வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 27, 2026

நேபாளத்திற்காக கண்ணீர் சிந்துவோம்.

நேபாள நாட்டில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கம் மனிதர்களை விக்கித்து நிற்க செய்திருக்கிறது.

இமய மலையை ஒட்டி நேபாளம் இருக்கிறது. அருகிலேயே திபெத்தும் இருக்கிறது.

நேபாளத்திலும் திபெத்திலும் ஏரிகள் பல பனிப்பாறைகளாக இருக்கின்றன.

 இமயமலைப் பகுதி முழுவதும் 3,624 பனிப்பாறை ஏரிகள் உள்ள. இவற்றில் 47 ஏரிகள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. இதில், 21 ஏரிகள் நேபாளத்தில் உள்ளன. இதில் எங்கு எப்போது பனிப்பாறை சரிவு ஏற்படும் என்பது எந்த யூகமும் செய்யமுடிவதில்லை.

 திடீரென்று பனிச் சரிவோ அல்லது பணி ஏரிகள் உடையவோ செய்தால் வெள்ளம் கணக்கிடவே முடியாத படி காட்டாறாய் பெருக்கெடுத்து விட வாய்ப்பிருக்கிறது.

 திபெத்தில்  ஒரு ஏரி  உடைந்து வெடித்த்தில் உருவான வெள்ளம்  கோசி ஆறு வழியாக நேபாளத்தில் திடீரென பெருக்கெடுத்து.

 நேபாளத்தின் ரசுவா மாவட்டமே முழுவதும் இதில் பேரழிவை சந்தித்தது. சமூக ஊடகங்களில் வெளியான இந்த திடீர் வெள்ள பாதிப்பின் காட்சிகள் குலை நடுங்கச் செய்யும் அளவில் இருக்கின்றன. ரசுவா மாவட்டமே சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதுவரை 400 -க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயிருப்பதாக சொல்லப் பட்டாலும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என்றே தகவல்கள் கூறுகின்றன. 800 பேரை காணவில்லை என்கிறது நேபாள காவல்துறை

.இந்த பணி ஏரி உடைப்பு என்பது பற்றி இதுவரை செய்தியாக மட்டுமே படித்து வந்தோம். இப்போது நேரடியாக காண்கிற ஒரு வாய்ப்பு சிசிடி காமராக்கள் வழியாக மக்களுக்கு கிடைத்திருக்கிறது.

 நேபாள நாடு ஒரு பிரபல மான சுற்றுலா தளம் என்பதால் பல நாட்டு மக்க்ளும் அங்கு சிக்கியுள்ளனர். நம் இந்திய நாட்டை சார்ந்த பலர் அங்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். மலேஷியர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தி கூறுகிறது. இதனால் உலகின் பல நாடுகளிலும் வாழுகிற மக்களுக்கு இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 அல்லாஹ் அநத  கவலை பெருகாமல் பாதுகாத்தருள்வானாக! பாதிப்பின் அலவை குறைத்தருள்வானாக!

 காரணம் என்ன ?

 இமய மலையின் அடியில் இருக்கிற திபெத் பகுதியில் சீனா பலமான பல கட்டுமான்ங்களை கட்டுவதே இந்த பனி வெடிப்புக்கு காரணம் என்று ஒரு செய்தி சொல்கிறது. இல்லை இது பூமியில் ஏற்பட்டு வருகிற மாற்றங்களால் எற்பட்டுள்ள ஒரு விபத்து என்றும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது.

எப்படி இருந்தாலும் இதில் மக்கள் கவனிக்க் வேண்டிய பல செய்திகள் இருக்கின்றன.

 இதில் முதலில் வெளிப்படுகிர சிந்தனை ,

.மனிதன் பிரம்மாண்டமா அறிவியல் வளர்ச்சியை அடைந்து, தொழில் நுட்ப முன்னேற்றத்தை எட்டி அதை பற்றி தானே வியப்படைந்து கொண்டிருக்கிற காலத்தில் இயற்கை தனது சக்தியை வெளிப்படுத்தி நம்மை திகைப்பில் ஆழ்த்தி விடும் சக்தியை கொண்டிருக்கிறது.

