வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 23, 2025

முஸாபஹா முஆனகா மன வைத்தியக் கலைகள்

وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ 

இஸ்லாம் மனித உறவுகளை மேம்படுத்துவதற்கு கையாண்ட உத்திகளை ஒன்று முஸாபஹா

இன்று வரை முஸ்லிம்களின் ஒரு முக்கிய அடையாளம் அது.

ஈது பெருநாட்களை அடையாளப்படுத்துகிற போது உலகம் கட்டித்தழுவும் இரண்டு நபர்களை தான் நினைவு கூற்கிறது. பதிரிகைகளில் அத்தக்கய படைத்தை பார்த்திருப்பீர்கள்.

பொதுவாக திரைப்படங்களிலும் கூட முஸ்லிம்களை அடையாளப்படுத்த கட்டித் தழுவுதலையே காட்சியாக்குகிறார்கள்.

ஆம் இது உன்னத இஸ்லாமிய கலாச்சாரம் தான்.

எமன் நாட்டில் தோன்றிய இந்த பழக்கத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நல்லது என்று நம் சமூகத்திற்கும் இதை பழக்கப்படுத்தினார்கள்

 عن أنس بن مالك قال: (لما جاء أهل اليمن قال النبي صلى الله عليه وسلم: قد أقبل أهل اليمن وهم أرق قلوباً منكم) وهم أول من جاء بالمصافحة. 

 எந்த ஒரு நல்ல பழக்கத்தையும் சமூகத்திற்கு பழக்கப் படுத்துவதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் கையாண்ட உத்தி அலாதியானது.

அதை தான் முதலில் செய்வார்கள் . தோழர்களுக்கு நடை முறை படுத்துவார்கள். பின் வரும் சமூகம் அதை கைகொள்ள தேவையான உன்னதமான வழிகாட்டுதல்களை வழங்குவார்கள்

பெருமானார்  முஸாபஹா செய்வார்கள்.

عن رجل من عنزة ، أنه قال : قلت لأبي ذر - رضي الله عنههل كان رسول الله - صلى الله عليه وسلم - يصافحكم إذا لقيتموه ؟  قال : ما لقيته قط إلا صافحني ، وبعث إلي ذات يوم ولم أكن في أهلي ، فلما جئت أخبرت ، فأتيته وهو على سرير ، فالتزمني ، فكانت تلك أجود وأجود . رواه أبو داود .

மானுட சகோதரத்துவட்தை நிலை நாட்டியதில் முஹம்மது நபி யின் இந்த பங்களிப்பு மகத்தானது.

அரசர்களோ மதத் த்தலைவர்களுடைய கைகளையோ சாமாணிய மக்கள் தொட முடியாது என்பது தான் உலகில் காலம் காலமாக காணப்பட்ட வழக்கம்.

இப்போதும் கூட இங்கிலாந்தின் அரச குடும்பம் அனைவரோடும் கை குலுக்காது.

பிற நாடுகளின் உயர் தலைவர்களோடு கை குலுக்கும் போது கூட கையுறை இட்டு கை கொடுக்கும் பழக்கம் பல பகுதிகளிலும் இருக்கிறது.

இந்த ஹதீஸை விளக்குகைகள் விரிவுரையாளர்க சொல்கிற ஒரு தகவல் முக்கியமானது.

கேள்வி கேட்ட அனஸா குடும்பத்து மனிதரின் கேள்வி நீங்கள் கை நீட்டினால் பெருமானார் அதை ஏற்றுக் கொள்வாரா என்பது தான்

 هل يقبل مصافحتكم 

அதற்கான பதிலாகத்தான் அபூ தர் ரலி கூறீனார். பெருமானார் )ஸல்) தானே வந்து முஸாபஹா செய்வார்கள் . பிறர் முஸாபஹா செய்தால் அதை ஏற்றுக் கொள்ளவும் செய்வார்கள்.

அதிலும் கூட மிக உன்னதமாக நடந்து கொள்வார்கள்/

தனது கையை முதலில் விடுவித்துக் கொள்ள மாட்டார்கள்.

கண்ணை பார்த்து கை கொடுப்பார்கள். முதலில் பார்வையை திருப்பிக் கொள்ள மாட்டார்கள்.

