ரலி அவர்கள் மூலம் ஐந்து பேரக் குழந்தைகள் இதில்
முஹ்ஸின் சிறு வயதில் இறந்து விட்டார்.
ஆக 8 பேரக் குழந்த்தகளில் 3 பேரக் குழந்தைகள் சிறுவயதில் இறந்து விட்டனர்.
خمسة منهم لابنته فاطمة وهم: الحسن، والحسين، ومحُسن، وأمُّ
كُلثُوم، وزينب، وقد توفّي مُحسن في صِغره.
واثنان
من أحفاده لابنته زينب وزوجها أبي العاص رضي الله عنهما وهما: عليّ، وأُمَامَة،
وقد توفّي عليّ في صِغره.
وحفيد واحد لابنته رُقيَّة وزوجها عُثمَان بن عفَّان رضي الله
عنهما واسمه عبد الله وقد توفّي عبد الله لمَّا بلغ السَّادِسة مِن عُمُره.
பெருமானாருக்கு ஒரு
வளர்ப்பு மகன் உண்டு. அவருடைய பெயர் ஜைது பின் ஹாரிதார் (ரலி)
زيد بن حارثة
والوحيد من بين أصحاب النبي محمد صلى الله عليه وسلم الذي ذُكر
اسمه في القرآن.
حِبّ رسول الله
فاشتراه حكيم
بن حزام
ما أنا بالذي أختار عليك أحدًا. أنت مني بمكان
الأب والأم»،
فتعجّب أبوه وعمه وقالا: «ويحك يا زيد أتختار العبودية على الحرية وعلى
أبيك وعمك وأهل بيتك؟!»، قال: «نعم. إني قد رأيت من هذا الرجل شيئًا ما أنا
بالذي أختار عليه أحدًا أبدً
خرج به إلى الحِجْر، وقال: «يا من حضر اشهدوا أن زيدًا ابني أرثه ويرثني». فلما رأى ذلك أبوه وعمه اطمأنا وانصرفا. فصار زيد يُدعي «زيد بن محمد»
وحين فرض الخليفة الثاني عمر بن
الخطاب لأسامة بن زيد عطاءً من بيت
مال المسلمين أكثر مما فرض لابنه عبد الله بن عمر، كلمه
عبد الله في ذلك، فقال: «إنه كان أحب إلى رسول الله ﷺ منك، وإن أباه كان أحب إلى رسول الله ﷺ من أبيك
நபி (ஸல்) அவர்கள் தனது
வளர்ப்பு மகனுக்கும் சொந்த பிள்ளைகளுக்கும் வித்தியாசம் பாராட்டியதில்ல்ல.
பெருமானாருடைய வாழ்க்கைகு
மேலும் பொலிவு ஊட்டுகிற செய்தி இது.
நமது தலைவர் முஹம்மது நபி
(ஸ்ல) அவர்கள் மனித வாழ்வின் அனைத்து அம்சத்திலும் புகழுக்குரியவராக திகழ்கிறார்.
அதில் அவர்களுடைய பிள்ளைகளின்
பங்கும் முக்கியமானது.
எல்லாம் வல்ல அல்லாஹ் பெருமானாரை
நேசிப்பதோடு அவர்களது பிள்லைகளையும் பேரப்பிள்ளைகளையும் அவர்களது வழித்தோன்றல்களையும்
நேசித்து நம்மை வாழச் செய்வானாக!
No comments:
Post a Comment