நம்முடைய எந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் அந்த சக்திக்கு முன்னால் தலை தாழ்ந்தே இருக்க வேண்டியுள்ளது என்பதாகும்.

இறுதி நாளுக்கு முன்னோடியாக பல நிகழ்வுகள் நம் கண் பார்க்க நடந்த் வருகின்றன.

 வழிந்தோடிப் போகிற கட்டிடங்களை வாகனங்களை வலிமையான அணைக்கட்டுகளை நாம் சப்த நாடியும் ஒடுங்கி வாயைப் பிளந்து கொண்டு வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது.

 

وَخَشَعَتِ الْأَصْوَاتُ لِلرَّحْمَٰنِ فَلَا تَسْمَعُ إِلَّا هَمْسًا (108

  وَعَنَتِ الْوُجُوهُ لِلْحَيِّ الْقَيُّومِ ۖ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا (111)

 துஆ

நாம் நேபாள மக்களுக்காக கண்ணீர் சிந்துவோம். அது நமது இதயத்தில் கருணை இருக்கிறது என்பதன் அடையாளம்.

அந்த கருனை தான் ரப்பின் கருனையை நமக்கு பெற்றுத்தரும்

- الرَّاحِمونَ يرحَمُهم الرَّحمنُ تبارَك وتعالى؛ ارحَموا مَن في الأرضِ يرحَمْكم مَن في السَّماءِ.

 சோஷியல் மீடியாக்களில் வருகிற வீடியோக்களை பார்த்துக் கொண்டு மட்டும் இருக்காமல் அல்லாஹ்விடம் கையேந்துவோம்.

எல்லாம் வல்ல இறைவன் இந்த பாதிப்பின் அளவை குறைப்பானாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் தகுந்த ஆறுதலை தருவானாக! ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை கண்டறியும் வழிகளை இலேசாக்கி வைப்பானாக! மீட்பு பணியாளர்களுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக! மிரட்சிக்கு ஆளாகியுள்ள சிக்குண்ட மக்களுக்கு அல்லாஹ் தைரியத்தை தந்தருள்வானாக!

அல்லாஹ் நம்மை இத்தகைய ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்து அருள்வானாக!

பேரிடர்களை அறவே தவிர்க்க முடியாது.

 கடந்த பல நாட்களாகே சுனாமி போன்ற ஒரு அழிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பது போன்ற எச்சரிக்கைகள் உலகின் பல பாகத்திலும் உணரப்பட்டன. கேரளாவின் கண்ணூர் பகுதியிலும் ஜப்பான் நாட்டிலும் சுனாமி எச்சரிக்கைகள் செய்யப் பட்டன.

 ஜப்பான் நாட்டில் ஏற்படுகிற சுனாமி போல்வோ இயற்கையாகவோ ஹிரோஷிமாவின் மீது அமெரிக்கா அண்குண்டை வீசியது போல செயற்கையாகவோ பேரழிவுகள் ஏற்படுவது  அல்லாஹ்வின் சுன்னத்து. வழி முறை.

 இத்தகு சோதனைகளை மனித இனம் எதிர் கொண்டே ஆக வேண்டும்.

 وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ

அல்லாஹ் மனிதர்களை அவர்களது வாழ்வில் வாழ்விடங்களில் பொருளில் குடும்பத்தில் சமயவிவகாரங்களில் என பல வழிகளிலும் சோதிப்பான்.

 இவை அனைத்தும் நன்மை தீமையை நாம் பிர்த்தறிந்து கொள்வதற்காகவே!

 நல்லது கெட்டது எது என்பதை நாம் அறிந்து கொள்வதற்காகவே

 وكل هذه الابتلاءات ما هي إلا امتحانات يمتحن الله بها عباده ليميز الخبيث من الطيب ، وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين

 நண்மை பாவம் என்ற அளவிலும் நல்லது கெட்ட்து என்ற வகையிலும் மக்கள் ஒவ்வொருவரும் அரசுகள் ஒவ்வொன்றும் தாம் செய்கிற காரியங்களை தீர்க்கமாக ஆராய வேண்டிய நேரம் இது. அல்லாஹ் ஒரு கட்டொழுங்குக்குள் இந்த உலகை வைத்திருக்கிறான். அதில் நாம் செய்கிற குழப்பங்களால் பாதிப்புகள் சில நேரங்களில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டு விடல்லம்.