 كانَ رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ إذَا استقبلَهُ الرجلُ صافحَهُ لا ينزِعُ يدَهُ حتَّى يكونَ هو الذِي نزعَ ولا يصرفُ وجهَهُ عَنْ وجهِهِ حتَّى يكونَ الرجلُ هو الذي يصرفُه

الراويأنس بن مالك- أخرجه الترمذي

இந்த பழக்கம் சஹாபாக்களிடம் பரவியது.

عن قتادة ، قال : قلت لأنس - رضي الله عنه : أكانت المصافحة في أصحاب رسول الله - صلى الله عليه وسلم - ؟ قال : نعم . رواه البخاري .

 பின் வரும் சமூகம் அதை நன்மை என்று கருத பெருமானார் அறிவுறுத்தினார்கள்.

 عن البراء بن عازب - رضي الله عنه - قال : قال النبي - صلى الله عليه وسلم : " ما من مسلمين يلتقيان فيتصافحان ، إلا غفر لهما قبل أن يتفرقا   " . رواه أحمد ، والترمذي

 وعن البراء بن عازب - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلموالمسلمان إذا تصافحا لم يبق ذنب إلا سقط " . رواه البيهقي في " شعب الإيمان 

 முதலில் கை நீட்டுபவருக்கு 90 சதவீத நன்மை

 عن عمر - رضي الله عنه - مرفوعاإذا التقى المسلمان فسلم أحدهما على صاحبه ، كان أحبهما إلى الله أحسنهما بشرا بصاحبه ، فإذا تصافحا أنزل الله عليهما مائة رحمة للبادئ تسعون وللمصافح عشرة

 முஸாபஹாவின் சமூக பயன்பாடு

 வஞ்சம் தீரும்பகை போகும்.

وعن عطاء الخراساني ، أن رسول الله - صلى الله عليه وسلم - قالتصافحوا ، يذهب الغل  ، وتهادوا تحابوا وتذهب الشحناء " . رواه مالك

الغل வஞ்சம்

الشحناء பகை

ஒருவருடன் மிக எளிதில் நட்புறவை வளர்க்கும் வழி கை குலுக்குவது.

நீங்கள் ஜும் ஆவிற்கு வரும் போது சந்திக்கிற சக தொழுகையாளியுடன் இரண்டு மூறை கை குலுக்கி பாருங்கள். நண்பர்களாகி விடுவீர்கள்./

10 முறை கை குலுக்கினால் உறவினர் ஆகிவிடுவீர்கள்/

அது மட்டுமல்ல சக  மனிதருக்கு நாம் செய்கிற முதல் இஹ்ஸான் சலாம் சொல்லுவதும் கை குலுக்குவதுமாகும். சுக துக்கம் விசாரிப்போம் என்றால் அது மேலும் வலுப்பெறும்.

இது அல்லாஹ்விற்கு மிக பிடித்தமானது என்கிறது குர் ஆன்

 وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ 

இது அல்லாஹ்வின் அன்பை பெற்றுத்தரக் கூடியது 

 தண்ணீரில் விடப்பட்ட மூஸா அலை அவர்களுக்கு பிர் அவ்னுடைய குடும்பத்தின் அனப் பெற்றுக் கொடுத்த்தை அல்லாஹ் இப்படி சொல்கிறான்.

 وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي} [طه39]

எனது அன்பை உனக்கு நான் சொரிந்தேன்.

 கைகுலுக்கல் என்பது சக மனிதரின் அன்பை பெற்றுத் தருகிற போது அது அல்லாஹ் நம் மீது கொண்ட அன்பை பெறும் ஒரு ஏற்பாடாகவும் அமையக் கூடும்

 இப்போதும் கூட உலகம் முழுவதும் இணக்கதின் அடையாளமாக கை குலுக்குதல் இருக்கிறது.

 இஸ்லாம் அதற்கு மேல் பாவம் போகும் என்றும் வலியுறுத்திய போது அந்த செயல் முஸ்லிம் சமூகத்தில் எல்லா மட்ட்த்திலும் பரவ அது காரனமானது.

 சந்திக்கும் போதெல்லாம் இரண்டு பேர் கை குலுக்கிக் கொள்வார்கள் எனில் அந்த அன்பு பரிமாற்றம் எவ்வளவு சிறப்பாக இருக்கும் ?

ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவிப்பது முஸாபஹாவில் தான் முழுமையடைகிறது என்றார்கள் பெருமானார் (ஸல்)

وعن أبي أمامة - رضي الله عنه - أن رسول الله - صلى الله عليه وسلم - وتمام تحياتكم بينكم المصافحة   " . رواه أحمد ، والترمذي ،

பெருமானாரின் இந்த வழிகாட்டுதல்களால் முஸ்லிம் சமூகத்தில் இது சட்டப்படியான ஒரு நன்மையானது.

அன்பை வளர்க்கும் இந்த காரியத்தை பின் சுன்னத்துகள் இல்லாத இரண்டு தொழுகைகளிலும் ஒரு பழக்கமாக்கி கொள்வதை முஸ்லிம் அறிஞர்கள் ஏற்றார்கள்.

قال النووي : اعلم أن المصافحة سنة ومستحبة عند كل لقاء ، وما اعتاده الناس بعد صلاة الصبح والعصر لا أصل له في الشرع على هذا الوجه ، ولكن لا بأس به ،

 முஸாபஹாவை சமூக அறிஞர்கள் பல பாராட்டுகிறார்கள். அதற்கான இன்னும் பல காரணங்களை கண்டு பிடித்து சொல்கிறார்கள்

இது இதயத்தை சுத்தீகரிக்கும் ஒரு வழக்கம்

It is seen as a practice that can purify the heart

இது மற்றவர்களுக்கு நம்பிக்கையளிக்கிறது. அமைதிக்கு வழி வகுக்கிறது

என்கிறார்கள்.

கைகுலுக்குதல் நம்பிக்கையை வளர்ப்பதிலும் முதல் வார்வையிலேயே நல்லுறவை உருவாக்குவதிலும் பேசாமல் காரியமாற்றும் வழி  என்கிறார் ஒரு அறிஞர்.

Handshakes can also be a non-verbal way to build trust and make a positive first impression. 

கை குலுக்குவது

·         Reduces stress: 

பதற்றத்தை குறைக்கிறது என்றும்

·         Promotes a positive mindset:

நேர்முக நல்ல சிந்தனையை வளர்க்கிறது என்றும் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

முஸாபஹா செய்வது எப்படி ?

இஸ்லாமிய முஸாபஹா இரண்டு கைகளாலும் கை குலுக்கிக் கொள்வதாகும்.

இது பற்றி இமாம் புகாரி அவர்கள் பாடத்தலைபிடுவதில் விளக்கி விடுகிறார்கர்ள்.

قال البخاري: (باب: الأخذ باليدين)

பெருமானாரின் முஸாபஹா இப்னு மஸ்வூத் ரலி விளக்குகிறார்கள்

حديث ابن مسعود قوله: ((علمني رسول الله صلى الله عليه وسلم التشهد، وكفي بين كفيه))؛ 

முன்னோர்களின் முஸாபஹாவும் இப்படித்தான் இருந்த்து.

وصافح حماد بن زيد ابنَ المبارك بيديه

எனவே இரண்டு கைகளை கொடுத்து முஸாபஹா செய்வது தான் நல்லது.

 தடை

பெண்களிடம் கை குலுக்க கூடாது.

பெருமானாரின் உன்னதம் இதிலும். வெளிப்படுகிறது

 لحديث أميمة بنت رقيقة: ((قالت: يا رسول الله، بايعنا، قال: إني لا أصافح النساء، إنما قولي لامرأةٍ قولي لمائة امرأة))؛ [رواه أحمد، والترمذي، والنسائي].

பெருமானார் உருவாக்கிய பழக்கம் இன்றும் தொடர்கிறது.

 சமீபத்தில் அமெரிக்க அதிபரை மலேசிய பிரதமர் அன்வர் இபுறாகீம் சந்தித்த போது  – மலேசிய பிரதமரின் மனைவி வான் அஜீஜா அமெரிக்க அதிபருக்கு கை குலுக்காமல் மரியாதை செய்ததையும் அதே நேரம் அமெரிக்க் அதிபரின் மனைவியிடம் விரைந்து சென்று கை குலுக்கியதையும் உலகம் கண்டு வியந்தது.  

 முதிய பெண்களின் கை குலுக்கல் கூடுமா ?

பிரச்சனைக்கு வாய்ப்பில்லை எனில் கூடும் என்கிறார்கள் ஹனபி அறிஞர்கள்

-جواز مصافحتها بدون حائل إذا أمنت الفتنة من الطرفين، وهو مذهب الحنفية

அப்போதும் கூட கையுறை நல்லது என்கிறார்கள் ஷாபி அறிஞர்கள்

جواز مصافحتها بحائل بين اليدين، إذا أُمِنتِ الفتنة، وهو وجه عند الشافعية.