 பாதுகாவலான இறைவன் மனிதர்களுக்கு ஏற்படுத்து கிற சோதனைகளுக்கான காரணங்கள் பல

 1.   நமது பொறுப்புணர்வை நாம் அறிந்து கொள்வதற்காக

 أحسب  النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لا يُفْتَنُونَ وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ- سورة العنكبوت الآيات : 1-2

 நமது குழந்தைகள் நமக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்./அதே போல நாம் ஏற்கும்  பணிகள் எப்படி நமது பொறுப்புணர்வை உண்டு பண்ணுகின்றன  அது போல  சோதனைகளும்  நமது  பொறுப்புணர்வை மெருகூட்டுகின்றன.

 இந்த விபத்து நமது பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்யட்டும்.

 2.  நமது பாவங்கள் மன்னிக்கப்படவும் அந்தஸ்து உயர்த்தப்படவும் இது காரணமாகலாம்.

அப்பாவிகள் திடீரென பாதிப்புக்குள்ளாகும் போது நிச்சயமாக அதற்கான நன்மைகளை இறைவன் அவர்களுக்கு வழங்குவான்.

 عن سعد رضي الله عنه قال : قلت : يا رسول الله ، أيُّ الناس أشَدُّ بلاء ؟ قال :

الأنبياءُ ، ثم الأمثلُ فالأمثلُ ، يُبْتَلَى الرَّجُلُ على حَسْبِ دِينه ، فإن كان دِينُهُ صُلْبا اشتَدَّ بلاؤه ، وإن كان في دِينه رِقَّة على حَسبِ دِينه ، فما يَبْرَحُ البلاءُ بالعبد حتى يتركَهُ يَمْشِي على الأرض وما عليه خطيئة

 أخرجه الترمذي

 أشد الناس بلاءً الأنبياء ، ثم الصالحون ، لقد كان أحدهم يُبتلى بالفقر حتى ما يجدُ إلا العباءة يجوبها ، فيلبسها ، ويُبتلى بالقمَّل حتى يقتلُه ، ولأحدهم كان أشدَّ فرحاَ بالبلاءِ من أحدكم بالعطاء -  أخرجه الحاكم في مستدركه ]

 இத்தகைய சோதனைகளின் போது மக்கள் சில விசயங்களை கடை பிடிக்க வேண்டும்.

 الواجب على العبد حين وقوع البلاء عدة أمور: 

 ·       أن يتيقن ان هذا من عند الله فيسلم الأمرله. 

·       أن يلتزم الشرع ولا يخالف أمر الله فلا يتسخط ولا يسب الدهر. 

·       أن يستغفر الله ويتوب إليه مما أحدث من الذنوب. 

·       أن يتعاطى الأسباب النافعة لد فع البلاء. 
 

சோதனைகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழி முறைகளை கையாளுதல் என்ற இந்தக்   கடைசி  அம்சம் இன்று மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும்.

 பேரிடர்களை நாம் தவிர்க்க முடியாதுஆனால் அதிலிருந்து மீளவும் அதன் பாதிப்புக்கள் அதிகமாகாமலும் கவனித்துக்கொள்ள மனிதனுக்கு அல்லாஹ் அறிவைக் கொடுத்திருக்கிறான்,

 அந்த அறிவுத்திரனுக்கு  பேரிடர் மேலாண்மை Disaster management or emergency management  என்று இன்றைய நவீன உலகம் பெயர் கூறிக் கொள்கிறது.

 பேரிடர் மேலாண்மை என்பது அறிவு திறன் படைத்த மனிதன் இயற்கையாக அல்லது செயற்கையாக் ஏற்படும் தீமைகளிலிருந்து எவ்வளவு தூரம் சாத்தியப்படுமோ அவ்வளவு தூரம் தற்காத்துக் உருவாக்கிக் கொண்ட வழிகளாகும்

 அல்லாஹ்வின் தீர்மாணிக்கப்பட்ட அதாபிலிருந்து மனிதர்கள் தம்மை தற்காத்துக் கொண்டுள்ளனர்,

 யூனூஸ் நபி நைன்வா என்ற ஊருக்கு நபியாக அனுப்பப்பட்டார். நினேவா என்பது ஈராக் நாட்டின் டைக்ரிஸ் நதியை ஒட்டி இருந்த நகராகும். அங்கிருந்த மக்களிடம் யூனூஸ் நபி பல ஆண்டுகள் பிரச்சாரம் செய்தார். ஆனால் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. எனவே இறைவனுடைய தண்டனை மூன்று நாட்களில் உங்களுக்கு வரும் என்று சொல்லிவிட்டு அந்த ஊரை விட்டு கிளம்பிப் போய்விட்டார்.

 முதலில் தென்றலாக வீசிக் கொண்டிருந்த காற்று பின்பு சூடாக ஆரம்பித்ததும்யூனூஸ் நபி சொன்ன தண்டனை வந்து விட்டதென மக்கள் உணர்ந்து கொண்டு பாவமன்னிப்புக் கோரினார்கள். அவர்களில் மூத்த ஒரு மனிதர் சொன்ன ஆலோசனையின் படி தங்களது குடும்பத்தினர்கால்நடைகள் அத்தனையை அழைத்துக் கொண்டு ஒரு மைதானத்தில் கூடி கூக்குரலிட்டு அழுது அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரினர். அவர்களுடைய கண்ணீரையும்திருந்திய உள்ளத்தையும் பார்த்த இறைவன்அனுப்ப இருந்த தண்டனையை நீக்கி அவர்களை மன்னித்தான்:

 فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ آمَنَتْ فَنَفَعَهَا إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا آمَنُوا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ() (10:98).

 எத்தகையை பேரிடரிலிருந்து தப்பிப்பதற்கான வழியை – அதன் ஆபத்துக்களின் சதவீதத்தை குறைத்துக் கொள்வதற்கான வழி முறையை தேடுவது மனிதர்கள் மீது கடமை.  

 அவநம்பிக்கை என்பதற்கே இடமில்லை. நிராசையடையுதலும் கூடாது.

 அவ்வாறு மக்கள் முய்றசிக்கிற போது அல்லாஹ் மக்களின் பாதுகாப்பு நிம்மதிக்கான வழிகளை நிச்சயமாக அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.

 பேரிடர்கள் ஏற்படுகிற போது அதிலிருந்து மக்களை காப்பாற்றும் வழிகளை ஆராய வேண்டிய முதல் கடமை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடையது.

 நூஹ், லூத், (அலை) ஆகிய நபிமார்களை ஏற்றுக் கொள்ளாத மக்களுக்கு கடைசியாக பெரும் வேதனையை இறக்கிய இறைவன் அந்த வேதனை வருவதற்கு முன்னதாக நன்மக்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு நபிமார்க்களுக்கு உத்தரவிட்டான்,

 நபி நூஹ் அலை அவர்களுக்கு அல்லாஹ் சொன்னான்

 وَاصْنَعْ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا إِنَّهُمْ مُغْرَقُونَ(37)

 قُلْنَا احْمِلْ فِيهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ آمَنَ

 நபி லூத் (அலை)  அவர்களுக்கு அல்லாஹ் சொன்னான்

فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِنْ اللَّيْلِ وَاتَّبِعْ أَدْبَارَهُمْ

லூத் அலை அவர்களது மக்களுக்கு விதிக்கப்பட்ட வேதனைக்கான நேரமாக சுபுஹுடைய நேரம் தீர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் இரவின் கடைசிக் கொஞ்ட நேரத்தில் நம்பிக்கையாளர்களை காப்பாற்றி அழைத்துச் செல்லும் பொறுப்பு லூத் நபிக்கு தரப்பட்டது. நபித்துவ அற்புதமாக வெகு சீக்கிரத்தில் லூத் அலை தன் மக்களை காப்பாற்றி அழைத்துச் சென்றார். அது மட்டுமல்ல மக்களை முன்னே செல்ல விட்டு அவர்களுக்குப் பின்னே செல்லுமாறு அல்லாஹ் லூத்து (அலை) அவர்களுக்கு உத்தரவிட்டான்.