 பெண்களிடம் மட்டுமல்ல பருவ வயதை எட்டிக் கொண்டிருக்கிற சிறுவர்களை கை குலுக்குவதை தவிர்ப்பது நல்லது.

ثم قال النووي وينبغي أن يحترز عن مصافحة الأمرد الحسن الوجه ، فإن النظر إليه حرام كما بسطنا القول فيه في كتاب النكاح

ஸ்பரிசம் என்பது எந்த அளவில் நன்மையானதோ சில வகைகளில் அதிலிருக்கிற ஆபத்துக்களையும் இஸ்லாம் புரிந்து கொண்ட்தன் விளைவாகவே இந்த சட்டம் சொல்லப் பட்டுள்ளது.

இன்றுள்ள சூழல்களில் இந்த ஸபரிசம் பற்றி பல தரத்திலும் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் சமூக அறிஞர்கள் எச்சரிப்பதை பார்க்கிறோம்.

நமது மார்க்கம் நம்மை ஆயிரம் ஆண்டுகளாக காப்பாற்றிக் கொண்டிருக்கிறது

முஆனகா

கை குலுக்குவது மட்டுமல்ல கட்டித்தழுவுதலையும் இஸ்லாம் வரவேற்றது.

அபூ ஜஹ்லின் மகன்  இகிரிமா ரலி  இஸ்லாமை தழுவிய போது அவரை பெருமானார் கட்டித்தழுவினார்கள்

 وعن عكرمة بن أبي جهل - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم - يوم جئته : " مرحبا بالراكب المهاجر   " . رواه الترمذي .

அப்போது இதை ஓதினார்கள்

 وكان - صلى الله عليه وسلم - إذا رأى عكرمة يقول : يخرج الحي من الميت .

زاد مالك في الموطأفلما رآه رسول الله - صلى الله عليه وسلم - وثب إليه فرحا وما عليه رداء حتى بايعه 

பெருமானார் (ஸல்) அவர்கள் தனது பேரக்குழந்தைகளை கட்டித்தழுவுவார்கள்.

 ورد من أن الحسن جاءه - صلى الله عليه وسلم - يسعى حتى اعتنق كل واحد منهما صاحبه

 

மகளை அணைத்தல்

 وعن عائشة - رضي الله عنها - قالتما رأيت أحدا كان أشبه سمتا وهديا ودلا . وفي رواية : حديثا وكلاما برسول الله - صلى الله عليه وسلم – من فاطمة   ، كانت إذا دخلت عليه ، قام إليها ، فأخذ بيدها فقبلها وأجلسها في مجلسه ، وكان إذا دخل عليها ، قامت إليه ، فأخذت بيده فقبلته وأجلسته في مجلسها . رواه أبو داود 

 இஸ்லாம் எவ்வளவு உன்னதமான வழி முறை என்றால் அதில் மனித வாழ்வில் ஒவ்வொரு அம்சமும் கவனமாக நிறைவேற்றப்படுகிறது. சிறப்பாக செய்யப்படுகிறது.

 எனது வாழ்வில் நான் சந்தித்த கேள்விகளில் மிக நெகிழ்ச்சியான மறக்க முடியாத ஒரு கேள்வியை சிங்கப்பூரில் ஒரு ஆடிட்டர் என்னிடம் கேட்டார்.

 

ஹஜ்ரத்! என் மகள் பெரிய மனுஷி ஆகிவிட்டார். இனி அவருடைய முதுகை நான் தொடலமா என்று அவர் கேட்டார்.

 நமது தலைவரிடம் அற்புதமான முன் மாதிரி இருக்கிறது என்று சொல்லி இந்த ஹதீஸை நான் சொல்லிக் காட்டினேன்.

 எப்போது முஆனகா செய்யலாம் ?

ஒவ்வொரு சந்திப்பிலும் முஸாபஹா செய்யாலாம்.