  நாம் வாழ்கிற இன்றைய சூழலில் ஆட்சித்தலைவர் கள் பெரும்பாலும் தங்களது நாட்டின் செல்வ வளம் பற்றி மட்டுமே அக்கறை செலுத்துகிறார்கள். அதற்காக எத்தகைய அழிவு வேலைகளையும் செய்ய்த் தயாராக இருக்கிறார்கள். அதே போல கார்ப்பரே கம்பெனிகளும் தங்களது வளர்ச்சிக்காக எந்த அழிவுப்பணிக்கும் தயங்குவதில்லை. பொதுமக்களுக்கும் கூட தத்தமது தேவைகளுக்கு எனில் இயற்க்கயை பாழடிக்கிற எந்த செயலை குறித்தும் கவல்லப் படுவதில்லை.

இது பேரிடர் மேலாண்மையின் மிகப் பெரும் பல்வீனமாகும்.

 எனவே இயற்கையை பாதுகாப்பதில் பேரிடர் மேலாண்மையில் அரசுகள் ட்டுமல்ல, தனிப்பட்ட மக்களுக்கும், சமூக சேவை அமைப்புக்கள், குடியிருப்போர் சங்கங்கள் போன்ற மக்கள் குழுவினருக்கும் பொறுப்பு இருக்கிறது.

 காரணம் அரசின் உதவி பின்னால் வரும், உடனே கிடைப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி தான்.

 என்வே பேரிடர் மேலாண்மை என்ன என்பது சம்பந்தமாக நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.

 சென்னை உலகின் ஒரு பெரு நகராக இருந்த போதும் சிங்கப்பூர் போன்ற ஒர் சின்ன நாட்டின் கால் வாசி அளவுக்கு கூட பேரிடர் மேலாண்மையில் போதிய அறிவும் அனுபவமும் அக்கறையும் இல்லாமல் இருக்கிறது.  

 ஜப்பானிய மக்களின் விழிப்புணர்வை நாம் கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

 பல முறை சுனாமித் தாக்குதலுக்கு ஆளானவர்கள் அமெரிக்காவின் குண்டு வீச்சுக்கு ஆளானவர்கள், இயற்கையான பேரிடர், செயற்கையான பேரிடர் இரண்டுக்கும் ஆளானவர்கள் பேரிடர் கால நிர்வாக அமைப்பை மிகச் சிறப்பாக பராமரிக்கிற காரணத்தால் தமக்கேற்படுகிற பாதிப்பின் அளவை கனிசமாக குறைத்துக் கொள்கிறார்கள்.

 பேரிடர் மேலாண்மையின் முக்கியமான நான்கு அம்சங்கள் இவை

 1.   Mitigation பாதிப்பின் அளவை கட்டுப்படுத்தல்

2.   Preparedness ஆயத்தமாயிருத்தல்

3.  Response பிரதிசெய்தல்

4.       Recovery மீட்பு

 இதில் ஆயத்தமாக இருத்தல் என்ற அம்சம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது, ஏனெனில் உலகின் எந்தப் பகுதியிலும் இயற்கை தனது விளையாட்டை காட்டக் கூடும்.

 ஆயத்தமாயிருத்தல்

 பேரிடரை எதிர் கொள்ள ஆயத்தமாக இருத்தல் என்பதில் இது பற்றிய கருத்துப் பரிமாற்றங்களுகான திட்டங்களை வகுப்பதும் தீயனைப்பு போன்ற தேவையான சேவைகளை  சரியான பராமரிப்பதும்  பயிற்சி மேற்கொள்வது மாகும்,

 மேலை நாடுகள் பலவற்றில் இத்தகைய சூழ்நிலையில் வசிப்பவர்களுக்கு ஆபத்து காலங்களில் நடந்து கொள்ள வேண்டிய வழி முறைகள் குறித்து முறையான பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன,

 ஏரிக்குள் வீடு கட்டிக் கொண்டிருக்கிற நம்முடைய மக்களுக்கு இத்தகைய பயிற்சிகள் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லை என்பது எதார்த்தமாகும்.

அதே போல ஆபத்து ஏற்பட்டால் மக்கள் செல்ல வேண்டிய பாதுகாப்பிடங்கள் மற்றும் வெளியேற்றுதல் சம்பந்தமான  திட்டங்களும் ஆயத்த நடவடிக்கையில் அடங்கும்.  

 

அதே போல பயிற்சி பெற்ற தன்னார்வலர்களை உருவாக்குவதும் இதில் ஒரு முக்கிய அம்சமாகும்.

எவ்வளவு இழப்பு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது என்று ஊகிப்பதும் இதில் ஒரு அம்சமே  

 

மீட்புக்குழுக்களுக்கும் இடையில் பரஸ்பர உதவி ஒப்பந்தங்கள் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வெளியேற்றுதலைச் செயல்படுத்தல் போன்ற திட்டமிடல் முன்னதாகவே முறைப்படுத்தி பயிற்சியளித்திருக்க வேண்டும்.

 

மக்கள் சரியான எச்சரிக்கை வழங்குவது பேரிடர் மேலாண்மையின் மிக முக்கிய அம்சமாகும்.

 நம்முடைய நாட்டில் வானிலை அறிக்கை என்பது ஏதோ ஜோசியக்காரனின் அறிக்கைகள் போலவே அமைந்திருகக்கின்றன. துல்லியம் இவற்றில் மிகவும் குறைவாக இருக்கிறது.

 இலண்டனிலிருந்து ஒருவர் பத்ரிகைகளுக்கு எழுதுகிறார்.

1988 ம் ஆண்டு இங்கிலாந்து அரசி எலிசபெத் அம்மையார் இந்தியாவுக்கு வந்த போது 10 மாதங்களுக்கு முன்னதாகவே அவரது திட்டம் ஆராயப்பட்டது, அதில் அவர் காஞ்சிபுரம் செல்வதும் தீர்மாணிக்கப்பட்டது, அப்போதே பிரிட்டிஷ் அதிகாரிகள் அரசியின் பயண காலத்தின் சீதோஷ்ணம் குறித்து ஆராய்ந்தார்கள், அப்போது அரசி காஞ்சிபுரம் செல்கின்ற அன்று கடுமையான மழை இருக்கும் என்று அனுமானித்தார்கள், அதை இந்திய அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி தக்க ஏற்பாடு செய்யுமாறு கூறினார்கள், அதன் படியே அரசி காஞ்சிபுரம் வந்த அன்று கடும் மழை பொழிந்தது, காஞ்சிபுரம் பயணத்தை இரத்து செய்யுமாறு அதிகாரிகள் கூறினார்கள், ஆனால் தகுந்த ஏற்பாடு செய்யப் பட்ட கார்ணத்தால் அரசி அந்த மழையிலும் காஞ்சிபுரத்திற்கு வந்து சேர்ந்தார்.

 எனவே நமது வானிலை அறிக்கைகளின் துல்லியம் கேள்விக்குள்ளாக்ககப் பட வேண்டும். தேவையான ஆய்வுக்கருவிகள் விஞ்ஞானிகள் இதில் ஈடுபடுத்தப் பட வேண்டும்,

 இவை அனைத்தும் ஆயத்தமாக்குதலின் செயல்பாடுகளாகும்.

 எல்லாம் வல்ல இறைவன் அவனது ஆற்றலை எப்போதும் நினைவில் கொண்டு வாழ்பவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக

 நேபாள நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கிற ஆபத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு நிம்மதியளிப்பானாக!

நம்மையும் உலகையும். பெரும் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பானாக!

மலேஷியாவின் ஈப்போ நகரின் kinta riverfront அபார்ட்மெண்டிலிருந்து.)


No comments:

Post a Comment