 வெளியூரிலிருந்து திரும்புகிற போது அல்லது விடை கொடுக்கிற போது அல்லது நீண்ட காலம் பிரியப் போகிறோம் என்கிற போது அல்லது அன்பின் மிகுதியான வெளிப்பாடுகளில் ஒருவரை ஒருவர் கட்டியணைப்பது நல்லது என்கிறார்கள் இஸ்லாமிய சட்ட அறிஞர்கள்

 பயணத்திலிருந்து திரும்பிய தன் அன்பிற்குரியவரை வரவேற்க தன் ஆடையை இழுத்துக் கொண்டு சென்று கட்டியணைத்த பெருமானர் (ஸல்)

  وعن عائشة - رضي الله عنها - قالتقدم زيد بن حارثة المدينة ورسول الله - صلى الله عليه وسلم - في بيتي  ، فأتاه فقرع الباب ، فقام إليه رسول الله يجر ثوبه ، فاعتنقه وقبله . رواه الترمذي .

 عن أنس رضي الله عنه قال: ((كان أصحاب النبي صلى الله عليه وسلم إذا تلاقَوا تصافحوا، وإذا قدِموا من سفر تعانقوا))؛ [أخرجه الطبراني 

ولما رحل جابر بن عبدالله رضي الله عنه إلى عبدالله بن أنيس رضي الله عنه شهرًا إلى مصر خرج عبدالله بن أنيس رضي الله عنه، واعتنق كل منهما الآخر؛ [رواه أحمد 


கட்டி அணைத்தல் என்பது ஒருவருக்கு எவ்வளவு தூரம் ஆன்ம பலத்தை தரக் கூடியது

இது பல ரக்சியங்களை செய்யக் கூடியது என்பார்கள் ஆன்மீக அறிஞர்கள் கூறுவார்கள்

ஒரு மனிதரின் இதயத்தில் இருக்கிற பலம் மற்றவருக்கு இடம் மாறும்

ஒருவரிடம் இருக்கிற அறிவு மற்றவருக்கு இடம் மாறும்

ஒருவரிடம் இருக்கும் பண்பு அடுத்தவருக்கு இடம் மாறும் .

கட்டியணைத்தலின் முக்கியத்துவத்திற்கு ஒரு உதாரணம் போதும்/

ஜிப்ரயீல் அலை அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை முதன் முதலில் ஹிராவில் சந்தித்த போது பெருமானாரை விலா எலும்பு நெருங்கும் அளவு  கட்டியனைத்தார்கள்.

அதனால் அறிஞர்கள் சொல்வார்கள் நீங்கள் பெரிய மனிதர்களை கட்டியணைக்கிற போது

அவருடை கல்பில் இருக்கும் நல்லவை அனைத்தும் எனக்குள் வரட்டும் என்று நிய்யத் வைத்துக் கொள்ளுங்கள் என்பார்கள்

இஸ்லாமிய சட்ட அறிஞர்கள்  சட்ட ரீதியாக இதை ஏற்கவும் வரவேற்கவும் செய்துள்ளார்கள்.

 

قال الشافعية بسُنية المعانقة للقادم من السفر وتباعد اللقاء، وقال الحنفية والحنابلة بالإباحة

أما المأذون فيه، فعند التوديع، وعند القدوم من السفر، وطول العهد بالصاحب، وشدة الحب في الله، 

 

இந்த முஆனகா  தற்போது மிக முக்கியமான வைத்திய முறையாக மாறி வருகிறது/

 மனிதனுக்கு ஏற்படுகிற எல்லா நோய்களுக்கும் மருந்தில் தீர்வு கிடையாது சில நோய்கள் மானசீகமானவை என்று உலகிற்கு முதலில் சொன்னவர் முஸ்லிமான அலீ பின் சீனா தான்.

 அதை இடைக்காலத்தில் கண்டு கொள்ளாத மனித சமூகம் இப்போது விழிப்படைந்து வருகிறாது.

 கட்டிப்பிடிப்பதால், உடலில் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் வெளியாகி இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. என்று மருத்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள்.

 மன ஆறுதலுக்காக பணம் செலுத்தி கட்டிப்பிடி தெரபி எடுத்துக்கொள்ளும் மக்கள் என்ற தலைப்பில் பிபிசியில் ஒரு தமிழ் கட்டுரை இருக்கிறது. அதில் பிரீ ஹ்க் என்ற பெயரில் ஒரு சமூக சேவையாக சிலர் கட்டிப்பிடித்தலை செய்கிறார்கள் என்ற புகைப்படமும் இருக்கிறது.

 https://www.bbc.com/tamil/articles/clyqvl1rlnwo

 உலகம் முழுக்க முஆனகா என்பது முஸ்லிம்களின் கலாச்சார அடையாளமாக இருந்தது. தற்போது அது நிவாரண உத்தியாக அனைவராலும் கருதப்படுகிறது.

 அதே நேரத்தில் அன்னியப் பெண்களை தழுவுதல் பருவ வயதை எட்டுகிற சிறுவர்களை தழுவுதல் ஆகியவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.

 இது மீறப்படும் போது தேவையற்ற சர்ச்சைகள் வரும், பிரச்சனைகள் ஏற்படும்/

இந்தியாவில் கட்டித்தழுவியே ஒரு பெரிய ஆன்மீக சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர் மாத அமிர்தானந்தமயி

கொரோனோ காலத்தில் அவருடைய அமைப்பு மட்டும் 100 கோடி ரூபாய் நன் கொடை வழங்கியது.

இப்போதும் ஆண்டுக்கு 3 கோடி மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.

அவர்களுடைய கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களும் மருத்துவ மனைகளும் மிக பிரபலமானதை

அம்ரிதானந்தமயி தன்னை தேடி வருவோரை கட்டி அனைப்பதை தான் முக்குய ஆன்மீக வழியாக செய்து வருகிறார்.

ஆனால் இது பலத்த சர்ச்சைகளை சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. கேலிக்கும் உள்ளாக்கியிருக்கிறது.

 எனவே தழுவுதல் நல்லது என்றாலும் அதில் இஸ்லாம் கூறிய வரையறைகளை கவனிப்பதே பாதுகாப்பானது.   

  முத்தமிடுதல்

 இது அன்பினால் செய்யப்படுவதாகும். தூய அன்பு பீரிடும் போது இது இயல்பானது. சடங்குக்குக் செய்வது தவிர்க்கப் பட வேண்டும்./  

 கட்டியணைக்கும் போது சிலரை பெருமானார் (ஸ்ல) அவர்கள் முத்தமிடவும் செய்திருக்கிறார்கள்

 عن الشعبي أن النبي - صلى الله عليه وسلم - تلقى جعفر بن أبي طالب ، فالتزمه وقبل ما بين عينيه   . رواه أبو داود

 குழந்தைகளை முத்தமிடுதல்

 وعن عائشة - رضي الله عنها - أن النبي - صلى الله عليه وسلمأتي بصبي فقبله  ، فقال : " أما إنهم مبخلة مجبنة ، وإنهم لمن ريحان الله "

 பெரிய மகள்களின் கண்ணத்தில் முத்தமிடுவது கூட கூடும்.  

 وعن البراء - رضي الله عنه - قال : دخلت مع أبي بكر - رضي الله عنه - أول ما قدم المدينة ، فإذا عائشة   ابنته مضطجعة ، قد أصابها حمى ، فأتاها أبو بكر ، فقال : كيف أنت يا بنية ؟ وقبل خدها . رواه أبو داود

கை முத்தமிடல்

 عن ابن عمر رضي الله عنهما في قصة قال فيها: ((فدنَونا من النبي صلى الله عليه وسلم فقبَّلنا يده))؛ [رواه أبو داود،

 وعند البخاري في الأدب المفرد: "أن بعض التابعين أتَوا سلمة بن الأكوع، فأرانا يدًا، فقمنا إليها فقبَّلناها"؛ [صححه الألباني].

قال النووي تقبيل يد الغير إن كان لعلمه وصيانته وزهده وديانته ، ونحو ذلك من الأمور الدينية لم يكره ، بل يستحب ، وإن كان لغناه أو جاهه في دنياه كره وقيل حرام

 அன்பையும் கருணையையும் வெளிப்படுத்தும் இந்த உத்திகள் இன்று சமூகத்திற்கு மிக அவசியமான்வையாக இருக்கின்றன.

உலகம் இந்த கருணைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மிக எதார்த்தமாக நாம் பார்க்கிறோம்.

சமூகத்தில் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் அவர்களிடம் யாராவது கை குலுக்கி விட்டால் அல்லது கட்டியணைத்து விட்டால் அது அன்பளிப்புகள் கிடைப்பதை விஅ பெரிதாக கருதுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம்.

இஸ்லாம் நமக்கு வழங்கிய இயல்பான வழிகாட்டுதலில் ஆர்வத்துடன் கவனம் செலுத்துவோம்.

நாளை மறுமைக்கும் அது நன்ம்மயாகும். இந்த உலகிலும் அது சுகம் தரக்கூடியதாக ஆகும்

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

No comments:

Post a Comment